Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Answer KeyPrevious Questions

Tnpsc Combined Geology Subordinate Service Exam Previous Questions in Tamil

Tnpsc Assistant Geologist Exam Previous Questions in Tamil

1. “தரமான சவாரி திட்ட முன்னேற்றம்” என்ற திட்டம் தமிழ்நாட்டில் இதற்காக துவங்கப்பட்டது

A) வான்வெளிப் பயணத்தினை தரம் உயர்த்த

B) கல்வியை தரம் உயர்த்த

C) சாலைகளை தரம் உயர்த்த

D) இருப்புப் பாதைகளை தரம் உயர்த்த

2. மேட்டூர் நீர் தேக்கம் இவ்வாறும் அழைக்கப்படுகிறது

A) மால்கம் நீர்த்தேக்கம்

B) பென்னி நீர்த்தேக்கம்

C) ஸ்டேன்ஸ் நீர்தேக்கம்

D) ஸ்டேன்லி நீர்த்தேக்கம்

3. பின்வருவனவற்றை பொருத்துங்கள் :

சட்டம் – ஆண்டு

a) குழந்தை திருமண தடைச்சட்டம் – 1. 1961

b) வரதட்சணை தடைச்சட்டம் – 2. 2005

c) வீட்டு வன்முறைச் சட்டம் – 3. 2013

d) வேலை செய்யும் இடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் சட்டம் – 4. 2006

a) b) c) d)

A) 2 4 1 3

B) 3 1 4 2

C) 4 1 2 3

D) 2 3 4 1

4. வால்மீகி அம்பேத்கர் ஆவாஸ் யோஜனா, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் ______ பயன்பெற, வீடுகள் வழங்க நிறுவப்பட்டது.

A) விவசாயிகள்

B) நகர்ப்புற பெண்கள்

C) நகர்ப்புற குடிசைவாசிகள்

D) கிராம மக்கள்

5. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கத்தின் வரலாற்றினை ______ மாவட்ட _____ கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.

A) உத்திரமேரூர், காஞ்சிபுரம்

B) கீழடி, மதுரை

C) ஆதிச்சநல்லூர், தூத்துக்குடி

D) சித்தன்னவாசல், புதுக்கோட்டை

6. ஜமீன்தாரி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்?

A) வில்லியம் பென்டிங் பிரபு

B) வாரன் ஹேஸ்டிங் பிரபு

C) எல். காரன் வாலிஸ் பிரபு

D) லார்ட். டல்ஹொசி பிரபு

7. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பிராமணர் அல்லாதாருக்கான சுயாட்சி வட்டார அரசியலை கீழ்வருவனவற்றுள் எந்த வட்டாரத்தின் அரசியல்வாதிகள் வேண்டினர்?

A) பம்பாய் மாகாணம்

B) கல்கத்தா மாகாணம்

C) மெட்ராஸ் மாகாணம்

D) மத்திய மாகாணம்

8. பண்டிட் மோதிலால் பாட்டு என்ற தொகுப்பை வெளியிட்டவர்

A) V. A. தியாகராஜர்

B) N. கிருஷ்ணசாமி

C) K. V. மீனாட்சிசுந்தரம்

D) P. சுவாமிநாதன்

9. ­­­______ இரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்காது எனின்.

A) அறம், பொருள்

B) இன்பம், வீடுபேறு

C) தானம், தவம்

D) மானம், மறம்

10. ஒருவன் செல்வம் பெற்றதால், பெற்ற பயனாக வள்ளுவம் உரைப்பது யாது?

A) சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல்

B) பகைவரால் சுற்றப்பட ஒழுகல்

C) சான்றோரால் சுற்றப்பட ஒழுகல்

D) மன்னரால் சுற்றப்பட ஒழுகல்

11. ‘குடும்பத்தில் ஒரு நபர்’ – சிறுகதை ஆசிரியர்

A) மௌனி

B) சுஜாதா

C) பிரபஞ்சன்

D) கி. ராஜநாராயணன்

12. நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

– நுவ்வை என்பது

A) தங்கை

B) தமக்கை

C) தோழி

D) செவிலி

13. ரோமபுரி பேரரசு உருவாதற்கு முன்பிருந்தே மலபார் கடற்கரைக்கும் அரேபியாவிற்குமிடையே வியாபார தொடர்பு இருந்தது என கூறியது யார்?

