Tnpsc

Tnpsc exam General Knowledge Notes Material expected questions Part -4

Tnpsc exam General Knowledge Notes Material expected questions Part -4

ஒரு சில கேள்விகள், பதில்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்து திருத்தம் செய்ய உதவவும்.

110. சந்திர குப்த மௌரியர் எந்த கிரேக்கரை வீழ்த்தினார்?

(a) போரஸ்

(b) செலூக்கஸ்

(c) அலெக்சாண்டர்

(d) மேற்கண்ட எதுவும் இல்லை.

111. எது எட்டுத் தொகை நூல் இல்லை?

(a) நற்றிணை (b) பரிபாடல்

(c) நெடுநல்வாடை (d) குறுந்தொகை

112. பொருத்துக – அரசர் கல்வெட்டு

(a) சந்திர குப்தர் – 1 சோம்நாத் புத்த சிலை

(b) குமார குப்தர் – 2 சுபியா தூண் கல்வெட்டு

(c) ஸ்கந்த கும்தர் – 3 உதயகிரி குகை

(d) குமார குப்தர்II – 4 கர்மடோனா கல்வெட்டு

குறியீடுகளை தேர்ந்தெடு

(a) 1 3 4 2

(b) 3 4 2 1

(c) 3 1 2 4

(d)1 2 3 4

113. முதலாம் மகேந்திரவர்மன் புதிய கட்டிடக் கலையைத் தொடங்கினார். இது பின் னாளில் இவ்வாறு அழைக்கப்பட்டது

(a) நகரா கட்டிடக்கலை

(b) விசாரா கட்டிடக்கலை

(c) திராவிடக் கட்டிடக்கலை

(d) அனைத்து வகைகளையும் உள்ளடக்கியது

114. சோழ அரசரின் மெய்க்காவல்படை எவ்வாறு அழைக்கப்பட்டது?

(a) வேலைக்காரர் (b) கைகோளப் பெரும்படை

(c) கடகம் (d) a மற்றும் b

115. ராஜேந்திர சோழனால் மகிபாலர் தோற்கடிக்கப்பட்டது எந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது

(a) மாமண்டூர் கல்வெட்டு

(b) வைகுண்டபெருமாள் கோயில் கல்வெட்டு

(c) முக்தீஸ்வரன் கோயில் கல்வெட்டு

(d) திருமலை கல்வெட்டு

116. எந்த டெல்லி சுல்தான் தனது ஆட்சிப் பரப்பை இக்தாக்களாகப் பிரித்து அதற்கு இக்தாதாரரை நியமித்து சட்டம் ஒழுங்கு மற்றும் நிலவருவாய் பொறுப்பினை இக் தாக்களின் கட்டுப்பாட்டில் விட்டார்?

(a) ஐபக் (b) இல்துமிஷ்

(c) பால்பன் (d) அலாவுதீன் கில்ஜி

117. எந்த போர்களுக்குப் பின்னர் ஆங்கி லேயர்கள் திவானி உரிமையைப் பெற்றனர்?

1. பிளாசிப்போர் 2. பக்சார் போர்

3. கர்நாடகப் போர் 4. மைசூர் போர்

(a) 1 மற்றும் 2 (b) 3 மற்றும் 4

(c) 4 மட்டும் (d) எதுவுமேயில்லை

118. இந்தியன் ஒபீனியன்-யாருடன் தொடர் புடையது.

(a) ராஜேந்திர பிரசாத்

(b) தாதா பாய் நௌரோஜி

(c) எம்.கே.காந்தி

(d) எதுவுமேயில்லை

119. பொருத்துக

A. ஒத்துழையாமை இயக்கம் 1. கி.பி.1922

B. சைமன் குழு 2. கி.பி.1928

C. நேரு அறிக்கை 3. கி.பி.1927

D. செளிரி சௌரா சம்பவம் 4. கி.பி.1920

A B C D

(a) 1 2 3 4

(b) 4 2 3 1

(c) 4 3 2 1

(d) 1 3 2 4

120.தண்டி கடற்கரையை காந்தி சென் றடைந்த நாள்

(a) 5 ஏப்ரல் 1930 (b) 5 ஏப்ரல் 1932

(c) 25 ஏப்ரல் 1931 (d) எதுவுமில்லை

121.நெறிமுறை கோட்பாடுகள் அரசிய லமைப்பின் எந்த பகுதியில் உள்ளன?

