TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 31st August 2024

1. SHe-Box என்ற இணைய நுழைவைத் தொடங்கிய அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களைப் பதிவுசெய்வதற்கும் கண்காணிப்பதற்கும் SHe-Box என்ற இணைய நுழைவைத் தொடங்கியுள்ளது. புதிய SHe-Box இணையதளம் அரசு மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட உள்ளக குழுக்கள் (IC) மற்றும் உள்ளூர் குழுக்கள் (LC) தொடர்பான தகவல்களின் செயல்படும்.
  • புகார்களைப் பதிவுசெய்வதற்கும், அவற்றின் நிலையைக் கண்காணிப்பதற்கும், உள்ளக குழுக்களால் புகார்கள் காலக்கெடுவுக்குள் பரிசீலிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கும் இது ஒரு பொதுவான தளத்தை வழங்குகிறது. இது அனைத்து பங்குதாரர்களுக்கும் புகார்களுக்கு உறுதியான தீர்வு மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறையை வழங்குகிறது. சம்பந்தப்பட்ட மைய அதிகாரிமூலம் இவ்விணையதள புகார்கள் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படும். பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறைதீர்த்தல்) சட்டம், 2013, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கவும், அவர்களின் குறைகளைத் தீர்க்கவும் உதவுகிறது.

2. ‘தக்கைப்பூண்டு’ என்றால் என்ன?

அ. பசுந்தாள் உரப்பயிர்

ஆ. ஆக்கிரமிப்புக்களை

இ. பூக்குந்தாவரம்

ஈ. பூஞ்சை

  • தமிழ்நாட்டில் பசுந்தாள் உரப்பயிரான தக்கைப்பூண்டின் பரவல் தொடங்கியுள்ளது. ‘தக்கைப்பூண்டு’ என்பது உயரமாக வளரக்கூடிய ஓராண்டுப்பயிராகும். இது பெரும்பாலும் இந்தியாவில் ஈரமான பகுதிகளிலும் கனமான மண்ணிலும் வளர்கிறது. இந்த மூலிகைத்தாவரம் பொதுவாக கால்நடைகளுக்கு உணவளிக்கவும், மண்ணின் தரத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது. பசுந்தாள் உரம் என்பது பயறுவகை தாவரங்களை வளர்த்து அவற்றை மண்ணோடு சேர்ப்பதாகும். இந்த நடைமுறை மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது, நீர் தக்கவைப்பை அதிகரிக்கிறது, அரிப்பைக் குறைக்கிறது, களைகளைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் காரமண்ணை மீட்டெடுக்க உதவுகிறது. இது மண்ணில் கரிமப்பொருட்களைச் சேர்ப்பதோடு நுண்ணுயிர் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.

3. “தற்சார்பை நோக்கி சமையல் எண்ணெய்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் உத்திகள்” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி

இ. SEBI

ஈ. NABARD

  • NITI ஆயோகானது “தற்சார்பு இலக்கைநோக்கி சமையல் எண்ணெய்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான பாதைகள் மற்றும் உத்திகள்” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, நாட்டின் சமையல் எண்ணெய் துறையின் தற்போதைய நிலை மற்றும் அதன் எதிர்கால திறனை விரிவாக ஆராய்கிறது.
  • 9 பெரிய எண்ணெய்வித்துப் பயிர்கள் 14.3% பயிரிடப்பட்ட நிலப்பரப்பை உள்ளடக்கி, 12-13% உணவு ஆற்றலுக்கும், 8% வேளாண் ஏற்றுமதிக்கும் பங்களிக்கின்றன. உற்பத்தியில் சோயாபீன் முன்னணியில் உள்ளது; அதைத் தொடர்ந்து காட்டுக்கடுகு மற்றும் நிலக்கடலை உள்ளது. இராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன; குஜராத் மற்றும் மகாராஷ்டிராவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. பாமாயில் இறக்குமதி 59%ஆக உள்ளது. 2030இல் 43 மெட்ரிக் டன்னாகவும், 2047இல் 55 மெட்ரிக் டன்னாகவும் எண்ணெய் வித்து உற்பத்தி மற்றும் விளைச்சல் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ் என உலக சுகாதார அமைப்பால் (WHO) கண்டறியப்பட்ட வைரஸ் எது?

