TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 30th August 2024

1. உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்தொழில்நுட்பங்களிலிருந்து 2024ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகளுக்கு எத்தனை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?

அ. 14

ஆ. 15

இ. 16

ஈ. 18

  • 2024ஆம் ஆண்டுகான ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகளுக்கு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்தொழில் நுட்பங்களிலிருந்து 16 ஆசிரியர்களை உயர்கல்வித்துறை தேர்ந்தெடுத்துள்ளது. தேசிய ஆசிரியர் விருதுகள் இந்திய நாட்டின் சிறந்த ஆசிரியர்களின் சிறந்த பங்களிப்பைக் கொண்டாடுகிறது. கல்வியின் தரத்தைக் கணிசமாக மேம்படுத்திய மற்றும் அவர்களின் மாணவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர்களை இவ்விருதுகள் அங்கீகரிக்கிறது.

2. அண்மையில், தன்னார்வ வாகன நவீனமயமாக்கல் திட்டம் (அ) வாகன அழித்தல் கொள்கையை அறிவித்துள்ள அமைச்சகம் எது?

அ. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

ஆ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் தட்பவெப்பநிலை மாற்ற அமைச்சகம்

இ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

  • சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், வாகன அழித்தல் கொள்கை என்றும் அழைக்கப்படும் தன்னார்வ வாகன நவீனமயமாக்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வணிக மற்றும் பயணிகள் வாகனங்களின் வயதைப்பொருட்படுத்தாமல், அவற்றின் நிலையின் அடிப்படையில் தகுதியற்றதாகக் கருதப்படும் வாகனங்களை தானாக முன்வந்து அழிப்பதில் இந்தக் கொள்கை கவனம் செலுத்துகிறது. பதிவுசெய்யப்பட்ட வாகன அழித்தல் வசதிகள் மற்றும் தானியங்கி சோதனை நிலையங்கள்மூலம் மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக ஒழிப்பதை இது நோக்கமாகக்கொண்டுள்ளது.

3. நமீபிய சிறுத்தையின் இறப்பு காரணமாக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற குனோ தேசியப்பூங்கா உள்ள மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. குஜராத்

இ. கேரளா

ஈ. பீகார்

  • மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள குனோ தேசியப்பூங்காவில், ‘பவன்’ என்னும் பெயருடைய நமீபிய சிறுத்தை இறந்து கிடந்தது. குனோவில் உயிர்பிழைத்த ஒரே ஒரு சிறு சிறுத்தை பவன் மட்டுமே. பவன் சேர்க்காமல் தற்போது குனோ தேசியப்பூங்காவில் மொத்தம் 24 சிறுத்தைகள் உள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘சிறுத்தை திட்டம்’, இந்தியாவில் அழிந்துபோன சிறுத்தை இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறுத்தைகள் தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்டன. இந்தத் திட்டம் இரையாகும் இனங்களைப் பாதுகாப்பதிலும், புல்வெளிகள் மற்றும் திறந்தவெளிக்காடுகளில் உள்ள மற்ற அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

4. அண்மையில், பெண்ணுருவங்கொண்ட மனித ரோபோவான வயோமித்ராவின் மண்டை ஓட்டை வடிவமைத்த விண்வெளி அமைப்பு எது?

அ. NASA

ஆ. CNSA

இ. ISRO

ஈ. ESA

  • 2025ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள ‘ககன்யான்’ திட்டத்தின் ஒருபகுதியாக இருக்கும் வயோமித்ரா என்ற பெண்ணுருவங்கொண்ட மனித ரோபோவுக்கான மண்டையோட்டை ISRO வடிவமைத்துள்ளது. ‘ககன்யான்’ திட்டமானது வயோமித்ராவை விண்வெளிக்கு அனுப்பி, பாதுகாப்பாக மீண்டும் பூமிக்குக் கொண்டுவரும். மனித உருவங்கொண்ட ரோபோக்கள் என்பது மனிதர்களை ஒத்த ரோபோ அமைப்புகளாம்; அவை சோலார் தகடுகளை சுத்தஞ்செய்தல் (அ) உபகரணங்களை சரிசெய்வது போன்ற பணிகளைச்செய்ய விண்வெளியில் பயன்படுத்தப்படுகி -ன்றன. வயோமித்ராவின் மண்டை ஓடு ஒரு நெகிழ்வான, இலகுரக அலுமினிய கலவையால் ஆனது; 800 கிராம் எடையும் 200 மிமீ x 220 மிமீ அளவும் கொண்டது.

5. வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. வேளாண் இயந்திரங்களுக்கு மானியம் வழங்குதல்

. அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்

இ. இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது

ஈ. வேளாண் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை ஆதரிப்பது

  • மத்திய அமைச்சரவை அண்மையில் வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தை விரிவுபடுத்தியது. கடந்த 2020இல் இந்நிதியம் தொடங்கப்பட்டது. வேளாண் உள்கட்டமைப்பு நிதியமானது அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது; இது வேளாண் விநியோகச் சங்கிலிக்கு முக்கியமானது. உழவில் உற்பத்தித்திறன், நிலைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் வசதிகளை மேம்படுத்துவதில் இந்நிதியம் கவனம் செலுத்துகிறது.

6. அண்மையில், ‘SAFF (தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு) U20 சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியை’ வென்ற நாடு எது?

அ. நேபாளம்

ஆ. இந்தியா

இ. வங்காளதேசம்

ஈ. பூட்டான்

  • லலித்பூரில் உள்ள ANFA மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நேபாளத்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வங்காளதேசம் SAFF U20 சாம்பியன்ஷிப்பை வென்றது. இந்தப்போட்டியில் வங்காளதேசம் வெல்வது இது முதல்முறையாகும். 2024 ஆக.18 அன்று தொடங்கிய போட்டியில், இலங்கை, இந்தியா, மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளும் பங்கேற்றன. இந்தியா இதற்குமுன்பு 2019, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் SAFF U-20 சாம்பியன்ஷிப்பை வென்றது. தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்படும் SAFF U20 சாம்பியன்ஷிப், முதல்முறையாக 2015 ஆகஸ்டில் நேபாளத்தில் தொடங்கப்பட்டது. 20 வயதுக்குட்பட்ட வீரர்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

7. வடகிழக்குப் பிராந்தியத்தில் புனல்மின் திட்டங்களின் வளர்ச்சிக்கு மத்திய அமைச்சரவை எவ்வளவு நிதியுதவி அளித்துள்ளது?

அ. ரூ.2,500 கோடி

ஆ. ரூ.3,000 கோடி

இ. ரூ.4,136 கோடி

ஈ. ரூ.5,000 கோடி

  • வடகிழக்குப் பிராந்தியத்தில் புனல்மின் திட்டங்களை மேம்படுத்துவதற்காக வடகிழக்கு மாநிலங்களுக்கு சமமான பங்களிப்பை ஏற்படுத்த நடுவணரசு நிதியுதவியை மாநில நிறுவனங்கள் & மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சி ஒத்துழைப்புமூலம் வழங்குவதற்கான, மின்சார அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 2024-25ஆம் நிதியாண்டு முதல் 2031-32ஆம் நிதியாண்டு வரை `4136 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
  • இந்தத் திட்டத்தின்கீழ் சுமார் 15,000 MW ஒட்டுமொத்த நீர்மின் திறன் ஆதரிக்கப்படும். மின்துறை அமைச்சகத்தின் மொத்த ஒதுக்கீட்டிலிருந்து வடகிழக்குப் பிராந்தியத்திற்கான 10% மொத்த பட்ஜெட் ஆதரவுமூலம் இந்தத் திட்டத்திற்கு நிதி வழங்கப்படும். மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் மாநில அரசுடன் இணைந்து செயல்படும் அனைத்து திட்டங்களுக்கும் கூட்டு நிறுவனத்தை உருவாக்க மத்திய மின்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள இந்தத் திட்டம் வகை செய்கிறது.

