Tnpsc Group 2A Current Affairs Online Mock Test 1

Tnpsc Group 2A Current Affairs Online Mock Test 1

Tnpsc aspirants those who are searching for Tnpsc Group 2A Current Affairs Online Mock Test 1, can attend this model test. It is prepared for only tnpsc exams and it is collected from recent current affairs. These are expected questions for Tnpsc group 2A exam.

Tnpsc Group 2A Current Affairs Online Mock Test 1

Congratulations - you have completed Tnpsc Group 2A Current Affairs Online Mock Test 1. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கணக்குகளின் பொது கட்டுப்பாட்டாளர் (Controller General of Accounts – CGA) யார்?
A
K.Vinayak Rao
B
Anil Srivatsava
C
Jatindra Nath Swain
D
Anthony Lianzuala
Question 1 Explanation: 
விடை : D. Anthony Lianzuala இவர் இந்திய சிவில் கணக்கு அதிகாரியாக 1982 ல் பணிபுரிந்தார். மே 1 2017 முதல் இவர் CGAவாக பணிபுரிவார்.இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் நபராவார். சரத்து 150ன் படி CGA என்பது மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும்,ஜனாதிபதியின் அதிகாரத்திற்குட்பட்ட ஓர் கணக்கியல் ஆணையமாகும்.கணக்கியல் கட்டுப்பாட்டாளர் மற்றும் இந்தியாவின் பொது தணிக்கையாளரின் அறிவுரையின் பேரில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்குமான கணக்கியல் சம்பந்தப்பட்ட படிவங்களை இது வழங்கும்.
Question 2
மறைந்த புகழ்பெற்ற மலையேற்ற வீரரான Ueli Steck (40) எந்த நாட்டைச்சேர்ந்தவர்?
A
பிரான்ஸ்
B
ரஷ்யா
C
சுவிச்சர்லாந்து
D
ஜெர்மனி
Question 2 Explanation: 
விடை : C. சுவிச்சர்லாந்து புகழ்பெற்ற மலையேற்ற வீரரான இவர் ஏப்ரல் 30 2017 அன்று எவரெஸ்ட் சிகரத்தினருகில், 25,791 அடி உயர Nuptse குன்றை அடையும் முயற்சியில் நடந்த ஒரு விபத்தில் காலமானார். இவரின் வேகமான மலையேற்ற திறத்தால் இவரை “Swiss Machine” என்று அழைப்பர்.Berne’s Alps மலையை 2 மணி 47 நிமிடத்தில் கயிறுகள் ஏதும் பயன்படுத்தாமல் கடந்து சாதனை படைத்தார்.
Question 3
தெற்காசிய செயற்கைக்கோளான “GSAT-09” ISRO வின் எந்த விண்வெளிக்கலத்தின் மூலம் ஏவப்படுகிறது?
A
GSLV Mk-III
B
GSLV Mk-II
C
GSLV MK-IV
D
GSLV Mk-V
Question 3 Explanation: 
விடை : B. GSLV Mk-II இது SAARC நாடுகளின் பொருளாதாரத்தையும் வளர்ச்சியையும் உயர்த்தும் பொருட்டு May 5 2017 அன்று ஸ்ரீ ஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படுகிறது.இதன் எடை 2230 Kg ஆகும். கன சதுர வடிவம் கொண்ட இதன் வாழ்நாள் 12 வருடங்கள் ஆகும். இது தொலைத்தொடர்பு, பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளுக்கு பேருதவியாக இருக்கும்.இதன் மூலம் நேபால்,பங்களாதேஷ்,ஆப்கானிஸ்தான்,பூடான்,இலங்கை, மாலத்தீவு ஆகியவை பயன்பெறும்.
Question 4
முதன்முதலாக தூய்மை கங்கா உறுதிமொழி ஏற்பு நாள் (Ganga Cleanliness Pledge Day) எப்போது கடைபிடிக்கப்பட்டது?
A
May 2
B
May 5
C
May 4
D
May 3
Question 4 Explanation: 