A) M. R. M. அப்துர் ரஹீம்

B) M. M. மீரான் பிள்ளை

C) A. P. இப்ராஹிம் குன்ஜீ

D) R. S. அப்துல் லதீஃப்

14. 1921 – ல் மாப்ளா கலகம் எந்த இடத்தில் நடைபெற்றது.

A) அஸ்ஸாம்

B) கேரளா

C) பஞ்சாப்

D) வங்காளம்

15. ‘காம்ராட்’ என்ற ஆங்கில பத்திரிக்கையை ஆரம்பித்தவர் யார்?

A) மௌலான முகமது அலி

B) செய்யது வசீர் உசைன்

C) உசன் இமாம்

D) ஹக்கிம் அஜ்மல் ஹான்

16. 1925 ம் ஆண்டு ஈ. வெ. ராமசாமி காங்கிரஸிலிருந்து விலகியதற்குக் காரணம் :

1. இவரால் காந்திய கொள்கையை பின்பற்ற முடியவில்லை

2. காங்கிரஸ் முழுவதுமாக பிராமணத் தலைவர்களின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்தது.

மேற்காணும் காரணங்களில் எவை சரியான காரணம் என எழுதுக.

A) 1 மட்டும்

B) 2 மட்டும்

C) 1 மற்றும் 2 இரண்டும்

D) 1ம் அல்ல 2ம் அல்ல

17. பதினைந்தாவது நிதிக்குழுவின் தலைவர் யார்?

A) K. சந்தானம்

B) P. V. ராஜமன்னார்

C) C. ரங்கராஜன்

D) N. K. சிங்

18. தேசிய கிராமபுற சுகாதார திட்டத்தின் ஒரு பகுதியாக குழந்தை பரிசோதனை மற்றும் குழந்தையின் பாலினம் அறுதல் உள்ளது. இதை _____ என அறியப்படுகிறது.

A) ஜனனி சிசு சுரக்‌ஷா கார்யகிரம்

B) ராஷ்ட்ரிய பால் சுவாஸ்த்யா கார்யகிரம்

C) தாய் மற்றும் குழந்தை சுகாதார பிரிவு

D) குதி ஜோதி திட்டம்

19. பின்வரும் கூற்றை கவனி :

1. நிலச் சீர்த்திருத்தத்தில் ஜமீன்தாரி முறையில், நிலத்தை உழுபவரே அரசுக்கு வரி செலுத்துபவர் ஆவார்.

2. ஜமீன்தாரி முறை கார்ன் வாலிஸ் என்பவரால் 1893 ஆண்டு துவங்கப்பட்டது.

3. ஜமீன்தாரி நிலத்தின் சொந்தக்காரர் ஆவார்.

4. ஜமீன்தாரி முறை வங்காளம், பீகார், ஒரிசா மற்றும் வாரனாசியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலே கண்டவற்றுள் எவை சரியான கூற்று?

A) 1 மற்றும் 2

B) 3 மற்றும் 4

C) 2 மற்றும் 3

D) 1 மற்றும் 4

20. மத்திய மாநில அரசுகளால் வசூலிக்கப்படும் வரிகளில் சிலருக்கே கொடுக்கப்பட்டுள்ளன

1. சுங்க வரி

2. விவசாய நிலத்தின் மதிப்பு வரி

3. கலால் வரி

4. விவசாய நிலத்தின் சொத்து மீதான வரி

இவற்றுள் மத்திய அரசால் வசூலிக்கப்படும் விரிகளை குறியீடுகளைப் பயன்படுத்தி தெரிவு செய்க

A) 1 மட்டும்

B) 4 மட்டும்

C) 1 மற்றும் 3

D) 2 மற்றும் 4

21. அடிப்படை கடமைகளைப் பற்றிய கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எவை தவறானவை?

