Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs 16th September 2016

Tnpsc Tamil Current Affairs 16th September 2016

Tamil Current Affairs 16th September 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 16th September 2016 is given below as quiz format. Also tnpsc peoples can download Daily Current affairs in tamil as PDF format.

Tnpsc Tamil Current Affairs 16th September 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 16th September 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. எந்த இந்திய-அமெரிக்க எழுத்தாளர் 2015 தேசிய மனிதவியல் பதக்கத்திற்கு(National Humanities Medal) தெரிவு செய்யப்பட்டுள்ளார் ?
A
ஆபிரகாம் வர்கீஸ்
B
ஜேம்ஸ் கிராஸ்
C
பிரியங்கா செர்னவ்
D
மிலன் வில்கர்சன்
Question 1 Explanation: 
இந்திய-அமெரிக்க மருத்துவர்-ஆசிரியர் ஆபிரகாம் வர்கீஸ், 2015 தேசிய மனிதவியல் பதக்கத்திற்கு(National Humanities Medal) தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டனில் செப்டம்பர் 21 அன்று நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பாரக் ஒபாமா இவ்விருதை வழங்கவுள்ளார். இவ்விருது மனித அனுபவம், வரலாறு, இலக்கியம், தத்துவம், மற்றும் பிற மனிதநேயம் பாடங்களில் நாட்டின் புரிதலை ஆழப்படுத்தும் குழுக்கள் அல்லது தனிநபர்களுக்கு வழங்கப்படும்.
Question 2
2. இந்திரா காந்தி கிரிஷி விஸ்வவித்யாலயா (IGKV) இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
ராஜஸ்தான்
B
மத்தியப் பிரதேசம்
C
உத்தரப் பிரதேசம்
D
சத்தீஸ்கர்
Question 2 Explanation: 
சமீபத்தில், சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் உள்ள இந்திரா காந்தி கிரிஷி விஸ்வவித்யாலயா (IGKV)வில் விவசாயம் அருங்காட்சியகம் துவங்கப்பட்டது. மக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் இதுவேயாகும். அருங்காட்சியின் நோக்கமானது, சிறப்பு விவசாய உத்திகள், விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவைகளின் தீர்வு, கிராமவாசிகளின் வாழ்க்கை முறை பற்றிய தகவல்களை வழங்குவது ஆகும். ஊடாடும் முறையில் (Interactive), விவசாயம் மற்றும் சத்தீஸ்கரிலுள்ள நவீன வேளாண்மை நுட்பங்கள் காட்டப்பட உள்ளது.
Question 3
3. “Shanti ki Talaash mein Zindagi” என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது ?
A
ராதிகா நக்ராத்
B
பிரணவ் பாண்டியா
C
நிதின் போரா
D
மாலினி சோப்ரா
Question 3 Explanation: 
ஹரித்வாரை சார்ந்த ஆசிரியர் மற்றும் செய்தியாளரான ராதிகா நக்ராத் என்பவரால் “Shanti ki Talaash mein Zindagi” என்ற புத்தகம் எழுதப்பட்டது. இது ஒவ்வொரு நாளும் நடக்கிற நிகழ்வுகளை சுவாரஸ்யமான உதாரணங்கள் மற்றும் சிறு நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி எளிய மொழியில் எழுதப்பட்ட தத்துவ நூலாகும். புத்தகத்தை சமீபத்தில் உத்தரகண்ட் ஆளுநர் கே கே பவுல் வெளியிட்டார்.
Question 4
4.  வங்கி படிப்புகளுக்காக, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் பின்வரும் எந்த வங்கி கைகோர்த்திருக்கிறது?
A
எஸ்பிஐ வங்கி
B
ஆக்சிஸ் வங்கி
C
ஐசிஐசிஐ வங்கி
D
நபார்டு
Question 4 Explanation: 
சிறந்த வங்கி படிப்புகளை வழங்க ஆக்சிஸ் வங்கி சமீபத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்திருக்கிறது. ஆக்சிஸ் வங்கி, கல்லூரியின் வணிகத்துறை ஆசிரியர்களுடன் இணைந்து பாடத்திட்டத்தை வடிவமைக்கவுள்ளது. இதன் மூலம், Masters in Commerce (MCom), Master of Financial Management (MFM), Master of Financial Management (Risk & Insurance) MFM – RI, Master of Foreign Trade (MFT) போன்ற பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 2016-17 கல்வியாண்டில் இந்த புதிய படிப்புகள் துவங்கப்பட உள்ளன. இந்தியாவில் வங்கியியல் செயல்பாட்டு முறைகள் பற்றி கூறுவது மற்றும் இன்றைய கார்ப்பரேட் உலகில் மாணவர்களை கல்வி மற்றும் வர்த்தக ரீதியில் எவ்வாறு தயார் செய்துவது என்ற நோக்கத்தில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Question 5
5. ராம்குமார் ராமநாதன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
கிரிக்கெட்
B
கால்பந்து
C
ஹாக்கி
D
டென்னிஸ்
Question 5 Explanation: 
