Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 22nd and 23rd October 2016

Tnpsc Tamil Current Affairs 22nd and 23rd October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 22nd and 23rd October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. கிருஷ்ணா வனவிலங்கு சரணாலயம் (KWS) எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
A
கர்நாடகா
B
ஆந்திரப் பிரதேசம்
C
கேரளா
D
மகாராஷ்டிரா
Question 1 Explanation: 
கிருஷ்ணா வனவிலங்கு சரணாலயம் (KWS) ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது சமீபத்திய செய்திகளில் வரக்காரணம், Lutrogale perspicillata (மென்மையான பூசிய நீர்க்கீரி) எனும் நீர்க்கீரி கிருஷ்ணா வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தின் சதுப்பு நிலக் காடுகளில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (ஐயுசிஎன்) அறிக்கைப்படி, இந்த நீர்க்கீரிகளின் பாதுகாப்புநிலை அழியக்கூடிய பட்டியலில் உள்ளது.
Question 2
2. இந்தியாவின் கிழக்கத்திய அர்பணிக்கப்பட்ட சரக்கு நடைமேடை(Eastern Dedicated Freight Corridor - EDFC) -III கட்டுமான பணிக்கு உலக வங்கி எவ்வளவு கடன் தொகை வழங்குவதாக ஒப்புதல் அளித்துள்ளது ?
A
$ 700 மில்லியன்
B
$ 550 மில்லியன்
C
$ 444 மில்லியன்
D
$ 650 மில்லியன்
Question 2 Explanation: 
கிழக்கத்திய அர்பணிக்கப்பட்ட சரக்கு நடைமேடை-III (Eastern Dedicated Freight Corridor - EDFC) கட்டுமான பணிக்கு உலக வங்கியிடம் $ 650 மில்லியன் கடன் பெற இந்திய அரசு (GOI) ஒப்பந்தம் செய்துள்ளது. EDFC- III திட்டம் லூதியானா முதல் குர்ஜா வரை பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் வழியாக 401 கி.மீ தூரத்திற்கு கட்டப்படவுள்ளது. EDFC திட்டத்தின் நோக்கம் லூதியானா மற்றும் கொல்கத்தா இடையே ரயில்வே நடைபாதையுடன் சேர்த்து ரயில்வே சரக்கு தாங்கும் திறனையும் அதிகரித்தல் ஆகும். இந்தியாவின் வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கிடையே மூலப்பொருட்கள் மற்றும் இறுதி பொருட்களை வேகமாகவும், திறமையாகவும் கொண்டு செல்ல, அதாவது சரக்குகளை மட்டும் எடுத்து செல்ல அமைக்கப்படும் ரயில் பாதையே EDFC ஆகும்.
Question 3
3. 2016 உலக எலும்புருக்கிநோய் தினத்தின் (World Osteoporosis Day - WOD) மையக்கரு என்ன ?
A
Stop at One: Make Your First Break Your Last
B
Love Your Bones: Perfect Your Future
C
Real Men Build Their Strength from Within
D
Serve Up Bone Health
Question 3 Explanation: 
எலும்புப்புரை மற்றும் வளர்சிதை மாற்ற எலும்பு நோய் குறித்த நோய் தடுப்பு, நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றி உலகளாவிய விழிப்புணர்வு ஏற்படுத்த அக்டோபர் 20ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக எலும்புருக்கிநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2016ஆம் ஆண்டின் மையக்கரு "Love Your Bones: Perfect Your Future" ஆகும்.
Question 4
4. “Andhere se ujale ki aur” என்ற புத்தகம் இந்தியாவின் எந்த மத்திய அமைச்சரால் எழுதப்பட்டுள்ளது ?
A
ரவி சங்கர் பிரசாத்
B
உமா பாரதி
C
அருண் ஜேட்லி
D
சுஷ்மா சுவராஜ்
Question 4 Explanation: 
பாஜக-வின் தலைமையிடமான புதுதில்லியில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எழுதிய “Andhere se ujale ki aur” என்ற புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது, ஜேட்லி பல்வேறு கால கட்டங்களில் எழுதிய வலைப்பதிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.
Question 5
5. மத்திய ஹோமியோபதி குழுவின் (Central Council of Homeopathy - CCH) தலைமையகம் எங்குள்ளது ?
A
புனே
B
லக்னோ
C
புது தில்லி
D
சென்னை
Question 5 Explanation: 
மத்திய ஹோமியோபதி குழு என்பது AYUSH துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டரீதியான தலைமை அமைப்பு ஆகும். இது சமீபத்திய செய்திகளில் வரக்காரணம்,புதிய ஹோமியோபதி கல்லூரி அமைக்க சாதகமான ஆய்வு அறிக்கையை கொடுக்க 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் CCH-ன் தலைவர் டாக்டர் ராம்ஜீ சிங்கும், தனியார் நபர் ஒருவரும் மத்திய புலனாய்வு (சிபிஐ) துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். CCH தலைமையகம் புது தில்லியில் உள்ளது.
