Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs 24th August 2016

Tnpsc Tamil Current Affairs 24th August 2016

Tamil Current Affairs 24th August 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 24th August 2016 is given below.

நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 24, 2016
 
1. பின்வரும் எந்த இந்திய மாநிலம் முதன் முதலாக, பயன்பாட்டில் இல்லாத 10 பிராந்திய விமான நிலையங்களை மேம்படுத்த மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது ?
 
A.மத்தியப் பிரதேசம்
B.ராஜஸ்தான்
C.மகாராஷ்டிரா
D.ஆந்திரப் பிரதேசம்
 
விடை : C.மகாராஷ்டிரா.
 
மகாராஷ்டிரா மாநிலம் பயன்பாட்டில் இல்லாத 10 பிராந்திய விமான நிலையங்களை மேம்படுத்த மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள முதல் இந்திய மாநிலம் ஆகும். இதற்கு பிராந்திய இணைப்பு திட்டம் (RCS) முழு மானியம் வழங்குகிறது. இதன முக்கிய நோக்கமானது, அனைவரும் இச்சேவையை  பயன்படுத்தும் வகையில் மலிவு விலையில் டிக்கெட் விற்பனை செய்வதே ஆகும். தேசிய விமானப் போக்குவரத்துக் கொள்கையின் ஒரு பகுதியாக, RCS யை சேர்க்க மத்திய அமைச்சரவை ஜூன் 2016-ல்    ஒப்புத்தல் வழங்கியது.
 
இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ள விமான நிலையங்களாவன: 
 
கோலாப்பூர், ஷீரடி, அமராவதி, ஒடிசா, நாசிக், ஜல்கான், நான்டெட், சோலாப்பூர், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க். மாநில அரசு  நம்பகத்தன்மை இடைவெளி நிதியாக  20% செலவை  வழங்கும் மீதமுள்ள செலவை மத்திய அரசு ஏற்கும். இந்த விமான நிலையங்களில் சாலைகள், ரயில், மெட்ரோ மற்றும் நீர்வழி இணைப்பு வழங்கப்படும்.
 
 
2.இந்தியா சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டுடன், தொழில் சார்ந்த பயிற்சிக்ககாக ஒப்பந்தம் செய்துள்ளது  ?
 
A.ஜெர்மனி 
B.பிரான்ஸ் 
C.ரஷ்யா 
D.அமெரிக்கா
 
விடை :  A.ஜெர்மனி
 
இந்தியா சமீபத்தில், தொழில் பயிற்சிக்காக ஜெர்மனியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் குறிக்கோளானது, இந்தியாவின் தொழிலக குழுமங்களின் பணியிடை சார்ந்த தொழில் பயிற்சிகளை  மேம்படுத்தும் சூழ்நிலைகளை உருவாக்குவதே ஆகும். ஒப்பந்தப்படி,ஜெர்மன் தொழில்நுட்ப உதவியானது ,  இந்திய மற்றும் ஜெர்மன் தொழில் நிறுவனங்கள் இடையே பங்காளித்துவத்தை அதிகரிக்கவும், புதிய பயிற்சி நிறுவனங்கள்  உருவாக்கவும், நிறுவனங்களின் தொழில் பிணைப்பை அதிகரிக்கவும் உதவும். இது ஜெர்மனியின் இரட்டை முறை கூறுகளை இந்திய நிறுவனத்தில் புகுத்த வழிவகை செய்கிறது.
 
3.  சமீபத்தில் மறைந்த எஸ்.ஆர். நாதன், எந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஆவார் ?
 
A.தாய்லாந்து
B.சிங்கப்பூர்
C.மலேஷியா 
D.மாலத்தீவுகள் 
 
விடை: B.சிங்கப்பூர்
 
முன்னாள் சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ் ஆர் நாதன் (92) சமீபத்தில் சிங்கப்பூரில் காலமானார். அவர் சிங்கப்பூரின்  6 வது மற்றும் நீண்ட சேவை செய்த ஜனாதிபதி ஆவார். 1999 முதல் 2011 வரை இவர் இருமுறை இப்பதவி வகித்தார்.
 
4.  “யாங்ஜின் (Yongzin)” எனப்படும் திபெத்திய மொழி தேடுபொறி எந்த நாட்டினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ?
 
A.ஜப்பான்
B.சீனா 
C.சிங்கப்பூர் 
D.தாய்லாந்து
 
விடை : B.சீனா 
 
சீனா சமீபத்தில் ‘Yongzin’ எனப்படும், அதன் முதல் திபெத்திய மொழி தேடல் பொறியை அறிமுகம் செய்துள்ளது. திபெத்திய மொழியில், Yongzin என்றால்   “மாஸ்டர்” அல்லது “ஆசிரியர்” என்று பொருள்.  இத்தேடுபொறி, சீனாவில் உள்ள அனைத்து முக்கிய திபெத்திய மொழி வலைத்தளங்களுக்கும்  ஒரு பொதுவான  தேடுபொறியாக விளங்க உள்ளது. இது செய்தி, வலைத்தளங்கள், படங்கள், வீடியோக்கள், இசை, கலைக்களஞ்சியம், இலக்கியம் மற்றும் மன்றங்கள் என 8 பிரிவுகளில் உள்ளன.
 
5. லலிதா பாபர் எந்த விளையாட்டுகளுடன் தொடர்புடையவர் ?
 
