TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 24th & 25th August 2024

1. முதலாவது ‘தேசிய விண்வெளி நாளுக்கானக்’ கருப்பொருள் என்ன?

அ. A New Era of Space Exploration

ஆ. India’s Journey to the Stars

இ. Touching Lives while Touching the Moon: India’s Space Saga

ஈ. மேற்குறிப்பிட்ட எதுவுமில்லை

  • இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி நாளை 2024 ஆக.23 அன்று கொண்டாடியது. இந்த நாள் சந்திரயான்-3இன் விக்ரம் தரையிறங்கி நிலவின் தென்துருவப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியதைக் குறிக்கிறது. இந்த அறியப்படாத பகுதியில் தரையிறங்கிய முதல் நாடும் நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடும் இந்தியா ஆகும். “Touching Lives while Touching the Moon: India’s Space Saga” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருள் ஆகும்.

2. அண்மையில், உலக ஒலி, ஒளி & பொழுதுபோக்கு உச்சிமாநாட்டை (WAVES) ஏற்பாடு செய்த அமைச்சகம் எது?

அ. நுகர்வோர் விவகார அமைச்சகம்

ஆ. தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்

இ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • தகவல் ஒலிபரப்பு அமைச்சகமானது புது தில்லியில் நடந்த உலக ஒலி, ஒளி & பொழுதுபோக்கு உச்சிமாநாட்டிற்காக (WAVES) “இந்தியாவில் படைப்போம் சவால்–பருவம் 1”இன்கீழ் 25 சவால்களை அறிமுகப்படுத்தியது. WAVES என்பது ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (M&E) துறையில் ஒத்துழைப்பு, புதுமை மற்றும் விவாதங்களுக்கான ஒரு தளமாகும். அதன் இலக்குகளில் இந்தியாவின் படைப்பாளி பொருளாதாரத்தை உயர்த்துவது, இந்தியாவை ஈர்ப்புமிகு முதலீட்டு இடமாக மாற்றுவது மற்றும் புதிய தொழில் போக்குகளுக்கு ஏற்ப மாற்றுவது ஆகியவை அடங்கும். இது கலாசார பரிமாற்றங்களை ஊக்குவிக்கிறது மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. ஞாயிற்றின் காந்தப்புலத்தை ஆய்வுசெய்ய ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ. இந்திய அறிவியல் கழகம்

ஆ. இந்திய வானியற்பியல் நிறுவனம்

இ. இந்திய தொலையுணரி நிறுவனம்

ஈ. ஆர்யபட்டா காட்சிப்பதிவு அறிவியல் ஆய்வு நிறுவனம்

  • இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் வானியலாளர்கள் கொடைக்கானல் டவர் டன்னல் தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஞாயிற்றின் காந்தப்புலங்களை ஆய்வுசெய்யும் ஒரு முறையை உருவாக்கியுள்ளனர். பல்வேறு கரு நிழல் மற்றும் புறநிழல்போன்ற சிக்கலான அம்சங்களைக்கொண்ட சூரிய புள்ளி பகுதியில் இந்த ஆய்வு கவனம் செலுத்தியது. ஹைட்ரஜன்-ஆல்பா மற்றும் கால்சியம்-II நிறமாலைக் கோடுகளைப் பயன்படுத்தி கூர்நோக்கப்பட்டது. டன்னல் தொலைநோக்கியின் 3-ஆடி வானிறுத்தி அமைப்பு துல்லியமான சூரிய கண்காணிப்பு மற்றும் நவீன தரவு துல்லியத்திற்கு வழிவகுத்தது. சூரிய காந்தப்புலங்கள் மின்னேற்றம் செய்யப்பட்ட துகள்களின் இயக்கத்தால் உருவாக்கப்படுகின்றன.

4. ‘களமெழுத்து’ என்றால் என்ன?

