Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs 23rd September 2016

Tnpsc Tamil Current Affairs 23rd September 2016

Tamil Current Affairs 23rd September 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 23rd September 2016 is given below as quiz format. Also tnpsc peoples can download Daily Current affairs in tamil as PDF format.

Tnpsc Tamil Current Affairs 23rd September 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 23rd September 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. பின்வரும் எந்த இந்தியர்கள்  2016 கிளார்க் ஆர் பாவின் வனவிலங்கு சட்டம்  அமலாக்கல் விருதுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் ?
A
மாதவ் ஜெயின் மற்றும் முரளி கார்த்திக்
B
பிரகாஷ் சர்ஜா மற்றும் விஜய் குமார்
C
எம் பாலசுப்ரமணி மற்றும் நாகேஷ் சர்க்கார்
D
சஞ்சய் தத்தா மற்றும் ரிதேஷ் சரோதியா
Question 1 Explanation: 
வனவிலங்குகளை பாதுகாக்க பின்பற்றவேண்டிய சட்டங்களை அமலாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு மரியாதைக்குரிய "கிளார்க் ஆர் பாவின் வனவிலங்கு சட்டம் அமலாக்கல் விருது" வழங்கப்படும். 2016-ஆம் ஆண்டு, சஞ்சய் தத்தா மற்றும் ரிதேஷ் சரோதியா ஆகியோர் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சரோதியா,மத்தியப் பிரதேச மாநில வன சேவையின் உதவி பாதுகாவலராகவும், தத்தா மேற்கு வங்கம் ஜல்பைகுரியிலுள்ள பெலகோபா வன வரம்பில் மலை அதிகாரியாகவும் உள்ளார். இவ்விருது வழங்கும் விழா,தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் அக்டோபர் 3,2016-ல் நடைபெற உள்ள 17வது CITES(Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) மாநாட்டில் நடைபெறவுள்ளது.
Question 2
2. கேரள உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளவர் யார் ?
A
ஆர் எஸ் கர்க்
B
நவீன் சின்ஹா
C
சதாசிவம்
D
மோகன் எம் சந்தானகவுடார்
Question 2 Explanation: 
நீதிபதி மோகன் எம் சந்தானகவுடார், கேரள உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். இவர், ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் நீதிபதி (ஓய்வு) பி சதாசிவம் மூலம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். இப்பதவிக்கு முன், இவர் கேரளா உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.
Question 3
3. சமீபத்தில் காலமான ரியோடி சரண் சர்மா, எந்த துறையை சேர்ந்தவர் ?
A
அரசியல்
B
இலக்கியம்
C
விளையாட்டு
D
அறிவியல்
Question 3 Explanation: 
நன்கு அறியப்பட்ட இந்தி மற்றும் உருது எழுத்தாளரான ரியோடி சரண் சர்மா (92) சமீபத்தில் புதுடெல்லியில் மறைந்தார். அனைத்திந்திய வானொலியின், வானொலி நாடகங்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் இவர். நாடகக்கலையில் சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக 2007 ஆம் ஆண்டு இவருக்கு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது. மேலும் இவர் சாஹித்ய கலா பரிஷத் மற்றும் கலிப் விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
Question 4
4. “Citizen and Society”  என்ற புத்தகத்தை எழுதியவர் யார் ?
A
பிரணாப் முகர்ஜி
B
முகமது ஹமீது அன்சாரி
C
சுஷ்மா சுவராஜ்
D
மன்மோகன் சிங்
Question 4 Explanation: 
