Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 24th October 2016

Tnpsc Tamil Current Affairs 24th October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 24th October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. 2016 ஐக்கிய நாடுகள் தினத்தின் மையக்கரு என்ன ?
A
Freedom First
B
Goals for Peace
C
Strong UN: Better World
D
Freedom & Peace for humanity
Question 1 Explanation: 
ஐ.நா. சாசனம் 1945 ஆம் ஆண்டிலிருந்து அமலுக்கு வந்ததை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உட்பட அதன் பெரும்பான்மை உறுப்பினர்கள் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டதின் மூலம் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. 2016 ஆம் ஆண்டிற்கான மையக்கரு "Freedom First ". இந்த ஆண்டு UN தினம், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய மக்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்துகிறது.
Question 2
2. இந்தியாவின் முதல் தொடக்க( first startup magazine) இதழ் "Cofounder" யாரால் தொடங்கப்பட்டுள்ளது ?
A
ஆதீஷ் வர்மா மற்றும் அருண்ராஜ் ராஜேந்திரன்
B
கீர்த்தி கவுர் மற்றும் முகுந்த் தீர்
C
தீபக் சிங்வி மற்றும் சுப ராய்
D
வர்ஷா சர்மா மற்றும் பூர்தி ஜுனேஜா
Question 2 Explanation: 
இந்தியாவின் முதல் தொடக்க( first startup magazine) இதழ் "Cofounder", ஆதீஷ் வர்மா மற்றும் அருண்ராஜ் ராஜேந்திரன் என்பவர்களால் தொடங்கப்பட்டது. இந்த இதழ், ஸ்டார்ட்-ஆப் மற்றும் தொழில் முனைவோரின் பின்னால் உள்ள ஆரம்பகால உண்மை கதைகள் பற்றி பேசும். பல்வேறு ஸ்டார்ட்-ஆப்களில் உள்ள இந்திய CEO மற்றும் CIO-களின் ஸ்டார்ட்-ஆப் வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வு , போரட்டங்கள் மற்றும் பயணங்கள் ஆகியவற்றை தெரிவிக்கும் அவசியமான ஒரு தகவல் தொடர்பு ஊடகமாகவும், புதிய தரவு சேமிப்பு அமைப்பாகவும் இது உருவெடுக்கும்.
Question 3
3. பின்வரும் எந்த நாளில், இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் (ITBP- The Indo Tibetan Border Police) உயர்வு நாள் கொண்டாடப்படுகிறது?
A
அக்டோபர் 24
B
அக்டோபர் 22
C
அக்டோபர் 23
D
அக்டோபர் 25
Question 3 Explanation: 
இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) அதன் 55வது உயர்வு நாளை 2016 அக்டோபர் 24ம் தேதி கொண்டாடுகிறது. இந்தியாவின் ஐந்து மத்திய ஆயுத போலீஸ் படைகளில் ஒன்றான இது, 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 24-ம் நாள், CRPF சட்டத்தின் கீழ், 1962-ல் ஏற்பட்ட இந்திய-சீனப்போரை அடுத்து உருவாக்கப்பட்டது. ITBP- யானது, லடாக்கில் உள்ள காரகோரம் கணவாயில் இருந்து அருணாச்சல பிரதேச மாநிலத்தின் ஜசேப் லா வரை 3488 கிலோமீட்டர் எல்லையை பாதுகாக்கும் கடமையை செய்கிறது. மேலும்,இந்திய-சீன எல்லையின் மேற்கத்திய, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் 9000 அடி முதல் 18700 அடி உயரம் வரை பல்வேறு சாவடிகளில் ஆட்கள் எல்லைப்பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
Question 4
4. பின்வரும் எது FIFA 2018 உலக கோப்பையின் அதிகாரப்பூர்வமான சின்னம்(Mascot) ?
A
Zakumi
B
Willie
C
Zabivaka
D
Gauchito
Question 4 Explanation: 
2018 FIFA உலக கோப்பை, ரஷ்யாவில் 2018 ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை நடைபெறும். FIFA உறுப்பினர் நாடுகளின் ஆண்கள் அணிகள் பங்கேற்கும் இந்த சர்வதேச கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த போட்டியின் அதிகாரபூர்வ சின்னமாக "Zabivaka" அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய மொழியில் "Zabivaka" என்பதன் பொருள் “the one who scores” என்பதாகும். இந்த ஓநாய், வேடிக்கை, அழகு மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்த ஓநாய், நிகழ்வை ஊக்குவிப்பது மற்றும் அரங்குகளிலுள்ள கூட்டத்தை மகிழ்விப்பது மட்டுமில்லாமல், ரஷ்யாவின் ஒரு தூதராகவும், உலகளாவிய பிரபலமாகவும் மாறியுள்ளது.
Question 5
5. முதல் தேசிய பழங்குடியினர் திருவிழா பின்வரும் எந்த நகரங்களில் நடக்கவுள்ளது ?
