Tnpsc

Tnpsc exam General Knowledge Notes Material expected questions Part -6

Tnpsc exam General Knowledge Notes Material expected questions Part -6

ஒரு சில கேள்விகள், பதில்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்து திருத்தம் செய்ய உதவவும்.

173. இந்திய தொகுப்பு நிதியிலிருந்து (Consolidate Fund) செலவு செய்ய அனுமதி அளிப்பது யார்?

(a) குடியரசுத் தலைவர்

(b) பாராளுமன்றம்

(c) கணக்கு மற்றும் தணிக்கை தலைமை அலுவலர்

(d) நிதியமைச்சர்

174. திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது?

(a) அமைச்சரவை தீர்மானம்

(b) பாராளுமன்ற தீர்மானம்

(c) குடியரசுத் தலைவரால்

(d) பிரதம அமைச்சரால்

175. தேர்தல் பிரச்சினைகளை தீர்ப்பது

(a) குடியரசுத் தலைவர்

(b) லோக் சபை

(c) தேர்தல் ஆணையம்

(d) பிரதம அமைச்சரால்

176. கீழ்காணும் வாக்கியங்களை கவனி.

1. ஆளுநர் அனைத்து பண மசோதாக் களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார்.

2. சட்டப்பேரவையில் பண மசோதா குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்க மாட்டார்.

மேலே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் எந்த வாக்கியம் சரி

(a) 1 மட்டும்

(b) 2 மட்டும்

(c) 1 மற்றும் 2

(d) இரண்டும் இல்லை.

177. பின்வரும் வாக்கியங்களில் காண்க

1. இந்தியாவில் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன

2. ஹரியாணா மற்றும் சண்டிகருக்கு பொதுவான உயர்நீதிமன்றம் உள்ளது

3. டெல்லிக்கு தனியாக உயர்நீதிமன்றம் உள்ளது

மேலே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் எந்த வாக்கியம் சரி

(a) 2 மற்றும் 3

(b)1 மட்டும் 2

(c) 1, 2, 3

(d) 3 மட்டும்

178. கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி:

கூற்று (A) : அரசியலமைப்பை திருத்தம் செய்யும் வரம்பற்ற அதிகாரத்தை பாராளு மன்றம் பெற்றிருக்கவில்லை

காரணம் (R) : அடிப்படை கட்டமைப்பு மாறாமல் அரசியலமைப்பின் எந்த பகுதியையும் திருத்தும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடு

(a) A சரி ஆனால் R தவறு

(b) A மட்டுமே சரி

(c) R மட்டுமே சரி

(d) A மற்றும் R இரண்டும் சரி. R என்பது A க்கு சரியான விளக்கம்

179. 73-வது மற்றும் 74-வது சட்ட திருத் தம் தொடர்பாக எது தவறான கூற்று

1. உள்ளாட்சி அரசாங்கத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு கட்டாயமாக்கியது

2. மாநிலம், பின் தங்கிய வகுப்பு சார்ந்த சட்டங்களை உள்ளாட்சி அரசுக்காக இயற்றலாம்

மேலே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் எந்த வாக்கியம் சரி

(a) 1 மட்டும் (b) 2 மட்டும்

(c) இரண்டும் (d) எதுவுமில்லை

180. புதிய மாநிலங்களை உருவாக்க தேவையான பெரும்பான்மை

(a) சிறப்பு பெரும்பான்மை

(b) சாதாரண பெரும்பான்மை

(c) சிறப்பு பெரும்பான்மை மற்றும் மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளுதல்

(d) மேற்கண்ட எதுவுமில்லை

181. எந்த ஷரத்து மற்றும் பகுதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கிறது

(a) ஷரத்து 370 பகுதி XXII

(b) ஷரத்து 370 பகுதி XXI

(c) ஷரத்து 356 பகுதி XXI

(d) ஷரத்து 358 பகுதி XXII

182. மொழிவாரி சிறுபான்மையினர் ஆணையம் எப்போது உருவாக்கப் பட்டது? எங்கு அமைந்துள்ளது

(a) 1950, புதுடெல்லி (b) 1957 அலகாபாத்

(c) 1957 ஜம்மு (d) 1950 இம்பால்

183. எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ருக்கான ஆணையங்கள் தனித் தனியாக பிரிக்கப்பட்டன?

