Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs 28th and 29th August 2016

Tnpsc Tamil Current Affairs 28th and 29th August 2016

Tnpsc Tamil Current Affairs 28th and 29th August 2016
Tnpsc Tamil Current Affairs 28th and 29th August 2016

Tamil Current Affairs 28th 29th August 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 28th 29th August 2016 is given below.

நடப்பு நிகழ்வுகள்  – ஆகஸ்ட்  28,29 -2016

1. பின்வரும்  எந்த உயர்மட்டக்குழு கார்டு வழி பணப்பரிமாற்றத்தை (Card Payments) ஊக்குவிக்க, மத்திய அரசால்  ஏற்படுத்தப்பட்டிருக்கிறது ?

A,அமித் மித்ரா குழு

B.சங்கர் ஆச்சார்யா குழு

C.ரத்தன் பி வட்டல் குழு 

D.அரவிந்த் சுப்பிரமணியன் குழு

விடை : C.ரத்தன் பி வட்டல் குழு

மத்திய நிதி அமைச்சகம், பண பரிவர்த்தனைகளை  கார்டு (Debit / Credit ) மூலம் மேற்கொள்வதை ஊக்குவிக்க தேவையான பரிந்துரைகளை வழங்க ஒரு உயர்மட்டகுழுவை அமைத்துள்ளது. வரிச்சலுகைகள், கேஷ் பேக் போன்றவை வழங்குவதின் மூலம் இதை சாத்தியப்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இக்குழுவின் நோக்கமானது, நேரடியாக  கையில் இருந்து பணம் செலுத்துவதை குறைப்பதுவேயாகும். இதன் தலைவராக, நிதி அயோக்-கின் சமூக நலத்துறைக்கான முதன்மை ஆலோசகரும்,  முன்னாள் நிதித்துறை செயலாளருமான ரத்தன் பி வட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.  இக்குழு இந்தியாவிலுள்ள பண பரிமாற்று முறைகளை  மதிப்பாய்வு செய்யவும்  மேலும்  அனைத்து பண பரிவர்த்தனைகளையும் அட்டை / டிஜிட்டல் முறையில்  உருவாக்குவதற்க்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும்  மற்றும் வணிகர்கள் / நுகர்வோர் டிஜிட்டல் முறையில்  உடனடி, குறைந்த செலவில் சிறு கடன் பெற தேவையான வசதிகளை உருவாக்கவும் ஆய்வு செய்யும்.சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க தேவையான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் இது வழங்கும்.

2. சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN ) 2016-ம் ஆண்டிற்கான  பாரம்பரிய ஹீரோஸ் (Heritage Heroes) விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள முதல் ஆசிய மனிதர் யார் ?

A.ஆண்ட்ரு வில்சன் 

B.பிபூதி லஹ்கர்  

C.பந்து முகுரா 

D.நீல் சங்கா 

விடை : B.பிபூதி லஹ்கர்  

டாக்டர் பிபூதி லஹ்கர், இந்தியாவைச்  சேர்ந்த ஒரு சுற்று சூழல் மற்றும் பாதுகாப்பு ஆர்வலர்.  சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் இவ்விருதிற்கு பரிந்துரைக்கப்படும் முதல் ஆசிய நபர் மற்றும் அசாமின்  முதல் தனிப்பட்ட நபர் என்ற பெருமையும் இவரை சேரும். சவாலான சூழ்நிலைகளில் உலக பாரம்பரிய இடங்களை பாதுகாக்கும் வித்தியாசமான முயற்சிகளை செய்வோரை ஊக்குவிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்பட்டுவருகிறது. டாக்டர் லஹ்கர், கடந்த இரண்டு சகாப்தங்களாக  புல்வெளிகள், தாவரங்கள் மற்றும் மனாஸ் தேசியப் பூங்கா பகுதியில் உள்ள விலங்கினங்களை பாதுகாக்கும் பணியை செய்து வருகிறார் மற்றும் தற்போது Aaranyak எனும் அமைப்பின்  மனாஸ் நிர்வாகியாகவும் பணியாற்றிவருகிறார் . Aaranyak என்பது  வட கிழக்கு இந்தியாவில் பல்லுயிர் பாதுகாப்பிற்காக  உருவாக்கப்பட்ட  ஒரு அரசு சாரா நிறுவனம்(NGO) ஆகும்.  www.iucn.org எனும்  வலைத்தளத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வாக்குப்பதிவு மூலமாக  இவ்விருதுக்கு  இவர் தேர்வு செய்யப்பட்டார்.

