Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

11th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

11th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 11th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

11th August 2022 Tnpsc Current Affairs in Tamil

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற V பிரணவ் என்பாருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. துப்பாக்கி சுடுதல்

ஆ. சதுரங்கம் 

இ. பளு தூக்குதல்

ஈ. தடகளம்

  • சென்னையைச் சேர்ந்த செஸ் வீரர் V பிரணவ் ருமேனியாவில் நடந்த போட்டியில் வெற்றிபெற்று இந்தியாவின் 75ஆவது கிராண்ட்மாஸ்டர் ஆனார். 15 வயதான அவர், ருமேனியாவில் உள்ள பையா மாரில் நடந்த லிம்பீடியா ஓபனில் தனது மூன்றாவது மற்றும் இறுதி GM நெறியைப்பெற்று கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றார். அவர் 9 சுற்றுகளிலிருந்து ஏழு புள்ளிகள் பெற்று போட்டியை நிறைவு செய்தார். பிரணவ், தமிழ்நாட்டின் இருபத்தேழாவது கிராண்ட்மாஸ்டர் ஆவார்.

2. உலகின் மிகவுயரமான இரயில்வே பாலம் அமைந்துள்ள இந்திய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. சிக்கிம்

ஆ. ஜம்மு–காஷ்மீர் 

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. அஸ்ஸாம்

  • ஜம்மு–காஷ்மீரில் அமைந்துள்ள செனாப் பாலம் உலகின் மிகவுயரமான இரயில்பாலமாகும். உலகின் மிகவுயரமான இந்த இரயில்வே பாலத்தின் எஃகு வளைவு கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது; அதே வேளையில் மேம்பாலத்தளம் கட்டி முடிக்கப்படவுள்ளது. செனாப் இரயில்வே பாலத்தின் மேல்தளம் பொன்னிணைப்புடன் கட்டி முடிக்கப்படும் போது அது உலகின் மிகவுயரமான இரயில் பாலத்திற்கான சாதனையை எட்டும்.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மனிஷா கல்யாண் என்பாருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. மட்டைப்பந்து

ஆ. கால்பந்து 

இ. குத்துச்சண்டை

ஈ. பளு தூக்குதல்

  • மனிஷா கல்யாண் மற்றும் சுனில் சேத்ரி ஆகியோர் முறையே AIFF’இன் சிறந்த மகளிர் மற்றும் ஆடவர் கால்பந்து வீராங்கனை மற்றும் வீரராக தேர்வுசெய்யப்பட்டனர். சர்வதேச அரங்கில் தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்கள் அதிக கோல் அடித்தவர்களில் மூன்றாமிடத்தில் உள்ளார் இவர். கடந்த 2007இல் முதன்முதலில் சிறந்த வீரர் ஆனார். அடுத்து 2011, 2013, 2014, 2017, 2018–19, தற்போது 2021–22 என மொத்தம் 7 முறை சிறந்த வீரராக தேர்வுசெய்யப்பட்டார். மனிஷா கல்யாண், கடந்த சீசனுக்கான ‘பெண்களுக்கான ஆண்டின் சிறந்த வளர்ந்துவரும் கால்பந்து வீராங்கனை’ விருதை வென்றிருந்தார்.

4. 2022 – உலக உயிரி எரிபொருள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட்.8

ஆ. ஆகஸ்ட்.10 

இ. ஆகஸ்ட்.12

ஈ. ஆகஸ்ட்.14

  • உயிரி எரிபொருளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆக.10 அன்று ‘உலக உயிரி எரிபொருள் நாள்’ கொண்டாடப்படுகிறது. 1893ஆம் ஆண்டு இதே நாளில், ஜெர்மன் கண்டுபிடிப்பாளர் சர் ருடால்ப் டீசல் தனது டீசல் இயந்திரத்தை கடலை எண்ணெய் கொண்டு வெற்றிகரமாக இயக்கினார்.
  • விலங்குகளின் கழிவுகள், பாசிகள், தொழிற்சாலைகள் மற்றும் வேளாண் கழிவுகளிலிருந்து உயிரி–எரிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. புதைபடிவ எரிபொருட்களைப் போலல்லாமல், அவை குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் திரவம் அல்லது வாயு வடிவில் அவை கிடைக்கப் பெறுகின்றன. அவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை, புதுப்பிக்கத்தக்கவை மற்றும் மக்கும் தன்மை கொண்டவை. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு உலக உயிரி எரிபொருள் நாளைக் கொண்டாடத் தொடங்கியது.

5. 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் திறந்தநிலைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற நாடு எது?