8. அண்மையில், “ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரமளித்தல் பயிற்சி” (RESET) என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரமளித்தலுக்கான பயிற்சித் திட்டத்தை மத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது. REtired Sportsperson Empowerment Training (RESET) திட்டம் ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அறிவு மற்றும் திறன்களுடன் அதிகாரமளிப்பதன்மூலமும், அவர்களை அதிக வேலைவாய்ப்புள்ளவர்களாக மாற்றுவதன்மூலமும், அவர்களின் தொழில்மேம்பாட்டு பயணத்தில் ஆதரவளிக்கும்.
  • இந்தத் திட்டம் தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து, நமது ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களின் தனித்துவமான திறன்களை, ஆர்வமுள்ள புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு பயனளிக்க அனுமதிக்கும். அவர்களின் வளமான அனுபவம், எதிர்கால சாம்பியன்களை உருவாக்குவதற்கும், இந்தியாவில் விளையாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும், தேச நிர்மாணத்தை வளர்ப்பதற்கும் ஒரு அடித்தளமாகச் செயல்படும். இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையோர் விண்ணப்பங்கள் பிரத்யேக இணையதளம்மூலம் பெறப்படும். ஆரம்பத்தில், திட்டங்கள் கல்வித்தகுதியின் அடிப்படையில் இரண்டு நிலைகளாக இருக்கும், அதாவது 12ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் மற்றும் 11ஆம் வகுப்பு மற்றும் அதற்குக்கீழ் என இருக்கும்.

9. “ஐயத்திற்குரிய வாக்காளர்” அல்லது “D-வாக்காளர்” என்ற சொல் கீழ்க்காணும் எந்த வடகிழக்கு மாநிலத்தில் முதன்மையாக பயன்படுத்தப்பட்டது?

அ. அஸ்ஸாம்

ஆ. நாகாலாந்து

இ. மணிப்பூர்

ஈ. மிசோரம்

  • அஸ்ஸாம் மாநிலமானது சுமார் 1.2 இலட்சம் பேரை ‘D’ (ஐயத்திற்குரிய) வாக்காளர்களாக அடையாளம் கண்டுள்ளது. அதில் 41,583 பேர் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்வு மற்றும் குடியுரிமை ஆகியவை முக்கிய அரசியல் பிரச்சினைகளாக உள்ள அஸ்ஸாம் மாநிலத்தில்தான் ‘D-Voter’ என்ற கருத்துரு எழுச்சியானது. இது 1997ஆம் ஆண்டு அஸ்ஸாமில் அறிமுகப்படுத்தப்பட்டது. D-வாக்காளர் என்பவர் தனது இந்தியக்குடியுரிமையை நிரூபிக்க முடியாதவராவர். தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பின்போது கேள்விக்குரிய அல்லது சர்ச்சைக்குரிய குடியுரிமை உள்ளவர்கள் D-வாக்காளர்களாகக் குறிக்கப்பட்டனர். 1955ஆம் ஆண்டின் குடியுரிமைச்சட்டம் அல்லது 2003ஆம் ஆண்டின் குடியுரிமை விதிகளில், ‘ஐயத்திற்குரிய வாக்காளர்’ என்ற சொல் வரையறுக்கப்படவில்லை.

10. இந்தியக் கடலோரக் காவல்படையால் (ICG) அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் முதல் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலின் பெயர் என்ன?

அ. சாகர் யந்திரா

ஆ. சமுத்திர பிரதாப்

இ. விக்சித் பாரத்

ஈ. சமுத்திர ரக்ஷா

  • இந்தியக் கடலோரக் காவல்படையானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலான, ‘சமுத்திர பிரதாப்’பை கோவாவில் அறிமுகப்படுத்தியது. கோவா கப்பல்கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்ட இக்கப்பல், இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கிய நகர்வில் ஒரு சாதனையைக் குறிக்கிறது. இந்திய கடற்கரையோரங்களில் எண்ணெய்க்கசிவு மற்றும் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவாதற்காக ‘சமுத்திர பிரதாப்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. 114.5 மீட்டர் நீளமும், 16.5 மீட்டர் அகலமும், 4,170 டன் எடையும் கொண்டது இந்தக் கப்பல்.