A
புது தில்லி
B
பாட்னா
C
கவுகாத்தி
D
இட்டாநகர்
Question 5 Explanation: 
அக்டோபர் 25, 2016 அன்று தில்லியில் முதல் தேசிய பழங்குடியினர் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கவுள்ளார். இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் பழங்குடியினர் மத்தியில் ஒற்றுமை உணர்வை ஊக்குவிப்பது ஆகும். இத்திருவிழாவில் பழங்குடி கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை பெரிய அளவில் வெளிப்படுத்தி அதனை ஊக்குவிக்கவுள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1600 பழங்குடி கலைஞர்கள் மற்றும் 15000 பழங்குடி பிரதிநிதிகள் இத்திருவிழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Question 6
6. Mr. Asia 2016 பட்டம் வென்றவர் யார் ?
A
ரியான் ஜு
B
செந்தில் குமரன்
C
ஜி. பாலகிருஷ்ணா
D
மன்ஜீத் தக்ரான்
Question 6 Explanation: 
சமீபத்தில் பிலிப்பைன்ஸ்-ல் நடைபெற்ற 5th Phil-Asia உடற்பயிற்சி சாம்பியன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஜி. பாலகிருஷ்ணா Mr. Asia 2016 பட்டம் வென்றுள்ளார். இவர் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரில் உள்ள வரதூர் அருகில் உள்ள ராமகொண்டனஹள்ளியை சேர்ந்தவர்.
Question 7
7. உலகளாவிய  கல்விக்கடன் வாய்ப்பு குறித்த சர்வதேச ஆணைக்குழு (International Commission on Financing Global Education Opportunity) அறிக்கைபடி, பெண் கல்வியறிவில் இந்தியாவின் தரம் என்ன ?
A
51 வது
B
45 வது
C
38 வது
D
23 வது
Question 7 Explanation: 
நியூயார்க் சார்ந்த உலகளாவிய கல்விக்கடன் வாய்ப்பு குறித்த சர்வதேச ஆணைக்குழு (International Commission on Financing Global Education Opportunity) அறிக்கைபடி, பெண் கல்வியறிவில் வளரும் 51 நாடுகளில் இந்தியா 38வது இடம் வகிக்கிறது. இந்த புதிய தரவுகள் பெண் கல்வியில், அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் நேபாளம் ஆகியவற்றின் தரத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பள்ளி கல்வி முறை கீழ் நிலையில் இருப்பதை காட்டுகிறது.
Question 8
8. ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) உலக மேம்பாட்டு தகவல் நாள் (World Development Information Day) எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது ?
A
அக்டோபர் 23
B
அக்டோபர் 25
C
அக்டோபர் 24
D
அக்டோபர் 26
Question 8 Explanation: 
வளர்ச்சி குறித்த பிரச்சனைகள் மற்றும் அவற்றை தீர்க்க சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்துதல் ஆகியவை குறித்து உலக பொது மக்களின் கருத்தில் கவனம் செலுத்த ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் '(ஐ.நா.) உலக மேம்பாட்டு தகவல் நாள் அனுசரிக்கப்படுகிறது.
Question 9
9. “Dogs at the Perimeter” என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டுள்ளது ?
A
ஜோஹன்னா ஸ்கிப்ஸ்ருட்
B
வாஜ்டி மௌஅவாத்
C
மாடலின் தீயின்
D
டெபோரா லெவி
Question 9 Explanation: 
“Dogs at the Perimeter” என்ற புத்தகம் மாடலின் தீயின் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. இது கம்போடிய இனப்படுகொலை பற்றியதாகும். கம்போடிய இனப்படுகொலை, வரலாறு போன்று சக்திவாய்ந்த, மந்திர ஒளி போல பிரகாசிக்கும் நவீன வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகும்.
Question 10
10. உலக அமைதி கல்விக்கான சர்வதேச அமைப்பின் 2016 உலக காங்கிரஸ் மாநாட்டை எந்த நாடு நடத்துகிறது   (World Congress of International Association of Educators for World Peace (IAEWP)) ?
A
இந்தியா
B
அமெரிக்கா
C
ரஷ்யா
D
ஐக்கிய ராஜ்யம்
Question 10 Explanation: 
மகாராஷ்டிரா ஆளுநர் சி வித்யாசாகர் ராவ், உலக அமைதி கல்விக்கான சர்வதேச அமைப்பின் 19வது உலக காங்கிரஸ் மாநாட்டை(19th World Congress of International Association of Educators for World Peace (IAEWP)) மகாராஷ்டிராவின் நாசிக்கில் அக்டோபர் 24 அன்று “Peace Education for Good Governance and Nonviolence” என்ற தலைப்பில் துவக்கி வைத்தார். இந்த 3 நாள் மாநாட்டை, உலக அமைதி கல்விக்கான சர்வதேச அமைப்பும் (IAEWP), ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக சபை எனும் அரசு சாரா நிறுவனம் (United Nations Economic and Social Council (ECOSOC)) நகரம் சார்ந்த கோகலே கல்வி அமைப்புடன் (GES) இணைந்து நடத்துகிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!