TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 26th & 27th August 2024

1. அண்மையில், இந்தியாவின் முதல் பெண் தேசிய பந்தயச்சாம்பியனானவர் யார்?

அ. பியான்கா காஷ்யப்

. டயானா பூண்டோல்

இ. ஐஸ்வர்யா பிஸ்சே

ஈ. பிப்பா மான்

  • சென்னையில் நடைபெற்ற 2024 – MRF இந்திய தேசிய கார்பந்தய சாம்பியன்ஷிப்பில் ‘சலூன்’ பிரிவில் தேசிய சாம்பியன்ஷிப்பை புனேவைச் சேர்ந்த ஆசிரியை டயானா பூண்டோல் வென்றார்.

2. மீத்தேன் உமிழ்வைக் கண்காணிப்பதற்காக, ‘டானேஜர்-1’ என்ற செயற்கைக்கோளை ஏவிய விண்வெளி அமைப்பு எது?

அ. ISRO

ஆ. ESA

இ. CNSA

ஈ. NASA

  • மீத்தேன் உமிழ்வைக் கண்டறிவதற்காக NASA ‘டானேஜர்-1’ என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் ஸ்பேஸ் ஃபோர்ஸ் தளத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டைப் பயன்படுத்தி இந்தச் செயற்கைக்கோள் ஏவப்பட்டது. இது NASAஇன் ஜெட் புரொபல்ஷன் ஆய்வகம் மற்றும் பிற கூட்டாளர்களால் உருவாக்கப்பட்டது. முக்கியமாக கரியமில வாயு (CO2) மற்றும் மீத்தேன் (CH4) ஆகியவற்றின் உமிழ்வைக் கண்டறிவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது புவி வெப்பமடைதலுக்குப் பங்களிக்கும் பசுமை இல்ல வாயுக்களை கண்காணிப்பதில் கவனம் செலுத்துகிறது. டானேஜர்-1 உமிழ்வைக் கண்காணிக்க மேம்பட்ட ஸ்பெக்ட்ரோமீட்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்தச் செயற்கைக்கோளால் நாள்தோறும் 130,000 சதுர கிமீட்டர் உமிழ்வைக் கண்காணிக்க முடியும்.

3. அண்மையில், தென்னிந்திய ஆதிவாசி அறிவு மையமான, ‘கானு’ தொடங்கப்பட்ட மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. தெலுங்கானா

  • கர்நாடக மாநிலத்தின் BR மலைகளில் உள்ள பழங்குடியினர் சுகாதார வள மையம், தென்னிந்திய ஆதிவாசி அறிவு மையமான ‘கானு’வை ஆகஸ்ட்.25 அன்று தொடக்கியது. ‘கானு’ என்றால் கன்னடம் மற்றும் சோலிகா மொழியில் “பசுமையான காடு” என்று பொருள். தென்னிந்திய ஆதிவாசி சமூகங்களின் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் கலாச்சாரத்திற்கென அர்ப்பணிக்கப்பட்ட முதல் அறிவுசார் மையமாக ‘கானு’ திகழ்கிறது. இது ஒரு நூலகம், ஒரு சிறுகுறிப்பு நூலியல் மற்றும் ஓர் இணைந்தெழுதப்பட்ட நூல் ஆகிய மூன்று கிளைகளைக் கொண்டிருக்கும். ‘கானு’ நூலகத்தின் நூல்கள் செப்டம்பர் முதல் இணையவழியில் கிடைக்கும்.

4. அண்மையில், ‘சப்னோ கி உதான்’ என்ற மின்னிதழை வெளியிட்ட அமைச்சகம் எது?

அ. கல்வி அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

  • மத்திய கல்வி அமைச்சகம், ‘சப்னோ கி உடான்’ என்ற மின்னிதழின் முதல் பதிப்பை வெளியிட்டது. 2023 ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 பணியின் ‘விக்ரம்’ தரையிறங்கி திங்களின் தென் துருவத்தில் தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில், தேசிய விண்வெளி நாளையொட்டி இவ்விதழ் வெளியிடப்பட்டது. NCERT இணைய தளத்தில் கிடைக்கும் இந்த மின்னிதழ், மத்திய கல்வி அமைச்சரால் வெளியிடப்பட்டது. இதன் தொடக்கப்பதிப்பானது விண்வெளி மற்றும் சந்திரயான் பணிகளில் கவனம் செலுத்துகிறது, கட்டுரைகள், கவிதைகள் மற்றும் பலவற்றை இது கொண்டுள்ளது. ‘சப்னோ கி உதான்’ என்ற மின்னிதழை NCERT மற்றும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை தயாரித்துள்ளது.