11. ‘Mixed Matrix Membrane’ என்ற புதிய கலப்பு சவ்வை உருவாக்கியுள்ள அமைச்சகம் எது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

இ. புவி அறிவியல் அமைச்சகம்

ஈ. வேளாண்மை அமைச்சகம்

  • Mixed Matrix Membrane (MMM)’ என்றும் அழைக்கப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட புதிதாக உருவாக்கப்பட்ட கலப்பு சவ்வுகள் வெவ்வேறு அமின்களின் நீராவிகளுக்கு வெளிப்படும் போது குறிப்பிடத்தக்க வண்ண மாற்றத்தைக் காட்டின, இது ஆய்வகங்கள் அல்லது தொழில்துறை அமைப்புகளில் அம்மோனியா அல்லது பிற அமின் கசிவைக் கண்டறிய உதவுகிறது.
  • அம்மோனியா அல்லது பிற அலிபாட்டிக் அமின்கள் பல இரசாயன, உர மற்றும் உணவுத்தொழில்களில் மூலப்பொருள் அல்லது இடைநிலை தயாரிப்புகளாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த மற்றும் அரிக்குந்தன்மை கொண்டவை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான மொகாலியில் உள்ள நானோ அறிவியல் & தொழில்நுட்பக்கழகத்தின் ஆராய்ச்சிக்குழுவால் MMM உருவாக்கப்பட்டது.

12. அண்மையில், ஃபைசோஎலக்ட்ரிக் பாலிமர் நானோ கலப்பு பொருள்களின் அடிப்படையில் பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பை உருவாக்கும் பொருட்டு கூட்டிணைந்துள்ள நிறுவனங்கள் எவை?

அ. நானோ அறிவியல் மையம் மற்றும் தேசிய வேதியியல் ஆய்வகம் (CSIR-NCL)

ஆ. NIT, கௌகாத்தி மற்றும் IIT, கான்பூர்

இ. IISc, பெங்களூரு மற்றும் IIT, தில்லி

ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தன்னாட்சி நிறுவனமான நானோ அறிவியல் மையத்தின் (CeNS) ஆராய்ச்சியாளர்கள், புனேவின் தேசிய வேதியியல் ஆய்வகத்தின் (CSIR-NCL) அறிவியலாளர்களுடன் இணைந்து பைசோஎலக்ட்ரிக் பாலிமர் நானோ கலவை அடிப்படையில் பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த வளர்ச்சி பொருத்தமான படிக அமைப்பு மற்றும் மேற்பரப்பு பண்புகளைக்கொண்ட உலோக ஆக்சைடு நானோ பொருட்கள் ஒரு பாலிமர் கலவையில் கலப்படங்களாகப் பயன்படுத்தப்படும்போது, அழுத்தமின் எதிர்-செயலில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டிற்கு வழிவகுக்கிறது என்பதைக் கண்டறிந்ததன் அடிப்படையில் அமைந்ததாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இஸ்லாமாபாதில் SCO மாநாடு.

பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமாபாதில் வருகின்ற அக்டோபரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது. இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, உலக அளவில் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ரீதியில் செல்வாக்குமிக்க கூட்டமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஆண்டு ஜூலையில் இந்தியாவின் தலைமையில் SCO உச்சிமாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது.

2. தேசிய கல்விக் கொள்கையின்கீழ், இந்தியாவில் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகம்: பிரிட்டன் கல்வி நிறுவனத்துக்கு ஒப்புதல்.

பிரிட்டனின் சௌதாம்ப்டன் பல்கலைக்கழகம் அதன் கிளை வளாகத்தை இந்தியாவில் அமைக்க பல்கலைக்கழக மானியக்குழு (UGC) ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் தேசிய கல்விக்கொள்கை 2020இன்கீழ், இந்தியாவில் அமையவுள்ள முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என்ற பெருமையை சௌதாம்ப்டன் பல்கலை பெற்றுள்ளது.