A) இந்திய அரசியல் சாசனத்தின் 10 அடிப்படை கடமைகளை அறிமுகப்படுத்த சுரன்சிங் குழு பரிந்துரைத்தது

B) இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள அடிப்படை கடமைகள் கருத்து சோவியத் நாட்டிலிருந்து பெறப்பட்டது.

C) அடிப்படைக் கடமைகளை 42வது திருத்தல் சட்டம் அறிமுகப்படுத்தியது

D) அவை சட்டத்தால் செயல்படுத்தப்படுகின்றன

22. இந்திய அரசியலமைப்பில் அரசு வழிகாட்டும் நெறிமுறை கொள்கைகளை உட்படுத்தியதன் முக்கிய நோக்கம்

A) சட்ட சீர்திருத்தம் மற்றும் சட்ட உருவாக்கம்

B) மக்கள் நல அரசு

C) சமூகத்தின் பலவீனப்பட்ட வகுப்பு மக்களின் நலன்களுக்கான சிறப்பு பாதுகாப்பு

D) நீதிமன்ற நடவடிக்கைகள்

23. இந்திய பாராளுமன்றத்தில் தனி உறுப்பினர் மசோதா கூற்றுப்படி

ஆர் : தனி உறுப்பினர் மசோதா நோட்டீஸ், அதன் நோக்கங்கள், காரணங்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் அனுமதியுடன் அளிக்கப்படவேண்டும்.

எஸ் : அரசாங்க மசோதாக்கள் போலவே தனி உறுப்பினர் மசோதா நிறைவேற்றப்படும்.

A) எஸ் சரி ஆனால் ஆர் தவறு

B) ஆர் தவறு ஆனால் எஸ் சரி

C) ஆர் மற்றும் எஸ் தவறு

D) ஆர் மற்றும் எஸ் சரி

24. அரசின் நெறிமுறை வழிகாட்டும் கொள்கைகள் பற்றிய கீழ்க்காணும் வாக்கியங்களை கவனிக்கவும்

a) அரசின் நெறிமுறை வழிகாட்டும் கொள்கைகளின் நேரடி ஆதாரம், இந்திய அரசு சட்டம், 1935 வழங்கிய அறிவுறுத்தல்கள் ஆகும்

b) 1937 ஆம் ஆண்டின் அயர்லாந்து அரசியலமைப்பின் வழிநடத்தும் கொள்கைகளை நீதிமன்றத்தில் நியாயபடுத்த முடியாது.

சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

A) a சரி ஆனால் b தவறு

B) a மற்றும் b சரி

C) a தவறு ஆனால் b சரி

D) a மற்றும் b தவறு

25. நகர, திராவிட மற்றும் விசர ஆகிய

A) இந்திய துணைக் கண்டத்தின் மூன்று முக்கிய இனமாகும்

B) இந்திய மொழிகள் இந்த மூன்று முக்கிய மொழியியல் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது

C) இந்த மூன்றும் இந்தியக் கோயிற்க்கலையின் வகைகளாகும்

D) இந்த மூன்றும் இந்திய இசைக் கர்ணங்களாகும்

26. விஜய நகர அரசர்களின் நாணயங்களில் செப்பு நாணயங்கள் எவை?

A) வராகன்

B) ஜிட்டல்

C) தாரா

D) பகோடா

27. கீழ்வரும் முற்கால நகரங்களில் ஒன்றினை பற்றி சீன யாத்திரிகர் பாகியான் குறிப்பிட்டுள்ளார்.

A) வைஷாலி

B) சாஞ்சி

C) பாடலிபுத்திரம்

D) தட்சசீலம்

28. ஹரப்பாவில் உள்ள கருவிகள் எதனால் செய்யப்பட்டது?

A) செம்பு மற்றும் இரும்பு

B) எஃகு மற்றும் இரும்பு

C) வெண்கலம் மற்றும் வெள்ளி

D) செம்பு மற்றும் வெண்கலம்

29. தொல் மங்கோலியர்கள் இமயமலையின் விளிம்பு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். கீழ் உள்ள எந்த பழங்குடியினர் தொல் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்கள்?

