Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 8

Tnpsc General Tamil Previous Question Paper 8

Tnpsc General Tamil Previous Question Paper 8: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

“காத்திருந்து ஏமாந்து போவது”

(அ) மழைமுகம் காணாப் பயிர் போல

(ஆ) இலவு காத்த கிளி போல

(இ) அனலிடைப்பட்ட புழு போல

(ஈ) கிணற்றுத் தவளை போல

விடை மற்றும் விளக்கம்

(ஆ) இலவு காத்த கிளி போல

விளக்கம்:

உவமை பொருள்

“இலவுகாத்த கிளி போல” ஏமாற்றம்

“மழைமுகம் காணாப்பயிர் போல” வாட்டம்

“அனலிடைப்பட்ட புழு போல” வேதனை

“கிணற்றுத் தவளை போல” அறியாமை

2. “தீண்டிற்று” என்ற வினைமுற்றுச் சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்க:

(அ) தீண்

(ஆ) தீண்டி

(இ) தீ

(ஈ) தீண்டு

விடை மற்றும் விளக்கம்

(ஈ) தீண்டு

விளக்கம்:

தீண்டு-வேர்ச்சொல்.

தீண்டிய-பெயரரெச்சம்.

தீண்டி- வினையெச்சம்

தீண்டீற்று, தீண்டினான்-வினைமுற்றுகள்

தீண்டியவள்-வினையாலணையும் பெயர்

தீண்டுதல்-தொழிற்பெயர்

3. இரண்டு அடி முதல் பன்னிரண்டு அடி வரை வரும் பா

(அ) வெண்பா

(ஆ) ஆசிரியப்பா

(இ) வஞ்சிபா

(ஈ) கலிப்பா

விடை மற்றும் விளக்கம்

(அ) வெண்பா

விளக்கம்:

வெண்பா – இரண்டடிக்குக் குறையாமல் பன்னிரண்டு அடிகளுக்கு மிகாமல் அமையும்.

ஆசிரியப்பா- மூன்றடிக்குக் குறையாமல் எத்தனை அடிகள் வேண்டுமானாலும் பெற்றுவரும்

வஞ்சிப்பா – மூன்றடி சிறுமை கொண்டு பல அடிகளில் அமையும்.

கலிப்பா – நான்கு சீர் அடியாய் அமையும்.

4. Whats App” என்ற சொல், பார்க்கவும் கேட்கவும் படிக்கவுமான மின்னஞ்சல் குறுஞ்செய்தி வசதியை முனைவர் ம.இராசேந்திரன் ———– என மொழி பெயர்த்துள்ளார்.

(அ) தூதலாவி

(ஆ) கட்செவி அஞ்சல்

(இ) எண்ணா நகலி

(ஈ) தூது செயலி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) கட்செவி அஞ்சல்

5. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய் எழுத்துகளின் எண்ணிக்கை

(அ) 8

(ஆ) 10

(இ) 11

(ஈ) 12

விடை மற்றும் விளக்கம்

(இ) 11

விளக்கம்:

ஒற்றளபெடை: செய்யுளில் ஓசை குறையுமிடத்தில் ஒற்றெழுத்துகள் மிக்கு ஒலிப்பதே ஒற்றளபெடையாகும். ஒற்றளபெடையில் மிக்கு ஒலிக்கும் எழுத்துகள் மொத்தம்-11.

அவையாவன: ங,ஞ,ண,ந,ம,ன,வ,ய,ல,ள மற்றும்ஃ

எ.கா: ”மடங்ங் கலந்த மனனே

விடங்ங் கலந்தானை வேண்டு”

“கண்ண கருவிளை கார்முல்லை கூரெயிறு பொன்ன் பொறிகணங்கு போழ்வா யிலவம்பூ”

6. சரியான விடையைத் தேர்வு செய்க.

(அ) இயல், இசை, நாடகம் முதலான முத்தமிழை வளர்த்தல் வேண்டும்

(ஆ) இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்

(இ) இயல், இசை, நாடகம் முதலிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்.

(ஈ) இயல், இசை, நாடகம் போன்ற முத்தமிழை வளர்த்தல் வேண்டும்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்

விளக்கம்:

ஒரு தொகுப்பில் உள்ளவற்றில் அதனோடு தொடர்புடைய அனைத்தையும் முழுமையாகச் சுட்டும் போது “ஆகிய” என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

முழுமையாகச் சுட்டாத போது “முதலிய” என்னும் சொல்லைப் பயன்படுத்தவேண்டும்.