1. How many teachers were selected for the National Awards to Teachers (NAT) 2024 from Higher Education Institutions (HEIs) and Polytechnics?

A. 14

B. 15

C. 16

D. 18

  • The Department of Higher Education selected 16 teachers from higher education institutions and polytechnics for the National Awards to Teachers (NAT) 2024. The National Teachers’ Award celebrates the outstanding contributions of the best teachers in India. It recognizes teachers who have significantly improved the quality of education and positively impacted their students’ lives.

2. Recently, which ministry has initiated the Voluntary Vehicle Modernization Program or Vehicle Scrapping Policy?

A. Ministry of Road Transport and Highways

B. Ministry of Environment, Forest and Climate Change

C. Ministry of Electronics and Information Technology

D. Ministry of New and Renewable Energy

  • The Ministry of Road Transport and Highways launched the Voluntary Vehicle Modernization Program, also known as the Vehicle Scrapping Policy. The policy focuses on the voluntary scrapping of commercial and passenger vehicles that are deemed unfit based on their condition, regardless of their age. It aims to phase out polluting vehicles through Registered Vehicle Scrapping Facilities and Automated Testing Stations.

3. Kuno National Park, recently seen in the news due to death of Namibian Cheetah, is located in which state?

A. Madhya Pradesh

B. Gujarat

C. Kerala

D. Bihar

  • Namibian cheetah Pawan was found dead in Kuno National Park, Madhya Pradesh. Pawan was the only free-ranging cheetah to have survived in Kuno. After Pawan’s death, Kuno National Park now has 24 cheetahs.
  • Project Cheetah, started in 2022, aims to reintroduce the cheetah, which was extinct in India. The cheetahs were brought from South Africa and Namibia. The project also focuses on conserving prey species and protecting other endangered species in grasslands and open forests.

4. Recently, which space organization has designed the skull of the female half humanoid, Vyomitra?

A. NASA

B. CNSA

C. ISRO

D. ESA

  • ISRO has designed the skull for Vyomitra, a female half-humanoid set to be part of the Gaganyaan mission in 2025. The uncrewed Gaganyaan mission will send Vyomitra into space and returning it back to the earth safely. Humanoids are robotic systems resembling humans, used in space to perform tasks like cleaning solar panels or fixing equipment. Vyomitra’s skull is made of a flexible, lightweight aluminum alloy, weighing 800 grams and measuring 200mm x 220mm.

5. What is the primary objective of the Agricultural Infrastructure Fund (AIF)?

A. To provide subsidies for agricultural machinery

B. To strengthen post-harvest infrastructure

C. To promote organic farming

D. To support agricultural research and development

  • The Union Cabinet recently expanded the Agricultural Infrastructure Fund (AIF). It was launched in 2020. AIF aims to strengthen post-harvest infrastructure, crucial for the agricultural supply chain. The fund focuses on developing facilities that improve productivity, sustainability, and efficiency in agriculture.

6. Recently, which country won the ‘SAFF (South Asian Football Federation) U-20 Championship football tournament’?

A. Nepal

B. India

C. Bangladesh

D. Bhutan

  • Bangladesh won the SAFF U-20 Championship, beating Nepal 4-1 in the final at the ANFA ground in Lalitpur. This is Bangladesh’s first title in the tournament. The competition, which began on August 18, 2024, also featured Sri Lanka, India, the Maldives, and Bhutan.
  • India had previously won the SAFF U-20 Championship in 2019, 2022, and 2023. The SAFF U-20 Championship, organized by the South Asian Football Federation, started in August 2015 in Nepal and is held biennially for male players under 20.

7. How much financial assistance has been sanctioned by the Union Cabinet for the development of hydroelectric projects in the North Eastern Region?