5. அண்மையில் தனது ஓய்வை அறிவித்த ஷிகர் தவானுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. ஹாக்கி

ஆ. கால்பந்து

இ. கிரிக்கெட்

ஈ. டென்னிஸ்

  • 2024 ஆக.24 அன்று பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக ஷிகர் தவான் அறிவித்தார். 2024-ஏப்ரலில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக IPL தொடரில் அவர் கடைசியாக விளையாடினார். ஷிகர் தவான் 269 பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடி 24 சதங்களை அடித்துள்ளார். 2022-டிசம்பரில் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டிதான் இந்தியாவுக்காக அவர் விளையாடிய கடைசி ஆட்டம்.
  • ‘கப்பர்’ என்று அழைக்கப்படும் ஷிகர் தவான், 2010இல் தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் மற்றும் 2013இல் ஓர் அறிமுக வீரரின் அதிவேக டெஸ்ட் சதம் என்ற சாதனையைப் படைத்தார். ஷிகர் தவான் IPLஇல் தில்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடி 6769 ரன்கள் எடுத்துள்ளார்.

6. அண்மையில், ‘தீனதயாள் SPARSH யோஜனா’வைத் தொடங்கிய அமைச்சகம் எது?

அ. வேளாண் அமைச்சகம்

ஆ. தகவல் தொடர்பு அமைச்சகம்

இ. மின்சார அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின்கீழ் உள்ள அஞ்சல் துறை மாணவர்களிடையே அஞ்சல்தலை சேகரிப்பை ஊக்குவிக்க தீனதயாள் SPARSH யோஜனாவை அறிமுகப்படுத்தியது. சிறு வயதிலிருந்தே அஞ்சல்தலை சேகரிப்பை ஒரு பொழுதுபோக்காக ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • ஆமதாபாத்தில் நடந்த அஞ்சல்தலை கண்காட்சியில் அஞ்சலகத் தலைவர் கிருஷ்ணகுமார் யாதவ் இதை அறிவித்தார். அஞ்சல்தலைகள் மற்றும் அதுசார்ந்த பொருட்களைச் சேகரித்து ஆய்வுசெய்வதில் அஞ்சல்தலைத்திரட்டு அடங்கும். அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 6 -9 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இந்தத்திட்டம் திறக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதுமுள்ள குழந்தைகளிடையே அஞ்சல்தலைகள்மீதான ஆர்வத்தையும் ஆராய்ச்சியையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. ‘PM-WANI’ திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. SC/ST மற்றும் பெண் தொழில்முனைவோர் மத்தியில் தொழில்முனைவை ஊக்குவிப்பது

ஆ. கிராமப்புற & தொலைதூரப்பகுதிகளில் மலிவு விலையில், அதிவேக இணைய இணைப்பை வழங்குவது

இ. குறுந்தொழில்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு நிதியுதவி வழங்குவது

ஈ. அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் இலவச LPG இணைப்புகளை வழங்குவது

  • TRAI ஆனது PM-WANI திட்டத்தின்கீழ் பொது தரவு அலுவலகங்களுக்கான (PDOக்கள்) பிராட்பேண்ட் கட்டணத்தை குறைக்க பரிந்துரைத்துள்ளது. 2020இல் தொடங்கப்பட்ட PM-WANI திட்டமானது பொது WI-Fi ஹாட்ஸ்பாட்கள் வழியாக குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப்பகுதிகளில் பிராட்பேண்ட் அணுகலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. PDOக்கள், மாதத்திற்கு `300-400 என்ற தனிப்பட்ட பிராட்பேண்ட் கட்டணத்தைப் போலன்றி, இணைய இணைப்புகளுக்கு `8 இலட்சம் வரை ஆண்டுச்செலவுகளை எதிர்கொள்கின்றனர். TRAI ஆனது PDO கட்டணங்களைச் சில்லறை பிராட்பேண்ட் கட்டணங்களுடன் சீரமைக்க முன்மொழிகிறது. திட்டத்தின் செயல்பாட்டின் அடிப்படையில் TRAI இந்தக் கட்டணங்களை இரண்டு ஆண்டுகளில் மதிப்பாய்வு செய்யும்.

8. அண்மையில், கீழ்க்காணும் எந்நாட்டிற்கு, 4 BHISHM (Bharat Health Initiative for Sahyog Hita & Maitri) கியூப்களை இந்தியப்பிரதமர் வழங்கினார்?

