Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs 22nd September 2016

Tnpsc Tamil Current Affairs 22nd September 2016

Tamil Current Affairs 22nd September 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 22nd September 2016 is given below as quiz format. Also tnpsc peoples can download Daily Current affairs in tamil as PDF format.

Tnpsc Tamil Current Affairs 22nd September 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 22nd September 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. தமிழக அரசு, திருமண உதவி திட்டத்தின் கீழ், தாலிக்கு தங்கம் திட்டத்திற்காக எவ்வளவு தொகை  ஒதுக்கீடு செய்துள்ளது ?
A
ரூ. 289 கோடி
B
ரூ. 204 கோடி
C
ரூ. 323 கோடி
D
ரூ. 333 கோடி
Question 1 Explanation: 
விடை : B. ரூ. 204 கோடி தமிழக அரசு, திருமண உதவி திட்டத்தின் கீழ், தாலிக்கு தங்கம் திட்டத்திற்காக 2016-17ஆண்டுக்கு ரூ. 204 கோடி தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் 12,500 பெண்கள் பயனடைவார்கள்.
Question 2
2. உலகின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி ஆலை இந்தியாவின் எந்த மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளது ?
A
ஆந்திரப் பிரதேசம்
B
ராஜஸ்தான்
C
தமிழ்நாடு
D
அரியானா
Question 2 Explanation: 
விடை : C. தமிழ்நாடு 648MW உற்பத்தித் திறன் கொண்ட உலகின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி ஆலை தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆலை ரூ 4,550 கோடி செலவில் 5000 ஏக்கர் பரப்பளவில் அதானி குழுமத்தால் அமைக்கப்பட்டது.
Question 3
3. 2016 சர்வதேச அறிவியல் பூங்காக்கள் மற்றும் கண்டுபிடிப்பு சங்கத்தின்(International Association of Science Parks and Areas of Innovation- IASP) உலக மாநாட்டினை எந்த நகரம் நடத்தவுள்ளது ?
A
இஸ்தான்புல்
B
புது தில்லி
C
மாஸ்கோ
D
பெர்லின்
Question 3 Explanation: 
விடை : C. மாஸ்கோ 2016 சர்வதேச அறிவியல் பூங்காக்கள் மற்றும் கண்டுபிடிப்பு சங்கத்தின்(International Association of Science Parks and Areas of Innovation- IASP) உலக மாநாட்டின் 33வது பதிப்பை ரஷ்யாவின் மாஸ்கோ செப்டம்பர் 19-22 வரை நடத்துகிறது. 2016 IASP மாநாட்டின் கருப்பொருள் “The Global Mind: Linking Innovation Communities for Internationalization, Sustainability and Growth” ஆகும். IASP என்பது அறிவியல் பூங்காக்கள் மற்றும் கண்டுபிடிப்பு பகுதிகளில் உலகளவில் மிகப்பெரிய வலையமைப்பை கொண்டுள்ளது. இது தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றுபடுத்துகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் (ECOSOC) ஒரு சிறப்பு ஆலோசனை அந்தஸ்தை பெற்றுள்ளது. 2017 IASP மாநாடு துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெறும்.
Question 4
4. 2017 ஆஸ்கார் விருதுக்கு, எந்த இந்திய திரைப்படம் வெளிநாட்டு மொழி பட பிரிவில் அதிகாரபூர்வமாக நுழைவு தேர்வு செய்யப்பட்டுள்ளது ?
A
விசாரணை
B
நீதிமன்றம்
C
திதி
D
அஞ்சலி
Question 4 Explanation: 
விடை : A. விசாரணை 2017 ஆஸ்கார் விருதுக்கு, தமிழ் திரைப்படம் "விசாரணை" வெளிநாட்டுமொழி பட பிரிவில் அதிகாரபூர்வமாக நுழைவு தேர்வு செய்யப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கிய இப்படம் M.சந்திரகுமார் எழுதிய 'லாக் அப்' நாவலை அடிப்படையாக கொண்டது. ஒரு ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது 3 நண்பர்கள் போலிக் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் கதை இது.
Question 5
5. கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளவர்  யார் ?
A
ஜெயந்தா மித்ரா
B
மஞ்சுளா செல்லூர்
C
அருண் குமார் மிஸ்ரா
D
கிரிஷ் சந்திர குப்தா
Question 5 Explanation: 
விடை : D. கிரிஷ் சந்திர குப்தா கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கிரிஷ் சந்திர குப்தா பதவியேற்றார். டிசம்பர் 2016 ல் ஓய்வு பெற உள்ள இவர் குறுகிய காலம் மட்டுமே பதவி வகிக்க உள்ளார். மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதியால் இவர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்