3. பின்வரும் எந்த இந்திய ஆட்டோமொபைல் நிறுவனம், வாகன  உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை கண்காணிக்க  “DiGiSENSE platform” எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது ? 

A.பஜாஜ் ஆட்டோ 

B.மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 

C.டாடா மோட்டார்ஸ்

D.அசோக் லேலண்ட்

விடை : B.மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (எம் & எம்)  “DiGiSENSE 1.0” எனப்படும் ஒரு புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது, இதன் மூலம் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களின் இருப்பிடத்தை துல்லியமாக எந்நேரத்திலும் அறிய இயலும்.  புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் கப்பற்படை ஆபரேட்டர்கள், டிரைவர்கள், விநியோகஸ்தர் மற்றும் சேவை வழங்குபவர் போன்றோர் அவர்களின் வாகனங்கள், லாரிகள், டிராக்டர்கள் அல்லது கட்டுமான உபகரணங்கள் பற்றி முக்கிய தகவல்களை  உண்மையான நேர அடிப்படையில் அறிந்து கொள்ள முடியும். இப்புதிய தளம் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களின்  செயல்திறன் மற்றும் இடம் பற்றிய அறிவினை  உருவாக்க உதவும். இதன் மூலம்  மஹிந்திரா நிறுவனம்  இந்தியாவின்  முதல் அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM) என்ற பெருமையை அடைந்து இருக்கிறது. 

4. “Subroto Cup ” எந்த விளையாட்டுடன் தொடர்புடையது ?

A.கிரிக்கெட் 

B.கால்பந்து 

C.ஹாக்கி 

D.பூப்பந்து

விடை : B.கால்பந்து 

இந்தியாவில் பள்ளிகளுக்கிடையே நடத்தப்படும் பிரபலமான கால்பந்து போட்டிகளில் ஒன்று Subroto கோப்பை ஆகும்.  இப்போட்டி  Subroto முகர்ஜி விளையாட்டு கல்வி அமைப்பு (SMSES) மூலம் நடத்தப்படுகிறது. சமீபத்தில் இவ்வமைப்பு,  தேசிய விளையாட்டு விருதான  ‘Rashtriya Khel Protsahan Puruskar-2016’  எனும் விருதினை பெற்றது. Subroto கோப்பையை  இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன், இந்திய விமானப்படை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது.

5.ஆப்பிரிக்க வளர்ச்சி குறித்த  2016 டோக்கியோ சர்வதேச மாநாடு (TICAD) எந்த நாட்டில் நடைபெற்றது ?

A.சாம்பியா

B.மொரோக்கோ

C.கென்யா 

D.தென் ஆப்ரிக்கா

விடை : C.கென்யா 

ஆப்பிரிக்க வளர்ச்சி குறித்த 2016 டோக்கியோ சர்வதேச மாநாட்டின் (TICAD)  6ம் பதிப்பு ஆகஸ்ட் 27-28, 2016 அன்று கென்யாவில் உள்ள நைரோபியில் நடைபெற்றது.  ஆப்பிரிக்காவில் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும்.  உச்சிமாநாட்டின் முக்கிய கருப்பொருள்களாவன:  வாழ்க்கை தரத்தை பொருளாதார பன்முகத்தன்மை மற்றும் தொழிற்புரட்சி கட்டமைப்பு  மூலம் ஊக்குவித்தல்,  சமூக ஸ்திரத்தன்மை மற்றும் தரமான வாழ்வை வழங்கும்பொருட்டு சுகாதார அமைப்பினை மேம்படுத்துதல் ஆகும் 

6. 2016 பெல்ஜியம்  ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்றவர் யார் ?

