Tnpsc

Tnpsc exam General Knowledge Notes Material expected questions Part -5

Tnpsc exam General Knowledge Notes Material expected questions Part -5

ஒரு சில கேள்விகள், பதில்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்து திருத்தம் செய்ய உதவவும்.

142. அதிகளவில் சாராயத்தை உட்கொள் ளும் மனிதன் எதனால் இறப்பார்?

(a) இரத்தப் புற்றுநோய்

(b) சிர்ரஹோசிஸ்

(c) கல்லீரல் & வயிற்றுப்புற்றுநோய்

(d) இதய சதைகள் வலுவடைந்து மாரடைப்பை உண்டாக்குதல்

143. எரிவதற்கு உதவும் காற்றிலுள்ள வாயு

(a) நைட்ரஜன்

(b) ஹீலியம்

(c) ஆக்சிஜன்

(d) ஹைட்ரஜன்

144. நிழல்படத் தொழிலில் (photography) பயன்படுவது

(1) வெள்ளி புரோமைடு (2) சோடியம் தயோ சல்பெட்டு

(a) 1 மட்டும்

(b) 2 மட்டும்

(c) 1 மற்றும் 2

(d) எதுவுமில்லை

145. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவு இத்தனை அளவுக்குக் குறையக் கூடாது

(a) 4

(b) 3

(c) 5

(d) 2

146. சிரிக்கும் வாயு என்பது

(a) NO (b) N2O2

(c) N2O (d) N2O5

147. GDP-யின் பகுதிகள் (Components)

1. நுகர்வோர் செலவினங்கள்

2. அரசு செலவினங்கள்

3. தொழில் செலவினங்கள்

4. தொழில் முதலீடுகள்

சரியானவற்றைத் தேர்ந்தெடு

(a) 1 மற்றும் 2

(b) 3 மட்டும்

(c) 2 மற்றும் 4

(d) இவை அனைத்தும்

148. தேசிய வருமானத்தைக் கணக்கிட 1949 ஆம் வருடம் எந்தக் குழு அமைக்கப்பட்டது?

(a) தேசிய வருமான கணக்கீட்டு முறை

(b) தேசிய வருமான அலகு

(c) தேசிய வருமான குழு

(d) மத்திய புள்ளியியல் நிறுவனம்

149. எது மூலதனசெலவினம் இல்லை?

(a) அரசின் கடன்பட்டுவாடா.

(b) அரசின் திட்டமிட்ட செலவினம்

(c) கடன் மீட்பு.

(d) பொதுசேவைகள்

150. இந்தியாவில் எந்த வகையான வரு மானவரி முறை பின்பற்றப்படுகிறது?

(a) விகிதாச்சார வரி.

(b) முற்போக்கான வரி.

(c) பிற்போக்கான வரி.

(d) மறுபங்கீட்டு வரி

151. கீழே உள்ளவற்றை கருத்தில் கொள்க.

1. வளர்ந்த நாடுகளில் அதிகமான மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர்.

2. தொழிற்சாலைகளினால் கிராமத்தில் உள்ள மக்கள் நகரங்களை நோக்கி வருகின்றனர்.

சரியான குறியீட்டை தேர்ந்தெடுக்கவும்.

(a) 1 மட்டும்

(b) 2 மட்டும்

(c) 1 மற்றும் 2

(d) இதில் எதுவுமில்லை.

152. பின்வரும் வாக்கியங்களைக் கருத்தில் கொள்க

1. கிழக்குத் தொடர்ச்சி மலை, மேற்கு தொடர்ச்சி மலையை விட தாழ்வானது அதன் உயரமான சிகரம் ஆனைமுடி.

2. தக்காண பீடபூமியில் உள்ள ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உரு வானவை ஆகும்.

மேலே உள்ளவற்றில் எது தவறானது?

(a) 1 மட்டும்

(b) 2 மட்டும்

(c) 1ம் 2ம்

(d) 1ம் இல்லை 2ம் இல்லை

153. உசாரா மண்ணில் அதிகம் காணப் படுவது?

