Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Answer Key

Tnpsc Group 4 Exam Previous Questions and Answer key 2022 – General Tamil and General Studies in Tamil

Tnpsc Group 4 Exam Previous Questions and Answer key 2022 – General Tamil and General Studies in Tamil

COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV IN GROUP-IV SERVICES

1. உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

“உள்ளங்கை நெல்லிக்கனி போல”

(அ) வெளிப்படைத் தன்மை (ஆ) வெளிப்படையற்ற தன்மை

(இ) மறைத்து வைத்தல் (ஈ) தன்னலமின்மை

2. “சிலை மேல் எழுத்து போல”

இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.

(அ) தெளிவாகத் தெரியாது (ஆ) தெளிவாகத் தெரியும்

(இ) நிலைத்து நிற்கும் (ஈ) நிலைத்து நிற்காது

3. ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர்.

இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?

(அ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்

(ஆ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

(இ) ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது

(ஈ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்

4. மாலதி மாலையைத் தொடுத்தாள்

இது எவ்வகை வாக்கியம்?

(அ) செய் வினை (ஆ) செயப்பாட்டு வினை

(இ) தன் வினை (ஈ) பிற வினை

5. இலக்கணக் குறிப்பறிதல்.

சாலச் சிறந்தது – தொடரின் வகையை அறிக.

(அ) இடைச்சொல் தொடர் (ஆ) விளித் தொடர்

(இ) எழுவாய்த் தொடர் (ஈ) உரிச்சொல் தொடர்

6. பெயர்ச்சொற்களைப் பொருத்துக:

(அ) மல்லிகை 1. சினைப்பெயர்

(ஆ) பள்ளி 2. பண்புப்பெயர்

(இ) கிளை 3. இடப்பெயர்

(ஈ) இனிமை 4. பொருள்பெயர்

அ ஆ இ ஈ

(அ) 4 3 1 2

(ஆ) 3 4 2 1

(இ) 4 3 2 1

(ஈ) 2 3 1 4

7. பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.

(அ) காலப்பெயர் – செம்மை

(ஆ) சினைப்பெயர் – கண்

(இ) பண்புப்பெயர் – ஆண்டு

(ஈ) தொழிற்பெயர் – ஆடுதல்

(அ) அ,இ (ஆ) அ,ஆ (இ) இ, ஈ (ஈ) அ, ஈ

8. “கேள்” என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.

(அ) கேட்டு (ஆ) கேட்ட (இ) கேட்டல் (ஈ) கேட்டான்

9. “தணிந்தது” என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.

(அ) தணி (ஆ) தணிந்த (இ) தணிந்து (ஈ) தனி

10. “தருக” என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.

(அ) தந்த (ஆ) தரு (இ) தா (ஈ) தந்து

11. “சோ” ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

(அ) அரசன் (ஆ) வறுமை (இ) மதில் (ஈ) நோய்

12. “மா” – என்றும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக

(அ) பெரிய (ஆ) சிறிய (இ) குறைய (ஈ) நிரம்ப

13. “பரவை” – இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

(அ) மலை (ஆ) கடல் (இ) ஆறு (ஈ) உயிர்வகை

14. மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.

(அ) கூகை கூவும் (ஆ) கூகை குனுகும்

(இ) கூகை குழறும் (ஈ) கூகை அலறும்

15. சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.

(அ) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டு வரபோகிறது.

(ஆ) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரபோகிறது

(இ) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டு வரப்போகிறது

(ஈ) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டு வரப்போகிறது.

16. குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.

(அ) சார்பு (ஆ) மருந்து (இ) கஃசு (ஈ) பசு

17. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

(அ) மோனை (ஆ) எதுகை (இ) இசைவு (ஈ) இயைபு

18. பொருத்துக:

அ. சோறு 1.குடித்தான்

ஆ. பால் 2. உண்டான்

இ. பழம் 3. பருகினான்

ஈ. நீர் 4. தின்றான்

அ ஆ இ ஈ

அ. 1 3 4 2

ஆ. 3 4 1 2

இ. 2 3 4 1

ஈ. 4 1 2 3

19. பொருத்துக

அ ஆ இ ஈ

அ. 2 4 1 3

ஆ. 4 1 3 2

இ. 4 3 2 1

ஈ. 3 2 1 4

20. பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்

(அ) ஆழ்வார்கள் (ஆ) சித்தர்கள் (இ) நாயன்மார்கள் (ஈ) புலவர்கள்

21. “உழவர் பாட்டு” என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு

(அ) தாலாட்டுப்பாட்டு (ஆ) கும்மிப்பாட்டு

(இ) பள்ளுப்பாட்டு (ஈ) வில்லுப் பாட்டு

22. “வரதன்” என்ற இயற்பெயரைக் கொண்டவர்

(அ) நல்லாதனார் (ஆ) ஒட்டக் கூத்தர் (இ) காளமேகப் புலவர் (ஈ) குமரகுருபரர்

23. “மரமும் பழைய குடையும்” – ஆசிரியர்

(அ) பாரதிதாசன் (ஆ) அழகிய சொக்கநாதப் புலவர்

(இ) காளமேகப்புலவர் (ஈ) புதுமைப்பித்தன்

24. “நீலப் பொய்கையின் மிதந்திடும்

தங்கத் தோணிகள்”

– இக்கூற்று யாருடையது?

(அ) அர்ச்சுனன் (ஆ) தருமன் (இ) சகாதேவன் (ஈ) நகுலன்

25. “உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்?

(அ) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார் (ஆ) உ.வே.சாமிநாதனார்

(இ) திரு.வி.கலியாண சுந்தரனார் (ஈ) ஆறுமுக நாவலர்

26. சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.

இளங்கோவடிகள்

1. சேர மரபைச் சார்ந்தவர்.

2. சிலப்பதிகாரத்தை இயற்றியவர்.

3. ”அடிகள் நீரே அருள்க” என்ற கூற்றுக்குரியவர்.

4.”நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று கூறியவர்

(அ) அனைத்தும் சரி (ஆ) 1,2 சரி (இ) 1,3,4 சரி (ஈ) அனைத்தும் தவறு

27. கூற்று 1 : சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.

கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.

(அ) கூற்று 1 மட்டும் சரி (ஆ) கூற்று 2 மட்டும் சரி

(இ) கூற்று இரண்டும் சரி (ஈ) கூற்று இரண்டும் தவறு

28. “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்”

– திருக்குறள் உணர்த்தும் கருத்து.

(அ) ஏற்றுமதி (ஆ) ஏமாற்றுதல் (இ) நேர்மை (ஈ) முயற்சியின்மை

29. கூற்று 1 : ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று

கூற்று 2 : ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்

(அ) கூற்று 1 மட்டும் சரி (ஆ) கூற்று 2 மட்டும் சரி

(இ) கூற்று 1ம் கூற்று 2ம் சரி (ஈ) கூற்று 1ம் கூற்று 2ம் தவறு

30. “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்” என்று புகழ்ந்து கூறியவர் யார்?

(அ) வாணிதாசன் (ஆ) பாரதிதாசன் (இ) சுரதா (ஈ) பாரதியார்

31. “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன்”

– இப்பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

(அ) ஆத்திச்சூடி (ஆ) கொன்றைவேந்தன் (இ) நல்வழி (ஈ) மூதுரை

32. பொருத்துக:

(அ) மதியாதார் முற்றம் 1. கூடுவது கோடிபெறும்

(ஆ) உபசரிக்காதார் மனையில் 2. மிதியாமை கோடிபெறும்

(இ) குடிபிறந்தார் தம்மோடு 3. சொன்ன சொல் தவறாமை கோடிபெறும்

(ஈ) கோடானு கோடி கொடுப்பினும் 4. உண்ணாமை கோடிபெறும்

அ ஆ இ ஈ

அ. 3 4 2 1

ஆ. 2 4 1 3

இ. 2 3 1 4

ஈ. 1 2 3 4

33. தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.