இந்திய துணை ஜனாதிபதி முகமது ஹமீது அன்சாரி, “Citizen and Society” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். சமீபத்தில் புது தில்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி இப்புத்தகத்தினை வெளியிட்டனர். இது ஹமீது அன்சாரியின் வாழ்க்கையை ஒரு சிறந்த குடிமகன் என்ற பாணியில் விவரிக்கிறது. இப்புத்தகத்தின் மையக்கருத்தானது, ஒரு குடிமகன் அரசியலற்று இருக்கக்கூடாது மற்றும் சமுதாயத்தை உருவாக்க அரசியலில் ஈடுபாடு கொள்ளவேண்டும் என்பதாகும்.
Question 5
5. பின்வரும் யார்  இந்திய ரிசர்வ் வங்கியின்  பணக் கொள்கை குழுவின் (Monetary Policy Committee) உறுப்பினராக  நியமிக்கப்பட்டுள்ளார் ?
A
ரவீந்திரா தோலக்கியா
B
பமி டுயோ
C
சேத்தன் கேட்
D
மேலே உள்ள அனைத்தும்
Question 5 Explanation: 
வட்டி விகிதங்களை நிர்ணயிக்க இந்திய ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட பணக் கொள்கை குழுவில் மத்திய அரசு மூன்று வெளி நிபுணர்களை நியமித்துள்ளது. இம்மூன்று வல்லுனர்கள் பின்வருமாறு: இந்திய புள்ளியியல் நிறுவன பேராசிரியர் சேத்தன் கேட், தில்லி பொருளியல் பள்ளி இயக்குனர் பமி டுயோ, ஐ.ஐ.எம் அகமதாபாத்தை சேர்ந்த ரவீந்திரா தோலக்கியா ஆவர். இவர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மற்றும் இவர்களை மறு நியமனம் செய்ய இயலாது. 6 பேர் கொண்ட இக்குழுவில் RBI சார்பில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், துணை ஆளுநரும் பணவியல் கொள்கை பொறுப்பாளருமான ஆர்.காந்தி, நிர்வாக இயக்குனர் மைகேல் பத்ரா ஆகிய மூவரும் இடம் பெற்றுள்ளனர். இக்குழு அக்டோபர் 4, 2016 அன்று அதன் முதல் பணவியல் கொள்கையை ஆய்வு நடத்தவுள்ளது. சமநிலையின் பொழுது, ரிசர்வ் வங்கி கவர்னர் அவரது அறுதிவாக்கை வழங்குவார்.
Question 6
6. 2016 கிளின்டன் உலகளாவிய குடியுரிமை விருது யாருக்கு வழங்கப்பட்டது ?
A
ஆதி கோத்ரெஜ்
B
முகேஷ் அம்பானி
C
ராகுல் பஜாஜ்
D
அஸிம் பிரேம்ஜி
Question 6 Explanation: 
தொழிலதிபர் ஆதி கோத்ரெஜ், மும்பை அடிப்படையிலான கோத்ரேஜ் குழுமத்தின் தலைவர். வணிகம் மற்றும் நேயத்தில் சிறந்த தலைமை வகித்தற்காக '2016 கிளின்டன் உலகளாவிய குடியுரிமை விருதின்' 10வது பதிப்பில் இவருக்கு இவ்விருது அளிக்கப்பட்டது. நிலையான வர்த்தக உத்திகள் மூலம் கோத்ரேஜ் குழுமத்தை உலகளாவிய உதாரணமாக உருவாக்கிய கோத்ரேஜ்ஜின் தலைமை பொறுப்பை அங்கீகரித்து இவ்விருது வழங்கப்பட்டது.
Question 7
7.“Indra-2016” எனும் கூட்டு இராணுவ பயிற்சி இந்தியாவுக்கும்  எந்த நாட்டுக்கும் இடையே தொடங்கியது ?
A
பிரான்ஸ்
B
ஜப்பான்
C
ரஷ்யா
D
ஆஸ்திரேலியா
Question 7 Explanation: 
இந்தியா-ரஷ்யா இடையேயான “Indra-2016” எனும் கூட்டு இராணுவ பயிற்சியின் 8வது பதிப்பு ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக்வில் உள்ள Ussiriysk மாவட்டத்தில் தொடங்கியது. இந்த கூட்டுப்பயிற்சி, ஐக்கிய நாடுகள் சபையின் கீழ், பாதி மலைப்பாங்கான மற்றும் காட்டுப் பிரதேசத்தில் பயங்கரவாதத்தை முறியடிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவுள்ளது.
Question 8
8. குடும்பக் கட்டுப்பாட்டை மேம்படுத்த  "மிஷன் பரிவார் விகாஸ்" எனும் சேவையை எந்த மத்திய அமைச்சகம் துவங்கியுள்ளது ?
A
Ministry of Rural Development
B
Ministry of Women and Child Development
C
Ministry of Housing and Urban Poverty Alleviation