அ. உக்ரைன்

ஆ. போலந்து

இ. மலேசியா

ஈ. இஸ்ரேல்

  • கீவ் பயணத்தின்போது, ​​இந்தியப்பிரதமர் உக்ரைன் அதிபருக்கு நான்கு BHISHM கியூப்களை பரிசாக வழங்கினார். BHISHM கியூப்ஸ் என்பது அவசர சிகிச்சைக்கான சிறிய, நடமாடும் மருத்துவப்பிரிவுகளாகும். ஒவ்வொரு கனசதுரமும் 15” பெட்டியில் பல்வேறு மருத்துவப்பொருட்களைக் கொண்டுள்ளது. அவை விமானம், கடல், நிலம் அல்லது டிரோன் மூலம் கொண்டு செல்லப்படலாம். எளிதாக கையாளுவதற்காக 20 கிலோகி வரை எடையுள்ளதாக அது இருக்கும்.

9. ஜல்தபாரா தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஒடிசா

ஆ. அஸ்ஸாம்

இ. மேற்கு வங்காளம்

ஈ. பீகார்

  • அண்மையில், ஜல்தபாரா தேசியப்பூங்காவில் உள்ள ஐந்து காண்டாமிருக குட்டிகள் இறந்தன. இதேபோன்றதொரு நிகழ்வு, 2020 பிப்ரவரி மாதத்தில், COVID-19 பரவலுக்கு முன்பாக நிகழ்ந்தது; அப்போது ஆறு காண்டாமிருகங்கள் இறந்தன. இந்த உயிரிழப்பு ஆந்த்ராக்ஸ் நோயால் நிகழவில்லை என வனத்துறையினர் உறுதிசெய்துள்ளனர்.
  • கொல்கத்தாவில் காண்டாமிருகத்தின் சடலங்கள் பரிசோதிக்கப்பட்டதில் ஆந்த்ராக்ஸ் இல்லை என்பது தெரியவந்தது. மரணத்திற்கானக் காரணம் நாடாப்புழு தொற்று அல்லது பிற நச்சு எனப் பின்னர் கண்டறியப்பட்டது. நாடாப்புழுக்கள் வனவுயிரிகளுக்கு கடுமையான நோய்களை ஏற்படுத்தும். ஜல்தபாரா தேசியப்பூங்காவானது வட மேற்கு வங்கத்தில் கீழை இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

10. 2024 – ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்பில், மருஹபா கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்ற நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. இந்தியா

இ. சீனா

ஈ. பிரான்ஸ்

  • மாலத்தீவில் நடந்த 2024 – ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்பில் மருஹபா கோப்பையில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்திய அணியில் கமலி P, அஜீஷ் அலி, ஸ்ரீகாந்த் D, சஞ்சை செல்வமணி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
  • ஜப்பான் 58.40 புள்ளிகளுடன் தங்கம் வென்றது; இந்தியா 24.13 புள்ளிகளுடன் வெள்ளி வென்றது. தைபே 23.93 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றது; சீனா 22.10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தது. ஹீட்-2 அரையிறுதியில் இந்தியா 32.16 புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றது. இந்திய சர்ஃபர் ஹரிஷ் முத்து காலிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்காக வரலாற்றுச் சாதனை படைத்தார்.

11. சமீபத்தில், நடுவண் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட, ‘BioE3 கொள்கை’யின் முதன்மை நோக்கம் என்ன?

அ. பாரம்பரிய வேளாண் முறைகளை ஊக்குவிப்பது

ஆ. உயர்-செயல்திறன் உயிரி உற்பத்தியை ஊக்குவிப்பது

இ. நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது

ஈ. இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவது

  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில், உயிரி தொழில்நுட்பத்துறையின் உயர் செயல்திறன் உயிரி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான, ‘பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரி-E3 கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. BioE3 கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஆராய்ச்சி – மேம்பாடு, தொழில்முனைவோருக்கான புதுமை ஆகியவை அடங்கும். இது உயிரி-உற்பத்தி, உயிரி-செயற்கை நுண்ணறிவு மையங்கள், உயிரி-பவுண்டரி ஆகியவற்றை உருவாக்குவதன்மூலம் தொழில்நுட்ப மேம்பாட்டையும் வணிகமயம் ஆக்கலையும் துரிதப்படுத்தும். பசுமை வளர்ச்சியை மீட்டுருவாக்கம் செய்யும் உயிரி பொருளாதார மாதிரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், இந்தக் கொள்கை இந்தியாவின் திறமையான தொழிலாளர் ஆற்றலை விரிவுபடுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.

