Answer Key

Tnpsc Hindu Religious Executive Officer Exam Previous Questions and Answer key in Tamil

Tnpsc Hindu Religious Executive Officer Exam Previous Questions and Answer key in Tamil

1. சுயநலத்தின் அடையாளங்களாக பகவத் கீதை கூறுவது எவை?

(அ) சோகம், சுயவருத்தம் (ஆ) சோகம், சந்தேகம்

(இ) தனிமை, சந்தேகம் (ஈ) பற்றுதல், சோகம்

2. பிரவிரித்தி என்பது

(அ) சுயநலத்துடன் கூடிய செயற்பாடு (ஆ) சுயநலமற்ற செயற்பாடு

(இ) சரியான செயற்பாடு (ஈ) நல்ல செயற்பாடு

3. கீதை கூறும் கர்மயோகத்துடன் சரியாக பொருந்தக்கூடிய வாக்கியத்தை தெரிவு செய்.

(அ) செயல்பாடு என்பதை நாம் வழிமுறையாகக் கொள்ளாமல், அடையும் முடிவு அதில் இருப்பதாய் கருதல் வேண்டும்

(ஆ) செயல்பாடு என்பது நல்ல முடிவை தரக்கூடிய வழிமுறை

(இ) செயல்பாடு என்பது கருதுகோள் அல்ல மாறாக அது பணி

(ஈ) உங்கள் கவனம் முழுவதும் அடையும் பலனிலேயே குறியாக இருக்க வேண்டும்

4. பழைய இந்திய துணைக் கண்டத்தில் பாசுபதம், பாகவதம் மற்றும் தந்திர சமய வளர்ச்சியை கொண்டு தாங்கள் புரிந்துக் கொள்வது என்ன?

(அ) ஆரியமயமாக்கம் (ஆ) புத்த சமய வளர்ச்சியின் எழுச்சி

(இ) மகா யுத்தங்கள் (ஈ) புராணங்களின் வளர்ச்சி

5. சைவ ஆகமங்களில் உள்ள சிவபேத ஆகமங்களின் எண்ணிக்கை

(அ) பத்து (ஆ) பதினெட்டு (இ) பதினான்கு (ஈ) இருபது

6. இவர்களுள் எந்த சைவ சமயக் குரவரை சிவபெருமான் நீற்றறையில் இருந்தபோதும், கடலில் தள்ளப்பட்ட போதும் காப்பற்றினார்

(அ) அப்பர் (ஆ) சம்பந்தர் (இ) சுந்தரர் (ஈ) மாணிக்கவாசகர்

7. சைவ சித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ள நான்கு மார்க்கங்களில், இறைவனுக்கு அருகாமையில் அடைதல்

(அ) சாயுச்சியம் (ஆ) சாரூபம் (இ) சாமீபம் (ஈ) சாலோகம்

8. சிவபெருமானின் பரத்துவம் சுட்டப்பெற்றுள்ள உபநிடதம்

(அ) கட உபநிடதம் (ஆ) கேனோ உபநிடதம்

(இ) மாண்டூக்ய உபநிடதம் (ஈ) ஐதரேய உபநிடதம்

9. இவர்களிருவர் சமகாலத்துக் குரவர் என கருதுவர்

(அ) அப்பர் மற்றும் சம்பந்தர் (ஆ) சம்பந்தர் மற்றும் சுந்தரர்

(இ) சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் (ஈ) சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர்

10. வைணவம் கூறும் முக்கியப் பொருட்கள் ஐந்து அதனை ———— என்பர்.

(அ) பாஞ்சராத்ரம் (ஆ) பஞ்ச சம்ஸ்காரம் (இ) அர்த்த பஞ்சகம் (ஈ) பஞ்ச பூதம்

11. பின்வரும் வைணவத்தின் அர்த்த பஞ்சகத்தை பொருத்துக.

அ. அடைபவன் 1. உபாய சொரூபம்

ஆ. அடையப்படுவது 2. ஸ்வஸ்வரூபம்

இ. பயன் 3. புருஷார்த்த ஸ்வரூபம்

ஈ. உபாயம் 4. பரஸ்வரூபம்

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 1 2 3 4

இ. 4 2 1 3

ஈ. 2 4 3 1

12. “பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்” எனத் தொடங்கும் திவ்ய பிரபந்த பாடலை இயற்றியவர்.

(அ) தொண்டரடிப்பொடி ஆழ்வார் (ஆ) திருமங்கையாழ்வார்

(இ) திருப்பாண் ஆழ்வார் (ஈ) குலசேகர ஆழ்வார்

13. கந்தன் என்ற முருகனுடைய பிறப்பையே பொருளாகக் கொண்டு காளிதாசர் இயற்றிய நூல்

(அ) ரகுவம்சம் (ஆ) சாகுந்தலம் (இ) குமார சம்பவம் (ஈ) ஸ்கந்த புராணம்

14. அருணகிரிநாதர் பாடிய பாடல் தொகுப்பின் பெயர்

(அ) திருவிசைப்பா (ஆ) தேவாரம் (இ) திருப்புகழ் (ஈ) திருவாசகம்

15. ஓம் எனும் பிரணவத்தின் வரி வடிவமே ——– வடிவம் ஆகும்.

(அ) முருகன் (ஆ) விநாயகர் (இ) சிவன் (ஈ) சக்தி

16. விநாயகரை “ஐந்துகரத்தனை ஆனை முகத்தனை” எனக் கூறியவர்

(அ) திருமூலர் (ஆ) சிவபெருமான் (இ) பார்வதி (ஈ) தாயுமானவர்

17. எந்த நெறியில் சூரியனையே வழிபாட்டுக்குரிய பொருளாகக் கொள்கின்றனர்?

(அ) சௌரநெறி (ஆ) சைவநெறி (இ) வைணவ நெறி (ஈ) சாக்க நெறி

18.பொருத்துக:

ஆழ்வார்கள் அம்சம்

அ. பொய்கை ஆழ்வார் 1. நந்தகம்

ஆ. பூதத்தாழ்வார் 2. சக்ரம்

இ. பேயாழ்வார் 3. பாஞ்சசன்யம்

ஈ. திருமழிசை ஆழ்வார் 4. கதை

அ ஆ இ ஈ

அ. 1 4 3 2

ஆ. 4 2 1 3

இ. 3 4 1 2

ஈ. 2 3 4 1

19. “தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே” எனக் கூறியவர்

(அ) ஒளவையார் (ஆ) திருமூலர் (இ) குலச்சிறையார் (ஈ) திருநீலகண்டயாழ்ப்பாணர்

20. மத்துவரின் துவைதம் என்பது ———– ஆகும்

(அ) ஒருமைக் கொள்கை (ஆ) இருமைக் கொள்கை

(இ) மும்மைக் கொள்கை (ஈ) பண்மைக் கொள்கை

21. ஒரு பொருள் மாறாமல் இருக்கும் : ஆனால் அது மாறாத பொழுது மாறிவிட்டதாகத் தெரியும். இதற்கு ———- என்றுபெயர்.

(அ) வியர்த்த வாதம் (ஆ) பரிணாம வாதம்

(இ) சூன்யவாதம் (ஈ) பிரம்ம பரிணாம வாதம்

22. துவைதம் என்பதன் நேர்பொருள்

(அ) பன்மைக் கோட்பாடு (ஆ) விசேட ஒருமைக் கோட்பாடு

(இ) ஒருமைக் கோட்பாடு (ஈ) இருமைக் கோட்பாடு

23. இரமணரை “மகரிஷி” என்ற புனைப் பெயருடன் அழைத்தவர்.

(அ) சுந்தரம் ஐயர் (ஆ) கணபதி சாஸ்திரி (இ) முத்துகிருஷ்ண பாகவதர் (ஈ) நாக சுந்தரம்

24. சங்கரரது விவேக சூடாமணி என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?

(அ) அப்பர் (ஆ) இராமானுஜர் (இ) இரமணர் (ஈ) இராமகிருஷ்ணர்

25. தாயுமானவர் பாடல்கள் ———— என அறிஞர்களால் பாராட்டப்படுகிறது

(அ) பஞ்சாக்கர தேசிகர் மாலை (ஆ) திவ்யபிரபந்தம்

(இ) பெரியஞானக் கோவை (ஈ) தமிழ் மொழியின் உபநிடதம்

26. தமிழக சித்தராக கருதப்படுபவர்

(அ) கபிலர் (ஆ) அகத்தியர் (இ) வால்மீகி (ஈ) வியாசர்

27. “வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற

வித்தகச் சித்தர்கணமே”

– இது யாருடையக் கூற்று?

(அ) தாயுமானவர் (ஆ) வள்ளலார் (இ) பாரதியார் (ஈ) திருமூலர்

28. எந்த காலக்கட்டத்தை வேத காலகட்டம் என்கிறோம்?

(அ) கி.மு2000-கி.மு.400 (ஆ) கி.மு.1000-கி.மு.500

(இ) கி.மு.1500-கி.மு.600 (ஈ) கி.மு.2000-கி.மு.500

29. தரிசனம் எனும் சொல்லின் நேரடி பொருள் எதைக் குறிக்கிறது?

(அ) பார்வை (ஆ) விசாரணை (இ) விளக்கம் (ஈ) காட்சிப்படுத்துதல்

30. கீழே கொடுக்கப்பட்டவற்றுள் யோக தத்துவத்தின் சரியான கூற்றுகளை கண்டறிக:

1. வியக்கத்தக்கவற்றை ஒதுக்குதல் இயமம் எனப்படும்

2. விதிக்கப்பட்ட நல்லவற்றைச் செய்தல் நியமம்

3. பிரணயாமத்தில் பிராணவாயுவை உள்ளிழுத்தல் இரேசகம், உள்ளிருந்துதல், பூரகம் என்றும் வெளியிடுதல் கும்பகம் என்று குறிப்பிடப்படும்

(அ) 1 மட்டும் (ஆ) 1 மற்றும் 2 (இ) 2 மற்றும் 3 (ஈ) 1 மற்றும் 3

31. “மீமாம்சம்” என்ற சொல்லின் பொருள் யாது?

(அ) குறிப்பிட்ட ஒரு பொருள் ஏனைய பொருட்களில் இருந்து சிறப்புத் தன்மையை ஆராய்தல்

(ஆ) யாதானும் ஒரு சிக்கலுக்கு ஆழ்ந்த சிந்தனையாலும் பகுத்தறியும் ஆய்வினாலும் தீர்வு காண்பது

(இ) யாதானும் ஒரு பொருளுக்கு விடை காண்பது

(ஈ) வாதவித்தை அல்லது ஏதுவித்தை

32. பாதஞ்சலி சூத்திரம் எனப்படும் யோக சூத்திரத்தின் நான்கு பாதங்களை முறையாக வரிசைப்படுத்துக.

