Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 17th October 2016

Tnpsc Tamil Current Affairs 17th October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 17th October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. 2016 சைனீஸ் தைபே மாஸ்டர்ஸ் ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் வென்றவர் யார் ?
A
சவுரப் வர்மா
B
பி சி துளசி
C
ஆனந்த் யாலிகர்
D
சமீர் வர்மா
Question 1 Explanation: 
இந்திய பாட்மிண்டன் வீரர் சவுரப் வர்மா, 2016 சைனீஸ் தைபே மாஸ்டர்ஸ் ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மலேஷியா நாட்டின் டேரன் லியூவை 12–10, 12–10, 3–3 என்ற கணக்கில் தோற்கடித்து பட்டம் வென்றார்
Question 2
2. 2016 உலக உணவு தினத்தின் (World Food Day - WFD) மையக்கரு என்ன ?
A
Social protection and Agriculture
B
Feeding the world, caring for the earth
C
Climate is changing. Food and agriculture must too
D
Family Farming: Breaking the Cycle of Rural Poverty
Question 2 Explanation: 
1945-ல் ஐக்கிய நாடுகள் சபை, உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான (FAO) அடித்தளமிட்டதை குறிக்க ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ம் தேதி உலக உணவு தினம் அனுசரிக்கப்படுகிறது. 2016 உலக உணவு தினத்தின் மையக்கரு "Climate is changing. Food and agriculture must too".
Question 3
3. சமீபத்தில் மறைந்த கிகேலி வி டஹிண்டுர்வா பின்வரும் எந்த நாட்டின்  மன்னர் ?
A
கென்யா
B
ருவாண்டா
C
எகிப்து
D
தென் ஆப்ரிக்கா
Question 3 Explanation: 
ருவாண்டாவின் கடைசி மன்னரான கிகேலி வி டஹிண்டுர்வா சமீபத்தில் அமெரிக்காவில் காலமானார். இவர் பெல்ஜிய காலனித்துவ சக்தியுடன் மோதியதால் நாட்டை விட்டு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் 1959-ல் ஒரு ஆண்டுக்கும் குறைவாகவே கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளை ஆட்சி செய்தார். 1961 ஆம் ஆண்டில், முடியாட்சி ரத்து செய்யப் பட்டது. அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன், ராஜா நாடுகடந்த வாழ்கையை கென்யா, உகாண்டா உட்பட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்டார். அவர் 1992-ல் வாஷிங்டன் புறநகர் பகுதியில் குடியேறினர்.
Question 4
4. "Shenzhou-11" எனும் மனிதரை உள்ளடக்கிய விண்கலத்தை எந்த நாடு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது ?
A
வட கொரியா
B
ஜப்பான்
C
ரஷ்யா
D
சீனா
Question 4 Explanation: 
சீனா, கோபி பாலைவனத்தின் அருகிலுள்ள ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து, லாங் மார்ச்-2F கேரியர் ராக்கெட் மூலம் நீண்டதூரம் மனிதர்களை அனுப்பும் "Shenzhou-11" விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. அதில் அனுப்பட்ட இரண்டு விண்வெளி வீரர்கள் 30 நாட்களுக்கு விண்வெளியில் தங்கி, மனித உயிர்கள் வாழ்வதில் உள்ள சிக்கல்களை சோதிக்க உள்ளனர். மேலும் அவர்கள் மருத்துவ மற்றும் அறிவியல் சோதனைகளையும் நடத்துவர். இந்த திட்டத்தின் நோக்கம், Tiangong-2 விண்வெளி ஆய்வகத்தை விரிவாக்குதல், அனுபவம் பெறுதல் மற்றும் 30 நாட்கள் தங்கியிருந்து வாழ்வாதார அமைப்புகளை சோதித்தல் ஆகும்.
Question 5
5. சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது ?
A
அக்டோபர் 15
B
அக்டோபர் 18
C
அக்டோபர் 19
D
அக்டோபர் 17
Question 5 Explanation: 
உலகம் முழுவதும் ஏழ்மையை ஒழிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17-ம் தேதி சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டிற்கான மையக்கரு “Moving from humiliation and exclusion to participation: Ending poverty in all its forms” என்பதாகும்.
Question 6
6. எந்த பாலிவுட் நடிகைக்கு,  2016 ET Panache டிரண்ட்செட்டர் விருது வழங்கப்பட்டுள்ளது ?
A
தீபிகா படுகோனே
B
ஐஸ்வர்யா ராய்
C
சோனம் கபூர்
D
பிரியங்கா சோப்ரா
Question 6 Explanation: 
பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு மும்பையின் மகாராஷ்டிராவில் 2016 ET Panache டிரண்ட்செட்டர் விருது வழங்கப்பட்டது. இவருடன் விஜய் ஷேகர் ஷர்மா, கவின் பார்தி மிட்டல், பவின் மற்றும் திவ்யங் டுரக்ஹியா, தீபா கர்மாகர், தேவேந்திர ஜஜாரியா, அனன்யா பிர்லா மற்றும் மேலும் பலருக்கு இவ்விருது அளிக்கப்பட்டது. பிறரின் வாழ்கையை மாற்றும் சேவைகள் மற்றும் பலகோடி மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வாழும் தொழில் முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் , பிரபலங்களின் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. இதில் வென்ற ஒவ்வொருவரும் தொழில்முறை உணர்வு மூலம் இயக்கப்பட்டும், தங்கள் தன்னம்பிக்கையின் மூலமும் மாற்றத்தின் முன்னறிவிப்பாளராக திகழ்கின்றனர்.