12. ‘விஞ்ஞான் தாரா’ திட்டத்தை’ நிர்வகிப்பதற்கு பொறுப்புள்ள துறை எது?

அ. உயிரித் தொழில்நுட்பத் துறை

ஆ. தொழிற்கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறை

இ. விண்வெளித் துறை

ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் ஒருங்கிணைந்த மத்திய துறைத்திட்டமான ‘விஞ்ஞான் தாரா’ என்ற பெயரில் இணைக்கப்பட்ட மூன்று குடைத்திட்டங்களைத் தொடர ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் மூன்று பரந்த கூறுகளைக் கொண்டுள்ளது: 1. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நிறுவன மற்றும் மனித திறன் மேம்பாடு, 2. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் 3. கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் வரிசைப்படுத்தல்.
  • 2021-22 முதல் 2025-26 வரையிலான 15ஆவது நிதிக்குழு காலத்தில் ஒருங்கிணைந்த திட்டமான ‘விஞ்ஞான் தாரா’ திட்டத்தைச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட ஒதுக்கீடு `10,579.84 கோடியாகும். திட்டங்களை ஒரே திட்டமாக இணைப்பது நிதி பயன்பாட்டில் செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் துணை திட்டங்கள் / திட்டங்களுக்கு இடையே ஒத்திசைவை ஏற்படுத்தும். நாட்டில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பதே ‘விஞ்ஞான் தாரா’ என்ற திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இத்திட்டத்தை அமல்படுத்துவதன்மூலம், கல்வி நிறுவனங்களில் நன்கு பொருத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களை வளர்ப்பதன்மூலம் நாட்டின் அறிவியல் & தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்த முடியும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி திரும்பியது மறு பயன்பாட்டு ராக்கெட் : இந்தியாவில் முதல்முறை.

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைபிரிட் ராக்கெட் ‘ரூமி–1’ ஆனது சென்னை கிழக்குக்கடற்கரைச்சாலையில் பட்டிபுலம் என்ற இடத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, அது செயற்கைகோள்களை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தி மீண்டும் பூமிக்குத் திரும்பியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த, ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனமான ‘ஸ்பேஸ் சோன் இந்தியா’ நிறுவனமும், மார்ட்டின் குழுமமும் இணைந்து, ‘மிஷன் ரூமி-2024’ என்ற பெயரில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை உருவாக்கியுள்ளன. இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ‘ரீயூசபிள் ஹைப்ரிட் ராக்கெட்’ ஆகும்.

2. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வரும் 2025 ஏப்.01ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: UPS திட்டத்தில் சேர குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிக்காலம் இருக்கவேண்டும். அவ்வாறு குறைந்தபட்ச பணிக்கால வரம்பான 10 ஆண்டுகளில் ஓய்வு பெறுபவர்களுக்கு, குறைந்தபட்சம் `10,000 மாத ஓய்வூதியம் வழங்கப்படும். திட்டத்தில் சேர்ந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக அளிக்கப்படும். பணி ஓய்வுக்குப்பிறகு அரசு ஊழியர் உயிரிழக்கும் நிலையில், குடும்ப உறுப்பினருக்கு ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும்.

விஞ்ஞான ஆசிரம (தாரா) திட்டம்: கிராமப்புற வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, மனிதர்களின் திறன்களை வளர்ப்பது, ஆராய்ச்சி மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நடைமுறை ஆகியவற்றை ஊக்குவிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், உயிரித்தொழில்நுட்பத்துறையில் பொருளாதாரம், சுற்றுச்சூழல் & வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்கான உயிரித்தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ‘பயோ-E3’ திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.

2. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பெர்சிமன் பழ சீசன் தொடக்கம்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழத்தின் சீசன் தொடங்கியுள்ளது.

3. கடலூர் அருகே பழங்கால சுடுமண் பொம்மை, வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு.

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வாழப்பட்டு தென்பெண்ணையாற்றில் பழங்கால சுடுமண் பொம்மை, வட்டச் சில்லுகள் கண்டெடுக்கப்பட்டன.

4. புதிய உயிரி பொருளாதார கொள்கை.

