TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 22nd August 2024

1. அண்மையில், மனிதாபிமான உதவியின் அடிப்படையில் சுமார் 1400 கிலோ புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை, இந்தியா, எந்த நாட்டிற்கு அனுப்பியது?

அ. சிரியா

ஆ. உக்ரைன்

இ. ஈராக்

ஈ. ஈரான்

  • மனிதாபிமான உதவியின் ஒருபகுதியாக இந்தியா சுமார் 1400 கிகி புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை சிரியாவுக்கு அனுப்பியுள்ளது. இந்த உதவி இந்தியா-சிரியா உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு சிரியாவின் முதல் பெண்மணியான அசுமா அசாத் தீவிர ரத்தப்புற்றுநோயுடன் போராடிவருவதை அடுத்து வந்துள்ளது. இதற்கான முயற்சியில் சிரியாவில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

2. மின்துறை அமைச்சகத்தால் அண்மையில் தொடங்கப்பட்ட PROMPT, DRIPS மற்றும் JAL VIDYUT DPR ஆகிய இணைய நுழைவுகளை உருவாக்கிய அமைப்பு எது?

அ. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் (HAL)

ஆ. தேசிய அனல்மின் கழகம் (NTPC)

இ. மத்திய மின்சார ஆணையம் (CEA)

ஈ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

  • மத்திய மின்துறை அமைச்சகம் மூன்று புதிய இணைய நுழைவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை PROMPT (Portal for Online Monitoring of Projects—Thermal), DRIPS (Disaster Resource Inventory for Power Sector) மற்றும் மின் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக JAL VIDYUT DPR ஆகும். இது மின்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள மத்திய மின்சார ஆணையத்தால் NTPCஇன் உதவியுடன் PROMPT-க்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தளங்கள் அனைத்தும் மின்துறையில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • கட்டுமான தாமதங்களை நிவர்த்திசெய்வதற்காக நிகழ்நேரத்தில் அனல்மின் திட்டங்களை PROMPT கண்காணித்து பகுப்பாய்வு செய்கிறது. JAL VIDYUT DPR ஆனது சிறந்த நிர்வாகத்தை உறுதிசெய்வதற்காக நீர்மின்சார மற்றும் பம்ப் செய்யப்பட்ட சேமிப்புத்திட்டங்களின் நிலையைக் கண்காணிக்கிறது. DRIPS ஆனது மைய அதிகாரிகள் மற்றும் முகமைகளை இணைப்பதன்மூலம் இயற்கைப்பேரிடர்களால் ஏற்படும் மின் தடைகளைக் கண்டறிந்து நிர்வகிக்க உதவுகிறது.

3. ‘பெரிய தேவாங்கு’ என்றால் என்ன?

அ. உயர் விலங்கினம்

ஆ. சிலந்தி

இ. தவளை

ஈ. பாம்பு

  • அஸ்ஸாமில் உள்ள சிம்லாபாகன் கிராம மக்கள், அரிய மற்றும் அழிந்து வரும் விலங்கினமான பெரிய தேவாங்கைக் கண்டனர். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் நச்சுத்தன்மைமிக்க உயர் விலங்கினங்களான பெரிய தேவாங்குகள் பெரும்பாலும் மரங்களில் வாழ்கின்றன. 9 வகையான பெரிய தேவாங்குகள் உள்ளன; இதில் வங்காள பெரிய தேவாங்குகளும் அடங்கும். இந்த உயிரினம் IUCNஇன் சிவப்புப்பட்டியலில் அழிந்துவரும் நிலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • வங்காள பெரிய தேவாங்குகள் இந்தியாவின் வனவிலங்குப்பாதுகாப்பு சட்டம், 1972இன்கீழ் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில், வங்காள பெரிய தேவாங்குகள் வடகிழக்குப் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன.