(a) 89-வது சட்டத்திருத்தம் 2003

(b) 99-வது சட்டத்திருத்தம் 2006

(c) 79-வது சட்டத்திருத்தம் 1998

(d) 86-வது சட்டத்திருத்தம் 2002

184. ஒரு பொருளின் எடை

1. பூமியின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

2. துருவங்களில் அதிகமாக இருக்கும்

3. நிலநடுக்கோட்டுப் பகுதியில் அதிகமாக இருக்கும்.

4. சமவெளியை விட மலைகளில் குறை வாக இருக்கும்

மேற்கண்டவற்றுள் எது அல்லது எவை சரி?

(a) 1 மட்டும் (b) 2 மற்றும் 4

(c) 3 மற்றும் 4 (d) எதுவுமில்லை

185. ஓர் அறையிலுள்ள உலோகத்தால் ஆன மேஜையின் மீது வைக்கப்பட் டுள்ள காபி கீழ்க்காணும் எந்த முறை களில் வெப்பத்தை இழக்கின்றது.

(a) வெப்பக்கடத்தல் மற்றும் வெப்பக்கதிர் வீசல்

(b) வெப்பக்கடத்தல் மற்றும் வெப்பச் சலனம்

(c) வெப்பச்சலனம் மற்றும் வெப்பக்கதிர் வீசல்

(d) வெப்பக்கடத்தல், வெப்பச்சலனம், வெப்பக்கதிர்வீசல் மற்றும் ஆவியாதல்

186 மழை பெய்தபின் வானவில் எந்தப் பக்கம் தோன்றும்?

(a) சூரியனின் திசை நோக்கி

(b) சூரியனுக்கு எதிர்த் திசையில்

(c) எந்த பக்கம் வேண்டுமானாலும் (சூரியன் எங்கிருந்தாலும்)

(d) சூரியன் இல்லாதபோது.

187. சூரிய கிரகணம் நடப்பது எப்போது

(a) சூரியனுக்கும், பூமிக்கும் நடுவே நிலவு வரும்போது.

(b) சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே பூமி வரும்போது.

(c) பூமிக்கும் நிலவுக்கும் நடுவே சூரியன் வரும்போது.

(d) சூரியன், நிலவு, பூமி நேர்கோட்டில் அமையாதபோது.

188. ஒரு காரில் குளிர்விப்பானின் பணி என்ன?

1. நீரின் கொதி நிலையை அதிகரிக்கிறது.

2. நீரின் உறைநிலையை குறைக்கிறது.

3. என்ஜினில் உள்ள உலோகங்கள் துருப் பிடிப்பதை குறைக்கிறது.

4. பெட்ரோல் உபயோகத்தைக் குறைக் கிறது.

(a) 1 மற்றும் 2

(b) 1,2 மற்றும் 3

(c) 1,2 மற்றும் 4

(d) 1,3 மற்றும் 4.

189. மண்ணீரல் (Spleen) செரிமான செயல் பாடு கீழ்வரும் எதோடு தொடர்புடையது?

(a) டியோடினல் லூப்

(b) ஈரல் (Liver)

(c) கணையம் (Pancreas)

(d) சிறுசீரகம் (Kidney)

190. ரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை குறைக்கும் ஹார்மோனான கால்சிடோமினை சுரக்கும் சுரப்பி எது?

(a) அட்ரினல்

(b) பாரா தைராய்டு

(c) தைராய்டு

(d) ஹைபோ தலாமஸ்

191. பிறந்த குழந்தைக்கு மூன்று அடுக்கு நோய் எதிர்ப்பு மருந்து எதை எதிர்க்க உதவும்?

(a) இருமல், டெடானஸ் மற்றும் அம்மை

(b) இருமல், டெடானஸ் மற்றும் டிப்தீரியா

(c) டெடானஸ், டிப்தீரியா, மீசில் (அம்மை) மற்றும் டிப்தீரியா

(d) டெடானஸ், டிப்தீரியா, சின்னம்மை மற்றும் ருபெல்லா

192. அற்புத மருந்து என பெயர் கொண்டது எது?