(அ) சாதனபாதம், சமாதிபாதம், விபூதிபாதம், கைவல்யபாதம்

(ஆ) சமாதிபாதம், சாதனபாதம், விபூதியாதம், கைவல்யபாதம்

(இ) விபூதிபாதம், கைவல்யபாதம், சமாதிபாதம், சாதனபாதம்

(ஈ) கைவல்யபாதம், விபூதிபாதம், சமாதிபாதம், சாதனபாதம்

33. உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை

(அ) 5 (ஆ) 6 (இ) 7 (ஈ) 8

34. பின்வருவனவற்றில் தவறான இணையைக் கண்டறிக:

1. சிவஞான போத மூன்றாம் சூத்திரம் – ஆன்மாவின் உண்மை

2. சிவஞான போத ஆறாம் சூத்திரம் – இறையின் சிறப்பு

3. சிவஞான போத ஒன்பதாம் சூத்திரம் – சிவப்பேறு

4. சிவஞான போத பன்னிரண்டாம் சூத்திரம் – அணைந்தோர் தன்மை

(அ) 1 மற்றும் 2 மட்டும் (ஆ) 2 மட்டும் (இ) 3 மட்டும் (ஈ) 3 மற்றும் 4 மட்டும்

35. சைவ சமய நெறிகளின் ஓவியமாக அமைந்தது

(அ) தெடசிணாமூர்த்தி வடிவம் (ஆ) இலிங்கோத்பவர் வடிவம்

(இ) நடராச வடிவம் (ஈ) அகோரமூர்த்தி வடிவம்

36. சமண தத்துவத்தின்படி கீழே கொடுக்கப்பட்ட ஐந்து நோன்புகளில் சரியான வரிசையை கண்டறிக:

1. பிற உயிர்க்கு இன்னா செய்யாமை.

2. கள்ளாமை.

3.பொய்யாமை.

4.மணமாகாத வாழ்க்கையை மேற்கொள்வது.

5.உலகைக் துறத்தல்.

(அ) 1,3,2,4,5 (ஆ) 1,2,3,4,5 (இ) 5,4,3,2,1 (ஈ) 2,3,1,4,5

37. இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரத்தில் அடங்கியுள்ள நூல்

(அ) பிரம்ம சூத்திரம் (ஆ) பகவத்கீதை (இ) உபநிடதம் (ஈ) ரகுவம்சம்

38. “சனாதனதர்மம்” என்பதன் பொருள்

(அ) அழிவில்லா அறம் (ஆ) சமயாச்சாரங்கள் (இ) சடங்கியல் (ஈ) அரசியல் அறம்

39. உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் என்று கூறியவர்

(அ) திருமூலர் (ஆ) சிவவாக்கியர் (இ) அகத்தியர் (ஈ) தொல்காப்பியர்

40. நவக்கிரகங்களின் கீழே கொடுக்கப்பட்டனவற்றுள் சரியானவற்றை பொருத்தி கூறுக.

1. சூரியன்-கிழக்குப் பார்வை.

2.சந்திரன்-மேற்குப் பார்வை.

3.குரு-தெற்குப் பார்வை.

4.ராகு-வடக்குப் பார்வை

(அ) 1,2 சரி (ஆ) 1,3 சரி (இ) 3,4 சரி (ஈ) 2,4 சரி

41. முருகன் சூரனை அழித்து ஆட்கொண்ட திருத்தலம் எது?

(அ) திருச்செந்தூர் (ஆ) திருப்பரங்குன்றம் (இ) திருத்தணி (ஈ) பழனி

42. இசைகள் படிப்படியாக மேல் உயர்ந்து செல்லும் இசைநிரலை ———- எனவும், தாழ்ந்து செல்லும் இசைநிரலை ——— எனவும் சேக்கிழார் கூறுகிறார்.

(அ) அமரோசை மற்றும் ஆரோசை (ஆ) ஆரோசை மற்றும் அமரோசை

(இ) ஸ்ருதி மற்றும் லயம் (ஈ) லயம் மற்றும் ஸ்ருதி

43. பொருத்துக:

அ. புனித நீர் சுத்தி 1. இரட்சாபந்தனம்

ஆ. காப்புக் கட்டுதல் 2. மூர்த்தி பூஜை

இ. குட வழிபாடு 3. புண்யாவாசனம்

ஈ. வடிவ வழிபாடு 4. கும்ப பூஜை

அ ஆ இ ஈ

அ. 2 3 1 4

ஆ. 1 4 3 2

இ. 4 2 1 3

ஈ. 3 1 4 2

44. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் நடைபெறும் விரத விழா எது?

(அ) வைகுண்ட ஏகாதசி விரத விழா (ஆ) கந்த விரத விழா

(இ) சிவராத்திரி விரத விழா (ஈ) திருவாதிரைத் திருவிழா

45. கீழ்கண்டவற்றுள் பழனியை பற்றிய சரியான குறிப்பு எது?

1. திருமகள், காமதேனு, சூரியன், மண்மகள், நெருப்பு கடவுள் ஆகிய ஐவரும் வழிபட்டு இறைவனின் அருள் பெற்ற இடமாதலால் திருவாவினன்குடி எனப் பெயர் பெற்றது.

2. பாலசுப்பிரமணியர் சூரனை அழித்து ஆட்கொண்டு மீண்டதும் சிவபெருமானை வழிபடும் கோலத்தில் வீற்றிருப்பதும்

3. சிறப்பும் அழகும் ஒரு சேரப் பொருந்திய இடம்

(அ) 1 மட்டும் (ஆ) 1,2 மட்டும் (இ) 2,3 மட்டும் (ஈ) 1, 3 மட்டும்

46. இந்து சமய அறநிலை கொடைச் சட்டம் 1959ன் படி இந்து சமய அறநிலைய சட்டங்களை சமண பொது சமய நிறுவனங்களுக்கு அரசு அறிவிக்கை வாயிலாக நீட்டிக்கும் போது அந்நிறுவனங்களுக்கு மறுப்புரைகள் அளிக்க கொடுக்க வேண்டிய கால அளவு

(அ) ஆறு மாதங்களுக்கு குறையாமல் (ஆ) எட்டு மாதங்களுக்கு குறையாமல்

(இ) இரண்டு மாதங்களுக்கு குறையாமல் (ஈ) மூன்று மாதங்களுக்கு குறையாமல்

47. பொருத்துக:

சட்டம் ஆண்டு

அ. நிலக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால்

அரசு பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் 1.1890

ஆ. சமய நிலக்கொடைகள் சட்டம் 2. 1920

இ. அற மற்றும் சமயக் கட்டளைகள் சட்டம் 3. 1817

ஈ. அறநிலைக் கொடைகள் சட்டம் 4. 1863

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 2 3 4 1

இ. 3 4 2 1

ஈ. 4 3 1 2

48. ஸ்மிருதி என்பதன் பொருள் என்ன?

(அ) நினைவிற் கொள்ளப்படுவது (ஆ) காதால் கேட்கப்படுவது

(இ) அறிவால் உணரப்படுவது (ஈ) மனதால் உணரப்படுவது

49. இருக் வேதத்தில் வரும்

“இருக்” என்பதற்கு ———

(அ) யாகம் என்பது பொள்

(ஆ) இன்னிசையால் பாடப்பெற்றது என்பது பொருள்

(இ) துதித்தல் அல்லது வழிபடல் என்பது பொருள்

(ஈ) மந்திரம் உச்சரிக்க வேண்டிய முறைகளை சொல்வது என்று பொருள்

50. இந்து சமயங்கள் அனைத்திற்கும் அடிப்படையாக கூறப்படும் மூன்று நூல்களை எந்த பெயரால் அழைக்கின்றனர்?

(அ) உபநிடதங்கள் (ஆ) பிரம்ம சூத்திரம்

(இ) பிரஸ்தானத் திரயம் (ஈ) வேதங்கள்

51. சிவ ஆகமம் தொடர்பான கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனிக்க.

1. ஆகமங்கள் இருபத்தெட்டு ஆகும்.

2. இறைவனது ஐந்து முகங்களிலிருந்து இருபத்தெட்டு ஆகமங்கள் தோன்றினவென்று காரணாகமத்தால் அறிகிறோம்

(அ) 1 சரி ஆனால் 2 தவறு (ஆ) 1 தவறு ஆனால் 2 சரி

(இ) 1 மற்றும் 2 இரண்டும் சரி (ஈ) 1 மற்றும் 2 இரண்டும் தவறு

52. சரியனவற்றை தேர்ந்தெடுக்கவும்:

இந்து சமய மற்றும் அறநிலைய துறை சட்ட “நீதிமன்றம்” என்பது

1. மாநகர் உரிமையியல் நீதிமன்றம்.

2. மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்.

3 மாவட்ட நீதிமன்றம்

(அ) 1,2 மற்றும் 3 சரியானது (ஆ) 1 மற்றும் 2 சரியானது

(இ) 1 மற்றும் 3 சரியானது (ஈ) 2 மற்றும் 3 சரியானது

53. ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ள அலுவலரல்லாத உறுப்பினர்களின் கால வரம்பு என்ன?

(அ) ஐந்து ஆண்டுகள் (ஆ) பத்து ஆண்டுகள்

(இ) இரண்டு ஆண்டுகள் (ஈ) மூன்று ஆண்டுகள்

54. துணிபு : மாவட்ட குழுவினை அரசாங்கம் அமைக்கின்றது.

காரணம் : பொது நலன் கருதி, தகுந்த வாய்ப்பு வழங்கிய பின் மாவட்ட குழு உறுப்பினர்களை அரசு நீக்கம் செய்யலாம்.

(அ) துணிபு சரியானது, ஆனால் காரணம் தவறு

(ஆ) துணிபு மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் துணிபிற்கான சரியான விளக்கமாகும்.

(இ) துணிபு தவறானது, காரணம் சரி

(ஈ) துணிபு மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் துணிபிற்கான சரியான விளக்கமல்ல

55. பின்வருபவர்களுள் உதவி ஆணையருடைய வட்டார ஆள்வரையினை தீர்மானிப்பது யார்?

(அ) மாநில சட்டமன்றம்

(ஆ) மாநில அரசின் ஒப்புதலுடன் மாவட்ட ஆட்சியர்

(இ) மாநில அரசின் ஒப்புதலுடன் ஆணையர்

(ஈ) மாநில அரசின் ஒப்புதலுடன் உயர்நீதிமன்றம்

56. ஆணையரின் நிருவாக ஆளுகைக்கு உட்பட்டு ———– அல்லது நேர்வுக்கேற்ப ———— அரசால் அவ்வப்போது தீர்மானிக்கப்படுகின்றனர்.

(அ) கூடுதல் ஆணையர், உதவி ஆணையர் (ஆ) இணை ஆணையர், துணை ஆணையர்

(இ) கூடுதல் ஆணையர், இணை ஆணையர் (ஈ) உதவி ஆணையர், துணை ஆணையர்

57. சரியான வரிசையை தேர்ந்தெடு.