4. ஷாஹீன்-II ஏவுகணையை உருவாக்கிய நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஜப்பான்

இ. ரஷ்யா

ஈ. பாகிஸ்தான்

  • பாகிஸ்தான் தனது ஷாஹீன்-II ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது. ஷாஹீன்-II என்பது 1,500-2,000 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய ஒரு நடுத்தர தொலைவு செல்லும், திட எரிபொருளில் இயங்கும் ஏவுகணை ஆகும். இது 17.2 மீ நீளமும் ஏவும்போது 23,600 கிகிராம் எடைகொண்டதாகவும் உள்ளது. இதனால் வழக்கமான அல்லது அணுசக்தி பேலோடுகளை எடுத்துச்செல்லமுடியும். ஏவுகணையின் துல்லியம் 350 மீ வட்டப்பிழை நிகழ்தகவு (CEP) என மதிப்பிடப்பட்டுள்ளது.

5. எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டத்தைத் தொடங்கிய அமைச்சகம் எது?

அ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. வேளாண் அமைச்சகம்

  • 2025-26ஆம் ஆண்டிற்குள் 20% எத்தனாலை பெட்ரோலுடன் கலக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது. முக்கியமாக கரும்பு வெல்லப்பாகுகளிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால், நெல் உமி மற்றும் மக்காச்சோளம்போன்ற மூலங்களில் இருந்தும் வரலாம், மேலும் இது புதுப்பிக்கத்தக்க எரிபொருளாகக் கருதப்படுகிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 2003இல் மாற்று எரிபொருளை ஊக்குவிக்க எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 2019இல் இந்தியா முழுமைக்கும் (சில யூனியன் பிரதேசங்களைத் தவிர) விரிவுபடுத்தப்பட்ட இத்திட்டம், 2013-14இல் 1.6%ஆக இருந்த எத்தனால் கலவையை 2022-23 இல் 11.8%ஆக உயர்த்தியது. இந்தியா 2025-26ஆம் ஆண்டிற்குள் 1,000 கோடி லிட்டர் எத்தனாலை கலப்பதற்காக உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

6. 2024 – பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் பணிப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. தேவேந்திர ஜஜாரியா

ஆ. சத்ய பிரகாஷ் சங்வான்

இ. தீபா மாலிக்

ஈ. யோகேஷ் கதுனியா

  • 2024 – பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளுக்கான பணிப்பொறுப்பாளராக (chef de mission) சத்ய பிரகாஷ் சங்வானை இந்திய பாராலிம்பிக் குழுமம் நியமித்துள்ளது. இந்திய பாராலிம்பிக் குழுமத்தின் துணைத்தலைவரான சத்ய பிரகாஷ் சங்வான், 12 விளையாட்டுகளில் பங்கேற்கும் 84 பாரா-தடகள வீரர்களைக்கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய குழுவை வழிநடத்துவார்.

7. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவாக வெளியிடப்பட்ட நினைவு நாணயத்தின் மதிப்பு என்ன?

அ. 10

ஆ. 100

இ. 150

ஈ. 500

  • 2024 ஆகஸ்ட்.18 அன்று சென்னையில் ‘கலைஞர்’ மு கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு `100 நினைவு நாணயத்தை பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் வெளியிட்டார். திராவிட இயக்கத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதி, 2018 ஆக.7 அன்று காலமானார். ‘கலைஞர்’ என்று அழைக்கப்படும் அவர் திமுக கட்சியின் தலைவராக இருந்தார். தற்போது திமுகவை அவரது மகன் மு க ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார். நினைவு நாணயங்கள் பொதுவாக குறைந்த அளவுகளில் அச்சிடப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியால் சேகரிப்புப்பொருட்களாக வைக்கப்படுகின்றன.

8. அண்மையில், ஊட்டச்சத்து அணுகலை அதிகரிக்க நியாய விலைக்கடைகளை, ‘ஜன் போஷான்’ மையங்களாக மாற்றுவதற்கான முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ள அமைச்சகம் எது?

அ. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்

ஆ. வேளாண் அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • 60 நியாய விலைக்கடைகளை, ‘ஜன் போஷான்’ மையங்களாக மாற்றுவதற்கான முன்னோடித் திட்டத்தை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். இலக்கிடப்பட்ட பொது விநியோக அமைப்பின்கீழ் குடும்ப அட்டைதயரர்களுக்கு நியாய விலைக்கடைகள் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கின்றன.
  • ‘ஜன் போஷன்’ மையங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை வழங்குவதோடு, நியாய விலைக்கடை நடத்துவோர்க்கு கூடுதல் வருவாயையும் வழங்குகிறது. குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

9. அண்மையில், எந்த நாட்டுடனான, ‘பசுமை அம்மோனியா ஏற்றுமதி ஒப்பந்தத்தில்’ இந்தியா கையெழுத்திட்டது?

