Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 1st November 2016

Tnpsc Tamil Current Affairs 1st November 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 1st November 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. பின்வரும் எந்த மாநிலங்கள், 2016 இந்திய மாநில/யூனியன் பிரதேசங்களில் சுலபமாக தொழில் புரியும் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளன ?
A
ஆந்திரா மற்றும் தெலுங்கானா
B
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர்
C
பீகார் மற்றும் ஜார்க்கண்ட்
D
உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான்
Question 1 Explanation: 
தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (DIPP) மற்றும் உலக வங்கி நடத்திய, 2016 இந்திய மாநில/யூனியன் பிரதேசங்களில் சுலபமாக தொழில் புரியும் தரவரிசையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாஆகிய இரண்டு மாநிலங்களும் கூட்டாக முதலிடத்தில் உள்ளன. இந்த தரவரிசைகள், 340 புள்ளி வணிக சீர்திருத்தம் செயல் திட்டம் மற்றும் மாநிலங்கள் அதனை செயல்படுத்தியதன் அடிப்படையில் தரப்பட்டுள்ளன. இது 2015 ஜூலை 1 முதல் 2016 ஜூன் 30 வரையிலான காலத்தை கணக்கில் கொள்கிறது. தரவரிசையில் குஜராத் 3வது இடத்திலும் அதனை தொடர்ந்து சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசமும் உள்ளன.
Question 2
2. 2016 லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு(Vigilance Awareness Week) வாரத்தின் மையக்கரு என்ன ?
A
Combating Corruption – Technology as an enabler
B
Public participation in promoting integrity and eradicating Corruption
C
Preventive Vigilance as a tool of Good Governance
D
Promoting Good Governance: Positive contribution of vigilance
Question 2 Explanation: 
பொது வாழ்வில் நேர்மையை ஊக்குவிக்க மற்றும் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க இந்தியா முழுவதும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31லிருந்து ஒரு வாரத்திற்கு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு(Vigilance Awareness Week) வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அரசு ஊழியர்களான அமைச்சர்கள், துறைகள், பொது துறை நிறுவனங்கள்(PSUs), வங்கிகள் மற்றும் இன்ன பிற நிறுவனங்களின் உறுதிமொழியுடன் இந்த லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் தொடங்கியது. 2016 ஆம் ஆண்டிற்கான மையக்கரு 'Public participation in promoting integrity and eradicating Corruption' என்பதாகும். நாட்டின் வளர்ச்சியை மிக மோசமாக பாதிக்கும் இந்த ஊழல் நடைமுறைகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) இந்த வாரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்.
Question 3
3. 2016 ஐக்கிய நாடுகளின் உலக நகரங்கள் தினத்தின் மையக்கரு என்ன ?
A
Designed to Live Together
B
Promoting a better urban future
C
Inclusive Cities, Shared Development
D
Better City, Better Life
Question 3 Explanation: 
மக்கள் தொகையும் இதர பிரச்சனைகளும் வளர்ந்து வருவதால் திட்டமிட்ட மற்றும் நிலையான நகர்ப்புற வாழ்க்கையை உருவாக்க ஒன்றிணைந்து பணிபுரிய வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் ஐக்கிய நாடுகளின் உலக நகரங்கள் தினம் அக்டோபர் 31ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டின் மையக்கரு "Inclusive Cities, Shared Development" என்பதாகும். உலக வளர்ச்சி மற்றும் சமூக உள்ளடங்களில் (Social Inclusion) நகரமயமாக்கலின் பங்கை முன்னிலைப்படுத்தவே இந்த மையக்கரு.
Question 4
4. ரமல்லாவில்(Ramallah) தொழில்நுட்ப பூங்கா அமைக்க இந்தியா, எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது ?