Question 6
6. அல்மாட்டி(Almatti) அணை பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
A
ஆந்திரப் பிரதேசம்
B
கர்நாடகா
C
கேரளா
D
மகாராஷ்டிரா
Question 6 Explanation: 
வடக்கு கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா ஆற்றின் மீதுள்ள நீர்மின் திட்டம் அல்மாட்டி அணை ஆகும். இது சமீபத்திய செய்திகளில் வரக்காரணம், அணை வலிமையை அதிகரிக்க செய்யப்பட்ட புனரமைப்பு பணியில், நிதியை(72 கோடி) சிறந்த முறையில் பயன்படுத்தியதற்காக இந்த அணைக்கு உலக வங்கி "Award of Excellence" விருது வழங்கியுள்ளது. கர்நாடகாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கங்கள் ஒன்றான இந்த திட்டம், நீர்த்தேக்கங்களை வலிமைப்படுத்துவதற்காக அணை புனர்வாழ்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் (DRIP) கீழ் எடுத்து கொள்ளப்பட்டது. உலக வங்கி (WB), அணைக்கு சேதம் விளைவிக்கும் நீர்க்கசிவை தடுக்க கிருஷ்ணா பாக்யா ஜல் நிகாம் லிமிடெட்டிற்கு ரூபாய் 72 கோடி வழங்கியது.
Question 7
7. எந்த நாடு 2016 உலகக் கோப்பை கபடி போட்டியில் வென்றுள்ளது ?
A
இலங்கை
B
ஈரான்
C
இந்தியா
D
சீனா
Question 7 Explanation: 
குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற 2016 உலகக் கோப்பை கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஈரானை 38-29 என்ற வீதத்தில் தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது. கபடியின் தரமான ஸ்டைல்(Standard Style version of Kabaddi) வரிசையில் இந்தியா வெல்லும் 3வது உலகக்கோப்பை இதுவாகும்.
Question 8
8. 2016 FIFA U-17 மகளிர் உலகக் கோப்பையை எந்த நாடு கைப்பற்றியுள்ளது ?
A
வெனிசுலா
B
ஜப்பான்
C
ஸ்பெயின்
D
வட கொரியா
Question 8 Explanation: 
ஜோர்டானில் நடைபெற்ற 2016 FIFA U-17 மகளிர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் வட கொரியா அணி, ஜப்பான் அணியை பெனால்டி ஷூட்அவுட் முறையில் 5-4 என்ற புள்ளியில் தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், இக்கோப்பையை 2 முறை வென்ற முதல் அணியாக வட கொரியா மாறியுள்ளது.
Question 9
9. சமீபத்தில் மறைந்த மெஹர் மிட்டல், எந்த மொழியில் பழம்பெரும் நடிகராக இருந்தார் ?
A
பஞ்சாபி
B
தமிழ்
C
தெலுங்கு
D
ஒடியா
Question 9 Explanation: 
பழம்பெரும் பஞ்சாபி நடிகர் மெஹர் மிட்டல் (82) சமீபத்தில் ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் காலமானார். பஞ்சாபி படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்ததின் மூலம் இவர் நன்கு அறியப்படுகிறார். இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் “Sawa Lakh Se Ek Ladaun”, “Putt Jattan De”, “Babul Da Vehra”, “Bhulekha”, “Long Da Lishkara”, “Peengan Pyar Deeyan” மற்றும் “Jeeja Sali”.
Question 10
10. இந்தியாவின் முதல் ரயில்வே பல்கலைக்கழகம் எந்த நகரத்தில் அமைக்கப்பட உள்ளது ?
A
பெங்களூரு
B
வதோதரா
C
வாரணாசி
D
கொச்சி
Question 10 Explanation: 
இந்திய ரயில்வே துறையில் புதுமைகளை புகுத்தல் மற்றும் நவீனமயமாக்கலுக்கு உதவும் வகையில் இந்தியாவின் முதல் ரயில் பல்கலைக்கழக குஜராத்தின் வதோதராவில் அமைக்கப்பட இருக்கிறது. முதலில் , வதோதராவில் தற்போதுள்ள இந்தியன் ரயில்வேயின் நேஷனல் அகாடமி (NAIR) வளாகத்தில் ரயில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட இருந்தது. ஆனால், நிலம் கையகப்படுத்திய பிறகு, இதற்கென தனியே ஒரு பல்கலைக்கழகம் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!