D
Ministry of Health and Family Welfare
Question 8 Explanation: 
மேம்படுத்தப்பட்ட குடும்ப கட்டுப்பாட்டு சேவைகளை வழங்க "மிஷன் பரிவார் விகாஸ்" எனும் சேவையை சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், உயர் கவனம் கொண்ட 145 மாவட்டங்களில் அறிமுகம் செய்துள்ளது. இம்மாவட்டங்கள், உத்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 7 மாநிலங்களில் அமைந்துள்ளவையாகும். இம்மாநிலங்களில் அதிக கருத்தரிப்பு விகிதம் (TFR) உள்ளது மேலும் இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50% மக்கட்தொகை இம்மாநிலங்களில் உள்ளது. உரிமைகள் அடிப்படையிலான கட்டமைப்பு தகவல்கள் , நம்பகமான சேவைகள் மற்றும் பொருட்கள் அடிப்படையில் உயர் தரமான குடும்பக் கட்டுப்பாடு சேவை அணுகலை முடுக்கிவிடும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Question 9
9. தேசிய எஸ்சி / எஸ்டி மையம் இந்தியாவின்  எந்த நகரத்தில் அமையவிருக்கிறது ?
A
ஜெய்சால்மர்
B
ஆக்ரா
C
லூதியானா
D
புது தில்லி
Question 9 Explanation: 
SC / ST பிரிவை சார்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க அக்டோபர் 8, 2016 அன்று MSME அமைச்சகத்தின் கீழ், பஞ்சாப்பின் லூதியானாவில் தேசிய எஸ்சி / எஸ்டி மையம் தொடங்கப்படும். அமைச்சகம், தேசிய எஸ்சி / எஸ்டி மையத்திற்கு 2016-2020 ஆண்டுக்கு ரூ. 490 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கென உருவாக்கப்பட்ட சிறப்பு பிரிவின் ஆதரவுடன், புது தில்லியை தலைமையகமாக கொண்ட தேசிய சிறு தொழில் கழகத்திலிருந்து (NSIC) இம்மையம் செயல்படவுள்ளது. இம்மையம் முதன்மை பணியாக, சந்தை அணுகல் / தொடர்புகள், கண்காணிப்பு, திறன் மேம்பாடு, நிதி ஆதரவு திட்டங்கள், தொழிலின் சிறந்த நடைமுறைகளை பகிர்தல் போன்றவற்றை வலுப்படுத்தவுள்ளது.
Question 10
10. முதன்முதலாக ,குழந்தை பருவ புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி  இந்தியாவின்  எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது ?
A
ஜெய்ப்பூர்
B
ஆக்ரா
C
இந்தூர்
D
காந்திநகர்
Question 10 Explanation: 
குழந்தை பருவ புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி, ஆக்ராவில் உள்ள புகழ்பெற்ற சின்னமான தாஜ் மஹாலில் 2016 செப்டம்பர் 25- 27 வரை நடைபெறும். 'CanKids-Kidscan' எனப்படும் இக்கண்காட்சி குழந்தைப்பருவ புற்றுநோய் மாற்றத்திற்கான இந்திய தேசிய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கண்காட்சி ‘Chalo Chalein Taj programme’ நிகழ்ச்சியை தன்னுள் கொண்டுள்ளது , இதன் கீழ், 1500 புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தாஜ் மஹாலுக்கு வருகை தருவர். இவ்விழாவில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் மூலம் தெரு நாடகங்கள் காட்டப்படும்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Tags :

Tnpsc Tamil Current Affairs September 2016, Tnpsc Tamil Current Affairs 2016, Tnpsc Tamil Current Affairs 2017, Tnpsc Tamil Current Affairs October 2016, Tnpsc Tamil Current Affairs november 2016, Tnpsc Tamil Current Affairs december 2016, Tnpsc group 4 tamil current affairs, Tnpsc Portal current affairs, Tnpsc job current affairs

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!