(அ) ஆகஸ்டு ஒன்பதாம் நாள் (ஆ) ஆகஸ்டு பத்தொன்பதாம் நாள்

(இ) ஆகஸ்டு ஒன்றாம் நாள் (ஈ) டிசம்பர் பதினைந்தாம் நாள்

34. இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு ——— நூலாகும்.

(அ) இரட்டைமணிமாலை (ஆ) மும்மணிக்கோவை

(இ) தெய்வமணிமாலை (ஈ) மனுமுறைகண்டவாசகம்

35. “ஞானப்பச்சிலை” என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?

(அ) சிங்கவல்லி (ஆ) கீழாநெல்லி (இ) குப்பைமேனி (ஈ) வல்லாரை

36. “முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை” என்று கூறும் நூல்

(அ) தொல்காப்பியம் (ஆ) மதுரைக்காஞ்சி

(இ) பட்டினப்பாலை (ஈ) பதிற்றுப்பத்து

37. பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல்

(அ) பட்டினப்பாலை (ஆ) தொல்காப்பியம் (இ) குறிஞ்சிப்பாட்டு (ஈ) திருக்குறள்

38. ஆற்றூர் பேச்சு வழக்கில் ————- என மருவியுள்ளது.

(அ) ஆம்பூர் (ஆ) அரூர் (இ) அரசூர் (ஈ) ஆத்தூர்

39. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்

(அ) எம்.ஜி.இராமச்சந்திரன் (ஆ) மூதறிஞர் இராஜாஜி

(இ) பெருந்தலைவர் காமராசர் (ஈ) கலைஞர் கருணாநிதி

40. தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்

(அ) வீரமாமுனிவர் (ஆ) கால்டுவெல் (இ) ஜி.யு.போப் (ஈ) தேவநேயப்பாவாணர்

41. வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்

(அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (ஆ) தேவநேய பாவாணர்

(இ) பரிதிமாற்கலைஞர் (ஈ) இளங்கோவடிகள்

42. சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?

(அ) ரா.பி.சேதுப்பிள்ளை (ஆ) சோமசுந்தர பாரதியார்

(இ) குன்றக்குடி அடிகளார் (ஈ) வீரமாமுனிவர்

43. கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?

(அ) பல்லவர்கள் (ஆ) பாண்டியர்கள் (இ) சோழர்கள் (ஈ) நாயக்கர்கள்

44. புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை

(அ) ஓவிய எழினி (ஆ) சிற்பக்கலை (இ) மெய்க்கீர்த்தி (ஈ) பைஞ்சுதை

45. பொருத்துக:

அ. தத்துவ தரிசனம் 1. அண்ணா

ஆ. பிடிசாம்பல் 2. வல்லிக்கண்ணன்

இ. தாலாட்டு 3. கி.வா.ஜகந்நாதன்

ஈ. மிட்டாய்காரன் 4. ஜெயகாந்தன்

சரியான விடையைத் தெரிவு செய்க.

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 4 3 2 1

இ. 4 2 1 3

ஈ. 2 1 4 3

46. சரியான இணைகளைத் தேர்ந்தெடு.

1. பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாராயணக்கவி

2. உவமைக் கவிஞர் – பெருஞ்சித்திரனார்

3. காந்தியக் கவிஞர் – வெ.இராமலிங்கனார்

4. புரட்சிக் கவிஞர் – தாரா பாரதி

(அ) 1ம் மற்றும் 2ம் சரி (ஆ) 1ம் மற்றும் 3ம் சரி

(இ) 1ம் மற்றும் 3ம் சரி (ஈ) 2ம் மற்றும் 4ம் சரி

47. முடியரசன் இயற்றாத நூல் எது?

(அ) பூங்கொடி (ஆ) நீலமேகம் (இ) வீரகாவியம் (ஈ) காவியப்பாவை

48. “பெண் எனில் பேதை என்ற எண்ணம்

இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்

உருப்படல் என்பது சரிப்படாது”

– எனப் பாடியவர்

(அ) பாரதியார் (ஆ) பசுவய்யா (இ) பாரதிதாசன் (ஈ) நாமக்கல் கவிஞர்

49. “கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்” என்றவர்

(அ) நாமக்கல் கவிஞர் (ஆ) சுரதா (இ) பாரதிதாசன் (ஈ) பாரதியார்

50. கீழ்க்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக

(அ) தெய்வம் ஒன்று, நினைக்கும் நாம் ஒன்று நினைக்க

(ஆ) நாம் ஒன்று நினைக்க, ஒன்று நினைக்கும் தெய்வம்

(இ) நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.

(ஈ) தெய்வம் நினைக்கும் ஒன்று. நாம் ஒன்று நினைக்க

51. மோனைத் தொடை ———- வகைப்படும்.

(அ) ஆறு (ஆ) எட்டு (இ) ஐந்து (ஈ) மூன்று

52. புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்

புத்தகசா லை வேண்டும் நாட்டில் யாண்டும்.

– இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.

(அ) வாழ்வு, வேண்டில் (ஆ) புனிதமுற்ற, புத்தகசாலை

(இ) நாட்டில், யாண்டும் (ஈ) மக்கள், புதுவாழ்வு

53. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.

“கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்”

(அ) உடன்பாட்டு வாக்கியம் (ஆ) எதிர்மறை வாக்கியம்

(இ) பொருள் மாறா எதிர்மறை வாக்கியம் (ஈ) கலவை வாக்கியம்

54. கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.

(அ) அண்ணனோடு போ (ஆ) கூடு கட்டு

(இ) தமிழ்ப்படி (ஈ) அரசு ஆணை பிறப்பித்தது.

55. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.

ஐந்து மாடுகள் மேய்ந்தன.

(அ) எத்தனை மாடுகள் மேய்ந்தன? (ஆ) எவ்வளவு மாடுகள் மேய்ந்தன?

(இ) மாடுக்ள மேய்ந்தனவா? (ஈ) ஐந்து மாடுகள் என்ன செய்கின்றன?

56. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.

இங்கு நகரப் பேருந்து நிற்கும்

(அ) நகரப்பேருந்து ஏன் நிற்கும்? (ஆ) நகரப்பேருந்து எப்போது நிற்கும்?

(இ) இங்கு நகரப்பேருந்து நிற்குமா? (ஈ) இங்கு நகரப்பேருந்து வருமா?

57. சரியான தொடரைக் கண்டறிக.

(அ) உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்

(ஆ) தமிழ்மொழி உலகம் வாழட்டும் உள்ளவரையிலும்

(இ) தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்

(ஈ) உலகம் தமிழ்மொழி உள்ளவரையிலும் வாழட்டும்

58. சரியான தொடரைக் கண்டறிக.

(அ) தம்பி படி சங்கத்தமிழ் நூலை என்று கூறினார் கவிஞர்

(ஆ) என்று கவிஞர் கூறினார் சங்கத்தமிழ் நூலைப் படி

(இ) நூலைப்படி கவிஞர் சங்கத்தமிழ் என்று கூறினார்

(ஈ) “தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி” என்று கவிஞர் கூறினார்

59. சரியான அகரவரிசையைத் தேர்க.

(அ) மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்

(ஆ) கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து

(இ) முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்

(ஈ) மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்

60. பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.

(அ) கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்.

(ஆ) ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்

(இ) தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி

(ஈ) ஆசிரியர், கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான்

61. “தேடு” – வினைமுற்று சொல்

(அ) தேடிய (ஆ) தேடினார் (இ) தேடி (ஈ) தேடுதல்

62. பொருத்துக:

அ. வெண்பா 1. துள்ளல் ஓசை

ஆ. ஆசிரியப்பா 2. தூங்கல் ஓசை

இ. கலிப்பா 3. செப்பல் ஓசை

ஈ. வஞ்சிப்பா 4. அகவல் ஓசை

அ ஆ இ ஈ

அ. 3 1 2 4

ஆ. 4 3 2 1

இ. 2 4 1 3

ஈ. 3 4 1 2

63. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக.