அ. பாரம்பரிய கலை வடிவம்

ஆ. செவ்வியல் நடனம்

இ. நாட்டுப்புறப்பாடல்

ஈ. பழங்காலப்பாறை

  • கேரள மாநிலம் கொச்சியில் மலையாளத்துறையின் ஏற்பாட்டில் அண்மையில் ‘களமெழுத்து’ பயிலரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. ‘துளி சித்திரம்’ அல்லது ‘களம்பாட்டு’ என்றும் அழைக்கப்படும் ‘களமெழுத்து’, கேரளாவின் பாரம்பரிய ஓவியக்கலை வடிவமாகும். காளி, ஐயப்பன், வேட்டக்கொருமகன்போன்ற தெய்வங்களை வழிபடும் நிகழ்வுகளின் போது இது வரையப்படுகிறது. சடங்குகளின் முடிவில் இசைக்கருவியுடன் ஓவியங்கள் அழிக்கப்படுகின்றன. ஓவியங்களுக்குத் தாவரங்களிலிருந்து பெறப்படும் இயற்கையான வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

5. அண்மையில், உத்தர பிரதேச மாநிலத்தின் எந்த நகரத்தில் தூய்மையான ஆறுகளுக்கான ஸ்மார்ட் ஆய்வகம் திட்டம் தொடங்கப்பட்டது?

அ. அயோத்தி

. வாரணாசி

இ. லக்னோ

ஈ. கான்பூர்

  • இந்தியாவிற்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான பசுமை உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாண்மை வாரணாசி நகரத்தில் தூய ஆறுகளுக்கான ஸ்மார்ட் ஆய்வகத்தை உருவாக்க வழிவகுத்தது. இந்தக் கூட்டுறவில் இந்தியாவின் நீர்வளத்துறை, IIT-BHU மற்றும் டென்மார்க் சிறிய ஆறு மேலாண்மையை மேம்படுத்துகிறது.
  • இது நிலையான முறைகள் மற்றும் ஒத்துழைப்பைப் பயன்படுத்தி வருணா ஆற்றுக்கு புத்துயிர் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த முயற்சி IIT-BHUஇல் ஒரு கலப்பு-ஆய்வகத்தையும் தீர்வுகளைச் சோதிக்க வருணா ஆற்றில் உள்ள ஓர் ஆய்வகத்தையும் ஒருங்கிணைக்கிறது.

6. அண்மையில், ‘நீதிபதி ஹேமா குழு அறிக்கை’யை வெளியிட்ட மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. மகாராஷ்டிரா

ஈ. உத்தரபிரதேசம்

  • தனியுரிமைக் கவலைகள் காரணமாக, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிபதி ஹேமா குழு அறிக்கையை கேரள மாநில அரசு வெளியிட்டது. மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2017 ஜூலையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்த அறிக்கை மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின சமத்துவமின்மைகுறித்து விசாரணை செய்வதை நோக்கமாகக்கொண்டது. இந்த வழக்கு தொழில் துறையில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளின் பரந்த பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகிறது.

7. ‘ICGS சுஜை’ என்பது என்ன வகையான கப்பல்?

அ. விரைவு ரோந்துக் கப்பல்

ஆ. கடல் ரோந்துக் கப்பல்

இ. மாசுக்கட்டுப்பாட்டுக்கப்பல்

ஈ. மிதவை ஊர்தி

  • இந்தியக் கடலோரக் காவல்படையின் கடல் ரோந்துக் கப்பலான ‘ICGS சுஜை’ அண்மையில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்குச்சென்றது. இது ஒடிசா மாநிலத்தின் பாரதீப்பில், கடலோரக் காவல்படை பிராந்தியத்தின் (வடகிழக்கு) கட்டளையின்கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் பல்வேறு பணிகளுக்காக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
  • 105-மீ நீளக் கப்பலில் 30மிமீ சிஆர்என் 91 துப்பாக்கி, மேம்பட்ட வழிசெலுத்தல், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் உணரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக்கப்பல் கடல் மண்டலங்களில் பணி நீட்டிப்பிற்கும், கண்காணிப்பு, தேடல் மற்றும் மீட்பு மற்றும் சட்ட அமலாக்கம்போன்ற பணிகளை மேற்கொள்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

8. அண்மையில், ‘தேசிய மாநாடு: சங்கதன் ஸ்வஸ்த்ய சம்ரித்தி’ தொடங்கப்பட்ட இடம் எது?