A
இஸ்ரேல்
B
ஈரான்
C
ஆப்கானிஸ்தான்
D
பாலஸ்தீனம்
Question 4 Explanation: 
பாலஸ்தீனத்தில் உள்ள ரமல்லாவில் பாலஸ்தீன-இந்தியா தொழில்நுட்ப பூங்கா அமைக்க இந்தியா, பாலஸ்தீனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. IT தொடர்பான அனைத்து சேவை தேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் முழுமையான IT வசதிகளுடன் பாலஸ்தீனத்தில் ஒரு IT மையமாக இந்த தொழில்நுட்ப பூங்கா திகழும். மேலும் இந்த மையம், உள்ளூர் வணிகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் பயனடையும் வகையில் IT நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை நடத்தும் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கும். பாலஸ்தீனர்களின் நன்மைக்கான இந்த உதவியின் ஒரு பகுதியாக இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பு உள்ளது. இந்த திட்டம் இளம் பாலஸ்தீனியர்களுக்கு வேலை உருவாக்கம், வணிகம் மற்றும் பிற வாய்ப்புகளை வழங்க உதவும்.
Question 5
5. எந்த மாநில அரசு, நவம்பர் 1-ஆம் நாள்  'புகையிலை எதிர்ப்பு தினத்தை(No Tobacco Day)' அனுசரித்தது ?
A
பஞ்சாப்
B
கேரளா
C
ஒடிசா
D
அரியானா
Question 5 Explanation: 
மாநிலத்தில் புகையிலை உபயோகத்தை குறைக்கும் முயற்சியாக, நவம்பர் 1-ஆம் தேதி 'புகையிலை எதிர்ப்பு தினத்தை(No Tobacco Day)' பஞ்சாப் மாநில அரசு அனுசரித்தது. இந்த பிரச்சாரத்தின் நோக்கமானது, பஞ்சாப்பில் புகையிலை / நிகோடின் பயன்பாட்டால் ஏற்படும் நோய்களை குறைத்தல் ஆகும். தொற்றா நோய்களின் நோய்தாக்கத்தை குறைத்தல் மற்றும் நிகோடின், பதப்படுத்தப்பட்ட பொடி, புகையிலை போன்ற பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்பதன் மூலம் புற்றுநோய், இதய நோய் போன்ற பல்வேறு தொற்றா நோய்களை தடுக்கும் பொது விழிப்புணர்வை அதிகரித்தல் ஆகியவை இந்த பிரச்சாரத்தின் குறிக்கோள்கள் ஆகும்.
Question 6
6. RBI-யின் புதிய விதிகளின்படி, External Commercial Borrowings (ECBs) வழியாக தொடக்க நிறுவனங்கள்ஆண்டிற்கு எவ்வளவு தொகையை உயர்த்த இயலும் ?
A
$ 4 மில்லியன்
B
$ 3 மில்லியன்
C
$ 2 மில்லியன்
D
$ 5 மில்லியன்
Question 6 Explanation: 
புதிய கண்டுபிடிப்புகளை அதிகரிக்க மற்றும் வேலை உருவாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தொடக்க நிறுவனங்களுக்கான ECB பாதையின் புதிய விதிகளின்படி, RBI-யானது ஒரு நிதியாண்டில் தொடக்க நிறுவனங்கள் அதிகபட்சம் $ 3 மில்லியன் நிதி வரை பெற அனுமதித்துள்ளது. இதன் கீழ், குறைந்தபட்ச முதிர்ச்சி வருடம் 3 ஆண்டுகளாகவும், பெறும் தொகை எளிதில் மாற்றக்கூடிய பண மதிப்பாகவோ (அ) இந்திய ரூபாயாகவோ அல்லது இரண்டும் கலந்தோ நிதியை உயர்த்த இயலும். பெறும் தொகையானது கடன் அல்லது மாற்ற இயலாத வடிவில் இருத்தல் வேண்டும். விரும்பினால், அதனை மாற்றத்தக்க (அ) பகுதியாக மாற்றத்தக்க பங்குகளாக பெறலாம் மற்றும் குறைந்தபட்ச சராசரி முதிர்வு காலம் 3 ஆண்டுகளாக இருத்தல் வேண்டும். Financial Action Task Force (FATF) அல்லது FATF-Style Regional Bodies ஆகிய ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக உள்ள நாட்டிலிருந்து ECB பெற முடியும்.