(அ) ஆணையர்,கூடுதல் ஆணையர்,துணை ஆணையர்,இணை ஆணையர்,உதவி ஆணையர்

(ஆ) ஆணையர்,கூடுதல் ஆணையர்,இணை ஆணையர்,துணை ஆணையர்,உதவி ஆணையர்

(இ) ஆணையர்,கூடுதல்ஆணையர்,இணை ஆணையர்,உதவி ஆணையர்,துணை ஆணையர்

(ஈ) ஆணையர்,இணை ஆணையர்,கூடுதல் ஆணையர்,உதவி ஆணையர்,துணை ஆணையர்

58. ஆணையர் மற்றும் அவரால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவரும் சுமத்தப்பட்ட கடமை எதனையும் ஆற்றும் பொருட்டு வழிபாட்டிடம் எதனின் வளாகத்திற்குள்ளும் நுழையும் அதிகாரம் பெற்றவராவார்.

(அ) சரி (ஆ) தவறு (இ) சொல்லொன்னாதது (ஆ) மேற்கண்டவற்றுள் ஏதுமில்லை

59. 1959ம் ஆண்டு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தின் பிரிவு 24(6)ன் கீழ் இந்து சமய அறநிலைய ஆணையாளரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினால் பாதிப்பிற்குள்ளான நபர்கள் எவரும் அரசிற்கு மேல்முறையீடு செய்ய வழங்கப்படும் கால அவகாசம், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து

(அ) ஒரு மாதம் (30 நாட்கள்) (ஆ) இரண்டு மாதங்கள் (60 நாட்கள்)

(இ) மூன்று மாதங்கள் (90 நாட்கள்) (ஈ) மேலமுறையீடு செய்ய இயலாது

60. ஆணையர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அலுவலர் எவரும் ——— இல்லாத பட்சத்தில் ஆலய வளாகங்கள் அதன் பகுதி எதற்குள்ளும். அதிகாரத்திற்கு உட்பட்டு நுழைய அதிகாரமில்லை

(அ) ஆணாக (ஆ) விபூதி அல்லது நாமம் (இ) இந்துவாக (ஈ) பண்பாட்டு உடைகள்

61. கீழ்கண்டவற்றுள் அறங்காவலரின் தகுதிகள் அல்லாததை தேர்ந்தெடு

(அ) இந்து சமயத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டவர்

(ஆ) பரம்பரை அறங்காவலர் அல்லாதவராயில் இருபத்து ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்

(இ) விடுவிப்புப் பெறாத நொடிப்பு நிலையராக இருப்பவர்

(ஈ) சமய நிறுவனத்தின் சார்பாக ஊதியம் பெறும் சட்டத் தொழிலாற்றுநராக பணியமர்த்தப்பட்டவர்

62. இணை ஆணையர் நியமிக்கும் தர்மகர்த்தா குழுவிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?

(அ) இரண்டு (ஆ) மூன்று (இ) நான்கு (ஈ) ஐந்து

63. பின்வருபவர்களுள் தர்மகர்தாவினை நியமிக்கும் அதிகாரம் இல்லாத நபர்

(அ) துணை ஆணையர் (ஆ) இணை ஆணையர்

(இ) உதவி ஆணையர் (ஈ) மாவட்ட ஆணையர்

64. தவறான இணையினை தேர்ந்தெடுக்கவும்?

சொத்து மதிப்பு தர்மகர்த்தா நியமனம்

1. ₹.10,000 கீழ் உதவி ஆணையர்

2. ₹.10,000 – 2,00,000 இணை ஆணையர்

3. ₹.2,00,000 – 10,00,000 ஆணையர்

4. ₹.10,00,000க்கு மேல் அரசாங்கம்

(அ) 1 மட்டும் (ஆ) 2 மட்டும் (இ) 3 மட்டும் (ஈ) 4 மட்டும்

65. பின்வரும் எந்த அதிகாரி நல்ல அல்லது போதுமான காரணங்களுக்காக நிருவாக அலுவலரை பணியிடை நீக்கம் (அ) பணி நீக்கம் (அ) விலக்கல் செய்யலாம்?

(அ) துணை ஆணையர் (ஆ) உதவி ஆணையர்

(இ) காவல் ஆணையர் (ஈ) ஆணையர்

66. 1959ம் ஆண்டு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டத்தின் கீழ் சமய நிறுவனங்களில் பதவி வகிப்பவர் அல்லது பணியாளர்கள் நியமனம் செய்வதில் அறங்காவலர் பிறப்பித்த உத்தரவினால் பாதிப்பிற்குள்ளான நபர் அதற்கு மேல்முறையீடு செய்ய வேண்டிய காலவரையறை உத்தரவு கிடைக்கப் பெற்ற நாளிலிருந்து ——- நாட்கள்.

(அ) 30 நாட்கள் (ஆ) 60 நாட்கள் (இ) 90 நாட்கள் (ஈ) 180 நாட்கள்

67. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் விதிக்கு மாறாக உள்ள வழக்கு எது?

(அ) சிரூர் மடம் வழக்கு

(ஆ) எம்.சி.கார்த்திகேயன் எதிர் உதவி ஆணையர் இ.ச.வு.அ.கொ

(இ) அருள்மிகு மீனாட்சி சுந்தரரேஸ்வர் கோயில் எதிர் தமிழ்நாடு அரசு

(ஈ) சேஷம்மாள் எதிர் தமிழ்நாடு அரசு

68. அறங்காவலரின் ஆணையினால் குறையுள்ளவர் அதனை எதிர்த்து யாருக்கு மேல் முறையீடு செய்யலாம்?

(அ) ஆணையருக்கு (ஆ) இணை ஆணையருக்கு அல்லது துணை ஆணையருக்கு

(இ) உதவி ஆணையருக்கு (ஈ) உயர்நீதிமன்றத்திற்கு

69. சமய நிறுவனங்களில் பதவி வகிப்பவர் மற்றும் பணியாளருக்கு எதற்காக தண்டனை வழங்கப்படுகிறது

(அ) நம்பிக்கை மோசடி, திறனின்மை

(ஆ) ஆணைகளுக்கு கீழ்ப்படியாமை

(இ) கடமையை புறக்கணித்தல், தவறான நடத்தை அல்லது வேறு போதிய காரணத்திற்காக

(ஈ) மேற்கூறிய அனைத்தும்

70. அறங்காவலரால் தண்டிக்கப்பட்ட பதவி வகிப்பவர் அல்லது பணியாளர் யாரிடம் மேல்முறையீடு செய்யலாம்?

(அ) கோயில் நிர்வாகம் (ஆ) நிர்வாக அலுவலர்

(இ) இணை ஆணையர் (ஈ) கூடுதல் ஆணையர்

71. சமய நிறுவனங்களுடன் தொடர்புடைய அல்லது சமய நிறுவனங்களில் இருந்து ஊதியம் அல்லது மேல் ஊதியம் (emolument or perquisite) பெறும் பணியாளர் அல்லது பதவி வகிப்பவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரி

(அ) அறநிலையங்களின் அறங்காவலர் (ஆ) உதவி ஆணையாளர்

(இ) துணை ஆணையாளர் (ஈ) இணை ஆணையாளர்

72. பின்வருவனவற்றுள் சேராததை தேர்ந்தெடு.

அறங்காவலர்களால் பணியாளர்களின் மீது விதிக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள்

(அ) அபராதம் (ஆ) இடமாற்றம் (இ) இடைநீக்கம் (ஈ) நீக்கம்

73. தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தில் வரவு-செலவுத் திட்டங்கள், கணக்குகள் மற்றும் தணிக்கை பற்றி எந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

(அ) VIII (ஆ) IX (இ) X (ஈ) XI

74. சமய நிறுவனங்களின் ஆண்டு வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் தணிக்கையாளர்கள் ———-ன் படி பொதுப்பணியாளர்களாக கருதப்படுவர்

(அ) இந்திய தண்டனைத் தொகுப்பு சட்டம் 20 (ஆ) இந்திய தண்டனைத் தொகுப்பு சட்டம் 21

(இ) இந்திய தண்டனைத் தொகுப்பு சட்டம் 22 (ஈ) இந்திய தண்டனைத் தொகுப்பு சட்டம் 23

75. இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் பிரிவு 87(3)ன் கீழ் இச்சட்டத்தின் பிரிவு 92ன் நோக்கங்களுக்காக கணக்கிடப்படுகின்றவாரு ஒட்டி முந்திய பசலி ஆண்டு (IMMEDIATELY Preceding Fasli Year)ல் சமய நிறுவனங்களின் ஆண்டு வருமானம் எவ்வளவு ரூபாய்க்கு குறையாமலிருக்கும் போது ஒருங்கியல் தணிக்கை (Concurrent Audit) செய்யப்பட வேண்டும்.

(அ) 5 லட்சம் (ஆ) 10 லட்சம் (இ) 15 லட்சம் (ஈ) 50 லட்சம்

76. பின்வருவனவற்றை வரிசைப்படுத்தவும்.

அறங்காவலர் அல்லது பிற ஆள் எவரும் முறைகேடாக, சட்ட முரணாக அல்லது முறையற்ற செலவு செய்திருக்கிறார் எனக் கருதும் போது ஒரு அதிகாரியானவர்.

1. தண்டக்கட்டணம் ஏன் அவருக்கு எதிராக பிறப்பிக்கக் கூடாது என விளக்கம் கேட்கலாம்.

2. அதனைப் பற்றி அறிவிப்பு கொடுக்க வேண்டும்

3. விளக்கம் அவரிடமிருந்து பெறவேண்டும்

4. ஆணையின் வாயிலாக உறுதிச்சான்றளிக்க வேண்டும்

5. குறிப்பிட்ட காலத்திற்குள் அவரே செலுத்துமாறு பணிக்க வேண்டும்

(அ) 3,1,2,5 மற்றும் 4 (ஆ) 1,3,2,4 மற்றும் 5 (இ) 1,3,4,5 மற்றும் 2 (ஈ) 1,2,3,4 மற்றும் 5

77. மடங்கள் மற்றும் மடங்களுடன் இணைக்கப்பட்ட குறித்த வகை நிலக்கொடைகள் குறித்த தணிக்கை அறிக்கை அனுப்பப்படவேண்டிய அதிகாரி

(அ) ஆணையர் (ஆ) இணை ஆணையர் (இ) துணை ஆணையர் (ஈ) உதவி ஆணையர்

78. இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டம் 1959ன் கீழ் சமய நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அவை பெறுகின்ற வருமானத்தில் இருந்து ஆணையாளருக்கு செலுத்த வேண்டிய ஆண்டு பங்கு தொகை (An annual contribution) பற்றி குறிப்பிடும் இச்சட்டத்தின் பிரிவு

(அ) பிரிவு 90 (ஆ) பிரிவு 91 (இ) பிரிவு 92 (ஈ) பிரிவு 93

79. இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959ன் பிரிவு 96 குறிப்பிடுவது

(அ) ஆண்டுப் பங்கு தொகை (Annual Contribution)

(ஆ) ஆண்டுச்செலவு (Annual Expenditure)

(இ) திருக்கோவில் நிதியம் (Devaswom Fund)

(ஈ) சமய மற்றும் அறநிலைக்கொடைகள் நிருவாக நிதியம் (Endowment Administration Fund)

80. பின்வருவனவற்றில் எது சமய மற்றும் அறநிலைக்கொடைகள் நிர்வாக நிதியத்துடன் தொடர்புடையது?