அ. பெங்களூரு

ஆ. புது தில்லி

இ. சென்னை

ஈ. போபால்

  • மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், புது தில்லியில் ‘தேசிய மாநாடு: சங்கதன் ஸ்வஸ்த்ய சம்ரித்தி’யை தொடக்கி வைத்தார். உணவு, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் WASH ஆகியவற்றில் பெண்களின் பங்குகுறித்து இது கவனம் செலுத்துகிறது. சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என முன்னிலைப்படுத்தப்படுகின்றன; இதில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாட்டின் முன்னேற்றத்திற்கு சுய உதவிக் குழுக்கள் முக்கியமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சிறந்த அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் நலமான மக்கள்தொகை தேசிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற கருத்தை விவாதங்கள் வலியுறுத்தியது. நாடு முழுவதிலும் இருந்து சுயஉதவிக்குழுக்கள் உட்பட பல்வேறு பெண்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

9. ‘மேக்ரோபேஜ்கள்’ என்றால் என்ன?

அ. வெள்ளை இரத்த அணுக்கள்

ஆ. வைரஸ்

இ. காசநோய்க்கான மருந்துகள்

ஈ. பூஞ்சை

  • நோயுற்ற கல்லீரல் செல்கள் மற்றும் இரத்த விழுங்கணுக்கள் இடையிலான தொடர்புகுறித்து அறிவியலாளர்கள் ஒரு புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். இரத்த விழுங்கணுக்கள் என்பவை நோயெதிர்ப்பு அமைப்புக்கு முதன்மையான வெள்ளை இரத்த அணுக்களாகும்.
  • அவை நுண்ணுயிரிகளை உறிஞ்சி செரிக்கின்றன, குப்பைகளை அழிக்கின்றன, மற்ற நோயெதிர்ப்பு செல்களைத் தூண்டுகின்றன. “மேக்ரோபேஜ்” என்ற சொல் கிரேக்கச் சொல்லான “பெரிய” மற்றும் “சாப்பிடு” என்பதில் இருந்து வந்தவை. எலும்பு மஜ்ஜையில் உருவாகும் மோனோசைட்டுகளிலிருந்து இரத்த விழுங்கணுக்கள் உருவாகின்றன. திசுக்களில் இரத்த விழுங்கணுக்கள் அல்லது டென்ட்ரிடிக் செல்கள் ஆவதற்குமுன் மோனோசைட்டுகள் இரத்தத்தில் சுற்றுகின்றன. இரத்த விழுங்கணுக்கள் கல்லீரல், மூளை, எலும்புகள், நுரையீரல் மற்றும் நோய்த்தொற்று ஏற்படும் இடங்களில் உட்பட பல்வேறு உறுப்புகளில் காணப்படுகின்றன.

10. பாம்பாடுஞ்சோலை தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • Gongronema sasidharanii’ என்ற புதிய தாவர இனம், கேரள மாநிலத்தில் உள்ள பாம்பாடுஞ்சோலை தேசியப் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தாவரம் மென்மையான தண்டுகள் மற்றும் பாலேட்டு வெள்ளை முதல் ஊதா-பச்சை வரையிலான சிறிய, கலச வடிவ மலர்களைக் கொண்டுள்ளன. தென்னிந்தியாவில் முதன்முறையாக ‘Gongronema’ இனம் கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவில் ‘Gongronema’ இனங்கள் வடகிழக்கு, உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் மட்டுமே காணப்பட்டன.
  • பாம்பாடுஞ்சோலை தேசியப்பூங்காவானது கேரளத்தின் தென்மேற்குத்தொடர்ச்சி மலைகளில் சுமார் 12 சதுர கிமீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்தப் பூங்கா மலைப்பாங்கான நிலப்பரப்பு, 1600 முதல் 2400 மீ உயரம் மற்றும் கடுமையான பருவமழையுடன் கூடிய மூடுபனியுடன் கூடிய தட்பவெப்பநிலை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

11. அண்மையில், அதன் முதல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கலப்பு-ராக்கெட் ‘RHUMI-1’ஐ ஏவிய நாடு எது?