விடை : A. May 2 2017 இது Namami Ganga திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக National Mission Clean Ganga(NMCG) அமைப்பினரால் May 2 2017 அன்று கடைபிடிக்கப்பட்டது.இந்நாள் Ganga Swachhta Sankalp நாள் எனவும் வழங்கப்படுகிறது.இது நாட்டின் 12 வேறு இடங்களிலும் அனுசரிக்கப்பட்டது. Ganga Vichaar Manch என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் நாட்டின் 30 வேறு இடங்களிலும் அனுசரிக்கப்பட்டது.
Question 5
இந்தியாவின் முதல் பார்வையற்றோருக்கான கால்பந்து அகாடமி (Blind Football Academy) எந்த மாநிலத்தில் அமையவுள்ளது?
A
தமிழ்நாடு
B
சிக்கிம்
C
உத்தர பிரதேசம்
D
கேரளா
Question 5 Explanation: 
விடை : D. கேரளா இந்தியாவிலேயே முதன்முறையாக பார்வையற்றோருக்கான கால்பந்து அகாடமி கேரள மாநிலம் கொச்சியில் அமையவுள்ளது. பார்வையற்றோருக்கான மறுவாழ்வு சமூகமும் (The Society for Rehabilitation of Visually Challenged(SRVC) & இந்திய பார்வையற்றோருக்கான அமைப்பும் (Indian Blind Federation) இணைந்து இந்த அமைப்பை தொடங்கியுள்ளன.இதன் நோக்கம் சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்கி, 2024 ல் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் அவர்களை பங்குகொள்ளச்செய்வதே ஆகும்.
Question 6
Centre for Media Studies (CMS)ன் கருத்துக்கணிப்பின் படி, இந்தியாவின் ஊழல் மிகுந்த மாநிலம் எது?
A
Andhra Pradesh
B
Maharashtra
C
Karnataka
D
Jammu and Kashmir
Question 6 Explanation: 
விடை: C. Karnataka "CMS India Corruption Study 2017"ன் கருத்துக்கணிப்பின் படி ஊழல் மிகுந்த மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்திலும், ஆந்திரா இரண்டாமிடத்திலும், அதனைத்தொடர்ந்து தமிழகம் மூன்றாமிடத்திலும் உள்ளது. இந்த கருத்துக்கணிப்பு 20 மாநிலங்களை உள்ளடக்கி நடந்தது. குறைந்த ஊழல் மிகுந்த மாநிலங்களாக இமாச்சலம், கேரளா, சட்டிஸ்கார் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தக்கணிப்பின் அறிக்கை, மூன்றில் ஒரு பங்கினர் தங்களது அரசங்கத்தேவையை பூர்த்திசெய்ய லஞ்சம் கொடுப்பதாக கூறுகிறது. லஞ்சம் கொடுத்த தொகை மட்டுமே தோராயமாக 6,350 கோடி மதிப்பு வரும் என கூறுகிறது இந்த அறிக்கை. இது 2015 ஆண்டின் அறிக்கையை ஒப்பட்டுப்பார்க்கும்போது 53% அதிகம் எனவும் கூறப்படுகிறது.
Question 7
"Mukthijodha Scholarship" திட்டத்தின் படி வங்காளதேசத்திற்கு இந்தியா தரும் நிதியளவு எவ்வளவு?
A
30 Crore
B
35 Crore
C
25 Crore
D
20 Crore
Question 7 Explanation: 
விடை: B. 35 Crore வங்காளதேசத்திலிருக்கும் சுதந்திர போராட்ட வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் விதமாக இந்திய அரசு 35 கோடி ரூபாயை இத்திட்டத்தின் மூலம் அளிக்கிறது.அதோடு 100 பேருக்கு இலவச மருத்துவமும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.இதைத்தவிர்த்து மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்திய மதிப்பில் ₹ 15370ம், கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ₹ 38,430ம் வழங்கப்படுகிறது.1971 சுதந்திர வீரர்களின் வழித்தோன்றலாக , 2006ல் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின் மூலம் இதுவரை 10,000த்திற்கும் மேலானோர் பயனடைந்துள்ளனர்.
Question 8
இந்தியாவின் முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பஞ்சாயத்து வார்டு, எந்த மாநிலத்தில் வரவுள்ளது?
A
அசாம்