I. நாகர்கள்

II. சக்மாக்கள்

III. லெப்சா

IV. தோடர்கள்

A) I, II மற்றும் III மட்டும்

B) I, II மற்றும் IV மட்டும்

C) II, III மற்றும் IV மட்டும்

D) I, III மற்றும் IV மட்டும்

30. ஷோலா என அழைக்கப்படும் காடு வகை

A) உப அயன மித வெப்ப மலைக் காடுகள்

B) உப அயன ஈரப்பத மிதவெப்ப காடுகள்

C) உப அயன தேவதாரு காடுகள்

D) உப அயன வறண்ட பசுமை மாறாக் காடுகள்

31. வங்கதேசத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலம்

A) சிக்கிம்

B) பிஹார்

C) மணிப்பூர்

D) திரிபுரா

32. யாரால் “தேசிய புலம்பெயர் தகவல் அமைப்பு” உருவாக்கப்பட்டது?

A) தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

B) திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்

C) தேசிய மாதிரி கணக்கெடுப்பு கழகம்

D) மத்திய புள்ளியியல் கழகம்

33. இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானி யார்?

A) பிரியங்கா பதானி

B) குஞ்சன் ஸக்ஸேனா

C) மிஹிகா பாஜாஜ்

D) ஸ்நேஹா புர்ரா

34. “தேசிய கிரிஷி கர்மன்” விருதை ஐந்து முறைப் பெற்ற மாநிலம்

A) உத்திர பிரதேசம்

B) ஆந்திர பிரதேசம்

C) மத்திய பிரதேசம்

D) தமிழ்நாடு

35. சரியானவற்றைப் பொருத்துக :

தனிமங்கள் – பணிகள்

a) மாலிப்டினம் – 1. பச்சையம்

b) துத்தநாகம் – 2. மெத்தியோனின்

c) மெக்னீசியம் – 3. ஆக்சின்

d) சல்ஃபர் – 4. நைர்ரோஜினேஸ்

a) b) c) d)

A) 1 3 4 2

B) 2 1 3 4

C) 4 3 1 2

D) 4 2 1 3

36. ஒரு சிறந்த உயவுப் பொருள் பின்வரும் பண்பை பெற்றிருக்கும்.

A) உராய்வினால் ஏற்படக்கூடிய வெப்பத்தைத் துரிதமாக கடத்தும் பண்பைப் பெற்றிருக்க வேண்டும்

B) வேதியியல் வினைகளால் மாற வேண்டும்

C) உயர் வெப்ப நிலையில் சிதைவு பெற வேண்டும்

D) அதிக விலை

37. g யின் மதிப்பு காலத்தின் (time) அடிப்படையில் மாறுவது எதை வெளிப்படுத்துகிறது?

A) எண்ணெய் இருப்பதை

B) தாதுக்கள் இருப்பதை

C) நில அதிர்வை

D) பாலிஸ்டிக் ஏவுகணை பாதை

38. பொருத்துக, தமிழ்நாடு பட்ஜெட் 2019 ன் அடிப்படையில்

செயல்பாடு – வெளிப்பாடு

a) உலக முதலீட்டாளர் மாநாடு – 2019 – 1. கோயம்புத்தூர்

b) பாதுகாப்புத்துறைத் தொழில் காரிடார் – 2. நெடுஞ்சாலை

c) பருவ நிலை மாற்ற ஏற்புத்திட்டம் – 3. ரூ. 3 லட்சம் கோடி

d) CRIDP – 4. காவேரி டெல்டா

a) b) c) d)

A) 3 2 1 4

B) 4 3 2 1

C) 1 4 3 2

D) 3 1 4 2

39. எந்த நாட்டின் நிதியுதவியுடன் தமிழ்நாடு நகர சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது?

A) மலேசியா

B) ரஷ்யா

C) அமெரிக்கா

D) ஜப்பான்

40. தமிழகத்தில், மூன்றாம் பாலினத்தவர் தம் ஓய்வூதிய திட்டத்தின், பயனாளிகளின் வயது வரம்பு, ——– வயதுக்கு மேல்.

