Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs 21st September 2016

Tnpsc Tamil Current Affairs 21st September 2016

Tamil Current Affairs 21st September 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 21st September 2016 is given below as quiz format. Also tnpsc peoples can download Daily Current affairs in tamil as PDF format.

Tnpsc Tamil Current Affairs 21th September 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 21th September 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1.  2016 ஐக்கிய நாடுகளின் 'சர்வதேச அமைதி தினத்தின்'  கருப்பொருள்(Theme) என்ன ?
A
Who Will You Make Peace With?
B
Partnerships for Peace – Dignity for All
C
Long live absolute world peace
D
The Sustainable Development Goals: Building Blocks for Peace
Question 1 Explanation: 
அனைத்து நாடுகள் மற்றும் மக்கள் மத்தியில் உலக சமாதானம் பற்றிய கருத்தியலை வலுப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ம் தேதி சர்வதேச அமைதி தினத்தை கடைபிடிக்கிறது. 2016-ஆம் ஆண்டின் கருப்பொருள் "The Sustainable Development Goals: Building Blocks for Peace" ஆகும்.
Question 2
2.  2016 வட கிழக்கு இணைப்பு உச்சி மாநாடு இந்தியாவின் எந்த நகரில் தொடங்கியது?
A
கவுகாத்தி
B
அகர்தலா
C
இட்டாநகர்
D
இம்பால்
Question 2 Explanation: 
2016 வட கிழக்கு இணைப்பு உச்சி மாநாடு திரிபுராவின் அகர்தலாவில் தொடங்கி செப்டம்பர் 23-ம் தேதி நிறைவடையும். இந்த 2 நாள் மாநாடு, தென் கிழக்கு ஆசியா மற்றும் வட கிழக்கு ஆசியாவை இணைக்கும் பொருளாதார நடைமுறைகள், சந்தை தொடர்புகள், வடகிழக்கில் ஆற்றல் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு தேவைகள் போன்றவற்றை மேம்படுத்துதலில் கவனம் செலுத்தவுள்ளது. சிங்கப்பூர், வங்காளம், மியான்மார் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
Question 3
3.  “Param-Ishan” எனும் super computing வசதியை சமீபத்தில் மத்திய அரசு எந்த  ஐஐடி கல்லூரியில் அறிமுகம் செய்துள்ளது ?
A
ஐஐடி இந்தூர்
B
ஐஐடி பாம்பே
C
ஐஐடி கவுஹாத்தி
D
ஐஐடி சென்னை
Question 3 Explanation: 
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சமீபத்தில் ஐஐடி கவுஹாத்தியில் “Param-Ishan” எனும் super computing வசதியை அறிமுகம் செய்து வைத்தார். உயர் செயல்திறன் கொண்ட இந்த “Param-Ishan” அமைப்பின் வேகம் 250 Teraflops, கொள்ளளவு 300 TB ஆகும். இதனை கணக்கீட்டு வேதியியல், கணக்கீட்டு திரவ இயக்கவியல், கணக்கீட்டு மின்காந்தம், சிவில் இன்ஜினியரிங் கட்டமைப்புகள், நேனோ தொகுதி சுய அசெம்பிள், உகப்பாக்கம் போன்ற பயன்பாட்டு பகுதிகளில் பயன்படுத்த முடியும்
Question 4
4.  இந்தியாவின் முதல் கடலோர தொழில்துறை நடைபாதையை அமைக்க.ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) எவ்வளவு கடன் தொகையை  வழங்கவுள்ளது ?
A
$ 543 மில்லியன்
B
$ 826 மில்லியன்
C
$ 631 மில்லியன்
D
$ 497 மில்லியன்
Question 4 Explanation: 
விசாகப்பட்டினம் மற்றும் சென்னை இடையே இந்தியாவின் முதல் கடலோர தொழில்துறை நடைபாதையை கட்ட $ 631 மில்லியன் கடன் வழங்குவதாக ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ஒப்புதல் அளித்துள்ளது. 2,500 கி.மீ நீண்ட கிழக்கு கடற்கரை பொருளாதார நடைபாதை திட்டத்தின் முதற்பகுதியாக அமைக்கப்படும் இந்த 800 கி.மீ நடைபாதை இந்தியாவின் கிழக்கு கடற்கரை வளர்ச்சியில் உத்வேகம் அளிக்கும். இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மற்ற பகுதிகளில் தடையற்ற வர்த்தக இணைப்புகளை எளிதாக்கும்.
Question 5
5. பிரியேஷா தேஷ்முக் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
வூஷூ
B
நீச்சல்
C
குத்துச்சண்டை
D
துப்பாக்கி சுடுதல்
Question 5 Explanation: 
ரஷ்யாவின் கஷானில் செப்டம்பர் 7-15 வரை நடைபெற்ற முதல் உலக காது கேளாதோர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் காது கேளாத துப்பாக்கி சுடும் வீராங்கனை பிரியேஷா தேஷ்முக் ,10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். இதுவே இவர் பங்கேற்கும் முதல் சர்வதேச போட்டியாகும்.
Question 6
