Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs 23rd August 2016

Tnpsc Tamil Current Affairs 23rd August 2016

Tamil Current Affairs 23rd August 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 23rd August 2016 is given below.

Tnpsc Tamil Current Affairs 23rd August 2016
Tnpsc Tamil Current Affairs 23rd August 2016
நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 23, 2016
1. இந்தியா தபால் கொடுப்பனவு வங்கிகள்  (IPPB) குழுவின் புதிய சுதந்திரமான  இயக்குனர் யார் ?
A.எம் எல் லோதா 
B.ஆர் எஸ் சோதி
C.ஜி எஸ் பாட்டி
D.பி கே குமார்
விடை :  B.ஆர் எஸ் சோதி 
ஆர் எஸ் சோதி  ‘அமுல்’ நிறுவனத்தின்  நிர்வாக இயக்குநர், இந்திய தபால் கொடுப்பனவு வங்கிகள் (IPPB) குழுவின் புதிய சுதந்திரமான  இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவால் நியமிக்கப்பட்ட 5 சுதந்திரமான உறுப்பினர்களுள்  இவரும் ஒருவர்.இதன் சேவை மார்ச் 2017 முதல் துவங்கப்பட உள்ளது. இவ்வங்கியானது ,  மொபைல் நிறுவனங்கள், அங்காடிகள், தனிநபர்கள் மற்றும் சிறு தொழில்கள் போன்றவற்றின்  வங்கி தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட  வங்கியாக  அமைக்கப்பட்டு பின்வரும் சேவைகளை வழங்க உள்ளது, பணம் செலுத்துதல் , பணம் அனுப்புதல் , இணைய  வங்கி போன்றவற்றுடன் மேலும் சில சேவைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது .
2. “ஒரு இந்திய பெண்”  என்ற நாவலின் ஆசிரியர் யார் ?
A.கிரண் தேசாய் 
B.ஜும்பா லஹிரி
C.சேதன் பகத்
D.அமிதாவ் கோஷ்
விடை : C.சேதன் பகத்
 “ஒரு இந்திய பெண்”  என்ற நாவல்  சேதன்  பகத்தால்  எழுதப்பட்டு வருகிறது.  இவரின் இந்த புதிய நாவலானது, அறிவார்ந்த மற்றும் வெற்றிகரமான ஒரு இந்திய பெண், அன்பை பெற எவ்வளவு  கஷ்டப்படுகிறாள் என்பது குறித்தது.
3. 2016 ரியோ ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்தியாவின்  சார்பில், இந்திய தேசியக்கொடியை தாங்கி சென்றவர்  யார்?
A.பி வி சிந்து 
B.லலிதா பாபர் 
C.சாக்சி  மாலிக்
D.லியாண்டர் பயஸ் 
விடை : C.சாக்சி மாலிக் 
ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக், ஆகஸ்ட் 21, 2016 ரியோ ஒலிம்பிக் நிறைவு விழாவில்  இந்தியாவின்  சார்பில், இந்திய தேசியக்கொடியை தாங்கி சென்றார். இவர் 58கிலோ பிரிவில் வெண்கலம்  பெற்றுத் தந்தார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கம் வென்று ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீரர் வரலாறும் படைத்தார்.
4. இந்தியாவின் எந்த மாநிலம் முதன்முதலாக, உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்திற்கான சட்ட வரைவை உருவாக்கியுள்ளது  ?
A.தமிழ்நாடு
B.மகாராஷ்டிரா 
C.ஒடிசா 
D.கேரளா
விடை : B.மகாராஷ்டிரா 
உள்நாட்டு பாதுகாப்பிற்காக,   “2016 மகாராஷ்டிரா பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (MPISA)” என்ற சட்ட வரைவினை உருவாக்கியுள்ள முதல் இந்திய மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. இந்த  வரைவு,  அதன் எல்லைக்குள் ஏற்படும் அச்சுறுத்தல்,  கிளர்ச்சி, பயங்கரவாதம், வன்முறை, பகைமையை ஏற்படுத்தும் குழுக்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களை தாக்கும் அந்நிய சக்திகள், குடிமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்  போன்றவற்றை கலைய  அமைக்கப்பட்டுள்ளது.
5. பஞ்சாப்பின்  புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ளவர்  யார் ?
A.நஜ்மா ஹெப்துல்லா
B.வி.பி.சிங் பதோனர்
C.ஜெகதீஷ் முகி 
D.கப்தான் சிங் சோலங்கி
விடை : B.வி.பி.சிங் பதோனர்
வி.பி.சிங் பதோனர், பஞ்சாப்பின்  புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் இவர் சண்டிகரின்  நிர்வாகியாகவும் பொறுப்பேற்றார். பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஜே. வஜீப்தார்  பஞ்சாப் ராஜ்பவனில் இவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  இவருக்கு முன்  இப்பணியை ஹரியானா ஆளுநர் கப்டன்  சிங் சோலங்கி ஜனவரி 2015 முதல் நிர்வகித்து வருகிறார்.
6.2016 உலகக் கோப்பை கபடி இந்தியாவின் எந்த மாநிலத்தில் நடைபெற உள்ளது ?
A.ராஜஸ்தான் 
B.ஹரியானா 
C.ஒடிசா
D.குஜராத்
விடை : D.குஜராத்