A.குத்துச்சண்டை
B.ஸ்பிரிண்ட் 
C.மல்யுத்த செய்தல்
D.நீச்சல்
 
விடை : B.ஸ்பிரிண்ட் 
 
சமீபத்தில், மகாராஷ்டிர அரசு தடைதாண்டும் தடகள வீராங்கனை லலிதா பாபருக்கு அரசு வேலை வழங்க முன்வந்தது. 32 வருடங்களுக்கு பிறகு ஒலிம்பிக்கில்  பி டி உஷாவிற்கு அடுத்து தடகள போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் இருந்து வந்தவரான இவர், 2016 ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்குக்கான 3000மீ தடைதாண்டும் போட்டியில்  9:22.74 நேரத்தில் இலக்கை அடைந்து  10வது இடத்தை பிடித்தார்.
 
 
6. உலகின் மிகப் பெரிய உள்ளரங்க தீம் பார்க்  பின்வரும்  எந்த நகரத்தில் திறக்கப்படவுள்ளது ?
 
A.துபாய்
B.நியூயார்க் 
C.பாரிஸ் 
D.பெர்லின்
 
விடை: A.துபாய் 
 
உலகின் மிகப் பெரிய உள்ளரங்க தீம் பார்க் துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)-ல் திறக்கப்பட உள்ளது. கோடை காலத்தில் மிகுந்த வெப்பமான பாலைவனங்களை  பார்க்க வரும் வெளிநாட்டு சுற்றுலா  பயணிகளை கவரும் வகையில் இந்த தீம் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.
 
7.  பேரிடர் அபாய குறைப்பு  (DRR) குறித்து, ஆசியாவின் முதல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (எஸ் அண்ட் டி) எந்த நாட்டில் நடைபெற்றது ?
 
A.தாய்லாந்து
B.சிங்கப்பூர்
C.மலேஷியா 
D.இந்தியா
 
விடை : A.தாய்லாந்து 
 
ஆகஸ்ட் 23-24, 2016-இல் பேரிடர் அபாய குறைப்பு (DRR) பற்றி தாய்லாந்தின்  பாங்காக்கில் முதல் ஆசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (எஸ் அண்ட் டி)  மாநாடு நடைபெற்றது. இதில் ,முக்கிய பிரச்சினைகள், சவால்கள், அறிவியல் கொள்கை உருவாக்கத்தின் தேவை மற்றும் அதிலுள்ள வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப் பட்டது. இந்தியாவின் உள்நாட்டலுவல் அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒரு சில நடைமுறைகளை பகிர்ந்து , உரையாற்றினார் . ஆசிய மண்டலத்திற்கான  ஐ.நா-வால்  நியமிக்கப்பட்ட DRR தலைவர் இவர்.
 
 
8. முதல் பிரிக்ஸ் திரைப்பட விழா பின்வரும் எந்த நாடு நடத்துகிறது ?
 
A.இந்தியா 
B.பிரேசில் 
C.சீனா 
D.ரஷ்யா
 
விடை : A.இந்தியா 
 
செப்டம்பர் 2 முதல் 6 வரை புது தில்லியில் உள்ள சிரிபோர்ட் வளாகக்கூடத்தில்,  முதல் பிரிக்ஸ் திரைப்பட விழா நடைபெறும்.  இந்த திரைப்பட விழா, உறுப்பு நாடுகளில் உள்ள  திரைப்படத்துறை மக்கள்  ஒன்றிணைய மற்றும் சினிமா,கலாச்சாரம் போன்றவற்றில்  ஒத்துழைப்பை வழங்க  ஒரு களமாக இருக்கும் என கூறப்படுகிறது.மேலும்  நடிகர்கள் , தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள்  ஆகியோரை ஊக்குவிக்கும்விதமாக விருதுகளும் வழங்கப்படுள்ளது .
 
 
9. “ஜனநாயகத்தின் அரங்கம் ” “Theatres of Democracy”  என்ற நூலின் ஆசிரியர் யார் ?
 
A.கே.சச்சித்தாந்தன் 
B.ரொமிலா தாபர் 
C.அமிதாவ் கோஷ் 
D.சிவ விஸ்வநாதன் 
 
விடை : D.சிவ விஸ்வநாதன்
 
“ஜனநாயகத்தின் அரங்கம் [ “Theatres of Democracy” ]: காவியத்திற்கும் அன்றாட நாளுக்கும் இடையே -தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்” இது சமகால இந்தியாவின் விஞ்ஞானம் மற்றும் மதம், அரசியல் மற்றும் சமூகம், கிரிக்கெட் மற்றும் படம் குறித்து ஒரு கண்கவர் நுண்ணறிவை  வழங்குகிறது.
 
10. பார்வையற்றோர் மற்றும் அச்சு எழுத்துகளை படிக்க இயலாதவர்களுக்கு (Divyang )  மத்திய அரசால் அறிமுக படுத்தப்பட்ட இ -நூலகத்தின் பெயர் என்ன ?
 
A.இ -புஸ்தகாலயா 
B.திவ்யா புஸ்தகாலயா
C.சுகம்யா புஸ்தகாலயா
D.நிர்விரோத் புஸ்தகாலயா
 
விடை :  C.சுகம்யா புஸ்தகாலயா
 
பிரதமரின் ‘சுகம்யா பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ், பார்வைக் கோளாறு மற்றும் அச்சுப் குறைபாடு உள்ள  மக்கள்  படிக்க வசதியாக “சுகம்யா புஸ்தகாலயா” எனப்படும் ஆன்லைன் நூலகத்தினை  மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அனைத்து விதமான பாடங்களுடன், பல்வேறு மொழிகளில் சுமார் 2 லட்சம் புத்தகங்களை  இதில் காணலாம். இதனை தேசிய ஊனமுற்றோர் நிறுவனம் மற்றும்  இந்தியா புக் ஷேர்  என்ற டெய்சி கருத்துக்கள உறுப்பினர் அமைப்புக்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!