(a) பகுதி V (b) பகுதி IV

(c) பகுதி III (d) பகுதி IX

122. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.

1. பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம்.

2. 30 வயது முழுமை அடைந்தவரே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

3. குடியரசுத் தலைவர் ஆதாயம் தரும் எந்த ஒரு பதவியிலும் நீடிக்கக் கூடாது.

சரியான வாக்கியங்களை தேர்வு செய்க:

(a) 1 மட்டும் (b) 1, 2 மற்றும் 3

(c) 3 மட்டும் (d) 2 மற்றும் 3

123.மாநிலங்களவையின் உறுப்பினர் ஆவ தற்கான குறைந்தபட்ச வயது வரம்பு?

(a) 25 (b) 30

(c) 35 (d) 50

124. கீழ்காணும் வாக்கியங்களை கருதுக.

1. அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா மாநில சட்ட மன்றத்தால் தொடங்கப்பட முடியாது.

2. நாடு முழுவதும் மாநில சட்டமன்ற அமைப்பு ஒரே மாதிரியானவை.

மேலே உள்ள வாக்கியத்தில் தவறான வற்றைத் தேர்ந்தெடு

(a) 1 மற்றும் 2 (b) 1 மட்டும்

(c) இரண்டும் சரி (d) 2 மட்டும்

125.கீழ்க்கண்டவற்றுள் மாநிலங்களுக்கு இடையேயான குழுவை பரிந்துரை செய்தது யார்?

(a) பன்ஜி குழு (b) சர்காரியா குழு

இ) தார் குழு ஈ) மண்டல் குழு

126.இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத் தல் என்ற அடிப்படையில் குடியரசுத் தலைவர் எந்த ஷரத்தின் கீழ் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்துகிறார்

(a) ஷரத்து 352 (b) ஷரத்து 355

(c) ஷரத்து 356 (d) ஷரத்து 360

127.சரியான கூற்று எது?

1. பல்வந்தராய் மேத்தாவால் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை பரிந்துரைக்கப்பட்டது

2. அசோக் மேத்தாவால் இரண்டடுக்கு பஞ்சாயத்து முறை பரிந்துரை செய்யப்பட்டது

மேலே உள்ள வாக்கியங்களில் சரியான வற்றைத் தேர்ந்தெடு

(a) 2 மட்டும் (b) 1 மட்டும்

(c) இரண்டும் (d) எதுவுமில்லை

128.எது சரியான கூற்று

1. அட்டவணைப் பகுதியின் எல்லைகளை நாடாளுமன்றம் கூட்டலாம் அல்லது குறைக்கலாம்

2. அட்டவணைப்பகுதி என அறிவிக்கும் அதிகாரத்தை குடியரசுத்தலைவர் பெற்றுள்ளார்

மேலே உள்ள வாக்கியங்களில் சரியான வற்றைத் தேர்ந்தெடு

(a) 1 மட்டும் (b) 2 மட்டும்

(c) இரண்டும் (d) எதுவுமில்லை

129.ஒரு மாவட்டத்தின் தலைமை செய லாட்சித்துறை தலைவர் யார்?

(a) மாவட்ட ஆட்சியர்

(b) தலைமைச் செயலர்

130. நீதிப்பேராணைகளை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் அதிகாரம் பெற்றிருப் பது இதன் மூலமாக

(a) அரசியலமைப்பு சட்டம் 126

(b) அரசியலமைப்பு சட்டம் 226

(c) அரசியலமைப்பு சட்டம் 32

(d) அரசியலமைப்பு சட்டம் 132

131.குடியரசுத் தலைவரின் தடுப்பதிகார உரிமைகளில் உள்ளடங்காதவை?

(a) முழுமையான தடுப்பதிகார உரிமை

(b) தகுதியான தடுப்பதிகார உரிமை

(c) தற்காலிக தடுப்பதிகார உரிமை

(d) மறைமுக உரிமை

132. கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆளுநர் பற்றிய தகவல்களில் சரியானவை?

1. இவர் அரசியலமைப்பின் ரீதியாக ஒரு மாநிலத்தின் தலைவராவார்

2. இவர் மத்திய அரசின் பிரதிநிதியாவார்.

