Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 4th October 2016

Tnpsc Tamil Current Affairs 4th October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 4th October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1.  மின்சார நிதி நிறுவனத்தின்(Power Finance Corporation - PFC) புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் யார் ?
A
ராஜீவ் சர்மா
B
எம் கே கோயல்
C
மகேந்திர கோயல்
D
கே கே சிங்கால்
Question 1 Explanation: 
அரசு நடத்தும் மின்சார நிதி நிறுவனத்தின்(Power Finance Corporation - PFC) புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ராஜீவ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 30, 2016 உடன் ஓய்வுவயதை எட்டிய எம் கே கோயலுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டார். இந்த பதவிக்கு முன்பு சர்மா, ஊரக மின்மயமாக்கல் கழகத்தின்(Rural Electrification Corporation - REC) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். PFC(Power Finance Corporation)-ன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது.
Question 2
2. 2016 மலேஷியா கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் யார் ?
A
நிகோ ரோஸ்பெர்க்
B
டேனியல் ரிச்சார்டோ
C
கிமி ரெய்க்கனென்
D
மேக்ஸ் வெர்ஸ்டப்பென்
Question 2 Explanation: 
மலேசியாவின் செபாங் சர்வதேச சர்க்யூட்டில் நடைபெற்ற 2016 மலேஷியா கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா ஒன் உலக சேம்பியன்ஷிப் போட்டியில் டேனியல் ரிச்சார்டோ வெற்றி பெற்றார். ஆஸ்திரேலியா கார் ஓட்டபந்தைய வீரரான இவர் ரெட் புல் ரேசிங்-கின் சார்பாக ஃபார்முலா ஒன் போட்டியில் பங்கேற்கிறார்.
Question 3
3. உலக விலங்கு நாள் (WAD) எப்போது அனுசரிக்கப்படுகிறது ?
A
அக்டோபர் 3
B
அக்டோபர் 5
C
அக்டோபர் 4
D
அக்டோபர் 6
Question 3 Explanation: 
சமூகத்தில் விலங்குகளின் நிலையை உயர்த்த அக்டோபர் 4 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக விலங்கு நாள் (WAD) அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் தனிநபர்கள், விலங்கு நல அமைப்புக்கள், சமூக குழுக்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் கிளப் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் தொழில்நிறுவனங்கள் ஆகியோரை ஊக்குவித்து கொண்டாடப்படுகிறது.
Question 4
4. மண்ணெண்ணெயில் நேரடி பயன் பரிமாற்றத்தை(Direct Benefit Transfer) செயல்படுத்தியுள்ள முதல் இந்திய மாநிலம் எது ?
A
அசாம்
B
ஆந்திரப் பிரதேசம்
C
அரியானா
D
ஜார்கண்ட்
Question 4 Explanation: 
மண்ணெண்ணெயில் நேரடி பயன் பரிமாற்றத்தை(Direct Benefit Transfer) செயல்படுத்தியுள்ள முதல் இந்திய மாநிலமாக ஜார்க்கண்ட் மாறியுள்ளது. இதற்கென அடையாளம் காணப்பட்ட 4 மாவட்டங்களில் அக்டோபர் 1 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த 4 மாவட்டங்களாவன: சத்ரா, ஹசாரிபாக், க்ஹுண்டி, ஜம்தாரா. DBT திட்டத்தின் கீழ், பொது விநியோக முறையில் மண்ணெண்ணெய், மானியம் அல்லாத விலையில் விற்கப்படுகிறது மற்றும் இதற்கான மானியம் நேரடியாக நுகர்வோருக்கு தங்கள் வங்கிக் கணக்குகளில் மாற்றப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பின் நோக்கம் மானியத்தை பகுத்தறிதல் மற்றும் அதன் கசிவை குறைத்தல் ஆகும்.
Question 5
5. உலக வங்கியின் சமீபத்திய 'தென் ஆசியா பொருளாதார ஃபோகஸ்' அறிக்கைப்படி, 2016-ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்ன ?
A
7.6%
B
7.7%
C
7.8%
D
7.9%
Question 5 Explanation: 
வாஷிங்டனில் உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட 'தென் ஆசியா பொருளாதார ஃபோகஸ்' அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2016-ல் வலுவான நிலையில் 7.6% ஆகவும், 2017-ல் 7.7 % ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மிகவும் வலுவாகவும், வறுமையை ஒழிக்க தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்தியா, வறுமையை குறைத்து வளர்ச்சியை ஏற்படுத்துதல், சேர்த்து ஊக்குவிப்பது, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் பாலினம் தொடர்பான மனித வளர்ச்சி விளைவுகளில் ஒரு பரந்தளவு வெற்றிகளை விரிவாக்கும் சவாலை எதிர்கொள்ளும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
Question 6
6. சமீபத்தில் எந்த இந்திய திரைப்பட இயக்குனர், பிரஞ்சு அரசின் மரியாதைக்குரிய ‘Knight in the National Order of Merit’ பட்டதை பெற்றுள்ளார் ?
A
மணிரத்னம்
B
ப்ரஜ்ஞா சோவ்டா
C
கிரிஷ் கர்னாட்
D
நிதின் போஸ்
Question 6 Explanation: 
ப்ரஜ்ஞா சோவ்டா, ஆசிய காட்டு யானைகளை பராமரிக்க அவரது வாழ்க்கையை அர்ப்பணித்ததை அங்கீகரிக்கும் விதமாக, பிரஞ்சு அரசாங்கத்தின் மிக உயர்ந்த சிவிலியன் அங்கீகாரங்களில் ஒன்றான Knight in the National Order of Merit (Chevalier de l’Ordre National du Merite) என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவர் இந்திய திரைப்பட இயக்குனர், யானை ஆராய்ச்சியாளர் மற்றும் கடந்த 16 ஆண்டுகளாக ஆசிய காட்டு யானைகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் ஆனே மானே அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். ஆராய்ச்சியாளரான இவர் இந்தியாவிலே முதல் முறையாக யானைகளுக்காக GPS கழுத்துப்பட்டையை உருவாக்கி ஆன்லைன் கண்காணிப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கி வருகிறார்.
