Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 6th October 2016

Tnpsc Tamil Current Affairs 6th October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 6th October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. பின்வரும் எந்த பிரபலங்கள் வேதியியலுக்காக 2016 ஆம் ஆண்டின் நோபல் பரிசை  வென்றுள்ளனர் ?
A
வில்லியம் மோர்நேர், எரிக் பெட்ஜிக் மற்றும் ஸ்டீபன் ஹெல்
B
ஜான் பியர் சாவேஜ், பிரேசர் ஸ்டோடர்ட் மற்றும் பெர்னர்ட் ஃபெரிங்கா
C
அரியே வார்ஷேல், மைக்கேல் லெவிட் மற்றும் மார்ட்டின் கர்ப்லஸ்
D
பால் மொட்ரிச், தாமஸ் லிண்டாஹல் மற்றும் அஜிஸ் சன்கர்
Question 1 Explanation: 
ஜான் பியர் சாவேஜ் (பிரான்ஸ்), சர் பிரேசர் ஸ்டோடர்ட் (ஸ்காட்லாந்து) மற்றும் பெர்னார்ட் எல் ஃபெரிங்கா (நெதர்லாந்து) ஆகிய மூவருக்கும், உலகின் மிகச்சிறிய மூலக்கூறு இயந்திரங்களின்(நானோ மூலக்கூறுகள்) தொகுப்பு மற்றும் வடிவமைப்பை உருவாக்கியதற்காக 2016 ஆம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மோட்டார் முதல் கார் வரை மற்றும் சிறிய அளவிலான சதை ஆகியவற்றை வடிவமைக்க மூலக்கூறுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்ததை அங்கீகரிக்கும் விதமாக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.அவர்கள் 8m குரோனர் (£ 727,000) பரிசு தொகையை பகிர்ந்து கொள்வர்; இது ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரிலுள்ள ராயல் அறிவியல் அகாடமி மூலம் அறிவிக்கப்பட்டது.
Question 2
2. சர்வதேச நாணய நிதியத்தின்(International Monetary Fund) உலகப் பொருளாதாரப் பார்வை (World Economic Outlook - WEO)  சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, FY17-ல் இந்தியாவின் வளர்ச்சி எவ்வளவு என்று கணிக்கப்பட்டுள்ளது ?
A
7.4%
B
7.6%
C
7.8%
D
8.0%
Question 2 Explanation: 
சமீபத்திய திருத்திய உலகப் பொருளாதாரப் பார்வை(World Economic Outlook) பதிப்பின் அறிக்கைப்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி FY17 (2016-17) மற்றும் FY18 (2017-18) இல் 0.2% அதிகரிக்கப்பட்டு 7.6% ஆக கணிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, வணிகத்தில் ஏற்பட்டிருக்கும் பெரிய முன்னேற்றம், பயனுள்ள கொள்கை நடவடிக்கைகள் மற்றும் வலுவான வெளிப்புற பாதுகாப்பு ஆகியவற்றின் உதவியின் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக சீரான முன்னேற்றம் கண்டுவருகிறது என்று கூறப்படுகிறது. இது தவிர, இந்திய அரசாங்கம் அதன் வரி முறையை சீரமைக்க வேண்டும் என்றும் உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதார ஆகியவற்றில் முதலீடு செய்யும் வளங்களை அதிகரிக்க மானியங்களை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு காட்டுகிறது.
Question 3
3. பொது கடன் மேலாண்மை பிரிவு (Public Debt Management Cell -  PDMC) ஒன்றை பின்வரும் எந்த அமைச்சகம் புது தில்லியில் அமைத்துள்ளது ?
