Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 24th and 25th September 2016

Tnpsc Tamil Current Affairs 24th and 25th September 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 24th and 25th September 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. வேலவன் செந்தில்குமார் என்பவர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
ஸ்பிரிண்ட்
B
குத்துச்சண்டை
C
ஸ்குவாஷ்
D
பூப்பந்து
Question 1 Explanation: 
சென்னையை சேர்ந்த இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார், மலேஷியாவின் கோலாலம்பூரில் செப்டம்பர் 24ம் தேதி நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய ஜூனியர் தனிநபர் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இவர், ஜோர்டானின் முகமது அல்-சர்ராஜ்-யை 12-14, 9-11, 11-6, 11-8, 11-7 என்ற கணக்கில் தோற்கடித்து பட்டம் பெற்றார். இதன் மூலம், ஆசிய ஜூனியர் தனிநபர் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் 2வது இந்திய வீரர் என்ற பெருமையை இவர் பெறுகிறார். இதற்கு முன், 2010 ஆம் ஆண்டு இந்திய வீரர் ரவி தீட்சித் முதன் முதலாக பட்டம் வென்றார்.
Question 2
2. எந்த பாராளுமன்ற குழு, பட்ஜெட்டை  இணைப்பதற்கான ஆய்வை செய்ய ஏற்படுத்தப்பட்டிருக்கிறது ?
A
கமல்நாத் குழு
B
ரமேஷ் ஜிகாஜினாகி
C
வீரப்ப மொய்லி குழு
D
அசோக் சவான் குழு
Question 2 Explanation: 
காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி தலைமையிலான பாராளுமன்ற குழு, அனைத்து வரவு-செலவுத் திட்ட சீர்திருத்தங்களையும் மறுபரிசீலனை செய்ய ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. வரவு செலவு திட்டம் தவிர, பங்குகள் விற்கும் கொள்கை, இந்தியாவிலுள்ள வங்கிகள், ரிசர்வ் வங்கியின் வளர்ந்து வரும் பங்கு மற்றும் அதன் கட்டமைப்பு ஆகியவற்றையும் இக்குழு மீளாய்வு செய்யும்.பின்வரும் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்புகளையும் இக்குழு மறுபரிசீலனை செய்யும். அவையாவன: Securities and Exchange Board of India (SEBI), Competition Commission of India (CCI), Insurance Regulatory and Development Authority (IRDA), Stock Holding Corporation of India Ltd (SHCIL), National Payments Corporation of India (NPCI), Investor Education and Protection Fund (IEPF) மற்றும் Serious Fraud Investigation Office (SFIO) . இது மட்டுமின்றி, National Sample Survey Office (NSSO), Central Statistical Office (CSO) மற்றும் streamlining of statistics collection machinery in India ஆகியவற்றையும் மதிப்பீடு செய்யவுள்ளது.
Question 3
3.  பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நூறாவது பிறந்தநாளை நினைவு கூறுவதற்காக  ஏற்படுத்தப்பட்ட தேசிய செயற்குழு எது ?
A
நரேந்திர மோடி குழு
B
ஆர் சி லஹோதி குழு
C
ராஜ்நாத் சிங் குழு
D
மகேஷ் சர்மா குழு
Question 3 Explanation: 
ஜனசங்கத்தின் சிந்தனையாளரான, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் நூறாவது பிறந்தநாளை நினைவுகூறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 149 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழு பல ஆளுநர்கள், முதலமைச்சர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்களை உள்ளடக்கியுள்ளது. இது தவிர, இதே நோக்கத்திற்காக 23 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட மற்றொரு குழு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
Question 4
4. 2016  நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் (SDG - Sustainable Development Goals) இந்தியாவின் தரம்  என்ன ?
A
139 வது
B
143 வது
C
166 வது
D
188 வது
Question 4 Explanation: 
2016 நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் (SDG - Sustainable Development Goals) 188 நாடுகளில் 143 வது இடத்தில் இந்தியா உள்ளது. சுகாதார செயல்திறன் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட முதல் உலக SDG பகுப்பாய்வு ஆன்லைனில் The Lancet-யிலும், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையின் ஒரு சிறப்பு நிகழ்விலும் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் முதலிடத்தில் ஐஸ்லாந்தும், அதனை தொடர்ந்து சிங்கப்பூர், ஸ்வீடன், அன்டோரா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் உள்ளன. SDG-யானது 17 உலகளாவிய இலக்குகள், 169 குறிக்கோள்கள் மற்றும் உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு, வறுமை மற்றும் 2030 வரையான காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு வழிகாட்ட 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் அமைக்கப்பட்ட 230 குறிகாட்டிகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. SDG பின்பற்றி வந்த மிலேனியம் வளர்ச்சி இலக்குகள்(MDG) 2015-ஆம் ஆண்டின் இறுதியில் முடிவடைந்தது.
Question 5
5. "Druzhba-2016" எனும் கூட்டு இராணுவ பயிற்சி பின்வரும் எந்த இரு நாடுகளுக்கிடையே தொடங்கியது ?