அ. இந்தியா

ஆ. உக்ரைன்

இ. உஸ்பெகிஸ்தான் 

ஈ. ரஷ்யா

  • சென்னையில் நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப் பதக்கத்தையும், ஆர்மேனியா மற்றும் இந்தியா–2 அணிகள் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தையும் வென்றன என சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) தெரிவித்துள்ளது. பெண்கள் பிரிவில் உக்ரைன் தங்கப்பதக்கமும், ஜார்ஜியா வெள்ளிப்பதக்கமும், முதலிடம் வகிக்கும் இந்தியா–1 அணி வெண்கலமும் வென்றன.

6. அண்மையில் திறக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை (2G) எத்தனால் ஆலையை உருவாக்கிய நிறுவனம் எது?

அ. HPCL

ஆ. IOCL 

இ. BPCL

ஈ. ONGC

  • ஹரியானா மாநிலம் பானிபட்டில் இரண்டாம் தலைமுறை (2G) எத்தனால் ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டில் உயிரி–எரிபொருள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க 2G உயிரி–எரிபொருள் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த எத்தனால் ஆலையை இந்திய எண்ணெய் நிறுவனம் (IOCL) `900 கோடி மதிப்பீட்டில் உருவாக்கியுள்ளது. இந்த ஆலையால் ஆண்டுதோறும் சுமார் 2 இலட்சம் டன் அரிசி வைக்கோலைப் பயன்படுத்தி ஆண்டுக்கு சுமார் 3 கோடி லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்யவியலும்.

7. டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டை (Digital Payments Index) வெளியிடுகிற இந்திய நிறுவனம் எது?

அ. NPCI

ஆ. NITI ஆயோக்

இ. இந்திய ரிசர்வ் வங்கி 

ஈ. நிதி அமைச்சகம்

  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டை (DPI) வெளியிடுகிறது. இது ஒவ்வோர் ஆண்டும் முறையே ஜூலை மற்றும் ஜனவரி மாதம், மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படுகிறது. இக் குறியீடு அண்மைய பதிப்பான 2022 மார்ச் நிலவரப்படி, 349.30–ஆக உயர்ந்துள்ளது; அது 2021 செப்டம்பரில் 304.06–ஆக இருந்தது. இது, நாடு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை விரைவாக ஏற்றுக்கொள்ளவதைக் குறிக்கிறது. RBI–DPI ஆனத 2018 மார்ச்சை அடிப்படைக் காலமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

8. 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் முதன்முறையாக இந்திய அரங்கை நிறுவவுள்ள நிறுவனம் எது?

அ. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 

ஆ. TATA குழுமம்

இ. அதானி இண்டஸ்ட்ரீஸ்

ஈ. மஹிந்திரா மற்றும் மஹிந்திரா

  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) இணைந்து 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் முதன்முறையாக இந்திய அரங்கை நிறுவவுள்ளன. இந்திய விளையாட்டு வீரர்களின் செயல்திறனை உயர்த்துவதையும், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக்கொண்டு IOA உடனான நீண்டகால கூட்டாண்மையை RIL அறிவித்தது. இந்தியா, 140ஆவது IOC அமர்வை 2023 ஜூனில் மும்பையில் உள்ள ஜியோ பன்னாட்டு மையத்தில் நடத்துகிறது.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மார்த்தாண்டம் சூரியன் கோவில் அமைந்துள்ள மாநிலம்/UT எது?

அ. தெலுங்கானா

ஆ. ஜம்மு காஷ்மீர் 

இ. ஹரியானா

ஈ. பீகார்

  • ஜம்மு–காஷ்மீர் மாநிலம் அனந்தநாகில் மார்த்தாண்டம் சூரியன் கோவில் அமைந்துள்ளது. முன்னதாக, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பங்கேற்ற விழாவில், இந்திய தொல்லியல் துறை அங்கு சிவப்புக்கொடி ஏற்றியது. அண்மையில், இந்து யாத்திரீகர்கள் குழு அக்கோவிலுக்குள் 1 மணிநேர பிரார்த்தனை அமர்வை நடத்தியது. இந்தத் தளம், ‘உயிரற்ற’ பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது; அங்கு அனுமதியின்றி எந்தச் சடங்கும் நடத்தவியலாது.

10. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, எத்தனை வயதுக்கு மேற்பட்ட இளையோர்கள், வாக்காளர் அட்டைக்காக முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம்?