7. கோடிட்ட இடத்தில் உரிய விடையைத் தேர்ந்து எழுதுக:

“கூம்பு” என்பது —– பெயர் ஆகும்.

(அ) அளவுப்பண்பு

(ஆ) சுவைப்பண்பு

(இ) வடிவப்பண்பு

(ஈ) நிறப்பண்பு

விடை மற்றும் விளக்கம்

(இ) வடிவப்பண்பு

விளக்கம்:

பண்பை உணர்த்தும் பெயர் பண்புப்பெயர் ஆகும். நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.

வடிவப் பண்பு – கூம்பு, வட்டம், சதுரம், செவ்வகம், கோளம், முக்கோணம்.

நிறப்பண்பு-வெண்மை, கருமை, செம்மை.

அளவுப்பண்பு-ஒன்று நாழி, உழக்கு, அரை, முக்கால்.

சுவைப்பண்பு-காரம், இனிப்பு, கசப்பு.

8. ஆற்றுவார் – அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு.

(அ) ஆற்+று+வார்

(ஆ) ஆற்+றுவார்

(இ) ஆற்று+வார்

(ஈ) ஆ+ற்று+வார்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஆற்+றுவார்

விளக்கம்:

சீர் அசை வாய்ப்பாடு

ஆற்/றுவார் நேர், நிரை கூவிளம்

9. கீழ்க்காணும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைத் தேர்ந்தெடு.

(அ) சுக்கு

(ஆ) சார்பு

(இ) உண்ணு

(ஈ) அரசு

விடை மற்றும் விளக்கம்

(இ) உண்ணு

விளக்கம்:

வல்லின மெய் எழுத்துகள் (க்,ச்,ட்,த்,ப்,ற்) மீது ஊர்ந்து வரும் உகரம் குற்றியலுகரமாகும். சுக்கு—க்+உ;

சார்பு—ப்+உ

அரசு—ச்+உ;

ஆனால் உண்ணு—ண்+உ

“ண்” மெல்லின மெய்யெழுத்தாகும்.

10. பொருள்கோள் வகைகளின் எண்ணிக்கை

(அ) 4

(ஆ) 6

(இ) 8

(ஈ) 10

விடை மற்றும் விளக்கம்

(இ) 8

விளக்கம்:

பொருள்கோள் எட்டு வகைப்படும்.

1.யாற்றுநீர்ப் பொருள்கோள். 2.மொழிமாற்றுப் பொருள்கோள். 3.நிரல் நிறைப்பொருள்கோள். 4.பூட்டுவிற் பொருள்கோள். 5.தாப்பிசைப் பொருள்கோள். 6.அளைமறிப் பாப்புப் பொருள்கோள். 7.கொண்டுகூட்டுப் பொருள்கோள். 8.அடிமறி மாற்றுப் பொருள்கோள்.

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

11. “அன்னபூரணி” எனும் புதின ஆசிரியர்

(அ) ஜெயகாந்தன்

(ஆ) அகிலன்

(இ) வைரமுத்து

(ஈ) க.சச்சிதானந்தன்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) க.சச்சிதானந்தன்

விளக்கம்:

க.சச்சிதானந்தன்: யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை இவரது ஊராகும். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளாராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.

படைப்புகள்: ஆனந்தத்தேன் (கவிதைத் தொகுதி), அன்னபூரணி (புதினம்), யாழ்ப்பாணக் காவியம்.

ஆசிரியர்: மகாவித்துவான் நவநீதக் கிருட்டிண பாரதியார்..

12. பொருத்துக:

நூல் புலவர்

1. தமிழியக்கம் – 1. பாரதியார்

2. சீட்டுக்கவி – 2. தோலாமொழித்தேவர்

3. சேக்கிழார் பிள்ளைத்தமிழ் – 3. பாரதிதாசன்

4. சூளாமணி – 4. மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

அ ஆ இ ஈ

(அ) 1 2 3 4

(ஆ) 2 4 1 3

(இ) 3 1 4 2

(ஈ) 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

(இ) 3 1 4 2

13. பொருத்துக:

நூல் புலவர்

1. பெரியபுராணம் – 1. திருத்தக்கத்தேவர்

2. இராமாயணம் – 2. உமறுப்புலவர்

3. சீறாப்புராணம் – 3. சேக்கிழார்

4. சீவகசிந்தாமணி – 4. கம்பர்

அ ஆ இ ஈ

அ. 3 4 2 1

ஆ. 2 4 3 1

இ. 4 2 1 3

ஈ. 3 2 4 1

விடை மற்றும் விளக்கம்

அ. 3 4 2 1

14. பொருத்துக

அ. வீரகாவியம் – 1. நா.காமராசன்

ஆ. இயேசு காவியம் – 2. சிற்பி பாலசுப்ரமணியம்

இ. ஒளிப்பறவை – 3. கண்ணதாசன்

ஈ. சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் – 4. முடியரசன்

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 3 2 1 4

(இ) 2 1 4 3

(ஈ) 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

(அ) 4 3 2 1

15. எச்.ஏ.கிருட்டிணனாருக்கு இலக்கணம் கற்பித்த ஆசிரியர் பெயர்

(அ) மாணிக்கவாசகத் தேவர்

(ஆ) சங்கர நாராயணர்

(இ) பிலவண சோதிடர்

(ஈ) தெய்வநாயகி

விடை மற்றும் விளக்கம்

(அ) மாணிக்கவாசகத் தேவர்

விளக்கம்:

எச்.ஏ.கிருட்டிணனாரின் ஆசிரியர்கள்:

தமிழிலக்கியங்கள்-கிருட்டிணாரின் தந்தை சங்கர நாராயணர்.

இலக்கணங்கள்-மாணிக்கவாசகத் தேவர்.

வடமொழி-பிலவணச் சோதிடர்.

16. சூடாமணி நிகண்டு-ஆசிரியர்

(அ) திவாகர முனிவர்

(ஆ) பிங்கலம்

(இ) வீரமண்டல புருடர்

(ஈ) காங்கேயர்

விடை மற்றும் விளக்கம்

(இ) வீரமண்டல புருடர்

விளக்கம்:

சூடமணி நிகண்டு என்னும் நூல் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந்நூல் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

17. “மொழிகளின் காட்சிச் சாலை இந்தியா” – இக்கூற்று யாருடையது?

(அ) பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்.

(ஆ) பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை

(இ) பேராசிரியர் சாலை.இளந்திரையன்

(ஈ) பேராசிரியர் சாலமன் பாப்பையா

விடை மற்றும் விளக்கம்

(அ) பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்.

விளக்கம்:

இந்திய நாட்டில் 1300-க்கும் மேற்பட்ட மொழிகளும் அதன் கிளை மொழிகளும் பேசப்பட்டு வருகின்றன. ஆதலால் இந்திய நாட்டை “மொழிகளின் காட்சி சாலை” என்று குறிப்பிட்டுள்ளார். மொழியியல் பேராசிரியர்.ச.அகத்தியலிங்கம்.

18. பொருத்துக

அ. மூதுரை 1.சிவப்பிரகாசர்

ஆ. வெற்றிவேற்கை 2. முனைப்பாடியார்

இ. நன்னெறி 3. அதிவீரராம பாண்டியர்

ஈ.அறநெறிச்சாரம் 4. ஒளவையார்

அ ஆ இ ஈ

(அ) 4 3 1 2

(ஆ) 2 3 1 4

(இ) 3 4 2 1

(ஈ) 4 1 2 3

விடை மற்றும் விளக்கம்

(அ) 4 3 1 2

19. “மத்தவிலாசம்” – என்னும் நாடக நூலை எழுதியவர்

(அ) இராஜஇராஜ சோழன்

(ஆ) இராஜேந்திரன் சோழன்

(இ) நந்தவர்மன்

(ஈ) மகேந்திரவர்மன்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) மகேந்திரவர்மன்

விளக்கம்:

முதலாம் மகேந்திரவர்மன்

மத்தவிலாச பிரகசனம் என்ற நாடக நூலை பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் எழுதினார். மேலும் இவர் இசையில் வல்லவர் என்பதால் “சங்கீர்ணசாதி” என்ற சிறப்புப் பெயரையும், ஓவியத்தில் வல்லவர் என்பதால் “சித்திரகாரப்புலி” என்ற சிறப்புப் பெயரையும் பெற்றுள்ளார்.

“தட்சணசித்திரம்” என்ற ஓவிய நூலுக்கு இம்மன்னன் எரை எழுதியுள்ளார்.

20. பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல்

(அ) குடும்பவிளக்கு

(ஆ) பாண்டியன் பரிசு

(இ) இருண்ட வீடு

(ஈ) கள்ளோ? காவியமோ?

விடை மற்றும் விளக்கம்

(ஈ) கள்ளோ? காவியமோ?

விளக்கம்:

கள்ளோ? காவியமோ? – மு.வரதராசனார்

1 2 3 4 5 6 7Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!