Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 12th October 2016

Tnpsc Tamil Current Affairs 12th October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 12th October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. முதல் பிரிக்ஸ் வர்த்தக கண்காட்சி மற்றும் பொருட்காட்சி இந்தியாவின் எந்த நகரில் தொடங்கியது ?
A
கொச்சி
B
புது தில்லி
C
போபால்
D
இந்தூர்
Question 1 Explanation: 
பிரிக்ஸ் நாடுகள் மத்தியில் வர்த்தகத்தை அதிகரிக்க 2016 அக்டோபர் 12-ம் தேதி, புது தில்லி பிரகதி மைதானில் முதல் பிரிக்ஸ் வர்த்தக கண்காட்சி மற்றும் பொருட்காட்சி தொடங்கியது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகள் தங்களின் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சி முன்னேற்றங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இது விளங்குகிறது. இந்த வர்த்தக கண்காட்சியின் மையக்கரு “Building BRICS – Innovation for Collaboration” என்பதாகும். இந்த 3 நாள் கண்காட்சியானது, பிரிக்ஸ் நாடுகள் முழுவதும் கிடைக்கும் சிறந்த தொழில்நுட்பங்ககளை வெளிப்படுத்துதல் மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் முக்கிய வளர்ச்சி சவால்ககளை கையாளுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளது. மேலும் இது, தொழில்முனையும் இளைஞர்களை பிரிக்ஸ்-ன் கீழ் ஒரே இடத்தில் சந்திக்க வழிவகை செய்கிறது.இக்கண்காட்சியில் பொது மக்களுக்கு எந்தவொரு நுழைவுக்கட்டணமும் இல்லை.
Question 2
2. 2வது ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோட்சவ் (Rashtriya Sanskriti Mahotsav - RSM)-2016, இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற உள்ளது ?
A
அகமதாபாத்
B
மும்பை
C
புனே
D
புது தில்லி
Question 2 Explanation: 
இரண்டாவது ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோட்சவ் (RSM)-2016, புது தில்லியின் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின்(IGNCA) வளாகத்தில் அக்டோபர் 15 - 23 வரை நடைபெறும். இது, இந்தியாவின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தையும் அதன் அனைத்து பல்சுவையூட்டும் பரிமாணங்களான அதாவது கைவினைப்பொருட்கள், உணவு, ஓவியம், சிற்பம், புகைப்படம் எடுத்தல், ஆவணங்கள் மற்றும் அரங்கேற்றக் கலைகள்-நாட்டுப்புற, பழங்குடி, பாரம்பரிய மற்றும் சமகால கலைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் வெளிப்படுத்தும்.
Question 3
3. “The Story of a New Name” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் ?
A
நயன்ஜோட் லஹிரி
B
உமா மகாதேவன்
C
எலெனா பெர்ரண்டே
D
ஜெனிபர் தாஸ்
Question 3 Explanation: 
“The Story of a New Name” என்ற புத்தகம் எலெனா பெர்ரண்டே என்பவரால் எழுதப்பட்டுள்ளது. இது பெண்களின் கவலைக்கிடமான உறவுகள் மற்றும் வருங்கால வாழ்க்கையை மாற்றும் வலிமைகள் ஆகியவை குறித்து கூறுகிறது.
Question 4
4. முதலாவது உலக சுனாமி விழிப்புணர்வு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?
A
அக்டோபர் 15
B
அக்டோபர் 21
C
நவம்பர் 12
D
நவம்பர் 5
Question 4 Explanation: 
உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் சுனாமி ஆபத்துக்களை சார்ந்த விடயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் அடிக்கடி பேரழிவு தரும் இயற்கைச் சீற்றங்களின் சேதத்தை குறைக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும் முக்கியத்துவதை வலியுறுத்த நவம்பர் 5-ஆம் தேதி, முதலாவது உலக சுனாமி விழிப்புணர்வு தினம் (WTAD) அனுசரிக்கப்படுகிறது. இது சுனாமி பற்றிய பாரம்பரிய அறிவை புதுப்பிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
Question 5
5. 2016 சார்க் சுபி (SAARC Sufi festival) திருவிழா பின்வரும் எந்த நாடுகளில் நடைபெறவுள்ளது ?
A
இந்தியா
B
மாலத்தீவு
C
ஆப்கானிஸ்தான்
D
பாகிஸ்தான்
Question 5 Explanation: 