“கோல்டு பிஸ்கட்”

(அ) வைரக்கட்டி (ஆ) அலுமினியக்கட்டி (இ) தங்கக்கட்டி (ஈ) தாமிரக்கட்டி

64. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக.

அ. Vowel 1. மெய்யெழுத்து

ஆ. Consonant 2. ஒரு மொழி

இ. Homograph 3. உயிரெழுத்து

ஈ. MOnolingual 4. ஒப்பெழுத்து

அ ஆ இ ஈ

அ. 1 3 2 4

ஆ. 3 4 1 2

இ. 2 4 3 1

ஈ. 3 1 4 2

65. “நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை”

என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற “நனந்தலை உலகம்” என்பதற்கு எதிர்ச்சொல்?

(அ) அகன்ற உலகம் (ஆ) மேலான உலகம் (இ) சிறிய உலகம் (ஈ) கீழான உலகம்

66. எடுப்பு – எதிர்ச்சொல் தருக.

(அ) தொடங்குதல் (ஆ) முடித்தல் (இ) நிற்றல் (ஈ) ஏற்றல்

67. “தண்டளிர்ப்பதம்” இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.

(அ) தண்+அளிர்+பதம் (ஆ) தன்மை+தளிர்+பதம்

(இ) தண்மை+தளிர்+பதம் (ஈ) தண்டளிர்+பதம்

68. கலம்பகம்

– இச்சொல்லைப் பிரித்து எழுதுக.

(அ) கலம் + அகம் (ஆ) கலம் + பகம் (இ) கலம்பு + அகம் (ஈ) கல் + அம்பகம்

69. “பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்” என்று குறிப்பிடும் நூல்

(அ) கலித்தொகை (ஆ) பரிபாடல் (இ) அகநானூறு (ஈ) புறநானூறு

70. அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?

(அ) நெடுந்தொகை (ஆ) திருக்குறள்

(இ) முத்தொள்ளாயிரம் (ஈ) கம்பராமாயணம்

71. சரியான பதிலைத் தேர்வு செய்க.

1. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்

2. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்

3. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது

4. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது

(அ) 1,3,4 மட்டும் சரி (ஆ) 1,2 மட்டும் சரி (இ) 1,2,3 மட்டும் சரி (ஈ) அனைத்தும் சரி

72. பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?

(அ) கம்பர் (ஆ) குலசேகரர் (இ) ஆண்டாள் (ஈ) பெரியாழ்வார்

73. தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?

(அ) சுந்தரர் (ஆ) திருஞான சம்பந்தர் (இ) அப்பர் (ஈ) மாணிக்கவாசகர்

74. தொல்காப்பியம் குறிப்பிடும் “நிறை மொழி மாந்தர்” யார்?

(அ) தேவர்கள் (ஆ) அரசர்கள் (இ) சித்தர்கள் (ஈ) புலவர்கள்

75. வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது

(அ) தூது (ஆ) பள்ளு (இ) கலம்பகம் (ஈ) குறவஞ்சி

76. ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?

(அ) பத்து (ஆ) ஆறு (இ) ஏழு (ஈ) ஐந்து

77. உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?

(அ) கலம்பகம் (ஆ) பள்ளு (இ) குறவஞ்சி (ஈ) உலா

78. அம்புஜத்தம்மாள் எழுதிய நூல்

(அ) இராமலிங்க சுவாமிகள் சரிதம் (ஆ) மதி பெற்ற மைனர்

(இ) முப்பெண்மணிகள் வரலாறு (ஈ) நான் கண்ட பாரதம்

79. பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?

(அ) சேர நாடு (ஆ) சோழ நாடு (இ) பாண்டிய நாடு (ஈ) கலிங்க நாடு

80. “குமரி கண் நோய்க்கு குமரி கொடு”

– இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?

(அ) கரிசாலங்கண்ணி (ஆ) தூதுவளை

(இ) குப்பைமேனி (ஈ) சோற்றுக்கற்றாழை

81. புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்

(அ) உ.வே.சா. (ஆ) ஜி.யு.போப் (இ) சீகன் பால்கு ஐயர் (ஈ) வீரமாமுனிவர்

82. “மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?

(அ) குறுந்தொகை (ஆ) ஐங்குறுநூறு (இ) அகநானூறு (ஈ) நற்றிணை

83. சரியான இணையைத் தேர்வு செய்க.

(அ) துவரை – தாமரை மலர்

(ஆ) மரை-பவளம்

(இ) விசும்பு-வானம்

(ஈ) மதியம்-நிலவு

(அ) அ மற்றும் ஆ சரி (ஆ) ஆ மற்றும் இ சரி

(இ) இ மற்றும் ஈ சரி (ஈ) ஈ மற்றும் அ சரி

84. பொருத்தமான விடையைத் தருக.

(அ) சிறுபஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம்

(ஆ) குடும்பவிளக்கு 2. சங்க இலக்கியம்

(இ) சீவகசிந்தாமணி 3. அற இலக்கியம்

(ஈ) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம்

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 3 1 4 2

இ. 2 3 1 4

ஈ. 4 1 2 3

85. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப் பாடியவர்

(அ) பாரதியார் (ஆ) சுரதா (இ) பாரதிதாசன் (ஈ) வாணிதாசன்

86. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு

(அ) 1832 (ஆ) 1812 (இ) 1842 (ஈ) 1852

87. திருமணம் செல்வக்கேசவராயரால், “தமிழுக்கு கதியாவார் இருவர்” என்று குறிப்பிடப்படுபவர்கள்.

(அ) கம்பர், இளங்கோ (ஆ) கம்பர், திருவள்ளுவர்

(இ) திருவள்ளுவர், இளங்கோ (ஈ) இளங்கோ, பாரதியார்.

88. எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?

(அ) சாரதா அம்மாள் (ஆ) மூவலூர் இராமாமிர்தம்

(இ) முத்துலெட்சுமி (ஈ) பண்டித ரமாபாய்

89. ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?

(அ) கி.பி.1730 (ஆ) கி.பி.1880 (இ) கி.பி.1865 (ஈ) கி.பி.1800

90. தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.

(அ) உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்

(ஆ) உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்

(இ) உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்

(ஈ) உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்

91. தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற் நாடுகள்

(அ) இலங்கை, சிங்கப்பூர், மலேசியா (ஆ) மொரிசியசு, இலங்கை, கனடா

(இ) பிரிட்டன், பிஜித்தீவு, பினாங்குத்தீவு (ஈ) கனடா, அந்தமான், மலேசியா

92. நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(அ) ஆழ்வார்திருநகர் (ஆ) ஆழ்வார்திருநகரி

(இ) ஆழ்வார்பேட்டை (ஈ) திருநகரம்

93. பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்

(அ) மெய்யப்பர் (ஆ) உ.வே.சாமிநாதனார்

(இ) இலக்குவனார் (ஈ) மீனாட்சி சுந்தரனார்

94. டாக்டர்.ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல்

(அ) உரைநடைக்கோவை (ஆ) தமிழிலக்கிய வரலாறு

(இ) கதையும் கற்பனையும் (ஈ) ஊரும் பேரும்

95. தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்

(அ) மறைமலையடிகள் (ஆ) சங்கரதாசு சுவாமிகள்

(இ) பரிதிமாற் கலைஞர் (ஈ) பம்மல் சம்பந்தனார்

96. தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?

(அ) மதுரை (ஆ) கரூர் (இ) தூத்துக்குடி (ஈ) கன்னியாக்குமரி

97. ஈ.வெ.ராவுக்குப் “பெரியார்” என்னும் பட்டமும், “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது?

(அ) 1929 நவம்பர் 18 – சென்னை, 27.06.1980 – அமெரிக்க பாராளுமன்றம்

(ஆ) 1943 செப்டம்பர் 5 – சென்னை, 30.06.1970 – ரசியா செனட் சபை

(இ) 1938 நவம்பர் 13 – சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்

(ஈ) 1928 டிசம்பர் 3 – சென்னை, 30.06.1975 – இங்கிலாந்து பாராளுமன்றம்

98. நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை

(அ) பாலசரஸ்வதி (ஆ) வைஜெயந்திமாலா

(இ) தஞ்சை கிட்டப்பா (ஈ) நர்த்தகி நடராஜ்

99. பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்?

