Tnpsc

Tnpsc exam Constitution of India Notes Material expected questions Part -3

Tnpsc exam Constitution of India Notes Material expected questions Part -3

ஒரு சில கேள்விகள், பதில்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்து திருத்தம் செய்ய உதவவும்.

32. பொருத்துக:-

A. ஜனாதிபதி மற்றும் ஆளுநர் பாதுகாப்பு – 1.ஷரத்து 361

B. மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் – 2.ஷரத்து 326

c. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் – 3.ஷரத்து 338

D. மாநிலங்களுக்கு இடையேயான கவுன் சில் – 4.ஷரத்து 263

A B C D

a) 4 1 3 2

b) 2 3 4 1

c) 1 2 3 4

c) 4 1 2 3

d) 4 2 1 3

33. முதல்முதலில் லோக் ஆயுக்தா மகாராஷ்டிராவில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

a) 1971 b)1970 c)1983 d) 1976

34. பொது கணக்கு குழுவின் தலைவர் யார்?

a) மக்களவை சபாநாயகர் b) மக்களவை c) எதிர்க்கட்சித்தலைவர் d)பிரதமர் ஜனாதிபதி

35. மாநிலங்களுக்கு இடையிலான நீர் பிரச்சினைகள் பற்றி எந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?

a) பிரிவு 370 b)பிரிவு 262

c) பிரிவு 263 d)பிரிவு 301

36. எந்த மாநிலத்தில் இரு அவைகள் கொண்ட சட்டமன்றம் உள்ளது?

1. ஆந்திரா 2. பீகார்

3. கர்நாடகா 4. மகாராஷ்டிரா

5. ஒடிஷா

a) 1,3 மட்டும் b) 1,2 மட்டும்

c) 1,3,4 மட்டும் d) 1,2,3,4 மட்டும்

37. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி காலத்தை மாற்றும் அதிகாரம் யாரிடம் உள்ளது?

a) ஜனாதிபதி b) உச்சநீதிமன்றம்

c) மத்திய அரசு d) பாராளுமன்றம்

38. தமிழக உள்ளாட்சி தேர்தலில் பெண் களுக்கான இடஒதுக்கீடு எவ்வளவு?

a)10% b)25% c)33% d)50%

39. சென்னை உயர்நீதிமன்றம் எப்போது தொடங்கப்பட்டது?

a)1861 b)1862 c)1912 d)1935

40. மத்திய தகவல் ஆணைய நியமன குழு பின்வரும் யாரை உள்ளடக்கியது?

a) பிரதமர்

b) மக்களவை எதிர்க்கட்சித்தலைவர்

c) பிரதமரால் பரிந்துரைக்கப்படும் கேபினட் அமைச்சர்

d) மேற்கண்ட அனைவரும்

41. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாக இருந்து இந்தியாவின் இடைக் கால ஜனாதிபதியாக பொறுப்பு வகித்தவர் யார்?

a) கைலாஷ் நாத் வாஞ்சூ

b) கோகாசுப்பா ராவ்

c) ரங்கநாத் மிஸ்ரா

d) முகமது ஹிதயதுல்லா

42. பஞ்சாயத்து அல்லது நகராட்சியை கலைத்த பின்னர் எத்தனை நாட்களில் தேர்தல் நடத்த வேண்டும்?

a) 1 மாதம் b)3 மாதம்

c) 6 மாதம் d) ஓராண்டு

43. எந்த மசோதா இரு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மையில் நிறை வேற்றப்பட வேண்டும்?

a) சாதாரண மசோதா

b) பண மசோதா

c) நிதி மசோதா

d) சட்டத்திருத்த மசோதா

44. மொழி அடிப்படையில் உருவான முதல் மாநிலம்

a) ஆந்திரா b) தமிழ்நாடு

c) மேற்கு வங்காளம் d) மகாராஷ்டிரா

45. இந்திய அரசியலமைப்பில் இடம்பெற் றுள்ள சட்டத்திருத்தம் செய்யும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பின்பற்றப்பட்டது?

a) தென்னாப்பிரிக்கா b)கனடா

c) ஆஸ்திரேலியா d)அமெரிக்கா

46. 86-வது சட்டத்திருத்தம் எதோடு தொடர்புடையது?

a) தகவல் அறியும் உரிமை சட்டம்

b) கட்டாய கல்வி

c) கட்சி தாவல் தடைசட்டம்

d) தேசிய நீதிபதிகள் ஆணையம்

47. தமிழக சட்டப்பேரவைக்கு ஆளுநரால் நியமனம் செய்யப்படும் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர்களின் எண்ணிக்கை

a) 12 b) 10 c) 2 d) 1

48. விகிதாச்சார பிரதிநிதித்துவமுறைப் படி எந்த தேர்தல் நடைபெறுகிறது?

a) மாநிலங்களவை தலைவர்

b) மக்களவை சபாநாயகர்

c) மக்களவை உறுப்பினர்

d) சட்டப்பேரவை உறுப்பினர்

49. 1979-ல் கட்சி தாவல் தடை சட்டம் எந்த மாநில அரசால் இயற்றப்பட்டது?

a) ஆந்திரா b) ராஜஸ்தான்

c) மேற்கு வங்காளம் d) மகாராஷ்டிரா

50. தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு

a)1993 b)1991 c)1990 d)1992

51. 14-வது நிதி ஆணையத்தின் (Finance Commission) தலைவர் யார்?

a) கே.சந்தானம்

b) பி.வி.ராஜமன்னார்

c) டாக்டர் விஜய் எல்.கேல்கர்

d) டாக்டர் ஒய்.வி.ரெட்டி

52. பொது சிவில் சட்டம் அரசியலமைப்பின் எந்த ஷரத்தில் இடம்பெற்றுள்ளது?