Question 7
7. எந்த இந்திய வம்சாவளி ஆளுமைக்கு, 2016 கூகிள் அறிவியல் கண்காட்சி(Google Science Fair) விருது
வழங்கப்பட்டது ?
A
அத்வே ரமேஷ்
B
புலக் குல்ஸ்ரேதா
C
கெய்ரா நிர்ஹின்
D
பிரசாத் ஜெயின்
Question 7 Explanation: 
இந்திய வம்சாவளி தென் ஆப்பிரிக்க இளம்பெண்ணான கெய்ரா நிர்ஹின்(16), ஆரஞ்சை பயன்படுத்தி மண்ணில் நீரை தக்கவைக்க உதவும் மலிவான சூப்பர் உறிஞ்சு பொருளை உருவாக்கியதற்காக அமெரிக்காவில் நடைபெற்ற 2016 கூகிள் அறிவியல் கண்காட்சியில் அவருக்கு $ 50,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவர் செயிண்ட் மார்டின் தனியார் பள்ளியில் 11வது கிரேடு படிக்கும் மாணவர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் மிகப்பெரிய சவால்ககளை தீர்க்க அழைக்கப்பட்ட 13-18 வயது வரையுள்ள வளரும் இளம் விஞ்ஞானிகளுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியே கூகிள் அறிவியல் கண்காட்சி ஆகும்.
Question 8
8. 2016 உலக வாழ்விட (World Habitat Day) தினத்தின் மையக்கரு என்ன ?
A
Cities and Climate Change
B
Public Spaces for All
C
Housing at the Centre
D
Cities, magnets of hope
Question 8 Explanation: 
அனைத்து நகர்ப்புற பகுதிகள், பெரிய மற்றும் சிறிய நகரங்களில் மலிவு வீடுகளின் தேவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கள் கிழமையில் ஒவ்வொரு வருடமும் உலக வாழ்விட தினம் கொண்டாடப்படுகிறது. 2016 உலக வாழ்விட தினம் "Housing at the Centre" என்ற மையகருவுடன் அக்டோபர் 3ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இது அனைத்து நகர்ப்புறங்கள், பெரிய மற்றும் சிறிய நகரங்களில் மலிவு வீடுகளின் தேவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
Question 9
9. பின்வரும் எந்த பிரமுகர்கள் 2016-ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசை வென்றுள்ளனர் ?
A
டேவிட் ஜே.தவ்லெஸ், டங்கன் ஹால்டேன், ஜே.மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ்
B
செர்ஜ் ஹரோச்சே மற்றும் டேவிட் ஜே வின்லாந்து
C
ஆண்ட்ரே ஜெய் ஜெய்ம் மற்றும் கான்ஸ்டான்டின் நொவோசிலோவ்
D
சவுல் பெர்ல்முட்டேர், பிரையன் பி ஸ்மித், ஆடம் ரீஸ்
Question 9 Explanation: 
பிரிட்டிஷ் விஞ்ஞானிகளான டேவிட் ஜே.தவ்லெஸ், டங்கன் ஹால்டேன், ஜே.மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகியோருக்கு 2016 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேற்புற கட்டமைப்பு மாற்றம் மற்றும் மேற்புற கட்டமைப்பு பருப்பொருளில் தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுக்காக இயற்பியலில் இவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள், புதுமையான பண்புகளை கொண்டு அனைத்து வகையான புதிய பொருட்களை வடிவமைக்க வழிவகுத்தது. பரிசு பெற்ற மூன்று நபர்களும் அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களில் தங்கள் ஆய்வை நடத்தி வருகின்றனர். இவர்கள் 8m குரோனர் (£ 727,000) பரிசை பகிர்ந்து கொள்வர். இது ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் அறிவியல் ராயல் அகாடமியால் அறிவிக்கப்பட்டது.
Question 10
10. முதலாவது பிரிக்ஸ் வர்த்தக கண்காட்சி(BRICS trade fair) இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது ?
A
புனே
B
புது தில்லி
C
இந்தூர்
D
சென்னை
Question 10 Explanation: 
முதலாவது பிரிக்ஸ் வர்த்தக கண்காட்சி, பிரிக்ஸ் நாடுகள் மத்தியில் வர்த்தகத்தை அதிகரிக்க அக்டோபர் 12-14 வரை புது தில்லியின் பிரகதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியின் மையக்கரு “Building BRICS – Innovation for Collaboration” ஆகும். வர்த்தக கண்காட்சி, 20 முக்கிய துறைகளை காட்சியில் வைக்கவுள்ளது. அந்த துறைகள் பின்வருமாறு: விண்வெளி, வேளாண் பதப்படுத்தும், கார், இரசாயனங்கள், பச்சை ஆற்றல், சுகாதார, ரயில்வே, டெக்ஸ்டைல்ஸ், உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், பொறியியல் பொருட்கள், சுற்றுலா, கற்கள் மற்றும் நகைகள் மற்றும் திறன் வளர்ச்சி. இந்த பிரிக்ஸ் வர்த்தக கண்காட்சி தொழில் முனைவோர்கள் மீது கவனம் செலுத்தும் மற்றும் பிரிக்ஸ் நாடுகள் முழுவதும் உள்ள இளம் தொழில் முனைவோரை ஒன்றாக இம்மேடையில் கொண்டுவரும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.
Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!