Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Answer Key

Tnpsc Assistant Director Of Co-Operative Audit Exam Previous Questions and Answer key in Tamil

Tnpsc Assistant Director Of Co-Operative Audit Exam Previous Questions and Answer key in Tamil

1. பலவுயிர் – பிரித்தெழுதுக:

(அ) பல் + உயிர் (ஆ) பல + உயிர் (இ) பல + வுயிர் (ஈ) பல் + வுயிர்

2. இல்லாது + இயங்கும் – சேர்த்து எழுதுக:

(அ) இல்லாதுஇயங்கும் (ஆ) இல்லாஇயங்கும்

(இ) இல்லாதியங்கும் (ஈ) இல்லதியங்கும்

3. “வண்கீரை” – பிரித்தெழுதுக:

(அ) வண்+ கீரை (ஆ) வண்ணம்+ கீரை

(இ) வளம்+ கீரை (ஈ) வண்மை+ கீரை

4. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்

(அ) மறைந்த (ஆ) நிறைந்த (இ) குறைந்த (ஈ) தோன்றிய

5. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்.

(அ) அழிவு (ஆ) துன்பம் (இ) சுறுசுறுப்பு (ஈ) சோகம்

6. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க:

(அ) ஹைக்கூ (ஆ) சென்ரியு (இ) மரபுக்கவிதை (ஈ) லிமரைக்கூ

7. பொருந்தாத இணை எது?

(அ) தோல் கருவிகள் – உடுக்கை, தவண்டை (ஆ) நரம்புக் கருவிகள் – யாழ், வீணை

(இ) காற்றுக் கருவிகள் – குழல், சங்கு (ஈ) கஞ்சக் கருவிகள் – சாலரா, சேகண்டி

8. பொருந்தாதவற்றைக் கண்டறிக:

(அ) தோசை வைக்கப்பட்டது – செய்வினைத் தொடர்

(ஆ) அப்துல் நேற்று வந்தான் – தன்வினைத் தொடர்

(இ) கவிதா உரை படித்தாள் – செய்வினைத் தொடர்

(ஈ) கோவலன் கொலையுண்டான் – செயப்பாட்டு வினைத் தொடர்

9. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக:

(அ) பாடும் குயில் (ஆ) கத்தும் குயில் (இ) பேசும் குயில் (ஈ) கூவும் குயில்

10. சந்திப்பிழையைச் சரிபார்த்து எழுதுக:

(அ) கண்களை கசகிக் கொண்டுபார்த்தான்

(ஆ) கண்களைக் கசக்கி கொண்டுபார்த்தான்

(இ) கண்களைக் கசக்கிக் கொண்டுபார்த்தான்

(ஈ) கண்களை கசகி கொண்டுபார்த்தான்

 

11. சந்திப்பிழை இல்லாத தொடரைக் காண்க:

(அ) ஆசிரியர் வருவதாக கூறிச் சென்றார்

(ஆ) ஆசிரியர் வருவதாகக் கூறிச் சென்றார்

(இ) ஆசிரியர் வருவதாகக் கூறி சென்றார்

(ஈ) ஆசிரியர் வருவதாகக் கூறி சென்றார்

12. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக:

(அ) Document-ஆவணம் (ஆ) Patent – பாசனம்

(இ) Guild-தூதரகம் (ஈ) Consulate-வணிகக்குழு

13. மயங்கொலிப் பிழையற்ற தொடரைக் கண்டறிக:

(அ) பேச்சுமொழி சிறப்பாக அமையக் குறல் ஏற்றத்தாள்வு அவசியம்

(ஆ) பேச்சுமொழி சிரப்பாக அமையக் குறல் ஏற்றத்தாள்வு அவசியம்

(இ) பேச்சுமொழி சிரப்பாக அமையக் குறல் ஏற்றத்தாழ்வு அவசியம்

(ஈ) பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்

14. வழுவற்ற சொல்லைக் காண்க:

(அ) அரிவாமணை (ஆ) ஒட்டடை (இ) தாவாரம் (ஈ) அடமழை

15. “அடல்”என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க

(அ) வலிமை (ஆ) வெற்றி (இ) போர் (ஈ) ஆடல்

16. கரி என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க

(அ) யானை (ஆ) அடுப்புக்கரி (இ) கருமை (ஈ) இறைச்சி

17. அகர வரிசைப்படுத்துக:

(அ) ஆரம், அழகுணர்ச்சி, இரண்டல்ல, ஈசன்

(ஆ) அழகுணர்ச்சி, ஆரம், இரண்டல்ல, ஈசன்

(இ) அழகுணர்ச்சி, ஆரம், ஈசன், இரண்டல்ல

(ஈ) ஆரம், ஈசன், அழகுணர்ச்சி, இரண்டல்ல

18. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:

பாம்பு, பேரியாழ், படகம், பிடில்

(அ) பிடில், பாம்பு, படகம், பேரியாழ் (ஆ) பேரியாழ், பிடில், படகம், பாம்பு

(இ) படகம், பாம்பு, பிடில், பேரியாழ் (ஈ) பேரியாழ், பாம்பு, படகம், பிடில்

19. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்:

(அ) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு

(ஆ) மனத்துயர், முந்நீர், மீமிசை, மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு

(இ) மனத்துயர், மீமிசை, மேடுபள்ளம், முந்நீர், மொழிபெயர்ப்பு

(ஈ) மனத்துயர், முந்நீர், மீமிசை, மொழிபெயர்ப்பு, மேடுபள்ளம்

20. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்:

கீழ்க்காணும் சொற்களை அகர வரிசையில் எழுதுக:

(அ) வாழ்க்கை, வேப்பிலை, வெகுளாமை, வீடுபேறு, வையம்

(ஆ) வாழ்க்கை, வேப்பிலை, வீடுபேறு, வெகுளாமை, வையம்

(இ) வாழ்க்கை, வீடுபேறு, வையம், வெகுளாமை, வேப்பிலை

(ஈ) வாழ்க்கை, வீடுபேறு, வெகுளாமைவேப்பிலை, வையம்

 

21. “குறிஞ்சி நகர் எங்கே இருக்கிறது?

– இந்த வழியாகச் செல்லுங்கள்”என்று விடையளிப்பது.

(அ) நேர்விடை (ஆ) மறைவிடை (இ) சுட்டுவிடை (ஈ) ஏவல்விடை

22. வெளிப்படை விடைகளைக் கண்டறிக:

(அ) சுட்டு, ஏவல், இனமொழி (ஆ) சுட்டு, மறை, நேர்

(இ) சுட்டு, நேர், உறுவதுகூறல் (ஈ) சுட்டு, நேர், ஏவல்

23. விடைக்கேற்ற வினா அமைத்திடுக:

சிலப்பதிகாரம், முத்தமிழ்க் காப்பியம் என்றும் குடிமக்கள் காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது.

(அ) சிலப்பதிகாரம் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

(ஆ) முத்தமிழ்க் காப்பியம் என்றழைக்கப்படும் நூல் எது?

(இ) குடிமக்கள் காப்பியம் என்றழைக்கப்படும் நூல் எது?

(ஈ) சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப்பட காரணம் என்ன?

24. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:

“கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்”.

(அ) கரகாட்டம் என்றால் என்ன?

(ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?

(இ) கரகாட்டத்தின் வேறு வடிவங்கள் யாவை?

(ஈ) கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை?

25. சரியான கலைச்சொல்லை கண்டறிக:

(அ) Objective-அரசியலமைப்பு (ஆ) Confidence-நம்பிக்கை

(இ) Agreement-குறிக்கோள் (ஈ) Constitution-ஒப்பந்தம்

26. விடை வகைகள்:

“கடைத்தெரு எங்குள்ளது”என்ற வினாவிற்கு இப்பக்கத்தில் உள்ளது எனக் கூறல்:

எவ்வகை விடை?

(அ) சுட்டு விடை (ஆ) இனமொழி விடை (இ) உறுவது கூறல் விடை (ஈ) ஏவல் விடை

27. பிறமொழிச் சொற்கள் கலவாத – தொடரை எடுத்து எழுது

(அ) என் நண்பன் ஏரோப்பிளேனில் பயணம் செய்தான்

(ஆ) என் நண்பன் வானூர்தியில் பயணம் செய்தான்

(இ) முக்கியஸ்தர் வானூர்தியில் பயணம் செய்தார்

(ஈ) என் நண்பன் இரயிலில் பயணம் செய்தான்

28. பிற மொழிச்சொற்கள் கலவாத தொடரை – எடுத்து எழுதுக:

(அ) இராமநாதபுரம் சமஸ்தானம் பெரியது

(ஆ) வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்

(இ) திருவிழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்

(ஈ) ஷாப்பிங் மால் அருகாமையில் உள்ளது.