A
நேபாளம் மற்றும் இந்தியா
B
இந்தியா மற்றும் ரஷ்யா
C
சீனா மற்றும் பாகிஸ்தான்
D
பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா
Question 5 Explanation: 
முதலாவது Druzhba-2016 (அல்லது Friendship-2016) கூட்டு இராணுவ பயிற்சி பாகிஸ்தான் மற்றும் ரஷ்யாவிற்கிடையே, வடக்கு பாகிஸ்தானின் ரட்டுவில் உள்ள ராணுவ அதி உயர் பள்ளி மற்றும் சேரட்டில் உள்ள சிறப்பு படைகள் பயிற்சி மையத்தில் செப்டம்பர் 24ம் தேதி துவங்கியது. இது அக்டோபர் மாதம் 7-ம் தேதி வரை தொடரும். இப்பயிற்சியானது, அனுபவங்களை பகிர்தல், மலைப்பகுதியில் போர்நடைமுறை பணிகளை மேற்கொள்வதில் ஒருங்கிணைப்பை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்தவுள்ளது. இதில் சட்டவிரோத ஆயுதக் குழுக்களுக்கு எதிரான செயல்பாடுகளும் அடங்கும்.
Question 6
6. Insolvency and Bankruptcy Board of India (IBBI)வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A
எம் எஸ் சாஹூ
B
ஆஷிஷ் ஆர்யா
C
பி வி கோகலே
D
எஸ் கே பானர்ஜி
Question 6 Explanation: 
மதுசூதன் சாஹூ, Insolvency and Bankruptcy Board of India (IBBI)வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது புதிய ஆணை வரும்வரை , இவற்றில் எது முன்னதாக வருமோ அது எடுத்துக்கொள்ளப்படும். தற்போது, சாஹூ Competition Commission of India (CCI) அமைப்பின் anti-trust regulator-ஆக உள்ளார். IBBI-யானது, திவாலாகும் தொழில்கள், திவாலாகும் தொழிலின் முகவர்கள், தகவல் பயன்பாடுகள் ஆகியவற்றின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும்.
Question 7
7. இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் (Indian Statistical Institute), புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் யார் ?
A
ஒய் வி ரெட்டி
B
டி. சுப்பாராவ்
C
விஜய் கேல்கர்
D
சி ரங்கராஜா
Question 7 Explanation: 
முன்னாள் பெட்ரோலிய செயலாளர் விஜய் கேல்கர், மதிப்புமிக்க இந்திய புள்ளியியல் நிறுவனத்தின்(Indian Statistical Institute) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி ரங்கராஜனை வென்று இப்பதவிக்கு வந்தார். இந்திய புள்ளியியல் நிறுவனம், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
Question 8
8.  எந்த நாடு முதலாவது பிரிக்ஸ் 2016 இளம் விஞ்ஞானிகள் மாநாட்டை நடத்தவுள்ளது ?
A
இந்தியா
B
பிரேசில்
C
ரஷ்யா
D
சீனா
Question 8 Explanation: 
முதலாவது பிரிக்ஸ் 2016 இளம் விஞ்ஞானிகள் மாநாட்டை இந்தியா பெங்களூரில் செப்டம்பர் 26-30 வரை நடத்தவுள்ளது. பிரிக்ஸ் நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு சில தீர்வுகள் காண இளம் விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு நெட்வொர்க்கை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு தளமாக இம்மாநாடு விளங்கும். இம்மாநாடு மூன்று முக்கிய கருப்பொருள் தலைப்புகளில் கவனம் செலுத்தவுள்ளது.அவையாவன: கணினி சார்ந்த நுண்ணறிவு, எரிசக்தி தீர்வுகள் மற்றும் மலிவு சுகாதார சேவைகள்.
Question 9
9. சரக்கு மற்றும் சேவை வரி (GST) சபையின்  கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A
விநாயக் போஸ்லே
B
அருண் கோயல்
C
நாகேந்திர லகூரி
D
ரஞ்சித் சவுத்ரி
Question 9 Explanation: 
1985-ஆம் ஆண்டு யூனியன் பிரதேச கேடராக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல், சரக்கு மற்றும் சேவை வரி (GST) சபையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, கோயல் அமைச்சரவை செயலகத்தின் திட்ட கண்காணிப்பு குழுவின் கூடுதல் செயலாளராக பணிபுரிகிறார். சரக்கு பொருள்கள் தவிர்த்து பிறவற்றுக்கு வரி விகிதம் மற்றும் தொடக்க எல்லை போன்றவற்றை முடிவு செய்ய GST கவுன்சில் கட்டாயமாக்கப்பட்டது.
Question 10
10. பின்வரும் எந்த பெண்கள் இரட்டையர் ஜோடி 2016 டோரே பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பையை வென்றுள்ளது ?
A
சானியா மிர்சா மற்றும் பர்போரா ஸ்ட்ரைகோவா
B
கர்பைன் முகுருசா மற்றும் கார்லா சுவாரஸ் நவரோ
C
லியாங் சென் மற்றும் யாங்க் ஜாஜூன்
D
ஆண்ட்ரேஜா லிபாக் மற்றும் கேத்ரினா ரேபோட்னிக்
Question 10 Explanation: 
சானியா மிர்சா மற்றும் அவரது ஜோடியான செக் குடியரசின் பர்போரா ஸ்ட்ரைகோவாவும் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற 2016 டோரே பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்-ன் இறுதிப்போட்டியில் சீனாவின் லியாங் சென் மற்றும் யாங்க் ஜாஜூன் ஜோடியை 6-1, 6-1. என்ற கணக்கில் தோற்கடித்தது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!