Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc October Current Affairs Online Test in Tamil & English

Tnpsc October Current Affairs Online Test in Tamil & English

Tnpsc October Current Affairs Online Test in Tamil & English: The Tnpsc October Current Affairs Online Test in Tamil & English for Year 2017 is given here as Quiz Format. To get full marks in CA you must Practice these questions here. This Current Affairs Useful for Tnpsc, UPSC, SSC, BANK, TET, SI , POLICE and Army Exams. Also it is best Practice for Upcoming Tnpsc VAO exam 2017 2018.

Tnpsc October Current Affairs Online Test in Tamil & English
Tnpsc October Current Affairs Online Test in Tamil & English

Tnpsc October Current Affairs Online Test in Tamil & English

Congratulations - you have completed Tnpsc October Current Affairs Online Test in Tamil & English. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
எந்த தேதியில் ஐ.நா. சபையின் சர்வதேச அகிம்சை நாள் அனுசரிக்கப்படுகிறது? [The United Nations’ (UN) International Day of Nonviolence is observed on which date?]
A
அக்டோபர் 4 [October 4]
B
அக்டோபர் 1 [October 1]
C
அக்டோபர் 2 [October 2]
D
அக்டோபர் 3 [October 3]
Question 1 Explanation: 
Answer: [C] அக்டோபர் 2 [October 2] இந்திய விடுதலை இயக்கத்தின் தலைவரும் அகிம்சை தத்துவம் மற்றும் உத்தியின் முன்னோடியுமான மகாத்மா காந்தியின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்.2 அன்று ஐ.நா. சபை சர்வதேச அகிம்சை நாளை அனுசரிக்கிறது. கல்வி மற்றும் பொதுவான விழிப்புணர்வின் மூலம் அகிம்சை பற்றிய செய்தியை பரப்புவது இந்நாளின் நோக்கமாகும். இந்நாள், இந்தியாவில் ‘காந்தி ஜெயந்தி’ என குறிப்பிடப்படுகிறது.
Question 2
2017–க்கான அனைத்துலக முதியோர் நாள் எந்தத்தேதியில் கடைபிடிக்கப்படுகிறது? [The 2017 International Day of Older Persons is observed on which date?]
A
அக்டோபர் 2[October 2]
B
அக்டோபர் 1 [October 1]
C
அக்டோபர் 3 [October 3]
D
அக்டோபர் 4 [October 4]
Question 2 Explanation: 
Answer: அக்டோபர் 1 [October 1] முதியோர்களை பாதிக்கும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் அக்.1 அன்று அனைத்துலக முதியோர் நாள் அனுசரிக்கப்படுகிறது. 2017–க்கான மையக்கருத்து “Stepping into the Future: Tapping the Talents, Contributions and Participation of Older Persons in Society” ஆகும். இது சமூக, கலாச்சார, பொருளாதார, கடமை மற்றும் அரசியல் வாழ்வின் பல்வேறு அம்சங்களில் முதியோரை பங்கெடுப்பதற்கும், பலப்படுத்துவதற்குமான பயனுள்ள வழிகளை ஆராயும்.
Question 3
எந்த மத்திய அமைச்சர், நாடுதழுவிய இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கிவைத்துள்ளார்? [Which union minister has launched nationwide Free Eye Check-up Campaign?]
A
சுஷ்மா சுவராஜ் [Sushma Swaraj]
B
மேனகா காந்தி [Menaka Gandhi]
C
நரேந்திர மோடி [Narendra Modi]
D
நிதின் கட்காரி [Nitin Gadkari]
Question 3 Explanation: 
Answer: நிதின் கட்காரி [Nitin Gadkari] மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையமைச்சரான நிதின் கட்காரி, மகாராஷ்டிராவின் நாக்பூர் புறவழிச்சாலையில் உள்ள பஞ்சாரி சுங்கச்சாவடியில் அக்.2 அன்று சரக்குந்து ஓட்டுநர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான நாடுதழுவிய இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கண்ணாடி விநியோகம் ஆகியவற்றைத் தொடங்கிவைத்தார்.