“உயிரி-இ3” கொள்கை இந்தியாவின் உற்பத்தித்துறையில் 4ஆவது புரட்சியை ஏற்படுத்தும் என்றும், 2030இல் உயிரிப் பொருளாதார வளர்ச்சி `27 இலட்சம் கோடியை எட்டும் என்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி, மேம்பாடு, தொழில்முனைவோருக்கான புதுமை ஆகியவை இந்த “உயிரி-இ3” என்ற கொள்கையின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

நாட்டின் உயிரிப்பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது. கடந்த 2014இல் `62,000 கோடி என இருந்த உயிரிப்பொருளாதாரம், நிகழாண்டில் `10,79,000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தத் துறையின் பொருளாதார வளர்ச்சி வருகின்ற 2030இல் `27 இலட்சம் கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

1. Recently, who became the first female national racing champion from India?

A. Bianca Kashyap

B. Diana Pundole

C. Aishwarya Pissay

D. Pippa Mann

  • Diana Pundole, a teacher and mother from Pune won the national championship in the saloon category at the MRF Indian National Car Racing Championship 2024 in Chennai.

2. Recently, which space organization has launched ‘Tanager-1 Satellite’ to track methane emissions?

A. ISRO

B. ESA

C. CNSA

D. NASA

  • NASA launched the Tanager-1 satellite to track methane emissions. The satellite was launched using a SpaceX Falcon 9 rocket from Vandenberg Space Force Base, California. It was developed by NASA’s Jet Propulsion Laboratory and other partners.
  • The mission aims to detect major carbon dioxide and methane emissions. It focuses on monitoring greenhouse gases that contribute to global warming. Tanager-1 uses advanced spectrometer technology to track emissions. The satellite can monitor 130,000 square kilometres of emissions daily. Emission data will be publicly available to aid global reduction efforts.

3. Recently, a South Indian Adivasi Knowledge Centre called ‘KAANU’ was launched in which state?

A. Tamil Nadu

B. Kerala

C. Karnataka

D. Telangana

  • The Tribal Health Resource Centre in BR Hills, Karnataka, launched Kaanu, a South Indian Adivasi Knowledge Centre, on August 25. “Kaanu” means “evergreen forest” in Kannada and Soliga.
  • Kaanu aims to be the first knowledge center dedicated to the past, present, and culture of South Indian Adivasi communities. It will have three branches: a library, an annotated bibliography, and a co-written book. The Kaanu Library will be inaugurated, and the bibliography will be available online in September.

4. Which ministry recently released the e-magazine ‘Sapno Ki Udaan’?

A. Ministry of Education

B. Ministry of Home Affairs

C. Ministry of Defence

D. Ministry of Housing and Urban Affairs

  • The Union Ministry of Education released the first edition of the e-magazine Sapno ki Udaan. The release coincided with National Space Day, celebrating the Chandrayaan-3 mission’s Vikram lander soft landing on the Moon’s south pole on August 23, 2023.
  • The e-magazine, available online on the NCERT portal, was launched virtually by the Union Minister for Education, with participation from other education officials. The inaugural edition focuses on Space and Chandrayaan missions, featuring articles, poems, and more. Sapno ki Udaan is produced by NCERT and the Department of School Education & Literacy.

5. Shikhar Dhawan, who recently announced his retirement, is associated with which sports?

A. Hockey

B. Football

C. Cricket

D. Tennis

  • Shikhar Dhawan announced his retirement from international and domestic cricket on August 24, 2024. His last match was for Punjab Kings in the IPL in April 2024. Dhawan played 269 international matches, scoring 24 hundreds—17 in ODIs and 7 in Tests. His final game for India was an ODI against Bangladesh in December 2022.
  • Known as ‘Gabbar,’ Dhawan made his ODI debut in 2010 and set a record for the fastest Test century by a debutant in 2013. He scored over 5000 runs in ODIs with a 40-plus average and 90-plus strike rate. Dhawan played for Delhi Capitals, Mumbai Indians, Deccan Chargers, Sunrisers Hyderabad, and Punjab Kings in the IPL, scoring 6769 runs.

6. Which ministry has recently launched ‘Deen Dayal SPARSH Yojana’?

A. Ministry of Agriculture

B. Ministry of Communications

C. Ministry of Power

D. Ministry of Defence

  • The Department of Post under the Union Ministry of Communication launched the Deen Dayal SPARSH Yojana to promote stamp collecting among students. The scheme aims to encourage philately as a hobby from a young age.
  • Postmaster General Krishna Kumar Yadav announced it at a stamp exhibition in Ahmedabad. Philately involves collecting and studying postage stamps and related items. The scheme is open to students in classes VI to IX from recognised schools. It aims to develop interest and research in stamps among children across India.