a) ஷரத்து 40 b) ஷரத்து 44

c) ஷரத்து 47 d) ஷரத்து 48

53. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து எந்த ஷரத்தில் உள்ளது?

a) ஷரத்து 371 b)ஷரத்து 370

c) ஷரத்து 300-ஏ d)இவை எதுவுமில்லை

54. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் (Corporations) எண்ணிக்கை

a) 10 b) 12 c) 8 d) 11

55. தேசிய அவசர கால பிரகடன நிலை (External Emergency) எத்தனை முறை இந்தியாவில் அமல்படுத்தப் பட்டுள்ளது?

a) 1 b) 2 c) 3

d) ஒருமுறைகூட அமல்படுத்தப்படவில்லை

56. பொருத்துக:-

A. நிதி ஆணையம் – 1. ஷரத்து 148

B. இந்திய கணக்கு தணிக்கையாளர் – 2. ஷரத்து 324

C. தேர்தல் ஆணையம் – 3. ஷரத்து 280

D. யுபிஎஸ்சி – 4. ஷரத்து 315

A B C D

a) 3 2 1 4

b) 3 1 2 4

c) 4 1 2 3

d) 4 2 1 3

57) அமைச்சரவை அளவை வரையறுப்பது

a) 86-வது சட்டத்திருத்தம்

b) 91-வது திருத்தம்

c) 108 -வது திருத்தம்

d) 98-வது திருத்தம்

58. பின்வருவனவற்றில் எது அல்லது எவை சரியானவை?

1. அடிப்படை கடமை பற்றி விளக்கியுள்ள பகுதி – IV A

2. ஸ்வரண்சிங் குழு 8 அடிப்படை உரிமைகளை பரிந்துரைத்தது

3. 42-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் 10 அடிப்படை கடமைகள் இணைக்கப்பட்டன

4. அடிப்படை கடமைகள் குடிமக்களுக்கு மட்டுமே, வெளிநாட்டவர்களுக்கு இல்லை

a) 1 மட்டும் b) 2 மட்டும்

c) 1,4 மட்டும் d) அனைத்தும்

59. சரியானவற்றை தேர்ந்தெடு:-

1. துணை ஜனாதிபதியை நீக்குவது குறித்து அரசியலமைப்பு சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை

2. அமைச்சர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக பாராளுமன்றத்துக்கு கட்டுப்பட்டவர்கள்

3. அமைச்சர்களின் சம்பளம் மற்றும் படிகள் ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படு கின்றன

4. லேம் டக் அமர்வு (Lame Duck Session)என்பது நாடாளுமன்றத்தில் நடக்கும் கடைசி அமர்வைக் குறிக்கும்

a) 2,3 மட்டும் b) 3,4 மட்டும் c)1,4 மட்டும் d) அனைத்தும்

60. பல்வந்த்ராய் மேத்தா குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

a) 1957 b) 1977 c) 1985 d) 1986

61. தாழ்த்தப்பட்டோருக்கான தனி தேசிய ஆணையம் எந்த ஆண்டிலிருந்து செயல்பட தொடங்கியது?

a) 2003 b) 2004 c) 2006 d) 2009

62. மாநிலங்களவை எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

a) 1950 b) 1951 c) 1952 d) 1956

63. தேசிய பழங்குடியினர் ஆணையம் இடம்பெற்றுள்ள ஷரத்து?

a) 323-ஏ b) 338-ஏ c) 339 d) 340

64. அரசியலமைப்பின் எந்த அட்டவணை ஜனாதிபதி மற்றும் ஆளுநர் பற்றி விளக்குகிறது?

a)1971 b)1970 c)1983 d)1976

a) முதல் அட்டவணை b) 2-வது அட்டவணை

c) 4-வது அட்டவணை d) 7-வது அட்டவணை

65. ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைப் பற்றி எந்த ஷரத்து கூறுகிறது?

a) ஷரத்து 74 b) ஷரத்து 53

c) ஷரத்து 72 d) ஷரத்து 66

66. மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரை நியமிப்பவர் யார்?

a) ஜனாதிபதி b) ஆளுநர்

c) முதல்-அமைச்சர் d) சட்டமன்ற சபாநாயகர்

67. மாநிலங்களவை பாராளுமன்றத்துக்கு மாநில பட்டியலில் உள்ள பொருளடக்கம் மீது சட்டங்கள் உருவாக்க எந்த விதி அங்கீகரிக்கிறது?

a) ஷரத்து 248 b) ஷரத்து 249

c) ஷரத்து 250 d) ஷரத்து 247

68. கீழ்க்கண்ட நபர்களில் யார் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்க முடியும்?

a) ஜனாதிபதி b) ஆளுநர்

c) முதல்-அமைச்சர் d) பிரதமர்

69. பஞ்சாயத்து ராஜுக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க எந்த குழு பரிந்துரைத்தது?

a) பல்வந்த்ராய் மேத்தா குழு

b) எல்.எம்.சிங்வி குழு

c) ஜி.வி.கே.ராவ் குழு

d) அசோக் மேத்தா குழு

விடைகள்: 32.c 33.a 34.b 35.b 36.d 37.d 38.d 39.b 40.d 41.d 42.c 43.d 44.a 45.a 46.b 47.d 48.a 49.c 50.a 51.d 52.b 53.b 54.b 55.b 56.b 57.b 58.d 59.c 60.a 61.b 62.c 63.b 64.b 65.c 66.b 67.a 68.a 69.b

கணேச சுப்ரமணியன்

கணேஷ் ஐஏஎஸ் அகாடமி

அண்ணா நகர், சென்னை

ganiasacademy@gmail.com

போன்: 044-26191661

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!