Question 4
பின்வருவோருள் 2017–ம் ஆண்டின் உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசினை வென்றவர்கள் யார்? [Who of the following has/have won the Nobel Prize in Physiology or Medicine 2017?]
A
ஜெஃப்ரே C. ஹால் [Jeffrey C. Hall]
B
மைக்கேல் ரோஸ்பாஷ் [Michael Rosbash]
C
மைக்கேல் W. யங் [Michael W. Young]
D
மேலுள்ள அனைத்தும் [All of the above]
Question 4 Explanation: 
Answer: [D] மேலுள்ள அனைத்தும் [All of the above] பூமியின் பரிணாம வளர்ச்சிக்கேற்பவும், பருவநிலை மற்றும் வெப்பத்தால் உண்டாகும் சக்தி இழப்பை ஈடுசெய்யவும் மனிதர்கள், விலங்கினம், தாவரங்கள் உள்பட அனைத்து உயிரினங்களிலும் இரவு நேரங்களில் விழித்திருந்து வேலை செய்து தேவையான புரதச்சத்தை ஈட்டித்தரும் மரபணு பற்றிய ஆய்வை வெற்றிகரமாக நடத்தியமைக்காக, 2017-ம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசானது ஜெஃப்ரே C. ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ் மற்றும் மைக்கேல் W. யங் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சுவீடனின் ஸ்டாக்ஹோமிலுள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில், நோபல் பரிசுக்குழு மூலம் நோபல்பரிசு பெற்ற 3 பேருக்கும் 9 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனர் (இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய்) பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.
Question 5
2017–31ம் ஆண்டிற்கான 3வது தேசிய வனவுயிர் நடவடிக்கைத் திட்டம், எந்தக் குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது? [Which committee has drafted the 3rd National Wildlife Action Plan (NWAP) for 2017-2031?]
A
கிருஷ்ணமூர்த்தி குழு [Krishna Murthy committee]
B
JC காலா குழு [JC Kala committee]
C
பிரபாகர் ரெட்டி குழு [Prabhakar Reddy committee]
D
K C பதன் குழு [K C Patan committee]
Question 5 Explanation: 
Answer: [B] JC காலா குழு [JC Kala committee] 2017-31ம் ஆண்டிற்கான 3வது தேசிய வனவிலங்கு நடவடிக்கைத் திட்டத்தை அண்மையில் புது டெல்லியில் நடைபெற்ற 2017–க்கான உலகளாவிய வனவுயிர் திட்ட மாநாட்டில், சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார். அமைச்சரவையின் முன்னாள் செயலரான JC காலா தலைமையில் 12 உறுப்பினர்களைக்கொண்ட குழுவால் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வனவுயிரிகளின் காலநிலை மாற்றத் தாக்கத்துடன் தொடர்புடைய பிரச்சனைகளை இந்தியா முதல்முறையாக அங்கீகரித்துள்ளது. அனைத்து வனவுயிரிகளையும் பாதுகாப்பதில் ஓர் இயற்கை அணுகுமுறையை இந்தத் திட்டம் கொண்டுள்ளது.
Question 6
2017–க்கான ஐ. நாவின் உலக வசிப்பிட நாளுக்கான மையக்கருத்து என்ன? [What is the theme of the 2017 United Nations (UN)’s World Habitat Day (WHD)?]
A
Housing public spaces for all
B
Housing Policies: Affordable Homes
C
Housing at the Centre
D
Housing & Climate Change Policies
Question 6 Explanation: 
Answer: [B] Housing Policies: Affordable Homes அனைவருக்கும் போதுமான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் “Housing Policies: Affordable Homes” எனும் மையக்கருத்துடன் 2017–க்கான ஐ. நாவின் உலக வசிப்பிட நாள் அக்.2 அன்று கடைபிடிக்கப்பட்டது. இந்நாளின் நோக்கம் நமது நகரங்களில் அடிப்படை மனித உரிமைகளுடன் போதுமான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகும். வாழ்விடத்தின் அவசியம் குறித்து எதிர்கால சந்ததியினருக்கு ஞாபகப்படுத்தும் கூட்டுப்பொறுப்பையும் இது வலியுறுத்துகிறது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் வரும் முதல் திங்கட்கிழமையை ஐ. நா அதிகாரப்பூர்வமான உலக வசிப்பிட நாளாக அறிவித்துள்ளது.