(அ) தினந்தந்தி (ஆ) காஞ்சி (இ) முரசொலி (ஈ) தினமணி

100. கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?

(அ) கண்ணீர்ப்பூக்கள் (ஆ) ஊர்வலம்

(இ) ஆகாயத்துக்கு அடுத்த வீடு (ஈ) சோழநிலா

101. காலவரிசைப்படி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்களை வரிசைப்படுத்துக.

1.பி.டி.ராஜன்.

2.ஏ.சுப்புராயுலு ரெட்டியார்.

3.பி.முனுசாமி நாயுடு.

4.சி.ராஜாஜி.

5.பி.சுப்பராயன்

(அ) 2,4,3,5,1 (ஆ) 2,5,3,1,4 (இ) 5,3,1,2,4 (ஈ) 3,1,5,2,4

102. தவறான இணையைக் கண்டறிக.

1. மகாராஷ்டிரா – ஈரவை சட்டமன்றம்

2. தெலுங்கானா – ஓரவை சட்டமன்றம்

3. பீகார் – ஓரவை சட்டமன்றம்

4. ஆந்திரபிரதேசம் – ஈரவை சட்டமன்றம்

(அ) 1,2, மற்றும் 3 தவறான இணை (ஆ) 1 மற்றும் 2 தவறான இணை

(இ) 2 மற்றும் 3 தவறான இணை (ஈ) அனைத்தும் தவறான இணை

103. சரியான இணையைத் தேர்ந்தெடு:

1. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு

மாநிலங்களுக்கு ஒதுக்கக் கூடிய வளங்கள் 1. ஷரத்து 269

2. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநில அரசு

வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது 2. ஷரத்து 268

3. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிப்பட்டு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு

பதிர்ந்தளிக்க்கூடிய வரிகள் 2. ஷரத்து 267

(அ) 1 மட்டும் (ஆ) 2 மற்றும் 3 மட்டும்

(இ) 1 மற்றும் 2 மட்டும் (ஈ) 1 மற்றும் 3 மட்டும்

104. எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு ——— என்று பெயர்.

(அ) லூக்கோமியா (ஆ) சார்க்கோமா (இ) கார்சினோமா (ஈ) லிப்போமா

105. பொருத்துக:

தேசியப் பூங்கா மாநிலம்

அ. கிர் தேசியப் பூங்கா 1. இராஜஸ்தான்

ஆ. கார்பெட் தேசியப் பூங்கா 2. ஜார்கண்ட்

இ. இராஜ்கிர் தேசியப் பூங்கா 3. குஜராத்

ஈ. இரந்தம்பூர் தேசியப் பூங்கா 4. உத்தரகாண்ட்

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 4 3 2 1

இ. 3 4 2 1

ஈ. 3 2 1 4

106. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?

1. சிங்க் ப்ளன்ட் காந்தப் பிரிப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.

2. ஹேமடைட் புவீயீர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.

3. உருகிய அலுமினாவை மின்னாற் பகுப்பு முறையில் ஒடுக்கி அலுமினியம் பெறப்படுகிறது.

4. மேட் என்பது குப்ரிக் சல்பைடு மற்றும் பெர்ரஸ் சல்பைடு ஆகியவற்றின் கலவையாகும்.

(அ) 1 மற்றும் 2 (ஆ) 1 மற்றும் 4 (இ) 2 மற்றும் 3 (ஈ) 2 மற்றும் 4

107. கீழ்கண்ட நாடுகளை அதன் மார்ஸ் மிஷன் உடன் பொருத்துக.

நாடுகள் மிஷன்

அ. யு.எஸ்.ஏ 1. மங்கல்யான்

ஆ. இந்தியா 2. Psyche

இ. ஜப்பான் 3. Zheng He

ஈ. சீனா 4. TEREX

அ ஆ இ ஈ

அ. 1 4 3 2

ஆ. 2 1 4 3

இ. 2 4 3 1

ஈ. 4 1 2 3

108. பொருந்தாததைக் கண்டுபிடி.

(அ) இளஞ்சேட்சென்னி (ஆ) கோச்செங்கணான்

(இ) பெருஞ்சேரல் இரும்பொறை (ஈ) பெருநற்கிள்ளி

109.கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது?

1. பதினெட்டு நூல்களை உள்ளடக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றி கூறுகிறது.

2. அவற்றுள் திருக்குறளும், நாலடியாரும் முதன்மையானதாகும்.

3. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்பாடு மற்றும் சமயத்தை பற்றி கூறுகின்றன.

(அ) 1 மட்டும் சரி (ஆ) 2 மட்டும் சரி (இ) 1,2 மட்டும் சரி (ஈ) 1, 3 மட்டும் சரி

110. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக.

1. புலித்தேவரின் இறப்பு.

2.குயிலியின் இறப்பு.

3.கட்டப்பொம்மனின் இறப்பு.

4.மருதுசகோதரர்களின் இறப்பு

(அ) 2,3,1,4 (ஆ) 1,2,3,4 (இ) 1,3,2,4 (ஈ) 3,1,4,2

111. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?

(அ) மூவலூர் ராமாமிர்தம் (ஆ) முத்துலெட்சுமி ரெட்டி

(இ) தர்மாம்பாள் (ஈ) பண்டிதர் ராமாபாய்

112. பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது?

(அ) சாக்கிய பௌத்த சங்கம் (ஆ) அத்வைதானந்த சபா

(இ) அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் (ஈ) ஆதி திராவிட மகாஜன சபை

113. பொருத்துக:

சிந்து சமவெளி நகரங்கள் அகழ்வாராய்ச்சியாளர்

அ. சன்ஹீ-தாரோ 1. சூரஜ் பான்

ஆ. லோத்தல் 2. என்.ஜி.மஜீம்தார்

இ. பனாவளி 3. எஸ்.ஆர்.ராவ்

ஈ. மிட்டாதல் 4. பிஷ்ட்

அ ஆ இ ஈ

அ. 2 1 4 3

ஆ. 2 3 4 1

இ. 1 3 2 4

114. கீழ்க்காணும் கூற்றுகளில் பகத்சிங் தொடர்பான சரியான கூற்றைக் கண்டறிக:

1. 1930-இல் பகத்சிங் சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தை தாக்கினார்

1. 1929-இல் பகத்சிங் பி.கெ.தத்துடன் இணைந்து மத்திய சட்டப்பேரவை மீது குண்டு வீசனார்

3.1925-ஆம் ஆண்டு பகத்சிங் இந்துஸ்தான் குடியரசுப் படையை நிறுவினார்

(அ) 2 மட்டும் சரி (ஆ) 1 மற்றும் 3 மட்டும் சரி

(இ) 1 மற்றும் 2 மட்டும் சரி (ஈ) 1 மற்றும் 3 மட்டும் சரி

115. கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தத்தாள்களையும், இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக.

1. பகுத்தறிவு.

2.விடுதலை.

3.குடியரசு.

4.புரட்சி

(அ) 4,2,3,1 (ஆ) 3,4,1,2 (இ) 3,2,4,1 (ஈ) 2,3,1,4

116. கூற்று : இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும்.

காரணம் : மேற்கூறிய பண்புகள் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ உதவுகின்றன.

(அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

(ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

(இ) கூற்று சரி, காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு காரணம் சரி

117. பின்வருவனவற்றைப் பொருத்துக

அ. முதல் ஐந்தாண்டு திட்டம் 1. பொருளாதார நிலைத்தன்மை

ஆ. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் 2. நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி

இ. மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் 3. அகதிகள், உணவு பற்றாக்குறை மற்றும் பணவீக்க

சிக்கல்கள்

ஈ. நான்காவது ஐந்தாண்டு திட்டம் 4. சுய உருவாக்கப் பொருளாதாரம்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 4 1 2 3

இ. 3 1 2 4

ஈ. 1 3 4 2

118. கீழ்க்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.