1. நிலக்கொடை சட்டம் 94 ஆம் பிரிவை சார்ந்தது

2. இணை ஆணையரின் பங்களிப்பு முக்கியமானதாகும்

3. 1951 ஆம் ஆண்டு சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தின் கீழ் செயல்படுவதாகும்.

(அ) 1 சரி (ஆ) 2 மற்றும் 3 சரி (இ) 3 மட்டும் சரி (ஈ) 1 மற்றும் 3 சரி

81. தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் பிரிவு 101ன் படி எந்த பிரிவுகளுக்கு முரணாக பிறர்க்குரிமை மாற்றம் செய்ய கோருகிற நபர், நல்லெண்ணத்தில் உரிமைகோருகிறவராகக் கருதப்படமாட்டார்?

(அ) பிரிவு 34 மட்டும் (ஆ) பிரிவு 41 மட்டும்

(இ) பிரிவு 34 அல்லது பிரிவு 41 (ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை

82. 1959ம் ஆண்டு இந்து சமய மற்றும் அறகொடைகள் சட்டம் பிரிவு 53(6)ன் கீழ் பரம்பரை அறங்காவலரை நீக்கம் அல்லது இடைநீக்கம் செய்து அரசால் அல்லது ஆணையாளரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்க்கு எதிராக மேல்முறையீடு செய்ய கால அவகாசம்

(அ) 30 நாட்கள் (ஆ) 60 நாட்கள் (இ) 90 நாட்கள் (ஈ) 120 நாட்கள்

83. 1959ம் ஆண்டு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தின் பிரிவு 53(2)ன் கீழ் அறங்காவலர் ஒருவரை நீக்கம் செய்ய தேவையான காரணங்கள்.

1. அவர் இந்து சமயத்தை துறக்கின்றபோது

2. இச்சட்டத்தின் பிரிவு 92(1)ன் கீழ் வழங்க வேண்டிய ஆண்டு பங்களிப்பை வேண்டுமென்றே செலுத்த தவறும் போது

3. தொடர்சியாக இரண்டு அறங்காவலர் குழு கூட்டத்திற்க்கு வருகை தராமல் இருப்பது

(அ) 1 மட்டும் சரி (ஆ) 1 மற்றும் 2 மட்டும் சரி (இ) 1 மற்றும் 3 சரி (ஈ) 1,2 மற்றும் 3 சரி

84. பரம்பரை அறங்காவலர் ஒருவர் அவருக்குரிய தகுதியின்மைகளில் எதற்கும் உட்பட்டிருப்பாராயின் அவரை அப்பதவியிலிருந்து நீக்க அதிகாரம் பெற்றவர்.

(அ) இணை ஆணையர் அல்லது துணை ஆணையர்

(ஆ) ஆணையர்

(இ) கூடுதல் ஆணையர் அல்லது உதவி ஆணையர்

(ஈ) உதவி ஆணையர் அல்லது துணை ஆணையர்

85. பதிவேடு பராமரிப்பதில் கீழ்காணும் அதிகாரிகளின் பணிகளை பொருத்துக.

அ. ஆணையர் 1. பரிந்துரைப்பது

ஆ. ஆணை ஆணையர் 2. நுண்ணாய்வு

இ. அறங்காவலர் 3. மாற்றுவதற்கான வலியுறுத்துவது

அ ஆ இ

அ. 1 2 3

ஆ. 2 1 3

இ. 3 2 1

ஈ. 3 1 2

86. சரியான இணையைக் கண்டறிக.

1. தமிழ்நாடு இந்து சமய அறநிலைய திருக்கோயில்கள் நன்செய்

நில பரப்பளவு – 2.04 இலட்சம் ஏக்கர்

2. தமிழ்நாடு இந்து சமய திருக்கோயில்களின் புன்செய் நில பரப்பளவு – 2.18 இலட்சம் ஏக்கர்

3. தமிழ்நாடு இந்து சமய திருக்கோயில்களின் மானாவாரி

நில பரப்பளவு – 0.21 இலட்சம் ஏக்கர்

4. தமிழ்நாடு இந்து சமய திருமடங்களின் மானாவாரி நில பரப்பளவு – 0.56 இலட்சம் ஏக்கர்

(அ) 1 மற்றும் 2 சரியானது (ஆ) 2 மற்றும் 3 சரியானது

(இ) 3 மற்றும் 4 சரியானது (ஈ) 4 மற்றும் 1 சரியானது

87. பின்வரும் கூற்றிற்கான காரணத்தை ஆராய்க.

கூற்று (A) : இறையருள் பெற திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டம் ஆகும்.

காரணம் (R) : திருச்செந்தூர் திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் வருகிறது.

(அ) (A) சரி ஆனால் (R) தவறு

(ஆ) (A) மற்றும் (R) சரி. (R) என்பது (A) விற்கான விளக்கமாகும்.

(இ) (A) என்பது தவறு (R) என்பது சரி

(ஈ) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) விற்கான விளக்கமல்ல

88. கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம் துவங்கப்பட்ட நாள்

(அ) 1.3.1976 (ஆ) 1.3.1986 (இ) 12.7.2020 (ஈ) 07.08.2021

89. பராமரிப்பு பதிவேடுகளில் குறிப்பிடபட வேண்டிய திட்டங்கள் எவை?

1. நிர்வாக முறை திட்டம்.

2.வரவு மற்றும் செலவு திட்டம்.

3.தணிக்கை திட்ட வரைவு.

(அ) 1 மட்டும் வரி (ஆ) 2 மட்டும் சரி (இ) 3 மட்டும் சரி (ஈ) 1 மற்றும் 2 சரி

90. 1959ம் ஆண்டு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தின் கீழ் ஒரு சமய நிறுவனத்திற்கு சொந்தமான மிகை நிதியங்களை பயன்படுத்துதல் (Utilisation of surplus funds) பற்றி குறிப்பிடும் சட்ட வகையம்

(அ) பிரிவு 34 (ஆ) பிரிவு 36 (இ) பிரிவு 38 (ஈ) பிரிவு 40

91. ஏழைகளுக்கு உணவளித்தல் மற்றும் உணவளித்தல் மையம் அமைக்க துணைபுரியும் இந்து சமய அறக்கொடைகள் பிரிவு

(அ) 35 (அ) (ஆ) 35 (ஆ) (இ) 36 (அ) (ஈ) 36 (ஆ)

92. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைப்பயிற்சிப் பள்ளி அமைந்துள்ள இடம்

(அ) பராசக்தி வித்யாலயா, குற்றாலம்

(ஆ) அருள்மிகு மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கோயில், மதுரை

(இ) அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம்

(ஈ) தருமபுர ஆதினம், தருமபுரம், மயிலாடுதுறை

93. வாடகை நிர்ணய குழுவின் அமைப்பில் பின்வரும் நபர்களில் எவர் இல்லை?

(அ) ஆணையாளர் (ஆ) தருமகர்தா (இ) மாவட்ட பதிவாளர் (ஈ) மாவட்ட நீதிபதி

94. நிர்வாக அலுவலரை அமர்த்துதலுக்கு அதிகாரம் கொண்டவர்

(அ) ஆணையர் (ஆ) துணை ஆணையர் (இ) இணை ஆணையர் (ஈ) தமிழ்நாடு அரசு

95. 1959ம் ஆண்டு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தின் கீழ் பிரிவு 45 குறிப்பிடுவது

(அ) செயல் அலுவரின் நியமனம் பற்றியது

(ஆ) மாநில இந்துசமய அறிநலையத்துறையின் அதிகாரம் பற்றியது

(இ) துணை ஆணையாளர் நியமனம் பற்றியது

(ஈ) உதவி ஆணையாளரின் அதிகாரம் பற்றியது

96. கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையினை தேர்ந்தெடு.

1. இந்து சமய அறநிலைக் கொடைகள் சட்டத்தின் கீழ் அனைத்து அறநிலையங்களுக்கும் செயல் அலுவலர் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

2. மடங்களுக்கும் அறநிலையத்துறை செயல் அலுவலரே பணிகளை மேற்கொள்வார்

3. மடத்துடன் இணைந்த இதர குறிப்பிட்ட அறநிலைக் கொடைகளுக்கு அறநிலையத்துறை துணை ஆணையாளர் அதன் பணிகளை செய்வார்.

(அ) 1 மட்டும் சரி (ஆ) 1 மற்றும் 2 மட்டும் சரி

(இ) 1 மற்றும் 3 மட்டும் சரி (ஈ) 2 மற்றும் 3 மட்டும் சரி

97. பின்வருவனவற்றில் சரியான வாக்கியங்களைக் கண்டறிக.

1. அறங்காவலர் குழுவில் 2 அறங்காவலர்களுக்கு குறையாமலும் 5 அறங்காவலர்களுக்கு மிகாமலும் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.

2. பெண் உறுப்பினர் இடம் பெற வேண்டும்

3. ஆதி திராவிடர் (அ) பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த உறுப்பினர் இடம் பெற வேண்டும்.

4. இக்குழுவின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

(அ) 1 மற்றும் 4 மட்டும் சரியானது (ஆ) 2 மற்றும் 3 மட்டும் சரியானது

(இ) 1,2 மற்றும் 3 மட்டும் சரியானது (ஈ) 4 மற்றும் சரியானது

98. 1959 இந்து சமய அறக்கொடைகள் சட்டம் – பிரிவு 56ன் படி கீழ்கண்ட எந்த தண்டனை விதிக்க இயலாது?

(அ) தண்ட தொகை (ஆ) சிறை தண்டனை (இ) பணி இடை நீக்கம் (ஈ) பதவி நீக்கம்

99. வேதகடவுளர்களின் முக்கியமான பணிகளாக குறிப்பிடப்படுவன எவை?

(அ) தேசத்தை விரிவாக்குவது

(ஆ) அமைதியை நிலைநாட்டுவது

(இ) அண்டசராசரத்தின் ஒழுங்குமுறை மற்றும் அறநெறியைப் பாதுகாப்பது

(ஈ) இயற்கையை பாதுகாப்பது

100. பகவத்கீதையை பொருத்தமான இதிகாசத்துடன் பொருத்துக.

(அ) மஹாபாரதம் (ஆ) இராமாயணம் (இ) சாகுந்தலம் (ஈ) மிருத்யகடிகை

101. உபநிடத காலகட்ட சிந்தனையாளர்கள் வரிசையை மிகசரியாக தேர்ந்தெடு.

