TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 28th August 2024

1. கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின்கீழ், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் செயல்படுகிறது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • மத்திய உள்துறை அமைச்சர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (NCB) மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார். NCB என்பது இந்தியாவின் முக்கிய போதைப்பொருள் சட்ட அமலாக்க மற்றும் உள்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள உளவுத்துறை நிறுவனமாகும். 1985 நவ.14இல் நிறுவப்பட்ட இது, போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம், 1985இன்கீழ் செயல்படுகிறது. இதன் தலைமையகம் தில்லியில் உள்ளது. NCB ஆனது போதைப்பொருள் அமலாக்கம் மற்றும் சர்வதேச போதைப்பொருள் போக்குவரவு தொடர்பான பல்வேறு சட்டங்கள் முழுவதும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.
  • போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இது சர்வதேச மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு உதவுகிறது.

2. அண்மையில், மத்திய உள்துறை அமைச்சரால் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு எத்தனை புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டன?

அ. ஐந்து

ஆ. ஆறு

இ. பத்து

ஈ. பதினாறு

  • லடாக்கில் ஜன்ஸ்கர், டிராஸ், ஷாம், நூபுரா மற்றும் சாங்தாங் ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இந்த முடிவு லடாக் நிர்வாகத்தை மேம்படுத்தவும், மக்களுக்கு நன்மைகளைக் கொண்டுவரவும் நோக்கம் கொண்டுள்ளது. லடாக்கில் இதற்கு முன்பு லே மற்றும் கார்கில் ஆகிய இரு மாவட்டங்களே இருந்தன. புதிய மாவட்டங்கள் மக்கள் நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்த உதவும். புதிய மாவட்டங்களைத் திட்டமிட, தலைமையகம் மற்றும் எல்லைகள்போன்ற விவரங்கள் அடங்கிய குழுவை அமைத்து 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு லடாக் நிர்வாகத்திடம் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

3. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) சமீபத்தில் செயல்படுத்திய மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. குஜராத்

இ. கேரளா

ஈ. பீகார்

  • சட்டமன்றத்தேர்தலுக்கு முன்னதாக, தனது ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) ஏற்றுக்கொண்ட முதல் மாநிலமாக மகாராஷ்டிரா ஆனது. UPS ஆனது 2024 ஆகஸ்ட்.24 அன்று மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 21 ஆண்டுகால தேசிய ஓய்வூதிய முறைக்கு (NPS) மாற்றாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) போன்றதொன்றாகும். இந்த மாற்றம் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தங்களை திறம்பட மாற்றம் செய்கிறது.

4. வுலர் ஏரி அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. ஒடிசா

இ. கேரளா

ஈ. ஜம்மு காஷ்மீர்

  • வுலர் ஏரி படிப்படியாக சுற்றியுள்ள மலைகளிலிருந்து வரும் நீரோடைகளின் வண்டல் மண்ணால் நிரப்பப்படுகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி மற்றும் ஆசியாவின் இரண்டாவது பெரிய ஏரியாகும்; இது ஜம்மு மற்றும் காஷ்மீரின் பந்திபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஜீலம் நதியின் ஊடாக, ஹராமுக் மலைக்கு அருகில் 1,580 மீட்டர் உயரத்தில் 200 ச.கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. டெக்டோனிக் செயல்பாடு மற்றும் பண்டைய சதிசர் ஏரியின் எச்சம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இது, ஜைனுல்-அபி-தின் மன்னரால் கட்டப்பட்ட ‘ஜைனா லாங்க்’ என்று அழைக்கப்படும் ஒரு தீவைக் கொண்டுள்ளது. 1990இல் ராம்சர் ஈரநிலமாக அறிவிக்கப்பட்ட இது, பல்வேறு பறவை இனங்களுக்கு வாழ்விடமாக உள்ளது.

5. எந்த நாட்டுடனான, ‘Security of Supplies Arrangement (SOSA)’ ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?

அ. அமெரிக்கா

ஆ. ஐக்கிய இராச்சியம்

இ. சீனா

ஈ. ஜப்பான்

  • இந்தியாவும் அமெரிக்காவும் இரண்டு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன: அவை பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக தொடர்பு அதிகாரிகள் மீதான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் Security of Supplies Arrangement (SOSA) ஆகும். இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான முன்னுரிமை ஆதரவை உறுதிசெய்வதன்மூலம் தொழில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை SOSA நோக்கமாகக் கொண்டுள்ளது. SOSAஇன்கீழ், இருநாடுகளும் பரஸ்பர நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பு ஒப்பந்தங்களை விரைவாக வழங்கக்கோரலாம்; இது விநியோகச் சங்கிலி சிக்கல்களை நிர்வகிக்க உதவுகிறது. அமெரிக்காவுடன் SOSA ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் 18ஆவது நாடாக இந்தியா உள்ளது.