6. எந்த  இந்திய பங்குச்சந்தை, பங்கு தகவல்களை( Live stock updates) உடனுக்குடன்  வழங்க ட்விட்டருடன் கைகோர்த்திருக்கிறது ?
A
OTC Exchange of India
B
Multi Commodity Exchange of India
C
Bombay Stock Exchange
D
National Stock Exchange
Question 6 Explanation: 
மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ), மில்லியன் கணக்கான முதலீட்டாளர்களுக்கு, S & P மும்பை பங்குச் சந்தையின் நிலைகள், பங்குகளின் விலைகள் மற்றும் சென்செக்ஸ் நிறுவனங்களின் தொடக்க மற்றும் நிறைவு புள்ளிவிவரங்கள் போன்றவற்றை உடனுக்குடன் வழங்க ட்விட்டர் வலைதளத்துடன் கைகோர்த்திருக்கிறது. ஒரு பங்குச் சந்தை மற்றும் ஒரு சமூக ஊடகமிடையே இவ்வாறான ஒப்பந்தம் செய்வது ஆசியாவில் இதுவே முதல் முறையாகும்.
Question 7
7. 2016 BIRAC இன்னொவேட்டர்ஸ் மாநாடு இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற உள்ளது ?
A
புது தில்லி
B
மும்பை
C
சென்னை
D
கவுகாத்தி
Question 7 Explanation: 
2016 BIRAC(Biotechnology Industry Research Assistance Council ) இன்னொவேட்டர்ஸ் மாநாட்டின் 5வது பதிப்பு புது தில்லியில் செப்டம்பர் 22-23 அன்று நடைபெற உள்ளது. 2016 மாநாட்டின் கருப்பொருள் “Biotech Innovation Ecosystem – Strategizing the Next Leap” ஆகும். BIRAC என்பது பயோடெக்னாலஜி துறை(DBT)யின் கீழ் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற பொதுத்துறை அமைப்பாகும் (PSE). இதன் நோக்கம், புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிக்கு உதவுவதும் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதும் ஆகும்.
Question 8
8. 2016 நம்பமுடியாத இந்தியா சுற்றுலா முதலீட்டு உச்சி மாநாடு (Incredible India Tourism Investment Summit -IITIS) இந்தியாவின் எந்த நகரில் தொடங்கியது?
A
அகமதாபாத்
B
டேராடூன்
C
புது தில்லி
D
போபால்
Question 8 Explanation: 
செப்டம்பர் 21-23 வரை நடைபெறவுள்ள 2016 நம்பமுடியாத இந்தியா சுற்றுலா முதலீட்டு உச்சி மாநாடு (IITIS) புது தில்லி விஞ்ஞான் பவனில் தொடங்கியது. உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தனியார்துறைகளிலுள்ள தங்கள் திட்ட உரிமையாளர்களை சந்திக்க IITIS ஒரு தளமாக இருக்கும். இந்தியாவின் சுற்றுலா ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (TFCI) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்புடன் (சிஐஐ) சுற்றுலாத்துறை அமைச்சகம் இணைந்து இந்த மாநாட்டினை நடத்துகிறது.
Question 9
9. சார்க் நாடுகளின் உயர் பாதுகாப்பு நிபுணர்களின் மாநாட்டை எந்த நாடு நடத்த உள்ளது ?
A
பாகிஸ்தான்
B
இந்தியா
C
வங்காளம்
D
மாலத்தீவு
Question 9 Explanation: 
சார்க் நாடுகளின் உயர்மட்ட பாதுகாப்பு நிபுணர் குழுவின் இரண்டாவது மாநாட்டை இந்தியா புது தில்லியில் செப்டம்பர் 21-23 வரை நடத்த உள்ளது. இம்மாநாட்டை உளவுத்துறைப் பிரிவின் தலைமை இயக்குனர் (ஐ.பி) தினேஷ்வர் சர்மா மற்றும் பிற அனைத்து சார்க் நாடுகளின் உளவுத்துறை தலைவர்கள் வழங்கவுள்ளனர். இந்தியா தவிர நேபாளம், பூட்டான், வங்காளம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு போன்ற சார்க் நாடுகளின் உளவுத்துறை தலைவர்கள் இதனை வழங்கவுள்ளனர். இம்மாநாட்டின் நோக்கம் சார்க் பயங்கரவாத எதிர்ப்பு நெறிமுறையை பலப்படுத்துவதாகும்.
Question 10
10. “Do Not Say We Have Nothing” என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது ?
A
மாடலின் தீயின்
B
பால் பீட்டி
C
டெபோரா லெவி
D
டேவிட் ஜாலே
Question 10 Explanation: 
“Do Not Say We Have Nothing” என்ற புத்தகம் மாடலின் தீயின் என்பவரால் எழுதப்பட்டது. இப்புத்தகம், 2016 மேன் புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இது சீனாவின் பாரம்பரிய இசை குறித்த கதை ஆகும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Tags :

Tnpsc Tamil Current Affairs September 2016, Tnpsc Tamil Current Affairs 2016, Tnpsc Tamil Current Affairs 2017, Tnpsc Tamil Current Affairs October 2016, Tnpsc Tamil Current Affairs november 2016, Tnpsc Tamil Current Affairs december 2016, Tnpsc group 4 tamil current affairs, Tnpsc Portal current affairs, Tnpsc job current affairs

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!