(a) சோடியம்

(b) பொட்டாசியம்

(c) மக்னீசியம்

(d) அனைத்தும்

154. கீழே உள்ளவற்றை கருத்தில் கொள்க

1. முதல் ஈய உருக்கு ஆலை பீகாரில் தொடங்கப்பட்டது

2. நாட்டில் 4 துத்தநாக உருக்காலைகள் உள்ளன.

இதில் எது சரி?

(a) 1 மட்டும் (b) 2 மட்டும்

(c) 1 மற்றும் 2 (d) இரண்டும் இல்லை

155. இவற்றில் யார் / எது முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை குழுவுக்கு பொறுப்பானது?

(a) ஆளுநர் (b) குடியரத்தலைவர்

(c) மாநில சட்டமன்றம் (d) மாநில மக்கள்

156. கீழ்க்காணும் தொடரினை கருத்தில் கொள்க

1. குடியரசுத் தலைவரால் சட்டமன்றத்திற்கு மறு பரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பப்பட்ட மசோதா மீண்டும் 14 மாதத்துக்குள் அனுப்ப வேண்டும்.

2. பண மசோதாவின் மீது குடியரசுத் தலைவர் தனது அனுமதி கொடுக்காமல் நிறுத்தி வைக்கலாம்.

எது சரியான கூற்று?

(a) 1 மட்டும் (b) 2 மட்டும்

(c) 1 மற்றும் 2 (d) எதுவுமில்லை

157. அரசியலமைப்பு திருத்த வரைமுறைப் பற்றி கூறும் ஷரத்து

(a) ஷரத்து 356 (b) ஷரத்து 368

(c) ஷரத்து 370 (d) ஷரத்து 353

158. மொய்யாறு எதன் உபநதியாகும்?

(a) தாமிரபரணி (b) பவானி

(c) வைகை (d) காவேரி

159. கடலோர மாவட்டங்கள் மழைக்காக அதிகம் நம்பியிருப்பது

(a) காற்றழுத்த தாழ்வுநிலை

(b) புயல் மழை

(c) இரண்டையும்

(d) எதுவுமில்லை

160. பின்வரும் எந்த பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைகளும், கிழக்கு தொடர்ச்சி மலைகளும் ஒன்றிணை கின்றன?

(a) ஜவ்வாது மலைகள்

(b) சேர்வராயன் மலைகள்

(c) நீலகிரி மலைகள்

(d) குன்டா மலைகள்

161. பொருத்துக

A. சந்திர குப்த மௌரியர் – 1. கிறிஸ்தவம்

B. அசோகர் – 2. அஜீவிகா

C. பிந்துசாரா – 3. புத்த மதம்

D. அலெக்சாண்டர் – 4. சமணம்

குறியீடுகளை தேர்ந்தெடு:-

A B C D

(a) 4 1 2 3

(b) 1 2 3 4

(c) 1 4 2 3

(d) 4 3 2 1

162. போர்ச்சுகீசியக் கடல் பயணியான வாஸ்கோடகாமா இந்தியா வரு வதற்கு வழிகாட்டியவர்

(a) அப்துல் மஸ்ஜித் (b) முகமது

(c) கொலம்பஸ் (d) அப்துல் சமந்த்

163. பொருத்துக

A. முதற் சங்கம் – 1. கபாடபுரம்

B. இரண்டாம் சங்கம் – 2. மதுரை

C. தொல்காப்பியம் – 3. தென் மதுரை

D. மூன்றாம் சங்கம் – 4. தொல்காப்பியர்

குறியீடுகளைத் தேர்ந்தெடு:-

1.வெள்ளி புரோமைடு

A B C D

(a) 2 1 4 3

(b) 3 1 4 2

(c) 3 2 4 1

(d) 1 2 4 3

164. நான்காவது புத்த மாநாடு யாரால் நடத்தப்பட்டது?