1. காந்தியத் திட்டம்.

2. பாம்பே திட்டம்.

3. ஜவஹர்லால் நேரு திட்டம்.

4.விஸ்வேசுவரய்யா திட்டம்

(அ) 1,2,3,4 (ஆ) 4,3,2,1 (இ) 1,2,4,3 (ஈ) 2,1,4,3

119. 2020-21 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் வருவாய் மூலங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.

1. GST

2. தனி வருமான வரி

3.தீர்வை

4.நிறுவன வரி

5. சுங்க வரி

(அ) 1,2,3,4,5 (ஆ) 2,4,1,5,3 (இ) 1,4,2,3,5 (ஈ) 4,1,3,2,5

120. பிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.

1. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நூறு மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை

2. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு இலட்ச மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை.

3.பத்து ஆண்டுகளில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை

4. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை

(அ) 1 மட்டும் (ஆ) 2 மட்டும் (இ) 3 மட்டும் (ஈ) 4 மட்டும்

121. 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹.1,134 எனில் அதன் அசல்

(அ) ₹.16,000 (ஆ) ₹.15,000 (இ) ₹.14,000 (ஈ) ₹.20,000

122. p மற்றும் q-ன் மீப்பெரு பொது வகுத்தி x மற்றும் q = xy எனில், p மற்றும் q-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க.

(அ) pq (ஆ) qy (இ) xy (ஈ) py

123. ஒரு செவ்வகத்தின் நீளம் (3x + 2) அலகுகள் மற்றும் அதன் அகலம் (3x – 2) அலகுகள் எனில் அதன் பரப்பளவைக் காண்க. (x = 20 அலகுகள்)

(அ) 3596 ச.அலகுகள் (ஆ) 3956 ச.அலகுகள்

(இ) 4256 ச.அலகுகள் (ஈ) 5356 ச.அலகுகள்

124. இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும் பொழுது இரண்டிலும் ஒரே முகம் அல்லது கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு காண்க.

(அ) 1/9 (ஆ) 3/9 (இ) 4/9 (ஈ) 2/9

125. கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள. “இன்று எனது பிறந்த நாள்” என கலா கூறினாள். வாணியிடம் “உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடுவாய்?” எனக் கேட்டாள். அதற்கு வாணி “இன்று திங்கட்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்” என பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.

(அ) செவ்வாய் கிழமை (ஆ) புதன் கிழமை (இ) வியாழன் கிழமை (ஈ) வெள்ளி கிழமை

126. ஒரு மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணை, 3,5,8 மற்றும் 12-ல் வகுக்கும் போது, கிடைக்கும் மீதி 2 எனில், மிகப்பெரிய ஐந்து இலக்க எண்ணானது ————– ஆகும்.

(அ) 99972 (ஆ) 99958 (இ) 99960 (ஈ) 99962

127. 43.5 : 25 என்பதற்கு சமமான விகிதம்.

(அ) 2 : 1 (ஆ) 4 : 1 (இ) 7 : 5 (ஈ) 7 : 10

128. 4 P + S r 9 B # A 3 ? 7 c > Z % 6 d * Q @ 1

கொடுக்கப்பட்ட தொடரின் முதல் பாதியை பின்னோக்கு வரிசையில் எழுதினால் வரும் தொடரின் வலதுபக்கத்திலிருந்து 14-வதாக அமையும் உறுப்பினைக் காண்க.

(அ) > (ஆ) A (இ) Z (ஈ) +

129. 10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்?

(அ) 14 நாட்கள் (ஆ) 15 நாட்கள் (இ) 16 நாட்கள் (ஈ) 17 நாட்கள்

130. 18,a,b,-3 இவை கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளது எனில் (a+b)யின் மதிப்புக் காண்க.

(அ) 7 (ஆ) 11 (இ) 15 (ஈ) 21

131. ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியை சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ₹.7,875-ஐச் சேமிக்கிறார் எனில் முதல் ஆண்டு சேமிப்பு

(அ) ₹.3,000 (ஆ) ₹.4,000 (இ) ₹.4,500 (ஈ) ₹.5,000

132. ஒரு குறிப்பிட்ட அசல் தனிவட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் 60% அதிகரிக்கிறது. அதே வட்டி வீதத்தில் ₹.12,000-க்கு 3 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி

(அ) ₹.2,160 (ஆ) ₹.3,120 (இ) ₹.3,972 (ஈ) ₹.6,240

133. ஒரு கிராமத்தின் மக்கட்தொகை ஆண்டொன்றுக்கு 7% வீதம் அதிகரிக்கிறது. இப்பொழுது மக்கள் தொகை 90,000 எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை

(அ) 96,300 (ஆ) 1,03,000 (இ) 1,00,000 (ஈ) 1,03,041

134. 86-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2002-இன்படி 51 (A(K)–ல் எந்த அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

(அ) 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளித்தல்.

(ஆ) பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்துப் பாதுகாத்தல்

(இ) தேச பாதுகாப்பிற்காக தேவைப்படும்போது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்.

(ஈ) இயற்கை சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல்

135. கீழ்க்கண்டவற்றுள் எத்தனை இணைகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?

கட்சி சின்னம்

1. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ 1. இரு பூக்கள் மற்றும் புற்கள்

2. தேசியவாத காங்கிரஸ் கட்சி 2. கடிகாரம்

3. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 3. கார்

4. அஸாம் கண பரிஷத் 4. பூட்டு மற்றும் சாவி

(அ) 1 இணை (ஆ) 2 இணைகள் (இ) 3 இணைகள் (ஈ) 4 இணைகள்

136. இந்தியாவில் நீதிப்புனராய்வு பற்றிய கீழ்காண்பவற்றுள் எது/எவை சரியானவை?

1. இந்தியா நீதிப்புனராய்வு என்ற கருத்துருவை அமெரிக்காவிலிருந்து பெற்றது.

2. ஒன்றிய மற்றும் மாநில சட்டங்கள் இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வுக்குட்படும்

3. அரசியலமைப்பு சட்ப்பிரிவு 13B நீதித்துறை மறு ஆய்வு செய்வதை தடுக்கிறது.

(அ) 1 மற்றும் 2 மட்டும் (ஆ) 1 மற்றும் 3 மட்டும்

(இ) 2 மற்றும் 3 மட்டும் (ஈ) 1,2 மற்றும் 3

137. பின்வரும் சட்டப் பிரிவுகளில் எந்தச் சட்டப்பிரிவு உயர்நீதிமன்றத்திற்குப் பேராணைகளைப் பிறப்பிக்க அதிகாரம் அளிக்கின்றது?

(அ) சட்டப்பிரிவு 23 மற்றும் 226 (ஆ) சட்டப்பிரிவு 32 மற்றும் 228

(இ) சட்டப்பிரிவு 226 மற்றும் 36 (ஈ) சட்டப்பிரிவு 32 மற்றும் 226

138. “தந்தை மகற்காற்றும் நன்றி”

என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?

(அ) அவையில் முந்தியிருக்கச் செய்தல் (ஆ) செல்வத்தில் முந்தியிருக்கச் செய்தல்

(இ) குடிப்பெருமையில் முந்தியிருக்கச் செய்தல் (ஈ) நேர்மையில் முந்தியிருக்கச் செய்தல்

139. இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்

(அ) சார்லஸ் மேசன் (ஆ) அலெக்சாண்டர் பர்ன்ஸ்

(இ) அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் (ஈ) சர் ஜான் மார்ஷல்

140. குரோமோசோம் 21-ல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது

(அ) அரிவாள் இரத்த சோகை (ஆ) டவுன் சின்ட்ரோம்

(இ) க்லைன்ஃபெல்டர் சின்ட்ரோம் (ஈ) தலசீமியா

141. சரியான இணையைத் தேர்வு செய்க.