29. பொருத்துக:

அ. கீது 1.இலை

ஆ. எல 2.சாப்பிட்டான்

இ. ஓலகம் 3. இருக்கிறது

ஈ. சாப்ட்டான் 4. உலகம்

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 4 2 3 1

இ. 4 3 2 1

ஈ. 2 3 1 4

30. எழுத்து வழக்குத் தொடரைத் தேர்ந்தெடு:

(அ) அதிக தொலைவிலிருந்து வருகிறேன்

(ஆ) ரெம்ப தொலைவிலிருந்து வருகிறேன்.

(இ) ரொம்ப தொலைவிலிருந்து வாரென்

(ஈ) ரொம்பத் தொலவட்லயிருந்து வர்ரென்

31. திருவள்ளுவரின் புகழை ——— உலகமே அறிந்துள்ளது

(அ) குடத்துள் இட்ட விளக்கு போல (ஆ) உள்ளங்கை நெல்லிக்கனி போல

(இ) பசு மரத்தாணி போல (ஈ) கண்ணை இமை காப்பது போல

32. கீழ்கண்டவற்றுள் இரண்டு சொற்கள் இணைந்து உருவாக்கப்படாதச் சொல்லைக் கண்டறிக:

(அ) தலைவன் (ஆ) தலைவிதி (இ) தலையெழுத்து (ஈ) தலைமகன்

33. சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக:

1. காட்சியைப் பார்.

2. என கேட்டார்.

3. ஊருக்கு செல்.

4. கதவைத் திற

(அ) 1 மற்றும் 4 (ஆ) 2 மற்றும் 3 (இ) 1 மற்றும் 3 (ஈ) 4 மற்றும் 2

34. கீழ்க்காணும் சொற்களில் கூட்டப் பெயர்களைக் கண்டு பிடித்து பொருத்துக. (கூட்டமாக)

(அ) கல் 1. கட்டு

(ஆ) பழம் 2. குவியல்

(இ) புல் 3. மந்தை

(ஈ) ஆடு 4. குலை

அ ஆ இ ஈ

(அ) 2 4 1 3

(ஆ) 3 4 1 2

(இ) 1 4 2 3

(ஈ) 4 3 2 1

35. அடைப்புக்குள் உள்ள எழுத்தைத் தகுந்த இடத்தில் சேர்க்க (ஐ)

(அ) ஆடை ——– அணிந்தேன் (ஆ) தோசை ———- மாவு

(இ) பள்ளி ———– சென்றேன் (ஈ) கண்ணன் ————– சட்டை

36. சிறு – சீறு என்ற சொற்களின் பொருள் தரும் தொடரைத் தேர்ந்தெடுக்க:

(அ) சிறிய வீடு கட்டிச் சிறப்பாக வாழ்ந்தான்

(ஆ) ஆற்றங்கரையோரம் கோபத்துடன் அமர்ந்திருந்தான்

(இ) சின்னச்சின்ன ஆசைகள் நிறைவேற உழைக்க வேண்டும்

(ஈ) சிறு குட்டியாக இருந்தாலும் சீறுவதில் புலியை மிஞ்ச முடியாது

37. கூற்று காரணம் – சரியா? தவறா?

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ் மொழியே!

வானம் அறிந்ததனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழியவே

கூற்று (1) : தமிழை வாழ்த்தி பாடப்பட்ட பாடல்

(2) : பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

3. இதனைப் பாடியவர் பாரதிதாசன்

(அ) கூற்று 1,2,3 சரி (ஆ) கூற்று 1,2,3 தவறு

(இ) கூற்று 3 சரி, 1,2 தவறு (ஈ) கூற்று 1,2 சரி 3 தவறு

38. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.

சொல் பொருள்

அ. விசும்பு 1. சிறப்பு

ஆ. ஊழி 2. முறை

இ. ஊழ் 3. வானம்

ஈ. பீடு 4. யுகம்

அ ஆ இ ஈ

(அ) 4 1 2 3

(ஆ) 2 3 4 1

(இ) 3 4 2 1

(ஈ) 1 2 4 3

39. சொல்லுக்கானப் பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக:

நுணங்கிய கேள்வியர்

(அ) கேள்விக்கு விடை அறிந்தவர் (ஆ) நுட்பமான கேள்வியறிவு உடையவர்

(இ)மெத்த படித்த கல்வியாளர் (ஈ) காது கேட்கும் திறன் இல்லாதோர்

40. கீழ்காணும் சொல்லுக்கானப் பொருளைத் தேர்ந்தெடு:

பேணாமை:

(அ) பாதுகாத்தல் (ஆ) பாதுகாக்காமை (இ) பேணுதல் (ஈ) பேணிக்காத்தல்

41. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க:

செவிச் செல்வம்.

(அ) செவித் திறன் ` (ஆ) கேட்கும் சக்தி

(இ) கேட்பதால் பெறும் அறிவு (ஈ) அறிவு அற்றங்காக்கும் கருவி

42. சரியான தொடரைக் கண்டறிக:

(அ) கந்தனும் வள்ளியும் வந்தான (ஆ) நல்ல மாணவர் காலையில் படிப்பான்

(இ) இவன் நேற்று வந்தவனல்லன் (ஈ) நாளை நான் வருகிறேன்

43. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க:

(அ) நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்

(ஆ) இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்

(இ) இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்

(ஈ) இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு

44. சரியான தொடரைக் கண்டறிக:

(அ) ஒரு ஓர் ஒர் கடல் (ஆ) ஒரு ஊர் ஒரு கடல்

(இ) ஓர் ஊர் ஒரு கடல் (ஈ) ஓர் ஊர் ஓர் கடல்

45. பிழை திருத்துக – சரியான எண்ணடையைத் தேர்வு செய்க:

இரண்டு+ ஆண்டு

(அ) இரண்டு ஆண்டு (ஆ) இரு ஆண்டு (இ) ஈராண்டு (ஈ) மூன்றும் சரி

கீழ்க்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு. கப்பல் பல்வேறு வகையான உறுப்புகளை உடைய, எரா, பருமல் வங்கு, கூம்பு, பாய் மரம், சுக்கான், நங்கூரம் போன்றவை கப்பல் உறுப்புகளுள் சிலவாகும். கப்பலின் முதன்மையாகிய உறுப்பாகிய அடிமரம் “எரா”எனப்படும். குறுக்கு மரத்தை பருமல் என்பர். கப்பலை செலுத்துவதற்கும், உரிய திசையில் திருப்பதற்கும் பயன்படும் முதன்மையான கருவி “சுக்கான்”எனப்படும். கப்பல் கட்டும் கலைஞர்கள் “கம்மியர்”என்றழைக்கப்படுகின்றனர். பாய் மரக்கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று பரிபாடல் கூறுகிறது.

46. கப்பல் கட்டும் கலைஞர்கள் ———- என்றழைக்கப்படுகின்றனர்.

(அ) மாலுமி (ஆ) கம்மியர் (இ) கண்ணடை (ஈ) தச்சர்

47. கப்பலின் முதன்மை உறுப்பு எது?

(அ) எரா (ஆ) வங்கு (இ) கூம்பு (ஈ) பருமல்

48. பருமல் எனப்படுவது யாது?

(அ) அடிமரம் (ஆ) குறுக்குமரம் (இ) பாய்மரம் (ஈ) நங்கூரம்

49. கப்பலை உரிய திசையில் செலுத்த பயன்படும் கருவி யாது?

(அ) சக்கரம் (ஆ) சுக்கான் (இ) கைப்பிடி (ஈ) ஒலிப்பான்

50. பாய் மரக்கப்பலில் பாய், கயிற்றில் ஏற்படும் பழுதினை சரிசெய்யும் பொருளை எழுது.

