Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs 15th September 2016

Tnpsc Tamil Current Affairs 15th September 2016

Tamil Current Affairs 15th September 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 15th September 2016 is given below as quiz format. Also tnpsc peoples can download Daily Current affairs in tamil as PDF format.

Tnpsc Tamil Current Affairs 15th September 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 15th September 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. 2016 துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியில் வென்ற அணி எது ?
A
India Black
B
India Blue
C
India Green
D
India Red
Question 1 Explanation: 
கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற 2016 துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியின் 55வது பதிப்பில், இறுதிப்போட்டியில் India Blue அணி , India Red அணியை 355 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இளஞ்சிவப்பு பந்தில் விளையாடிய முதல் பகல் / இரவு போட்டி இதுவேயாகும். புஜாரா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
Question 2
2. 2016 ஐக்கிய நாடுகளின் 'சர்வதேச மக்களாட்சி தினத்தின்'  மையக்கருத்து என்ன?
A
Public participation for democracy
B
Engaging youth on democracy
C
Democracy and the 2030 Agenda for Sustainable Development
D
Space for Civil Society
Question 2 Explanation: 
ஐக்கிய நாடுகளின் 'சர்வதேச மக்களாட்சி தினம்', மக்களாட்சி அமைப்பு பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 2016-ஆம் ஆண்டிற்கான மையகருத்தானது "Democracy and the 2030 Agenda for Sustainable Development " ஆகும்.
Question 3
3. 2016-ம் ஆண்டின் அணிசேரா இயக்க (Non Aligned Movement - NAM) மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது ?
A
ஈரான்
B
வெனிசுலா
C
ஆப்கானிஸ்தான்
D
ரஷ்யா
Question 3 Explanation: 
2016 அணிசேரா இயக்க (Non Aligned Movement - NAM) மாநாட்டின் 17வது பதிப்பு வெனிசுலாவின் மார்கரிட்டா தீவில் செப்டம்பர் 17-18-இல் நடைபெற்றது. ஐக்கிய நாடுகளுக்கு பிறகு, அதிகளவில் நாடுகள் கூடும் மாநாடு, அணிசேரா மாநாடு ஆகும். இந்தியா இதன் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒன்றாகும். இந்தியா, 55 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு உட்பட 25 வளரும் நாடுகளின் தலைவர்கள் 1961-ல் பெல்கிரேடில் மாநாட்டில் சந்தித்த போது உறுப்பினரானது.
Question 4
4. அருணாச்சல பிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ளவர் யார் ?
A
ராம் நாத் கோவிந்த்
B
பன்வரிலால் புரோகித்
C
ஜோதி பிரசாத் ராஜ்கோவா
D
வி. சண்முகநாதன்
Question 4 Explanation: 
வி. சண்முகநாதன் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார். மேகாலயா கவர்னரான சண்முகநாதனுக்கு, அருணாச்சல பிரதேச ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Question 5
5. ஸ்வட்ச் பாரத் அபியான் திட்டத்தின் சின்னமாக  (Mascot) தேர்வு செய்யப்பட்ட நபர் யார் ?
A
பார்வதி பாய்
B
துலி பாய்
C
மதன் கவர்
D
கன்வர் பாய்
Question 5 Explanation: 
105 வயதான கன்வர் பாய் என்ற பெண்மணி, அவரது ஆடுகளை விற்று கழிப்பறை கட்டியுள்ளார் என்ற செய்தியை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வட்ச் பாரத் அபியானின் சின்னமாக இவரை தேர்வு செய்துள்ளார். செப்டம்பர் 17-ல் புது தில்லியில் நடைபெற்ற 'Swachhta Diwas' விழாவில் மோடி, கன்வர் பாயை கவுரவித்தார்.
Question 6
6. எந்த இந்திய ஆளுமைக்கு  யூத மனித உரிமை அமைப்பானது, சிறந்த மனிதாபிமான நபர் விருது வழங்கவுள்ளது ?
A
பாபா ராம்தேவ்
B
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
C
ஏ. ஆர். ரகுமான்
D
ரஜினிகாந்த்
Question 6 Explanation: 