(அ) காண்டில்யா,ஜாபாலா,உத்தாலகா,ஸ்வேதகேது

(ஆ) தைத்திரியா,ஐத்ரேயா,கௌடபாதர்,கௌசிகர்

(இ) ஜாபாலா,கெடபாதர்,கௌசிகர்,ஸ்வேதகேது

(ஈ) பிரஜாபதி,இந்திரன்,ஐத்ரேயா, கௌடபாதரர்

102. ஆன்மா தனது ஒட்டுமொத்த உணர்வு நிலையின் ஒருமைப்பாட்டை அனுபவிக்கும் நிலையின் பெயர் எது?

(அ) துரியா (ஆ) சுசுப்தி (இ) விஞ்ஞான (இ) பிராணம்

103. புராணம் என்பதற்கு ——- என்பது பொருள்.

(அ) ஐதீகத்தை நிரூபனம் செய்யும் வரலாறு (ஆ) ஆகமங்கள்

(இ) பழைய வரலாறுகள் (ஈ) தோத்திரம்

104. நாச்சியார் திருமொழி எனும் பிரபந்தத்தை பாடியவர்

(அ) ஆண்டாள் (ஆ) நம்மாழ்வார் (இ) பேயாழ்வார் (ஈ) மதுரகவியாழ்வார்

105. “வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய

சுடராழி யான்அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீக்குகவே என்று”

என்று பாடியவர்

(அ) பொய்கையாழ்வார் (ஆ) நம்மாழ்வார் (இ) பூதத்தாழ்வார் (ஈ) பேயாழ்வார்

106. “பிட்டுக்கு மண்சுமந்தார்” எனும் வரி யாரோடு தொடர்புடையது?

(அ) திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் (ஆ) திருநாவுக்கரசர்

(இ) சுந்தரமூர்த்தி சுவாமிகள் (ஈ) மாணிக்கவாசகர்

107. உந்தி களிறே உயர்போதம் சித்தியார்

பிந்திருபா உண்மை பிரகாசம் – வந்த அருள்

பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு

உண்மைநெறி சங்கற்பம் உற்று.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள வெண்பா பட்டியலிடும் நூல்கள் எவ்வகை சாத்திரங்களாகும்?

(இ) வைணவம் (ஆ) பஞ்சராத்திரம் (இ) சைவசித்தாந்தம் (ஆ) சாக்தம்

108. சைவசித்தாந்த கோட்பாட்டின் பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் எந்த வாதத்தின் அடிப்படையில் சித்தாந்த உண்மையாகிறது?

(அ) தோற்றகாரணவாதம் (ஆ) அசத்காரியவாதம்

(இ) சத்காரியவாதம் (ஈ) படைப்புகாரியவாதம்

109. பொருத்துக.

அ. சாலோக்கியம் 1. கடவுளின் அருகில் இருப்பது

ஆ. சமீப்பியம் 2. கடவுளில் ஐக்கியமாவது

இ. சாரூப்பியம் 3. கடவுள் இருக்கும் இடத்தில் இருப்பது

ஈ. சாயுஜ்யம் 4. கடவுளின் வடிவத்தை அடைவது

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 4 1 2 3

இ. 2 3 1 4

ஈ. 4 2 3 1

110. இராமானுஜர் கொள்கை படி

வீடுபேறு என்பது….

(அ) தன்னிலை உணர்ந்து பிரம்மனுடன் கலத்தல் (ஆ) சீவன் முக்தி நிலை

(இ) தளைகளினின்றும் உயிர் விடுதலை பெறுதல் (ஈ) சூன்யத்தை உணர்தல்

111. கீழ்கண்டவற்றில் எது மாத்வ மடம் அல்ல?

(அ) பல்மாரு மடம் (ஆ) ஆத்மாரு மடம் (இ) காணூரு மடம் (ஈ) திருக்குறுங்குடி மடம்

112. “பாதி மாதுடைய பரமன்” என்பது சிவபெருமானின் எந்த வடிவமாகும்?

(அ) பைரவர் (ஆ) வீரபத்திரர் (இ) அர்த்த நாரீசுவரர் (ஈ) பிட்சாடனார்

113. சாக்தா எனும் வழிப்பாட்டின் முதன்மை தெய்வம் எது?

(அ) சக்தி (ஆ) சிவம் (இ) சிவசக்தி (ஈ) விஷ்ணு

114. பஞ்ச தத்துவ சடங்குமுறை வழிபாட்டை விளக்கும் சமயம்:

(அ) சௌரம் (ஆ) வைணவம் (இ) சைவம் (ஈ) சாக்தம்

115. இராமலிங்க சுவாமிகளது பொன்மை திரை குறிப்பது எது?

(அ) பராசக்தி (ஆ) கிரியாசக்தி (இ) ஞான சக்தி (ஈ) இச்சா சக்தி

116. பொருத்துக:

அடியார்கள் நட்சத்திரம்

அ. எறிபத்தர் 1. சதயம்

ஆ. திருநாவுக்கரசர் 2. அத்தம்

இ. திருஞானசம்பந்தர் 3. அசுவனி

ஈ. திருமூலர் 4. மூலம்

அ ஆ இ ஈ

அ. 3 1 2 4

ஆ. 2 1 4 3

இ. 1 3 4 2

ஈ. 4 2 1 3

117. “கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ

மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கிறேன் சொல் ஆழி வெண்சங்கே”

என கண்ணனை பாடியவர் யார்?

(அ) திருமங்கையாழ்வார் (ஆ) ஆண்டாள் (இ) ஒளவையார் (ஈ) பாரதியார்

118. இராமலிங்க அடிகளார் ஏற்படுத்திய

1. சத்திய தருமச்சாலை.

2.சத்திய ஞான சபை.

3.சமரச சுத்த சன்மார்க்க சங்கம் – ஆகிய அமைப்புகளின் கொள்கையினை சரியான வரிசை கிரமத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை அடையாளப்படுத்துக.

(அ) 1 வேறுபாடு கருதாமை 2 சீவகாருண்யம் 3 ஆன்மநேயம்

(ஆ) 1 இறைசுடர்காணல் 2 உயிர்களிடத்து வேறுபாடு கருதாமை 3 பசிபோக்கும் தர்மம்

(இ) 1 பசிபோக்கும் தர்மம் 2 இறை சுடரை காணுதல் 3 மதபேதங்கள் அற்றது

(ஈ) 1 சன்மார்கம் 2 மரணமிலா வாழ்வு 3 ஞான தேகம்

119. இராமானுஜரைக் குறித்து கீழே குறிப்பிடப்பட்ட வாக்கியங்களுள் எது சரியானது?

(அ) இழாமானுஜர் கி.பி.1027ல் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார்

(ஆ) இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பிறந்தார்.

(இ) இராமானுஜர் காலடியில் பிறந்தார்

(ஈ) இராமானுஜர் காலடியில் பிறந்தார்

120. துவைத வேதாந்தத்திற்குரிய ஆதார நூல்கள் யாரால் எழுதப்பட்டன?

(அ) மத்வாச்சாரியர் (ஆ) மாதவ வித்யாரண்யர் (இ) வேதாந்த தேசிகர் (ஈ) பத்மபாதர்

121. விசிட்டாத்வைதம் என்ற வேதாந்த தத்துவ முறையை போதித்வர்

(அ) சங்கரர் (ஆ) ராமானுசர் (இ) மத்வர் (ஈ) இராமலிங்க அடிகள்

122. பொருத்துக.

அ. அன்னமயம் 1. தன்னுணர்வு

ஆ. பிராணமயம் 2. உணர்வு

இ. மனோமயம் 3. உடல்

ஈ. விஞ்ஞான மயம் 4. அறியாமை, அவித்தை

உ. ஆனந்த மயம் 5. மூச்சு

அ ஆ இ ஈ உ

அ. 2 4 1 5 3

ஆ. 3 5 2 1 4

இ. 1 3 5 4 2

ஈ. 5 2 4 3 1

123. கீழ்கண்ட மேலை நாட்டு அறிஞர்களில் யார் ஸ்ரீராமகிருஷ்ணரின் வரலாற்றை ஃபிரெஞ்சு மொழியில் எழுதினார்?

(அ) ரொமேன் ரோலந்த் (ஆ) மாக்ஸ் முல்லர்

(இ) எட்வின் ஆர்னால்ட் (ஈ) ஆல்டுவஸ் ஹக்ஸ்லி

124. “உள்ளது நாற்பது” என்ற தத்துவ நூலை அருளியர் யார்?

(அ) பாம்பன் சுவாமிகள் (ஆ) ஸ்ரீரமண மகர்ஷி (இ) தாயுமானவர் (ஈ) வள்ளலார்

125. இந்து சமயத்தில் சமயப் பணிகள், தத்துவங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள், மேலும் பலதரப்பட்ட நூல்கள் மற்றும் படைப்புகளை குறிக்கும் பொதுமை சொல்

(அ) ஸ்மிருதிகள் (ஆ) ஸ்ருதிகள் (இ) ஸ்தோத்திர மாலைகள் (ஈ) சூத்திரங்கள்

126. “மந்திரப்பாடல்கள்” என்பது எதன் பகுதி?

(அ) இந்திய தத்துவங்கள் (ஆ) சூத்திரங்கள் (இ) வேதங்கள் (ஈ) உபநிடதங்கள்

127. “நாஸ்திகம்” எனும் சொல்லிற்கு தொடர்பில்லாமல் இருக்கும் தத்துவ பிரிவு எது?

(அ) சாருவாகம் (ஆ) பௌத்தம் (இ) சமணம் (ஈ) சாங்கியம்

128. இந்திய தத்துவ மரபுப் படி “தரிசனம்” என்பது என்ன?

(அ) முடிவு (ஆ) பொருந்தும் அறிவு (இ) முதல் அடிப்படை உண்மை (ஈ) ஆன்மீகப் பார்வை

129. இந்தியத் தத்துவ மரபு பிரிவுகளின் அடிப்படை நூல்கள் என்னவென்று அழைக்கப்படுகிறது?

(அ) பாஷ்யங்கள் (ஆ) சூத்திரங்கள் (இ) மந்திரங்கள் (ஈ) அத்தியாயங்கள்

130. சாம்கிய தத்துவத்தின்படி, புருட தத்துவம் தன்னை பிரகிருதியுடன் ஐக்கியபடுத்தி கொள்வதற்கு காரணம் அகங்காரம் ஆகும். இம் முக்குணக் கலப்பினால் வரும் மூவகை பெயர்கள் யாவை?

(அ) சத்,சித்,ஆனந்தா (ஆ) சத்துவம், இராசதம், தமோ

(இ) வைகாரிகம், தைசதம், பூகாதி (ஈ) வைகாரிகம், தைசதம், பூதாதி

131. முக்தி மார்க்கங்களை சரியாக பொருத்துக.

அ. தாஸமார்க்கம் 1. யோகம்

ஆ. சற்புத்திர மார்க்கம் 2. ஞானம்

இ. சகமார்க்கம் 3. சரியை

ஈ. சன்மார்க்கம் 4. கிரியை

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 3 4 1 2

(இ) 2 1 3 4

(ஈ) 1 2 4 3

132. வேதம் மற்றும் உலகம் அனாதி எனவும், இதனை காக்க கடவுள் தேவை இல்லை என கூறுவது?