6. ‘17 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – 2024’ நடைபெற்ற இடம் எது?

அ. டோக்கியோ, ஜப்பான்

ஆ. அம்மான், ஜோர்டான்

இ. பெய்ஜிங், சீனா

ஈ. புது தில்லி, இந்தியா

  • U-17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்-2024இல் இந்தியாவின் மல்யுத்த வீராங்கனைகள் ஜப்பானின் ஆதிக்கத்தை உடைத்து பட்டத்தை வென்றனர். இந்தியா வென்ற 10 பதக்கங்களில் 5 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களைப் பெற்றனர். 2024 ஆக.19-25 வரை ஜோர்டானில் உள்ள அம்மானில் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இந்திய மகளிர் அணி 185 புள்ளிகளைப் பெற்றது, ஜப்பான் 146 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கடந்த ஐந்து பதிப்புகளில் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்த இந்திய மகளிர் அணி பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்திய ஆடவர் அணி இரண்டு பதக்கங்களை மட்டுமே வென்றது.

7. புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. 6-14 வயதுடைய குழந்தைகளிடையே விளையாட்டுகளை ஊக்குவிப்பது

ஆ. 9 – 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உணவு வழங்குதல்

இ. கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குதல்

ஈ. 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய எழுத்தறிவு இல்லாதவர்களிடையே கல்வியறிவை மேம்படுத்துவதில்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆதரவளிப்பது

  • கல்வியமைச்சகம் புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்தின் (NILP) கீழ் ‘எழுத்தறிவு’ மற்றும் ‘முழு எழுத்தறிவு’ என வரையறுத்துள்ளது. NILP இந்தியா முழுவதும் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே கல்வியறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு மத்திய நிதியுதவி திட்டமாகும்; இதன் திட்டமதிப்பீடு 2022-2027க்கு `1037.90 கோடியாகும். ஆண்டுக்கு ஒரு கோடி மாணவர்களை இதன்கீழ் கொண்டுவருவது இதன் இலக்காகும். NILP ஆனது அடிப்படை கல்வியறிவு, முக்கிய வாழ்க்கைத்திறன்கள், அடிப்படைக்கல்வி, தொழில் திறன்கள் மற்றும் தொடர்ச்சியான கல்வி ஆகிய ஐந்து கூறுகளைக் கொண்டுள்ளது. பயனாளிகள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புமூலம் கண்டறியப்படுகின்றனர். இத்திட்டம் கற்பிப்பதற்காக தன்னார்வலர்களை நம்பியுள்ளது மற்றும் DIKSHA தளத்தைப் பயன்படுத்துகிறது.

8. அண்மையில், ‘2ஆவது இந்திய-சிங்கப்பூர் அமைச்சர்கள் அளவிலான வட்டமேசை (ISMR)’ மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. புது தில்லி

ஆ. சிங்கப்பூர்

இ. சென்னை

ஈ. இந்தூர்

  • உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை வலுப்படுத்துவதற்காக 2ஆவது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் அளவிலான வட்டமேசை (ISMR) மாநாடு சிங்கப்பூரில் 2024 ஆக.26 அன்று நடைபெற்றது. முதல் ISMR 2022 செப்டம்பரில் புது தில்லியில் நடைபெற்றது. ISMR என்பது இருதரப்பு உறவுகளைப்பற்றி விவாதிக்கவும் எதிர்கால நிகழ்ச்சி நிரல்களை அமைக்கவும் ஒரு உயர்மட்ட தளமாகும். நிர்மலா சீதாராமன், S ஜெய்சங்கர் உட்பட 4 இந்திய அமைச்சர்கள் மற்றும் ஆறு சிங்கப்பூர் அமைச்சர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இரண்டாவது ISMR, முதல் கூட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தது மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது. கலந்துரையாடல்களில் டிஜிட்டல்மயமாக்கல், திறன் மேம்பாடு, நிலைத்தன்மை, சுகாதாரம், மேம்பட்ட உற்பத்தி மற்றும் இணைப்பு ஆகியவை அடங்கும்.

9. அண்மையில், ‘24ஆவது சர்வதேச அன்னை தெரசா விருதுகள் விழா’ நடைபெற்ற இடம் எது?