Question 6
6. பின்வரும் யார் 2016 ஜெஸ்ஸி ஓவன்ஸ் ஒலிம்பிக் ஸ்பிரிட் விருதை  முதன் முதலாக பெறவுள்ளார் ?
A
பவுலா ராட்க்ளிஃப்
B
முகமது அலி
C
பாவொ நுர்மி
D
மைக்கேல் பெல்ப்ஸ்
Question 6 Explanation: 
விடை : B. முகமது அலி ஜூன் 3, 2016 அன்று காலமான ஒலிம்பிக் சாம்பியன் முகமது அலிக்கு, 2016 ஜெஸ்ஸி ஓவன்ஸ் ஒலிம்பிக் ஸ்பிரிட் விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருதை அவர் மனைவி லோனி அலி ஏற்றுக்கொள்வார். சிறந்த சமூகத்தை அமைக்க பிறரை எழுச்சியூட்டுதல், மக்களை ஒன்றுபடுத்துதல் போன்றவைகளுக்கு ஒரு உந்து சக்தியாக திகழும் தனி நபர்களுக்கு ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படும்.
Question 7
7. 2016 லலித் அர்பன் சம்மன் விருதை பெறவுள்ளவர் யார் ?
A
சுபா முட்கல்
B
க்ரிஷென் கன்னா
C
ரகு ராய்
D
யாமினி கிருஷ்ணமூர்த்தி
Question 7 Explanation: 
விடை : A. சுபா முட்கல் இந்துஸ்தானி பாடகரான சுபா முட்கல், 2016 லலித் அர்பன் சம்மன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் காயல், தும்ரி மற்றும் தாத்ரா என்ற வகையான பாடல்களால் அறியப்படுகிறார். 2016 லலித் அர்பன் திருவிழாவின் 15-வது பதிப்பு, கலைஞர் ஜோடியான பரம்ஜித் மற்றும் அர்பிதா சிங்கை கவுரவிக்க உள்ளது . 2016 விழா நடனத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Question 8
8.  “The Sellout” என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A
சாம் லிப்ச்டே
B
சாரா சில்வெர்மான்
C
கீஸ் லய்மன்
D
பால் பீட்டி
Question 8 Explanation: 
விடை : D. பால் பீட்டி “The Sellout” என்ற புத்தகத்தின் ஆசிரியர் பால் பீட்டி ஆவார். இப்புத்தகம் 2016 மேன்புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இது அமெரிக்கா அரசியலமைப்பு, நகர்ப்புற வாழ்க்கை, சிவில் உரிமைகள் இயக்கத்தின், தந்தை-மகன் உறவு மற்றும் இன புனித சமத்துவத்தை குறித்து எழுதப்பட ஒரு நையாண்டி புத்தகம் ஆகும்.
Question 9
9. அமெரிக்காவிற்கான புதிய இந்திய தூதர் யார் ?
A
அருண் சிங்
B
நவ்தேஜ் சர்னா
C
தரன்சித் சிங் சாந்து
D
யாஷ் சின்ஹா
Question 9 Explanation: 
விடை : B. நவ்தேஜ் சர்னா 1980-ஆம் ஆண்டு பேட்சின் இந்திய வெளிநாட்டு சேவை அதிகாரியாக(IFS) நியமிக்கப்பட்ட நவ்தேஜ் சர்னா, அமெரிக்காவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு முன்பு இவர் வெளிவிவகார அமைச்சகத்தில் செயலாளராக (மேற்கு) பணியாற்றி வந்தார். ஓய்வு காரணமாக விலகும் அருண் சிங்கை வென்று இப்பதவியை பெற்றார். இது தவிர, மத்திய அரசு இலங்கைக்கான இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக தரன்ஜித் சிங் சாந்துவை நியமித்துள்ளது. சாந்து, யாஷ் சின்காவின் இடத்தை நிரப்புகிறார்.
Question 10
10. சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) குழுவின் முதல் கூட்டம் பின்வரும் எந்த நகரத்தில்  நடைபெற்றது ?
A
அகமதாபாத்
B
சென்னை
C
புது தில்லி
D
பெங்களூர்
Question 10 Explanation: 
விடை : C. புது தில்லி சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) குழுவின் முதல் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. இதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகித்தார். ஜிஎஸ்டி கவுன்சில் சபையின் இந்த இரண்டு நாள் கூட்டத்தில், நீண்ட நாள் பிரச்சினைகளான, மத்திய அரசு-மாநில அரசுகிடையேயான இரட்டை கட்டுப்பாடு எல்லை, வரி விதிப்பிற்கான தொடக்க எல்லை போன்றவற்றை தீர்மானிக்கவுள்ளது. GST என்பது ஒற்றை மறைமுக வரி, இது மத்திய, மாநில வரிகளான கலால் வரி, சேவை வரி மற்றும் மத்திய விற்பனை வரி போன்றவைகளின் கூட்டுத்தொகையாகும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Tags :

Tnpsc Tamil Current Affairs September 2016, Tnpsc Tamil Current Affairs 2016, Tnpsc Tamil Current Affairs 2017, Tnpsc Tamil Current Affairs October 2016, Tnpsc Tamil Current Affairs november 2016, Tnpsc Tamil Current Affairs december 2016, Tnpsc group 4 tamil current affairs, Tnpsc Portal current affairs, Tnpsc job current affairs

Download as PDF

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!