2016 உலகக் கோப்பை கபடி குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில்  அக்டோபர் 7-22 வரை நடைபெற உள்ளது. இதில் உலகெங்கும் உள்ள நாடுகளில் இருந்து 12 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. அவையாவன : இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஈரான், போலந்து, பாகிஸ்தான், வங்காளம், கொரியா, ஜப்பான் மற்றும் கென்யா.  2016 உலகக் கோப்பை கபடி போட்டியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமையை  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது. இப்போட்டிகள்  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் Hotstar-ல்  பிரத்தியேகமாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 
7.  பின்வரும் யாருக்கு 2016 ராஜீவ் காந்தி கேல் ரத்னா பட்டம் வழங்கப்படவுள்ளது ?
A.பி.வி.சிந்து
B.ஜித்து ராய் 
C.தீபா கர்மாகர்
D.மேலே உள்ள அனைத்தும்
விடை : D.மேலே உள்ள அனைத்தும்
2016 ராஜீவ் காந்தி கேல் ரத்னா பின்வரும் 4 வீரர்களுக்கு  வழங்கப்படவுள்ளது. ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி .வி.சிந்து, சாக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர்  ஜீத்து ராய். இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு விருது 4 வீரர்களுக்கு அளிப்பது இதுவே முதன் முறையாகும். விருதுகள் , ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மூலம் ஆகஸ்ட் 29,2016 அன்று வழங்கப்பட உள்ளது 
8. 2016 துரோணாச்சார்யா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பிஷ்வேஷ்வர் நந்தி, எந்த விளையாட்டுகளுடன் தொடர்புடையவர் ?
A.கிரிக்கெட்
B.ஜிம்னாஸ்டிக்ஸ் 
C.ஹாக்கி 
D.குத்துச்சண்டை
விடை : B.ஜிம்னாஸ்டிக்ஸ் 
2016 துரோணாச்சார்யா விருது 6 பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
1. பிஷ்வேஷ்வர் நந்தி, தீபா கர்மாகர் பயிற்சியாளர், 
2. ராஜ் குமார் சர்மா (கிரிக்கெட்),விராத் கோஹ்லி அறிவுரையாளர் 
3. நாக்புரி ரமேஷ் (தடகளம்)
4. சாகர்மால் தயாள்  (குத்துச்சண்டை)
5. எஸ் பிரதீப்குமார் (நீச்சல்)
6. மஹபிர் சிங் (மல்யுத்தம்) .
இது தவிர, 15 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா  விருது மற்றும் 3 பேருக்கு தயான் சந்த் விருதுகளும்  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மூலம் ஆகஸ்ட் 29,2016-ல்  விநியோகிக்கப்பட இருக்கிறது. ஆகஸ்ட் 29 – தேசிய விளையாட்டு தினம் (தயான் சந்த் பிறந்த நாள் )
9. ஓ.பி. ஜெய்ஷா எந்த விளையாட்டுகளுடன் தொடர்புடையவர்  ?
A.குத்துச்சண்டை
B.படகுப்போட்டி 
C.தடகளம் 
D.நீச்சல்
விடை : C.தடகளம் 
ஓ பி ஜெய்ஷா, கேரளாவை பூர்வீகமாக கொண்ட இந்திய தட கள வீரர்.  இந்திய அதிகாரிகள், 2016 ரியோ ஒலிம்பிக்கில்  தண்ணீர் மற்றும் ஆற்றல்பானங்கள் ஏற்பாடு செய்யவில்லை  என சமீபத்தில் குற்றச்சாட்டைவைத்தார். இந்த குற்றசாட்டு குறித்து விசாரிக்க, மத்திய விளையாட்டு அமைச்சகம் 2 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.இகுழுவில், ஓங்கர் கேடியா [இணைச் செயலர் (விளையாட்டு)], விவேக் நாராயண் [இயக்குனர்,  விளையாட்டு]  ஆகிய இருவர் உள்ளனர். இக்குழு 7 நாட்களில்  தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என் கூறப்பட்டுள்ளது.
10. இந்திய ரயில்வே துறை, பாரம்பரிய பொருள்களை  டிஜிட்டல்மயமாக்கி வெளியிட , பின்வரும் எந்த தொழில்நுட்ப நிறுவனத்துடன்  கூட்டுசேர்ந்துள்ளது ?
A.சினப்டீல் 
B.பிளிப்கார்ட் 
C.மைக்ரோசாப்ட்
D.கூகிள்
விடை : D.கூகிள் 
இந்திய ரயில்வே துறை, அதன் பாரம்பரிய பொருள்களை டிஜிட்டல்மயமாக்கி அதன் தளங்களில் வெளியிட கூகிளின் உதவியை நாடியுள்ளது. இது தவிர, டிஜிட்டல் களஞ்சியங்களை  உலகளாவியா அளவில் ஆன்லைனில் அணுகும் முறையையும் இலவசமாக உருவாக்க  இந்திய ரயில்வேவிற்கு கூகுள் உதவும். இது பற்றிய உடன்பாடு தேசிய ரயில் அருங்காட்சியகம் மற்றும் Google கலாச்சார நிலையம் (GCI) இடையே கையெழுத்திடப்பட்டது . GCI என்பது  உலக கலாச்சார பாரம்பரியத்தை ஆன்லைனில் கொண்டு வர முயற்சிக்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு ஆகும். தற்போது, கூகிள் 100 நிலையங்களில் இலவச Wi-Fi சேவை வழங்குவதில் ரயில்வே துறைக்கு உதவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!