(a) வசுமித்ரா (b) அஸ்வகோஷ்

(c) அசோகா (d) அஜாதசத்ரு

165. இரண்டாம் புலிகேசி எந்த பல்லவ அரசரால் தோற்கடிக்கப்பட்டார்

(a) முதலாம் நரசிம்மவர்மன்

2. சோடியம் தயோசல்பேட்டு

(b) முதலாம் மகேந்திரவர்மன்

(c) சிம்ம விஷ்ணு

(d) இரண்டாம் நந்திவர்மன்

166. சரியான பொருத்தத்தை கண்டுபிடி

(a) சேக்கிழார் – சீவகசிந்தாமணி

(b) ஜெயங்கொண்டார் – மூவருலா

(c) ஒட்டக்கூத்தர் – கலிங்கத்துப்பரணி

(d) புகழேந்தி நளவெண்பா

167. கீழ்காணும் வரிகளைக் கவனத்தில் கொள்க.

1. இவர் லாக்தாதா அல்லது லாக் பாக்ஸ் என்று அழைக்கப்பட்டார்

(a) 1 மட்டும் (b) 2 மட்டும்

2. இவர் ஹசன் நிஜாமி என்ற அறிஞரை ஆதரித்தார்

3. இவர் குதுப்மினாரை முழுமையாகக் கட்டினார்

4. போலோ விளையாட்டின் போது குதிரை யிலிருந்து கீழே விழுந்து இறந்தார்

மேலுள்ளவற்றில் எது குத்புதீன் ஐபக் பற்றிய சரியான கூற்று ஆகும்.

(a) 1, 3, 2 (b) 1, 2, 3

(c) 1, 2, 4 (d) அனைத்தும்

168. ஜிஸியா தொடர் பான பின்வரும் கூற்றுகளைக் கவனத்தில் கொள்க

1. ஜிஸியா தொடக்கத்தில் நிலவரியின் அங்கமாக வசூலிக்கப்பட்டது

2. பிரோஸ் துக்ளக் இதை நிலவரியில் இருந்து பிரித்தார்

3. பிரோஸ் துக்ளக் ஜிஸியாவை தனி வரியாக வசூலித்தார்

4. பிராமணர்கள் ஜிஸியா வரி செலுத்து வதில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டார்கள்

சரியானவற்றை தேர்ந்தெடுக்க

(a) 1, 2, 3 (b) 2, 3, 4

(c) 1, 2, 4 (d) அனைத்தும்

169. அன்னி பெசன்ட் அம்மையார் பிரம்ம ஞான சபையின் தலைவரான ஆண்டு

(a) 1897 (b) 1875

(c) 1907 (d) 1917

170. எதற்காக ரபீந்திரநாத் தாகூர் தனது “நைட்குட்” பட்டத்தைத் துறந்தார்

(a) கிலாபாத் இயக்கம்

(b) ஜாலியன் வாலாபாக் படுகொலை

(c) ரௌலட் சட்டம்

(d) எதுவுமில்லை

171. பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்க

1. டொமினியன் அந்தஸ்தை முக்கிய மான கோரிக்கையாக அறிவித்தல்

2. மொழிவாரியான மாகாணங்களை உருவாக்குதல்

3. மத்தியில் முழு பொறுப்புள்ள அரசாங் கத்தை அமைத்தல்

மேற்காண்பவைகளில் நேரு அறிக்கை யின் மூலம் சமர்பிக்கப்பட்ட கோரிக்கை எது? எவை?

(a) 1 மட்டும் (b) 1 மற்றும் 3

(c) 2 மற்றும் 3 (d) இவை அனைத்தும்

172. பொருத்துக

A. 3வது வட்ட மேசை மாநாடு – 1.1934

B. பூனா ஒப்பந்தம் – 2. 1931

C.1வது வட்ட மேசை மாநாடு – 3. அம்பேத்கர்

D.சட்ட மறுப்பு இயக்கத்தை திரும்ப பெறுதல் – 4. 1932

A B C D

(a) 1 2 3 4

(b) 4 1 2 3

(c) 4 3 2 1

(d) 1 3 4 4

எம்.கார்த்திகேயன், கல்வி ஆலோசகர்

விடைகள்: 142.b 143.c 144.c145.a 146.c 147.b 148.c 149.c 150.b 151.c 152.a 153.d 154.d 155.c 156.b 157.b 158.b 159.c 160.c 161.d 162.b 163.b 164.a 165.a 166.d 167.c 168.d 169.c 170.b 171.d 172.b

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!