அ. ஜிகா வைரஸ்

ஆ. மேற்கு நைல் வைரஸ்

இ. குரங்கம்மை வைரஸ்

ஈ. சந்திபுரா வைரஸ்

  • கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ் என உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட வைரஸ் சந்திபுரா வைரஸ் ஆகும். சந்திபுரா வைரஸ் (அ) Chandipura vesiculovirus (CHPV) என்பது Rhabdoviridae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு RNA வைரஸ் ஆகும், இதில் வெறிநோய்க்கடியும் அடங்கும்.
  • முதன்முதலில் 1965ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் சந்திபுராவில் கண்டுபிடிக்கப்பட்ட இது, Phlebotomine sandflies மற்றும் Phlebotomus papatasi போன்ற பாதிக்கப்பட்ட மணல் ஈக்கள் மற்றும் Aedes aegypti போன்ற சில கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இது முதன்மையாக 9 மாதங்கள் முதல் 14 வயது வரையிலான குழந்தைகளை பாதிக்கிறது. காய்ச்சல், வாந்தி, தளர்வான அசைவுகள் மற்றும் தலைவலிபோன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. மூளையழற்சிக்கு வழிவகுக்கும் இது மூளையின் வீக்கத்திறக்கும் காரணமாக் அமைகிறது. சந்திபுரா வைரஸுக்கு எனத் தற்போது குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ என எதுவும் இல்லை.

5. 2024 – பாரிஸ் பாராலிம்பிக்கில் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 போட்டியில் அவனி லெகாரா வென்ற பதக்கம் என்ன?

அ. தங்கம்

ஆ. வெள்ளி

இ. வெண்கலம்

ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை

  • ஆக.30 அன்று 2024 – பாரிஸ் பாராலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 போட்டியில் அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்றார். 3 ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோ பாராலிம்பிக்கில் இதே போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்த அவர், தனது பட்டத்தை இம்முறை தக்கவைத்துக் கொண்டுள்ளார். 22 வயதில், மூன்று பாராலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் தடகள வீராங்கனை என்ற வரலாற்றை அவனி லெகாரா உருவாக்கியுள்ளார்.

6. அண்மையில், 2024 – உலகளாவிய நிதித்தொழில்நுட்ப விழா நடைபெற்ற இடம் எது?

அ. புது தில்லி

ஆ. மும்பை

இ. சென்னை

ஈ. ஹைதராபாத்

  • மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2024 – உலக நிதித்தொழில்நுட்ப விழாவில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார். இந்திய பேமெண்ட்ஸ் கவுன்சில், இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) மற்றும் ஃபின்டெக் கன்வர்ஜென்ஸ் கவுன்சில் (FCC) ஆகியவை இணைந்து இந்நிகழ்வை நடத்தியுள்ளன. உலகெங்கிலுமுள்ள நிதித்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், நிபுணர்கள், வங்கியாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

7. அண்மையில், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவாக, ‘நமன்’ என்ற திட்டத்தைத் தொடங்கிய ஆயுதப்படை எது?

அ. இந்திய வான்படை

ஆ. இந்திய இராணுவம்

இ. இந்திய கடற்படை

ஈ. தேசிய பாதுகாப்புப் படை

  • இராணுவ ஓய்வூதியம் பெறுவோர், படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவாக இந்திய ராணுவம் ‘NAMAN’ திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டம் SPARSH டிஜிட்டல் ஓய்வூதிய முறையை அடிப்படையாகக் கொண்டது; இது பாதுகாப்புப் பணியாளர்களுக்கான ஓய்வூதிய செயல்முறைகளை எளிதாக்குகிறது.
  • இந்திய இராணுவம், CSC மின்னாளுகை இந்தியா நிறுவனம் மற்றும் HDFC வங்கி ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்மூலம் வரவேற்பு மற்றும் வசதி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் SPARSH-அடிப்படையிலான ஓய்வூதிய சேவைகள் மற்றும் பிற சேவைகளை ஓரிடத்தில் வழங்குகின்றன. முதல் கட்டமாக புது தில்லி, ஜலந்தர், பெங்களூருபோன்ற முக்கிய நகரங்களில் 14 மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. கிராம அளவிலான தொழில்முனைவோர்கள் HDFC வங்கியின் நிதி உதவியுடன் இந்த மையங்களை நிர்வகிக்கின்றனர்.

8. புதுமையான, ‘ஹாலிடே ஹீஸ்ட்’ பரப்புரைக்காக, கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் சுற்றுலாத்துறை, அண்மையில், 2024 – PATA தங்க விருதை வென்றது?

