Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 29th, 30th and 31st October 2016

Tnpsc Tamil Current Affairs 29th 30th and 31st October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 29th 30th and 31st October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. உலக வங்கியின் (WB) தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்ட கிரிஸ்டாலினா ஜியார்ஜீவா(Kristalina Georgieva), எந்த நாட்டை சேர்ந்தவர் ?
A
இஸ்ரேல்
B
ஜெர்மனி
C
பிரான்ஸ்
D
பல்கேரியா
Question 1 Explanation: 
ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான முன்னாள் தலைவர் கிரிஸ்டாலினா ஜியார்ஜீவா(Kristalina Georgieva), உலக வங்கியின் (WB) தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனவரி 2017-ல் இருந்து ஸ்ரீ முல்யானி இந்திராவதியின் இடத்தை நிரப்புவார். ஜியார்ஜீவா, பல்கேரிய பொருளாதார வல்லுநர் மற்றும் நிர்வாகி, இவர் தற்போது ஐரோப்பிய ஆணையத்தில் பட்ஜெட் மற்றும் மனித வள துறையின் துணை தலைவராக உள்ளார்.
Question 2
2. பின்தங்கிய பிரிவினருக்கு சட்ட உதவி வழங்க "Madhubabu Aain Sahayata Shivir (MASS)" என்ற திட்டத்தை எந்த  மாநில அரசு தொடங்கியுள்ளது ?
A
திரிபுரா
B
தமிழ்நாடு
C
ஒடிசா
D
அசாம்
Question 2 Explanation: 
ஒடிஷா அரசு, அம்மாநிலத்தின் அனைத்து 6812 கிராம பஞ்சாயத்துகளிலும் அடிமட்ட அளவில் உள்ள சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு சட்ட உதவி வழங்க "Madhubabu Aain Sahayata Shivir (MASS)" என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. ஒரிசாவின் முதல் வழக்கறிஞராக கருதப்படும் மது பாபுவின் பெயரையே இந்த திட்டத்திற்கு சூட்டியுள்ளனர். நீதியை காக்கும் பொருட்டு, பொருளாதாரம் மற்றும் இன்ன பிற காரணங்களுக்காக எந்த ஒரு குடிமகனுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த இலவச சட்ட உதவியானது வழங்கப்படும். சட்ட உதவி வக்கீல், ஒவ்வொரு வழக்கிற்கும் அரசிடம் ஊதியமாக ரூ.500 பெறுவார், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய எஸ்சி, எஸ்டி மக்களின் நீண்டகால நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்த்துவைக்க இவர் உதவுவார்.
Question 3
3.  2016 உலகளாவிய இளைஞர் வளர்ச்சி குறியீட்டில் (Youth Development Index - YDI) இந்தியாவின் தரம் என்ன ?
A
112 வது
B
133 வது
C
98 வது
D
130 வது
Question 3 Explanation: 
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், குடிமை மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் ஒரு நாடு வழங்கியுள்ள வாய்ப்புவளங்களின் அடிப்படையில் காமன்வெல்த் செயலகம் தொகுத்துள்ள 2016 உலகளாவிய இளைஞர் வளர்ச்சி குறியீட்டில் (Youth Development Index - YDI) 183 நாடுகளில் 133வது நாடாக இந்தியா உள்ளது. பட்டியலில் ஜெர்மனி முதலிடத்திலும் அதனை தொடர்ந்து டென்மார்க், ஆஸ்திரேலியா, சுவிச்சர்லாந்து மற்றும் ஐக்கிய ராஜ்யம் (இங்கிலாந்து) ஆகிய நாடுகளும் உள்ளன.
Question 4
4. இந்தியாவின் முதல் 'Design Yatra' எந்த மாநிலத்தில் தொடங்கியுள்ளது ?
A
மணிப்பூர்
B
மேற்கு வங்கம்
C
கேரளா
D
உத்தரப் பிரதேசம்
Question 4 Explanation: 
வடிவமைப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் வடிவமைப்பை பெரிய அளவில் எடுத்து செல்ல, இந்தியாவின் முதல் 'Design Yatra' கேரளாவின் கோழிக்கோட்டில் அக்டோபர் 29-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை, நாடு முழுவதும் உள்ள 29 நகரங்களுக்கு மூன்று கார்களில் பிப்ரவரி 2017-க்குள் 15,000 கி.மீ. தூரம் பயணம் செய்யவுள்ளது. இது Institute of Indian Interior Designers (IIID) நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இந்த யாத்திரையின் நோக்கம் மக்களை, வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்கள் ஆகியவற்றை வடிவமைக்க ஊக்குவித்தல் ஆகும். இதன் மூலம் தங்கள் வசதிக்குஏற்ப மக்கள் உள்ளூர் கலாச்சாரத்தை முன்வைக்க முடியும் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும்.
