Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 29th September 2016

Tnpsc Tamil Current Affairs 29th September 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 29th September 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. “Karachi, You’re Killing Me!"  என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது ?
A
மொஹ்சின் சித்திக்
B
நுட்ராத் கமல்
C
சபா இம்தியாஸ்
D
சோமக் கோஷல்
Question 1 Explanation: 
“Karachi, You’re Killing Me!" என்ற புத்தகம் பாகிஸ்தான் பத்திரிகையாளர்-எழுத்தாளர் சபா இம்தியாஸ் என்பவரால் எழுதப்பட்டது. இந்த நகைச்சுவை க்ரைம் திரில்லர் நாவல், ஆயிஷா கான் எனும் இளம் நாயகியின் வாழ்கையையும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைந்த காரணத்தினால் கராச்சியில் நடைபெறும் பல்வேறு வன்முறை மற்றும் இடையூறு நிகழ்வுகளையும் சுற்றி நகர்கிறது. இது சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த கராச்சி குறித்த மாநில இதழியல் ஆய்வுக்கட்டுரை ஆகும். வெளிவர இருக்கும் பாலிவுட் திரைப்படம் "நூர்" இந்த நாவலை அடிப்படையாக கொண்டது. இதில் சோனாக்ஷி சின்ஹா பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Question 2
2. இந்திய சுகாதார மாநாடு (India Sanitation Conference - INDOSAN) பின்வரும் எந்த நகரங்களில் நடைபெறவுள்ளது ?
A
காந்தி நகர்
B
ஜெய்ப்பூர்
C
புது தில்லி
D
லக்னோ
Question 2 Explanation: 
பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 30-ம் தேதி அன்று இந்திய சுகாதார மாநாட்டை(INDOSAN) புது தில்லியில் தொடங்கி வைக்கிறார். 2016 மாநாடு, சுவட்ச் பாரத் திட்டத்திலுள்ள பணி முன்னேற்றங்களை சேகரித்தல், தொடர்புடைய பிரச்சினைகளை ஆராய்தல் மற்றும் சுவட்ச் பாரத் திட்டத்தினை உறுதிபடுத்த பொறுப்புகளை புதுப்பித்தல் போன்றவைகளுக்காக நடத்தப்படுகிறது. சுகாதார வசதிகள் சம்பந்தமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஊக்கப்படுத்துதலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை இம்மாநாட்டில் கெளரவிக்க உள்ளனர்.
Question 3
3. சிறுபான்மையினருக்காக  '‘Progress Panchayat’' எனும் பிரச்சாரம் இந்தியாவின் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது ?
A
ஹரியானா
B
ராஜஸ்தான்
C
மத்தியப் பிரதேசம்
D
உத்தரப்பிரதேசம்
Question 3 Explanation: 
மத்திய சிறுபான்மைதுறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி “Progress Panchayat” எனும் பிரச்சாரத்தை சிறுபான்மையினருக்காக ஹரியானாவில் துவங்கி வைத்தார். இதன் மூலம், தேசிய ஜனநாயக முன்னணி(NDA) அரசாங்கம் சிறுபான்மையினரின் நலனுக்காக மேற்கொண்ட பல்வேறு சமூக நல நடவடிக்கைகளை ஹரியானாவின் Mewat பகுதியில் இருந்து விளம்பரப்படுத்தவுள்ளது. இத்திட்டம் இந்தியாவில் 100 இடங்களில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது இதில் மத்திய அமைச்சர்கள் பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.
Question 4
4. சில்லறை விற்பனையாளர்களுக்காக "Skava Commerce" எனும் இ-காமர்ஸ் தளத்தினை எந்த இந்திய நிறுவனம் துவங்கியுள்ளது ?
A
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
B
டாடா கம்யூனிகேஷன்ஸ்
C
இன்போசிஸ்
D
விப்ரோ
Question 4 Explanation: 
சில்லறை விற்பனையாளர்களுக்காக "Skava Commerce" எனும் புதிய நவீன தரமான,முதல் மொபைல் மற்றும் e- காமர்ஸ் தளத்தினை சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளம் , குறைந்த முதலீட்டில், செங்கல் மற்றும் கார் விற்பனையாளர்கள் புது சலுகைகளை வழங்கவும், டிஜிட்டல் சேனல்கள் மூலம் வரும் பரிமாற்ற விகித போக்குவரத்து நெரிசல்களை மேம்படுத்தவும் உதவும். இந்த தளம், ஏற்கனவே உள்ள தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதுடன் எதிர்கால தயார் கட்டிடக்கலையையும் வழங்குகிறது. செயற்கை நுண்ணறிவை (AI) தளர்த்துவதன் அடுத்த தலைமுறை ஷாப்பிங் அனுபவங்கள் மற்றும் இயந்திர கற்றல், இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் விர்சுவல் ரியாலிட்டி (VR) ஆகியவற்றையும் இதன் மூலம் வழங்க முடியும்.
Question 5
5. அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் மத்திய அரசின் தெரு விளக்கு தேசிய திட்டத்தை (Street Lighting National Programme - SLNP) ஏற்ற முதல் இந்திய மாநிலம் ?