A) 40

B) 50

C) 58

D) 60

41. உறுதிப்படக் கூறல் (உ) : பட்டியலின சாதியினர்/பழங்குடியினர் மக்களுக்கு எதிரான குற்றங்களில் பெரும்பாலானவை புகார் அளிக்கப்படாமல் போய் விடுகிறது.

காரணம்(கா) : பட்டியலின சாதியினர்/பழங்குடியினர் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் தீண்டாமை மற்றும் பிற குற்றங்களைத் தடுப்பதற்காக அரசாங்கம் நீதிமன்றங்களை அமைத்திருந்தாலும், அக்குற்றங்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கச் சட்ட விதிமுறைகளுக்கு போதுமான அதிகாரம், நீதி வழங்குவதற்கான சிறந்த செயற்முறை போன்றவை இல்லை.

A) (உ) சரி ஆனால் (கா) தவறு

B) (உ), (கா) இரண்டும் சரி, இத்துடன் (கா) என்பது (உ) -வின் சரியான விளக்கம்

C) (உ) தவறு ஆனால் (கா) சரி

D) (உ), (கா) இரண்டும் சரி, இத்துடன் (கா) என்பது (உ) -வின் சரியான விளக்கம் அல்ல

42. மிகக்கூடுதலான கல்வி அறிவு பெற்ற மாவட்டமாக கன்னியாகுமரி திகழ என்ன காரணம்?

A) கேரள மாநில நிகழ்வுகளின் தாக்கம்

B) குறைந்த பிறப்பு விகிதம்

C) சிறிய மாவட்டம்

D) சுற்றுலா பகுதி

43. சுய மரியாதை இயக்கத்தின் சாதனை ______ ஆகும்.

1. விதவை மறுமணம்

2. தீண்டாமை ஒழிப்பு

3. வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்

4. வர்ண கிராம தர்ம முறையின் வீழ்ச்சி

A) 1, 2 சரியானது 3, 4 தவறானது

B) 1, 2, 3 சரியானது 4 மட்டும் தவறானது

C) 1, 3, 4 மட்டும் சரியானது 2 மட்டும் தவறானது

D) 1, 2, 3, 4 சரியானது

44. கீழ்கண்ட கூற்றுகளில் ருக்மணி லட்சுமிபதி பற்றிய சரியான கூற்று எது?

1. இவர் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார்

2. இவர் சட்டமறுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார்

3. இவர் ராஜாஜி மந்திரிசபையில் துணை சபாநாயகராக இருந்தார்

4. இவர் 1926ல் பாரிசில் நடைபெற்ற அகில உலக பெண்கள் வாக்குரிமை ஒன்றிய மாநாட்டில் கலந்து கொண்டார்

A) 1, 2, 3, 4 சரியானது

B) 1, 2 சரியானது 3, 4 மட்டும் தவறானது

C) 1, 3, 4 சரியானது 2 மட்டும் தவறானது

D) 1, 2, 3 சரியானது 4 மட்டும் தவறானது

45. மன்னனின் செல்வத்தைத் தேய்க்கும் படை எது?

A) கள்வன் பொருளைக் கைப்பற்றுதல்

B) கொடுங்கோன்மையின் காரணமாக ஏற்பட்ட கண்ணீர்

C) கொல்லுதல் தொழிலை மேற்கொள்ளுதல்

D) மக்களிடம் அதிக வரி வசூலித்தல்

46. தாம் கற்றதைப் பிறருக்கு எடுத்துக்கூற இயலாதவரை திருவள்ளுவர் எவ்வாறு உவமிக்கிறார்?

A) மணம் வீசாத மலர்

B) அழகற்ற மலர்

C) நிறமற்ற மலர்

D) பசுமையற்ற மலர்

47. இருந்தமிழே உன்னால் இருந்தேன் _____ விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன். (எந்த விருந்தமிழ்தம்)

A) இமையோர்

B) அவையோர்

C) உண்டோர்

D) நட்டோர்

48. தென்னிந்திய வைணவக் கொள்கையாளர்கள் இந்து கொள்கையை எந்த மாதிரியில் அமைந்தார்கள்?