அ. இந்தியா

ஆ. நேபாளம்

இ. மியான்மர்

ஈ. பாகிஸ்தான்

  • தமிழ்நாட்டைச்சேர்ந்த புத்தொழில் நிறுவனம், இந்தியாவின் முதல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கலப்பு-ராக்கெட் ‘RHUMI-1’ஐ ஏவியது. இதன் ஏவுதல் விழா சென்னை திருவிடந்தையில் நடந்தது. இந்த ராக்கெட் புவி வெப்பமடைதல் மற்றும் தட்பவெப்பநிலைமாற்றம் குறித்த ஆராய்ச்சியை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கலப்புமுறை மோட்டார்மூலம் RHUMI-1 இயக்கப்படுகிறது. காஸ்மிக் கதிர்வீச்சு, புற ஊதா கதிர்வீச்சு மற்றும் காற்றின் தரம் ஆகியவற்றைக் கண்காணிக்க இது 3 CUBE செயற்கைக்கோள்களைக் கொண்டுசென்றது. சுற்றுச்சூழலின் இயக்கவியலை நன்கு புரிந்துகொள்வதற்காக முடுக்கமானி அளவீடுகள், உயரம் மற்றும் ஓசோன் அளவுகளை ஆய்வு செய்ய 50 பிக்கோ செயற்கைக்கோள்களையும் இது பயன்படுத்துகிறது.

12. சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, அண்மையில், “தேசிய மருத்துவப்பதிவேடு” இணைய நுழைவை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. விவசாய அமைச்சகம்

இ. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • இந்தியாவில் பதிவுசெய்ய தகுதியுள்ள அனைத்து MBBS மருத்துவர்களையும் பதிவுசெய்வதற்காக சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் புது தில்லியில், “தேசிய மருத்துவப்பதிவு” இணைய நுழைவைத் தொடக்கியது.
  • பதிவுசெய்யப்பட்ட அனைத்து ஆங்கில முறை மருத்துவர்களுக்கும் இந்த இணைய நுழைவு ஒரு விரிவான மற்றும் ஆற்றல்மிக்க தரவுத்தளமாக இருக்கும். இந்த முயற்சி இந்தியாவின் சுகாதாரச் சுற்றுச்சூழல் அமைப்பை டிஜிட்டல் ரீதியில் வலுவானதாக மாற்றும் நோக்குடன் ஒத்துப்போகிறது. தேசிய மருத்துவப் பதிவேடு டிஜிட்டல் ஹெல்த்கேர் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதையும், தரமான சுகாதாரப்பாதுகாப்பை உறுதிசெய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. துணை மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார நிபுணர்களுக்கும் இதேபோன்ற பதிவுத்தளம் தொடங்கப்படும். தேசிய மருத்துவ ஆணையமானது உரிமம்பெற்ற மருத்துவர்களின் பெயர், முகவரி மற்றும் தகுதிகள் உள்ளிட்ட விவரங்களை மின்னணு முறையில் பராமரிக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சந்திராயன்-3 சேகரித்த அறிவியல் தரவுகளை வெளியிட்ட ISRO!

கடந்தாண்டு ஆக.23 அன்று நிலவின் அதிகமறியப்படா தென்துருவத்தில் சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. அதில், விக்ரம் லேண்டரில் 3 மற்றும் பிரக்யான் ரோவரில் 2 என மொத்தமுள்ள 5 சேகரிப்பில் உள்ள 55 GB மதிப்பிலான அறிவியல் தரவுகளைப் பயன்படுத்தும் அனுமதியை ISRO வழங்கியுள்ளது. சந்திரயான்-3 தரவுத்தொகுப்புகள் இந்திய விண்வெளி அறிவியல் தரவு மையத்தின் ‘கொள்கை அடிப்படையிலான தரவுகள் மீட்பு, பகுப்பாய்வு, பரப்புதல் மற்றும் அறிவிப்பு அமைப்பு’ (பிரதான்) இணையதளத்தில் கிடைக்கின்றன.

2. 2.70 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம்: தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள், முப்பது வயது வரையுள்ள பெண்கள் 2.70 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தொடங்கியது.