ஆன்மீக தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மக்கள் மத்தியில் மனித கண்ணியம், மதநல்லிணக்க உறவுகள் மற்றும் சகிப்புத்தன்மையை ஊக்குவித்ததிற்காக, யூத மனித உரிமை அமைப்பு இவருக்கு மனிதாபிமான விருது வழங்கவுள்ளது. வாழ்க்கை கலை நிறுவனர், செப்டம்பர் 21, 2016 அன்று புது தில்லியில் நடைபெறவுள்ள "Simon Wiesenthal Centre"-ன் துவக்க விழாவில் "Simon Wiesenthal Humanitarian Laureate" பட்டம் பெற இருக்கிறார்.
Question 7
7. Fellows of Nature (FON) South Asia சிறுகதை விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது ?
A
மேக்னா பன்ட்
B
சுதா நாயுடு
C
நிர்மலா ஜெயின்
D
சாந்தனு குமார்
Question 7 Explanation: 
மேக்னா பந்த், அவரது இயற்கை சார்ந்த "People of the Sun" எனும் சிறுகதைக்காக "Fellows of Nature (FON) South Asia "என்ற விருதை பெறுகிறார்.அக்டோபர் 2016-ல் நடைபெறும் Kumaon Literary திருவிழாவில் இவ்விருது வழங்கப்பட இருக்கின்றது.ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த இலக்கிய பயண விருதுகள், இந்திய பிரஞ்சு நிறுவனம் மற்றும் இந்திய வனவிலங்கு அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கப்படுகிறது. இலக்கியத்தின் மூலம், இயற்கை குறித்த புத்தாக்க செய்திகளை வழங்கும், காலநிலை மாறுபாடு போன்ற முக்கியமான சுற்றுச்சுழல் பிரச்சனைகளை எடுத்துக்கூறும் படைப்புகளுக்கு இவ்விருது அளிக்கப்படும்.
Question 8
8. ராஃபி பிரச்சாரத்தின் 2016 விவசாய தேசிய மாநாடு எந்த நகரத்தில் தொடங்கியது ?
A
கான்பூர்
B
புது தில்லி
C
ஜெய்ப்பூர்
D
போபால்
Question 8 Explanation: 
மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளில் அறிவித்த விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் தொடர்பான முக்கியமான திட்டங்களை அமல்படுத்துவதிலுள்ள முன்னேற்றத்தை அறிய, ராஃபி பிரச்சாரத்தின் 2016 விவசாய தேசிய மாநாடு புது தில்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் செப்டம்பர் 15 அன்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாடு, மத்திய விவசாய அமைச்சர் ராதா மோகன் சிங் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது.
Question 9
9. 2016 எம்.சி.சி. முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டியில் வென்ற அணி எது ?
A
Army XI
B
Indian Railways
C
Oil & Natural Gas Corporation (ONGC)
D
Indian Oil Corporation (IOC)
Question 9 Explanation: 
தமிழ்நாட்டின், சென்னையில் நடைபெற்ற 2016 எம்.சி.சி. முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டியில் முதல் முறையாக இந்திய ரயில்வே ஆண்கள் ஹாக்கி அணி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) அணியை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது.
Question 10
10.  2016 ரியோ பாராலிம்பிக்ஸ் நிறைவு விழாவில் இந்திய கொடியை ஏந்தியவர் யார் ?
A
வருண் சிங் பாட்டி
B
தீபா மாலிக்
C
தங்கவேலு மாரியப்பன்
D
தேவேந்திர ஜஜாரியா
Question 10 Explanation: 
தங்கவேலு மாரியப்பன், செப்டம்பர் 18 அன்று நடந்த 2016 ரியோ பாராலிம்பிக்ஸ் நிறைவு விழாவில் இந்திய கொடியை ஏந்தி சென்றார். 2016 ரியோ பாராலிம்பிக்ஸ்-ல் ஆண்களுக்கான உயரம் தாண்டும் T-42 நிகழ்வில், 1.89 மீட்டர் உயரம் தாண்டி இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்று தந்தார். இதன் மூலம், பாராலிம்பிக்ஸ்-ல் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெறுகிறார். அதே நிகழ்வில் இந்தியாவைச் சார்ந்த வருண் சிங் பாட்டி வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Tags :

Tnpsc Tamil Current Affairs September 2016, Tnpsc Tamil Current Affairs 2016, Tnpsc Tamil Current Affairs 2017, Tnpsc Tamil Current Affairs October 2016, Tnpsc Tamil Current Affairs november 2016, Tnpsc Tamil Current Affairs december 2016, Tnpsc group 4 tamil current affairs, Tnpsc Portal current affairs, Tnpsc job current affairs

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!