Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 27th and 28th October 2016

Tnpsc Tamil Current Affairs 27th and 28th October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 27th and 28th October 2016.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
1. பின்வரும் எந்த நீதித்துறை குழு One Rank One Pension (OROP) குறித்த தனது அறிக்கையை பாதுகாப்பு அமைச்சக்கத்திடம் சமர்ப்பித்துள்ளது ?
A
எச் தேவராஜ் குழு
B
ராமானுஜம் குழு
C
பேராசிரியர். என்.ஆர் மாதவா குழு
D
எல் நரசிம்ம ரெட்டி குழு
Question 1 Explanation: 
ஒரு நபரை கொண்ட நீதித்துறை குழு One Rank One Pension (OROP) குறித்த தனது அறிக்கையை பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் சமர்பித்துள்ளது. மத்திய அரசு, பாட்னா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எல் நரசிம்ம ரெட்டி தலைமையில், OROP திட்டத்தை செயல்படுத்தும் போது எழும் முரண்பாடுகளை அறிய குழு ஒன்றை அமைத்தது.
Question 2
2. பின்வரும் யார், அமலாக்கப் பிரிவின் இயக்குநராக(Director of Enforcement Directorate(ED)) நியமிக்கப்பட்டுள்ளார் ?
A
மகேந்திர வர்மா
B
கர்னல் சிங்
C
பிமல் கவுதம்
D
விவேக் டெப்ராய்
Question 2 Explanation: 
1984 ஆம் ஆண்டு தொகுதியின்(Batch) யூனியன் பிரதேச IPS கேடராக நியமிக்கப்பட்ட கர்னல் சிங், அமலாக்கப் பிரிவின் புதிய இயக்குநராக(Director of Enforcement Directorate(ED)) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2017 ஆகஸ்ட் 31 வரை இப்பதவியில் இருப்பார். இப்பதவிக்கு முன்னர், ஒரு வருடத்திற்கும் மேலாக ED-யின் இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகித்தார். இதற்கு முன் அமலாக்க பிரிவின் இயக்குநராக இருந்த ராஜன் எஸ் கடோச்சின் பதவிக்காலத்தை அரசு குறைத்ததால் இப்பதவி காலியாக இருந்தது. பொருளாதார அமலாக்க இயக்குநரகம் என்பது ஒரு பொருளாதார புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க நிறுவனம், இது இந்தியாவில் பொருளாதார குற்றங்களுக்கு எதிராக போராடுதல் மற்றும் பொருளாதார சட்டங்களை அமல்படுத்துதல் ஆகியவற்றிற்கு பொறுப்புடையதாகும்.
Question 3
3. உலகளாவிய மொபைல் அமைப்பு சங்கத்தின் (Global System Mobile Association - GSMA) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A
அசிம் பிரேம்ஜி
B
சுனில் மிட்டல்
C
திலிப் சங்வி
D
முகேஷ் அம்பானி
Question 3 Explanation: 
பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் மிட்டல் உலகளாவிய தொலைத்தொடர்பு அமைப்பான GSMA-யின் புதிய தலைவராக ஜனவரி 2017-ல் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போதைய தலைவரான ஜான் ஃபிரடெரிக் பாக்சாஸ்-ன் இடத்தை நிரப்புகிறார். சுனில் மிட்டல், GSMA-வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்தியர், உலகின் சுமார் 800 மொபைல் ஆபரேட்டர்கள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பரந்த மொபைல் நிறுவனங்களின் சுற்றுச்சூழலை பிரதிநிதித்துவபடுத்தும் GSMA-யின் மூலோபாய திசைகளை (strategic direction) இவர் மேற்பார்வையிடுவார்.
Question 4
4. 2016 உலக பாரம்பரிய கேட்பொலிக் காட்சி( World Day for Audio Visual Heritage) தினத்தின் மையக்கரு என்ன ?