A) பௌத்தம்

B) சமணம்

C) பிராமணம்

D) சைவம்

49. கீழ்கண்டவற்றில் எந்த இணை சரியாக பொருந்தவில்லை

1. பாரி – பறம்பு மலை

2. பேகன் – பழனி மலை

3. வேட்டுவன் – கோடை மலை

4. ஆய் – குதிரை மலை

A) 1, 2 சரியாக பொருந்தி உள்ளது. 3, 4 சடியாக பொருந்திவில்லை

B) 1, 2, 3 சரியாக பொருந்தி உள்ளது. 4 மட்டும் சரியாக பொருந்தவில்லை

C) 1, 2, 3, 4 சரியாக பொருந்தி உள்ளது.

D) 1, 3, 4 சரியாக பொருந்தி உள்ளது 2 மட்டும் சரியாக பொருந்தவில்லை

50. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு

a) கான் அப்துல் காபர் கான் – 1. செங்கோட்டை

b) INA – டொமினியன் அந்தஸ்து

c) ஆகஸ்ட் கொடை – 3. பர்தோலி சத்தியாகிரகம்

d) சர்தார் வல்லபாய் பட்டேல் – 4. செஞ்சட்டை

a) b) c) d)

A) 2 1 3 4

B) 3 4 2 1

C) 4 1 2 3

D) 1 3 4 2

51. ஏன் சுப்பிரமணிய சிவா இரயில் பயணத்தை மேற்கொள்ளவில்லை?

A) ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை

B) சமூக தரநிலை

C) தொழுநோயாளி

D) போராளி

52. கீழ்கண்டவற்றில் இந்தியாவில் வட்டார மொழியில் கல்வி எனும் கருத்தை முதன் முதலில் தொடங்கிய அமைப்பு எது?

A) விடியல் சமூகம்

B) இந்திய கழகம்

C) கிழக்கு இந்திய அசோசியேசன்

D) அனுசீலன் சமீதி

53. ‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?

A) திராவிட மகாஜன சபை

B) இராமகிருஷ்ண மிஷன்

C) அலிகார் இயக்கம்

D) பார்சி இயக்கம்

54. இந்தியாவில் தொழில்துறை தாராளமயமாக்கல் என்பது இவற்றுடன் தொடங்கியது

1. விவசாய உற்பத்தியை அதிகரிக்க

2. நில சீர்த்திருத்தச் சட்டம்

3. தொழில்துறை முன்னேற்றத்தை ஒழுங்குப்படுத்துதல்

4. தனியார்துறையின் முதலீடு மற்றும் பங்கு பெறுவதை ஊக்குவித்தல்

குறியீடுகளைக் பயன்படுத்தி சரியான விடையை தெரிவு செய்க.

A) 1 மட்டும்

B) 2 மற்றும் 3

C) 1 மற்றும் 4

D) 3 மற்றும் 4

55. பின்வரும் கூற்றை கவனி :

1. நிதிக் குழு நிர்ணயம் செய்வது. நிதி வளங்களை மாநில அரசுக்கு மாற்றுதல்

2. ஷரத்து 280(3) நிதிக் குழுவின் பணிகள் பற்றி கூறுகிறது

3. ஒரு நிதிக் குழுவின் காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்

4. ஜனாதிபதியால் நிதிக்குழு பணியமாத்தப்படுகிறது

மேலே கண்டவற்றுள் எவை சரியான கூற்று?

A) 1 மற்றும் 2

B) 1, 2 மற்றும் 3

C) 3 மற்றும் 4

D) 1, 2 மற்றும் 4

56. இந்தியாவின் தேசிய வருவாய் யாரால் கணக்கிடப்படுகிறது?