(அ) மரப்பட்டை (ஆ) அடிமரம் (இ) இரும்புப்பட்டை (ஈ) மரப்பிசின்

51. “எற்பாடு” – பிரித்து எழுதுக:

(அ) எல்+ பாடு (ஆ) எற்+ பாடு (இ) எழு+ பாடு (ஈ) எழுமை+ பாடு

52. நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

(அ) நம்+ இல்லை (ஆ) நமது+ இல்லை

(இ) நமன் + நில்லை (ஈ) நமன்+ இல்லை

53. நீலம் +வான் – சேர்த்து எழுதுக:

(அ) நீலம்வான் (ஆ) நீளம்வான் (இ) நீலவ்வான் (ஈ) நீலவான்

54. ஓடை+ எல்லாம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

(அ) ஓடைஎல்லாம் (ஆ) ஓடையெல்லாம் (இ) ஓட்டையெல்லாம் (ஈ) ஓடெல்லாம்

55. பிரித்து எழுதுக:

ஆற்றுணா.

(அ) ஆற்று+ உணா (ஆ) ஆற்று+ உண்ணா

(இ) ஆறு +உணா (ஈ)ஆறு+உண்ணா

56. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) சிலம்பு – காலில் அணிவது (ஆ) சூழி – நெற்றியில் அணிவது

(இ) குழை – காதில் அணிவது (ஈ) அரைநாண் – இடையில் அணிவது

57. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) அள்ளல் – அள்ளுதல் (ஆ) வெரீஇ – அஞ்சி

(இ) நந்து – சங்கு (ஈ) முத்தம் – முத்து

58. இதில் தவறான இணை எது?

(அ) பொக்கிஷம்-செல்வம் (ஆ) சாஸ்தி-மிகுதி

(இ) விஸ்தாரம்-பரப்புதல் (ஈ) சிங்காரம்-அழகு

59. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதவற்றைக் கண்டறிக:

(அ) சப்பாத்திக்கள்ளி,தாழை-இலை (ஆ) கமுகு(பாக்கு)-கூந்தல்

(இ) நெல், வரகு-தாள் (ஈ) கரும்பு, நாணல்-தோகை

60. சந்திப்பிழை:

கதையை படித்தேன்

(அ) கதை படித்தேன் (ஆ) கதையைப் படித்தேன்

(இ) கதையில் படித்தேன் (ஈ) கதையால் படித்தேன்

61. “புலிக்குட்டி”என்பதில் உள்ள வழுவை நீக்குக:

(அ) புலிப்பறழ் (ஆ) புலிக்கன்று (இ) புலிக்குருளை (ஈ) புலிப்பிள்ளை

62. மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு:

(அ) சிங்கப்பறழ் (ஆ) சிங்கக்குட்டி (இ) சிங்கக்குருளை (ஈ) சிங்கக்கன்று

63. சொல்லை இணைத்துப் புதிய சொல் உருவாக்குக:

நெல் ————–

(அ) குருத்து (ஆ) நாற்று (இ) தளிர் (ஈ) கொழுந்து

64. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக:

(அ) Homograph–மெய்யெழுத்து (ஆ) Consonant-ஒப்பெழுத்து

(இ) Monolingual-ஒருமொழி (ஈ) Discussion-உரையாடல்

65. “கற்றான்”என்பதன் வேர்ச்சொல் அறிக:

(அ) கல் (ஆ) கற்ற (இ) கற்று (ஈ) கற்றா

66. வேர்ச்சொல் காண்க –

தந்தான்

(அ) தந்த (ஆ) தந்து (இ) தர (ஈ) தா

67. வேர்ச்சொல்லில் தொழிற்பெயர் காண்க:

“ஓடு”

(அ) ஓடுதல் (ஆ) ஓடிய (இ) ஓடியவன் (ஈ) ஓடி

68. வேர்ச்சொல்லை வினையெச்சமாக மாற்றுக:

“ஓடு”

(அ) ஓடியவன் (ஆ) ஒடிய (இ) ஓடுதல் (ஈ) ஓடி

69. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்:

ஒழுக்கம், உயிர், ஆடு, எளிமை, அன்பு, இரக்கம், ஓசை, ஐந்து, ஈதல், ஊக்கம், ஏது, ஒளவை

(அ) அன்பு, ஆடு, இரக்கம், ஈதல், உயிர், ஊக்கம், எளிமை, ஏது, ஐந்து, ஒழுக்கம், ஓசை, ஒளவை.

(ஆ) இரக்கம், உயிர், அன்பு, ஆடு, ஈதல், எளிமை, ஒளவை, ஐந்து, ஓசை, ஊக்கம், ஏது, ஓழுக்கம்

(இ) உயிர், ஊக்கம், எளிமை, ஏது, அன்பு, ஆடு, இரக்கம், ஈதல், ஒளவை, ஐந்து, ஒழுக்கம், ஓசை.

(ஈ) எளிமை, ஏது, அன்பு, இரக்கம், ஆடு, ஈதல், ஊக்கம், ஒழுக்கம், ஐந்து, ஓசை, ஒளவை, உயிர்

70. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(அ) குருத்து, கொழுந்தாடை, கவை, கைம்பெண்

(ஆ) சுவை, குருத்து, கொழுந்தாடை, கைம்பெண்

(இ) கைம்பெண், சுவை, குருத்து, கொழுந்தாடை

(ஈ) கொழுந்தாடை, கைம்பெண், சுவை, குருத்து

71. அகர வரிசைப்படுத்துக:

எழுத்து, இரண்டல்ல, உரைநடை, ஐயம்

(அ) உரைநடை, எழுத்து, ஐயம், இரண்டல்ல (ஆ) ஐயம், எழுத்து, உரைநடை, இரண்டல்ல

(இ) இரண்டல்ல, உரைநடை, எழுத்து, ஐயம் (ஈ) எழுத்து, உரைநடை, ஐயம், இரண்டல்ல

72. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்.

(அ) பரணி பாடும் இலக்கியம் பகைவரை – வென்றதை ஆகும்

(ஆ) பகைவரை வென்றதை இலக்கியம் – பாடும் பரணி ஆகும்.

(இ) பரணி பாடும் பகைவரை வென்ற இலக்கியம் ஆகும்.

(ஈ) பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்

73. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

(அ) நாட்டுப்புறப் பாடல்கள் அறிதல் வழி மக்களின் உணர்வு

(ஆ) நாட்டுப் புறப்பாடல்கள் வழி மக்களின் உணர்வுகளை அறிதல்

(இ) மக்களின் உணர்வுகளை அறிதல் நாட்டுப் புறப்பாடல்

(ஈ) மக்களின் உணர்வுகளை அறிதல் வழி நாட்டுப்புறப்பாடல்

74. எவ்வகை வாக்கியம் எனக்கண்டெழுதுதல்:

அப்துல் நேற்று வந்தான்

(அ) தன்வினைத் தொடர் (ஆ) உடன்பாட்டு வினைத்தொடர்

(இ) பிறவினைத் தொடர் (ஈ) செயப்பாட்டு வினைத்தொடர்

75. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்:

அப்துல் நேற்று வருவித்தான்

(அ) கட்டளைத் தொடர் (ஆ) எதிர்மறை வினைத்தொடர்

(இ) பிற வினைத்தொடர் (ஈ) தன் வினைத்தொடர்

76. “மழை காணாப் பயிர்போல”

– உவமை கூறும் பொருள் தெளிக:

(அ) சோகம் (ஆ) அழுகை (இ) உவகை (ஈ) சிரிப்பு

77.”குன்றேறி யானைப்போர் கண்டற்றால்”

– உவமை கூறும் பொருள் தெளிக:

(அ) பயம் (ஆ) பாதுகாப்பு (இ) மலை (ஈ) சண்டை

78. சரியான விடையை கண்டறி:

(அ) Guild–பாசனம் (ஆ) Patent–வணிகம்

(இ) Irrigation-காப்புரிமை (ஈ) Document– ஆவணம்

79. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக:

சைதாப்பேட்டை என்பதன் மரூஉ

(அ) சைதாப்பூர் (ஆ) சைதாப்பேட்டை (இ) சைதன்யம் (ஈ) சைதை

80. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதக:

மயிலாப்பூர் என்பதன் மரூஉ

(அ) மயிலை (ஆ) மந்தைவெளி (இ) மயிலாப்பூர் (ஈ) மயில்பட்டினம்

81. நிறுத்தற்குறிகள் இரட்டை மேற்கோள்குறி:

திரு.வி.க.மாணவர்களிடம் தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள் என்று கூறினார்

(அ) திரு.வி.க.மாணவர்களிடம், “தமிழ்க் காவியங்களைப் படியுங்கள், இன்பம் நுகருங்கள்”என்று கூறினார்

(ஆ) “திரு.வி.க”மாணவர்களிடம் தமிழ்க் காவியங்களைப் படியுங்கள், இன்பம் நுகருங்கள் என்று கூறினார்

(இ) திரு.வி.க மாணவர்களிடம் தமிழ்க் காவியங்களைப் படியுங்கள் “இன்பம்”நுகருங்கள் என்று கூறினார்

(ஈ) திரு.வி.க. மாணவர்களிடம் தமிழ்க் காவியங்களைப் படியுங்கள் இன்பம் “நுகருங்கள்”என்று கூறினார்

82. சரியான நிறுத்தற்குறியிட்ட தொடரினை தேர்ந்தெடு

(அ) கு. ஆண்டாள், எண் 45, காமராசர்தெரு, திருவள்ளுர்

(ஆ) கு. ஆண்டாள், எண் 45 காமராசர் தெரு, திருவள்ளுர்.

