Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 26th and 27th September 2016

Tnpsc Tamil Current Affairs 26th and 27th September 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 26th and 27th September 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1.  சமீபத்தில் மறைந்த கே.மாதவன் என்பவர் எந்த துறையுடன் தொடர்புடையவர் ?
A
கடல் விஞ்ஞானி
B
விளையாட்டு வீரர்
C
சுதந்திர போராட்ட வீரர்
D
பத்திரிகையாளர்
Question 1 Explanation: 
சுதந்திர போராட்ட வீரர் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவரான கே மாதவன் (101), சமீபத்தில் கேரளாவின் கண்ஹங்காத்தில் காலமானார். இவர் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார் மற்றும் காந்திய, கம்யூனிஸ்ட் கொள்கைகளை கடைபிடித்தார் மேலும் அதனை வெளிப்படுத்தும் சகாப்த முயற்சியாக, 1931-ஆம் ஆண்டு குருவாயூரில், அனைத்து சாதி மக்களும் கோவிலில் நுழைய அனுமதிக்க வேண்டி சத்யாகிரகம் ஒன்றை நடத்தினார். இவரது சுய சரிதையான 'Payaswiniyude Theerangalil (பயஸ்வினி நதிக்கரையில்) ', நவீன கேரள வரலாற்றில் உருமாற்றும் (transformative epoch) சகாப்தத்தின் ஒரு மதிப்புமிக்க ஆவணமாக கருதப்படுகிறது.
Question 2
2. 2016 உலக சுற்றுலா தினத்தின்(The World Tourism Day (WTD) கருப்பொருள்(Theme) என்ன ?
A
One billion tourists, one billion opportunities
B
Tourism and Community Development
C
Tourism for all – promoting universal accessibility
D
Tourism and Water: Protecting our Common Future
Question 2 Explanation: 
சர்வதேச சமூகத்தின் மத்தியில் சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ம் தேதி உலக சுற்றுலா தினம் அனுசரிக்கப்படுகிறது. 2016-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "Tourism for all – promoting universal accessibility" ஆகும்.
Question 3
3. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த, இந்திய- சீன உயர் நிலை பேச்சுவார்த்தையின்(India-China High Level Dialogue) முதல் கூட்டம் எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது ?
A
புது தில்லி
B
ஷாங்காய்
C
பெய்ஜிங்
D
மும்பை
Question 3 Explanation: 
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த, இந்திய- சீன உயர் நிலை பேச்சுவார்த்தையின்(India-China High Level Dialogue) முதல் கூட்டம் சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் நடைபெறவுள்ளது. இதன் நோக்கம், பாதுகாப்பை அதிகரித்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைப்பை வழங்குதல் ஆகும். இப்பேச்சுவார்த்தைக்கு, இணை உளவு குழுவின் தலைவர் ஆர் என் ரவி மற்றும் சீனாவின் மத்திய அரசியல் மற்றும் சட்ட விவகார செயலாளர் Wang Yongqing ஆகியோர் துணை தலைமை வகித்தனர்.
Question 4
4. சத்யன் ஞானசேகரன் என்பவர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
டென்னிஸ்
B
கிரிக்கெட்
C
செஸ்
D
பூப்பந்து
Question 4 Explanation: 
சென்னையை சேர்ந்த டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரன், பெல்ஜியத்தின் டி-ஹான்னில் நடைபெற்ற பெல்ஜியம் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், Nuytinck Cedric-வை 15-13, 11-6, 11-2, 17-15 என்ற கணக்கில் தோற்கடித்து பட்டம் வென்றார். இவ்வெற்றியின் மூலம், ITTF போட்டியில் வெற்றி பெறும் 2வது இந்திய டென்னிஸ் வீரர் என்ற பெருமையை பெறுகிறார். ITTF போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் அச்சன்தா சரத் கமல் ஆவார்.அச்சன்தா 2012 ITTF போட்டியில் வெற்றி பெற்றார்.
Question 5
5.  தேசிய பாதுகாப்புப் படையின் (NSG - National Security Guard) புதிய இயக்குனர் ஜெனரலாக(Director General) நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A
நிர்மல் குமார்
B
ஓ பி சிங்
C
ஆர் கே பச்நந்தா
D
சுதிர் பிரதாப் சிங்
Question 5 Explanation: 
தேசிய பாதுகாப்புப் படையின், பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் இயக்குனர் ஜெனரலாக சுதிர் பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
Question 6
6. தேசிய பேரிடர் மீட்பு படையின்(National Disaster Response Force ) புதிய இயக்குனர் ஜெனரலாக  நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A
அமன் கபூர்
B
ஆர்.கே. பச்னந்தா
C
ஆர்.கே. கினி
D
பி சி தாகூர்
Question 6 Explanation: 
1983-ஆம் ஆண்டு தொகுதியின்(Batch),மேற்கு வங்க IPS அதிகாரியான, ஆர்.கே. பச்னந்தா தேசிய பேரிடர் மீட்பு படையின் புதிய இயக்குனர் ஜெனரலாக (NDRF) நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர், மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் (Central Industrial Security Force - CISF) துணை இயக்குனர் ஜெனரலாக பணிபுரிகிறார்.