ராம்குமார் ராமநாதன், புது தில்லியின் ஆர்.கே. கன்னா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை உலக குரூப் பிளேஆப் போட்டியில் 14 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்ற ரபேல் நடாலுக்கு எதிராக ஒற்றையர் போட்டியில் இரப்பரில் விளையாடப்போகும் முதல் இந்திய டென்னிஸ் வீரர்.
Question 6
6. எந்த மொபைல் நிறுவனம், தனது மொபைல் உற்பத்தி மையத்தை ஹரியானாவில் அமைக்க அம்மாநில  அரசுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது ?
A
Xiaomi
B
Samsung
C
Gionee
D
LG
Question 6 Explanation: 
ரூ.500 கோடி முதலீட்டில் Gionee மொபைல் நிறுவனம், தனது மொபைல் உற்பத்தி மையத்தை ஹரியானாவில் அமைக்க அம்மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. பரிதாபாத்தில் 40-50 ஏக்கர் பரப்பளவில் இம்மையம் அமைக்கப்படவுள்ளது மற்றும் அடுத்த 3 ஆண்டுகளில் 28,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும்.
Question 7
7. உத்தரப் பிரதேசத்தின்  சமாஜ்வாதி கிசான் பீமா யோஜனாவின்  (RKBY) தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A
சல்மான் கான்
B
நவாசுதீன் சித்திக்
C
இர்பான் கான்
D
வித்யா பாலன்
Question 7 Explanation: 
விவசாயிகள் காப்பீடு செய்வதை இலக்காக கொண்டு செயல்படும் சமாஜ்வாடி கிசான் பீமா யோஜனா (SKBY) திட்டத்தின் விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கை உத்தரப் பிரதேச அரசு நியமித்துள்ளது. இத்திட்டத்தில், ரூ 2.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் போன்ற பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
Question 8
8. 2016 அணிசேரா இயக்க மாநாட்டில் (Non Aligned Movement - NAM) இந்தியாவின் சார்பாக, இந்தியாவை முன்னின்று வழிநடத்தவுள்ளவர் யார் ?
A
நரேந்திர மோடி
B
ஹமீத் அன்சாரி
C
அருண் ஜேட்லி
D
பிரணாப் முகர்ஜி
Question 8 Explanation: 
2016 அணிசேரா இயக்க (Non Aligned Movement - NAM) மாநாட்டின் 17வது பதிப்பு வெனிசுலாவின் மார்கரிட்டா தீவில் செப்டம்பர் 17-18-இல் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக இந்திய துணை ஜனாதிபதி முகமது ஹமீத் அன்சாரி தலைமை வகித்தார். ஐக்கிய நாடுகளுக்கு பிறகு, அதிகளவில் நாடுகள் கூடும் மாநாடு, அணிசேரா மாநாடு ஆகும். இந்தியா இதன் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒன்றாகும். இந்தியா, 55 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு உட்பட 25 வளரும் நாடுகளின் தலைவர்கள் 1961-ல் பெல்கிரேடில் மாநாட்டில் சந்தித்த போது உறுப்பினரானது.
Question 9
9. 2016 "சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு" தினத்தின் மையக்கருத்து என்ன?
A
Ozone: the mission to protect world
B
Preserve Ozone Layer
C
Ozone and climate: restored by a world united
D
Ozone Layer Protection: the mission goes on
Question 9 Explanation: 
செப்டம்பர் 16, 1987 ஆம் ஆண்டு ஓசோன் படலத்தை பாதிக்கும் பொருட்கள் என்று வரையறுக்கப்பட்ட மாண்ட்ரீல் நெறிமுறையை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதி "சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு" தினம் அனுசரிக்கப்படுகிறது. 2016-ம் ஆண்டிற்கான மையக்கருத்து “Ozone and climate: Restored by a world united” ஆகும்.
Question 10
10. எந்த குழு சமீபத்தில் பருப்பு வகைகளின்  பற்றாக்குறையை  சமாளிக்க தனது அறிக்கையை சமர்ப்பித்தது ?
A
TVSN பிரசாத் குழு
B
அரவிந்த் சுப்பிரமணியன் குழு
C
மதுகர் குப்தா குழு
D
சைலேஷ் நகர் குழு
Question 10 Explanation: 
தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, பருப்பு வகைகளின் பற்றாக்குறையை சமாளிக்க தனது அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சமர்ப்பித்துள்ளது. பருப்பு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலையில் (STP) ஒரு நியாமான உயர்வு மற்றும் போனஸ் வழங்க இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Tags :

Tnpsc Tamil Current Affairs September 2016, Tnpsc Tamil Current Affairs 2016, Tnpsc Tamil Current Affairs 2017, Tnpsc Tamil Current Affairs October 2016, Tnpsc Tamil Current Affairs november 2016, Tnpsc Tamil Current Affairs december 2016, Tnpsc group 4 tamil current affairs, Tnpsc Portal current affairs, Tnpsc job current affairs

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!