(இ) கு.ஆண்டாள், எண் 45, காமராசர் தெரு, திருவள்ளுர்

(ஈ) கு.ஆண்டாள்எண் 45 காமராசர் தெருதிருவள்ளுர்.

83. தவறான இணையை தேர்ந்தெடு:

(அ) பாம்பு வீட்டிற்குள் புகுந்தது (எதிர்காலம்)

(ஆ) இன்று வீட்டிற்குள் புகுகிறான் (நிகழ்காலம்)

(இ) காலையில் பள்ளிக்குப் புகுவான் (எதிர்காலம்)

(ஈ) நேற்று பள்ளிக்குப் புகுந்தான் (இறந்தகாலம்)

84. இலக்கண முறைப்படி இவற்றுள் சரியான காலத்தைக் காட்டுவது எது?

(அ) நேற்று வருவான் (ஆ) நேற்று வருகிறான்

(இ) நேற்று வரப்போகிறான் (ஈ) நேற்றுவந்தான்

85. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:

பொய்கையாழ்வார் ———- பாமாலை சூட்டுகிறார்?

(அ) எதற்காக (ஆ) என்ன (இ) எவற்றை (ஈ) எங்கு

86. சரியான சொல் எது?

பெண்ணுக்குரிய கடமை ———-

(அ) யார்? (ஆ) யாது? (இ) ஏன்? (ஈ) எப்படி?

87. இதில் தவறான இணை எது?

(அ) செல்வி +ஆடினாள்–மெய்யீறு +மெய்ம்முதல்

(ஆ) கோல்+ ஆட்டம்–மெய்யீறு +உயிர்முதல்

(இ) பாலை+ திணை – உயிரீறுமெய்ம்முதல்

(ஈ) மண்+ சரிந்தது – மெய்யீறு+ மெய்ம்முதல்

88. பொருத்துக:

அ. ஆறு 1. விரைவாக நடத்தல், கூரையோடு

ஆ. திங்கள் 2. வழி, நதி

இ. ஓடு 3. சிரிப்பு, அணிகலன்

ஈ. நகை 4. மதி, மாதம்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 4 3 2 1

இ. 2 4 1 3

ஈ. 1 4 2 3

89. இருபொருள்தருக:

வரி

(அ) வரிசை, எழுதுதல் (ஆ) அரசுக்குச் செலுத்துவது, வரிசை

(இ) அரசுக்குச் செலுத்துவது, எழுதுதல் (ஈ) வடிவம், வரிசை

90.”வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே”

– இவ்வடி உணர்த்தும் பொருள் அறிக.

(அ) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

(ஆ) வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்

(இ) செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்

(ஈ) பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்

91. கூற்று காரணம் – சரியா? தவறா?

1. சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.

2. தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக் கொண்டார்

3. இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர்

4. இவர் பாடலில் உவமைகளைப் பயன்படுத்த மாட்டார்

(அ) கூற்று நான்கும் சரி (ஆ) கூற்று நான்கும் தவறு

(இ) கூற்று 1,2,3 சரி 4 மட்டும் தவறு (ஈ) கூற்று 1,2,4 சரி 3 மட்டும் தவறு

92. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச்சொல்லைத் தெரிவு செய்க:

எப்பிக்லிட்ரேச்சர் (Epic Literature) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச் சொல்லைத் தெரிவு செய்க.

(அ) செவ்விலக்கியம் (ஆ) காப்பிய இலக்கியம்

(இ) பக்தி இலக்கியம் (ஈ) பண்டைய இலக்கியம்

93. Forestry – என்ற பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச்சொல்.

(அ) வன விலங்குகள் (ஆ) வனப் பாதுகாவலர் (இ) வனவியல் (ஈ) காடுகள்

94. கீழ்காணும் சொல்லுக்கானப் பொருளை தெரிவு செய்க:

பசுமண் கலம்

(அ) சுடாத மண் கலம் (ஆ) சுட்டப் பானை

(இ) சுடுகின்ற கலங்கள் (ஈ) மண்பாண்டக் கலை

95. “கட்டுரையைப் படித்தான்”இது எவ்வகைத் தொடர்?

(அ) பெயரெச்சத் தொடர் (ஆ) வினையெச்சத் தொடர்

(இ) விளித் தொடர் (ஈ) வேற்றுமைத் தொடர்

96. “வாழையிலை விருந்து விழா”வை ஆண்டுதோறும் கொண்டாடும் நாடு எது?

(அ) இந்தியா (ஆ) ரஷ்யா (இ) அமெரிக்கா (ஈ) இலங்கை

97. சரியான கூட்டப் பெயர்களைப் பொருத்துக:

அ. பழம் 1. கட்டு

ஆ. எறும்பு 2. குலை

இ. வாழை 3. சாரை

ஈ. புல் 4. தோப்பு

அ ஆ இ ஈ

அ 2 3 1 4

ஆ. 2 3 4 1

இ. 2 4 3 1

ஈ. 2 4 1 3

98. சொல் – பொருள் – பொருத்துக:

அ. செறு 1. பனையோலைப் பெட்டி

ஆ. வித்து 2. புதுவருவாய்

இ. யாணர் 3. விதை

ஈ. வட்டி 4. வயல்

அ ஆ இ ஈ

அ. 2 4 3 1

ஆ. 3 4 1 2

இ. 4 3 2 1

ஈ. 1 3 4 2

99. சொல் – பொருள் பொருத்துக:

இயற்கை வங்கூழ் ஆட்ட

(அ) நிலம் (ஆ) நீர் (இ) காற்று (ஈ) நெருப்பு

100. ஒருமைச் சொல் – இது பழம்

(அ) அன்று (ஆ) அல்ல (இ) அவை (ஈ) அவைகள்

101. ஒருதனியான, சுதந்திரமாக செயல்படும் திராவிட நாட்டை ஏற்படுத்துவதற்காக பெரியார் திராவிட நாடு மாநாட்டினை ———–ல் கூட்டினார்

(அ) 1937 (ஆ) 1938 (இ) 1939 (ஈ) 1940

102. “தமிழ் நாட்டின் திலகர்”என்று அழைக்கப்படுபவர் யார்?

(இ) ஈ.வே.ராமசாமி (ஆ) சி.ராஜாஜி

(இ) டி.எம்.நாயர் (ஈ) வ.உ.சிதம்பரம்பிள்ளை

103. “… துணிக கருமம் துணிந்த பின்”

———– என்ப திழுக்கு

எவ்வாறு ஒரு செயலில் ஈடுபட வேண்டும் எனத் திருவள்ளுவர் மேற்கூறிய குறளில் அறிவுறுத்துகிறார்.

(அ) நிறையப் பொருள் சேர்த்த பிறகு (ஆ) தானம் செய்த பிறகு

(இ) நன்றாகச் சிந்தித்து அதற்குப் பிறகு (ஈ) தக்க காலமறித்து

104. “புல்லின் நுனியில் பனித்துளி”என்ற ஹைக்கூ கவிதை நூலின் ஆசிரியர் யார்?