அ. 15

ஆ. 16

இ. 17 

ஈ. 18

  • இந்திய தேர்தல் ஆணையத்தின்படி (ECI), பதினேழு வயதுக்கு மேற்பட்டவர்கள் தற்போது வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும். முன்னதாக, ECIஇன் பரிந்துரைகளுக்குப் பிறகு, சட்ட அமைச்சகம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் நான்கு தகுதித் தேதிகளை வழங்குவதற்காக திருத்தியது: ஜனவரி.1, ஏப்ரல்.1, ஜூலை.1 மற்றும் அக்டோபர்.1 ஆகிய தேதிகளில் இளையோர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்ய தகுதியுடையவர்கள்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யு யு லலித்

உச்சநீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக யு யு லலித் (உதய் உமேஷ் லலித்) நியமனம் செய்யப்பட்டார். அந்த நியமன உத்தரவில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு கையொப்பமிட்டார். தற்போதைய தலைமை நீதிபதி என் வி ரமணா வரும் 26–ஆம் தேதி ஓய்வுபெற்ற பிறகு, புதிய தலைமை நீதிபதியாக யு யு லலித் ஆகஸ்ட் 27–ஆம் தேதி பதவியேற்பார்.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘அரசியமைப்புச் சட்டப்பிரிவு 124, துணைப்பிரிவு (2) அளித்துள்ள அதிகாரத்தின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு யு லலித்தை குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 27–ஆம் தேதிமுதல் இந்த நியமனம் நடைமுறைக்கு வரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாதங்கள் மட்டுமே… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வரும் ஆகஸ்ட் 27–ஆம் தேதி பதவியேற்கும் நீதிபதி யு யு லலித், மூன்று மாதங்களுக்கு குறைவாக மட்டுமே தலைமை நீதிபதி பதவியை வகிப்பார். அவர் வரும் நவம்பர் 8–ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

நேரடி நியமனம் பெறும் இரண்டாவது தலைமை நீதிபதி: தலைமை நீதிபதியாக யு யு லலித் நியமிக்கப்பட்டதன் மூலமாக, வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் தலைமை நீதிபதியாகவும் ஆகும் இரண்டாவது நபர் என்ற பெருமையை அடைந்துள்ளார். பிரபல மூத்த வழக்குரைஞராக இருந்து வந்த யு யு லலித், கடந்த 2014 ஆக.13–ஆம் தேதி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

இவருக்கு முன்பாக, நீதிபதி எஸ் எம் சிக்ரி, வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், அதன் பிறகு நாட்டின் 13–ஆவது தலைமை நீதிபதியாகவும் கடந்த 1971–ஆம் ஆண்டு ஜனவரியில் பதவியேற்றார்.

2. பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டம் 2024 வரை நீட்டிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தை 2024–ஆம் ஆண்டு டிசம்பர் 31–ஆம் தேதி வரை நீட்டிக்க நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தை 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31–ஆம் தேதி வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின்கீழ் வீடுகளைக் கட்டி முடிக்க மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கூடுதல் கால அவகாசம் கோரியிருந்த நிலையில், இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகளுக்கு நடுவணரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

கடந்த 2015–ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்துக்கு `2.03 இலட்சம் கோடி நிதியுதவி அளிக்க நடுவணரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் ஏற்கெனவே `1.18 இலட்சம் கோடி மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 2024–ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை `85,406 கோடி விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. காமன்வெல்த் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் பவானி தேவி!

காமன்வெல்த் வாள்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி தங்கம் வென்றார். இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகளில், 22 தங்கம் உள்பட மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா 4ஆம் இடம்பிடித்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, இலண்டனில் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில், சீனியர் வாள்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டின் பவானி தேவி கலந்துகொண்டார். ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை எதிர்கொண்ட பவானி தேவி, 15–10 என்ற புள்ளிக்கணக்கில் வஸ்லேவாவை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

11th August 2022 Tnpsc Current Affairs in English

1. V Pranav, who was seen in the news, is associated with which sports?

A. Shooting

B. Chess 

C. Weightlifting

D. Athletics

  • A Chennai–based chess player V Pranav became India’s 75th Grandmaster by winning a tournament in Romania. The 15–year–old player won the Limpedea Open in Baia Mare, Romania to secure his third and final GM norm and attain the Grandmaster title. He also finished the tournament with 7 points from nine rounds. Pranav is the 27th Grandmaster from the state of Tamil Nadu.