A.செபாஸ்டியன் வெட்டல் 

B.டேனியல் ரிச்சியர்டோ 

C.லூயிஸ் ஹாமில்டன் 

D.நிகோ ரோஸ்பெர்க் 

விடை :   D.நிகோ ரோஸ்பெர்க் 

நிகோ ரோஸ்பெர்க்,  ஜெர்மனியின்  ஃபார்முலா ஒன் மெர்சிடிஸ் ஓட்டுநர்.  பெல்ஜியத்தில் உள்ள ஸ்டீவ்லாட் பகுதியில் சர்கியூட் டி ஸ்பா-Francorchamps-ல் நடைபெற்ற  2016 பெல்ஜிய ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் இவர் வெற்றி பெற்றார். 

7. இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகின்றது ?

A.ஆகஸ்ட் 28

B.ஆகஸ்ட் 29 

C.ஆகஸ்ட் 27

D.ஆகஸ்ட் 26

விடை :  B.ஆகஸ்ட் 29 

தேசிய விளையாட்டு தினம், ஹாக்கி வீரர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ம் நாள் கொண்டப்படுகிறது. இவர்  இந்தியாவிற்காக, 1928,1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் தங்கப் பதக்கங்களை வென்றார். 

8. இந்தியாவின் முதல் ஜவுளி பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது ?

A.மத்தியப் பிரதேசம் 

B.அசாம் 

C.குஜராத் 

D.ஒடிசா

விடை : C.குஜராத் 

இந்தியாவின் முதல் ஜவுளி பல்கலைக்கழகம் குஜராத்தின் சூரத் பகுதியில் அமைக்கப்பட உள்ளது , இது குஜராத் மற்றும் இந்தியாவில்  ஜவுளிதொழில் செய்ய  ஒரு முழுமையான சூழலை  உருவாக்கும். இப்பல்கலைக்கழகத்தின்  நோக்கம் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R & D) ,திறமையான மனித ஆற்றல் மற்றும் இன்ன பிறவற்றையும் வழங்குவதே ஆகும்.  மாநில அரசு பல்கலைக்கழகத்துக்கு ரூ 800-900 கோடி நிதி வழங்குகிறது. அடுத்த ஒன்றரை ஆண்டுகலில் இப்பல்கலைக்கழகம் செயல்பட துவங்கி விடும். 

9. சமீபத்தில் மறைந்த  தினாநாத் பேத்தி  , எந்த துறையுடன் தொடர்புடையவர் ?

A.கலை

B.விளையாட்டு 

C.புகைப்படம் 

D.கடல் அறிவியல்

விடை : A.கலை

டாக்டர் தினாநாத் பேத்தி  (74), குறிப்பிடத்தக்க ஓவியர், எழுத்தாளர் மற்றும் கலை வரலாற்றாசிரியர். சமீபத்தில் புவனேஸ்வரில் காலமானார். ஒடிசா கலை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான இவர், தன்னுடைய கலை வேலை, கவிதை மற்றும் கற்பித்தல் மூலம் தன்னுடைய வாழ்க்கையை ஒடிசா கலை இயக்கத்திற்காக அர்ப்பணித்தார். ஒடிசா, கிளாசிக்கல், பாரம்பரிய, பழங்குடி, நாட்டுப்புற, கிராமப்புற மற்றும் சமகால கலை குறித்து சுமார் 60-க்கும் மேற்பட்டநூல்களை ஒடியா, ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் எழுதியுள்ளார். அவைகளில் சில Sayonara, Punarnava, Chilika Panire Chhai, Digapandhi Ra Drawing Master முதலியனவாகும்.

10.  ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்கள் கசிந்தது குறித்து ஆராய, இந்திய கடற்படை யாருடைய தலைமையில் உயர் மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது ?

A.ராபின் தோவான்  குழு

B.அசோக் குமார் குழு

C.கிரிஷ் லுதர் 

D.சுனில் லன்பா குழு

விடை : B.அசோக் குமார் குழு

இந்திய கடற்படை, ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்கள் எந்த அளவிற்கு கசிந்தது, அதனால் ஏற்படும் சேதம் என்ன என்பது குறித்து ஆராய உயர் மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு, துணை தலைமை கடற்படை அட்மிரல் அசோக் குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின்  அறிக்கையின் அடிப்படையில், எவ்வாறான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கடற்படை முடிவெடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!