Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 26th October 2016

Tnpsc Tamil Current Affairs 26th October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 26th October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. 2016 ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு பெற்றவர் யார் ?
A
சாம் லிப்சைட்
B
அமண்டா ஃபோர்மேன்
C
பால் பீட்டி
D
மார்லன் ஜேம்ஸ்
Question 1 Explanation: 
லண்டனின் கில்ட்ஹாலில் நடைபெற்ற விழாவில், பால் பீட்டி எழுதிய ‘The Sellout’ என்ற இன நையாண்டி நூலுக்காக அவருக்கு 2016 ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், மேன் புக்கர் பரிசு வென்ற முதல் அமெரிக்க எழுத்தாளர் என்ற பெருமையை இவர் அடைகிறார். இந்த நாவல் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர் பகுதியில் அடிமைத்தனம் மற்றும் இன வேற்றுமையை மறுபடியும் கொண்டுவர முயற்சிக்கும் ஒரு இளம் கருப்பு மனிதனின் கதை. இது அமெரிக்காவில் அரசியலமைப்பு, நகர்ப்புற வாழ்க்கை, சிவில் உரிமைகள் இயக்கம், தந்தை-மகன் உறவு பற்றிய நையாண்டி மற்றும் இன சமத்துவத்தின் புனித புத்தகம் ஆகும். புக்கர் பரிசு ஒரு இலக்கிய பரிசு, ஆங்கில மொழியில் எழுதப்பட்டு மற்றும் இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட சிறந்த சொந்த(Original) நாவலுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த பரிசு வழங்கப்படுகிறது.
Question 2
2. எந்த மாநில அரசு, புதுமையான நிதி சேவைகளை மேம்படுத்துவதற்கு சிங்கப்பூர் நிதி ஆணையத்துடன் (Monetary Authority of Singapore) கைகோர்த்திருக்கிறது ?
A
கர்நாடகா
B
கேரளா
C
ஒடிசா
D
ஆந்திரப் பிரதேசம்
Question 2 Explanation: 
ஆந்திர மாநில அரசு புதுமையான நிதி சேவைகளை மேம்படுத்துவதற்காக FinTech ஒத்துழைப்பை சிங்கப்பூர் நிதி ஆணையத்துடன் (Monetary Authority of Singapore) கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், MAS மற்றும் ஆந்திர மாநில அரசு, டிஜிட்டல் பணபரிமாற்றம் மற்றும் blockchain போன்ற தொழில்நுட்ப திட்டங்களில் கூட்டிணைந்து ஆராய உள்ளது மற்றும் FinTech கல்வித்திட்டங்களின் வளர்ச்சிக்கு ஒத்துழைத்து செயல்படவுள்ளது. மேலும் இவ்விருவரும், புதுமையான நிதி சேவைகளில் உள்ள ஒழுங்குமுறை பிரச்சினைகளில் வளர்ந்துவரும் FinTech trends மற்றும் கருத்துகளை பரிமாற்றம் செய்வதாகவும் ஒப்புக்கொண்டனர்.
Question 3
3. 2016 உலக பொருளாதார சம்மேளனத்தின்(WEF) உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியாவின் தரம் என்ன ?
A
55 வது
B
87 வது
C
135 வது
D
105 வது
Question 3 Explanation: 
2016 உலக பொருளாதார சம்மேளனத்தின்(WEF) உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் 144 நாடுகளில் 87வது இடத்தில் இந்தியா உள்ளது. 2015 ஆம் ஆண்டு 108 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது முன்னேறியுள்ளது. பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்திலும் அதனை தொடர்ந்து பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் மற்றும் ருவாண்டா உள்ளது. கல்வியறிவு, சுகாதாரம் மற்றும் உயிர், பொருளாதார வாய்ப்பு மற்றும் அரசியல் அங்கீகாரம் ஆகிய நான்கு பகுதிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்குவதில் உள்ள முன்னேற்றத்தை ஆண்டிற்கு ஒரு முறை திறனளவிடும் கருவியே உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை ஆகும்.
Question 4
4. “The Bangle Seller” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் ?