B
கேரளா
C
குஜராத்
D
ராஜஸ்தான்
Question 8 Explanation: 
விடை: B. கேரளா அய்மனம் கிராம பஞ்சாயத்திலுள்ள வார்டு எண் 15 தான் இந்தியாவிலேயே முதன்முதலில் டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்ட பஞ்சாயத்து வார்டாகும்.இதனை மத்திய சமூக நீதி அமைச்சர் திரு.கிருஷ்ணன் பால் குஜர் தொடங்கிவைத்தார்.இதற்கான இணையத்தளம் www.digitalaymanam.com ஆகும்.இதில் அந்த வார்டு மக்களின் இரத்த வகை மற்றும் தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
Question 9
எப்போது இந்தியாவில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது?
A
April 26
B
April 24
C
April 28
D
April 30
Question 9 Explanation: 
விடை: D. April 30 குழந்தைகளின் கல்வி அவசியத்தை உணர்த்தும் விதமாகவும், குழந்தை தொழிலாளர்கள் படும் துன்பத்தை உணர்த்தும் விதமாகவும்,விழிப்புணர்வு நாளாக இது கடைபிடிக்கப்படுகிறது.மேலும், சர்வதேச தொழிலாளர் அமைப்பான (ILO) இதே நாளை ஜீன் 12 அன்று கடைபிடிக்கிறது.
Question 10
2017க்கான "Men's doubles Tallahassee Challanger" பட்டத்தை வென்றவர் யார்?
A
Leander Paes and Adil Shamasdin
B
Leander Paes and Ramkumar Ramanathan
C
Leander Paes and Blaz Rola
D
Leander Paes and Scott Lipsky
Question 10 Explanation: 
விடை : D. Leander Paes and Scott Lipsky புளோரிடாவில் நடைபெற்ற போட்டியில் Leander Paes and Scott Lipsky அர்ஜென்டினாவின் Leonardo Mayer and Maximo Gonzalezசை 4-6, 7-6, 10-7 என்ற விதத்தில் தோற்கடித்தனர்.இது இவ்வாண்டிற்கான Paes வாங்கும் 2வது சேலஞ்சர் பட்டமாகும்.
Question 11
எந்த மத்திய அமைச்சர் போர் வீரர்களை கவுரவிக்கும் விதமாக தேசிய அளவில் “Vidhya-Veerta Abhiyan” திட்டத்தை தொடங்கிவைத்தார்?
A
நரேந்திர மோடி
B
ராஜ்நாத் சிங்
C
அருண் ஜெட்லி
D
பிரகாஷ் ஜவடேகர்
Question 11 Explanation: 
விடை : D. பிரகாஷ் ஜவடேகர் இத்திட்டத்தை மத்திய மனிதவளத்துறை அமைச்சரான திரு.பிரகாஷ் ஜவடேகர், May 2, 2017 அன்று தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் நோக்கம், மாணவர்கள் மனதில் தேசப்பற்றை உருவாக்குவதும், போர் வீரர்களின் தேவைகளை உணர்த்துவதும் ஆகும். எனவே, “பரம் வீர் சக்ரா“ விருதுபெற்ற வீரர்களை போன்ற உருவ பொம்மைகளை, கல்லூரி வளாகங்களில் வைத்து சிறப்பித்தனர். இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருது “பரம் வீர் சக்ரா” ஆகும்.
Question 12
ஐ. நாவின் “The Economic and Social Survey of Asia and the Pacific 2017”ன் அறிக்கையின் படி, 2017ல் இந்தியாவின் GDP என்னவாக இருக்கும்?
A
7.1 %
B
7.5 %
C
7.2 %
D
7.4 %
Question 12 Explanation: 
விடை : A. 7.1 % ஐ. நாவின் Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP), தனது 2017க்கான ஆண்டறிக்கையை May 1 2017 அன்று வெளியிட்டது. இவ்வறிக்கையின் படி, 2017ம் ஆண்டில் இந்தியாவின் GDP 7.1 % வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிலை தொடருமானால் 2018ல் இந்தியாவின் GDP 7.5 % ஆக இருக்கும். மேலும், இதன் மூலம் சில இன்னல்களும்(அதாவது, தவறுதலான வங்கிக்கடன்கள் வழங்குவது போன்றவை) இருப்பதாக இவ்வறிக்கை எச்சரித்துள்ளது.
Question 13