Question 7
2017–ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவர்கள் யார்? [Who of the following have won the Nobel Prize in Chemistry 2017?]
A
Jean-Pierre Sauvage, Fraser Stoddart and Ben Feringa
B
Tomas Lindahl and Paul L. Modrich
C
Brian K. Kobilka and Robert J. Lefkowitz
D
Jacques Dubochet, Joachim Frank and Richard Henderson
Question 7 Explanation: 
Answer: [D] Jacques Dubochet, Joachim Frank and Richard Henderson உயிர் மூலக்கூறுகளை முப்பரிமாண முறையில் துல்லியமாக படம் பிடித்ததற்காக சுவிட்சர்லாந்தின் ஜேக்குஸ் டுபோசெட், அமெரிக்காவின் ஜோச்சிம் பிராங்க், இங்கிலாந்தின் ரிச்சர்ட் ஹெண்டர்சன் ஆகியோருக்கு 2017–ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
Question 8
UNDP–யுடன் இணைந்து, SECURE எனும் இமயமலை பாதுகாப்பு திட்டத்தை தொடங்கிவைத்த மத்திய அமைச்சர் யார்? [Which union minister has launched SECURE Himalaya project in association with UNDP?]
A
நரேந்திர மோடி [Narendra Modi]
B
ஹர்ஷ் வர்தன் [Harsh Vardhan]
C
ராஜ்நாத் சிங் [Rajnath Singh]
D
நிதின் கட்காரி [Nitin Gadkari]
Question 8 Explanation: 
Answer: [B] ஹர்ஷ் வர்தன் [Harsh Vardhan] புது டெல்லியில் நடைபெற்ற உலக வனவுயிர் திட்ட மாநாட்டில் ஐ.நாவின் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன் SECURE எனும் இமயமலை திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்த 6 ஆண்டு திட்டத்தின் நோக்கம், இயற்கை வனப்புடைய இமயமலையின் உயரமான சுற்றுச்சூழல் பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்வதாகும். இதில் சங்தங் (ஜம்மு மற்றும் காஷ்மீர்), லாஹலில் உள்ள பங்கி மற்றும் கின்னார் (இமாச்சலப்பிரதேசம்), கங்கோத்ரியில் உள்ள கோவிந்த் மற்றும் தர்மா, பித்தோராகரில் உள்ள பையன்ஸ் பள்ளத்தாக்கு (உத்தரகண்ட்) மற்றும் கஞ்சன்ஜங்காவில் உள்ள மேல் டீஸ்டா பள்ளத்தாக்கு (சிக்கிம்) முதலிய பகுதிகள் அடங்கும். பனிச்சிறுத்தை மற்றும் பிற அழிவின் விளிம்பிலிருக்கும் இனங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் மூலம், அப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதோடு, வனவுயிரிழப்பைக் குறைப்பதற்கான அமலாக்கத்தை மேம்படுத்துவது இத்திட்டத்தின் மைய நோக்கமாக இருக்கும்.
Question 9
உலக சுகாதார அமைப்பில் துணை இயக்குநர் பதவியை வகிக்கவுள்ள முதல் இந்தியர் யார்? [Who has become the first Indian to hold deputy director general post at World Health Organization (WHO)?]
A
ரிது கரிதல் [Ritu Karidhal]
B
செளமியா சுவாமிநாதன் [Soumya Swaminathan]
C
மினல் சம்பத் [Minal Sampath]
D
அனுராதா TK [Anuradha TK]
Question 9 Explanation: 
Answer: [B] செளமியா சுவாமிநாதன் [Soumya Swaminathan] உலக சுகாதார அமைப்பின் துணை இயக்குநர் பதவிக்கு, இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் Dr.செளமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவைச்சேர்ந்த ஒருவர், இவ்வமைப்பின் மிகவுயரிய பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இவர், தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைமை இயக்குநராக உள்ளார். இந்தியாவில் பசுமைப்புரட்சியை அறிமுகப்படுத்திய M.S. சுவாமிநாதனின் மகளான இவர், காச நோய் மற்றும் HIV குறித்த ஆய்விலும், விழிப்புணர்வு ஏற்படுத்தியதிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். இவருடன், பிரிட்டனைச் சேர்ந்த ஜேன் எல்லிசன், பெருநிறுவன இயக்கங்களின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Question 10
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய தலைவர் யார்? [Who is the new chairman of the State Bank of India (SBI)?]