அ. இராஜஸ்தான்

ஆ. குஜராத்

இ. கேரளா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • எண்மமுறை சந்தைப்படுத்துதல் பரப்புரைப்பிரிவில், ‘ஹாலிடே ஹீஸ்ட்’ என்ற இணையவழி போட்டிக்காக கேரள மாநிலத்தின் சுற்றுலாத்துறை 2024 – PATA தங்க விருதை வென்றது. 2023 ஜூலையில் தொடக்கப்பட்ட பரப்புரை, சுற்றுலாப்பயணிகளைக்கவர, வாட்ஸ்-ஆப் இயலி ‘மாயா’வைப்பயன்படுத்தியது. 2024 ஆக.28 அன்று பாங்காக்கில் கேரள மாநில சுற்றுலாத்துறை இந்த விருதைப் பெற்றுக் கொண்டது.

9. அண்மையில், 2024 – பாரிஸ் பாராலிம்பிக்கில் எந்தப் போட்டியில் மோனா அகர்வால் வெண்கலம் வென்றார்?

அ. டேபிள் டென்னிஸ்

ஆ. குத்துச்சண்டை

இ. துப்பாக்கிச் சுடுதல்

ஈ. மல்யுத்தம்

  • 2024 – பாராலிம்பிக்கில் மோனா அகர்வால் R2 பெண்கள் 10மீ ஏர் ரைபிள் SH1 நிகழ்வில் வெண்கலப்பதக்கம் வென்றதன்மூலம் பாரா ஷூட்டிங்கில் பிரபலமானவரானார். 2016இல், பாரா தடகளத்தில் நுழைந்த, மாநில அறிமுக எறிதல் போட்டிகளில் தங்கம் வென்றார் மற்றும் பாரா பவர் லிஃப்டிங்கில் பதக்கங்களை வென்றுள்ளார்.

10. ஒவ்வோர் ஆண்டும், ‘சர்வதேச திமிங்கல சுறா நாளாக’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 30 ஆகஸ்ட்

ஆ. 31 ஆகஸ்ட்

இ. 1 செப்டம்பர்

ஈ. 2 செப்டம்பர்

  • சர்வதேச திமிங்கல சுறா நாள் ஆண்டுதோறும் ஆகஸ்ட்.30 அன்று கொண்டாடப்படுகிறது. திமிங்கல சுறா உலகின் மிகப்பெரிய மீனும், அரித்துண்ணும் சுறா இனமுமாகும். அவை மத்தியதரைக் கடலைத்தவிர, உலகளவில் மிதமான மற்றும் வெப்பமண்டலப்பெருங்கடல்களில் காணப்படுகின்றன. திமிங்கல சுறாக்கள் அடர் சாம்பல் நிறத்தில் ஒளிரும் புள்ளிகள் மற்றும் கோடுகளைக் கொண்டுள்ளன. அரித்து உண்ணிகளான அவை, அவற்றின் செவுள்கள்மூலம் ஒரு மணி நேரத்திற்கு 6000 லிட்டர் தண்ணீரைச் செயலாக்குகின்றன. அவற்றின் உணவில் பிளாங்க்டன், சிறிய மீன் மற்றும் மத்தி, நெத்திலி மற்றும் கணவாய்போன்றவை அடங்கும்.

11. நாஸ்கா மலைமுகடு என்பது கீழ்க்காணும் எந்தக் கடலில் அமைந்துள்ள கடலடி மலைத்தொடராகும்?

அ. இந்தியப் பெருங்கடல்

ஆ. பசிபிக் பெருங்கடல்

இ. ஆர்க்டிக் பெருங்கடல்

ஈ. அட்லாண்டிக் பெருங்கடல்

  • சிலி கடற்கரையிலிருந்து 900 மைல் தொலைவிலுள்ள நாஸ்கா மலைமுகட்டில் ஒரு புதிய கடற்பகுதியை கடல்சார் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். நாஸ்கா மலைமுகடு என்பது தென்னமெரிக்காவிற்கு அருகிலுள்ள தென்கிழக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு கடலடி மலைத்தொடர் ஆகும். இது சுமார் 1,100 கிலோமீட்டர் நீளமும் அகலமும் கொண்டது. இந்த மலைமுகடு பெருவில் உள்ள நாஸ்கா தட்டில் தொடங்கி தென்மேற்கே சிலியின் ஈஸ்டர் தீவை நோக்கி நீண்டுள்ளது. இது பூமியின் மேலடுக்கில் உள்ள வெப்பப்புள்ளியில் இருந்து எரிமலை செயல்பாட்டால் உருவாக்கப்பட்டது. இந்த முகடு வழக்கத்திற்கு மாறாக தடித்த பாசால்டிக் கடல் மேலோட்டைக்கொண்டது.