7. What is the primary objective of the ‘PM-WANI scheme’?

A. To promote entrepreneurship among SC/ST and women entrepreneurs

B. To provide affordable, high-speed internet connectivity in rural and remote areas

C. To support the growth and development of micro-enterprises by providing financial assistance

D. To provide free LPG connections to all rural households

  • TRAI has suggested lowering broadband rates for Public Data Offices (PDOs) under the PM-WANI scheme to make internet access cheaper. Launched in 2020, PM-WANI aims to expand broadband access via public Wi-Fi hotspots, especially in rural and remote areas. PDOs face high annual costs up to ₹8 lakh for internet connections, unlike personal broadband rates of ₹300-400 per month. TRAI proposes aligning PDO rates with retail broadband rates to make the scheme more viable for small businesses. TRAI will review these rates in two years based on the scheme’s performance.

8. Recently, the Prime Minister of India presented four BHISHM (Bharat Health Initiative for Sahyog Hita & Maitri) Cubes to which country?

A. Ukraine

B. Poland

C. Malaysia

D. Israel

  • During his visit to Kyiv, India’s Prime Minister gifted four BHISHM cubes to Ukraine’s President. BHISHM cubes are compact, mobile medical units for emergency care. Each cube is a 15-inch box packed with organized medical supplies for different injury types. They can be transported by air, sea, land, or drone and weigh up to 20 kg for easy handling.

9. Jaldapara National Park is located in which state?

A. Odisha

B. Assam

C. West Bengal

D. Bihar

  • Jaldapara National Park is in the news after five rhino cubs died recently. A similar incident occurred in February 2020, with six rhinos dying before the coronavirus outbreak. Foresters confirmed the deaths were not due to anthrax.
  • The rhino carcasses were examined in Kolkata, revealing no anthrax. The suspected cause is tapeworm infestation or another toxin. Tapeworms are dangerous to wildlife and can cause severe illness. Jaldapara National Park is situated at the foothills of the Eastern Himalayas in northern West Bengal.

10. Which country secured silver medal at the Maruhaba Cup, a team event, at the Asian Surfing Championships 2024?

A. Japan

B. India

C. China

D. France

  • India won a silver medal at the Maruhaba Cup in the Asian Surfing Championships 2024 in the Maldives. The Indian team included Kamali P, Ajeesh Ali, Srikanth D, and Sanjay Selvamani. Japan won gold with 58.40 points; India secured silver with 24.13 points. Taipei won bronze with 23.93 points, and China came fourth with 22.10 points. India won the Heat 2 semi-final, scoring 32.16 points. Indian surfer Harish Muthu reached the quarter-finals, making history for India.

11. What is the primary objective of the ‘BioE3 Policy’, recently approved by Union Cabinet?

A. Promotion of traditional farming practices

B. Promoting high-efficiency bio technology production

C. Increasing coal production

D. Promotion of organic agriculture

  • The Union Cabinet approved the BioE3 (Biotechnology for Economy, Environment and Employment) Policy to boost biotechnology for the economy, environment, and employment. It is managed by the Department of Biotechnology; it focuses on high-performance biomanufacturing. It aims to produce a wide range of bio-based products, from medicines to materials. It addresses challenges in farming and food through advanced biotechnological processes.
  • It encourages innovation by supporting research, development, and entrepreneurship. Plans to establish biomanufacturing and bio-AI hubs and biofoundries for faster tech development and commercialization. It promotes sustainable growth through regenerative bioeconomy models. It aims to expand India’s skilled workforce and create more job opportunities.

12. Which department is responsible for managing the ‘Vigyan Dhara scheme’?

A. Department of Biotechnology

B. Department of Industrial Policy and Promotion

C. Department of Space

D. Department of Science and Technology

  • The Union Cabinet approved the ‘Vigyan Dhara’ scheme, unifying three Department of Science and Technology schemes. Vigyan Dhara is a central sector scheme aimed at boosting science and technology in India. It combines three key areas: S&T Institutional and Human Capacity Building, Research and Development, and Innovation and Technology Development.
  • Managed by the Department of Science and Technology, it streamlines S&T initiatives to enhance India’s capabilities. The scheme has a budget of Rs.10,579.84 crore for the period 2021-22 to 2025-26. It aims to improve fund utilization and align sub-schemes. The goal is to strengthen India’s S&T and innovation ecosystem.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!
Home New App Course

Course Details

Question Bank Books

📢 More new updates are coming! Stay tuned for TNPSC Exam 2025.