(அ) நியாயம் (ஆ) வைசேடிகம் (இ) மீமாம்சம் (ஈ) யோகம்

133. சமண தத்துவக் கோட்பாட்டின் ஒட்டுமொத்த சாராம்சத்தை பிரதிபலிக்கக் கூடிய சரியான சொல்லை அடையாளப்படுத்துக.

(அ) ஒருமைக் கோட்பாடு (ஆ) பன்மை உண்மை கோட்பாடு

(இ) உண்மைக் கோட்பாடு (ஈ) பொருள் முதல் வாதக் கோட்பாடு

134. சமணத்தில் சிவன் இல்லாதவை ஆசிவன் எனப்படும் அவை காலம், ஆகாசம், தருமம், அதருமம், புத்கலம் என ஐவகை. இதில் அதருமத்தின் பொருள் யாதாக கூறப்படுகிறது?

(அ) பொருள் இயங்குவதற்கு ஆதாரமாக உள்ளது

(ஆ) பொருள் நிற்பதற்கு ஏதுவாக உள்ளது.

(இ) தீய நெறியின் படி நிற்பது

(ஈ) தீர்தங்கரின் உபநிடதங்களை பின்பற்றாதது

135. பின்வரும் கூற்றிற்கான காரணத்தை ஆராய்க:

கூற்று (A) : சமணம் ஆன்ம அறிவை வலியுறுத்துகிறது.

காரணம் (R) : மகாவீரர் கேவல ஞானத்தை அடைந்தார்

(அ) (A) என்பது சரி, ஆனால் (R) என்பது தவறு

(ஆ) (A) மற்றும் (R) சரி, (R) என்பது (A) விற்கான சரியான விளக்கம் ஆகும்.

(இ) (A) என்பது தவறு, (R) என்பது சரி

(ஈ) (A) மற்றும் (R) சரி, (R) என்பது (A) விற்கான விளக்கமல்ல

136. கீழ்காணும் வாக்கியங்களை ஆய்க:

கூற்று (A) : ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும் ஜோதியே அரூபசிவம். சதாசிவமாகிய அருவுருவத் திருமேனியைக் கொண்டது

காரணம் (R) : ஐந்தொழில் நடந்த அரூபசிவம் நடராஜர் வடிவம் கொண்டது.

(அ) (A) மற்றும் (R) சரி, (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம் (ஆ) (A) சரி, (R) தவறு

(இ) (R) சரி, (A) தவறு (ஈ) (A) மற்றும் (R) இரண்டும் தவறு

137. மாணிக்கம் மற்றும் மரகதம் முதலியவற்றால் செய்யப்படும் இலிங்கம் எது?

(அ) இரத்னஜம் (ஆ) லோகஜம் (இ) கூணிகம் (ஈ) சைலஜம்

138. மலையடிவாரத்தில் உள்ள கீழ்க்கோயில்கள் எவ்வகை கோயில்?

(அ) பெருங்கோயில் (ஆ) கரக்கோயில் (இ) கொகுடிக்கோயில் (ஈ) தாழக்கோயில்

139. சைனர்களுள் மண்டலபுருடர் என்பவர் வடமொழி சைன புராணமாகிய ஆதிபுராணத்தை தமிழில் இயற்றி வெளியிட்ட நூலின் பெயர்.

(அ) ஸ்ரீ புராணம் (ஆ) கந்த புராணம் (இ) கலிங்க புராணம் (ஈ) கூர்ம புராணம்

140. மரக்கைகள் பரப்பி அவற்றின் மீது புல், கீற்று அல்லது ஓடு வேய்ந்து அமைக்கப்படுவது

(அ) கரக்கோயில் (ஆ) மாடக்கோயில் (இ) மணிக்கோயில் (ஈ) ஆலக்கோயில்

141. ஓர் ஆலயத்தை புதிதாக கட்டி முடித்து முதன்முதலாக விக்கிரகஸ்தாபனம் முதலியன செய்து அனுக்ஞை முதல் கும்பாபிடேகம் வரை செய்து முடிப்பது.

(அ) அனாவர்த்தம் (ஆ) அந்தரிதம் (இ) ஆவர்த்தம் (ஈ) புனராவர்த்தம்

142. தேவாரப் பாடல்கள் பெற்ற ஆலயங்களை சைவர்கள் எவ்வாறு அழைப்பர்?

(அ) திவ்ய தேசங்கள் (ஆ) திருக்கோயில்கள் (இ) புண்ணியத் தலங்கள் (ஈ) தலங்கள்

143. அறுபடை வீடுகளில் பழநியின் முந்திய பெயர் என்ன?

(அ) திருப்பரங்குன்றம் (ஆ) திருச்சீரலைவாய்

(இ) திருவாவினன்குடி (ஈ) குன்று தோராடல்

144. மகாகும்பாபிஷேகம் ஆகி மூன்று பகூம் கழித்து செய்யப்படும் அபிஷேக ஆராதனைக்கு பெயர் யாது?

(அ) மகாபிஷேகம் (ஆ) அஷ்டபந்தனம் (இ) குடமுழுக்கு (ஈ) மண்டலாபிஷேகம்

145. கீழே கொடுக்கப்பட்டவற்றுள் பஞ்சாக்ரத்தை அதன் பயனுடன் பொருத்துக.

அ. ஸ்தூல பஞ்சாக்கரம் 1. சிவமேயாக்கும்

ஆ. சூட்சம பஞ்சாக்கரம் 2. பாசத்தைக் கொடுக்கும்

இ. காரண பஞ்சாக்கரம் 3. மலத்தை நாசம் பண்ணும்

ஈ. மகாமநு 4. இம்மை மறுமைப் பயன் அளிக்கும்

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 3 4 1 2

இ. 2 1 4 3

ஈ. 1 2 3 4

146. குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆனபிறகு முதன் முதலாகக் குழந்தையை வீட்டைவிட்டு வெளியில் கொண்டு செல்லும் யாத்திரையை குறிப்பிடுவது

(அ) புண்ணியாவாசனம் (ஆ) உபநயனம் (இ) கர்ண பூஷணம் (ஈ) நிஷ்க்ராமணம்

147. இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் 116ஆம் பிரிவின் (2)ஆம் உட்பிரிவின் வகை முறைகள் நடைமுறைக்கு வந்த நாள்.

(அ) 1957, நவம்பர் 28 (ஆ) 1958, நவம்பர் 28 (இ) 1959, நவம்பர் 19 (ஈ) 1959, நவம்பர் 29

148. தமிழ்நாடு இந்துசமய அறக்கொடைகள் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு

(அ) 1959, ஜனவரி 1 (ஆ) 1959, ஜனவரி 22 (இ) 1960, ஜனவரி 1 (ஈ) 1960, ஜனவரி 26

149. ஜெயின மத மற்றும் அறநிலையங்களில் நிர்வாக சீர்கேடு ஏற்படும் போது பரிகாரம் வேண்டி பின்வரும் நபர்களில் யாரிடம் முறையீடு செய்யப்பட வேண்டும்?

(அ) ஆணையர் (ஆ) ஜைன துறவி (இ) காவல் ஆய்வாளர் (ஈ) நீதிமன்றம்

150. இந்து சமய அறநிலைக் கொடைகள் சட்டம் 1959, 2 உட்பிரிவு 2படி இந்து என்னும் சொல் வரக்கூடிய இடங்களில் எல்லாம், இடத்திற்கு ஏற்ப பொருள் மாறுபட்டாலன்றி ————- என பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.

(அ) பௌத்த (ஆ) சைவ (இ) வைணவ (ஈ) சமண

151. “ஸ்மிருதியின்” விதிகளை ஒழுங்குப்படுத்தி சட்டங்களை இயற்றியவர்கள் யாவர்?

(அ) மனு (ஆ) யாஞ்ஞவல்கியர் (இ) பராசரர் (ஈ) மேலேக்கூறிய மூவரும் ஆவர்

152. கீழ்க்கண்ட சிவ வழிபாடுகளில் உயர்ந்தது எவை?

(அ) பஞ்சபூதங்கள் வழிபாடு (ஆ) சந்திரன் வழிபாடு

(இ) ஜீவாத்மா வழிபாடு (ஈ) சூரியன் வழிபாடு

153. வேதம் என்ற சொல்லிற்கு பொருள் என்ன?

(அ) அறிவு நூல்கள் (ஆ) இறைவனுக்கான பாடல்கள்

(இ) செய்யுள்கள் (ஈ) ஆதி நூல்கள்

154. 1959ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தின் கீழ் “சமய நிறுவனம்” என்னும் பதம் வரையறை செய்யப்பட்டுள்ள சட்ட வகையம்

(அ) பிரிவு 6(18) (ஆ) பிரிவு 8(16) (இ) பிரிவு 10(14) (ஈ) பிரிவு 6(19)

155. 1959ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தின் கீழ் “பரம்பரை அறங்காவலர்” என்னும் பதம் வரையறை செய்யப்பட்டுள்ள சட்ட வகையம்

(அ) பிரிவு 2(6) (ஆ) பிரிவு 4(12) (இ)பிரிவு 6(11) (ஈ)பிரிவு 8 (3)

156. சரியான இணையைக் கண்டறிக:

1. அறிவுரைக்குழு அமைக்கப்பட பிரிவு – 12ஆம் பிரிவு

2. குழுமம் அமைக்கப்பட்ட பிரிவு – 10ஆம் பிரிவு

3. துணை ஆணையர் அமர்த்தப்பட்ட பிரிவு – 9ஆம் பிரிவு

4. உதவி ஆணையர் அமர்த்தப்பட்ட பிரிவு – 1ஆம் பிரிவு

(அ) 1 மற்றும் 2 சரி (ஆ) 2 மற்றும் 3 சரி (இ) 3 மற்றும் 4 சரி (ஈ) 4 மற்றும் 1 சரி

157. மாவட்டக் குழுவின் கூட்டத்தை தலைமையேற்று நடத்துபவர்

(அ) ஆணையர் (ஆ) இணை ஆணையர் (இ) துணை ஆணையர் (ஈ) உதவி ஆணையர்

158. பின்வருவனவற்றுள் “குறித்த வகை நிலைக் கொடை”யில் அடங்குவது

(அ) சொத்து (ஆ) பணம் (இ) சொத்து அல்லது பணம் (ஈ) மேற்கண்டவற்றுள் எதுவுமில்லை

159. அறிவுரைக் குழுவில் இடம் பெற்றுள்ள அலுவல் சார்பற்ற உறுப்பினர்களின் பதவி காலம்

(அ) இரண்டாண்டுகள் (ஆ) மூன்றாண்டுகள் (இ) ஐந்தாண்டுகள் (ஈ) நான்காண்டுகள்

160. அறிவுரைக் குழுவின் பதவி வழி உறுப்பினர் செயலர் ———– ஆவார்.