A
Teach & Protect Your Story
B
Archives at Risk: Protecting the World’s Identities
C
Making World Audio Visual Heritage
D
It’s your story – don’t lose it
Question 4 Explanation: 
தேசிய அடையாளத்தின் ஒருங்கிணைந்த பகுதியான கேட்பொலிக் காட்சி ஆவணங்களின் முக்கியத்துவத்தை உணர்தல் மற்றும் அது குறித்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் தேவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 27-ம் நாள் உலக பாரம்பரிய கேட்பொலிக் காட்சி( World Day for Audio Visual Heritage) தினம் அனுசரிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டிற்கான மையக்கரு "It’s your story – don’t lose it " என்பதாகும். இந்நாளின் நோக்கம் படங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற ஆடியோ ஆவணங்களின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதாகும்.
Question 5
5. எந்த குழு பறவை காய்ச்சல் நிலைமையை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டிருக்கிறது ?
A
ஜி என் பாஜ்பாய் குழு
B
முனியலப்பா குழு
C
கே.வி. காமத் குழு
D
ஆனந்த் மாஷேல்கர் குழு
Question 5 Explanation: 
பறவை காய்ச்சல் நிலைமையை கண்காணிக்க மற்றும் பறவை காய்ச்சல் (H5N8) பரவுவதை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் அவர்களுக்கு உதவ மத்திய வேளாண் அமைச்சகம் டாக்டர் முனியலப்பா குழுவை அமைத்துள்ளது. டாக்டர் முனியலப்பா, கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்பிடி துறையின் (DADF) இணை ஆணையராக உள்ளார். இக்குழுவில், சுகாதார அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் , விவசாய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க துறை (DARE) மற்றும் தில்லி அரசு ஆகிய துறைகளை சேர்ந்தவர்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். இது தவிர, இந்த அமைச்சகம் 011-23384190 மற்றும் 09448324121 என்ற எண்களில் ஒரு கட்டுப்பாட்டு அறையையும் நிறுவியுள்ளது.
Question 6
6. பின்வரும் எந்த பிரமுகர்கள், சிந்தனை சுதந்திரத்திற்காக  2016 Sakharov பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர் ?
A
ஜாபர் பனாஹி மற்றும் நஸ்ரீன் சோதௌடெஹ்
B
ரைப் படாவி மற்றும் மலாலா யூசுப்சாய்
C
நாடியா முராத் மற்றும் லமியா அஜி பாஷா
D
ஹூ ஜியா மற்றும் ஸாலிஹ் மஹ்மூத் ஒஸ்மான்
Question 6 Explanation: 
நாடியா முராத் மற்றும் லமியா அஜி பாஷா ஆகிய இருவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புமிக்க மனித உரிமை விருதான 2016 Sakharov விருதை சிந்தனை சுதந்திரத்திற்காக பெற்றனர். இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் பாலியல் அடிமைகளாக இருந்து தப்பிப் பிழைத்த இவர்கள் இருவரும், பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான பெண் பேச்சாளர்களாக உள்ளனர். ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் இனப்படுகொலை மேற்கொண்ட சிறுபான்மை இனமான Yazidi சமூகத்தின் பொது ஆதரவாளர்களாகவும் இவர்கள் உள்ளனர். 2016 டிசம்பர் 14ம் தேதி பிரான்சின் ஸ்ட்ராஸ்பார்க்கில் நடைபெறும் ஒரு விழாவில் இவர்களுக்கு Sakharov விருது வழங்கப்பட உள்ளது. சிந்தனை சுதந்திரத்திற்கான Sakharov ஆண்டு விருது 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சோவியத் இயற்பியலாளர் மற்றும் கள்ளங்கபடமற்ற போராட்டக்காரர் ஆண்ட்ரி Sakharov-வின் நினைவாக அவர் பெயரில் இப்பரிசு வழங்கப்படுகிறது மேலும் இவ்விருது உலகம் முழுவதும் மனித உரிமைகளின் போராட்டத்திற்கு அளப்பற்ற பங்களிப்பு செய்த தனி நபர்களுக்கு வழங்கப்படும்.