A. Rs 2,500 crore

B. Rs 3,000 crore

C. Rs 4,136 crore

D. Rs 5,000 crore

  • The Union Cabinet approved ₹4,136 crore to help northeastern states develop hydropower projects totaling 15,000 MW over the next eight years. The funding will cover up to 24% equity in joint ventures, with the scheme running from FY25 to FY32 under the power ministry’s budget. The scheme supports equity participation by state governments in hydropower projects through joint ventures with central public sector undertakings.

8. Which ministry recently launched the “Retired Sportsperson Empowerment Training” (RESET) Programme?

A. Ministry of Youth Affairs and Sports

B. Ministry of Defence

C. Ministry of Home Affairs

D. Ministry of Rural Development

  • Ministry of Youth Affairs and Sports launched the “Retired Sportsperson Empowerment Training” (RESET) Programme on National Sports Day in New Delhi. The RESET Programme aims to empower retired athletes who have brought glory to the country. It supports retired athletes by providing them with knowledge and skills for career development, making them more employable.
  • The programme will connect generations, allowing retired athletes to mentor and inspire young aspiring athletes. Their experience will help in developing future champions and boosting sports in India. Applications will be invited through a dedicated portal, with programs based on educational levels of Class 12th and above, and Class 11th and below.

9. The term “Doubtful voter” or “D-voter” has been primarily used in which northeastern state?

A. Assam

B. Nagaland

C. Manipur

D. Mizoram

  • Assam has identified around 1.2 lakh people as ‘D’ (Dubious or Doubtful) voters, with 41,583 declared as foreigners. The D-Voter concept is specific to Assam, where migration and citizenship are major political issues. It was introduced in Assam in 1997. D-Voters are those who cannot prove their Indian nationality.
  • People with questionable or disputed citizenship were marked as D-Voters during the National Register of Citizens (NRC) preparation. The term ‘Doubtful voter’ is not defined in the Citizenship Act of 1955 or the Citizenship Rules of 2003.

10. What is the name of India’s first pollution control vessel recently launched by Indian Coast Guard?

A. Sagar Yantra

B. Samudra Pratap

C. Viksit Bharat

D. Samudra Raksha

  • The Indian Coast Guard launched its first indigenously developed Pollution Control Vessel (PCV), Samudra Pratap, in Goa. This vessel was built by Goa Shipyard Limited, marking a milestone in India’s move towards self-reliance in defense production. Samudra Pratap is designed to combat oil spills and pollution along India’s coastlines. The ship is 114.5 meters long, 16.5 meters wide, and has a displacement of 4,170 tons.

11. Which ministry has developed a new composite membrane called ‘Mixed Matrix Membrane’?

A. Ministry of Science and Technology

B. Ministry of New and Renewable Energy

C. Ministry of Earth Sciences

D. Ministry of Agriculture

  • Ministry of Science and Technology developed a composite membrane called the Mixed Matrix Membrane (MMM). MMMs are made from two or more materials and can detect ammonia or other amine leaks in industrial settings or labs.
  • The MMM changes color when exposed to amine vapors, making it easier to detect leaks. Ammonia and other aliphatic amines are often used as raw materials or intermediate products in the food, chemical, and fertilizer industries. The MMM was developed by a research team at the Institute of Nano Science and Technology (INST), Mohali, an autonomous institute of the Department of Science and Technology.

12. Recently, which institutions collaborated on developing the security alert system based on piezoelectric polymer nanocomposites?

A. Centre for Nano and Soft Matter Sciences and National Chemical Laboratory (CSIR-NCL)

B. NIT, Guwahati and IIT, Kanpur

C. IISc and IIT, Delhi

D. None of the above

  • Researchers from Centre for Nano and Soft Matter Sciences (CeNS), an autonomous institute of Department of Science and Technology, in collaboration with scientists from National Chemical Laboratory (CSIR-NCL), Pune have developed a security alert system based on piezoelectric polymer nanocomposite. This development was based on the finding that metal oxide nano materials with appropriate crystal structure and surface properties when used as fillers in a polymer composite lead to a significant enhancement in the piezoelectric response.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!
Home New App Course

Course Details

Question Bank Books

📢 More new updates are coming! Stay tuned for TNPSC Exam 2025.