அ. ரஷ்யா

ஆ. பிரான்ஸ்

இ. ஜப்பான்

ஈ. ஆஸ்திரேலியா

  • இந்தியாவும் ஜப்பானும் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு பசுமை அம்மோனியா ஏற்றுமதி செய்வதற்கான முதல் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பசுமை ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியா உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் இருப்பதற்கான இந்தியாவின் இலக்கில் இது ஒரு முக்கிய படிநிலையாகும். நோக்க ஒப்பந்தத்தில் செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரீஸ், சோஜிட்ஸ் கார்பரேஷன், கியூஷூ எலக்ட்ரிக் பவர் மற்றும் NYK லைன் ஆகியவை கையெழுத்திட்டன.
  • இது உலகளாவிய பசுமை ஆற்றல் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துக்காட்டுகிறது மற்றும் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான முதல் ஒத்துழைப்பைக் குறிக்கிறது.

10. BPaLM ரெஜிமென் என்பதுடன் தொடர்புடைய நோய் எது?

அ. டெங்கு

ஆ. ஜப்பானிய மூளையழற்சி

இ. காசநோய்

ஈ. மலேரியா

  • மத்திய சுகாதார அமைச்சகம் அண்மையில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ், Multidrug-Resistant Tuberculosis (MDR-TB) சிகிச்சைக்காக BPaLM முறையை அறிமுகப்படுத்தியது.
  • BPaLM விதிமுறை நான்கு மருந்துகளை ஒருங்கிணைக்கிறது. அவை பெடாகுலைன், ப்ரீடோமானிட், லைன்சோலிட் மற்றும் தேவையெனில் மோக்ஸிஃப்ளோக்சசின் ஆகும். ப்ரீடோமானிட் என்பது இந்தியாவில் பயன்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட புதிய காசநோய் எதிர்ப்பு மருந்து ஆகும். பாரம்பரிய சிகிச்சையுடன் ஒப்பிடும்போது இந்த முறை பாதுகாப்பானது, மிகவும் பயனுள்ளது மற்றும் நோயாளிக்கு ஏற்றது.

11. அண்மையில், அமேசான் காடுகளை உருவாக்குவதற்கு நிதியளிப்பதற்காக உலகின் முதல் கார்பன் ஒழிப்புப் பத்திரத்தை வெளியிட்ட அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. UNDP

இ. UNEP

ஈ. UNESCO

  • அமேசான் காடுகளை உருவாக்குவதற்காக உலகின் முதல் கார்பன் ஒழிப்புப் பத்திரத்தை உலக வங்கி வெளியிட்டு உள்ளது. இந்தப் பத்திரம் $225 மில்லியன் மதிப்பையும் ஒன்பதாண்டுகள் தவணை காலத்தையும் கொண்டது. இதன் முதலீட்டாளர்களின் வருவாய் புதிய மரங்களால் அகற்றப்படும் கார்பனின் அளவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இப்பத்திரம் மீண்டும் காடுகளை வளர்ப்பதற்கான முயற்சிகளை நிதி ரீதியாக ஊக்குவிப்பதன்மூலம் அமேசானைப் பாதுகாப்பதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

12. காக்ரபார் அணுமின்னுற்பத்தி நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. உத்தர பிரதேசம்