A
சட்டம் மற்றும் நீதித்துறை
B
தொழிலாளர் அமைச்சகம் மற்றும் வேலைவாய்ப்பு
C
உள்நாட்டலுவல்கள் அமைச்சகம்
D
நிதி அமைச்சகம்
Question 3 Explanation: 
அரசு கடன்களை தங்குதடையின்றி இயக்க மற்றும் நல்ல பண மேலாண்மை செய்ய ஒட்டுமொத்தத்தில் பத்திர சந்தைகளை ஆழப்படுத்த பொது கடன் மேலாண்மை பிரிவு (PDMC) ஒன்றை மத்திய நிதி அமைச்சகம் அமைத்துள்ளது. PDMC பிரிவு, இந்திய ரிசர்வ் வங்கியின் புது தில்லி கிளையில் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு இடைக்கால ஏற்பாடாகும். இன்னும் 2 ஆண்டுகளில், சட்டரீதியான பொதுக்கடன் மேலாண்மை முகமையாக(PDMA- Public Debt Management Agency) உயர்த்தப்படும். ரிசர்வ் வங்கியின் சட்டரீதியான செயல்பாடுகளில் மோதலை தவிர்க்கும் பொருட்டு, PDMC-க்கு ஆலோசனை பணிகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அரசாங்க கடன்கள், சந்தை கடன்கள், Sovereign Gold Bond வழங்கல் உட்பட பிற வழங்கல்களின் திட்டமிடும் பணியை PDMC செய்யும். இவர்கள் முதலீடு, மூலதன சந்தை நடவடிக்கைகள், சிறு சேமிப்பு வட்டி விகித நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் அரசுக்கு அறிவுரை கூறுவார்கள்.
Question 4
4. சமீபத்தில் மறைந்த யூசுப் அரக்கல், எந்த துறையில் நன்கு அறியப்பட்ட ஆளுமை ?
A
ஓவியம்
B
விளையாட்டு
C
அரசியல்
D
ஊடகவியல்
Question 4 Explanation: 
புகழ்பெற்ற மலையாள ஓவியர், யூசுப் அரக்கல்(71) சமீபத்தில் பெங்களூரில் மறைந்தார். அப்ஸ்டிரக்ட் ஓவியம் மற்றும் சமகால ஓவியகலையில் சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக இவர் அறியப்பட்டார். மேலும் இவர் தனது படைப்புகளில் சமூக பிரச்சினைகளை சித்தரிப்பதன் மூலமும் அறியப்பட்டார். இவர் சமீபத்தில் வெளியிட்ட “Faces of Creativity” என்ற புத்தகம் அவரது சக கலைஞர்களின் ஓவியங்களின் ஒரு விரிவான தொகுப்பாகும். ஒரு இந்திய கலைஞர் மற்ற கலைஞர்கள் செய்த ஓவியங்களை குறிப்பிட்டு புத்தகம் எழுதுவது இதுவே முதல் முறையாகும்.
Question 5
5. 2016 உலக பொருளாதார அரங்கின் (World Economic Forum - WEF) இந்திய பொருளாதார உச்சி மாநாடு(India Economic Summit) பின்வரும் எந்த இந்திய நகரில் தொடங்கியது?
A
புனே
B
புது தில்லி
C
அகமதாபாத்
D
சண்டிகர்
Question 5 Explanation: 
2016 உலக பொருளாதார அரங்கின் (WEF) இந்திய பொருளாதார உச்சி மாநாட்டை, வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புது தில்லியில் அக்டோபர் 6, 2016 அன்று துவங்கிவைத்தார். உச்சிமாநாட்டின் மையக்கரு “Fostering an Inclusive India through Digital Transformation" என்பதாகும். இந்த 2 நாள் மாநாடு டிஜிட்டல் மாற்றம் மற்றும் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு போன்ற பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தவுள்ளது. 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து குறைந்தது 600 பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
Question 6
6. சமீபத்தில் எந்த இந்திய மலையேறும் வீரர், சோ ஓயு(Cho Oyu) மலையை ஏறிக்கடந்து சாதனை படைத்தார் ?