(a) ஆஸ்பிரின்

(b) பெனிசிலின்

(c) கிளைகோஹான்

(d) கிளைகோஜன்

193. கார்பொரண்டம் எதன் சேர்மம்?

(a) Ca

(b) Ge

(c) Si (d) S

(d) பிரதம அமைச்சரால்

194. சலவை சோடா என்பது

(a) சோடியம் குளோரைடு

(b) நீரேறிய சோடியம் கார்பனேட்டு

(c) சோடியம் பைகார்பனேட்டு

(d) கால்சியம் கார்பனேட்டு

195. நகர விநியோகத்துக்கான குடிநீர் சாதாரணமாக சுத்திகரிக்கப்படுவது

(a) குளோரினேற்றம்

(b) காய்ச்சி வடித்தல்

(c) வடிகட்டுதல்

(d) இறுத்தல் (Decantation)

196 மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஊதியம் எந்த ஆண்டு ஊதிய சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

(a) 1948 (b) 1949 (c) 1959 (d) 1958

197. எப்பொழுது சுதந்திரமான பண மாற்று நிர்வாக அமைப்பு தொடங்கப்பட்டது.

(a) 1990ம் வருடம். (b) 1992ம் வருடம்.

(c) 1993ம் வருடம். (d) 1995ம் வருடம்.

198. கீழே உள்ள நாட்டில் அதிக அளவு வெளிநாட்டு பணம் வைத்திருத்கக் கூடிய நாடு.

(a)ரஷ்யா (b)பிரேசில் (c)சீனா (d)ஜப்பான்

199. மற்ற நாட்டு பணத்துடன் ஒரு நாட்டின் பண மதிப்பு தொடர்ந்து மதிப்பு குறைந்து செல்வது என்பது?

(a) பணத்தின் மதிப்பை குறைத்தல்.

(b) பணத்தின் மதிப்பை உயர்த்தல்.

(c) பணத்தின் மதிப்பு சிறிதளவு குறைதல்.

(d) பணத்தை மறுமதிப்பு செய்தல்

200. கிராமத் தூய்மை திட்டம் தொடங் கப்பட்ட ஆண்டு.

(a) 2003 (b) 2002

(c) 2012 (d) 2013

201. கீழே உள்ள மாநிலங்களில் எந்த மாநிலம் மைக்கா உற்பத்தியின் தலை மையிடம் என அழைக்கப்படுகிறது?

(a) ராஜஸ்தான் (b) ஜார்க்கண்ட்

(c) ஒடிசா (d) பீகார்

202. கீழே உள்ளவற்றில் எந்த மாநிலத்தில் ஊதா மலை அமைந்துள்ளது?

(a) மிசோரம் (b) மணிப்பூர்

(b) லோக் சபை

(c) தாய்லாந்து

(d) திரிபுரா

203. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது நறுமணங்களின் அரசி எனப்படுகிறது?

(a) மிளகு

(b) ஏலக்காய்

(c) மிளகாய்

(d) இஞ்சி

204. கீழே உள்ள வாக்கியங்களை வெள்ளியுடன் ஒப்பிடவும்

1. அதிக அளவு வெப்பம் மற்றும் மின்சாரத்தை கடத்துகிறது

2. தங்கத்திற்கு அடுத்தபடியாக நாணய மதிப்பு உள்ள வெள்ளி ஒரு கனிமமாகும்

மேலே உள்ள வாக்கியங்கள் எது சரி?

(a) 1 மட்டும் (b) 2 மட்டும்

(c) 1 மற்றும் 2 (d) இவற்றில் எதுவுமில்லை

எம்.கார்த்திகேயன், கல்வி ஆலோசகர்

விடைகள்: 173.b 174.a 175.d 176.d 177.a 178.d 179.a 180.b 181.b 182.b 183.a 184.c 185.d 186.b 187.a 188.b 189.c 190.c 191.b 192.a 193.b 194.b 195.a 196.a 197.b 198.c 199.b 200.a 201.b 202.a 203.b 204.c

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!