12. வத்வான் துறைமுகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. குஜராத்

ஈ. கேரளா

  • மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் சுமார் `76,000 கோடி மதிப்பிலான வத்வான் துறைமுக திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார். வத்வான் துறைமுகமானது 23.2 மில்லியன் TEU-களைக் கையாளும் திறனுடன், உலக அளவில் முதல் 10 துறைமுகங்களில் ஒன்றாக மாறவுள்ளது. மகாராஷ்டிராவின் தஹானு நகருக்கு அருகில் அமைந்துள்ள இந்தத் துறைமுகம், பன்னாட்டு கப்பல் வழித்தடங்களுக்கு நேரடி இணைப்பை வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும்.
  • நவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் திறமையான சரக்குக் கையாளுதல் வசதியை இது கொண்டிருக்கும். இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு, உள்ளூர் வணிகங்களை உயர்த்தும் மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆண்டுதோறும் 2% பட்டதாரிகளை தொழில்முனைவோராக்க இலக்கு.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 2% பட்டதாரிகளை தொழில்முனைவோராக மாற்ற தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தமிழ்நாடு புத்தொழில் துறை நிர்வாக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

1. SHe-Box Portal is launched by which ministry?

A. Ministry of Home Affairs

B. Ministry of Women and Child Development

C. Ministry of Science and Technology

D. Ministry of Rural Development

  • The Union Ministry of Women and Child Development launched the new SHe-Box portal. SHe-Box is a centralized platform for registering and monitoring workplace sexual harassment complaints. It acts as a repository for information on Internal Committees (ICs) and Local Committees (LCs) in both government and private sectors.
  • The portal allows users to file complaints, track their status, and ensures timely processing by ICs. It provides a secure way to register complaints without public exposure of personal information. Complaints are monitored in real-time by a designated nodal officer. The upgraded version, based on the Sexual Harassment of Women at Workplace Act, 2013, helps form internal or local committees to address complaints.

2. What is ‘Dhaincha’?

A. Green manuring crop

B. Invasive weed

C. Flowering plant

D. Fungus

  • Distribution of green manure, Dhaincha, has started in Tamil Nadu. Dhaincha is a tall annual herb, often grown in wet areas and heavy soils in India. It is used to feed livestock and improve soil quality. Green manuring involves growing leguminous plants and incorporating them into the soil. This practice enhances soil structure, increases water retention, reduces erosion, controls weeds, and helps reclaim alkaline soils. It also adds organic matter to the soil and boosts microbial activity.

3. Which institution recently released “Pathways and Strategies for Accelerating Growth in Edible Oils towards Goal of Atma Nirbharta” report?

A. NITI Aayog

B. Reserve Bank of India

C. SEBI

D. NABARD

  • NITI Aayog recently released a “Pathways and Strategies for Accelerating Growth in Edible Oils towards Goal of Atma Nirbharta” report. The report reviews the current state of the sector, its potential, and strategies to address challenges.
  • Nine major oilseed crops cover 14.3% of the cropped area, contributing 12-13% to dietary energy and 8% to agricultural exports. Soybean leads in production, followed by rapeseed-mustard and groundnut. Rajasthan and Madhya Pradesh are the top producers, with Gujarat and Maharashtra also significant contributors. Rising consumption has led to increased imports, with palm oil making up 59% of imports. Oilseed production and yield have been growing, with projections to reach 43 MT by 2030 and 55 MT by 2047.

4. Which virus did the World Health Organisation (WHO) recently identify as having the largest outbreak in 20 years in India?

A. Zika Virus

B. West Nile Virus

C. Mpox Virus

D. Chandipura Virus

  • The World Health Organisation (WHO) has declared the current Chandipura virus outbreak in India as the largest in 20 years. Chandipura virus, or Chandipura vesiculovirus (CHPV), is an RNA virus from the Rhabdoviridae family, which also includes rabies. It was first discovered in 1965 in Chandipura, Maharashtra.
  • The virus spreads through the bites of infected sandflies, like Phlebotomine sandflies and Phlebotomus papatasi, as well as some mosquitoes, such as Aedes aegypti. It affects mainly children aged 9 months to 14 years, causing symptoms like fever, vomiting, loose motions, and headaches. The infection can lead to encephalitis, which is inflammation of the brain. There is currently no specific antiviral treatment or vaccine for Chandipura virus.