2. The world’s highest railway bridge is located in which Indian state/UT?

A. Sikkim

B. Jammu and Kashmir 

C. Arunachal Pradesh

D. Assam

  • The Chenab Bridge is the world’s highest railway bridge, which is located in Jammu and Kashmir. The steel arch of the world’s highest railway bridge was completed last year, while the overarch deck is set to be completed. Another milestone at the world’s highest railway bridge will be achieved when the overarch deck of the Chenab Railway Bridge is completed with a golden joint.

3. Manisha Kalyan, who was seen in the news, is associated with which sports?

A. Cricket

B. Football 

C. Boxing

D. Weight Lifting

  • Manisha Kalyan and Sunil Chhetri were named the AIFF Women’s and Men’s Footballer of the year respectively. National captain Sunil Chhetri is the third highest goal scorer among active international players, was first named for the seventh time. Manisha had won the Women’s Emerging Footballer of the Year for last season.

4. When is the ‘World Bio–fuel Day’ celebrated?

A. August.8

B. August.10 

C. August.12

D. August.14

  • ‘World Bio–fuel Day’ is celebrated annually on August 10 to highlight the importance of bio–fuels. On this date in 1893 that German inventor Sir Rudolf Diesel successfully operated his diesel engine on peanut oil. Bio–fuels are produced from animal waste, algae, industrial and agricultural waste.
  • Unlike fossil fuels, they are produced in a short amount of time and are liquid or gaseous. They are environment friendly, renewable and biodegradable. Ministry of Petroleum and Natural Gas (MoP&NG) and the Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC) started celebrating World Biofuel Day after 2015.

5. Which country won the gold medal in the open section of 44th Chess Olympiad?

A. India

B. Ukraine

C. Uzbekistan 

D. Russia

  • The Uzbekistan team won the gold medal while Armenia and India–2 team won the silver and bronze respectively in the Open section of the 44th Chess Olympiad held in Chennai, the International Chess Federation (FIDE) said. In the women’s section, Ukraine won the gold, Georgia the silver, while the top seed India–1 won the bronze.

6. Which company developed the ‘2nd generation (2G) Ethanol Plant’, which was recently inaugurated?

A. HPCL

B. IOCL 

C. BPCL

D. ONGC

  • Prime Minister Narendra Modi dedicated the 2nd generation (2G) Ethanol Plant, in Panipat, Haryana. The 2G bio–fuel plant has been set up to boost the production and usage of bio–fuels in the country. The ethanol plant has been developed by Indian Oil Corporation Ltd. (IOCL), at an estimated cost of over Rs 900 crore. The plant utilises about 2 lakh tonnes of rice straw annually to generate around 3 crore litres of Ethanol annually.

7. Which Indian institution launches the Digital Payments Index (DPI)?

A. NPCI

B. NITI Aayog

C. Reserve Bank of India 

D. Ministry of Finance

  • The Reserve Bank of India (RBI) launches the Digital payments index (DPI). It is released for March and September every year in the months of July and January respectively. The recent edition of the index rose to 349.30 as of March 2022, as against 304.06 in September 2021, indicating the rapid adoption of digital payments in the country. The RBI–DPI has been constructed with March 2018 as the base period.

8. Which company is set to establish first–ever India House at Paris Olympics 2024?

A. Reliance Industries 

B. TATA Group

C. Adani Industries

D. Mahindra and Mahindra

  • Reliance Industries (RIL) and Indian Olympic Association (IOA) are set to together establish the first–ever India House at Paris Olympics 2024. RIL announced a long–term partnership with IOA to elevate the performances of Indian athletes, support national sports federations and build credentials of India as a global sporting nation. India is also be hosting the 140th IOC Session in June 2023 at the Jio World Centre in Mumbai.

9. Martand Sun Temple, which was seen in the news, is located in which state/UT?

A. Telangana

B. Jammu and Kashmir 

C. Haryana

D. Bihar

  • Martand Sun Temple is located in Anantnag, Jammu and Kashmir. Earlier, the Archaeological Survey of India (ASI) red–flagged a religious ceremony participated by the Lieutenant–Governor Manoj Sinha. Recently, a group of Hindu pilgrims entered its premises and held an hour–long prayer session. The site is classified as a ‘non–living’ protected monument, where no ritual can be held unless permitted.

10. As per the Election Commission, youngsters attaining how many years can apply in advance for electoral cards?

A. 15

B. 16

C. 17 

D. 18

  • As per the Election Commission of India (ECI), those above the age of 17 can now apply in advance for enrolment in the voters’ list. The electoral roll will be updated every quarter. Earlier, afrer the recommendations of ECI, the Law Ministry amended the Representation of the People Act to provide for four qualifying dates: January 1, April 1, July 1 and October 1 as the eligibility for youngsters to register in electoral rolls.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!