A) இந்திய ரிசர்வ் வங்கி

B) திட்டக் குழு

C) மத்திய புள்ளி விவர குழு

D) தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆணையம்

57. “ஒற்றை ஆட்சி அரசாங்கத்தின் பல்வேறு முக்கிய கூறுகளை தன்னகத்தே கொண்ட ஒரு குவாசி கூட்டாட்சி முறை கொண்ட நாடாக இந்தியாவை நம் அரசியலமைப்பு உருவாக்கியுள்ளது” என்று கூறியவர் யார்?

A) K. M. முன்ஷி

B) K. C. வியர்

C) நார்மன் D. பால்மர்

D) G. N. ஜோஷி

58. இந்திய தேர்தல் முறைகளில் ஒற்றை மாற்று வாக்குமூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள்

A) கீழ் சபையில் இரண்டு ஆங்கில-இந்தியர்களின் தேர்வு முறை

B) குடியரசு தலைவர், துணை குடியரசு தலவர், மாநில அவை உறுப்பினர்களின் தேர்தல் முறை

C) குடியரசு துணை தலைவரின் தேர்வு

D) பிரதமரின் தேர்ந்தெடுக்கும் முறை

59. மாநில சட்டமன்றம் கூடுவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கையானது

A) 30 உறுப்பினர்கள் அல்லது 10-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள்

B) 10 உறுப்பினர்கள் அல்லது மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு இவற்றுள் எது அதிகமோ அது

C) மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்

D) மொத்த உறுப்பினர்களில் பாதிக்குமேல் உறுப்பினர்கள்

60. பட்டியல் I (கூறு) பட்டியல் II (வழக்கு) உடன் பொருத்துக.

பட்டியல் I (கூறு) – பட்டியல் II (வழக்கு)

a) பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை – 1. அஸ்விந்தர் கோர் V பஞ்சாப் பல்கலைக்கழகம்

b) சமத்துவ உரிமை – 2. மினர்வா மில் லிமிட் V இந்தியா

c) இரட்டை தண்டனை முறை – 3. விஷாகா V ராஜஸ்தான் மாநிலம்

d) அரசியல் சாசனத்தின் அடிப்படை கூறுகள் – 4. மக்பூல் V பாம்பே மாநிலம்

a) b) c) d)

A) 3 1 4 2

B) 1 4 2 3

C) 3 4 1 2

D) 1 3 2 4

61. மாங்கனியர்கள் என அழைக்கப்படும் சமூகப்பிரிவினர் எதன் மூலம் மிகவும் பிரபலமானவர்களாக கருதப்படுகிறார்கள்.

A) வட-கிழக்கு இந்தியாவின் தற்காப்பு கலை (மக்கள்) கலைஞர்கள்

B) வட-மேற்கு இந்தியாவின் இசைக் கலைஞர்கள்

C) தென்-இந்தியாவின் பாரம்பரிய குரல் இசைக் கலைஞர்கள்

D) மத்திய-இந்தியாவில் காணப்படும் பெட்ரா டுரா பாரம்பரிய (பின்பற்றுகிறவர்கள்) கலைஞர்கள்

62. இந்தியா பல கலாச்சாரங்கள், மதங்கள் பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் கொண்ட அருங்காட்சியகம் என்று கூறியவர் யார்?

A) ஆர். கே. முகர்ஜி

B) எஸ். கே. சட்டர்ஜி

C) வீலர்

D) பி. எஸ். குகா

63. இந்திய முகலாயர்கள் சிறு மாதிரி ஓவியங்களின் காலம்?

A) 17ம் நூற்றாண்டின் முற்பகுதி

B) 17ம் நூற்றாண்டின் பிற்பகுதி

C) 18ம் நூற்றாண்டின் முற்பகுதி

D) 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி

64. பட்ஜெட் தயாரிப்பில் பங்கு பெறாதது

A) நிதி அமைச்சகம்

B) நிதி ஆயோக்

C) தலைமை தணிக்கை மற்றும் கணக்காளர்

D) நிதி ஆணையம்

65. நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பயன்படுத்த வேண்டிய மீச்சோம அளவினை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் முறை

A) ஜாடி சோதனை

B) RBC

C) தந்திர வடிப்பாள்

D) உயிர் கோபுரம்

66. வெள்ளப்பெருக்கில் ______ செறிவு அதிகமாக உள்ளது.