(அ) அரசு செயலர் (ஆ) அமைச்சர் (இ) ஆணையர் (ஈ) அலுவல் சார்பற்ற உறுப்பினர்

161. கோவில் நிருவாகக் குழுவின் தலைமையர் ——— மிகைப்படாத பணிகளுக்கு ஒப்பேற்பளிக்கும் தகுதி பெற்றவர்.

(அ) பத்து இலட்சம் (ஆ) முப்பது இலட்சம் (இ) ஐம்பது இலட்சம் (ஈ) ஒரு கோடி

162. “இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டம் 1959ன் பிரிவு 23ன் கீழ் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளருக்கு அனைத்து கோவில்கள், சமயநிலை கொடைகள் ஆகியவற்றை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் அதிகாரம் உண்டு. ஆனால் மடங்களுக்கு பொருந்தாது” என குறிப்பிட்ட வழக்கு(அ) ஸ்ரீல ஸ்ரீ அம்பலவாண பண்டார சன்னதி அவர்கள் எதிர். சென்னை மாநிலம், AIR 1983 Mad 72

(ஆ) S.V.ராமசுவாமி பூசாரி எதிர் துணை ஆணையாளர், இந்து சமய அறநிலையத்துறை 1973 1 MLJ

(இ) சேதுரத்தினம் எதிர் ஆணையாளர் HR & CE 1996 2 LW

(ஈ) சுப்பிரமணியன் எதிர் வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் மைலாப்பூர், 2007 (MLJ) 5-877

163. சமய நிறுவனங்களின் வழிபாடு செய்யும் இடங்களில் நுழையும் அதிகாரம் பெற்ற நபர்

(அ) ஆணையர் (அ) கூடுதல் ஆணையர் (அ) துணை ஆணையர் (அ) உதவி ஆணையர்

(ஆ) ஆணையர் (அ) கூடுதல் ஆணையர்

(இ) ஆணையர் (அ) துணை ஆணையர் (அ) உதவி ஆணையர்

(ஈ) ஆணையர் (அ) கூடுதல் (அ) இணை (அ) துணை (அ) உதவி ஆணையர்

164. இந்து சமய திருக்கோயிலின் நிர்வாகம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது?

(அ) 27 மண்டலங்கள் மற்றும் 32 கோட்டங்கள் (ஆ) 17 மண்டலங்கள் மற்றும் 32 கோட்டங்கள்

(இ) 11 மண்டலங்கள் மற்றும் 28 கோட்டங்கள் (ஈ) 10 மண்டலங்கள் மற்றும் 27 கோட்டங்கள்

165. சரியான இணையை தேர்வு செய்க.

இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டம் 1959ன் பிரிவு 25 Aன்படி சமய நிறுவனங்கள் மற்றும் சமயநிலை கொடைகளுக்கு அறங்காவலராக நியமனம் செய்வதற்கான தகுதிகள்

1. கடவுள் நம்பிக்கை உடையவராக இருத்தல் வேண்டும்.

2. இந்து மதத்தை பின்பற்றாதவராக இருக்கலாம்

3. பரம்பரை அறங்காவலராக இல்லாத நிலையில் 18 வயது உடையவராக இருக்க வேண்டும்.

(அ) 1 மட்டும் சரி (ஆ) 1 மற்றும் 2 மட்டும் சரி

(இ) 1 மற்றும் 3 மட்டும் சரி (ஈ) 2 மற்றும் 3 மட்டும் சரி

166. அறங்காவலரின் வயது தகுதி

(அ) 25 வயதிற்கு குறைந்தவராய் இருத்தல் வேண்டும்

(ஆ) 25 வயதிற்கு மேற்பட்டவராய் இருத்தல் வேண்டும்

(இ) 35 வயது நிறைந்தவராய் இருத்தல் வேண்டும்

(ஈ) 40 வயதிற்கு மேற்பட்டவராய் இருத்தல் வேண்டும்

167. அறங்காவலருடைய பதவியில் காலியிடம் ஏற்பட்டு, அப்பதவியின் வாரிசுரிமை பற்றி பூசல் இருக்கும்போது, முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர்

(அ) ஆணையர் (ஆ) கூடுதல் ஆணையர் (இ) இணை ஆணையர் (ஈ) உதவி ஆணையர்

168. இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டப்பிரிவு 49(1)ன் கீழ் உதவி ஆணையரால் நியமிக்ப்படும் அறங்காவலரின் எண்ணிக்கை

(அ) 5 (ஆ) 4 (இ) 3 (ஈ) 1

169. சமய நிறுவனங்களில் ஒன்று (அ) ஒன்றுக்கு மேற்பட்ட மரபுவழி அறங்காவலர்கள் இருக்கும்போது அதன் தலைவரை தோந்தெடுப்பதில் உள்ள சரியான நடைமுறை.

1. ஒரு மரபு வழி அறங்காவலர் இருந்தால் அவரே அதன் தலைவராக இருக்கவேண்டும்

2. ஒன்றுக்கு மேற்பட்ட மரபுவழி அறங்காவலர் இருந்தால் அவர்களில் ஒருவரை தலைவராக தேர்தல் (அ) நியமனம் மூலம் செய்யலாம்.

3. மற்ற அறங்காவலர்களில் கருத்தொற்றுமையின்படி

4. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முடிவு செய்வார்

(அ) 1 மற்றும் 2 மட்டும் சரியானது (ஆ) 1,2,3 மட்டும் சரியானது

(இ) 3,4,2,1 மட்டும் சரியானது (ஈ) 2 மட்டும் சரியானது

170. சரியான இணையினை தேர்ந்தெடுக்கவும்.

1. ஆலோசனை குழு தலைவர்-முதலமைச்சர்

2. உறுப்பினர், செயலர் – மாவட்ட நீதிபதி

3. துணை தலைவர் – ஆணையர்

4. உறுப்பினர் – அரசு செயலர்

(அ) 1 மற்றும் 4 சரி (ஆ) 2 மற்றும் 3 சரி (இ) 1 மற்றும் 3 சரி (ஈ) 2 மற்றும் 4 சரி

171. சமய நிறுவனத்தில் பதவி வகிப்பவர்கள் அல்லது பணியாளர்கள் என்ற சொற்றொடர் கீழ்க்கண்ட யாரினையும் உள்ளடக்கியது?

(அ) அர்ச்சகர்களையும், பூசாரிகளையும்

(ஆ) நிர்வாக அலுவலரையும், அறங்காவலரையும்

(இ) சமய நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரையும்

(ஈ) மேற்கூறிய எதுவுமில்லை

172. தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் பிரிவு 55ன்படி அறங்காவலரின் ஆணையினால், குறையுற்றவர் எவ்வளவு காலத்திற்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும்?

(அ) குறையுற்றவுடன் (ஆ) 1 மாதம் (இ) 2 மாதங்கள் (ஈ) 3 மாதங்கள்

173. பின்வரும் கூற்றிற்கான காரணத்தை ஆய்க.

கூற்று (A) : சமய நிறுவன ஊழியர்களை நியமனம் செய்யும் அதிகாரம் உடையவர் அறங்காவலர் ஆவார்.

காரணம் (R) : அர்ச்சர்களையும் பூசாரிகளையும் நியமிக்கும் அதிகாரம் அறங்காவலருக்கு இல்லை.

(அ) (A) என்பது சரி. ஆனால் (R) தவறு

(ஆ) (A) மற்றும் (R) சரி. மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்.

(இ) (A) என்பது தவறு (R) என்பது சரி

(ஈ) (A) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது (A) விற்கான விளக்கமல்ல

174. இந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டம் 1959ன் கீழ் சமய நிறுவனஙகளின் அறங்காவலர் சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தில் (Budgets) ஆணையாளர் அல்லது பிற அதிகாரிகளால் உரிய அறிவிப்பு (NOTICE) கொடுத்து பின் ஏதேனும் மாற்றம், நீக்கம் அல்லது சேர்க்கை சேர்த்து பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக அறங்காவலரால் பிரிவு 86(4)ன் கீழ் மேல்முறையீடு செய்ய கால வரையறை அந்த உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து

(அ) 30 நாட்கள் (ஆ) 90 நாட்கள் (இ) 120 நாட்கள் (ஈ) 180 நாட்கள்

175. இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தின் பிரிவு 86(2)(c)ன் கீழ் சமய நிறுவனத்துடன் தொடர்புடைய கட்டிடங்களை பழுது பார்க்கவும் புதுபிக்கவும் செய்யப்படும் வகைமுறை அந்நிறுவத்தின் ஆண்டு வருமானத்தின் உபரியில் எத்தனை சதவீதம் குறைவாக இல்லாது இருக்க வேண்டும்.

(அ) 15 சதவீதம் (ஆ) 20 சதவீதம் (இ) 25 சதவீதம் (ஈ) 30 சதவீதம்

176. 1959ம் ஆண்டு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடை சட்டத்தின் கீழ் சமய நிறுவனங்களின் வரவு செலவு திட்டங்களை யார் சமர்ப்பிக்க வேண்டும்

(அ) ஆணையாளர் (ஆ) இணை ஆணையாளர்

(இ) துணை ஆணையாளர் (ஈ) அறங்காவலர்

177. வரவு-செலவுத் திட்டங்களை திருத்தி அமைக்கும்போது அறங்காவலர் எதில் மாற்றங்கள் செய்ய முடியாது.

(அ) நிறுவனத்தின் பணிகளை முறையாகப் புரிவதில்

(ஆ) நிறுவனத்தைக் கட்டுப்படுத்துகிற கடன் கடப்பாடுகளை தீர்ப்பதில்

(இ) நிறுவனத்தின் சேம நிதிக்கு பங்களிப்பதில்

(ஈ) நிறுவனத்தின் நோக்கங்களை உரியலாறு பேணுவதில்

178. இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் 1959ன் பிரிவு 88(a)ன் கீழ் மடங்கள் மற்றும் மடங்களுடன் இணைந்த குறித்த வகையான நிலைக்கொடைகள் சார்ந்தவைகளுக்கு அந்த பசலி ஆண்டுக்கு கணக்குகள் சரிபார்த்து தணிக்கை முடிந்த பின் தணிக்கை அறிக்கையினை யாருக்கு அனுப்பி வைக்க வேண்டும்?

(அ) ஆணையாளர் (ஆ) இணை/துணை ஆணையாளர்

(இ) உதவி ஆணையாளர் (ஈ) செயல் அலுவலர்

179. இந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டம் 1959ன் கீழ் பிரிவு 90(2)ன்படி வரையறை செய்யப்பட்டிருப்பது

(அ) சமய நிறுவனங்களின் சொத்துக்களை அறங்காவலர் முறையற்ற வழியில் செலவு செய்ததால் ஏற்பட்ட இழப்பிற்கு தண்ட கட்டணம் விதித்து ஆணையிடல்

(ஆ) ஆணையாளரின் உத்தரவிற்க்கு எதிராக நீதிமன்றத்தை நாடுதல்

(இ) இணை ஆணையாளரிடம் மேல்முறையீடு செய்தல்

(ஈ) ஆணையாளரால் இறுதி நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டதொகையை நீக்கறவு செய்தல்.