1. பட்டடக்கல் – வாதாபி சாளுக்கியர்

2. எலிபெண்டா குகைகள் – அசோகர்

3. எல்லோரா குகைகள் – ராஷ்டிரக்கூடர்கள்

4. மாமல்லபுரம் – முதலாம் நரசிம்மவர்மன்

(அ) 1,3,4 சரியானது (ஆ) 2,3,4 சரியானது

(இ) 4,3,2 சரியானது (ஈ) 4,1,2 சரியானது

142. “இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்” எனக் கூறியவர்

(அ) மகாத்மா காந்தி (ஆ) ஜவஹர்லால் நேரு

(இ) Dr.B.Rஅம்பேத்கர் (ஈ) சர் சையது அகமதுகான்

143. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்?

1. இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.

2. பஞ்சாப்-ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன.

3. கங்கைச் சமவெளி மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் மிசோரம் வரை பரவியுள்ளது.

4. பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி மேகாலயாவில் அமைந்துள்ளது.

(அ) 1,3 மற்றும் 4 மட்டும் (ஆ) 1 மற்றும் 2 மட்டும்

(இ) 2 மற்றும் 3 மட்டும் (ஈ) 2 மற்றும் 4 மட்டும்

144. சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்:

வாக்கியம் 1 : கங்கை-பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகளில் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.

வாக்கியம் 2 : அலையாத்திக் காடுகள் “மாங்குரோவ்” காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

(அ) இரண்டு வாக்கியங்களும் சரி (ஆ) இரண்டு வாக்கியங்களும் தவறு

(இ) வாக்கியம் 1 சரி 2 தவறு (ஈ) வாக்கியம் 1 தவறு 2 சரி

145. விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக:

விருதுகள் அங்கீகாரம்

1. பெருந்தலைவர் காமராசர் விருது 1. பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல்

2. புதுமைப்பள்ளி விருது 2. சிறந்த செயல்பாட்டிற்கான விருது

3. கனவு ஆசிரியர் விருது 3. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை

மேம்படுத்துதல்

4. ராதா கிருஷ்ணன் விருது 4. ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல்

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 2 3 1 4

இ. 1 2 4 3

ஈ. 3 4 2 1

146. புவிசார் குறியீடு (GI tag) பொருட்களை அதன் இடத்துடன் பொருத்துக.

பொருள் இடம்

அ. மஞ்சள் 1. மதுரை

ஆ. பாய் 2. ஈரோடு

இ. வண்ணப்பூச்சு (ஓவியம்) 3. பத்தமடை

ஈ. சுங்குடி 4. தஞ்சாவூர்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 2 3 4 1

இ. 1 3 2 4

ஈ. 2 1 4 3

147. பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை ———- எனப்படும்

(அ) சமுதாய நல்லிணக்கம் (ஆ) தேசிய ஒருங்கிணைப்பு

(இ) பெண்கள் முன்னேற்றம் (ஈ) சமுதாய நலம்

148. தேசிய ஊராட்சி நாள் ———— ஆகும்

(அ) டிசம்பர் 24 (ஆ) ஆகஸ்ட் 24 (இ) ஏப்ரல் 24 (ஈ) செப்டம்பர் 24

149. “இழுக்கா இயன்றது அறம்”

– எவை?

(அ) அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் (ஆ) அறம், பொருள், இன்பம், வீடு

(இ) மகிழ்ச்சி, சத்தமிடுதல், சிரித்தல், அமைதி (ஈ) காமம், வெகுளி, மயக்கம், வினை

150. சரியான இணைகளைத் தேர்வு செய்க

1. ஒண்டிவீரன் – மருது சகோதரர்கள்

2. கோபாலநாயக்கர் – திண்டுக்கல் கூட்டமைப்பு

3 குயிலி – புலித்தேவர்

4. முத்துவடுகநாதர் – காளையர் கோவில் போர்

(அ) 1 மற்றும் 3 சரி (ஆ) 1 மற்றும் 2 சரி (இ) 2 மற்றும் 3 சரி (ஈ) 2 மற்றும் 4 சரி

151.ஒருவனுடைய செல்வம் சமுதாயத்திற்குப் பயன்படுவதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?

(அ) ஊருணி (ஆ) கடல் (இ) ஆறு (ஈ) ஏரி

152. தமிழ்நாட்டின் முதலாவது பல்முனையம் சரக்குப் போக்குவரத்துப் பூங்காவில் ——– அமைப்பிற்குத் தொடர்பு இல்லை.

(அ) சென்னைத் துறைமுகக் கழகம்

(ஆ) தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்

(இ) நேஷனல் ஹைவேஸ் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட்

(ஈ) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்

153. 2021ஆம் ஆண்டிற்கான “ஞானபீட விருதை” வென்றவர் யார்?

(அ) தாமோதர் மௌசோ (ஆ) கிருஷ்ணா சோப்தி

(இ) அமிதவ் கோஷ் (ஈ) நில்மனி பூக்கன்

154. இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீட்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம், கீழ்கண்ட மூன்று அரசமைப்புக் கூறுகளைத் திருத்தியது

(அ) 334, 342A மற்றும் 366 (ஆ) 338B, 341 மற்றும் 363

(இ) 338B, 342A மற்றும் 366 (ஆ) 333,341A மற்றும் 362

155. கீழ்க்காணும் வாக்கியங்களில் எவையெல்லாம் சரி?

1. மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் CDRI கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டை சோதிக்க உள்நாட்டிலேயே “om” எனும் ஆர்டி-பிசிஆர் கண்டறியும் கருவி உருவாக்கியுள்ளது.

2. ஒமிக்ரானின் குறிப்பிட்ட சோதனைக்கு எந்த ஒரு அரசு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் கருவி “om”.

3. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா வைரஸ் சோதனை கருவி “om”

(அ) 1 மற்றும் 2 மட்டும் (ஆ) 2 மற்றும் 3 மட்டும்

(இ) 1 மற்றும் 3 மட்டும் (ஈ) 1,2 மற்றும் 3 அனைத்தும்

156. தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மூன்று ஆறுகள்

(அ) மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா (ஆ) கிருஷ்ணா, நர்மதை மற்றும் தபதி

(இ) நர்மதை, தபதி மற்றும் மாஹி (ஈ) மாஹி, மகாநதி மற்றும் கோதாவரி

157. சரியான இணையைக் கண்டுபிடி:

(அ) நியூக்ளியோசைடு-நைட்ரஜன் காரம் + பாஸ்பேட்

(ஆ) பிரிமிடின்கள்-சைட்டோசின் மற்றும் சர்க்கரை

(இ) பியூரின்கள்-அடினைன் மற்றும் குவானைன்

(ஈ) நியூக்ளியோடைடு-நியூக்ளியோசைடு+சர்க்கரை

158. மென்மையான வண்டல் பாறை அடுக்குகளின் துளைகளில் உள்ள வாயுவின் பெயர் என்ன?

(அ) ஷேல் வாயு (ஆ) கோபர் வாயு (இ) நீர் வாயு (ஈ) ஆக்சிஜன் வாயு

159. கூட்டுப் பொருளை அதன் வினைபடு தொகுதியுடன் இணை

கூட்டுப்பொருள் வினைபடு தொகுதி

அ. ஆல்கஹால் 1. -COOH

ஆ. ஆல்டிஹைடு 2. -OH

இ. கீட்டோன் 3. -CHO

ஈ. கார்பர்கஸிலிக் அமிலம் 4.

அ ஆ இ ஈ

(அ) 2 1 3 4

(ஆ) 2 3 1 4

(இ) 3 2 4 1

(ஈ) 2 3 4 1

160. வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த எந்த விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன?

(அ) நியூட்டனின் முதல் விதி (ஆ) நியூட்டனின் இரண்டாம் விதி

(இ) பாஸ்கல் விதி (ஈ) மேற்கண்ட அனைத்தும்

161. கீழ்க்காணும் சமன்பாடுகளுள் எது விசைக்கான சமன்பாடில்லை?