அ. பாரிஸ்

ஆ. துபாய்

இ. புது தில்லி

ஈ. லண்டன்

  • 24ஆவது சர்வதேச அன்னை தெரசா விருதுகள் வழங்கும் விழா துபாயில் நடைபெற்றது. அன்னை தெரசாவின் 114ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. அனைத்திந்திய சிறுபான்மை மற்றும் நலிவடைந்த பிரிவினர் குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இது, இந்தியாவிற்கு வெளியே இரண்டாவது முறையாக துபாயில் நடத்தப்பட்டது. 1997ஆம் ஆண்டு அன்னை தெரசாவின் மறைவுக்குப் பிறகு இந்த விருதுகள் நிறுவப்பட்டன. இந்தியாவில் கல்வி, அறிவியல், கலாச்சாரம், விளையாட்டு, சமூகப்பணி, மருத்துவம், தொழில் மற்றும் அரசியல் ஆகியவற்றில் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களை இவ்விருதுகள் கௌரவிக்கின்றன.

10. ‘தேசிய பருவமழைக்கால இயக்கத்தின்’ முதன்மை நோக்கம் என்ன?

அ. பருவமழைக்காலத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவது

ஆ. அனைத்து கால அளவிலும் இந்தியா முழுவதும் பருவமழை முன்னறிவிப்பு திறன்களை மேம்படுத்துவது

இ. வனவிலங்குகளில் பருவமழையின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வது

ஈ. விவசாயிகளுக்கு நீர்ப்பாசன முறைகளை உருவாக்குவது

  • குறைந்தபட்சம் `10,000 கோடி பட்ஜெட்டில் புதிய வானிலை முன்னறிவிப்பு திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. தற்போதுள்ள தேசிய மழைக்கால இயக்கத்தை (NMM)விட இத்திட்டம் மிகவும் பெரியதாக இருக்கும். NMM வானிலை மற்றும் தட்பவெப்பநிலை கணிப்புக்கான மேம்பட்ட மாதிரிகளை உருவாக்கியுள்ளது; அவை இப்போது முழுமையாக செயல்படுகின்றன. இந்த மாதிரிகள் குறுகிய கால (1-10 நாட்கள்), நடுத்தர கால (10-30 நாட்கள்) மற்றும் பருவகால (ஒரு பருவம் வரை) காலங்களுக்கான முன்னறிவிப்புகளை வழங்குகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த மாதிரிகள் வானிலை நிகழ்வுகளை முன்னறிவிப்பதில் அதிக துல்லியத்தைக் காட்டியுள்ளன.

11. அண்மையில், செயல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த பிரதமர் ஜன் தன் யோஜனாவுடன் (PMJDY), தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. நிதி அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. வேளாண் அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • பிரதமர் ஜன்தன் யோஜனா (PMJDY) 2014 ஆகஸ்ட்.28 அன்று பிரதமர் நரேந்திர மோதியால் அறிவிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்தியாவின் நிதியமைப்பில் வங்கிப்பயன்பாடில்லாத மக்களை உள்ளடக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். PMJDY இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெரியவர்களுக்கும் நிதிச்சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது; அடிப்படை சேமிப்பு வங்கிக்கணக்குகள், பணமனுப்பல், கடன், காப்பீடு மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்குகிறது. நிதியமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிற இது, மக்களுக்கு மலிவு நிதி சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. 2024 ஜூலைக்குள் 52.74 கோடி ஜன்தன் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. கணக்கு வைத்திருப்பவர்களில் 55%க்கும் அதிகமானோர் பெண்கள்.

12. 2024 – உலக நீர் வாரத்துக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Bridging Borders: Water for a Peaceful and Sustainable Future