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் படி, 19 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் சிறார்கள், 20 – 30 வயது வரை உள்ள பெண்கள் என மொத்தம் 2.70 கோடி பேர் பயனடையும் வகையில் குடற்புழு நீக்க மாத்திரையான, ‘அல்பெண்டாசோல்’ விநியோகிக்கும் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நோயால் கடுமையான தொற்று ஏற்பட்டால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, பலவீனமாக இருத்தல், பசியின்மைபோன்ற அறிகுறிகள் தென்படும்.

1. What is the theme of the first ‘National Space Day’?

A. A New Era of Space Exploration

B. India’s Journey to the Stars

C. Touching Lives while Touching the Moon: India’s Space Saga

D. None of the Above

  • India celebrated its first National Space Day on August 23, 2024. This day marks the successful landing of Chandrayaan-3’s Vikram Lander on the Moon’s southern polar region. India is the first country to land in this uncharted region and the fourth overall to achieve a lunar landing. The theme for the celebration is “Touching Lives while Touching the Moon: India’s Space Saga.”

2. Recently, which ministry organized the World Audio Visual & Entertainment Summit (WAVES)?

A. Ministry of Consumer Affairs

B. Ministry of Information Broadcasting

C. Ministry of New and Renewable Energy

D. Ministry of Defence

  • The Ministry of Information Broadcasting launched 25 challenges under the ‘Create in India Challenge—Season 1’ for the World Audio Visual & Entertainment Summit (WAVES) in New Delhi. WAVES is a platform for collaboration, innovation, and discussions in the Media and Entertainment industry. Its goals include boosting India’s creator economy, making India an attractive investment destination, and adapting to new industry trends. It promotes cross-cultural exchanges and aims to develop a skilled workforce.

3. Recently, which institution has developed a new method to study the Sun’s magnetic field?

A. Indian Institute of Science

B. Indian Institute of Astrophysics

C. Indian Institute of Remote Sensing

D. Aryabhatta Research Institute of Observational Sciences

  • Indian Institute of Astrophysics (IIA) astronomers developed a method to study the Sun’s magnetic fields using the Kodaikanal Tower Tunnel Telescope. The study focused on a sunspot region with complex features like multiple umbrae and a penumbra. Observations were made using Hydrogen-alpha and Calcium II spectral lines. The Tunnel Telescope’s 3-mirror Coelostat setup allowed precise Sun tracking and improved data accuracy. Solar magnetic fields are generated by the movement of electrically charged particles.

4. What is ‘Kalamezhuthu’?

A. Traditional Art form

B. Classical Dance

C. Folk Song

D. Ancient Rock

  • A Kalamezhuthu workshop was recently organized by the Malayalam Department in Kochi, Kerala. Kalamezhuthu, also known as Dhulee Chithram or Kalam Pattu, is a traditional floor painting art form in Kerala. It is performed during rituals to worship gods like Kaali, Ayyappan, and Vettakkorumakan. The drawings are erased at the end of rituals with musical accompaniment. Natural colors from plants are used for the drawings.

5. Recently, in which city of Uttar Pradesh was the Smart Laboratory on Clean Rivers (SLCR) Project inaugurated?

A. Ayodhya

B. Varanasi

C. Lucknow

D. Kanpur

  • The Green Strategic Partnership between India and Denmark led to the creation of the Smart Laboratory on Clean Rivers (SLCR) in Varanasi. This partnership involves India’s Department of Water Resources, IIT-BHU, and Denmark to improve small river management. SLCR focuses on rejuvenating the Varuna River using sustainable methods and collaboration. The initiative combines a hybrid lab at IIT-BHU and a living lab on the Varuna River to test solutions.

6. Which state government has recently released the ‘Justice Hema Committee report’?

A. Tamil Nadu

B. Kerala

C. Maharashtra

D. Uttar Pradesh

  • Kerala government released the Justice Hema Committee report after nearly five years due to privacy concerns. The committee was established in July 2017 following the abduction and sexual assault of a Malayalam actress. The report aimed to investigate sexual harassment and gender inequality in the Malayalam film industry. The case highlighted broader issues of discrimination against women in the industry.