A
ராஜஸ்தான்
B
அசாம்
C
தமிழ்நாடு
D
பஞ்சாப்
Question 5 Explanation: 
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் மத்திய அரசின் தெரு விளக்கு தேசிய திட்டத்தை (Street Lighting National Programme - SLNP) ஏற்ற முதல் இந்திய மாநிலம் ராஜஸ்தான் ஆகும். மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 5 லட்சம் தெரு விளக்குகள் LED விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு எந்த செலவும் இல்லாமல், எரிசக்தி சேமிப்பு சேவைகள் லிமிடெட் (EESL) எனும் ஒரு பொது எரிசக்தி சேவைகள் நிறுவனம் மத்திய மின்சார அமைச்சகம் மற்றும் இந்திய அரசின் (GOI) நிர்வாகத்தின் கீழ் இதற்கு நிதி வழங்குகிறது.
Question 6
6. எந்த நாட்டின் மகளிர் கபடி அணி,  2016 ஆசிய பீச் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றுள்ளது ?
A
வியட்நாம்
B
இந்தியா
C
பாகிஸ்தான்
D
தாய்லாந்து
Question 6 Explanation: 
வியட்நாமின் தானங்கில் நடைபெற்ற 2016 ஆசிய பீச் விளையாட்டு போட்டியின் இறுதிஆட்டத்தில் இந்திய மகளிர் கபடி அணி தாய்லாந்தை 41-31 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது. 2008-இல் தொடங்கப்பட்ட இந்த போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இதில் தொடக்கத்திலிருந்தே இந்தியா வென்று வருகிறது அந்த வரிசையில் தொடர்ந்து 5வது முறையாக தாய்லாந்தை தோற்கடித்து இந்தியா தங்கம் வென்றது.
Question 7
7. அண்மையில் மறைந்த மேக்ஸ் வாக்கர், எந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ?
A
இங்கிலாந்து
B
நியூசிலாந்து
C
ஆஸ்திரேலியா
D
தென் ஆப்ரிக்கா
Question 7 Explanation: 
81 வயதான மேக்ஸ் வாக்கர், ஒரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மற்றும் ஆஸ்திரேலிய விதிகள் கால்பந்து வீரர். இவர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் காலமானார். அவரது மரபுவழியல்லாத கிரிக்கெட் பந்து வீச்சு நடவடிக்கை அவருக்கு "Tangles" என்ற பட்டபெயரை பெற்று தந்தது. அவரது larrikin கதாபாத்திரம், ஆஸ்திரேலியாவில் மிகவும் விரும்பப்படும் நபராக அவரை நிறுத்தியிருக்கிறது.
Question 8
8. 2016 உலக கடல்சார் தினத்தின்(World Maritime Day) மையக்கரு(Theme) என்ன ?
A
IMO: shipping safety & security
B
Shipping: indispensable to the world
C
IMO conventions: effective implementation
D
Maritime education and training
Question 8 Explanation: 
கப்பல் பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு மற்றும் கடல் சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மேற்கோள் காட்டி செப்டம்பர் 29ம் தேதி ஒவ்வொரு வருடமும் ஐக்கிய நாடுகளின் உலக கடல்சார் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2016-ஆம் ஆண்டிற்கான மையக்கரு, “Shipping: indispensable to the world” ஆகும். கப்பல் மற்றும் உலக சமூகத்தின் இடையேயான முக்கியமான இணைப்பில் கவனம் செலுத்த மற்றும் சர்வதேச கப்பல் வணிகத்தில், உலகளாவிய ஒழுங்குமுறை அமைப்பில் ஐஎம்ஓ(IMO) வின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மையக்கரு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
Question 9
9. எந்த மாநில அரசு, கல்வியை ஊக்குவிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ISRO)  புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது ?
A
மகாராஷ்டிரா
B
தமிழ்நாடு
C
தெலுங்கானா
D
கேரளா
Question 9 Explanation: 
தெலுங்கானா மாநில மாணவர்களின் கல்வி சேனலான Mana TV-யின் சேவைகளை மேம்படுத்த அம்மாநில அரசு, இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளது. இதன் மூலம் EAMCET தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். EAMCET என்பது பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வாகும். அது மட்டுமின்றி, இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) மற்றும் இன்னபிற போட்டி தேர்வுகளுக்கும் இந்த சேனல் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தினமும் 4 மணி நேரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
Question 10
10. 2016 உலக இருதய தினத்தின் மையக்கரு (Theme) என்ன ?
A
Create heart-healthy environments
B
Light your heart, empower your life
C
Care the heart, love your life
D
One home, one world, one heart
Question 10 Explanation: 
மனித இருதயத்தைப் பாதிக்கும் நான்கு முக்கிய காரணிகளான புகையிலை, முறையற்ற உணவு, உடற்பயிற்சி செய்யாமை மற்றும் அதிகமாக மது அருந்துதல் ஆகியவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2016 உலக இருதய தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 29ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டிற்கான மையக்கரு "Light your heart, empower your life" ஆகும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.
Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!