UNHCRன் புதிய “நல்லெண்ண தூதுவராக” நியமிக்கப்பட்டுள்ள Yusra Mardini, எந்த நாட்டைச்சேர்ந்தவர்?
A
கிரீசு
B
சிரியா
C
சோமாலியா
D
சாம்பியா
Question 13 Explanation: 
விடை : B. சிரியா சிரியாவைச்சேர்ந்த இவர் படகில் தத்தளித்த அகதிகளுக்கு உதவினார். சிரிய அகதியும், ஒலிம்பிக் தடகள வீராங்கனையுமான இவருக்கு ஜெர்மன் நாடு புகலிடம் கொடுத்துள்ளது. தற்போது United Nations High Commissioner for Refugees(UNHCR)ன் “நல்லெண்ண தூதுவராக” நியமிக்கப்பட்டுள்ளார்.
Question 14
2017 “Men’s Singles Barcelona Open Tennis” போட்டியில் வென்றவர் யார்?
A
Kei Nishikori
B
Pablo Andujar
C
Rafael Nadal
D
Dominic Thiem
Question 14 Explanation: 
விடை : C. Rafael Nadal ஸ்பானிஷ் டென்னிஸ் விளையாட்டு வீரரான இவர், ஆஸ்திரிய வீரர் Dominic Thiemஐ 6-4,6-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, 2017ம் ஆண்டுக்கான “Men’s Singles Barcelona Open Tennis” போட்டியில் வென்றவர் ஆகிறார். இப்போட்டி ஸ்பெயினிலுள்ள பார்சிலோனா நகரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை வென்றதன் மூலம், பத்து முறை இப்பரிசினை வென்றவர் என்ற சிறப்புத்தகுதியினை இவர் பெறுகிறார். இப்போட்டி ATP World Tourன் 500ல் ஒரு பாகமாகும்.
Question 15
19வது ஆசிய மகளிர் ஒற்றையருக்கான “Asian Individual Squash Championships - 2017” பட்டத்தினை வென்றவர் யார்?
A
Joshna Chinappa
B
Madeline Perry
C
Dipika Pallikal
D
Vicki Cardwell
Question 15 Explanation: 
விடை : A. Joshna Chinappa சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யுவில் ஏப்ரல் 29 2017 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் Dipika Pallikalஐ தோற்கடித்து Joshna Chinappa இப்பட்டத்தினை வென்றார். இதன் மூலம் “Asian Squash” பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அடைகிறார்.
Question 16
இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பின் (Confederation of Indian Industry – CII) ன் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
Preeti Jain
B
Shobana Kamineni
C
Nita Ambani
D
Vimala Mehta
Question 16 Explanation: 
விடை : B. Shobana Kamineni 2017-18ம் ஆண்டுக்கான CII-ன் தலைவராக இவர் செயல்படுவார். இவர் அப்போலோ மருத்துவமனைகளின் துணைத்தலைவராவார். இவருக்கு முன் CIIன் தலைவராக பதவி வகித்தவர் Dr Naushad Forbes. CIIன் புதிய துணைத்தலைவராக உதய் கோடக் பதவி வகிப்பார். CII ஒரு அரசு சாராத, வியாபார நோக்கற்ற, இந்திய தொழிற் நிறுவனங்களின் வளர்சிக்கு பங்காற்றும் ஒரு அமைப்பாகும்.
Question 17
INSA இளம் விஞ்ஞானி விருது 2017 (Youth Scientist Award) க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
A
Prabeer Barpanda
B
Sai Siva Gorthi
C
Sanjay Pratihar
D
Chandan Saha
Question 17 Explanation: 
விடை : C. Sanjay Pratihar இவர் தேஸ்பூர் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்துவருகிறார். இவரின் விவசாயம் சார்ந்த ஆய்வுக்காக இவ்விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருது வெண்கலப்பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.25000 பணப்பரிசை உள்ளடக்கியது. டிசம்பரில் நடைபெறும் INSAவின் ஆண்டுக்கூட்டத்தில் இவருக்கு இப்பரிசு வழங்கப்படும். இந்தியாவைச்சேர்ந்த இளம் விஞ்ஞானிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