இ. குஜராத்

ஈ. ஹரியானா

  • குஜராத் மாநிலத்தில் உள்ள காக்ரபார் அணுமின்னுற்பத்தி நிலையத்தில் (KAPS-4) இந்தியாவின் இரண்டாவது 700 மெகாவாட் (MW) அணு உலை ஆக.21, 2024 அன்று முழுத் திறன்கொண்ட செயல்பாட்டைத் தொடங்கியது. உள்நாட்டு வடிவமைப்பான KAPS-4, 90% திறனில் இயங்கி முழு ஆற்றலை எட்டியது.
  • KAPS-4இன் வெற்றிகரமான செயல்பாடு அதன் இரட்டை அலகு KAPS-3ஐப் பின்பற்றுகிறது. 2031-32-க்குள் இதே வடிவமைப்பில் மேலும் பதினான்கு அணுவுலைகளை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. தற்போது, ​​NPCIL 24 அணுவுலைகளை இயக்குகிறது மேலும் எட்டு உலைகள் கட்டுமானத்தில் உள்ளன. 2031-32இல் இந்தியாவின் அணுசக்தித்திறன் 22,480 மெகாவாட்டை (MW) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. Recently, India has sent about 1400 kgs of anti-cancer drugs to which country in humanitarian assistance?

A. Syria

B. Ukraine

C. Iraq

D. Iran

  • India has sent about 1400 kg of anti-cancer drugs to Syria as part of humanitarian aid. This assistance aims to strengthen India-Syria relations and comes when Syria’s First Lady Asma Assad is battling leukaemia. The Indian Embassy in Syria is actively involved in this effort.

2. Which organization developed the online platforms PROMPT, DRIPS, and JAL VIDYUT DPR, recently launched by Ministry of Power?

A. Hindustan Aeronautics Limited (HAL)

B. National Thermal Power Corporation (NTPC)

C. Central Electricity Authority (CEA)

D. Ministry of New and Renewable Energy

  • The Union Ministry of Power launched three new online platforms: PROMPT (Portal for Online Monitoring of Projects—Thermal), DRIPS (Disaster Resource Inventory for Power Sector), and JAL VIDYUT DPR, to improve the power sector’s efficiency. It has developed by the Central Electricity Authority under the Ministry of Power with NTPC’s help for PROMPT, these platforms aim to improve efficiency and transparency in the power sector.
  • PROMPT tracks and analyzes thermal power projects in real-time to address construction delays. JAL VIDYUT DPR monitors the status of hydroelectric and pumped storage projects to ensure better management. DRIPS helps identify and manage power disruptions from natural disasters by linking nodal officers and agencies.

3. What is ‘Slow Loris’?

A. Primate

B. Spider

C. Frog

D. Snake

  • Villagers in Shimlabagan, Assam, spotted a rare and endangered primate, the Slow Loris. Slow lorises are venomous primates found in South and Southeast Asia, living mostly in trees. There are nine species of slow loris, including the Bengal slow loris, which is listed as Endangered on the IUCN Red List. The Bengal slow loris is legally protected under India’s Wildlife Protection Act, 1972. In India, the Bengal slow loris is found only in the northeast region.

4. Shaheen-II Missile is developed by which country?

A. India

B. Japan

C. Russia

D. Pakistan

  • Pakistan successfully tested its Shaheen-II surface-to-surface ballistic missile. Shaheen-II is a medium-range, solid-fueled missile with an estimated range of 1,500–2,000 km. It is 17.2 m long, weighs 23,600 kg at launch, and can carry conventional or nuclear payloads. The missile’s accuracy is estimated at 350 m circular error probable (CEP).

5. Ethanol Blended Petrol (EBP) Programme was launched by which ministry?

A. Ministry of New and Renewable Energy

B. Ministry of Petroleum and Natural Gas

C. Ministry of Science and Technology

D. Ministry of Agriculture

  • India aims to blend 20% ethanol with petrol by 2025-26, addressing concerns about fuel efficiency and the food vs. fuel debate. Ethanol, mainly produced from sugarcane molasses, can also come from sources like rice husk and maize, and is considered a renewable fuel.
  • The Ministry of Petroleum and Natural Gas launched the Ethanol Blended Petrol (EBP) Programme in 2003 to promote alternative fuels. The programme, extended to all of India (except some UTs) in 2019, increased ethanol blending from 1.6% in 2013-14 to 11.8% in 2022-23. India plans to produce 1,000 crore litres of ethanol for blending by 2025-26.

