Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs 21st and 22nd August 2016

Tnpsc Tamil Current Affairs 21st and 22nd August 2016

Tamil Current Affairs 21st and 22nd August 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 21st and 22nd August 2016 is given below.

Tnpsc Tamil Current Affairs 21st and 22nd August 2016
Tnpsc Tamil Current Affairs 21st and 22nd August 2016

நடப்பு நிகழ்வுகள்: 21st and 22nd August 2016 (21.08.2016 and 22.08.2016)

1. பிரெஞ்சு நாட்டின் மரியாதைக்குரிய விருதான செவாலியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  இந்திய ஆளுமை யார் ?

A . நசிருதீன் ஷா

B . கமல்ஹாசன்

C.  சுமித்ரா கோஷ்

D. அமிதாப் பச்சன்

விடை : B.கமல்ஹாசன் 

கமல், நன்கு அறியப்பட்ட தமிழ் திரைப்பட நடிகர்,  பிரெஞ்சு அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான “செவாலியர் டி எல்’ஒர்டரே  கலை மற்றும் எட் லெட்டர்ஸ்”  (அல்லது The Knight of the Order of Arts and Letters) -க்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது பிரான்ஸ் பிரதமர் விருதின் ஒரு பகுதியாக உள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பிறகு இவ்விருதினை பெறும் 2-வது தமிழ் நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

2. ஹோமிபாபா தேசிய நிறுவனத்தின்( HBNI ) புதிய துணைவேந்தராக  நியமிக்கப்பட்டுள்ளவர்  யார் ?

A . மது கோஷ்

B . நிஷாந்த் ஜெயின்

C . P D குப்தா

D . சுமன் கோஷ்

விடை : C.  P D குப்தா

புகழ்பெற்ற விஞ்ஞானியான இவர், 5 ஆண்டுகளுக்கு மும்பை அடிப்படையிலான ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் புதிய துணைவேந்தராக (HBNI) நியமிக்கப்பட்டுள்ளார். HBNI அணுசக்தித் துறை ஒரு உதவி பெறும் நிறுவனம் ஆகும் மற்றும் ஒரு யுஜிசி சட்டத்தின் கீழ் பல்கலைக்கழகம் என்று கருதப்படும். இந்நிறுவனம் உள்நாட்டு அணுசக்தி தொழில்நுட்ப திறன் முன்னேற்றத்தினை முக்கியத்துவத்தில் கொண்டு அறிவியல் (பொறியியல் அறிவியல் உட்பட) மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்க ,ஊக்குவிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

3. 2016 பிரிக்ஸ் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம் இந்தியாவின் எந்த நகரத்தில் சமீபத்தில் துவங்கியுள்ளது ?

A.புது டெல்லி

B.போபால்

C.ராய்ப்பூர்

D.உதய்பூர்

விடை : D.உதய்பூர் .  

பிரிக்ஸ் பேரிடர் மேலாண்மையின்  2வது  பதிப்பான இம்மாநாடு ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில்  ஆகஸ்ட் 22-ல் துவங்கியது. இம்மாநாடு , இதன் இரண்டு குறிக்கோள்களான ”வெள்ளம் இடர்ப்பாடு மேலாண்மை” மற்றும் “காலநிலை மாறுதலால் ஏற்படும் நிகழ்வுகள் குறித்த தொலைநோக்கு” ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளது. இந்த 2-நாள் மாநாட்டின் நோக்கமானது, உறுப்பு நாடுகள் அவரவர் பயன்படுத்தும் ‘காலநிலை கணிப்பு’ முறைகளை பகிர்வதும் , வெள்ள இடர் மேலாண்மை குறித்த அனுபவங்களை  பகிர்வதும், தேவை ஏற்படின் உறுப்பு நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே ஆகும்.

4. குற்றங்களை கட்டுப்படுத்த டிஎன்ஏ குறியீட்டு முறையை  (DIS) எந்த மாநில காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது  ?

A.ஒடிஷா

B.ஆந்திரப்பிரதேசம்

C.ஹரியானா

D.பஞ்சாப்

விடை : B.ஆந்திரப்பிரதேசம்.  

சமீபத்தில் ஆந்திரப் பிரதேச போலீஸ் டிஎன்ஏ குறியீட்டு அமைப்பின்  (DIS) மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் புது யுத்தியை அறிமுகம் செய்துள்ளது . இதன் முதற்கட்டமாக , எச்சில் மற்றும் இரத்தகறையின் மூலம் 90-120 நிமிடங்களில் குற்றவாளியின் DNA  மாதிரியை பெற முடியும் . இத்தகைய DNA குறிப்புகளை கொண்டு குற்றவாளியை நெருங்க முடியும் மேலும் அவர் தொடர்புடைய வழக்குகளை  ஆராய முடியும். அத்துடன் மட்டுமல்லாமால் , சந்தேக நபர்கள் தாங்கள் குற்றமற்றவர் என்றும்  நிரூபிக்க இயலும் . இந்த அமைப்பு ,சமீபத்திய DNA தொழில்நுட்ப கருவிகளால் (RapidHIT டிஎன்ஏ அமைப்பு என அழைக்கப்படும்) அமெரிக்காவின் IntegenX  என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

5. ASSOCHAM-ன் சமீபத்திய அறிக்கையின் படி, தொழில்நுட்ப உந்துதலினால்  துவங்கப்படும் நிறுவனங்கள்

(ஸ்டார்ட்-அப்ஸ் ) தரவரிசையில் இந்தியாவின் இடம் யாது ?