Question 7
7. 2017 இந்திய அறிவியல் காங்கிரஸ் (Indian Science Congress) பின்வரும் எந்த மாநிலங்களில் நடைபெறவுள்ளது ?
A
ஒடிசா
B
கர்நாடகா
C
கேரளா
D
ஆந்திரப் பிரதேசம்
Question 7 Explanation: 
104வது பதிப்பான 2017 இந்திய அறிவியல் காங்கிரஸ் (ஐஎஸ்சி) மாநாடு, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் 2017 ஜனவரி 3 முதல் 7 வரை நடைபெறும். இந்த நிகழ்வில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற 9 அறிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர். இத்துடன் கூடுதலாக, வெளிநாடுகளில் இருந்து 200 விஞ்ஞானிகள் அடங்கிய குழு, பல நாடுகளின் ஆய்வகங்களில் உள்ள 10,000 விஞ்ஞானிகள், இந்தியப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இன்ன பிற மக்கள் இதில் கலந்து கொண்டு பலதரப்பட்ட அறிவியல் பிரச்சனைகள் குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் தங்கள் பார்வைகளை பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.
Question 8
8. இந்தியா சர்வதேச சில்க் கண்காட்சி 2016 (IISF -  India International Silk Fair ) இந்தியாவின் எந்த நகரத்தில் துவங்கப்பட்டுள்ளது ?
A
புது தில்லி
B
புனே
C
ஜெய்ப்பூர்
D
லக்னோ
Question 8 Explanation: 
2016 இந்தியா சர்வதேச சில்க் கண்காட்சியின் 5வது பதிப்பினை, அக்டோபர் 15, 2016 அன்று புது தில்லியின் பிரகதி மைதானத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தொடங்கி வைத்தார். பிரத்யேகமான தூய பட்டு, பட்டு கலக்கும் துணிகள், ஆடைகள், இன்டீரியர் பர்னிஷிங், பேஷன் பாகங்கள், சால்வைகள், அங்கிகள் மற்றும் தரை மறைப்புக்கள் ஆகியவற்றை வெளிநாட்டவர்கள் வாங்குவதை எளிதாக்கும் வகையில் உலக தரத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி இதுவாகும். காட்சியில் வைக்கப்பட்ட சமீபத்திய பொருட்கள் அனைத்தும் இந்தியாவின் முதன்மையான 150 நிறுவனங்களின் தயாரிப்பு ஆகும்.
Question 9
9. 'பண்ணை சுற்றுலா(Farm Tourism)' திட்டத்தை, இந்தியாவின் எந்த மாநில அரசு துவங்கியுள்ளது ?
A
ராஜஸ்தான்
B
பஞ்சாப்
C
உத்தரப் பிரதேசம்
D
ஹரியானா
Question 9 Explanation: 
சமீபத்தில் ஹரியானா மாநில அரசு, மாநிலத்தின் சுற்றுலாத் துறையை அதிகரிக்க 'பண்ணை சுற்றுலா' திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம், பதிவு செய்யப்பட்ட பண்ணை உரிமையாளர்கள் விடுமுறை தொகுப்புகளின் கீழ்(Holiday Packages) சுற்றுலா பயணிகளை வழி நடத்த முடியும். மக்களை கிராமங்களுக்கு ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு விடுமுறை தொகுப்புகள் (Holiday Packages) டில்லிக்கு அருகில் பதிவு செய்யப்பட்ட பண்ணைகளில் வழங்கப்படுகிறது. மாநில அரசாங்கம் பண்டைய கலாச்சார பாரம்பரிய தலம் மற்றும் வரலாற்று மற்றும் புகழ்பெற்ற யாத்திரை தளங்களை மேம்படுத்துதலில் கவனம் செலுத்தி, அரியானாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த உள்ளது. இது சுற்றுலா துறைக்கு ஒரு தொழில் நிலையை கொடுத்திருக்கிறது.
Question 10
10. நிறுவன வளர்ச்சி மையத்தின்(Centre for Organisation Development) சிறந்து விளங்கியதர்கான
வி கிருஷ்ணமூர்த்தி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
A
வி என் ஸ்ரீவஸ்தவா
B
ஆர் ஏ மாஷேல்கர்
C
வினோத் கர்ணம்
D
உமேஷ்வர் பாண்டே
Question 10 Explanation: 
சிஎஸ்ஐஆர்(CSIR)-ன் முன்னாள் இயக்குனர் ஜெனரலான ஆர் ஏ மாஷேல்கருக்கு, ஹைதராபாத்தை அடிப்படையாக கொண்ட நிறுவன வளர்ச்சி மையத்தின்(Centre for Organisation Development) வி கிருஷ்ணமூர்த்தி விருது வழங்கப்பட்டுள்ளது. மேலாண்மையில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்க 2000 ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!