6. Who has been appointed as India’s chef de mission for the Paris Paralympics 2024?

A. Devendra Jhajharia

B. Satya Prakash Sangwan

C. Deepa Malik

D. Yogesh Kathuniya

  • The Paralympic Committee of India (PCI) has appointed Satya Prakash Sangwan as Chef de Mission for the Paris 2024 Paralympic Games. Sangwan, also PCI’s Vice-President, will lead India’s largest-ever contingent of 84 para-athletes in 12 sports.

7. What is the denomination of the commemorative coin issued in honor of former Tamil Nadu Chief Minister M. Karunanidhi?

A. 10

B. 100

C. 150

D. 500

  • Raksha Mantri Shri Rajnath Singh released a Rs 100 commemorative coin for Kalaignar M Karunanidhi’s birth centenary in Chennai on August 18, 2024. Karunanidhi, a key figure in the Dravidian movement and Tamil Nadu Chief Minister for nearly two decades, passed away on August 7, 2018. Known as Kalaignar (“the artist”), he led the DMK party, which remains influential under his son, Stalin. Commemorative coins are usually minted in limited quantities and held by the Reserve Bank of India as collectibles.

8. Recently, which ministry launched pilot project to transform Fair Price Shops into ‘Jan Poshan Kendras’ to boost nutrition access?

A. Ministry of Consumer Affairs, Food and Public Distribution

B. Ministry of Agriculture

C. Ministry of Rural Development

D. Ministry of Defence

  • The Union Minister launched a pilot project to transform 60 Fair Price Shops (FPS) into Jan Poshan Kendras. FPSs distribute essential commodities to ration card holders under the Targeted Public Distribution System. Jan Poshan Kendras will offer nutrition-rich food items and provide extra income for FPS dealers. The pilot project will be implemented in Gujarat, Rajasthan, Telangana, and Uttar Pradesh.

9. India recently signed a ‘Green Ammonia Export Agreement’ with which country?

A. Russia

B. France

C. Japan

D. Australia

  • India and Japan signed their first project offtake agreement for exporting green ammonia from India to Japan. The agreement was signed in the presence of Minister of New & Renewable Energy Pralhad Joshi. This marks a key step in India’s goal to become a global leader in green hydrogen and ammonia production. The Heads of Terms (HoT) agreement involves Sembcorp Industries, Sojitz Corporation, Kyushu Electric Power, and NYK Line. It highlights India’s growing role in the global green energy sector and represents the first such collaboration between India and Japan.

10. BPaLM Regimen is associated with which disease?

A. Dengue

B. Japanese Encephalitis

C. Tuberculosis

D. Malaria

  • The Union Health Ministry recently introduced the BPaLM regimen for treating Multidrug-Resistant Tuberculosis (MDR-TB) under the National TB Elimination Program. The BPaLM regimen combines four drugs: Bedaquiline, Pretomanid, Linezolid, and optionally Moxifloxacin. Pretomanid is a new anti-TB drug approved for use in India. The regimen is safer, more effective, and patient-friendly compared to traditional treatments.

11. Recently, which organization issued world’s first carbon removal bond to fund Amazon reforestation?

A. World Bank

B. UNDP

C. UNEP

D. UNESCO

  • The World Bank has issued the world’s first carbon removal bond to support Amazon reforestation. The bond is worth $225 million and has a nine-year term. Investors’ returns are tied to the amount of carbon removed by new trees, not just emission reductions from preventing deforestation. This bond aims to protect the Amazon by financially incentivizing reforestation efforts.

12. Kakrapar Atomic Power Station is located in which state?

A. Rajasthan

B. Uttar Pradesh

C. Gujarat

D. Haryana

  • India’s second 700 MW nuclear reactor at Kakrapar Atomic Power Station (KAPS-4) in Gujarat began full-capacity operation on August 21, 2024. KAPS-4, an indigenous design, reached full power after operating at 90% capacity. The successful operation of KAPS-4 follows its twin unit, KAPS-3. India plans to build 14 more reactors of the same design by 2031-32. Currently, NPCIL operates 24 reactors and has eight more under construction. By 2031-32, India’s nuclear power capacity is expected to reach 22,480 MW.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!
Home New App Course

Course Details

Question Bank Books

📢 More new updates are coming! Stay tuned for TNPSC Exam 2025.