Question 7
7. ஜுலன் கோஸ்வாமி, எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
ஹாக்கி
B
செஸ்
C
கிரிக்கெட்
D
மல்யுத்தம்
Question 7 Explanation: 
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஜுலன் கோஸ்வாமி, சமீபத்தில் ஐசிசி மகளிர் ODI பந்துவீச்சு தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார். அவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் Shelly Nitschke மற்றும் Lisa Sthakelar உள்ளனர்.
Question 8
8. எந்த மாநிலம், NITI Aayog-இன்  2016 வேளாண் விற்பனை மற்றும் விவசாயி நட்பு சீர்திருத்த குறியீட்டில் (Agricultural Marketing and Farmer Friendly Reforms Index) முதலிடம் வகிக்கிறது ?
A
குஜராத்
B
ராஜஸ்தான்
C
ஜார்க்கண்ட்
D
மகாராஷ்டிரா
Question 8 Explanation: 
NITI Aayog-இன் 2016 வேளாண் விற்பனை மற்றும் விவசாயி நட்பு சீர்திருத்த குறியீட்டில் (Agricultural Marketing and Farmer Friendly Reforms Index) இந்தியாவிலுள்ள 29 மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. மாநிலங்களின் இந்த மதிப்பெண் குறியீட்டில் இரண்டாவதாக குஜராத்தும் அதனை தொடர்ந்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், அரியானா, இமாச்சல பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் உள்ளன. இந்த குறியீட்டின் நோக்கம், விவசாய துறையில் குறைந்த வளர்ச்சி, குறைந்த விவசாய வருமானம் மற்றும் விவசாய அபாயம் உள்ள மாநிலங்களை அடையாளம் கண்டு அவைகளின் பிரச்சனைகளை தீர்க்க உதவுவதேயாகும்.
Question 9
9. "சூர்யா கிரண்-எக்ஸ்" எனும் இந்திய -நேபாள கூட்டு இராணுவ பயிற்சி எந்த நகரத்தில் தொடங்கியது ?
A
சல்ஜ்ஹண்டி, நேபாளம்
B
கட்ச், குஜராத்
C
ஜெய்சால்மர், ராஜஸ்தான்
D
பித்தோராகர், உத்தரகண்ட்
Question 9 Explanation: 
"சூர்யா கிரண்-எக்ஸ்" எனும் இந்திய -நேபாள கூட்டு இராணுவ பயிற்சி அக்டோபர் 31-ம் தேதி நேபாளத்தின் சல்ஜ்ஹண்டியில் துவங்கியது, இது நவம்பர் 13, 2016 வரை நடைபெறும். இந்த பயிற்சியின் நோக்கம், படைப்பிரிவு நிலையில் கூட்டு பயிற்சி மேற்கொள்வதாகும் குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கரவாத தடுப்பை வலியுறுத்தி நடத்தப்படுகிறது. இரு நாடுகளின் ராணுவப்படைகளும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள மற்றும் பரஸ்பரம் பெற இது ஒரு சிறந்த தளமாகும்.
Question 10
10. மிஸ் இண்டர்நேசனல் 2016 பட்டம் பெற்ற கெய்லி வெர்ஜோசா(Kylie Verzosa), எந்த நாட்டை சேர்ந்தவர் ?
A
நிக்கரகுவா
B
பிலிப்பைன்ஸ்
C
அர்ஜென்டீனா
D
வெனிசுலா
Question 10 Explanation: 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் டோக்கியோ டோம் சிட்டி ஹாலில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கெய்லி வெர்ஜோசா(Kylie Verzosa), மிஸ் இண்டர்நேசனல் 2016 ஆக மகுடம் சூட்டப்பட்டார். மிஸ் இண்டர்நேசனல் பட்டம் பெறும் 6வது ஃபிலிப்பினோ இவர்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!