Question 7
7. இந்தியாவில் முதல் தேசிய ஆயுர்வேத நாள் பின்வரும் எந்த மையக்கருவில் கொண்டாடப்பட்டது ?
A
Ayurveda: Cure and Protect Our Lives
B
Live happily with Ayurveda
C
Ayurveda for Prevention and Control of Diabetes
D
Mission Madhumeha through Ayurveda
Question 7 Explanation: 
மக்களின் உடல்நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அக்டோபர் 28-ம் தேதி “Ayurveda for Prevention and Control of Diabetes” என்ற தலைப்பில் முதல் தேசிய ஆயுர்வேத நாள் கொண்டாடப்பட்டது. மேலும் AYUSH அமைச்சகம் “Mission Madhumeha through Ayurveda” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது, இது ஆயுர்வேதம் மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்தும் நெறிமுறையாகும். விரைவில் இந்தியா முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் தன்வந்திரி ஜெயந்தி விழாவில் தேசிய ஆயுர்வேத நாள் கொண்டாடப்படும் என பிரகடனம் செய்துள்ளது.
Question 8
8. அண்டார்டிகாவின் எந்த கடல், உலகின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட கடற்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது ?
A
காஸ்பியன் கடல்
B
கருங்கடல்
C
ராஸ் கடல்
D
சாக்கடல்
Question 8 Explanation: 
ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட்டில் நடைபெற்ற Conservation of Antarctic Marine Living Resources (CCAMLR) கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் மற்றும் 24 நாடுகளுக்கிடையேயான சர்வதேச ஒப்பந்தத்தை அடுத்து, அண்டார்டிக்காவின் ராஸ் கடல் உலகின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட கடற்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டது. உலகில் பழுதுபடாத சுற்றுச்சூழல் கொண்ட கடற்பகுதிகளில் ஒன்றாக ராஸ் கடல் 1.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் பகுதியை தன்னகத்தே கொண்டுள்ளது. இது பெங்குவின், நீர் நாய் , அண்டார்டிக் மீன் மற்றும் திமிங்கலங்களின் தாயகமாக உள்ளது.
Question 9
9. சமீபத்தில் மறைந்த ராஜ் பேகம், எந்த மாநிலத்தின் பழம்பெரும் பாடகி ?
A
உத்தரப் பிரதேசம்
B
தெலுங்கானா
C
ஆந்திரப் பிரதேசம்
D
ஜம்மு காஷ்மீர்
Question 9 Explanation: 
பழம்பெரும் காஷ்மீரி பாடகி மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற ராஜ் பேகம் (89) சமீபத்தில் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் காலமானார். இவரின் கவர்ந்திழுக்கும் குரல், காஷ்மீரி இசை பிரியர்களிடையேயே பல தலைமுறைகளாக ஆதிக்கம் செய்து வந்தது. மேலும் "காஷ்மீர் நைட்டிங்கேல்" என்று இவர் அழைக்கப்படுகிறார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் மிகவும் அறியப்பட்ட பெண் பாடகிகளில் ஒருவராக இவர் இருக்கிறார். ஸ்ரீநகரின் ரேடியோ காஷ்மீர், இந்தியாவின் மற்ற இடங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நேரடி இசைக் கச்சேரிகள் மூலம் ஆயிரக்கணக்கான பாடல்களை வழங்கியுள்ளார்.
Question 10
10. “Family Life” என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டுள்ளது ?
A
சாந்தனு குஹா
B
அகில் ஷர்மா
C
அம்ரிஷ் திரிபாதி
D
முருனல் ஜெயின்
Question 10 Explanation: 
இந்தியராக பிறந்த அமெரிக்கா எழுத்தாளர் அகில் ஷர்மா “Family Life” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். ஆசிரியர், குழந்தையாக இருக்கும்போது இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறும் தனது சொந்த அனுபவத்தின் பிரதிபலிப்பாக இந்த நாவல் உள்ளது. இவரின் “Family Life” என்ற நாவலுக்கு இவருக்கு 2016 சர்வதேச டப்ளின் இலக்கிய விருது வழங்கப்பட்டது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!