(அ a) F = m x a (ஆ) F ΔP x t (இ) F = M(v-u)/t (ஈ) F = ΔP/t

162. கீழ்க்கண்ட கலப்படத்தை உணவோடு இணை செய்க.

(அ) ஹைட்ரஜன் பெராக்ஸைடு 1. பளபளப்பான தோற்றம்

(ஆ) உணவு நிறமூட்டிகள் 2. பால்

(இ) கால்சியம் கார்பைடு 3. பசுமைத் தோற்றம்

(ஈ) கார்னோபா மெழுகு 4. வாழைப்பழத்தைப் பழுக்க வைப்பதற்கு

அ ஆ இ ஈ

(அ) 1 3 4 2

(ஆ) 2 3 4 1

(இ) 3 4 1 2

(ஈ) 4 1 2 3

163. பொருத்துக.

(அ) சிவசுப்ரமணியனார் 1.கயத்தாறு கோட்டை

(ஆ) கட்டபொம்மன் 2. சங்ககிரி கோட்டை

(இ) மருது சகோதரர்கள் 3. நாகலாபுரம்

(ஈ) தீரன் சின்னமலை 4. திருப்பத்தூர் கோட்டை

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 3 4 1 2

இ. 3 1 2 4

ஈ. 4 1 3 2

164. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக.

(அ) சிவாஜியின் பாதுகாவலர் தாதாஜி கொண்டதேவ்.

(ஆ). சிவாஜி ராஜ்கோஷ் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார்.

(இ) சிவாஜியின் படை வீரர்கள் சூரத்தை 1665ல் சூறையாடினார்.

(ஈ) 1674-இல் சத்ரபதி எனும் பெயரில் முடிசூடினார்.

165. சரியான கூற்றுக்களைக் கண்டறிக.

1. பாரதியின் “இந்தியா” வார இதழ் மிதவாத தேசியவாதிகளின் குரலாகத் திகழ்ந்தது.

2. 1907-ல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்து கொண்டார்.

3. சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார்.

4. தி இந்து பத்திரிக்கையை வெளியட்டவர் G.சுப்ரமணிய ஐயர்.

(அ) 1 மற்றும் 2 மட்டும் சரி (ஆ) 1,2 மற்றும் 3 மட்டும் சரி

(இ) 2 மற்றும் 3 மட்டும் சரி (ஈ) 2,3 மற்றும் 4 மட்டும் சரி

166. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

1. பாளையக்காரர் முறை காக்கத்தியப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.

2. கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் சேவலை 1764-ல் மீண்டும் கைப்பற்றினார்.

3. கம்பெனி நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.

4.ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.

(அ) 1,2 மற்றும் 4 ஆகியவை சரி (ஆ) 1,2 மற்றும் 3 ஆகியவை சரி

(இ) 3 மற்றும் 4 ஆகியவை சரி (ஈ) 1 மற்றும் 4 ஆகியவை சரி

167. பின்வரும் பத்தியைப் படித்து பின்வரும் வினாவிற்கு பதிலளிக்கவும். இந்த பகுதிக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.

பத்தி.

சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் உருவாக்கம் சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அற்புதமான வளர்ச்சியைக் குறித்தது. தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் மக்களுக்குக் கப்பல் கட்டுவதில் நடைமுறைப் பயிற்சி அளிக்கவும். கடல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு சவால் விடுவதில் உறுதியாகவும் வ.உ.சிதமப்பரம் 1906இல் ஷியாலியில் ஒரு நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்குவதற்கான தனது முடிவை அறிவித்தார்.

பின்வருவனவற்றில் எது பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது?

(அ) ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனம் அந்த நாட்களில் நல்ல வருமானத்தை ஈட்டியது. இது ஒரு ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைக் குறித்தது.

(ஆ) சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் உருவாக்கம் கடல் வணிகத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்தை நிறுத்தியது.

(இ) வ.உ.சிதம்பரம் நேவிகேஷன் நிறுவன விவகாரங்கள் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதில் மற்றவர்களைச் சார்ந்திருந்தார்.

(ஈ) கப்பல் கட்டும் பாரம்பரியத்தில் தமிழர்களின் அறிவை மீட்டெடுப்பது நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்கியதன் நோக்கமாகும்.

168. குப்தர் காலத்தின் நிலங்களை கீழ்க்கண்டவற்றுடன் சரியாக பொருத்திடுக.

அ. சேத்ரா 1. தரிசு நிலம்

ஆ. கிலா 2. வேளாண்மைக்கு உகந்த நிலம்

இ. அப்ரகதா 3. குடியிருப்பதற்கு உகந்த நிலம்

ஈ. வஸ்தி 4. வன நிலம்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 4 2 1 3

இ. 2 1 4 3

ஈ. 3 4 1 2

169. கீழ்வரும் கூற்றுகளில் “நிதி அயோக்” பற்றிய எந்தக் கூற்று சரியானது?

1. அனைத்து மாநில முதல்வர்களும், சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்கள் தவிர ஆளும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

2. இந்தியப் பிரதமர் “நிதி அயோக்கின்” தலைவர் ஆவார்.

3. இந்திய நிதியமைச்சர் துணை தலைவராக செயல்படுகிறார்.

(அ) 2 மற்றும் 3 மட்டும் (ஆ) 2 மட்டும் (இ) 1 மட்டும் (ஈ) 1 மற்றும் 2 மட்டும்

170. கூற்று (A) : இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார பண வழங்கலைக் கட்டுப்படுத்துகிறது.

காரணம் (R) : அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்தவும். பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது.

(அ) (A) தவறு; (R) சரி

(ஆ) (A) சரி; ஆனால் (R) தவறு

(இ) (A) சரி; ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல

(ஈ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும்.

171. கூற்று (A) : நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது.

காரணம் (R) : நுண்ணீர் பாசன திட்டத்தில் அளவான நீர் சீரான கால இடைவெளியில் பாய்ச்சப்படுகிறது. பணியாட்களின் செலவைக் குறைத்து, உரப் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு விளைச்சலையும் அதிகரிக்கிறது.

(அ) (A) சரி; ஆனால் (R) தவறு

(ஆ) (A) தவறு ; ஆனால் (R) சரி

(இ) (A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் ஆகும்.

(ஈ) (A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் அல்ல

172. கீழ்கண்ட வரைபடத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

(அ) 12 (ஆ) 13 (இ) 14 (ஈ) 15

173. 3-க்கு எதிரான தளத்தில் உள்ள எண் எது?

A picture containing text, clock

Description automatically generated

(அ) 1 (ஆ) 4 (இ) 6 (ஈ) 5

174. விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி:

49, 121, 169, ?, 361

(அ) 225 (ஆ) 256 (இ) 289 (ஈ) 324

175. ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 5 செ.மீ மற்றும் அதன் மூலைவிட்டம் 13 செ.மீ. எனில், செவ்வகத்தின் பரப்பு காண்க.

(அ) 74 செ.மீ2 (ஆ) 96 செ.மீ2 (இ) 60 செ.மீ2 (ஈ) 56 செ.மீ2

176. ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக பணியமர்த்தப்பட்டார். ஆனால் அவர் சில நாட்கள் வேலைக்கு வராமல், வேலை செய்த நாட்களுக்கான உதியமாக ₹.1,387 பெற்றார். அவர் அனைத்து நாட்களிலும் வேலை செய்திருந்தால் ஊதியமாக ₹.1,752 பெற்றிருப்பார் எனில் அவர் வேலை செய்த நாட்களைக் காண்க.

(அ) 19 (ஆ) 21 (இ) 24 (ஈ) 29

177. கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம

(அ) 75 (ஆ) 125 (இ) 375 (ஈ) 450

178. ஐந்தின் ஒரு பகுதி மற்றும் எட்டின் ஒரு பகுதி என இரு பகுதியாக பிரிக்கப்பட்ட எண் 94-இன் விகிதம் 3 : 4 எனில் அதன் முதல் பகுதி

(அ) 28 (ஆ) 30 (இ) 36 (ஈ) 40

179. எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க.