ஆ. Valuing Water

இ. Groundwater – making the invisible visible

ஈ. Accelerating Change

  • ஸ்டாக்ஹோம் சர்வதேச நீர் நிறுவனம் (SIWI) ஆண்டுதோறும் உலக நீர் வாரத்தை நடத்துகிறது; கடந்த 1991 முதல் அவ்வாறு செய்து வருகிறது. நடப்பு 2024 நிகழ்வு ஆகஸ்ட்.25-29 வரை ஸ்டாக்ஹோம் வாட்டர்ஃபிரண்ட் காங்கிரஸ் மையத்தில் இணைய முறையிலும் நேரிலும் நடைபெறும். நடப்பு 2024ஆம் ஆண்டிற்கான கருப்பொருள், “Bridging Borders: Water for a Peaceful and Sustainable Future”. உலக நீர் வாரம் என்பது உலகளாவிய நீர் பிரச்சினைகளை மையமாகக்கொண்ட ஒரு முன்னணி மாநாடாகும். இந்த மாநாடு முடிவெடுப்பவர்கள், வணிகத்தலைவர்கள், நகரத் திட்டமிடுபவர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்கள் கோபிநாத், முரளிதரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.5 அன்று தில்லியில் நடைபெறும் ஆசிரியர் நாள் விழாவில் நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி வழங்குகிறார். வேலூரைச்சேர்ந்த கோபிநாத், மதுரையைச் சேர்ந்த முரளிதரன் தேசிய நல்லாசிரியர் விருது பெறுகின்றனர்.

2. மருந்தகம், நியாயவிலைக்கடைகளை அறிய பிரத்யேக செயலி தொடக்கம்.

கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் சேவைகளை மக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்துகொள்ளும் வகையில், ‘கூட்டுறவு’ என்ற செயலியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

1. Narcotics Control Bureau operates under which ministry?

A. Ministry of Science and Technology

B. Ministry of Health and Family Welfare

C. Ministry of Home Affairs

D. Ministry of Defence

  • The union home minister inaugurated the Narcotics Control Bureau (NCB) zonal office in Raipur, Chhattisgarh. The NCB is India’s main drug law enforcement and intelligence agency under the Ministry of Home Affairs. Established on November 14, 1985, it operates under the Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985. Its headquarters are in Delhi. The NCB coordinates actions across various laws related to drug enforcement and international drug traffic. It assists international and foreign authorities in fighting drug trafficking and drug abuse.

2. Recently, how many new districts have been announced for the Union Territory of Ladakh by the union home minister?

A. Five

B. Six

C. Ten

D. Sixteen

  • Union Home Minister Amit Shah announced the creation of five new districts in Ladakh. The new districts are Zanskar, Drass, Sham, Nubra, and Changthang. This decision aims to improve governance and bring benefits closer to the people. Ladakh, previously with two districts (Leh and Kargil), is large and sparsely populated. The new districts will help implement public welfare schemes more effectively. The Ministry of Home Affairs has asked the Ladakh administration to form a committee to plan the new districts, including details like headquarters and boundaries, and submit a report within three months.

3. Which state has recently become the first to implement the Unified Pension Scheme (UPS)?

A. Maharashtra

B. Gujarat

C. Kerala

D. Bihar

  • Maharashtra became the first state to adopt the Unified Pension Scheme (UPS) for its employees ahead of assembly elections. The UPS was introduced by the Central Government on August 24, 2024. It replaces the 21-year-old National Pension System (NPS) and is similar to the Old Pension Scheme (OPS). This change effectively reverses pension reforms implemented by the Atal Bihari Vajpayee government.

4. Wular Lake is located in which state/UT?

A. Assam

B. Odisha

C. Kerala

D. Jammu and Kashmir

  • Wular Lake is gradually being filled with silt from streams flowing in from surrounding mountains. It is the largest freshwater lake in India and the second-largest in Asia, located in Jammu and Kashmir’s Bandipore district. Fed by the Jhelum River, it sits at an altitude of 1,580 meters near Haramuk Mountain, covering 200 square kilometers. Formed by tectonic activity and a remnant of the ancient Satisar Lake, it features a central island called ‘Zaina Lank,’ built by King Zainul-Abi-Din. Designated a Ramsar Wetland in 1990, it supports diverse bird species.

5. Recently, India signed the ‘Security of Supplies Arrangement (SOSA)’ agreement with which country?

A. United States of America

B. United Kingdom

C. China

D. Japan

  • India and the US have signed two key defence agreements: the Security of Supplies Arrangement (SOSA) and a Memorandum of Understanding (MoU) on Liaison Officers to boost defence cooperation. SOSA aims to enhance industry collaboration by ensuring priority support for defence goods and services between the two nations. Under SOSA, both countries can request faster delivery for defence contracts from each other’s companies, helping manage supply-chain issues. India is now the 18th country to sign SOSA with the US.

6. Where was the ‘Under-17 World Wrestling Championship 2024’ held?

A. Tokyo, Japan

B. Amman, Jordan

C. Beijing, China

D. New Delhi, India

  • Indian women’s wrestlers won the team title at the U17 World Wrestling Championships 2024, breaking Japan’s dominance. They secured 8 out of the 10 medals won by India, including 5 gold, 1 silver, and 2 bronze. The championship was held in Amman, Jordan, from August 19 to 25, 2024. Indian women’s team secured 185 points, while Japan came second with 146 points. This is the first time the Indian women’s team won the title, having consistently been in the top five in the past five editions. The Indian men’s contingent won only two medals.

7. What is the primary objective of the ‘New India Literacy Programme (NILP)?

A. To promote sports among children aged 6-14

B. To provide food to 9th to 12th students

C. To provide free laptops to college students

D. To support the States and UT’s in promoting literacy among non-literates aged 15 and above

  • The Ministry of Education defined ‘literacy’ and ‘full literacy’ under the New India Literacy Programme (NILP). NILP aims to promote literacy among people aged 15 and above across India. It is a centrally sponsored scheme with a budget of Rs. 1037.90 crore for 2022-2027. The goal is to onboard one crore learners annually.
  • NILP has five components: foundational literacy, critical life skills, basic education, vocational skills, and continuing education. Beneficiaries are identified through door-to-door surveys and mobile app registration. The scheme relies on volunteers for teaching and uses online resources on the DIKSHA platform.

8. Recently, where was the ‘2nd India Singapore Ministerial Roundtable (ISMR)’ conference held?

A. New Delhi

B. Singapore

C. Chennai

D. Indore

  • The 2nd India-Singapore Ministerial Roundtable (ISMR) took place in Singapore on August 26, 2024, to strengthen strategic ties. The first ISMR was held in New Delhi in September 2022. ISMR is a high-level platform to discuss bilateral relationships and set future agendas.
  • Four Indian ministers, including Nirmala Sitharaman and S Jaishankar, and six Singaporean ministers attended the meeting. The 2nd ISMR reviewed progress since the first meeting and focused on enhancing cooperation in various sectors. Discussions included digitalisation, skill development, sustainability, healthcare, advanced manufacturing, and connectivity.

9. Recently, where was the ’24th International Mother Teresa Awards Ceremony’ held?

A. Paris

B. Dubai

C. New Delhi

D. London

  • The 24th International Mother Teresa Awards Ceremony was held at the Millennium Plaza Dubai. The event commemorated the 114th birth anniversary of Mother Teresa.
  • Organized by the All-India Minority and Weaker Sections Council, it was held outside India for only the second time, both times in Dubai. The awards were established after Mother Teresa’s death in 1997. They honor outstanding contributions in education, science, culture, sports, social work, medicine, industry, and politics in India.

10. What is the primary objective of the ‘National Monsoon Mission’?

A. To promote tourism during the monsoon season

B. To enhance monsoon prediction capabilities across India for all time scales

C. To study the impact of monsoons on wildlife

D. To develop irrigation systems for farmers

  • A new weather forecasting mission with a budget of at least Rs 10,000 crore is set to be launched soon. This mission will be much larger than the existing National Monsoon Mission (NMM).
  • The NMM has developed advanced models for weather and climate prediction that are now fully operational. These models provide forecasts for short-range (1-10 days), medium-range (10-30 days), and seasonal (up to one season) periods. Over the past three years, these models have shown high accuracy in predicting weather events.

11. Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY), recently completed 10 years of implementation, comes under which ministry?

A. Ministry of Finance

B. Ministry of Home Affairs

C. Ministry of Agriculture

D. Ministry of Defence

  • The Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) has marked ten years since its launch on August 28, 2014, announced by Prime Minister Narendra Modi. The scheme aims to include the unbanked population in India’s financial system.
  • PMJDY has expanded financial services to nearly every adult in India, offering Basic Savings Bank Accounts, remittance, credit, insurance, and pensions. It is managed by the Ministry of Finance and focuses on providing affordable financial services to the masses. By July 2024, 52.74 crore Jan Dhan accounts had been opened. Over 55% of the account holders are women.

12. What is the theme of ‘World Water Week 2024’?

A. Bridging Borders: Water for a Peaceful and Sustainable Future

B. Valuing Water

C. Groundwater – making the invisible visible

D. Accelerating Change

  • The Stockholm International Water Institute (SIWI) organizes World Water Week annually, and has been doing so since 1991. The 2024 event will take place from August 25–29, both online and in-person at the Stockholm Waterfront Congress Centre. The theme for 2024 is “Bridging Borders: Water for a Peaceful and Sustainable Future”. World Water Week is a leading conference that focuses on global water issues, and brings together a diverse group of people from around the world, including decision-makers, business leaders, city planners, activists, and researchers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!
Home New App Course

Course Details

Question Bank Books

📢 More new updates are coming! Stay tuned for TNPSC Exam 2025.