(அ) அறிவுமதி (ஆ) அமுதபாரதி (இ) கழனியூரன் (ஈ) தமிழன்பன்

105. தமிழ்த் தாய் வாழ்த்தாக இசைக்கப் பெறும் “நீராருங் கடலுடுத்த”என்ற தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல் இடம் பெற்றுள்ள கவிதை நாடக நூலின் பெயர் என்ன?

(அ) மனோன்மணீயம் (ஆ) ஆதிரை (இ) அம்பாபலி (ஈ) அனிச்சஅடி

106. பொன்னொடு வந்து கறியொடு பெயரும்”

– தொடர் இடம் பெற்ற நூல் எது?

(அ) மலைபடுகடாம் (ஆ) மணிமேகலை

(இ) பட்டினப்பாலை (ஈ) மதுரைக்காஞ்சி

107. சங்ககால சேரர்களின் தலைநகரம்

(அ) காஞ்சி (ஆ) முசிறி (இ) வெண்ணி (ஈ) வஞ்சி

108. NSDP-யின் விரிவாக்கம் யாது?

(அ) தேசிய சேவை மற்றும் உள்நாட்டு உற்பத்தி

(ஆ) நிகர மாநில மற்றும் மாவட்ட உற்பத்தி

(இ) தேசிய பங்கீடு உள்நாட்டு உற்பத்தியில்

(ஈ) நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி

109. ஒவ்வொரு மாவட்டத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்து தமிழ்நாட்டில் உள்ள தொழில்முறை கல்லுரிகளில் பயிலும் BC/MBC/DNC மாணவ மாணவியர்க்கு வழங்கப்படும் விருது ———– ஆகும்

(அ) அண்ணல் காந்தி நினைவு விருது

(ஆ) பேரறிஞர் அண்ணா நினைவு விருது

(இ) முத்துலெட்சுமி அம்மையார் நினைவு விருது

(ஈ) தந்தை பெரியார் நினைவு விருது

110. இந்தியாவில் பஞ்சாயத்துராஜ் முறையை கொண்டு வந்ததின் முக்கியமான நோக்கம் என்ன?

(அ) அரசியலில் குற்றவாளிகளை தடுப்பதற்கு (ஆ) கிராமப்புற வளர்ச்சிக்கு

(இ) அரசியல் அதிகாரத்தை பரவலாக்கம் செய்ய (ஈ) அரசியல் செலவை குறைக்க

111.இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு, பரப்பளவில் ———–வது இடத்தில் உள்ளது.

(அ) 9வது (ஆ) 10வது (இ) 11வது (ஈ) 12வது

112. தமிழ்நாடு சிறுதொழில்கள் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO) துவங்கப்பட்ட ஆண்டு

(அ) 1960 (ஆ) 1965 (இ) 1970 (ஈ) 1975

113. A ஆனவர் ஆண்டு ஒன்றுக்கு 14% வட்டி வீதத்தில் B-க்கு ரூ.15,000ஐ கடனாக கொடுக்கிறார். 6 ஆண்டுகளுக்கு பின் B ஆனவர் A-க்கு ரூ.25,000-ம் ஒரு கைக்கடிகாரமும் தருகிறார் எனில் கைக்கடிகாரத்தின் விலை

(அ) ரூ.2,600 (ஆ) ரூ.1,980 (இ) ரூ.1,850 (ஈ) ரூ.1,760

114. ஓர் எண்ணின் 60%லிருந்து 60ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண்

(அ) 60 (ஆ) 100 (இ) 150 (ஈ) 200

115. MATHEMATICS என்பது 52793527618 என்றவாறு குறிக்கப்பட்டால் ETHICS என்பது எவ்வாறு குறிப்பிடப்படும்?

(அ) 397618 (ஆ) 379168 (இ) 376918 (ஈ) 379618

116. 72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுபடக் கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் என்ன?

(அ) 10152 (ஆ) 10052 (இ) 10502 (ஈ) 10512

117. A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை 2,00,000 தொகைக்கு ஒப்புக்கொண்டனர் எனில் B பெறும் தொகை ———— ஆகும்.

(அ) ரூ.80,000 (ஆ) ரூ.1,00,000 (இ) ரூ.1,40,000 (ஈ) ரூ.1,20,000

118. A என்பவர் ஒரு வேலையை 15 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 20 நாட்களிலும் செய்து முடிக்க இயலும். இருவரும் சேர்ந்து அதே வேலையை 4 நாட்கள் செய்த பின் மீதமிருக்கும் வேலையின் அளவு

(அ) 1/4 (ஆ) 1/10 (இ) 7/15 (ஈ) 8/15

119. கூட்டு வட்டியானது காலாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டால் தொகையை ——— என்ற சூத்திரத்தைப் பயன்படுத்திக் காணலாம்

(அ) A = P [ 1+r/100]n (ஆ) A = P [ 1+ r/100]2n

(இ) A = P [ 1+ r/100]3n (ஈ) A = P [ 1+r/100]4n

120. ரூ.800 ஆனது 3 வருட தனி வட்டியில் மொத்தம் ரூ.920 ஆக மாறுகிறது. வட்டி வீதம் 3% அதிகரித்தால் கிடைக்கும் தொகை என்ன?

(அ) 990 (ஆ) 992 (இ) 1092 (ஈ) 892

121. 48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணிநேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர் எனில் 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்து எத்தனை நாட்களில் முடிப்பர்?

(அ) 36 நாட்கள் (ஆ) 42 நாட்கள் (இ) 56 நாட்கள் (ஈ) 28 நாட்கள்

122. (x3 – a3), மற்றும்(x – a)2ஆகியவற்றின் மீ.பொ.ம

(அ) ( x3 – a3 ) (x +a) (ஆ) ( x3 – a3) ( x – a)2

(இ) ( x – a)2 (x2 + ax + a2) (ஈ) (x + a)2 (x2 + ax + a2)

123. மீ.பொ.வகாண்க:

x4 – 1, x3– x2+ x – 1, x5 – x4 – x + 1.

(அ) x2 + 1 (ஆ) (x2 + 1) (x+1) (இ) (x2+1) (x-1) (ஈ) (x2-1) (x+1)

124. 10,000இன் 25% மதிப்பின் 15% என்பது ————– ஆகும்

(அ) 375 (ஆ) 400 (இ) 425 (ஈ) 475

125. அணுக் கருப்பிளவையின் தொடர் வினையை கட்டுப்பாட்டுடன் நடத்த உதவும் சாதனம் ———— ஆகும்

(அ) அணுக்கரு உலை (ஆ) அணு குண்டு (இ) மின் அடுப்பு (ஈ) வேதிவினை அடுப்பு

126. ஒரு குறிப்பிட்ட திசையில், கொடுக்கப்பட்டதிசைவேகத்தில் செலுத்தப்பட்ட துகள் ——— பாதையில் செல்லும்.

(அ) நேர்கோடு (ஆ) நீள்வட்டம் (இ) அதிபரவளையம் (ஈ) பரவளையம்

127. குருட்டு மனப்பாடம் செய்வதில் பின்வருவனவற்றுள் எது சிறந்தது?

(அ) ஏதாவது நினைவு வரும் வரை மீண்டும் மீண்டும் கற்றல் செயல்முறை

(ஆ) எதையாவது எளிதில் நினைவில் கொள்வதற்காக அதை எழுதும் முறை

(இ) மீண்டும் மீண்டும் உங்களுக்குள் வினா எழுப்பும் முறை

(ஈ) மேற்கண்ட எதுவும் இல்லை

128. பின்வரும் எந்த மாசு “மினமேட்டா நோய்” எனப்படும் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை தாக்கும் நோயினை ஏற்படுத்துகிறது?

(அ) ஆர்சனிக் (ஆ) தாமிரம் (இ) பாதரசம் (ஈ) அலுமினியம்

129. தவறான கூற்று எது?

(அ) லடாக் “சிறிய திபெத்” என அழைக்கப்படுகிறது.

(ஆ) பூடான், சீனா மற்றும் இந்தியாவின் இடையிலான இணைப்பு பகுதி ஆகும்.

(இ) நேபாளம் நிலம் சூழ் நாடாகும்.

(ஈ) இந்தியாவின் நான்கு மாநிலங்களே நேபாள எல்லையை தொடுகின்றன.

130. முடிக்கப்படவில்லை : ஒரு நினைவகம் (Unfinished – A Memoir) எந்த நடிகையின் சுயசரித்திம்

(அ) மாலா சின்ஹா (ஆ) பிரியங்கா சோப்ரா ஜோன்ஸ்

(இ) ரேகா (ஈ) ஹேமா மாலினி

131. ஒரிசாவில் தண்ணீர் பஞ்சாயத் தொடங்கப்பட்ட ஆண்டு.

(அ) 1999 (ஆ) 2000 (இ) 2003 (ஈ) 2005

132. “சத்ய மேவ ஜெயதே” வாய்மையே வெல்லும் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது?

(அ) தேவநகரி (ஆ) உருது (இ) சமஸ்கிருதம் (ஈ) ஹிந்தி

133. இமாலயா மற்றும் துணை இமாலயப் பிரதேசங்களில் காணப்படக் கூடிய இனம் ஏது?

(அ) இந்தோ-ஆர்யர்கள் (ஆ) திராவிடர்கள் (இ) மங்கோலியர் (ஈ) ஆர்ய-திராவிடர்கள்

134. இந்திய விமான நிலைய ஆணையம் சமுதாய ஆகாய விமானப் பயிற்சிக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?

(அ) டெல்லி (ஆ) அலகாபாத் (இ) பெங்களுர் (ஈ) கொல்கத்தா

135. பின்வருவனவற்றில் இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் நதி எது?

(அ) மகாநதி (ஆ) கிருஷ்ணா (இ) நர்மதா (ஈ) கோதாவரி

136. கீழே கொடுக்கப்பட்டுள்ள இமயமலை தொடர்பான கூற்று/கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானதை தெரிவுசெய்க:

அ. ஹிமாந்ரி தொடரானது நந்தாதேவி, கமேட் மற்றும் திரிஷீல் போன்ற பல பனிமூடிய சிகரங்களைக் கொண்டுள்ளது

ஆ. ஹிமாந்ரி தெடரானது “பனியின் உறைவிடம்” என்று அழைக்கப்படுகிறது.

(அ) அ மட்டும் (ஆ) ஆ மட்டும்

(இ) அ,ஆ ஆகிய இரண்டும் (ஈ) மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை.

137. நேரு தலைமையிலான தேசிய ஒருமைப்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்ற ஆண்டு.

(அ) 1961 (ஆ) 1960 (இ) 1959 (ஈ) 1962

138. உடன்கட்டை ஏறும் வழக்கம் சட்டத்திற்கு புறம்பான, தண்டனைக்குரிய குற்றம் எனக் கூறியவர்

(அ) வில்லியம் பெண்டிங் பிரபு (ஆ) டல்ஹெளசி பிரபு

(இ) காரன் வாலிஸ் பிரபு (ஈ) வெல்லெஸ்லி பிரபு

139. கூற்று (A) : சவுத் மற்றும் சர்தேஷ்முகி வரிகள் மராத்திய அரசின் முக்கிய வருவாய் ஆதராங்கள் ஆகும்

காரணம் (R) : “சவுத்வரி” என்பது அண்ணியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டி மொத்த நில வருவாயில் 25% வசூலிக்கப்பட்டது. “சர்தேஷ்முகி” வரி நில வருவாயில் பத்தில் ஒரு பங்கு (1/10) வசூலிக்கப்பட்டது.

(அ) (A) சரி ஆனால் (R) தவறு

(ஆ) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி. (R) என்பது (A)விற்கு சரியானவிளக்கமாகும்.

(இ) (A) தவறு ஆனால் (R) சரி

(ஈ) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல

140. மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது யார்?

(அ) குடியரசுத் தலைவர் மட்டும் நியமிக்கலாம்

(ஆ) உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி

(இ) பிரதமரின் கீழ் உள்ள அமைப்பு

(ஈ) உள்துறை அமைச்சர்

141. கீழே காணப்படும் பட்டியல்களை பொருத்துக. பிறகு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

மாநிலம் தோற்றம் (வருடம்)

அ. கேரளா 1. 1963

ஆ. நாகாலாந்து 2. 1966

இ. மஹாராஷ்டிரம் 3. 1956

ஈ. ஹரியானா 4. 1960

அ ஆ இ ஈ

அ 1 3 2 4

ஆ. 3 1 4 2

இ. 4 3 2 1

ஈ. 3 4 2 1

142. அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பில் சேர்க்க பரிந்துறை செய்தது.

(அ) ஷா ஆணையம் (ஆ) சந்தானம் கமிட்டி

(இ) நிர்வாக சீர்திருத்த ஆணையம் (ஈ) சுவரன் சிங் குழு

143. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்றை சுட்டுக:

(அ) விதி 40 : கிராம பஞ்சாயத்து அமைப்பு

(ஆ) விதி 44 : பொது சிவில் குறியீடு

(இ) விதி 41 : விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு அமைப்பு

(ஈ) விதி 39A : சமநீதி மற்றும் இலவச சட்டஉதவி

144. இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலச் சீர்திருத்தத்தின் பகுதியாக பின்வருவன சேர்க்கப்பட்டது?

(அ) இடைத்தரகர்களை ஒழித்தல் (ஆ) குத்தகை சீர்திருத்தங்கள்

(இ) விவசாய மறுசீரமைப்பு (ஈ) மேலே உள்ள அனைத்தும்

145. கீழ்க்கண்டவை நிதிக் கொள்கையின் நோக்கம்/நோக்கங்கள்:

அ. பொருளாதார வளர்ச்சி செயல் திறனை மேம்படுத்துதல்

ஆ. மக்களுக்கு சமூக நீதியை உறுதி செய்தல்

இ. முழு வேலைவாய்ப்பு

ஈ. நிலையான மாற்று விகிதம்

(அ) அ மற்றும் ஆ மட்டும் (ஆ) அ மட்டும்

(இ)ஆ மற்றும் ஈ மட்டும் (ஈ) அ,ஆ,இ மற்றும் ஈ

146. சரியான விடையை தேர்ந்தெடு:

மங்கல்பாண்டே இந்திய போர் வீரர்களை அழைத்து ஆங்கிலேயர்களை பழி வாங்க பகிரங்மாக கூறிய நாள்.

(அ) 23ம் ஜனவரி 1857 (ஆ) 26ம் ஜனவரி 1857

(இ) 29ம் மார்ச் 1857 (ஈ) 8ம் ஏப்ரல் 1857

147. அமைச்சரவை தூதுக்குழு திட்டம், “அன்றைய காலச் சூழலில் கொண்டு வரப்பட்ட உன்னதமான திட்டம்” என்று வர்ணித்தவர்.

(அ) நேரு (ஆ) காந்தி (இ) இராஜாஜி (ஈ) ஜின்னா

148. விவசாயிகளுக்கு எங்கு வரி இல்லா பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ய சர்தார் படேலிடம் இருந்து காந்தி உதவி பெற்றார்.

(அ) குஜராத்தில் (ஆ) கேடா (இ) சூரத் (ஈ) கேரா

149. பொருத்துக:

அ. நீதிக்கட்சி 1. ஜோதிராவ்பூலே

ஆ. சுயமரியாதை இயக்கம் 2. சத்திரபதி ஷானு மகாராஜ்

இ. சத்தியசோதக் இயக்கம் 3. ஈ.வே.ராமசாமி

ஈ. சத்யசோதக் சமாஜ் 4. டீ.எம்.நாயர்

ஆ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 3 4 1 2

இ. 2 3 4 1

ஈ. 4 3 2 1

150. குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்

(அ) K.காமராசர் (ஆ) C.ராஜாஜி (இ) C.N.அண்ணாதுரை (ஈ) T.பிரகாசம்

151. “இந்தியாவிற்கு தேவை பூர்ண சுதந்திரம் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆனால் உயரிய பதவிகள் அல்ல” எனக் கூறியவர்

(அ) ஜ.நேரு (ஆ) ராஜா கோபாலசாரி

(இ) மகாத்மா காந்தி (ஈ) அன்னி பெசன்ட்

152. “—————” செறுநர் செருக்கு அறுக்கும்

எஃகு அதனின் கூரியது இல்”

– என வள்ளுவர் குறிப்பிடுவது?

(அ) செல்வம் (ஆ) அறிவு (இ) கேள்விஞானம் (ஈ) வீரம்

153. அரம்போலும் கூர்மை யாரேனும் மரம்போல்வர் யார்?

(அ) உண்மை இல்லாதவர் (ஆ) மக்கட் பண்பில்லாதவர்

(இ) பொருள் இல்லாதவர் (ஈ) பகை இல்லாதவர்

154. கரிகாற் சோழனின் இயற்பெயர்

(அ) கரிகாலன் (ஆ) அருண்மொழி (இ) திருமாவளவன் (ஈ) சுந்தரர்

155. “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று பாடியவர் யார்?

(அ) திருஞானசம்பந்தர் (ஆ) திருநாவுக்கரசர்

(இ) மாணிக்கவாசகர் (ஈ) திருமூலர்

156. “நீ கண்டனையோ? கண்டார் கேட்டனையோ?” இப்பாடல் வரி யார் யாரிடம் வினவியது?

(அ) தலைவன் தோழியிடம் (ஆ) தலைவி பாணனிடம்

(இ) தலைவி செவிலியிடம் (ஈ) தலைவி தலைவனிடம்

157. எந்த நூல் காவிரி பூம்பட்டினம் கி.பி.2-ம் நூற்றாண்டில் கடலால் முழ்கடிக்கப்பட்டது என குறிப்பிடுகிறது?

(அ) குண்டலகேசி (ஆ) மணிமேகலை (இ) சிலப்பதிகாரம் (ஈ) வளையாபதி

158. ஏன் சென்னை வங்கித் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது?

(அ) உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது

(ஆ) அதிக உள்நாட்டு சேமிப்பு

(இ) உயர்ந்த தலா வருமானம்

(ஈ) அதிக எண்ணிக்கையிலான கடன் பெறுபவர்கள்

159. தமிழ் இணைய பல்கலைக் கழகம் ———– என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

(அ) தமிழ் இணையக் கல்விக் கழகம் (ஆ) தமிழ் இணைய நிறுவனம்

(இ) தமிழ் காட்சி கல்விக் கழகம் (ஈ) தமிழ் காட்சி நிறுவனம்

160. மனித வளர்ச்சிக் குறியீடானது ————– அடிப்படையாக கொண்டது

(அ) ஆயட்காலம்

(ஆ) கல்வி

(இ) தனிநபர் மொத்த தேசிய வருமானம் (GNI per capita)

(ஈ) மேலே உள்ள அனைத்தும்

161. தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்திற்கு ———– உதவுகிறது

(அ) உலகவங்கி (ஆ) ஐக்கிய நாடுகள் சபை

(இ) விவசாய மேம்பாட்டிற்கான சர்வதேச நிதி (ஈ) ஆசிய வளர்ச்சி வங்கி

162. 2021ல் தமிழ்நாட்டில் எத்தனை வருவாய் மாவட்டங்கள் உள்ளன?

(அ) 32 (ஆ) 33 (இ) 36 (ஈ) 38

163. ஒரு கூட்டுத் தொடரின் முதல் n-உறுப்புகளின் கூடுதல் 5n2 + 3n / 2 எனில், 10வது உறுப்பு

(அ) 39 (ஆ) 59 (இ) 49 (ஈ) 69

164. -11, -15, -19, ————- என்ற கூட்டுத் தொடர் வரிசையின் 19வது உறுப்பைக் காண்க:

(அ) -83 (ஆ) 61 (இ) -116 (ஈ) 80

165. தொடரின் அடுத்த இரு எண்களைக் காண்க:

4,5,12,17,28,37,—–,—-.

(அ) 52,65 (ஆ) 50,66 (இ) 36,67 (ஈ) 40,77

166. இரண்டு பகடைகள் ஒருமுறை உருட்டப்படுகின்றன. அதன் மொத்த விளைவுகளின் எண்ணிக்கை என்ன?

(அ) 36 (ஆ) 26 (இ) 30 (ஈ) 32

167. 240 + 240 ன்மதிப்பு

(a) 440 (b) 280 (c) 241 (d) 480

168. இரு கோளங்களின் வளைபரப்புகளின் (புறப்பரப்பு) விகிதம் 9 : 16 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம்

(அ) 3 : 4 (ஆ) 27 : 64 (இ) 64 : 27 (ஈ) 729 : 4096

169 ஒரு உள்ளீடற்ற கோளத்தின் கனஅளவு 113572/7 க.செ.மீ மற்றும் வெளி ஆரம் 8 செ.மீ எனில் அக்கோளத்தின் உள் ஆரத்தைக் காண்க: (π= 22/7என்க)

(அ) 12 (ஆ) 6 (இ) 5 (ஈ) 9

170. ஆஷிஷ் ₹.32,000 ஆரம்ப முதலீட்டில் ஒரு புத்தகக் கடையைத் திறந்தார். முதல் ஆண்டில் அவருக்கு 5% இழப்பு ஏற்பட்டது. இருப்பினும், இரண்டாவது ஆண்டில் அவர் 10% இலாபம் ஈட்டினார். மூன்றாம் ஆண்டில் 12 1/2% உயர்ந்தது. 3 வருடங்கள் முழுவதும் அவரது நிகர லாபத்தை கணக்கிடுக:

(அ) ₹.5,620 (ஆ) ₹.37,620 (இ) ₹.7,620 (ஈ) ₹.57,620

171. 10 வருடங்களில் ஒரு தொகை இரு மடங்கு ஆகிறது எனில் வருடத்திற்கு தனி வட்டி வீதம் எனன?

(அ) 5% (ஆ) 8% (இ) 10% (ஈ) 20%

172. A : B = 8 : 12 மற்றும் B : C = 24 : 24 : 15 எனில் A : B : C ன் விகிதத்தைக் காண்க:

(அ) 16 : 24 : 15 (ஆ) 8 : 24 : 15 (இ) 12 : 24 : 15 (ஈ) 16 : 12 : 15

173. 15, 20, 24, 32, 36 என்ற எண்களால் வகுபடக் கூடிய மிகச்சிறிய எண்ணைக் காண்க

(அ) 2,880 (ஆ ) 1,660 (இ) 1,440 (ஈ) 1,330

174. கூடுதல் 99ம், மீப்பெரு பொது வகு எண் 9ம் உடைய மிகை எண் ஜோடிகளின் எண்ணிக்கை

(அ) 5 (ஆ) 4 (இ) 3 (ஈ) 2

175. ஒரு தலைமையை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் A மற்றும் B ஆகிய இரு நபர்களில் A ஆனவர் 192 வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். மொத்த வாக்குகளில் A ஆனவர் 58%ஐப் பெறுகிறார் எனில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை

(அ) 1,000 (ஆ) 1,200 (இ) 1,250 (ஈ) 1,300

176. —————ல் ஒலி அதிக வேகத்தில் செல்லும்.

(அ) எஃகு (ஆ) காற்று (இ) வெற்றிடம் (ஈ) நீர்

177. கொசு நன்னீரில் மேற்பரப்பில் இனப்பெருக்கத்தை ஏற்படுத்த முடிவது எதனால்

(அ) பாகியல் விசையால் (ஆ) பரப்பு இழுவிசையால்

(இ) ஒருங்கிணைப்பு விசையால் (ஈ) ஒட்டு விசையால்

178. கார்பன் மின்னிழை கண்டுபிடித்தவர்

(அ) ஆம்பியர் (ஆ) நியூட்டன் (இ) எடிசன் (ஈ) வோல்ட்

179. சூரியகிரகணம் ஏற்பட்டால் அதனால் தெருக்கள் இருளாகும். சூரிய கிரகணம் இருப்பதால் தெருக்கள் இருளாக உள்ளது. இது எவ்வகை காரணப்படுத்துதல்?

(அ) தொகுத்தறி காரணப்படுத்துதல் (ஆ) பகுத்தறி காரணப்படுத்துதல்

(இ) நிலையுறுத்தப்பட்ட காரணப்படுத்துதல் (ஈ) நேர்கோட்டு காரணப்படுத்துதல்

180. இந்திய பெண்கள் சங்கத்தின் செய்தித்தாளின் பெயர்

(அ) ஸ்திரீதர்மம் (ஆ) மதர்இந்தியா

(இ) பெண்களின் உரிமை (ஈ) தாய்நாடு

181. கீழ்காணப்படும் பிரிவுகளில் எது இந்திய தேர்தல் ஆணையத்திற்க்கு தேர்தல் தேதியினை அறிவிக்கும் அதிகாரம் அளிக்கின்றது?