A
மாயா கல்யாண்பூர்
B
அனில் குமார்
C
எம் கே மணி
D
பிரிஜேஷ் குலாத்தி
Question 4 Explanation: 
“The Bangle Seller” என்ற புத்தகம் மாயா கல்யாண்பூர் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. இது, பண்டைய மரபு மற்றும் உலகமயமாக்கப்பட்ட உலகின் வளர்ச்சிக்கு இடைப்பட்ட இந்தியாவின் மாற்றத்தை அடுத்தடுத்து படம் பிடித்து காட்டும் ஒரு கதை. எளிய வார்த்தைகளில் சொன்னால், இந்தகதை பயணம், காதல், பாரம்பரியம் மற்றும் இந்திய கலாச்சாரம் பற்றி கலைநயத்துடன் நெய்யப்பட்ட திரை சீலை ஆகும்.
Question 5
5. சமீபத்தில் மறைந்த ஜுங்கோ தபெய்(Junko Tabei), எந்த நாட்டின் நன்கு அறியப்பட்ட மலையேறும் வீராங்கனை ?
A
ஜப்பான்
B
சீனா
C
நேபாளம்
D
மலேஷியா
Question 5 Explanation: 
உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் பெண்ணான ஜுங்கோ தபெய்(77), சமீபத்தில் ஜப்பானின் டோக்கியோவில் மறைந்தார். இவர் 1975-ம் ஆண்டு மவுண்ட் எவரெஸ்ட்டின் உச்சியை அடைந்தார். 1992-ல் ஏழு மலைகளின் உயரத்தையும் அடைந்த முதல் பெண் என்ற பெருமையை இவர் அடைந்தார் அல்லது ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளின் உச்சியை அடைந்த முதல் பெண் என்றும் இவரை கூறலாம்.
Question 6
6. பின்வரும் எந்த பெரிய தொழில்நுட்ப நிறுவனம் அதன் சைபர்பாதுகாப்பு மையத்தை(Cybersecurity Engagement Center) இந்தியாவில் நிறுவியுள்ளது ?
A
இன்ஃபோசிஸ்
B
விப்ரோ
C
ரிலையன்ஸ்
D
மைக்ரோசாப்ட்
Question 6 Explanation: 
மைக்ரோசாப்ட் இந்தியா அதன் முதல் முழு அளவிலான சைபர்பாதுகாப்பு மையத்தை(Cybersecurity Engagement Center) புதுதில்லியில் துவங்கியுள்ளது, இதுபோன்ற மையத்தை இந்தியாவில் இந்நிறுவனம் அமைப்பது இதுவே முதல்முறை. இது உலகளவில் மைக்ரோசாப்ட் அமைக்கும் 7வது சைபர்பாதுகாப்பு மையம் மற்றும் இது நிறுவனத்தின் ரெட்மாண்ட் டிஜிட்டல் குற்றங்கள் பிரிவின் ஒரு செயற்கைக்கோளாக செயல்படும். CSEC ஆனது, அரசாங்க மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடனான சைபர்பாதுகாப்பு ஒன்றிணைப்பில் மைக்ரோசாப்ட்டின் திறமைகளை வெளிக்கொணர ஊக்குவிக்கிறது. மேலும் இம்மையம், இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்திற்காக ஒரு நம்பகமான மற்றும் பாதுகாப்பான கம்ப்யூட்டிங் சூழலையும் உருவாக்க உள்ளது.
Question 7
7. பின்வரும் யாருக்கு 2016 ஐரோப்பிய கோல்டன் பாய் விருதுக்கு வழங்கப்பட்டுள்ளது ?
A
ரஹீம் ஸ்டெர்லிங்
B
அந்தோணி மார்டியல்
C
ரெனாடோ சன்சேஸ்
D
மார்கஸ் ராஷ்போர்ட்
Question 7 Explanation: 
ஜெர்மன் கிளப் பேயர்ன் முனிச் அணியின் மிட்ஃபீல்டர் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணிக்காக விளையாடும் போர்த்துகீசிய தொழில்முறை கால்பந்து வீரர் ரெனாடோ சன்சேஸ் 2016 ஐரோப்பிய கோல்டன் பாய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோல்டன் பாய் விருது, ஐரோப்பாவில் ஒரு காலண்டர் ஆண்டில் மிகவும் சுவாரசியமாக விளையாடியதாக அறியப்படும் இளம் கால்பந்து வீரருக்கு விளையாட்டு பத்திரிகையாளர்கள் மூலம் வழங்கப்படும் விருது ஆகும்.
Question 8
8. சிறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு அங்கீகாரம் அளிக்க “Biotech-KISAN scheme” எனும் திட்டம் தொடங்கப்பட்டது. "KISAN" என்பதன் விரிவாக்கம் என்ன ?