Question 7
7. எந்த இந்திய அரசு சாரா நிறுவனம்(NGO), முதலாவது FIFA Diversity Award-2016-யை அள்ளிச்சென்றது ?
A
Smile foundation
B
Slum Soccer
C
Help age India
D
Goonj
Question 7 Explanation: 
Slum Soccer எனும் இந்திய அரசு சாரா நிறுவனம்(NGO), இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்ற SoccerEx உலகளாவிய மாநாட்டில் முதலாவது FIFA Diversity 2016 விருதை பெற்றது. கால்பந்து விளையாட்டில் உள்ள பாகுபாடு மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிக்க போராடும் ஒட்டுமொத்த வியூகத்தின் ஓரு பகுதியாக FIFA உள்ளது. அனைத்து மக்களின் மத்தியில் பன்முகத்தன்மை ,ஒற்றுமை, சமத்துவம் ஆகியவற்றை பரப்ப துணை நிற்கும் சிறந்த நிறுவனங்கள், சிறு குழுக்கள், கால்பந்து பிரபலங்களை அங்கீகரிப்பதற்காக FIFA-ஆல் உருவாக்கப்பட்டதே இந்த விருது. இந்தியாவில் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, ஓரங்கட்டப்பட்ட மக்களை மேம்படுத்த,வாழ்க்கை திறன்களை கற்றுத்தர, தனி நபர்களை இணைக்க கால்பந்தை ஒரு பாலமாக Slum Soccer பயன்படுத்தியது.
Question 8
8. “Driven: The Virat Kohli Story” என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது ?
A
அனில் குப்தா
B
ராவ் மைதிலி
C
ஆயாஸ் மேமன்
D
விஜய் லோகபாலி
Question 8 Explanation: 
“Driven: The Virat Kohli Story” புத்தகத்தை விளையாட்டு பத்திரிகையாளர் விஜய் லோகபாலி எழுதியுள்ளார். இவ்வளவு துரிதமாக விராத் கோலி எவ்வாறு சர்வதேச நட்சத்திர அந்தஸ்து பெற்றார் என்று அவரது சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மூலம் அறியப்பட்ட தகவல்களின் மூலம் எழுதப்பட்ட கதையே இப்புத்தகம் ஆகும்.
Question 9
9. 2016 ஆசிய பீச் விளையாட்டுப் போட்டியில்(2016 Asian Beach Games) வெள்ளி வென்ற ஹரீஷ் பாகெல் எந்த  விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
மியோ தாய்(Muay Thai)
B
குராஷ்(Kurash)
C
செபக் டாக்ரா(Sepaktakraw)
D
ஜியூ ஜிட்சூ (Ju-Jitsu)
Question 9 Explanation: 
வியட்நாமின் டனாங்கில் நடைபெற்ற 2016 ஆசிய பீச் விளையாட்டுப்போட்டியின் 5வது பதிப்பில், ஆண்கள் மிடில்வெயிட் மியோ தாய் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஹரீஷ் பாகெல் வெள்ளி பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் 71-75 கிலோ பிரிவில் சீனாவின் சாங் யோன்காங்கிடம் இவர் தோற்று வெள்ளி வென்றார். தாய்லாந்தில் உருவான மியோ தாய் எனும் குத்துச்சண்டையும் தற்காப்புக்கலையும் கலந்த இது தென் கிழக்கு ஆசியாவில் ஒரு பிரபலமான போர் விளையாட்டாக இருக்கிறது.
Question 10
10. அண்மையில் Megi எனும் சக்தி வாய்ந்த சூறாவளி எந்த நாட்டை  தாக்கியது ?
A
இந்தோனேஷியா
B
வியட்நாம்
C
மலேஷியா
D
தைவான்
Question 10 Explanation: 
Megi எனும் சக்தி வாய்ந்த சூறாவளி, மணிக்கு 230 கி.மீ காற்று வேகத்துடன் சமீபத்தில் தீவு நாடான தைவானை தாக்கியது. இதனால் ஏற்பட்ட பலத்த மழை, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது . இது 4 வெப்ப மண்டல சூறாவளிக்கு சமமாக உள்ளது. அறிக்கையின்படி, இலான் பகுதியில் பெய்த 38 அங்குல மழையால் சுமார் 2,700,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருக்கிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!