180. கூற்று (A) : சமய நிறுவனங்களின் கணக்குகள் செலவு செய்யப்படுகிற போதெல்லாம் தணிக்கை நடைபெறுதல் வேண்டும்

காரணம் (R) : ஓட்டி முந்திய பசலி ஆண்டுக்கான ஆண்டு வருமானம் ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் குறையாமலிக்க வேண்டும்.

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது சரியான விளக்கம் ஆகும்.

(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் அல்ல

(இ) (A) தவறு (R) சரி

(ஈ) (A) சரி (R) தவறு

181. பொருத்துக.

சட்டப்பிரிவுகள் உரிமை வழக்குகள்

அ. 59 1. ஆணையரின் ஆணைக்கு எதிரான உரிமை வழக்கு

ஆ. 70 2. அறிவிக்கையை அறவு செய்வதற்கான உரிமை வழக்கு

இ. 72(4) 3. 53(5) ஆம் பிரிவின் படியான ஆணைக்கு எதிரான உரிமை வழக்கு

ஈ. 56 (b) 4. மடத்துடன் இணைக்கப்பட்ட நிலைக் கொடையில் அறங்காவலரை

நீக்குவதற்கான உரிமை வழக்கு

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 2 3 4 1

இ. 3 1 2 4

ஈ. 4 1 2 3

182. இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் பொது நல நிதியம் எதிலிருந்து ஏற்படுத்தப்படுகின்றது.

(அ) சமய நிறுவனங்கள் உபரி நிதியிலிருந்து தாமே விரும்பியளிக்கும் பங்களிப்பிலிருந்து ஏற்படுத்தப்படுகின்றது.

(ஆ) அரசாங்கத்தால் கொடுக்கப்படும் நிதியிலிருந்து ஏற்படுத்தப்படுகின்றது.

(இ) திருக்கோயில்களுக்கு சொந்தமான வருமானத்திலிருந்து ஏற்படுத்தப்படுகின்றது

(ஈ) திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களிலிருந்து ஏற்படுத்தப்படுகின்றது

183. தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தின் கீழ் காலவரம்பை நிர்ணயிக்கும் போது எதற்கு விலக்களிக்கப்படுகிறது?

(அ) உத்தரவு அல்லது தீர்ப்பாணையின் சான்றிடப்பட்ட நகலை பெறுவதற்குண்டான காலம்

(ஆ) விண்ணப்பதாரரின் பக்கம் உள்ள காலதாமதம்

(இ) புதிய பொருண்மைகளை கண்டுபிடிப்பதில் உள்ள காலம்

(ஈ) முக்கியமான பொருண்மைகளை கண்டுபிடிப்பதில் உள்ள காலம்

184. 1959ம் ஆண்டு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டத்தின் பிரிவு 114 A குறிப்பிடுவது

(அ) அரசின் மறுஆய்வு அதிகாரம்

(ஆ) வழக்கு தாக்கல் செய்ய காலவரையறை (Limitation)

(இ) விதிகளை வகுக்கும் அதிகாரம்

(ஈ) சமய நிறுவனங்களின் சொத்துக்களை மீட்டெடுப்பது பற்றி

185. தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அரசு விதிக்கும் யாருடைய மாற்றத்திற்கு உட்பட்டது?

(அ) அரசு (ஆ) சட்டப்பேரவை (இ) நாடாளுமன்றம் (ஈ) ஆணையர்

186. இந்து சமய அறநிலைய அறங்காவலரை பணிநீக்கம் (அ) இடை நீக்கம் செய்வதற்கான சரியான காரணங்கள்.

1. சட்டப்படியான ஆணையினை மதிக்கத் தவறுவது

2. சமய நிறுவன நலனுக்கு எதிராக செயல்படுவது

3. தொடர்சியாக ஐந்து அறங்காவலர் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தவறுவது

4. சமய நிறுவனங்களின் சொத்தில் இருந்துவரும் குத்தகையில் அவருக்கு ஒரு நலன் இருக்குமேயானால்

(அ) 1,2 மற்றும் 3 மட்டும் சரி (ஆ) 1,2,4 மட்டும் சரி

(இ) 1,2,3,4 மட்டும் சரி (ஈ) 1 மற்றும் 4 மட்டும் சரி

187. கீழ்கண்ட எந்த நிறுவனம் தொடர்புடைய சமய நிறுவனத்தின் பதிவேடு தயார் செய்யப்பட்டு நேரடியாக ஆணையரிடம் கொடுக்க வேண்டும்?

(அ) மடம் (ஆ) ஜைனமதம் (இ) புத்தமதம் (ஈ) மேலுள்ளவை அனைத்தும் தவறு

188. துணிபு : தர்மகர்த்தா பதிவு ஆவணத்தின் “கோவில் நிர்வாக குழுவிடம்” சமர்பிக்க வேண்டும்.

காரணம் : தர்மகர்த்தா அறநிலைய பதிவு ஆவணத்தினை ஆண்டு கூறாய்விற்க்கு ஆணையரிடம் சமர்பிக்க வேண்டும்

(அ) துணிபு சரி ஆனால் காரணம் தவறு

(ஆ) துணிபு மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் துணிபிற்க்கு சரியான விளக்கமல்ல.

(இ) துணிபு தவறு, காரணம் சரி

(ஈ) துணிபு மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் துணிபிற்கான சரியான விளக்கமாகும்.

189. பின்வரும் கூற்றிற்கான காரணத்தை ஆராய்க.

கூற்று (A) : அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு வலிமை சேர்த்துள்ளது.

காரணம் (R) : தமிழ் அர்ச்சனை நூல்கள் அனைத்து திருக்கோயில்களிலும் கிடைக்கச் செய்யும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 12.08.2021 அன்று துவங்கி வைத்தார்.

(அ) (A) சரி ஆனால் (R) தவறு

(ஆ) (A) மற்றும் (R) சரி மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்.

(இ) (A) தவறு (R) என்பது சரி

(ஈ) (A) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல

190. நிதி வசதியற்ற தமிழக திருக்கோயில்களில் நடைபெறும் ஒரு கால பூஜை திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு.

(அ) 1959 (ஆ) 1976 (இ) 1986 (ஈ) 1996

191. சமய நிறுவனங்கள் (அசையா சொத்து குத்தகை) விதிகள் 1963 கீழ், பொது ஏலத்தை நடத்த அங்கீகரிக்கப்படாத நபர் யார்?

(அ) செயல் அலுவலர்

(ஆ) அறக்கட்டளையின் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட அறங்காவலர்

(இ) உதவி ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்

(ஈ) அறநிலையத்துறை செயலாளர்

192. சரியானதை தேர்வு செய்க.

அறங்காவலர், திருக்கோவில் மற்றும் அறநிலையங்களின் அசையா சொத்தின் உரிமை மாற்றம் நடைமுறைகள்.

1. அசையா சொத்தின் உரிமை மாற்றம் 5 ஆண்டுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. உரிமை மாற்ற விபரம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்

3. ஆணையர் முன் அனுமதி ஐந்தாண்டுக்கு மேல் மாற்றும் சொத்திற்கு தேவையில்லை

(அ) 1 மட்டும் சரி (ஆ) 2 மட்டும் சரி (இ) 3 மட்டும் சரி (ஈ) 1 மற்றும் 2 சரி

193. வாடகை நிர்ணயக்குழுவில் அறங்காவல் துறை அலுவலர்க்ள், அறங்காவலர்கள் அல்லது அறங்காவலர் குழுத்தலைவர் ஆகியோருடன் சேர்ந்து ————ம் இடம் பெறுவார்.

(அ) மாவட்ட நீதிபதி (ஆ) மாவட்ட கண்காணிப்பாளர்

(இ) மாவட்ட பதிவாளர் (ஈ) மாவட்ட நில அளவையர்

194. தமிழக அரசால் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சேக்கிழார் விழா கொண்டாடப்படும் இடம்

(அ) தஞ்சைப் பெருவுடையார் கோயில்

(ஆ) சிதம்பரம் நடராசர் திருக்கோயில்

(இ) சென்னை அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்

(ஈ) மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்

195. திருக்கோயில்களுக்கு உபயமாக பெறப்படும் உபரி கால்நடைகள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கும் எவ்வாறு வழங்கப்படுகிறது?

(அ) ஏலம் விடுவதன் மூலமாக (ஆ) ரூபாய் 2,000 பெற்றுக் கொண்டு

(இ) ரூபாய் 10,000 பெற்றுக்கொண்டு (ஈ) விலையின்றி

196. துணிபு : கட்டிட உரிமையாளருக்கு தமிழ்நாடு குத்தகை மற்றும் வாடகை சட்டம் 1960ன் கீழ் தண்டனை வழங்கப்படும்.

காரணம்: உரிமையாளருக்கான தண்டனைகள் அனைத்தும் அபராதமே

(அ) துணிபு சரி ஆனால் காரணம் தவறு

(ஆ) துணிபு மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் துணிபிற்கன சரியான விளக்கமல்ல

(இ) துணிபு தவறு காரணம் சரி

(ஈ) துணிபு மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் துணிபிற்கான விளக்கமாகும்.

197. அரசு வாடகைதாரராக இருக்கும் கட்டிடங்களை, நில உரிமையாளர் உடமை கோரும் போது, பின்வருபவர்களில் எவருக்கு அறிக்கை வெளியிட அதிகாரம் உள்ளது?

(அ) உயர்நீதிமன்றம் (ஆ) மாநில அரசு (இ) அதிகாரம் பெற்ற அலுவலர் (ஈ) பதிவாளர்

198. சரியான மற்றும் போதியதுமான காரணங்களுக்காக யார் நிர்வாக அலுவலரை இடைநீக்கம் அல்லது நீக்கம் செய்யலாம்?

(அ) கோயில் நிர்வாகக் குழுமம் (ஆ) உரித்தமுடையவர் (இ) அறங்காவலர் (ஈ) ஆணையர்

199. ஒரு நிர்வாக அலுவலரை பதவிநீக்கம் செய்ய கீழ்க்கண்ட யாரால் இயலும்?

(அ) தமிழ்நாடு அரசு (ஆ) ஆணையர்

(இ) துணை ஆணையர் (ஈ) இணை ஆணையர்

200. பொருத்துக.

நிலைகள் பணியிடங்கள்

அ. இணை ஆணையரின் கீழ் வரக்கூடிய செயல் அலுவலர் 1. 11

ஆ. உதவி ஆணையர் கீழ் வரக்கூடிய செயல் அலுவலர் 2. 154

இ. செயல் அலுவலர் நிலை 3 3. 27

ஈ. செயல் அலுவலர் நிலை 4 4. 250

அ ஆ இ ஈ

அ. 1 3 4 2

ஆ. 2 4 3 1

இ. 3 4 2 1

ஈ. 3 2 1 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!