A.4

B.3

C.2

D.5

விடை : B.3வது .  

ASSOCHAM மற்றும் Thought Arbitrage Research Institute இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா மூன்றாவது இடத்தில உள்ளது. முதல் இரண்டு இடங்களை முறையே USA  மற்றும் UK பெற்றுள்ளது . ஆய்வுகளின்படி, இந்தியாவில் தொழில்நிறுவனங்களை  துவங்க  ஏற்ற இடமாக பெங்களூரு உள்ளது. இதற்கடுத்து  டெல்லி NCR , மும்பை உள்ளன. ‘துவங்கு இந்தியா ‘, ‘இந்தியாவில் உருவாக்கு’, ‘டிஜிட்டல் இந்தியா ‘ போன்ற திட்டங்கள்  புதிதாக தொழில் துவங்கவுள்ளவர்களுக்கு ஒரு  நல்ல சூழலை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது .

6.பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தீர்வுகளுக்காக  பின்வரும்  எந்த தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU) செய்துள்ளது  ?

A.விப்ரோ

B.இன்போஸிஸ்

C.கூகிள்

D.மைக்ரோசாப்ட்

விடை : D.மைக்ரோசாப்ட் . 

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) சமீபத்தில் பெருவணிகங்களின் தேவைகளை  சந்திக்கும் பொருட்டு,  தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தீர்வுகளை வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது வருகிறது. இதன் மூலம், அரசு நிறுவனங்கள் உட்பட பிஎஸ்என்எல்லின் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோ தேவைகளை மைக்ரோசாப்ட் வழங்கும்.

7.  உலக கொசு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது  ?

A.ஆகஸ்ட் 21

Bஆகஸ்ட் 22

C.ஆகஸ்ட் 20

D.ஆகஸ்ட் 23

விடை: C.ஆகஸ்ட் 20. 

 மலேரியா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20-ம் நாள் கொசு தினம் அனுசரிக்கப்படுகிறது.மேலும் அதை எவ்வாறு தடுப்பது மற்றும் அதனை  குணப்படுத்தும் ஆராய்ச்சிக்கான  நிதியை உயர்தல் போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் . 1897-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் நாள் ,பிரிட்டிஷ் மருத்துவர் ஐயா ரொனால்ட் ராஸ் என்பவர்,அனாஃபிலிஸ் எனப்படும் பெண் கொசுக்கள்தான் மனிதர்களுக்கு  மலேரியாவை  பரப்புகிறது என் கண்டறிந்தார். இதுவே இந்நோய்  பற்றி  அறிந்து கொள்ள அஸ்திவாரமாக அமைந்தது.

8. சமீபத்தில் காலமான சுப்ரதா பானர்ஜி என்பவர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?

A.கிரிக்கெட்

B.இறகுப் பந்து

C.குத்துச்சண்டை

D.கால்பந்து

விடை : A.கிரிக்கெட் . 

சுப்ரதா பானர்ஜி (71), முன்னாள் சர்வதேச நடுவர், சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்காளத்தில்  காலமானார். அவருடைய சர்வதேச விளையாட்டு வாழ்க்கை 15 ஆண்டுகள்  நீடித்தது .1998 மே மாதம், குவாலியறில் நடைபெற்ற ,இந்தியா -கென்யா போட்டியே அவரது இறுதி சர்வதேச போட்டி.அவர் பிசிசிஐ-ன் நடுவர் பயிற்சியாளர் மேலும் இவர் ஒரு நடுவர் கல்வியாளர் ஆவார் .

9. ஒலிம்பிக் ஆணை விருது சமீபத்தில் யாருக்கு  அளிக்கப்பட்டது ?

A.ஜோசிம் லோ

B.கரோலினா மாரின்

C.தாமஸ் பாக்

D. N ராமச்சந்திரன்

விடை :  D. N ராமச்சந்திரன்.  

N ராமச்சந்திரன், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் (பதவியிலிருந்தும்),  அவரது அளப்பரிய சேவைகளை பாராட்டி  ஒலிம்பிக் இயக்கம் அவருக்கு “ஒலிம்பிக் ஆணை விருதை” வழங்கியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் (ஐஓசி)  தாமஸ் பாக் மூலம் இவ்விருது வழங்கப்பட்டது.  இது ஒலிம்பிக் வரிசையில் ஒலிம்பிக் இயக்கத்தின் மிக உயர்ந்த விருது மற்றும் குறிப்பாக ஒலிம்பிக்  இயக்கத்திற்கு  சிறந்த பங்களிப்பை  அளிப்பவருக்கு  மட்டும் கிடைக்கக்கூடிய விருது.

10. “தேர்வு நாள்” (Selcection  Day)  என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் ?

A.மோகன் குமார்

B.நீதா மேனன்

C.கேசவ குஹா

D.அரவிந்த் அடிகா

விடை :D. அரவிந்த் அடிகா. 

அரவிந்த் அடிகா, மேன் புக்கர் பரிசு பெற்ற ஒரு எழுத்தாளர்(The White  Tiger ). கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஆக தங்கள் தந்தையால் துன்புறுத்தி எழுப்பப்படும்  இரண்டு மும்பை சகோதரர்கள் மற்றும் அவ்வயதில் வரும் உறவு மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்கள்  பற்றி ஒரு திகைப்பூட்டும் புதிய நாவல். தனிப்பட்ட இன்னிங்ஸ் கணக்குகளுடன் மதிநுட்பமான தீர்ப்புகள் இணைந்த, விளையாட்டு பற்றி எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!