சார்க் சுபி திருவிழாவின் 3 ஆம் பதிப்பு 2016 அக்டோபர் 14-16 வரை ஜெய்ப்பூரின் டிக்கி அரண்மனையில் நடைபெறும். இந்த விழாவை சார்க் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியம் (FOSWAL) நடத்துகிறது. இதில் பாகிஸ்தானை தவிர்த்து, பிற சார்க் சுபி அறிஞர்கள், கவிஞர்கள், சுபி இசை கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் நடன கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்த விழாவானது, சுபி நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள், கவிதை, புத்தகம் வாசிப்பு, புத்தக வெளியீடு மற்றும் ஊடாடும் அமர்வுகளின் ஒரு கலவையாக உள்ளது. இந்த திருவிழாவில், சுபி மற்றும் அதன் இடையேயான மத இணைப்புகள், சுபி-பக்தி நல்லிணக்கம், உலக அமைதியை ஊக்குவிக்கும் சுபி சித்தாந்தங்கள், இன்றைய வாழ்க்கையில் சுபி போதனைகள் மற்றும் பயன்பாடு, சுபியில் பெண்கள் போன்ற தலைப்புகளில் விவாதிக்கப்படவுள்ளது.
Question 6
6. இந்தியாவின் தொலை மற்றும் உயர்மட்டத்தில் அமைக்கப்பட்ட "Himansh" எனும் ஆராய்ச்சி நிலையம் சமீபத்தில் இந்தியாவின் எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது ?
A
சிக்கிம்
B
ஜம்மு காஷ்மீர்
C
உத்தரகண்ட்
D
இமாசலப் பிரதேசம்
Question 6 Explanation: 
இந்தியாவின் தொலை மற்றும் உயர்மட்ட ஆராய்ச்சி நிலையமான "Himansh" சமீபத்தில் இமாச்சலபிரதேசத்தின் ஸ்பிட்டி எனும் ஊரின் ஒதுக்குப்புறத்தில் 13,500 அடி (> 4000 மீ) மேலே திறக்கப்பட்டுள்ளது. கோவாவை சார்ந்த தேசிய அண்டார்டிகா மற்றும் பெருங்கடல் ஆய்வு மையம் (NCAOR) புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இதனை அமைத்துள்ளது. காலநிலை மாற்றத்தினால் இமாலய பனிப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்களை படிக்க மற்றும் அளவிட இந்த ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையம் இமாலய பனிப்பாறைகள் மற்றும் அதன் நீரியல் பங்களிப்பு மீதான அறிவியல் ஆராய்ச்சிக்கு தேவையான ஊக்கத்தை அளிக்கும்.
Question 7
7. 2016 உலகளாவிய பட்டினிப் பட்டியலில் (Global Hunger Index - GHI) இந்தியாவின் தரம் என்ன ?
A
97 வது
B
88 வது
C
110 வது
D
65 வது
Question 7 Explanation: 
2016 உலகளாவிய பட்டினிப் பட்டியலில் (GHI) இந்தியா 118 நாடுகளில் 97வது இடத்தில் உள்ளது. 2016 GHI-ன் நோக்கமானது, 2030 ஆம் ஆண்டிற்குள் பசி இல்லா உலகை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு தேசிய மற்றும் பிராந்திய உலக பட்டினி குறித்த பரிமாண நடவடிக்கைகளை முன்வைத்தல் ஆகும். GHI என்பது ஒரு நாட்டின் பட்டினி நிலையை விவரிக்கும் ஒரு பரிமாண புள்ளிவிவர கருவியாகும். இது இந்தியாவின் பட்டினி நிலையை "தீவிரம்" என விவரிக்கிறது. இந்த பட்டியல், சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) மூலம் வெளியிடப்பட்டது
Question 8
8. இந்தியாவின் முதலாவது மாற்றத்தக்க அரங்கம்(convertible stadium) பின்வரும் எந்த நகரங்களில் அமைந்துள்ளது ?
A
மும்பை
B
அகமதாபாத்
C
மொஹாலி
D
கொல்கத்தா
Question 8 Explanation: 
சமீபத்தில், 2016 உலகக் கோப்பை கபடி (KWC) இந்தியாவின் முதலாவது மாற்றத்தக்க மைதானமான அகமதாபாத்தின் Arena By TransStadia-வில் அக்டோபர் 7-ம் தேதி துவங்கியது. Arena By TransStadia மைதானம் உலகளவில் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பதை பயன்படுத்துகிறது. இதன் மூலம் ஒரு பொத்தனை அழுத்தினால் 6 நிமிடத்தில் வெளிவிளையாட்டு அரங்கம் உள்விளையாட்டு அரங்கமாக மாறிவிடும். இதில் ஒரே நேரத்தில் 20,000 பேர் அமர்வதற்கான வசதி உள்ளது மேலும் கிரிக்கெட் தவிர்த்து 14 விளையாட்டுகளை இதில் நடத்தலாம்.
Question 9
9. “The Legend Of Lakshmi Prasad” என்ற புத்தகம் பாலிவுட் பிரபலம் மூலம் எழுதப்பட்டு வருகிறது ?
A
ஷாருக் கான்
B
தீபிகா படுகோனே
C
டுவிங்கிள் கன்னா
D
தனுஷ்
Question 9 Explanation: 
“The Legend Of Lakshmi Prasad” என்ற புத்தகம் டுவிங்கிள் கன்னா என்பவரால் எழுதப்பட்டு வருகிறது. இப்புத்தகம் 2016 நவம்பரில் வெளியிடப்பட உள்ளது.
Question 10
10. சமீபத்தில் மறைந்த ஆன்ட்ரேஜ் வஜ்டா(Andrzej Wajda), எந்த நாட்டின் பிரபல திரைப்பட இயக்குனர் ?
A
ஆஸ்திரேலியா
B
கனடா
C
போலந்து
D
ஜெர்மனி
Question 10 Explanation: 
புகழ்பெற்ற போலந்து திரைப்பட மற்றும் நாடக இயக்குநர் ஆன்ட்ரேஜ் வஜ்டா(Andrzej Wajda), சமீபத்தில் போலந்தின் தலைநகரான வார்சாவில் காலமானார். அகாடமி விருது பெற்ற இயக்குனரான இவர், “The Promised Land”, “Man of Iron” மற்றும் “Katyn” ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் நன்கு அறியப்படுகிறார்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Download as PDF