7. What kind of vessel is ‘ICGS Sujay’?

A. Fast Patrol Vessel

B. Offshore Patrol Vessel

C. Pollution Control Vessel

D. Hovercraft

  • ICGS Sujay, an Offshore Patrol Vessel (OPV) of the Indian Coast Guard, recently visited Jakarta, Indonesia. It is stationed in Paradip, Odisha, under the Coast Guard Region (North-East) command and frequently deployed for various missions.
  • The 105-meter vessel is equipped with a 30mm CRN 91-gun, advanced navigation, communication systems, and sensors. The ship is designed for extended deployment in maritime zones, conducting missions like surveillance, search and rescue, and law enforcement.

8. Recently, where was the ‘National Conclave: Sangathan Swasthya Samriddhi’ inaugurated?

A. Bengaluru

B. New Delhi

C. Chennai

D. Bhopal

  • Union Minister Shivraj Singh Chouhan inaugurated the ‘National Conclave: Sangathan Swasthya Samriddhi’ in New Delhi. The event focuses on women’s roles in food, nutrition, health, and WASH. Health and nutrition are highlighted as essential for the nation’s development, with women playing a key role.
  • Self-help groups are recognized as important for the country’s progress. Discussions emphasized the need for better basic health facilities and the idea that a healthy population leads to national growth. Women, including self-help groups from across the country, are attending the conclave.

9. What are ‘Macrophages’?

A. White Blood Cells

B. Virus

C. Drugs for TB

D. Fungus

  • Scientists have published a new paper on the interaction between diseased liver cells and macrophages. Macrophages are white blood cells crucial to the immune system. They engulf and digest microorganisms, clear debris, and stimulate other immune cells. The word “macrophage” comes from Greek terms meaning “big” and “eat.”
  • Macrophages develop from monocytes, which are formed in the bone marrow. Monocytes circulate in the blood before becoming macrophages or dendritic cells in tissues. Macrophages are found in many organs, including the liver, brain, bones, lungs, and at infection sites.

10. Pampadum Shola National Park is located in which state?

A. Tamil Nadu

B. Karnataka

C. Kerala

D. Andhra Pradesh

  • A new plant species, Gongronema sasidharanii, was discovered in Pampadum Shola National Park, Kerala. This plant has smooth stems and small, urn-shaped flowers that are creamy white to purplish-green. It’s the first time the Gongronema genus has been found in South India.
  • Previously, Gongronema species in India were only found in the northeast, Uttar Pradesh, Punjab, and West Bengal. Pampadum Shola National Park is in the Southern Western Ghats, Kerala, covering about 12 sq km. The park has hilly terrain, altitudes from 1600 to 2400 m, and a misty climate with heavy monsoon rain.

11. Recently, which country launched its first reusable hybrid rocket “RHUMI 1”?

A. India

B. Nepal

C. Myanmar

D. Pakistan

  • A Tamil Nadu-based start-up launched India’s first reusable hybrid rocket, “RHUMI 1”. The launch took place from a mobile platform in Thiruvidandhai, Chennai. The rocket aims to advance research on global warming and climate change. RHUMI 1 is powered by a hybrid motor. It carried three CUBE satellites to monitor cosmic radiation, UV radiation, and air quality. It also deployed 50 Pico satellites to study accelerometer readings, altitude, and ozone levels to understand environmental dynamics better.

12. Which ministry recently launched “National Medical Register (NMR) Portal” to boost healthcare?

A. Ministry of Science and Technology

B. Ministry of Agriculture

C. Ministry of Health and Family Welfare

D. Ministry of Rural Development

  • Ministry of Health and Family Welfare launched the ‘National Medical Register Portal’ in New Delhi for the registration of all MBBS doctors eligible for registration in India. This portal will be a comprehensive and dynamic database for all registered allopathic doctors. The initiative aligns with the vision of making India’s health ecosystem digitally robust.
  • The National Medical Register aims to strengthen the digital healthcare ecosystem and ensure quality healthcare. A similar register will be launched for paramedics and other healthcare professionals. The National Medical Commission will maintain the register electronically, including details like name, address, and qualifications of licensed doctors.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!
Home New App Course

Course Details

Question Bank Books

📢 More new updates are coming! Stay tuned for TNPSC Exam 2025.