R M E N B U

↓ ↓ ↓ ↓ ↓ ↓

1 2 3 4 5 6

(அ) 625314 (ஆ) 462531 (இ) 462315 (ஈ) 542531

180. 100-லிருந்து 10-ஐ உன்னால் எத்தனை முறை கழிக்க முடியும்?

(அ) 1 (ஆ) 100 (இ) 10 (ஈ) 9

181.முகேஷ் ஒரு நாளில் 2/7 பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில் அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்?

(அ) 2 1/2 நாட்கள் (ஆ) 3 1/2 நாட்கள் (இ) 4 1/2 நாட்கள் (ஈ) 5 1/2 நாட்கள்

182. ஒரு விவசாயி ₹.20,000-ஐ ஆண்டொன்றுக்கு 4.5% தனி வட்டியில் ஒருவரிடமிருந்து கடனாக பெறுகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் முழுவதும் கடனை அடைக்க செலுத்த வேண்டிய தொகை

(அ) ₹.4,500 (ஆ) ₹.15,500 (இ) ₹.17,000 (ஈ) ₹.24,500

183. ₹.1,500-க்கு 3 ஆண்டுக்கு இரு வெவ்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம் ₹.13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம்

(அ) 0.1% (ஆ) 0.2% (ஈ) 0.3% (ஈ) 0.4%

184. தவறாக பொருந்தியுள்ளது எது?

(அ) அரசியல் அமைப்ப பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்

(ஆ) அரசியல் அமைப்பு பிரிவு 17 – பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு

(இ) அரசியல் அமைப்பு பிரிவு 21(A) – தொடக்க கல்வி பெறும் உரிமை

(ஈ) அரசியல் அமைப்பு பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை

185. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் ——— போல் தோற்றம் அளிப்பவையாகும்.

(அ) மாக்னா சாசனம், 1215 (ஆ) பட்டயச் சட்டம், 1813

(இ) அறிவுறுத்தல் செயற்கருவி, 1935 (ஈ) ஒழுங்குபடுத்தும் சட்டம், 1773

186. பொருத்துக:

அ. சர்க்காரியா ஆணையம் 1. தமிழ்நாடு அரசாங்கம்

ஆ. இராஜமன்னார் குழு 2. அகாலி தளம்

இ. அனந்தப்பூர் சாஹிப் தீர்மானம் 3. உச்சநீதிமன்றம்

ஈ. பொம்மை தீர்ப்பு 4. மத்திய அரசாங்கம்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 4 1 2 3

இ. 2 1 3 4

ஈ. 3 2 4 1

187. கீழ்க்கண்டவைகளை முறையாகப் பொருத்துக.

அ. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1. 1980

ஆ. சட்ட அளவியல் சட்டம் 2. 1955

இ. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 3. 2009

ஈ. கள்ளச் சந்தைப்படுத்துதல் தடுப்பு சட்டம் 4. 1986

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 1 2 3 4

இ. 3 4 1 2

ஈ. 4 1 3 2

188. பொருத்துக:

அ. வராகமிகிரர் 1. மருத்துவர்

ஆ. காளிதாசர் 2. அகராதியியல் ஆசிரியர்

இ. அமரசிம்ஹா 3. சமஸ்கிருத புலவர்

ஈ. தன்வந்திரி 4. வானியல் அறிஞர்

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 4 2 1 3

இ. 4 3 2 1

ஈ. 3 4 1 2

189. கி.பி.முதலாம் நூற்றாண்டில் கிருத்துவ மதம் இந்தியாவில் இயேசுவின் சீடரான ———— என்பவரால் கொண்டு வரப்பட்டது.

(அ) புனித பீட்டர் (ஆ) புனித ஜான் (இ) புனித மேத்யூ (ஈ) புனித தாமஸ்

190. கீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிப்பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.

1. சமஸ்கிருதம்.

2.தெலுங்கு.

3.மலையாளம்.

4.தமிழ்

(அ) 2,3,4,1 (ஆ) 3,1,4,2 (இ) 4,2,3,1 (ஈ) 4,1,2,3

191. பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும்.

(அ) ஹிரன் (ஆ) பர்னர் (இ) பஞ்சர் (ஈ) தவா

192. அகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக.

அகழ்வாராய்ச்சி இடங்கள் மாவட்டம்

அ. கீழடி 1. தூத்துக்குடி

ஆ. கொற்கை 2. அரியலூர்

இ. கங்கை கொண்ட சோழபுரம் 3. தஞ்சாவூர்

ஈ. குரும்பன்மேடு 4. சிவகங்கை

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 3 2 1 4

இ. 4 1 2 3

ஈ. 1 4 3 2

193. இந்தியாவின் “மின்னியல் தலைநகரம்” என்று அழைக்கப்படும் நகரம் எது?

(அ) ஹைதராபாத் (ஆ) பெங்களுரு (இ) சென்னை (ஈ) டெல்லி

194. ஒரு மின்சுற்றிலுள்ள மின்கூறுகளை அதன் பயன்பாட்டுடன் சரியாக பொருத்துக.

மின்கூறு மின்கூறின் பயன்பாடு

அ. கால்வனோ மீட்டர் 1. மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய

பயன்படுகிறது.

ஆ. வோல்ட் மீட்டர் 2. மின்னோட்டத்தை அளவிட

இ. அம்மீட்டர் 3. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட

ஈ. மின்தடையாக்கி 4. மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 2 3 1 4

இ. 4 2 3 1

ஈ. 2 3 4 1

195. முதல் தேசிய கல்விக் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது?

(அ) 1964 (ஆ) 1946 (இ) 1968 (ஈ) 1986

196. வலியுறுத்தல் (A) : சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் கொள்கைக் குறிப்பு 2021-2022இன் படி கோவிட் தொற்று சவாலின் போது தமிழக அரசு மிகவும் சிறப்பாக தனது கவனத்தை தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சுகாதார முயற்சிகள் மற்றும் சேவை மற்றும் பிற தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்களில் திறம்பட சேவையாற்றியது.

காரணம் (R) : இந்தியாவில் மருத்துவருக்கும், நோயாளிக்குமான விகிதம் மிக அதிகம் உள்ளவற்றில் தமிழ்நாடும் ஒன்று.

(அ) (A) உண்மை (R) தவறு

(ஆ) (A) மற்றும்(R) இரண்டும் உண்மை (R) என்பது (A)-இன் சரியான விளக்கம்

(இ) (A) தவறு(R) உண்மை

(ஈ) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை. ஆனால் (R) என்பது (A)-இன் சரியான விளக்கம் அல்ல.

197. மாவட்டங்களை, அவை கொண்டுள்ள காடுகளின் அளவைக் கொண்டு இறங்குவரிசையில் எழுதுக.

1.தர்மபுரி.

2.ஈரோடு.

3.வேலூர்.

4. கோயம்புத்தூர்

(அ) 1,2,3,4 (ஆ) 2,4,1,3 (இ) 4,1,2,3 (ஈ) 1,4,2,3

198. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது?

அரசியல் உரிமைகள் உள்ளடக்கியது.

1. வாக்களிக்கும் உரிமை.

2. அரசுப்பணிகளில் பதவி வகிக்கும் உரிமை

3. அரசை விமர்சிக்கக் கூடாது.

(அ) 1 மற்றும் 2 (ஆ) 1 மற்றும் 3 (இ) 2 மற்றும் 3 (ஈ) 3 மட்டும்

199. நாட்டிற்கு அணிகலனானவற்றை வள்ளுவர் எந்த வரிசையில் தந்துள்ளார்?

1. செல்வம்.

2.இன்பம்.

3.ஏமம்.

4.பிணியின்மை.

5.விளைவு

(அ) 4,1,5,2,3 (ஆ) 1,2,3,4,5 (இ) 4,3,5,2,1 (ஈ) 1,4,3,5,2

200. ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?

(அ) அன்பும் அறனும் (ஆ) பணிவும் இன்சொல்லும்

(இ) அறிவும் ஆற்றலும் (ஈ) இல்லறமும் துறவறமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!