A) பாறைகள்

B) கற்கள்

C) வண்டல் மண்

D) மீன்கள்

67. சர்வதேச எல்லை இல்லாத இந்திய மாநிலம்

A) ஹரியானா

B) குஜராத்

C) ராஜஸ்தான்

D) தமிழ்நாடு

68. “நசீம் அல் பாஃர் -ன் 12-ம் பதிப்பு” இவ்விரு நாடுகளுக்கு இடையேயான கடற்படை பயிற்சியாகும்

A) இந்தியா மற்றும் வங்கதேசம்

B) இந்தியா மற்றும் நேபாளம்

C) இந்தியா மற்றும் ஓமன்

D) இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ்

69. கீழ்க்காணும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை?

I. மக்களாட்சியின் வலிமையான செயல்பாட்டிற்க்கு அரசியல் கட்சிகள் மிக அவசியம்

II. கட்சி முறை மற்றும் மக்களாட்சி முறையின் இடையேயான உறவினை எதிர்க்கட்சிகள் தான் முழுமையடைய செய்கின்றன.

III. எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் ஒரு காபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து மற்றும் நிலை பெருகிறார்.

சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

A) I மற்றும் II மட்டும்

B) I மட்டும்

C) II மற்றும் III மட்டும்

D) I, II மற்றும் III

70. இந்தியாவின் முதல் “கிசான் ரயில்” இவ்விடங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது

A) பஞ்சாப் மற்றும் ஹரியானா

B) மகாராஷ்டிரம் மற்றும் பீஹார்

C) உத்திரபிரதேசம் மற்றும் பீஹார்

D) பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசம்

71. கீழ்வரும் உயிரினங்களில் எது கடலில் முதன்மை உணவு தயாரிப்பாளர்கள்?

A) நெக்டான்

B) பெந்தாஸ்

C) பைட்டோபிளாங்டான் (தாவர மிதவைகள்)

D) ஜீபிளாங்டான் (விலங்கு மிதவைகள்)

72. ஏற்கனவே இருக்கின்ற அறிவும் புதிய அறிவும் துறையின் முக்கிய கருத்துக்களையும் கோட்பாடுகளையும் மையப்படுத்தி வடிவமைத்தல் புரிதலோடு கற்றலை எளிதாக்கும். இதுவே ____ அகும்.

A) கருத்துரு அறிவு நியமம்

B) சுய அறிதலறிவு

C) கருத்துரு வரைபடம் பயன்பாடு

D) தனியாள் வேற்றுமைகள்

73. நவீன நாட்களில், நுண்ணறிவு மிக்க மாணவர்கள் ஆய்வை உருவாக்குவதற்கு ஊக்குவித்து ஆசிரியர்கள் வழிகாட்டுகின்றார்கள். அதே போல் பண்டைய நாட்களில் மிக நுண்ணறிவு உடைய மாணவர்களுக்கு ______ முறை பயன்படுத்தப்பட்டது.

A) சிந்தனை

B) ஆய்வுத் திறன்

C) மனனம் (பிரதிபலித்தல்)

D) புரிந்து கொள்ளுதல்

74. கீழ்க்கண்ட நீர்மக் கரைசல்களில் அதிக pH மதிப்பு உடையது எது?

A) NaCl
B) KNO3
C) Na2CO3
D) ZnCl2

75. சிறந்த குறைப்பான்களுக்கு இருக்கும் பண்பு

A) அதிக அணு நிறை மற்றும் அதிக நியூட்ரான் உறிஞ்சி குறுக்கு வெட்டு

B) அதிக அணு நிறை மற்றும் குறை நியூட்ரான் உறிஞ்சி குறுக்கு வெட்டு

C) குறை அணு நிறை மற்றும் அதிக நியூட்ரான் உறிஞ்சி குறுக்கு வெட்டு

D) குறை அணு நிறை மற்றும் குறை நியூட்ரான் உறிஞ்சி குறுக்கு வெட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!