A
ரவீந்திர தோலக்கியா [Ravindra Dholakia]
B
ரஜ்னிஷ் குமார் [Rajnish Kumar]
C
மெளமிதா தத்தா [Moumita Dutta]
D
நந்தினி ஹரிநாத் [Nandini Harinath]
Question 10 Explanation: 
Answer: [B] ரஜ்னிஷ் குமார் [Rajnish Kumar] ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக்காலம், அக்.6–ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, தற்போது SBI-ன் மேலாண்மை இயக்குநராக பதவியிலுள்ள ரஜ்னிஷ் குமார், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Question 11
2017–ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவர்கள் யார்? [Who of the following have won the Nobel Prize in Physics 2017?]
A
Rainer Weiss, Kip Thorne and Barry Barish
B
John Kosterlitz and Duncan M. Haldane
C
Takaaki Kajita, Barry Barish and Rainer Weiss
D
David J. Wineland, John Kosterlitz and Rainer Weiss
Question 11 Explanation: 
Answer: [A] Rainer Weiss, Kip Thorne and Barry Barish ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பினை உறுதிசெய்தமைக்காக 2017–ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு ரெய்னர் வைஸ், பெரி பேரிஸ் மற்றும் தோர்ன் ஆகிய மூவருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் லிகோ–விர்கோ என்ற கருவியின் மூலம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு விசை கொள்கைகளை 100 ஆண்டுகளுக்குப் பிறகு நிரூபித்துள்ளதால் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. 1901–லிருந்து அங்கீகரிக்கப்பட்ட 204 பேராசிரியர்களின் கௌரவமான பட்டியலில் இவர்கள் சேரவுள்ளனர். இந்த மூவரும் 9 மில்லியன் குரோனார் பரிசுத்தொகையை பகிர்ந்துகொள்வார்கள். பேராசிரியர் வைஸ் பரிசுத்தொகையில் பாதியையும், பேரிஸ் மற்றும் தோர்ன் மற்ற பாதியையும் பகிர்ந்துகொள்வார்கள். பெருமளவிலான பொருட்கள் முடுக்கிவிடப்படும்போது ஏற்படும் இடைவெளியை நீட்டுவதும், அழுத்துவதும் பற்றி ஈர்ப்பு விசைகள் விவரிக்கின்றன.
Question 12
2017–ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர் யார்? [Who of the following has won the Nobel Prize for Literature 2017?]
A
ஸ்வெட்லனா அலெக்சிவிச் [Svetlana Alexievich]
B
மோ யன் [Mo Yan]
C
பேட்ரிக் மோடியானோ [Patrick Modiano]
D
கசுவோ இஷிகுரோ [Kazuo Ishiguro]
Question 12 Explanation: 
Answer: [D] கசுவோ இஷிகுரோ [Kazuo Ishiguro] பிரிட்டிஷ் எழுத்தாளரான கசுவோ இஷிகுரோ, 2017–ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசினை வென்றுள்ளார். கசுவோவின் நாவல்கள் மிகச்சிறந்த மனித உணர்வுகளின் பிம்பங்களாக உள்ளன. அவரின் எழுத்துக்கள் நாம் வாழும் உலகத்துடனான தொடர்பை, மனித கற்பனை உணர்வுகளின் அடி ஆழத்திலிருந்து வெளிப்படுத்துவதாக உள்ளன என்று நோபல் பரிசுக்குழு பெருமைப்படுத்தியுள்ளது. இவருக்கு 9 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த இலக்கியப்பரிசானது அவரின் ஒரு பணிக்கு மட்டுமல்லாமல் வாழ்நாளில் அவர் செய்த மொத்த பணிக்குமாக வழங்கப்படுகிறது. இஷிகுரோ எழுதிய 8 நூல்களும் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது மிகப் பிரபலமான நாவல்களான “The Remains of the Day” மற்றும் “Never Let Me Go” ஆகியவை திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. 1989–ல் “The Remains of the Day” எனும் நூலுக்காக புக்கர் பரிசை இவர் வென்றுள்ளார். மேலும் 1995–ல் ஆடர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயரை பெற்றுள்ளார்.