Current affairs for competitive exams 12th October 2016

1. The first BRICS Trade Fair and Exhibition has started at Pragati Maidan in New Delhi from October 12, 2016 to boost trade among the BRICS nations. The fair is a platform for BRICS countries viz. Brazil, Russia, India, China and South Africa to exhibit state-of-the-art technologies and advances made in industrial development. The theme of the trade fair is “Building BRICS – Innovation for Collaboration”.

2. The second Rashtriya Sanskriti Mahotsav (RSM)-2016 will be held from October 15 to 23 in the premises of Indira Gandhi National Centre for Arts (IGNCA), New Delhi. It will showcase the rich cultural heritage of India in all its rich and varied dimensions, viz Handicrafts, Cuisine, Painting, Sculpture, Photography, Documentation and Performing Arts-Folk, Tribal, Classical and Contemporary- all in one place.

3. The book “The Story of a New Name” has been authored by Elena Ferrante. It is about the women’s fraught relationship and shifting fortunes are the life forces. .

4. The first-ever World Tsunami Awareness Day (WTAD) will be observed on November 5, 2016 to spread awareness among people across the world in matters related to the dangers of tsunami and shall stress on the importance of early warning systems in order to mitigate damage from the often devastating natural hazard.

5. The 3rd edition of the SAARC Sufi festival will be held at the Diggi palace in Jaipur from October 14-16, 2016. The event is being organized by SAARC Writers and Literature (FOSWAL). In it, SAARC Sufi scholars, poets, Sufi musicians, singers and dancers and performers will participate excluding Pakistan.

6. India’s remote and high altitude research station “Himansh” has recently opened at a remote region in Spiti, Himachal Pradesh above 13,500 ft (> 4000 m). It is established by National Centre for Antarctic and Ocean Research (NCAOR), Goa, under the Ministry of Earth Sciences to better study and quantifies the Himalayan glacier responses towards the climate change.

7. India has been ranked 97th out of 118 countries in the 2016 Global Hunger Index (GHI). The focus of the 2016 GHI is to present a multidimensional measure of national, regional, and global hunger, focusing on how the world can get to Zero Hunger by 2030.The GHI is a multidimensional statistical tool used to describe the state of countries’ hunger situation. It describes India’s hunger situation as “serious”. The Index is released by the International Food Policy Research Institute (IFPRI).

8. Recently, the 2016 Kabaddi World Cup (KWC) has started on October 7 at the Arena By TransStadia in Ahmedabad, which is India’s first-ever convertible stadium. The Arena by TransStadia uses a globally patented technology, which converts an outdoor stadium into an indoor arena within 6 minutes at a touch of a button. The facility has a seating capacity of 20,000 and can house 14 sports, excluding cricket.

9. The book “The Legend Of Lakshmi Prasad” has been authored by Twinkle Khanna, which will be launch on November 2016.

10. Andrzej Wajda (90) was a renowned Polish film and theatre director, who passed away recently in Warsaw, Poland. He was an Academy Award-wining director and was known for the movies such as “The Promised Land”, “Man of Iron” and “Katyn”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!