A
எச் பி எஸ் அலுவாலியா
B
மஸ்தான் பாபு மல்லி
C
அர்ஜுன் வாஜ்பாய்
D
டென்சிங் நார்கே
Question 6 Explanation: 
சிறந்த இந்திய மலையேறும் வீரரான அர்ஜுன் வாஜ்பாய்(23), சமீபத்தில் சீன-திபெத் இடையே அமைந்துள்ள உலகின் 6 வது உயர்ந்த மலையான சோ ஓயுவை (சுமார் 8.188 மீட்டர்) ஏறி சாதனை புரிந்துள்ளார். இது எவரெஸ்ட் சிகரத்திற்கு மேற்கே 20 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் மூலம், உலகிலேயே மவுண்ட் சோ ஓயுவை மிகவும் இளம்வயதில் ஏறியவர் என்ற பெருமையை பெறுகிறார். இந்த சாதனையுடன் சேர்த்து,இதுவரை உலகிலுள்ள 14 உயர்ந்த மலைகளில் 5 மலைகளில் ஏறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை ஒவ்வொன்றும் 8000 மீட்டருக்கு அதிகமானவை. இது மட்டுமின்றி Mount Lhotse, Mount Manaslu and Mount Makalu ஆகியவற்றில் ஏறிய இளம் வீரர் என்ற சாதனையையும் இவர் தக்க வைத்துள்ளார்.
Question 7
7. பின்வரும் யார் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட  உள்ளார் ?
A
மத்தேயு ரைக்ரோப்ட்
B
அனிபால் கேவகோ சில்வா
C
அன்டோனியோ குடேர்ரெஸ்
D
விடாலி சுர்க்கின்
Question 7 Explanation: 
போர்ச்சுகல் முன்னாள் பிரதமரான அன்டோனியோ குடேர்ரெஸ், ஐக்கிய நாடுகள் சபையின் 9வது புதிய செயலாளராக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 6வது வாக்களிப்பில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 10 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனத்திற்கு தலைமை வகித்தார். 2017-ல் இவர் பான் கீ மூன்-யை வெற்றி கொள்வார்.
Question 8
8. பின்வரும் யார் மத்திய நேரடி வரி வாரியத்தின் (Central Board of Direct Taxes) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் ?
A
அடுலேஷ் ஜிண்டால்
B
சுஷில் சந்திரா
C
நிலேஷ் சந்த்
D
ஷங்கர் கோரா
Question 8 Explanation: 
1980 ஆம் ஆண்டு தொகுதியின்(Batch) இந்திய வருவாய் சேவை (வருமான வரி பணிநிலை) அதிகாரியான சுஷில் சந்திரா, வருமான வரித்துறை கொள்கைகளை வகுக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் ( Central Board of Direct Taxes - CBDT) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 31, 2016 அன்று ஓய்வு பெற இருக்கும் ராணி சிங் நாயருக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, சந்திரா நேரடி வரிக்கான மத்திய வாரிய உறுப்பினர் (புலனாய்வு) ஆக இருக்கிறார்.
Question 9
9. 2016 உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு (World Sustainable Development Summit - WSDS) இந்தியாவின் எந்த  நகரில் தொடங்கியது ?
A
புது தில்லி
B
புனே
C
போபால்
D
ஜெய்ப்பூர்
Question 9 Explanation: 
2016 உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாட்டின் முதலாம் பதிப்பினை புது தில்லியில் அக்டோபர் 5-ஆம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். இந்த 4 நாள் மாநாட்டை ஆற்றல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (The Energy and Research Institute - TERI) நடத்துகிறது இதன் மையக்கரு “Beyond 2015: People, Planet and Progress” என்பதே ஆகும். இதுவே நிலையான வளர்ச்சி இலக்குகளை தத்தெடுத்தல் குறித்து விவாதிக்கவும், பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் உதவும் முதல் சர்வதேச தளமாகும். 2015-ம் ஆண்டிற்கு அப்பால் உள்ள இலக்குகளின் பாதையை உணர தேவையான முறைமைகள் குறித்த விவாதங்கள் மேற்கொள்ள இந்த புதிய முயற்சி உதவும். காலநிலை மாற்றத்தின் எழுச்சியை குறைப்பதன் அவசியத்தை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
Question 10
10. “Night of Fire” என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது ?
A
யுங் சாங்
B
கொலின் துப்ரோன்
C
அருந்ததி ராய்
D
டிம் டிக்னேர்
Question 10 Explanation: 
“Night of Fire” எனும் புத்தகம் கொலின் துப்ரோன் என்பவரால் எழுதப்பட்டது. இந்த நாவல் மேன்மையான அழகு மற்றும் நீடித்த மர்மம் வாய்ந்த ஒரு தலைசிறந்த படைப்பாகும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.
Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!