Question 18
எந்த நகரம் உலகில் முதன்முதலில் தனக்கென சொந்த “மைக்ரோசாப்ட் எழுத்துரு” வை “Microsoft Font” கொண்டுள்ளது?
A
பாரிஸ்
B
நியூயார்க்
C
பெர்லின்
D
துபாய்
Question 18 Explanation: 
விடை : D. துபாய் இந்த எழுத்துருவின் பெயர் “Dubai Font”. இது அரபி மற்றும் இலத்தின் எழுத்துக்களை எழுதும் விதம் உருவாக்கப்பட்டுள்ளது. இது “Dubai” “Dubai Medium” “Dubai Light” என மூன்று விதங்களில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் பயனாளிகளுக்கு கிடைக்கிறது. மே 1 2017 அன்று துபாய் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த எழுத்துரு துபாய் நகரத்தின் சிறப்புகளை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும்.
Question 19
விவசாயிகளுக்கான தானியங்கி வானிலை நிலையத்தை (Automated Weather Station – AWS) பயன்படுத்தும் முதல் இந்திய மாநிலம் எது?
A
கேரளா
B
பஞ்சாப்
C
அசாம்
D
மகாராஷ்டிரா
Question 19 Explanation: 
விடை : D. மகாராஷ்டிரா நாட்டிலேயே முதன்முதலாக நாக்பூரிலுள்ள Dongargaonல் அமைக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா முழுவதும் மேலும் 2065 நிலையங்கள் இதேபோல அமைக்கப்படவுள்ளன. இது காற்றின் வேகம், ஈரப்பதம், மழையளவு போன்ற விவரங்களை விவசாயிகள் அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும். இந்தத்தகவல்கள் அனைத்தும் “மகாதேவ் போர்டல்”( மகாராஷ்டிர விவசாயிகள் வானிலை பிணையம்) மற்றும் Skymet செயலி மூலம் பகிரப்படும்.
Question 20
இந்தியாவின் எந்த மாநிலத்தில் “The Lovely Professional University” அமைந்துள்ளது?
A
ஹரியானா
B
ராஜஸ்தான்
C
பஞ்சாப்
D
குஜராத்
Question 20 Explanation: 
விடை : C. பஞ்சாப் மே 2 2017 அன்று பஞ்சாப் மாநிலம் பகவாராவிலுள்ள “The Lovely Professional University”ல் நடைபெற்ற 8வது பட்டமளிப்பு விழாவில், இந்தியக்குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டார். இப்பல்கலைக்கழகம் 200க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்குகின்றது. 30,000கும் அதிகமான பட்டதாரிகளை வருடந்தோறும் இப்பல்கலைக்கழகம் உருவாக்குகிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 20 questions to complete.

11 comments

 1. tnx very useful

 2. Thank you very useful for test

  • you are always welcome suriya. we will post daily all the subjects. Plz refer winmeen.com and share with all of your friends

 3. Hemalathaelamurugan

  Thank for winmeen .kindly keep giving this type of test which is very useful.

 4. vembuthurai veluchamy

  sir please more tamil cureent affairs test..

 5. vembuthurai veluchamy

  PLEASE ADD MORE TAMIL CURRENT AFFAIS TEST

 6. thanks its very very useful

 7. thank you vinmeen..,this is very useful to us

 8. I AM ENJOY THE QUESTION AND ANSWER

 9. it was very useful. please upload every month current affair mock test…it will more useful for us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *