Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Answer Key

Tnpsc Chemist Exam Previous Questions and Answer Key in Tamil

Tnpsc Chemist Exam Previous Questions and Answer Key in Tamil

CHEMIST IN TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE

1. எவன்+ ஒருவன் என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்.

(அ) எவன் ஒருவன் (ஆ) எவன்னொருவன்

(இ) எவனொருவன் (ஈ) என்னொருவன்

2. உயர்வு + அடைவோம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.

(அ) உயர்வடைவோம் (ஆ) உயர்அடைவோம்

(இ) உயர்வுவடைவோம் (ஈ) உயர்வு அடைவோம்

3. பிரித்தெழுதுதல்:

“வேதியுரங்கள்” என்னும் சொல்லைப் பிரித்தெழுதுக:

(அ) வேதி + யுரங்கள் (ஆ) வேதி + உரங்கள்

(இ) வேத் + உரங்கள் (ஈ) வேதியு + ரங்கள்

4. எதிர்ச்சொல் எழுத்தெழுதுதல்:

எளிது

(அ) அரிது (ஆ) சிறிது (இ) பெரிது (ஈ) வறிது

5. சொல்லும் பொருளும் பொருந்தாத இணை எது?

(அ) கொம்பு-கிளை (ஆ) புழை-துளை (இ) கான்-காட்சி (ஈ) அசும்பு-நிலம்

6. பொருந்தாத இணை எது?

(அ) சூழி-தலை (ஆ) குழை-காது (இ) கிண்கிணி-இடை (ஈ) சுட்டி-நெற்றி

7. பொருந்தாத இணை எது?

(அ) குறிஞ்சி-யாமம் (ஆ) முல்லை-எற்பாடு

(இ) மருதம்-வைகறை (ஈ) பாலை-நண்பகல்

8. பொருந்தாத இணையைக் காண்க:

(அ) சாஸ்தி-மிகுதி (ஆ) விஸ்தாரம்-அளவு

(இ) பொக்கிஷம்-செல்வம் (ஈ) நமஸ்காரம்-வணக்கம்

9. வழுஉச் சொல் இல்லாத தொடரை எழுதுக:

(அ) அதைச் செய்தது நான் அன்று (ஆ) அதைச் செய்தது நான் அல்லேன்

(இ) அதைச் செய்தது நான் அல்ல (ஈ) அதைச் செய்தது நான் அல்லர்

10. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லில் சரியானதைக் குறிப்பிடுக:

(அ) Vowel – மெய்யெழுத்து (ஆ) Consonant – ஆய்தஎழுத்து

(இ) Homograph – ஒப்பெழுத்து (ஈ) Discussion – உயிரெழுத்து

11. ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச்சொல் பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) Storm – புயல் (ஆ) Tempest – சுழல்காற்று

(இ) Tornado – சூறாவளி (ஈ) Sea Breeze – கடற்காற்று

12. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க:

வானம்-வாணம்

(அ) ஆகாயம்-வெட்டவெளி (ஆ) பட்டாசு-ஆகாயம்

(இ) வெடி-ஆகாயம் (ஈ) ஆகாயம்-வெடி

13. தொடர் அமைப்பினை கண்டறிக:

“பாடி மகிழ்ந்தனர்”

(அ) வினையெச்சத்தொடர் (ஆ) பெயரெச்சத்தொடர்

(இ) வினைமுற்றுத்தொடர் (ஈ) வேற்றுமைத்தொடர்

14. “கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது”

– தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்-பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே.

(அ) பாடிய,கேட்டவர் (ஆ) பாடல், கேட்டவர்

(அ) கேட்டவர், பாடிய (ஈ) பாடல், பாடிய

15. சரியான அகர வரிசைச் சொற்களைத் தேர்வு செய்க:

(அ) பானம், பிடி, புலி, பௌவம், பசி (ஆ) பசி,பானம்,பிடி,புலி,பௌவம்

(இ) பசி, பிடி, பானம், பௌவம், புலி (ஈ) பௌவம், பசி, பானம், புலி, பிடி

16. சரியான அகர வரிசையை எழுதுக:

(அ) தூவி, துன்பம், தீவு, தாவி, தண்ணீர் (ஆ) துன்பம், தூவி, தீவு, தாவி, தண்ணீர்

(இ) தூவி, தீவு, துன்பம், தண்ணீர், தாவி (ஈ) தண்ணீர், தாவி, தீவு, துன்பம், தூவி

17. அகர வரிசைப்படுத்தி எழுதுக:

நீலம், மாணிக்கம், வைரம், பவளம், முத்து

(அ) நீலம், பவளம், மாணிக்கம், முத்து, வைரம்

(ஆ) மாணிக்கம், பவளம், முத்து, வைரம், நீலம்

(இ) பவளம், முத்து, மாணிக்கம், நீலம், வைரம்

(ஈ) முத்து, பவளம், மாணிக்கம், நீலம், வைரம்

18. சொற்களை ஒழுங்குபடுத்துக:

ஜப்பானில் உருவாக்கிய பெப்பர் இயந்திர மனிதனே சாப்ட் வங்கி.

(அ) ஜப்பானில் இயந்திர மனிதனே உருவாக்கிய சாப்ட் வங்கி பெப்பர்

(ஆ) ஜப்பானில் உருவாக்கிய சாப்ட் வங்கி இயந்திர மனிதனே பெப்பர்

(இ) ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்

(ஈ) பெப்பர், ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே

19. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

(அ) தொகுதி; துள்ளி; தேடல்; தானியம் (ஆ) தேடல்; தானியம்; தொகுதி; துள்ளி

(இ) துள்ளி; தொகுதி; தேடல்; தானியம் (ஈ) தானியம்; துள்ளி; தேடல்; தொகுதி

20. விடை வகையைச் சுட்டுக.

“நீ தேர்வு எழுதவில்லையா?” என்ற வினாவிற்குக் “கை வலிக்கிறது” என்று கூறுவது

(அ) உற்றது உரைத்தல் (ஆ) உறுவது கூறல் (இ) இனமொழி (ஈ) சுட்டு விடை

21. உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.

எலியும் பூனையும் போல

– உவமை கூறும் பொருள் கூறுக:

(அ) ஒற்றுமை (ஆ) வேற்றுமை (இ) ஏமாற்றம் 9ஈ) நட்பு

22. “இலவு காத்த கிளி போல”

என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்?

(அ) ஏமாற்றம் (ஆ) தோல்வி (இ) காவல் (ஈ) நன்மை

23. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: “பசுமரத்தாணி போல”

(அ) பயனற்ற செயல் (ஆ) எளிதில் மனத்தில் பதிதல்

(இ) எதிர்பாரா நிகழ்வு (ஈ) தற்செயல் நிகழ்வு

24. சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடு:

Reform

(அ) விழிப்புணர்வு (ஆ) சீருடை (இ) சீர்திருத்தம் (ஈ) விண்ணப்பம்

25. “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று விடை கூறுவது, ————– விடை ஆகும்.

(அ) வினா எதிர் வினாதல் விடை (ஆ) நேர் விடை

(இ) இனமொழி விடை (ஈ) உறுவது கூறல் விடை

26. நிறுத்தற்குறி அறிக (எது சரியானது)

(அ) கண்ணா வா. அதோ, அங்குள்ள துணி ஓவியங்களைப் பார்ப்போம்

(ஆ) “கண்ணா வா அதோ அங்குள்ள துணி ஓவியங்களைப் பார்ப்போம்”

(இ) கண்ணா, வா! அதோ! அங்குள்ள துணி ஓவியங்களைப் பார்ப்போம்

(ஈ) கண்ணா வா அதோ அங்குள்ள துணி ஓவியங்களைப் பார்ப்போம்

27. நிறுத்தற்குறி அறிக. (எது சரியானது)

(அ) வீடு கட்டியாயிற்று? (ஆ) “சட்டி உடைந்து போயிற்று”

(இ) பணம் காணாமல் போனது! (ஈ) ஓவியம் குமரனால் வரையப்பட்டது

28. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று:

“எனக்குக்கூட ஓங்கள மாரி ஆடணுமுன்னு ஆசை”

(அ) எனக்குக் கூட உங்கள மாரி ஆடவேண்டும் என்று ஆசை

(ஆ) எனக்குக் கூட உங்களை மாரி ஆடவேண்டும் என்று ஆசை

(இ) எனக்குக் கூட உங்களைப் போல் ஆடவேண்டுமென்று ஆசை

(ஈ) எனக்குக் கூடஉங்களை மேரி ஆடவேண்டும் என்று ஆசை

29. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று.

குடுத்துடு

(அ) கொடு (ஆ) குடுத்து விடு (இ) குடித்து விடு (ஈ) கொடுத்து விடு

30. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.

அறநெறிச்சாரம் பாடலை எழுதியவர் —————?

(அ) யார்? (ஆ) என்ன? (இ) எப்படி? (ஈ) எவ்வாறு?

31. எவ்வகை வினா என்பதை எழுதுக:

மாணவரிடம், “இந்த கவிதையின் பொருள் யாது? என்று ஆசிரியர் மாணவரிடம் கேட்டல்

(அ) அறியாவ வினா (ஆ) ஐய வினா (இ) கொடை வினா (ஈ) அறி வினா

32. காட்சியழகு – காட்சி + ய் + அழகு.

பின்வருவனவற்றுள் தொடர்புபடுத்துக:

(அ) ஈகார ஈறு (ஆ) ஐகார ஈறு (இ) ஆகார ஈறு (ஈ) இகர ஈறு

33. சரியான இணையைத் தேர்ந்தெடு:

(அ) உயிர் + உயிர் – மலை + அருவி (ஆ) மெய் + மெய் – தமிழ் + அன்னை

(இ) உயிர் + உயிர் – தென்னை + மரம் (ஈ) மெய் + உயிர் – தேன் + மழை

34. குறில் நெடில் மாற்றம், பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிக:

கொள் – கோள்

(அ) புறங் கூறல் – வாங்கு (ஆ) புறங் கூறல் – கிரகம்

(இ) கொல்லுதல்- கிரகம் (ஈ) வாங்கு – புறங்கூறல்

35. குறில் – நெடில் பிழையான சொல் எது?

(அ) கல்-கால் (ஆ) கிரி-கீரி (இ) குடம்-கூடம் (ஈ) கெண்டை-கொண்டை

36. கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று 1: பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி, காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.

கூற்று 2: மதுரைக் காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.

(அ) கூற்று இரண்டும் தவறு (ஆ) கூற்று 1 மட்டும் சரி

(இ) கூற்று இரண்டும் சரி (ஈ) கூற்று 2 மட்டும் சரி

37. கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று: ண,ன,ந – இவை மூன்றும் மயங்கொலி எழுத்துகள்

காரணம்: உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே பொருள் வேறுபாடும் உடையது.

(அ) கூற்று:சரி: காரணம்:சரி (ஆ) கூற்று:சரி;காரணம்: சரி

(இ) கூற்று:தவறு காரணம்:சரி (ஈ) கூற்று:தவறு காரணம் :தவறு

38. கல்லாமை ஒழிக எனும் பொருளில் வரும் தொடர்?

(அ) செய்தித் தொடர் (ஆ) வினாத்தொடர்

(இ) விழைவுத்தொடர் (ஈ) உணர்ச்சித் தொடர்

39. நேரான தமிழ்ச்சொல் அறிக:

டெரகோட்டா

(அ) மரச்சிற்பம் (ஆ) ஒற்றைக் கற்சிற்பம்

(இ) சுடுமண் சிற்பம் (ஈ) மெழுகுச் சிற்பம்

40. பொருளின் செறிவை சுட்டுக:

(அ) அகமும் புறமும் (ஆ) உற்றார் உறவினர்

(இ) காலை மாலை (ஈ) கன்னங்கரேல்

41. சொல்லும் பொருளும் – பொச்சாப்பு

(அ) தற்சார்பு (ஆ) சோர்வு (இ) பொறாமை (ஈ) பொறுமை

42. குமரிவட்டத்தில் “உப்பர்” என்பது யாரைக் குறிக்கும்?

(அ) உறவினர் (ஆ) உப்பளம் (இ) அப்பா (ஈ) தாத்தா

43. பிழை திருத்துதல்

சரியான பதிலை தேர்ந்தெடு.

(அ) ஓரூர் (ஆ) ஓர் ஊர் (இ) ஒன்று ஊர் (ஈ) ஒரு ஊர்

44. பிழை திருத்துதல்

சரியான பதிலை தேர்ந்தெடு.

(அ) ஓர் நகரம் (ஆ) ஓரிரு நகரம் (இ) ஒரு நகரம் (ஈ) ஒன்று நகரம்

45. சொல்லையும், பொருளையும் பொருத்துக:

அ. ஓப்புமை 1. மேகம்

ஆ. அற்புதம் 2. வள்ளல்

இ. முகில் 3. வியப்பு

ஈ. உபகாரி 4. இணை

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 1 2 3 4

இ. 3 2 1 4

ஈ. 2 3 4 1

46. கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு:

இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித மூளைதான் என்று சொல்கிறார்கள். அதனுள் இருக்கும் செல்களில் எண்ணிக்கை ட்ரில்லியன். அவற்றில் நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. இந்த நியூரான்களின் வலை பின்னல்தான் படைப்பு உணர்ச்சி, ஞாபகம், தன்னுணர்வு ஆகியன எல்லாம். மூளை முதுகு தண்டில் இருந்து முளைக்கிறது. தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக முட்டைகோஸ் இலைகள் போல உள்ளது. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி. குருதி தேவைப்படுகிறது. சிறுமூளை தான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துகிறது.

46. இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் சிக்கலான ஒரு பொருள் எது?

(அ) செல்கள் (ஆ) நியூரான்கள் (இ) மனித மூளை (ஈ) வலைபின்னல்

47. மனித மூளையில் இருக்கும் செல்களின் எண்ணிக்கையைக் கூறு?

(அ) டிரில்லியன் (ஆ) நூறு பில்லியன் (இ) பத்தாயிரம் (ஈ) கோடி

48. மூளை எங்கிருந்து முளைக்கிறது?

(அ) தலையில் (ஆ) குருதியில் (இ) முதுகுதண்டில் (ஈ) நியூரான்களில்

49. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு குருதி தேவைப்படுகிறது?

(அ) டிரில்லியன்.மி.லி (ஆ) 100 மி.லி (இ) 1000 மி.லி (ஈ) 800 மி.லி

50. நம் உடலின் அசைவுகளைக் கட்டுப்படுத்துவது எது?

(அ) உள்மூளை (ஆ) சிறுமூளை (இ) நடுமூளை (ஈ) பின்மூளை

51. சேர்த்தெழுதுக:

இவை + எல்லாம்

(அ) இவை எல்லாம் (ஆ) இவையெல்லாம் (இ) இவயெல்லாம் (ஈ) இதுயெல்லாம்

52. என்றென்றும் – பிரித்தெழுதுக:

(அ) என்+ றென்றும் (ஆ) என்று + என்றும்

(இ) என்றும் + என்றும் (ஈ) என் + என்றும்

53. தாம் + இனி என்பதனைச் சோத்தெழுதக் கிடைக்கும் சொல்.

(அ) தாம்இனி (ஆ) தாம்மினி (இ) தாமினி (ஈ) தாமனி

54. இன்று + ஆகி என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்

(அ) இன்றுஆகி (ஆ) இன்றிஆகி (இ) இன்றாகி (ஈ) இன்றாஆகி

55. “புரவலர்” என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக:

(அ) இறப்பவர் (ஆ) கொடுப்பவர் (இ) இரவலர் (ஈ) இரவுக்காவலர்

56. பொருந்தாத இணையைக் கண்டறிக:

(அ) கிழக்கு-கொண்டல் (ஆ) மேற்கு-கோடை

(இ) வடக்கு-குணக்கு (ஈ) தெற்கு-தென்றல்

57. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

ஆண்பாற் பிள்ளைத் தமிழ் பருவத்தில்

அல்லாததை கண்டறிக

(அ) காப்பு (ஆ) செங்கீரை (இ) அம்புலி (ஈ) கழங்கு

58. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குப் பொருந்தாத

பருவத்தைக் கண்டறிக

(அ) கழங்கு (ஆ) அம்மானை (இ) சிறுதேர் (ஈ) ஊசல்

59. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) ஆரி-அருமை (ஆ) இறடி-திணை (இ) அல்கி-தங்கி (ஈ) படுகர்-மேடு

60. சந்திப்பிழையற்ற தொடரை அறிக:

(அ) நெகிழிபையை புறக்கணிப்போம்; நெடுநாள் வாழ்வோம்

(ஆ) நெகிழிப்பையை புறகணிப்போம்; நெடுநாள் வாழ்வோம்

(இ) நெகிழிபையைப் புறக்கணிப்போம்; நெடுநாள் வாழ்வோம்

(ஈ) நெகிழிப்பையைப் புறக்கணிப்போம்; நெடுநாள் வாழ்வோம்

61. மரபுப் பிழையற்ற காய்களின் இளமைப் பெயர் காண்க.

(அ) வாழைக்காய் (ஆ) கத்திரிப்பிஞ்சு (இ) மாம்பிஞ்சு (ஈ) அவரைக்காய்

62. மரபு வழுவை காண்க:

(அ) மயில் அகவும் (ஆ) குயில் கத்தும்

(இ) கோழி கொக்கரிக்கும் (ஈ) கிளி கீச்சிடும்

63. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக:

(அ) மயில் அகவும் (ஆ) காகம் கத்தும் (இ) கோழி கூவும் (ஈ) புறா குழறும்

64. சந்திப்பிழையை நீக்குக:

(அ) உலகப் பெரும் புகழைப் பெற்றுத் தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள்

(ஆ) உலக பெரும் புகழைப் பெற்று தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள்

(இ) உலக பெரும் புகழை பெற்று தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள்

(ஈ) உலகப் பெரும் புகழை பெற்றுத்தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள்

65. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான சொல்லைத் தேர்வு செய்க:

உண்டாக்குதல்

(அ) விலை (ஆ) விளை (இ) விழை (ஈ) விடை

66. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:

பார்

(அ) உலகம், கடல் (ஆ) உலகம், மேதினி

(இ) கடல், பார்த்தல் (ஈ) ஆர்கலி, புவனம்

67. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:

சொல்லுதல்

(அ) மொழிதல், வாசித்தல் (ஆ) செப்புதல், கூறல்

(இ) உரைத்தல், கேட்டல் (ஈ) விளம்புதல், கவனித்தல்

68. “உண்” என்னும் வேர்ச் சொல்லின் பதம் அறிக:

(அ) கற்பனை (ஆ) உண்டாள் (இ) கடித்தான் (ஈ) சிரிப்பு

69. “ஆடினான்” – வேர்ச்சொல்லைத் தருக:

(அ) போ (ஆ) சிரி (இ) ஓடு (ஈ) ஆடு

70. சரியான அகர வரிசையை எழுதுக:

(அ) கரம், கானகம், கீற்று, கொண்டை, கோட்டை

(ஆ) கொண்டை, கோட்டை, கானகம், கரம், கீற்று

(இ) கோட்டை, கரம், கானகம், கீற்று, கொண்டை

(ஈ) கரம், கொண்டை, கோட்டை, கீற்று, கானகம்

71. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

(அ) வகுப்பு, வானம், விழி, வெற்றி, வேள்வி (ஆ) விழி, வெற்றி, வேள்வி, வகுப்பு, வானம்

(இ) வானம், விழி, வெற்றி, வேள்வி, வகுப்பு (ஈ) வெற்றி, வேள்வி, வகுப்பு, வானம், விழி

72. அகர வரிசையில் எழுதுக:

வணிகம், துறைமுகம், பொருள்கள், முதலீடு

(அ) துறைமுகம், பொருள்கள், முதலீடு, வணிகம்

(ஆ) பொருள்கள், வணிகம், முதலீடு, துறைமுகம்

(இ) முதலீடு, பொருள்கள், வணிகம், துறைமுகம்

(ஈ) துறைமுகம், வணிகம், பொருள்கள், முதலீடு

73. கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படி எழுதுக:

சுத்தி, சிற்பம், சொட்டு, சங்கு

(அ) சிற்பம், சுத்தி, சங்கு, சொட்டு (ஆ) சொட்டு, சங்கு, சுத்தி, சிற்பம்

(இ) சங்கு, சிற்பம், சுத்தி. சொட்டு (ஈ) சுத்தி, சங்கு, சொட்டு, சிற்பம்

74. விடை வகைகள் “கால் பந்து விளையாடுவாயா?” என்ற வினாவிற்குக் “கைப்பந்து விளையாடுவேன்” என்பது எவ்வகை விடை?

(அ) இனமொழி விடை (ஆ) நேர் விடை

(இ) மறை விடை (ஈ) வினாவெதிர் வினாதல் விடை

75. விடைக்கேற்ற வினாவைத் தேர்க.

”மன்னுஞ் சிலம்பே!

மணிமேகலை வடிவவே!”

(அ) காப்பியங்கள் எத்தனை?

(ஆ) ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?

(இ) ஐஞ்சிறுகாப்பியங்கள் யாவை?

(ஈ) இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவது எது?

76. “என்னுடன் ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு” வராமல் இருப்பேனா? என்று கூறுவது எவ்வகை விடை?

(அ) உற்றது உரைத்தல் விடை (ஆ) உறுவது கூறல் விடை

(இ) வினா எதிர் வினாதல் விடை (ஈ) இன மொழி விடை

77. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக:

“பள்ளிக்கு புத்தகங்கள் வருவித்தார்”

(அ) தன்வினை (ஆ) பிறவினை

(இ) செய்வினை (ஈ) செயப்பாட்டு வினை

78. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக:

“வீடு கட்டியாயிற்று”

(அ) தன்வினை (ஆ) பிறவினை (இ) செய்வினை (ஈ) செயப்பாட்டு வினை

79. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிக:

பொருத்துக:

அ. Creator 1. குகை ஓவியங்கள்

ஆ. Artist 2. படைப்பாளர்

இ. Cartoon 3. கலைஞர்

ஈ. Cave paintings 4. கருத்துப்படம்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 4 3 2 1

இ. 2 3 4 1

ஈ. 1 4 2 3

80. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக:

விஷம்

(அ) விடம் (ஆ) நஞ்சு (இ) அமுது (ஈ) இனிப்பு

81. இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து சிதைந்து வழங்கும் சொல்

(அ) குடந்தை (ஆ) நீலகிரி (இ) மதுரை (ஈ) திருச்சி

82. கீழ்க்காணும் ஊர் பெயர்களில் தவறான மரூஉவை எழுதுக:

(அ) மன்னார் – மன்னார்குடி (ஆ) கோவை – கோயம்புத்தூர்

(இ) அரிவை – அரியலூர் (ஈ) கும்பை – கும்பகோணம்

83. சரியான சொல் எது?

கோழி – என்பதன் இளமைப்பெயர் என்ன?

(அ) குட்டி (ஆ) குருளை (இ) குஞ்சு (ஈ) பிள்ளை

84. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்.

நாவாய் என்பதன் சரியான சொல்

(அ) இறை (ஆ) நிலவு (இ) தலைவன் (ஈ) படகு

85. பொருத்தமான காலத்தைச் சுட்டுக:

மகாகவி சுப்ரமணிய பாரதியார், “நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா” என்று பாராட்டப் பெற்றவர்

(அ) இறந்தகாலம் (ஆ) நிகழ்காலம் (இ) எதிர்காலம் (ஈ) வருங்காலம்

86. பொருத்தமான காலம் அமைத்தல்:

சரியான இணையைத் தேர்ந்தெடு

(அ) கண்ணன் வந்தான் – இறந்தகாலம் (ஆ) கண்ணன் வருவான் – நிகழ்காலம்

(இ) கண்ணன் வருகிறான் – எதிர்காலம் (ஈ) கண்ணன் வருகின்றான் – எதிர்காலம்

87. சரியான மரபுத் தொடர்களை தேர்வு செய்க:

(அ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்

(ஆ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை கட்டினர்

(இ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை முடுக்கினர்

(ஈ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்

88. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:

(கவிழும்)

(அ) மலைமுகட்டில் மேகம் ———- (ஆ) காலை ஒளியினில் மலரிதழ் ————

(இ) சோலைப் பூவினில் வண்டினம் ——- (ஈ) இயற்கையின் இன்பம் ————-

89. இரு பொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு:

நகை

(அ) பொன்னகை, அணிகலன் (ஆ) புன்னகை, சிரிப்பு

(இ) நகைப்பு, உவகை (ஈ) புன்னகை, பொன்னகை

90. இரு பொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு:

செய்

(அ) நன்றேசெய், இன்றேசெய் (ஆ) நன்செய், புன்செய்

(இ) செயலைச் செய், வயல் நிலம் (ஈ) நஞ்சை நிலம், புஞ்சை நிலம்

91. கலைச்சொல் அறிதல்:

Lexicon சரியான கலைச் சொல்லை கண்டுபிடி.

(அ) அகராதி (ஆ) சதுரகராதி (இ) பேரகராதி (ஈ) தமிழகராதி

92. சரியான கலைச்சொல் அறிதல்:

அ. Moral 1. குழந்தைத் தொழிலாளர்

ஆ. Guidance 2. ஒழுக்கம்

இ. Discipline 3. நீதி

ஈ. Child Labour 4. வழிகாட்டுதல்

அ ஆ இ ஈ

அ. 3 4 2 1

ஆ. 4 3 1 2

இ. 1 2 3 4

ஈ. 2 4 1 3

93. மரபுப் பிழைகள்:

புலி ———– சரியான சொல்

(அ) குட்டி (ஆ) பறழ் (இ) குருளை (ஈ) கன்று

94. “அவசரக்குடுக்கை”

– சொல்லின் பொருள் தருக:

(அ) எண்ணிச் செயல்படுதல் (ஆ) எண்ணித் துணிதல்

(இ) எண்ணிச் செயல்படாமை (ஈ) விரைந்து செயல்படுதல்

95. சொற்களின் கூட்டுப் பெயர்கள் – சரியானதைத் தேர்ந்தெடு:

கம்பு

(அ) கம்பு தோட்டம் (ஆ) கம்பங் கொல்லை

(இ) கம்பங் குவியல் (ஈ) கம்பந் தோட்டம்

96. சரியான தொடரைத் தேர்ந்தெடு:

பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் தொடர்.

(அ) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தல்.

(ஆ) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது

(இ) எட்டு பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

(ஈ) பட்டிமன்றம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.

97. சரியான தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

(அ) வல்லினம் இடங்கள் மிகும், மிகா அறிந்து பயன்படுத்த வேண்டும்

(ஆ) மிகும், மிகா இடங்கள் வல்லினம் அறிந்து பயன்படுத்த வேண்டும்

(இ) வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்கள் அறிந்து பயன்படுத்த வேண்டும்

(ஈ) பயன்படுத்த வேண்டும் வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்கள்

98. பொருத்துக:

சொல் பொருள்

அ. தேசம் 1. வழி

ஆ. நெறி 2. நாடு

இ. மாசற 3. அறிஞர்கள்

ஈ. மேதைகள் 4. குற்றம் இல்லாமல்

அ ஆ இ ஈ

அ. 2 1 4 3

ஆ. 4 3 2 1

இ. 3 1 4 2

ஈ. 1 3 2 4

99. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக:

(அ) பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கின்றன.

(ஆ) பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கின்றார்கள்

(இ) பறவைகள் கண்டம் விட்டு கண்டம பறக்கின்றது

(ஈ) பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கிறார்

100. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக:

(அ) மாணவர்கள் வியந்து நிற்கின்றான் (ஆ) மாணவர்கள் வியந்து நிற்கின்றன.

(இ) மாணவர்கள் வியந்து நிற்கின்றது (ஈ) மாணவர்கள் வியந்து நிற்கின்றனர்

101. கருத்து வளர்ச்சியின் முதல் நிலை

(அ) வாசித்தல் (ஆ) வினா கேட்டல்

(இ) புலன் அகழ்வாராய்ச்சி (ஈ) காரணம் காணல்

102. சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா.மாநாடு பிரபலமாக ———– என அழைக்கப்படுகிறது.

(அ) மான்ட்ரியல் நெறிமுறை (ஆ) பேசல் மாநாடு

(இ) கியோட்டோ நெறிமுறை (ஈ) பூமி உச்சி மாநாடு

103. ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதன் முதலில் எழுந்த சன்நியாசி அன்டோலன் கிளர்ச்சி தோன்றிய இடம்

(அ) சென்னை (ஆ) டெல்லி (இ) காஷ்மீர் (ஈ) வங்காளம்

104. ——— ஆனது பொது வருவாய் மற்றும் செலவுத் திட்டம் ஆகியவற்றில் விரும்பதக்க விளைவுகளை தருவதற்கும், தேசிய வருமானம், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் விரும்பதகாத விளைவுகளை தடுப்பதற்கும் காரணமாக உள்ளது.

(அ) நிதிக்கொள்கை (ஆ) பணக்கொள்கை

(இ) பேரிய பொருளாதார கொள்கை (ஈ) நிதி மற்றும் பணக்கொள்கை

105. வேளாண்மையில் எவ்வாறு வேதி உரங்களை தவிர்க்கலாம்?

அ. சொட்டு நீர்ப்பாசனம்

ஆ. எண்ணெய் வித்து சாகுபடி

இ. சிறு தானிய சாகுபடி

ஈ. உயிர் உரங்கள்

(அ) இ மற்றும் ஈ (ஆ) ஈ மட்டும் (இ) ஆ மற்றும் இ (ஈ) மேற்கூறியவை அனைத்தும்

106. மனித மேம்பாட்டுக் குறியீடு கீழ்வருவனவற்றுள் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது?

அ. வாழ்நாள் (ஆயுட்காலம்)

ஆ. வாழ்க்கை தரம்

இ. கல்வி தகுதி

ஈ. நோயுற்ற தன்மை

(அ) அ,ஆ மற்றும் இ சரி (ஆ) ஆ மற்றும் இ சரி

(இ) இ மற்றும் ஈ சரி (ஈ) அ,ஆ,இ மற்றும் ஈ சரி

107. அரசின் நெறிமுறைக் கொள்கைகளைக் கொண்ட இந்திய அரசிலமைப்பு, விதிகள் 38,39,41,42 மற்றும் 43 ——– கொள்கைளை வெளிப்படுத்துகின்றன.

(அ) காந்தியவாத (ஆ) சமதர்ம (இ) தாராளவாத (ஈ) பொதுவான

108. பட்டியல் I-ம் (அரசியல் கட்சி) பட்டியல் II (தலைவர்) உடன் ஒப்பிட்டு, சரியான விடையை தேர்வு செய்யவும்.

பட்டியல் I (கட்சி) பட்டியல் II (தலைவர்உறுப்பினர்)

அ. சுதந்திர உழைப்பாளர் கட்சி 1. சி.ராஜகோபாலாச்சாரி

ஆ. பாரதிய ஜன சங்கம் 2. ஏ.கே.கோபாலன்

இ. சுதந்திரக் கட்சி 3. பி.ஆர்.அம்பேத்கர்

ஈ. கம்யூனிஸ்ட் கட்சி 4. தீன் தயால் உபாத்யாய்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 3 4 1 2

இ. 4 3 1 2

ஈ. 3 4 2 1

109. “அடிப்படை உரிமைகள் என்பது மக்களாட்சியின் கவசம்” எனக் கூறியவர் யார்?

(அ) பதஞ்சலி சாஸ்திரி (ஆ) லால் பகதூர் சாஸ்திரி

(இ) ஸ்ரீ விஷ்ணு சாஸ்திரி (ஈ) ராமகிருஷ்ண சாஸ்திரி

110. முகவுரையின் 6ம் பத்தியில் 1976ஆம் ஆண்டு அரசியல் சாசன திருத்தல் சட்டம் மூலமாக சேர்த்த வார்த்தையை தெரிந்து எடுக்கவும்.

(அ) சோசலிச/சமதாமமான (ஆ) மதச்சார்பற்ற (இ) நேர்மை (ஈ) கண்ணியம்

111. ———– வழிபாட்டில் துளசிதாசர் மிக சிறந்த துறவி

(அ) காளி (ஆ) இராம (இ) சிவ (ஈ) வைஷ்ணவ

112. வர்தாம்பிகா பரிணாயம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

(அ) பெத்தண்ணா (ஆ) திருமலாம்பா தேவி

(இ) கங்கா தேவி (ஈ) கிருஷ்ணதேவராயர்

113. அக்பரின் காலத்தில் எந்த மாநிலம் ஏழு போர் புரிந்துகொள்ளும் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது?

(அ) பீஹார் (ஆ) பெங்கால் (இ) குஜராத் (ஈ) ஒரிஸ்ஸா

114. சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றில் எது சரியான கூற்று? தேர்வு செய்க:

1. இது மதச்சார்பற்ற நாகரிகம் முதன்மையானதாக காணப்பட்டது. மேலும் மதமானது ஒரு போதும் சமுதாயத்தில் ஆக்கிரமிக்கவில்லை.

2. இக்காலத்தில் ஜவுளித் தொழிற்சாலை உற்பத்தியில் பருத்தி முக்கிய பங்கு வகித்தது.

(அ) 1 மட்டும் (ஆ) 2 மட்டும் (இ) 1 மற்றும் 2 மட்டும் (ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை

115. இந்திய அரசாங்கத்தின் எந்த நிறுவனம் நாட்டில் ஏற்படும் நில அதிர்வுகளை கண்காணிக்கிறது

(அ) இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஆ) இந்திய வானிலை ஆய்வு மையம்

(இ) அவசர கால செயல்பாட்டு மையம் (ஈ) தேசிய பேரிடர் மேலாண்மை மையம்

116. காதர் வகை மண் எங்கே காணப்படுகிறது?

(அ) மலை அடிவாரம் (ஆ) பீட்மான்ட் சமவெளி

(இ) வெள்ளச் சமவெளி (ஈ) மேலே உள்ள அனைத்தும்

117. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள மிக உயரமான சிகரம்

(அ) கல்சுபாய் (ஆ) குடர்முக் (இ) மகாபலேஸ்வர் (ஈ) ஹரிஷ்சந்திரா

118. 2014ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, ஜப்பானிய இசாமு அகாசாகிக்கு எந்த கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டது?

(அ) சார்பியல் பொதுவான கோட்பாட்டின் கணிப்பு தான் கருந்துகளை உருவாக்கம் என்பதை கண்டுபிடித்தார்

(ஆ) கோட்பாட்டு அண்டவியல் துறையில் கண்டுபிடிப்புகள்

(இ) லேசர் இயற்பியல் துறையில் கண்டுபிடிப்புகள்

(ஈ) நீல ஒளி உமிழும் டையோடு கண்டுபிடிப்பு

119. “வெங்கட சுப்பையா” எனும் கர்நாடகாவின் புகழ் பெற்ற ஆளுமை ஓர்

(அ) வரலாற்றாசிரியர் (ஆ) விரிநில நூலாலர்

(இ) இசை வழக்கில் வாய்ப்பட்டாளர் (ஈ) சொற்களஞ்சிய ஆசிரியர்

120. பின்வரும் கூற்றில் எவை சரியான கூற்று:

1. இத்தாலி நாட்டினைச் சேர்ந்த Sabaf நிறுவனம் வீட்டு சமையல் சாதனங்களுக்கான பொருளை தயாரிக்கிறது.

2. Cubic modular Systems நிறுவனம் Denmark நாட்டினை சேர்ந்தது

3. Stan a dyne ஒரு இந்திய நாட்டை சார்ந்த நிறுவனமாகும்

4. Eickhoff wind Asia Pvt. Ltd. என்ற நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்தது.

(அ) 1 மற்றும் 2 (ஆ) 2 மற்றும் 3 (இ) 3 மற்றும் 4 (ஈ) 4 மட்டும்

121. மரபணுக்கள் மற்றும் குரோமோசோம்களில் ஏற்படும் திடீர் மாற்றம் அழைக்கப்படுவது

(அ) இழத்தல் (ஆ) பன்மடங்காதல் (இ) சடுதி மாற்றம் (ஈ) தலைகீழாதல்

122. இந்தியாவில் கோட் மல்ஸ் பழங்குடியினர் எங்கே வாழ்கிறார்கள்?

(அ) திரிபுரா (ஆ) சிக்கிம் (இ) குஜராத் (ஈ) ஒரிசா

123. கீழ்காண்பவற்றுள் எந்த கிரகம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றும்?

(அ) பூமி (ஆ) வியாழன் (இ) செவ்வாய் (ஈ) வெள்ளி

124. அறிவியலை கற்பதால் கற்பவர் வளர்த்துக் கொள்ளுவது

(அ) மனதின் அறிவியல் அணுகுமுறை

(ஆ) புதிய கருத்துகள்

(இ) பரிசோதனை திறன்

(ஈ) வாழ்க்கையை குறித்த நேர்மறையான அணுகுமுறை

125. பதினோறாவது பிபனோசி எண் என்ன?

(அ) 55 (ஆ) 77 (இ) 89 (ஈ) 144

126. AT = 20 மற்றும் BAT = 40 எனில் CAT = ?

(அ) 30 (ஆ) 50 (இ) 60 (ஈ) 70

127. விடுபட்ட எண்ணைக் காண்க:

(அ) 40 (ஆ) 60 (இ) 64 (ஈ) 74

128. A ஒரு வேலையை 15 நாட்களில் செய்வார். B அதே வேலையை 20 நாட்களில் செய்வார். அவ்வேலையை A,B இருவரும் சேர்ந்து 4 நாட்கள் முடித்த பின் மீதமுள்ள வேலையின் பின்னம்.

(அ) 1/4 (ஆ) 1/10 (இ) 7/15 (ஈ) 8/15

129. 7 செ.மீ ஆரம் கொண்ட கோள வடிவ பலூனில் காற்று செலுத்தப்படும்போது அதன் ஆரம் 14 செ.மீ ஆக அதிகரித்தால், அவ்விரு நிலைகளில் பலூனின் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க:

(அ) 1:2 (ஆ) 1 : 4 (இ) 1 : 8 (ஈ) 7 : 14

130. ஒரு கிராமத்தின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரிக்கிறது. அதன் இப்போதைய மக்கள் தொகை 6000 எனில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை என்னவாக இருக்கும்?

(அ) 7966 (ஆ) 7956 (இ) 7936 (ஈ) 7986

131. பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹.8,500ஐ கடனாக பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ₹.11,050 செலுத்தி கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம்

(அ) 10% (ஆ) 5% (இ) 20% (ஈ) 15%

132. அரவிந்த என்பவர் ₹.8,000 யை ஆகாஷ் என்பவரிடமிருந்து ஆண்டுக்கு 7% தனிவட்டி வீதம் கடனாக பெற்றார். இரண்டு ஆண்டுகளின் முடிவில் அரவிந்த் செலுத்த வேண்டிய மொத்தத் தொகையைக் காண்க:

(அ) ₹.1,120 (ஆ) ₹.1,210 (இ) ₹.9,120 (ஈ) ₹.9,210

133. ரம்யா ஒவ்வொரு மாதமும் ₹.28,296 சம்பாதிக்கிறார். அதனை 4 : 1 : 3 என்ற விகிதத்தில் முறையே கல்வி, சேமிப்பு மற்றும் இதர செலவுகள் செய்கிறார் எனில் அவர் சேமிக்கும் தொகை எவ்வளவு?

(அ) ₹.2,829.60 (ஆ) ₹.3,247 (இ) ₹.3,427 (ஈ) ₹.3537

134. புக்கர் சீனாவின் —— வம்சத்திற்கு தூதுவரை அனுப்பினார்

(அ) மிங் (ஆ) சோ (இ) ஹான் (ஈ) சுய்

135. மீ.பொ.வ காண்க:

6(2x2-3x-2)

8(4x2+4x+1)

12(2x2+7x+3)

(அ) (2x+1)(x-2)2x+1) (x+3) (ஆ) 2(2x+1) (இ) 4(2x+1)(x+2) (ஈ) 6(2x+1)(x+3)

136. தமிழகத்தில் இ-மிஷன் குழு (SEMT) ஏன் உருவாக்கப்பட்டது?

(அ) பொருளாதார வளர்ச்சிக்காக IT வல்லுநர்களைப் பயிற்றுவித்தல்

(ஆ) தேசிய மின் ஆளுமை திட்டத்தின்படி திறன் மேம்பாட்டு முயற்சியின் ஓர் பகுதி

(இ) தொழிற்சாலைகளுக்கு ஆலோசனைகள் வழங்குதல்

(ஈ) மாவட்ட அளவிலான மின் ஆளுமைத் திட்டங்களுக்கு வழிகாட்டுதல்

137. நிதி ஆயோக்-ன் அறிக்கையின் படி தமிழ்நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்கு 2019 குறியிடானது மாநிலங்களின் வரிசையில் ———- இடத்தில் உள்ளது

(அ) முதலாவது (ஆ) நான்காவது (இ) மூன்றாவது (ஈ) ஆறாவது

138. தமிழ்நாட்டில் குக்கிராமங்களின் மேம்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?

(அ) சுய உதவித்திட்டம் (ஆ) தாய் திட்டம் (இ) பசுமை திட்டம் (ஈ) அன்னை திட்டம்

139. அரசாங்க வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த கமிட்டி குழு எது?

(அ) பல்வந்த ராய் கமிட்டி (ஆ) பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல் கமிட்டி

(இ) அசோக் மேத்தா கமிட்டி (ஈ) இதில் எதுவும் இல்லை

140. தென்னிந்திய நல உரிமைச்சங்கம் பிற்காலத்தில் கீழ்கண்ட பெயரில் அறியப்பட்டது.

(அ) சிப்கோ இயக்கம் (ஆ) நீதிக் கட்சி

(இ) திராவிட இயக்கம் (ஈ) சுய மரியாதை இயக்கம்

141. தமிழ்நாட்டில் உள்ள ——— செயலியல் கற்றல் முறை (ALM) செயல்படுத்தப்படுகிறது

(அ) தொடக்ககல்வி பள்ளிகளில் (ஆ) நடுநிலைப்பள்ளிகளில்

(இ) உயர்நிலைப்பள்ளிகளில் (ஈ) மேல்நிலைப் பள்ளிகளில்

142. எந்த குப்த வம்ச ஆட்சியாளர் அலகாபாத் கல் தூண் கல்வெட்டை வெளியிட்டார்?

(அ) முதலாம் சந்திரகுப்தர் (ஆ) சமுத்திரகுப்தர்

(இ) முதலாம் குமாரகுப்தர் (ஈ) ஸ்கந்த குப்தர்

143. பொருத்துக:

அ. அம்மு ஸ்வாமிநாதன் 1. இளைஞர் கூட்டிணைவு

ஆ. ருக்மணி லக்குமிபதி 2. அரசியல் அமைப்புச்சபை

இ. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் 3. நீல் சிலை சத்யாகிரகம்

ஈ. அஞ்சலி அம்மாள் 4. பூதான இயக்கம்

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 2 1 4 3

இ. 1 4 3 2

ஈ. 4 1 2 3

144. “நெடுநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை யுடைத்துஇவ் வுலகு”

என்ற குறள் கூறும் கருத்து யாது?

(அ) உலகம் நிலைத்தது (ஆ) உலகம் நிலையில்லாதது

(இ) பிறப்பும் இறப்பும் இயற்கை (ஈ) உலகம் பெருமையுடையது

145. அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கு குணங்களும் இடைவிடாது நிற்றல் யாரது இயல்பு?

(அ) அரசனது இயல்பு (ஆ) அமைச்சனது இயல்பு

(இ) வீரனது இயல்பு (ஈ) புலவரது இயல்பு

146. “கல்லாதவரின் கடை” என்று வள்ளுவர் யாரைக் கூறுகிறார்?

(அ) நூல்களைக் கற்று அதிகம் பேசுபவர் (ஆ) நூல்களைக் கற்று பேச மறுப்பவர்

(இ) நூல்களைக் கற்றுக் கொண்டிருப்பவர் (ஈ) நூல்களைக் கற்று அவைக்கு அஞ்சுபவர்

147. உலகம் உருண்டை வடிவமானது எனக்கூறிய முதல் தமிழ்நூல் எது?

(அ) திருக்குறள் (ஆ) நாலடியார் (இ) ஏலாதி (ஈ) முதுமொழிக்காஞ்சி

148. வரலாற்றுச் செய்திகள் மிகுதியாகக் கொண்ட எட்டுத்தொகை நூல் எது?

(அ) அகநானூறு (ஆ) கலித்தொகை (இ) நற்றிணை (ஈ) குறுந்தொகை

149. பின்வரும் எட்டுத்தொகை நூல்களுள் அதிகமான பாடல்களைக் கொண்ட நூல் எது?

(அ) நற்றிணை (ஆ) குறுந்தொகை (இ) கலித்தொகை (இ) ஐங்குறுநூறு

150. 1887-ல் தேவ சமாஜத்தை தோற்றுவித்தவர்

(அ) சுவாமி தயானந்த சரஸ்வதி (ஆ) சிவ் நாராயண அக்னி ஹோத்திரி

(இ) ஆத்மராவ் பாண்டுரங (ஈ) கேசவசந்திர சென்

151. எந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்பு வாத பிரதிநிதித்துவம் தவறு என்ற மசோதாவை முகமது அலி ஜின்னா கொண்டு வந்தார்?

(அ) 1910 (ஆ) 1911 (இ) 1912 (ஈ) 1913

152. அனைத்திந்தியப் பட்டியல் இனத்தினரின் கூட்டமைப்பினை நிறுவியவர் யார்?

(அ) பாபு ஜெகஜீவன் ராம (ஆ) B.R.அம்பேத்கர் (இ) Y.P. சவான் (ஈ) S.B.சவான்

153. கீழ்க்கண்டவர்களில் யாரை பாலகங்காதர திலகர் “மோட்ச குரு”வாக கருதினார்?

(அ) அன்னாசாகிப் (ஆ) V.D.சவார்க்கர் (இ) M.G.ராணடே (ஈ) W.C.பாணர்ஜி

154. மக்கட் தொகையியல் மாற்றக் கோட்பாட்டின் பல்வேறு கட்டத்தில் “தாழ்ந்த பிறப்பு வீதம் மற்றும் தாழ்ந்த இறப்பு வீதம்” உடைய கட்டத்தில் பின்வரும் எந்த நிலையை ஒத்திருக்கிறது.

(அ) மக்கள் தொகையில் விரைவான அதிகரிப்பு

(ஆ) மக்கள் தொகையில் நிலையான அல்லது மெதுவான அதிகரிப்பு

(இ) மக்கள் தொகையில் விரைவான குறைவு

(ஈ) மக்கள் தொகை வெடிப்பு

155. இந்திய அரசு 2005ஆம் ஆண்டில் பாரத் நிர்மான் என்று அழைக்கப்படும் ஒரு கால எல்லைக்குட்பட்ட திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கீழ்கண்டவற்றில் பாரத் நிர்மான் திட்டத்துடன் தொடர்பில்லாதது எது?

(அ) கிராமப்புற இணைப்பு (ஆ) கிராமப்புற வீட்டு வசதி

(இ) சுய உதவி குழு (ஈ) கிராமப்புற நீர் அளிப்பு

156. பின்வருவனவற்றில் எது மத்திய அரசின் கீழ் வருகிறது?

(அ) வங்கி (ஆ) விவசாயம் (இ) சிறை (ஈ) பொது சுகாதாரம்

157. மீள் ரெப்போ விகிதம் என்பது:

1. வணிக வங்கிகளுக்கு மைய வங்கி குறுகிய கால கடன் வழங்கும் பொழுது விதிக்கும் வட்டி விகிதம்

2. வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதம்

3. வங்கி விகிதக் கொள்கை

4. மாறும் தொகுப்பு வரையறை

(அ) 1 (ஆ) 3 (இ) 2 (ஈ) 4

158. பின்வரும் எந்த குழு மைய அரசு வலிமை குறைவாகவும் மாநில அரசுகள் அதிகாரமான சுதந்திரத்தோடு செயல்படுவதற்கு வித்திட்டது?

(அ) 1946, கேபினட் பணிக்குழு (ஆ) 1942, கிர்ப்ஸ் பணிக்குழு

(இ) அரசியல் சாசன அமைப்புக்குழு, 1949 (ஈ) சைமன் ஆணையம், 1928

159. பின்வரும் பொறுப்பாளர்களுள் யார் கீழ் அவை மற்றும் மேலவையின் செயலகத்தை கட்டுப்படுத்தி, தலைமையேற்று வழி நடத்தி செல்கின்றனர்?

(அ) ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி

(ஆ) பிரதம மந்திரி மற்றும் மத்திய பாராளுமன்றத்துறை அமைச்சர்

(இ) பிரதம மந்திரி மற்றும் உள்துறை அமைச்சர்

(ஈ) கீழவையின் சபாநாயகர் மற்றும் மேலவையின் தலைவர் முறையாக

160. இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புக்களைப் பற்றி குறிப்பிடுகிறது?

(அ) ஏழாவது அட்டவணை (ஆ) ஆறாவது அட்டவணை

(இ) பத்தாவது அட்டவணை (ஈ) பதினொன்றாம் அட்டவணை

161. துணை ஜனாதிபதிகளின் சரியான வரிசையை தேர்ந்தெடுக்கவும்.

(அ) கே.ஆர்.நாராயணன், பி.டி.ஜெட்டி, ஜாகிர் ஹீசேன், பி.எஸ்.ஷெகாவட்

(ஆ) ஜாகிர் ஹீசேன், பி.எஸ்.ஷெகாவட், பி.டி.ஜெட்டி, கே.ஆர்.நாராயணன்

(இ) ஜாகிர் ஹீசேன், பி.டி.ஜெட்டி, கே.ஆர்.நாராயணன், பி.எஸ்.ஷெகாவட்

(ஈ) பி.எஸ்.ஷெகாவட், ஜாகிர் ஹீசேன், பி.டி.ஜெட்டி, கே.ஆர்.நாராயணன்

162. 1976-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில், “சமயசார்பற்ற” என்ற வார்த்தை எத்தனையாவது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது?

(அ) 41வது அரசியலமைப்பு திருத்தம் (ஆ) 42வது அரசியலமைப்பு திருத்தம்

(இ) 44வது அரசியலமைப்பு திருத்தம் (ஈ) 45வது அரசியலமைப்பு திருத்தம்

163. மனிதனின் தடயங்கள் முதன் முதலில் இந்தியாவில் எங்கு கண்டெடுக்கப்பட்டன?

(அ) தக்காணம் (ஆ) நர்மதா (இ) இந்து-கங்கை (ஈ) சம்பால்

164. பசுமை ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர்

(அ) சூரிய சக்தி (ஆ) புனல் மின்சக்தி (இ) காற்று சக்தி (ஈ) புவிவெப்ப சக்தி

165. எந்த மரம் “படைப்பு மற்றும் அறிவின் மரமாக” சிந்து சமவெளி நாகரீக காலத்தில் கருதப்பட்டது?

(அ) அரச மரம் (ஆ) மாமரம் (இ) வேப்ப மரம் (ஈ) புளியமரம்

166. அஸ்பெஸ்டாசிஸ் என்ற நாள்பட்ட அழற்சி நிலையால் திசுக்கள் பாதிப்படையும் உறுப்பு

(அ) மூளை (ஆ) இதயம் (இ) நுரையீரல் (ஈ) சிறுநீரகம்

167. கீழ்க்கண்டவற்றை பொருத்துக:

பழங்குடியினர் மாநிலம்

(அ) அகா 1. அஸ்ஸாம்

(ஆ) அகிர்ஸ் 2. லடாக்

(இ) பெடா 3. அருணாச்சல் பிரதேஷ்

(ஈ) கார்பி 4. உத்திரப்பிரதேஷ்

அ ஆ இ ஈ

(அ) 3 4 2 1

(ஆ) 3 2 4 1

(இ) 4 1 2 3

(ஈ) 2 3 1 4

168. சீனாவில் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள்

(அ) 21 மே (ஆ) 1 ஜீன் (இ) 31 ஆகஸ்ட் (ஈ) 1 நவம்பர்

169. வேளாண்மை உற்பத்தியில் முதன்மையான நாடுகளை இறங்கு வரிசையில் தெரிந்தெடுக்க:

(அ) சீனா-இந்தியா-அமெரிக்க ஐக்கிய நாடுகள்-பிரேசில்

(ஆ) சீனா-அமெரிக்க ஐக்கிய நாடுகள்-பிரேசில்-இந்தியா

(இ) சீனா-அமெரிக்க ஐக்கிய நாடுகள்-இந்தியா-பிரேசில்

(ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்- சீனா -இந்தியா-பிரேசில்

170. கீழ்கண்டவற்றை பொருத்துக:

கட்சியின் பெயர் சின்னம்

(அ) ஜனதா தலம் (U) 1. ஏர்கலப்பை

(ஆ) ஜார்கண்ட முக்தி மோர்சா(JMM) 2. ஏணிப்படி

(இ) இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 3. வில்லும் அம்பும்

(ஈ) ஜம்மு காஷ்மீர் மாநாட்டு கட்சி 4. அம்பு

அ ஆ இ ஈ

அ. 2 3 4 1

ஆ. 3 4 1 2

இ. 4 3 2 1

ஈ. 1 2 3 4

171. “ECLGS” திட்டம் என்பது

(அ) அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டம்

(ஆ) அவசரகாலக் கடன் மற்றும் சட்ட உத்தரவாதத் திட்டம்

(இ) அவசரகாலக் கடன் மற்றும் ஆயுள் உத்தரவாதத் திட்டம்

(ஈ) அவசரகாலக் கடன் உத்தரவாத அமைப்பு

172. போலியோவிற்க்கான தடுப்பூசி என்ன?

(அ) மந்தமாக்கப்பட்ட போலியோ மருந்து

(ஆ) வாய்வழி போலியோ தடுப்பு மருந்து

(இ) பிசிஜி

(ஈ) மந்தமாக்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்து மற்றும் வாய்வழி போலியோ தடுப்பு மருந்து

173. பழங்களின் கெடா நிலைக்காலத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் கதிர்களானவை

(அ) X கதிர்கள் (ஆ) காமா கதிர்கள் (இ) பீட்டா கதிர்கள் (ஈ) ஆல்பா கதிர்கள்

174. ஒலி ஆற்றல் பெருக்கியின் அலகு டெசிபல் என்று குறிப்பதற்கான காரணம் என்ன?

(அ) நம்முடைய செவியுணர்வு (ஆ) எளிதில் கணக்கிட முடியும்.

(இ) வேறு எந்த அலகும் இல்லை (ஈ) கிரகாம் பெல்-லை கவுரவிப்பதற்காக

175. பிரச்சினைகளை ———- வேகத்தையும் திறனையும் பகுத்தறிதல் ஆய்வு திறன் மேம்படுத்துகிறது.

(அ) தீர்ப்பதில் (ஆ) உருவாக்குவதில் (இ) துவக்க முயற்சியில் (ஈ) போலச் செய்வதில்

176. விடுபட்ட எண்ணைக் காண்க 6, 20, 56, 176

(அ) 216 (ஆ) 316 (இ) 416 (ஈ) 516

177. மேலே உள்ள தொடரில் 0 மற்றும் $ என்ற உறுப்புகளுக்கு இடையே சரியாக நடுவில் வரும் உறுப்பைக் காண்க:

4 Y 3 N C & 9 B L P * D = M @ 2 E # 7 $ V F G 5

(அ) = (ஆ) ↑ (இ) D (ஈ) M

178. a + 2b = 100 என வருமாறு எத்தனை இயல் எண்கள் வரிசை ஜோடி (a,b) உள்ளது.

(அ) 33 (ஆ) 49 (இ) 50 (ஈ) 99

179. A என்பவர் ஒரு வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாள்களிலும் முடிப்பார் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை ———— நாள்களில் முடிப்பர்

(அ) 2 நாட்கள் (ஆ) 2 1/2 நாட்கள் (இ) 3 நாட்கள் (ஈ) 3 1/2 நாட்கள்

180. 15 ஆண்கள் ஒரு வேலையை முடிக்க 40 நாட்கள் எடுத்துக் கொள்வர். எனில், அவர்களுடன் மேலும் 15 ஆண்கள் சேர்ந்தால், அதே வேலையானது முடிய எத்தனை நாள்கள் ஆகும்?

(அ) 30 நாட்கள் (ஆ) 40 நாட்கள் (இ) 25 நாட்கள் (ஈ) 20 நாட்கள்

181. ஒரு முக்கோண வடிவிலான மனையின் சுற்றளவு 600 மீ. அதன் பக்கங்கள் 5 : 12 : 13 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அந்த மனையின் பரப்பு காண்க:

(அ) 11000 ச.மீ (ஆ) 14000 ச.மீ (இ) 12000 ச.மீ (ஈ) 13000 ச.மீ

182. 10% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் 3 ஆண்டுகளில் ———- என்ற அசலானது ₹.2,662 ஆக அதிகரிக்கும்.

(அ) ₹.2,000 (ஆ) ₹.1,800 (இ) ₹.1,500 (ஈ) ₹.2,500

183. ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% வீதம் அதிகரிக்கிறது. 2018ஆம் ஆண்டு மக்கள் தொகை 238765 ஆக இருந்தது, 2020ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க:

(அ) 268376 (ஆ) 268276 (இ) 268266 (ஈ) 268366

184. A,B மற்றும் Cன் மாத ஊதிய விகிதம் 2 : 3 : 5 Cன் மாத ஊதியம் Aயின் மாத ஊதியத்தை விட ₹.1,200 அதிகம் எனில் Bன் ஆண்டு ஊதியம் என்ன?

(அ) ₹.24,400 (ஆ) ₹.24,000 (இ) ₹.14,400 (ஈ) ₹.14,000

185. Aன் 2/3 பங்கும் bன் 75%ம் சமம் எனில் A : B என்பது

(அ) 1 :1 (ஆ) 9 : 8 (இ) 8 : 9 (ஈ) 10 : 11

186. 72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுபடக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண்

(அ) 10072 (ஆ) 10216 (இ) 10152 (ஈ) 10108

187. 62, 78 மற்றும் 109ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4ஐ மீதிகளாக கொடுக்கும் மீப்பெரு பொதுக்காரணி என்ன?

(அ) 5 (ஆ) 13 (இ) 15 (ஈ) 17

188. ஓர் எண்ணின் 60%இலிருந்து 60ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில் அந்த எண் ——– ஆகும்.

(அ) 60 (ஆ) 100 (இ) 150 (ஈ) 200

189. Aஇன் 10% என்பது Bஇன் 12% சமம் எனில் Aஇன் 15%, இன் எந்த சதவீதத்திற்கு சமம்?

(அ) 81% (ஆ) 18% (இ) 6% (ஈ) 3%

190. சென்னையின் 5-வது நீர்த்தேக்கம் கட்டப்படுவது

(அ) பூண்டி (ஆ) திருவள்ளுர் (இ) சோளாவரம் (ஈ) செங்குன்றம்

191. தமிழக கல்வித் திட்டத்தில் மூன்று மொழி ஏற்றுக் கொண்ட ஆண்டு

(அ) 1975 (ஆ) 1965 (இ) 1985 (ஈ) 1970

192. 1987ல் தொடங்கப்பட்ட, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான ஆதரவுத் திட்டம், யாருக்கான நலத்திட்டம்?

(அ) இளைஞர்கள் (ஆ) பெண்கள் (இ) மாற்றுத்திறனாளிகள் (ஈ) மாணவர்கள்

193. வரிசை I ஐ வரிசை II-உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க:

வரிசைI வரிசை II

அ. தொட்டில் குழந்தை திட்டம் 1.பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள

பெண்களை பாதுகாப்பது

ஆ. சேவை இல்லங்கள் 2. கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிப்பு

இ. சகி 3. பெண் குழந்தைகளை பாதுகாப்பது

ஈ. மகிளா சக்தி கேந்திரா 4. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு

உதவுவது

அ ஆ இ ஈ

அ. 1 4 2 3

ஆ. 2 1 4 3

இ. 3 1 4 2

ஈ. 4 2 1 3

194. பெரியார் ஆதரித்த சுயமரியாதை திருமணங்கள் பற்றிய பின்வரும் சொற்றொடர்களை கவனிக்கவும்.

சுயமரியாதை திருமணத்தோடு தொடர்பில்லாத சொற்றொடரை விளக்கவும்.

(அ) பிராமண புரோகிதர் இல்லாது நடத்தப்பட்டது

(ஆ) எந்த மதச்சார்பு வழக்கங்களும் பின்பற்றப்படவில்லை.

(இ) அரசுப் பதிவாளர் முன்னிலையில் நடைபெற்றது

(ஈ) மணமகன் மற்றும் மணமகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

195. காலமுறைப்படி வரிசைப்படுத்துக:

அ. சாட்லர் குழு

ஆ. ரெலிக் குழு

இ. பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு

ஈ. இராதாகிருஷ்ணன் குழு

(அ) ஆ,அ,ஈ,இ (ஆ) அ,ஆ,ஈ.இ (இ) இ,அ,ஆ,ஈ (ஈ) ஆ,அ,இ,ஈ

196. கீழ்க்கண்ட இணைகளைக் கவனி:

அ. கோபால கிருஷ்ண கோகலே ஜி.ஏ.நடேசன்

ஆ. விஜய ராகவாச்சாரியார் லாலா லஜ்பத் ராய்

இ. வ.உ.சிதம்பரம் சுப்ரமணிய சிவா

ஈ. டி.ரங்காச்சாரியார் வி.எஸ்.சீனிவாசன் சாஸ்திரி

மேற்கண்ட இணையில் எது தவறானது?

(அ) அ மற்றும் ஈ மட்டும் (ஆ) ஆ மட்டும் (இ) ஈ மட்டும் (ஈ) ஆ மற்றும் இ மட்டும்

197. இடை பழங்கற்காலம் பற்றிய பின்வரும் சொற்றொடர்களை கவனிக்க, பின் சரியான பதில்களை தேர்ந்தெடுத்து எழுதுக:

அ. கருவிகள் அளவில் சிறியன.

ஆ. அதிராம்பாக்கம், குடியம், வடமதுரை ஆகிய இடங்களில் நடந்த அகழ்வராய்ச்சியில் கிடைத்துள்ளன.

இ. முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.

ஈ. உணவுப்பயிர்கள் பயிரிட்டனர்

(அ) அ மற்றும் ஆ சரி (ஆ) ஆ மற்றும் இ சரி

(இ) இ மற்றும் ஈ சரி (ஈ) அ மற்றும் ஈ சரி

198. எந்த இனக்கூட்டம் சிந்துவெளி நாகரிகத்தினை உருவாக்கியது?

(அ) ஆரியர் (ஆ) திராவிடர் (இ) ஆரியர் அல்லாதார் (ஈ) முந்தைய ஆரியர்

199. ——–, ———-, ———–, இவை மூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்.

மேற்காணும் திருக்குறளில் எம்மூன்றும் கெட நோய் கெடும் என்கிறார் வள்ளுவர்?

(அ) காமம், வெகுளி, மயக்கம் (ஆ) அழுக்காறு, அவா, வெகுளி

(இ) நிம்பிரி, மயக்கம், அவா (ஈ) மயக்கம், அவா, காமம்

200. “சூல்” நாவலின் மையக் கதை எது?

(அ) சாதிப்பாகுபாடு (ஆ) தண்ணீர் பிரச்சினை

(இ) மகளிர் மேம்பாடு (ஈ) குழந்தைத் திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!