Question 5
5. எந்த நாடு 2016 ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது ?
A
பாகிஸ்தான்
B
மலேஷியா
C
இந்தியா
D
ஜப்பான்
Question 5 Explanation: 
மலேஷியாவின் குவாந்தானில் நடைபெற்ற 2016 ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் இறுதிப்போட்டியில் இந்திய அணி, இந்தியாவின் பரம-எதிரி மற்றும் நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை 3-2 என்ற புள்ளியில் தோற்கடித்து தங்கம் வென்றது. இப்போட்டியில் இந்தியா பட்டம் வெல்வது இது 2வது முறையாகும்.
Question 6
6. புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டின் பிரதமர் யார் ?
A
ஜேவியர் அரீநஸ்
B
மரியானோ ரஜோய்
C
அல்பிரேடோ பெரஸ்
D
மரியா டோலோரெஸ்
Question 6 Explanation: 
பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர், கன்சர்வேடிவ் மக்கள் கட்சி (PP) தலைவரான மரியானோ ரஜோய் ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுநாள் வரை, அவர் ஸ்பெயின் நாட்டின் இடைக்கால பிரதமராக இருந்தார்.
Question 7
7. இந்தியாவின் எந்த மாநிலம், 'திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத'(Open Defecation Free (ODF)) இரண்டாவது மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது ?
A
கேரளா
B
அசாம்
C
இமாசலப் பிரதேசம்
D
ஒடிசா
Question 7 Explanation: 
சிக்கிமிற்கு அடுத்து, இந்தியாவின் 'திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத'(Open Defecation Free (ODF)) இரண்டாவது மாநிலமாக இமாசலப் பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் உள்ள அனைத்து 12 மாவட்டங்களும் 100% பாதுகாப்பு மற்றும் மொத்த கிராமப்புற சுகாதார பாதுகாப்பு ஆகிய இரண்டு அருஞ்செயலையும் வெற்றிகரமாக செய்துள்ளது. புதிதாக கிடைத்த இந்த அந்தஸ்த்தால், சுகாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள இமாச்சலப்பிரதேசம் மாநிலம் உலக வங்கியின் ரூ 9,000 கோடி திட்டத்தின்கீழ் நிதி பெற தகுதி பெற்றுள்ளது.
Question 8
8. இந்தியாவின் 2016 தேசிய ஒற்றுமை தினத்தின்( ராஷ்டிரிய ஏக்தா திவாஸ்) மையக்கரு என்ன ?
A
Growth and Unity of India
B
Integration of India
C
Bound to develop peaceful India
D
Peace: Soul purpose of India
Question 8 Explanation: 
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் இந்தியாவில் அக்டோபர் 31ம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினம் (அல்லது ராஷ்டிரிய ஏக்தா திவாஸ்) அனுசரிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டுக்கான மையக்கரு 'Integration of India' என்பதாகும்.இந்த தினம், நம் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக உள்ள அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கு நாட்டின் உள்ளார்ந்த வலிமை மற்றும் எதிர்தெறியும் திறனை மீண்டும் உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
Question 9
9. விக்ரம் இங்க்லே எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
குத்துச்சண்டை
B
ரோலர் ஸ்கேட்டிங்
C
ஸ்பிரிண்ட்
D
செஸ்
Question 9 Explanation: 
இந்தியா, முதன் முறையாக சீனாவின் லிஷ்யுவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அதன் முதல் சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் பதக்கத்தை வென்றுள்ளது. தனுஷ் பாபு, விக்ரம் இங்க்லே மற்றும் நிகிலேஷ் தபானே ஆகிய மூவர் கூட்டணி இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 3,000 மீட்டர் அணி ரிலேவில் வெண்கலம் வென்றுள்ளது.
Question 10
10. சமீபத்தில் மறைந்த சசிகலா ககோட்கர், இந்தியாவின் எந்த மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் ?
A
கோவா
B
மகாராஷ்டிரா
C
கர்நாடகா
D
ஒடிசா
Question 10 Explanation: 
கோவாவின் முதல் பெண் முதல்வரான சசிகலா ககோட்கர், அண்மையில் பனாஜியில் காலமானார். இவர், கோவாவின் முன்னாள் முதல்வரான தயானந்த பன்டோட்கரின் மகள். பாரதிய பாஷா சுரக்ஷா மன்ச் (BBSM) கட்சிக்கு தலைமை வகித்த ககோட்கர், சமூக மற்றும் கலாச்சார துறைகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டவர் மற்றும் தொடக்க கல்வியில், தாய்மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதை முன்னின்று வலியுறுத்தியவர்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!