A
Krishi Innovation Scientific Application Network
B
Krishi Innovation Skill Application Network
C
Krishi Innovation Science Application Network
D
Krishi Innovation Sector Application Network
Question 8 Explanation: 
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், சிறு மற்றும் பெண் விவசாயிகளை அங்கீகரிக்கும் விதமாக Biotech-KISAN (Krishi Innovation Science Application Network) என்ற முன்னெடுப்பு திட்டத்தை புது தில்லியில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ்,விவசாய நடைமுறை குறித்து பெண் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் கல்வியளிக்க கூட்டுறவு(Fellowship) வழங்கப்படும். இந்த முன்னெடுப்பின் நோக்கம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் நிறுவனங்களை இணைத்தல் ஆகும். மேலும் இத்திட்டம் சிறு விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதையும் குறிக்கோளாக கொண்டுள்ளது. உள்ளூர் விவசாயிகளின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு புதிய தொழில்நுட்பத்தினை இணைக்கும் நோக்கத்துடன் இந்தியா முழுவதும் 15 வேளாண்கால மண்டலங்களில் இந்த திட்டம் படிப்படியாக நடைமுறைபடுத்தப்படும்.
Question 9
9. அண்மையில் மறைந்த கார்லோஸ் ஆல்பர்டோ(Carlos Alberto), எந்த நாட்டின் பழம்பெரும் கால்பந்தாட்ட
வீரர் ?
A
ஜெர்மனி
B
பிரேசில்
C
இத்தாலி
D
பிரான்ஸ்
Question 9 Explanation: 
உலக கோப்பை வென்ற பிரேசிலிய முன்னாள் கால்பந்து கேப்டன் கார்லோஸ் ஆல்பர்டோ சமீபத்தில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் காலமானார். 1970 ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் இத்தாலிக்கு எதிராக நடந்த இறுதிபோட்டியில் பிரேசில் கேப்டனாக இருந்தபோது இவர் அடித்த கோல், FIFA உலக கோப்பை வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த கோலாக கருதப்படுகிறது. Fluminense, Santos, Flamengo மற்றும் Cosmos-க்காக விளையாடிய இவர் மிகச்சிறந்த பாதுகாப்பாளர் மற்றும் இவரின் தலைமைப்பண்பின் காரணமாக இவர் ‘The Captain’ என்ற பட்டப்பெயரை பெற்றார்.
Question 10
10. உலக வங்கி வெளியிட்ட 2017 ஆம் ஆண்டிற்கான சுலபமாக தொழில் புரியும் குறியீட்டில்(Ease of doing business index) இந்தியாவின் தரம் என்ன ?
A
130 வது
B
155 வது
C
117 வது
D
88 வது
Question 10 Explanation: 
உலக வங்கி வெளியிட்ட 2017 ஆம் ஆண்டிற்கான சுலபமாக தொழில் புரியும் குறியீட்டில்(Ease of doing business index) 190 நாடுகளில் இந்தியா 130வது இடம் வகிக்கிறது. இப்பட்டியலில் நியூசிலாந்து முதலிடம் வகிக்கிறது அதனை தொடர்ந்து சிங்கப்பூர், டென்மார்க், ஹாங்காங், தென் கொரியா, நார்வே, பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடன் மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய மாசிடோனியா குடியரசு உள்ளது. சமீபத்திய பதிப்பின் ‘Doing Business 2017' அறிக்கையானது, நாடுகளில் வணிக செயல்பாட்டை அதிகரிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறைகளை ஆராய்ந்து, வணிகத்தில் அவர்களின் ஒழுங்குமுறைகளினால் ஏற்படும் தாக்கத்திற்கு ஏற்ப தரம் வழங்குகிறது. இந்த தரம் பின்வரும் 10 மதிப்பீடுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அவை: தொழில் தொடங்குதல், கட்டுமான அனுமதிகளை கையாள்வது, மின்சாரம் பெறுவது, சொத்துகளை பதிவு செய்தல், கடன் பெறுதல், சிறு முதலீட்டாளர்களை பாதுகாத்தல், வரி செலுத்துதல், எல்லை கடந்து வாணிபம் செய்தல், ஒப்பந்தங்களை செயலாக்குதல் மற்றும் தீர்வு காணமுடியாதவற்றை தீர்த்து வைத்தல் ஆகியன.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!