5. Avani Lekhara recently won which medal in the women’s 10m Air Rifle Standing SH1 event at Paris Paralympics 2024?

A. Gold

B. Silver

C. Bronze

D. None of the above

  • Avani Lekhara won a gold medal in the women’s 10m Air Rifle Standing SH1 event at Paris Paralympics 2024 on August 30. She successfully defended her title, having previously won gold in the same event at the Tokyo Paralympics three years ago. At 22 years old, Avani aims to become the first female para-athlete from India to win three Paralympic medals.

6. Recently, where was the Global Fintech Fest (GFF) 2024 held?

A. New Delhi

B. Mumbai

C. Chennai

D. Hyderabad

  • Prime Minister Narendra Modi addressed Global Fintech Fest (GFF) 2024 held at the Jio World Convention Centre in Mumbai. The event is organized jointly by the Payments Council of India, the National Payments Corporation of India (NPCI), and the Fintech Convergence Council (FCC). The GFF is considered one of the world’s largest gatherings of fintech startups, investors, experts, bankers, and regulators from around the globe.

7. Recently, which armed force has launched ‘Project Naman’ to support veterans and their families?

A. Indian Air Force

B. Indian Army

C. Indian Navy

D. National Security Guard

  • The Indian Army launched Project NAMAN to support Defence Pensioners, Veterans, and their families. The project is based on the SPARSH digital pension system, simplifying pension processes for Defence personnel. Reception and facilitation centers were set up through an MoU between the Indian Army, CSC e-Governance India Limited, and HDFC Bank.
  • These centers offer SPARSH-enabled pension services and other citizen services at one location. In the first phase, 14 centers were established in key cities like New Delhi, Jalandhar, and Bangalore. Village Level Entrepreneurs (VLEs) manage these centers with HDFC Bank’s financial support.

8. Which state’s tourism recently won the PATA Gold Award 2024 for innovative ‘Holiday Heist’ campaign?

A. Rajasthan

B. Gujarat

C. Kerala

D. Andhra Pradesh

  • Kerala Tourism won the PATA Gold Award 2024 for its ‘Holiday Heist’ online contest in the Digital Marketing Campaign category. The campaign, launched in July 2023, on the WhatsApp ChatBot ‘Maya’ to attract tourists. Kerala Tourism received the award in Bangkok on August 28, 2024.

9. Mona Agarwal recently won a bronze medal in which event at the 2024 Paris Paralympics?

A. Table Tennis

B. Boxing

C. Shooting

D. Wrestling

  • Mona Agarwal became a well-known figure in para shooting, winning a Bronze medal in the R2 Women 10m Air Rifle SH1 event at the 2024 Paralympics. In 2016, she turned to para-athletics, winning gold in State debut throw events and earning medals in para powerlifting.

10. Which day is observed as ‘International Whale Shark Day’ every year?

A. 30 August

B. 31 August

C. 1 September

D. 2 September

  • International Whale Shark Day is celebrated annually on August 30. The whale shark is the largest fish in the world and a filter-feeding shark species. They are found in temperate and tropical oceans globally, except the Mediterranean Sea. Whale sharks have a dark gray top with light spots and stripes. They are filter feeders, processing over 6,000 liters of water per hour through their gills. Their diet includes plankton, small fish, and mollusks like sardines, anchovies, and squid.

11. Nazca Ridge is a submarine ridge located in which ocean?

A. Indian Ocean

B. Pacific Ocean

C. Arctic Ocean

D. Atlantic Ocean

  • Oceanographers found a new seamount on the Nazca Ridge, 900 miles off Chile’s coast. Nazca Ridge is a submarine ridge in the southeastern Pacific Ocean near South America. It is around 1,100 kilometers long and varies in width. The ridge starts at the Nazca Plate off Peru and extends southwest towards Easter Island, Chile. It was created by volcanic activity from a hotspot in the Earth’s mantle. The ridge consists of unusually thick basaltic ocean crust.

12. Vadhvan Port is located in which state?

A. Tamil Nadu

B. Maharashtra

C. Gujarat

D. Kerala

  • Prime Minister Narendra Modi laid the foundation for the Vadhvan Port project in Palghar, Maharashtra, worth around ₹76,000 crore. Vadhvan Port is set to become one of the top 10 ports globally, with a handling capacity of 23.2 million TEUs.
  • The port, near Dahanu town, Maharashtra, will be one of India’s largest deep-water ports, offering direct connectivity to international shipping routes. Equipped with modern technology and infrastructure, it will feature deep berths and efficient cargo handling. The project will create significant employment, boost local businesses, and support regional economic growth.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!
Home New App Course

Course Details

Question Bank Books

📢 More new updates are coming! Stay tuned for TNPSC Exam 2025.