சரியான விடையைத் தேர்வு செய்க:

(a) 1 மட்டும் (b) 2 மட்டும்

(c) இரண்டும் (d) எதுவுமில்லை

133.ஒரு பொருள் பூமியிலிருந்து நிலவுக்கு கொண்டு செல்லப்பட்டால் அதன்

1. நிறை மாறுபடும் ஆனால் எடை மாறாது

2. நிறையும், எடையும் மாறுபடும்

3. நிறைமாறாது எடை மாறும்

4. அடர்த்தி மாறாது

இவற்றுள் எது அல்லது எவை சரி?

(a) 1 மட்டும் (b) 2 மட்டும்

(c) 3 மற்றும் 4 (d) 2 மற்றும் 4

134.குளிர்பதனப்பெட்டியில் உறைபெட்டி (Freezer) மேற்பகுதியில் பொருத்தப்படுகிறது.

(a) அடிப்பகுதியில் உள்ள சூடான கம்ப் ரஸருக்கு தொலைவில் வைக்கப்பட வேண்டியது

(b) உகந்தது என்பதால்

(c) உட்பகுதி முழுவதையும் குளிரூட்டும் பொருட்டு

(d) சிறப்பான பணி எதுவுமில்லை.

135.மாக் (Mach) எண் எவற்றின் வேகத்து டன் தொடர்புடையது?

(a) ஒலி (b) கப்பல்கள்

(c) ஆகாய விமானம். (d) விண்வெளி ஓடம்

136.பூமியும் நிலவும் சூரியனில் இருந்து சமதூரத்தில் இருந்தாலும் பூமி நிலவை விட அதிகம் வெப்பமாக இருக்கக் காரணம்

(a) பூமியை விட நிலவு சிறியது

(b) நிலவு நீண்ட இரவுகளைக் கொண்டது

(c) நிலவுக்கு வளிமண்டலம் இல்லை

(d) நிலவின் பரப்பு இருளானது

137.கணினியில் பயன்படும் ஐஊ சில்லுகள் எதனால் உருவாக்கப்படுகின்றன?

(a) காரீயம் (b) சிலிக்கான்

(c) குரோமியம் (d) தங்கம்

138.சில நைட்ரஜன் குறைபாடு உள்ள தாவரங்கள், பூச்சிகளை உண்டு தன் நைட்ரஜன் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது. கீழ்கண்ட தாவரங்களில் எது எத்தகைய தாவரமாகும்?

1. பிளாடர் வார்ட்

2. ஹார்ள்வார்ட்

3. பட்டர்வார்ட்

4. ஸ்பைடர் வார்ட்

மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை சரியானவை?

(a) 1 மற்றும் 3 (b) 1 மற்றும் 4

(c) 2 மற்றும் 3 (d) 2 மட்டும்

குறியீடுகளைத் தேர்ந்தெடு:

139.கார்பனை எங்கிருந்து தாவரங்கள் பெறுகின்றன.

(a) சுற்றுச்சூழல் கார்பன்-டை ஆக்ஸைடு.

(b) கார்பன் மோனாக்சைடு.

(c) மண்ணில் இருந்து பெறுவது.

(d) கனிம கார்பன் மண்ணில் பெறுவது.

140.கர்ப்பகாலத்தில் கார்பஸ் லூடியம், அதிக அளவிலான ப்ரொஜஸ்டிரோனை சுரந்து அவை கர்ப்பப்பையில் உள்ள என்டோமெட்ரியம் வளர உதவி பின் திடீரென்று தேய்ந்து எத்தனை வாரத்தில் செயல்படும்

(a) 14வது வாரம் (b) 16வது வாரம்

(c) 11வது வாரம் (d) 12வது வாரம்

141. சிபிலிஸ் எனும் கலவியால் பரவும் நோய் எவற்றால் உண்டாகும்.

(a) வைரஸ் (b) பாக்டீரியா

(c) பூஞ்சை (d) புரோட்டோசோவான்

விடைகள்: 110.b 111.c 112.b 113.c 114.a 115.d 116.b 117.a 118.c 119.c 120.a 121.b 122.c 123.b 124.b 125.b 126.a 127.c 128.b 129.a 130.c 131.b 132.c 133.c 134.c 135.a 136.c 137.b 138.a 139.a 140.d 141.b

எம்.கார்த்திகேயன், கல்வி ஆலோசகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!