Question 13
2017–க்கான உலக விலங்கு நாள் எந்தத் தேதியில் கடைபிடிக்கப்படுகிறது? [The 2017 World Animal Day (WAD) is observed on which date?]
A
அக்டோபர் 5 [October 5]
B
அக்டோபர் 3 [October 3]
C
அக்டோபர் 4 [October 4]
D
அக்டோபர் 6 [October 6]
Question 13 Explanation: 
Answer: [C] அக்டோபர் 4 [October 4] உலகளவில் விலங்குகளின் நிலையை மேம்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்.4 அன்று உலக விலங்கு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளுக்கான கொண்டாட்டங்களை ஏற்பாடுசெய்ய தனிநபர்கள், விலங்கு நல அமைப்புகள், சமூகக் குழுக்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் குழுக்களை ஊக்குவிப்பதன் மூலம் செய்யப்படுகிறது.
Question 14
வடகிழக்கு மண்டலத்தில் நீர்வள ஆதாரங்களை முறையாக நிர்வகிப்பதற்கு, மத்திய அரசு எந்த உயர் மட்டக்குழுவை அமைத்துள்ளது? [Which high-level committee has been constituted by the Union government for proper management of water resources in the NE region?]
A
ராஜீவ் குமார் குழு [Rajiv Kumar committee]
B
ஜகதீஷ் முகி குழு [Jagdish Mukhi committee]
C
ராம் தாஸ் குழு [Ram Das committee]
D
B D மிஷ்ரா குழு [B D Mishra committee]
Question 14 Explanation: 
Answer: [A] ராஜீவ் குமார் குழு [Rajiv Kumar committee] வடகிழக்கு மண்டலத்தில் நீர்வள ஆதாரங்களை முறையாக நிர்வகிப்பதற்கான ஓர் உயர் மட்டக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழு, நிதி ஆயோக்கின் தலைவர் ராஜீவ் குமாரின் தலைமையில் இருக்கும். இது நீர்வழங்கல், வேளாண்மை, பல்லுயிர் பாதுகாப்பு, வெள்ளச்சேதத்தை குறைத்தல், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து, வனவியல், மீன்பிடித்தல் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா ஆகியவற்றில் பொருத்தமான நீர் மேலாண்மை நன்மைகளை மேம்படுத்தும். இப்பகுதியில் உள்ள நீர் வளங்களை மேம்படுத்தவும், மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வரைவை உருவாக்கவும் இக்குழுவுக்கு பொறுப்புள்ளது. இவ்வுயர்மட்டக்குழு அதன் அறிக்கையை 2018 ஜூனில் சமர்ப்பிக்கும்.
Question 15
2017–ம் ஆண்டின் உலக ஆசிரியர் நாளுக்கான மையக்கருத்து என்ன? [What is the theme of 2017 World Teachers’ Day (WTD)?]
A
Valuing teachers, improving their status
B
A call for teachers
C
Teaching in Freedom, Empowering Teachers
D
Value teachers & empower teaching
Question 15 Explanation: 
Answer: [C] Teaching in Freedom, Empowering Teachers ஆசிரியர்களின் நிலைகுறித்து 1966ல் UNESCO/ILO பரிந்துரை கையெழுத்திடப்பட்டதன் நினைவாக, 1994 முதல் ஒவ்வோர் ஆண்டும் அக்.5 அன்று உலக ஆசிரியர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கான ஆதரவை திரட்டவும், வருங்கால தலைமுறைகளின் தேவைகள் ஆசிரியர்களால் தொடர்ந்து நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதையும் இந்நாள் இலக்காகக்கொண்டுள்ளது. 2017–க்கான மையக்கருத்து “சுதந்திரமாக கற்பிப்போம் ஆசிரியத்தை மேம்படுத்துவோம்” என்பதாகும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 15 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!