(அ) மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 1951-ன்பிரிவுகள் 14 மற்றும் 15 மூலம்

(ஆ) அரசமைப்பின் சட்ட உறுப்பு 83ன் உப உறுப்புன் (2) ன் மூலம்

(இ) அரசமைப்பின் சட்ட உறுப்பு 85(2)(b)-ன் மூலமாக

(ஈ) அரசமைப்பு சட்ட உறுப்பு 172(1) மூலமாக

182. பொருத்தமானவற்றை இணையிடுக:

அ. கிசான் சூர்யோதே யோஜனா 1. மீனவர்கள் நலன்

ஆ. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா 2. மாணவர்கள்நலன்

இ. சாகர்கேது சர்வாங்கி கல்யான் யோஜனா-2 3. பயிர்க் கடன்

ஈ. SHODH யோஜனா 4. மின்சாரம்

அ ஆ இ ஈ

அ. 1 3 2 4

ஆ. 3 2 4 1

இ. 4 3 1 2

ஈ. 4 1 2 3

183. பின்வருவனவற்றை பொருத்தவும்:

பட்டியம் I பட்டியல் II

அ. பாசின் எண்ணெய் வயல் 1. குஜராத் கடற்கரை

ஆ. திக்பாய் எண்ணெய் வயல் 2. மேற்கு கடற்கரை

இ. அங்கலேஷ்வர் எண்ணெய் வயல் 3. கிழக்கு கடற்கரை

ஈ.ரவா எண்ணெய் வயல் 4. பிரம்மபபுத்திரா பள்ளத்தாக்கு

அ அ இ ஈ

அ. 2 4 1 3

ஆ. 1 2 3 4

இ 2 3 4 1

ஈ. 3 4 1 2

184. 1474-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த இரஷ்யப் பயணியின் பெயர்.

(அ) நிக்கோலஸ் (ஆ) ரஷ்புதின் (இ) புக்நாணன் (ஈ) நிகிதின்

185. ஹீமாயூன் ஆட்சியின் போது, பீகாரை ஆண்டவர் யார்?

(அ) பகதூர் ஷா (ஆ) பாஷ் பகதூர் (இ) முகமது ஷாமன் (ஈ) ஷெர்கான்

186. விஜய நகர அரசில் கீழ்கண்ட எந்த வரி தொழிற்சாலை வரி என அழைக்கப்படுகின்றது?

1. அட்டகாடா சங்கம், மாஸ்தி

2. பாடிக் காவல்

3. சந்தை முதல்

4. தறிக் கடமை மற்றும் செக்கு கடமை

(அ) 1 மட்டும் (ஆ) 2 மட்டும் (இ) 3 மட்டும் (ஈ) 4 மட்டும்

187. ஹீனர்கள் ———– ஆட்சியின் போது இந்தியா மீது படையெடுத்தார்கள்.

(அ) குமார குப்தர் (ஆ) இராம குப்தர் (ஈ) ஸ்கந்த குப்தர் (ஈ) விஷ்ணுகுப்தர்

188. “ஹரப்பா” அமைந்துள்ள மாண்ட்கோமரி மாவட்டம் எங்கு உள்ளது?

(அ) பாரசீகம் (ஆ) பாகிஸ்தான் (இ) இந்தியா (ஈ) ஈரான்

189. பின்வரும் பட்டியல் I மற்றும் பட்டியல் II சரியாக பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. குடும்ப நல நீதிமன்ற சட்டம் 1. 1984

ஆ. சட்ட சேவை அதிகார சட்டம் 2. 1987

இ. சமூக பதிவு சட்டம் 3. 1860

ஈ. டில்லி சிறப்பு காவல் சட்டம் 4. 1946

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 4 3 2 1

இ. 3 4 1 2

ஈ. 2 1 4 3

190. பஞ்சாப் மாநிலம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவாக பிரிக்கப்பட்டது எப்பொழுது?

(அ) 1966 (ஆ) 1956 (இ) 1963 (ஈ) 1947

191. இந்திய குடியரசுத்தலைவரின் “தடுப்பாணை” அதிகாரத்தில் உள்ளடக்கியிருப்பது

1. பாக்கெட் தடுப்பாணை

2. முழுமையான தடுப்பாணை

3. இடைநீக்க தடுப்பாணை

4. தகுதிவாய்ந்த தடுப்பாணை

(அ) 1,2 மற்றும் 3 (ஆ) 1,3 மற்றும் 4 (இ) 2 மற்றும் 3 (ஈ) 2,3 மற்றும் 4

192. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள “பேச்சுச் சுதந்திரம்” என்பது கீழ்காணும் எந்த நிபந்தனைகளுக்குட்பட்டது?

அ. நயப்பண்பு மற்றும் ஒழுக்கநெறிகளுக்கு மாறுபாடாக இல்லாமல்

ஆ. நீதிமன்ற அவமதிப்பு இல்லாமல்

இ. அரசின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படும்படி இல்லாமல்

ஈ. மத நம்பிக்கைகளுக்கு எதிரானதாக இல்லாமல்

(அ) ஆ மட்டும் (ஆ) ஈ மட்டும் (இ) அ,ஆ மற்றும் இ (ஈ) அ,ஆ மற்றும் ஈ

193. பின்வருவனவற்றுள்எதுநிதிகொள்கையின்கருவிஅல்ல?

(அ) வரவுசெலவு திட்டம (ஆ) வரி (இ) பொதுகடன் (ஈ) வங்கி வீதம்

194. ———— குழு வறுமைக்கோடு பற்றிய கருத்தை மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்டது.

(அ) லக்டவாலா குழு (ஆ) சுரேஷ் டெண்டுல்கர் குழு

(இ) வான்சூ குழு (ஈ) தத் குழு

195. பின்வரும் வரிகளில் எது மத்திய அரசால் விதிக்கப்பட்டு மாநில அரசால் வசூலிக்கப்படுகிறது?

அ. விற்பனை வரி

ஆ. முத்திரை வரி

இ. மருத்துவ மற்றும் கழிப்பறைப் பொருட்கள் மீதான கலால் வரி

ஈ. இறக்குமதி வரி

குறியீடுகளில் இருந்து சரியான விடை காண்க:

(அ) அ மற்றும் ஆ (ஆ) இ மற்றும் ஈ (இ) ஆ மற்றும் ஈ (ஈ) ஆ மற்றும் இ

196. ————– NITI ஆயோக் அமைக்கப்பட்டது

(அ) ஜனவரி 1, 2014 (ஆ) ஜனவரி 1, 2015 (இ) ஜனவரி 1, 2016 (ஈ) ஏப்ரல் 1, 2016

197. இந்திய பொருளாதாரத்திற்கு ————– துறை அதிக வருமானத்தை வழங்குகிறது

(அ) முதன்மை துறை (வேளாண்மை) (ஆ) இரண்டாம் நிலைத்துறை (தொழில்)

(இ) மூன்றாம் நிலைத்துறை (சேவை) (ஈ) இவற்றில் ஏதுமில்லை

198. பிரம்ம சமாஜத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?

(அ) இந்து சமயத்தை சீர்திருத்துவது பிரம்ம சமாஜத்தின் நோக்கமாகும்

(ஆ) ஒரே கடவுள் என்னும் நம்பிக்கையை அது போதித்தது.

(இ) அது பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது.

(ஈ) அது பிற சமயங்களின் போதனைகளை உள்ளடக்கவில்லை.

199. சட்ட மறுப்பு இயக்கத்தின் போது “குதாய் கித்மத்கார்” என்னும் இயக்கத்திற்கு தலைமை வகித்தவர் யார்?

(அ) அபுல் கலாம் அசாத் (ஆ) இமாம் சாஹிப்

(இ) கேளப்பன் (ஈ) கான் அப்துல் காஃபர் கான்

200. கலெக்டர் ஆஷ் வாஞ்சிநாதன் என்பவரால் சுட்டு கொல்லப்பட்ட ஆண்டு

(அ) ஜீன் 17, 1911 (ஆ) ஜீன் 19, 1911 (இ) ஆகஸ்ட் 17, 1911 (ஈ) ஆகஸ்ட் 19,1911

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!