TnpscTnpsc Current Affairs

23rd March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

23rd March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 23rd March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘G20 People’s Climate Vote 2021’ என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) UNDP 

ஆ) UNESCO

இ) உலக வங்கி

ஈ) WHO

  • அண்மையில் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தால் (UNDP) வெளியிடப்பட்ட, ‘G20 People’s Climate Vote 2021’ அறிக்கையின்படி, இந்தியாவிலுள்ள 67% இளைஞர்கள் காலநிலை நெருக்கடியை உலகளாவிய அவசரநிலை என்று கருதுகின்றனர்.
  • அவசரக் கொள்கை உருவாக்கம் மற்றும் மாற்றத்தின் அவசியம் குறித்தும் இளைஞர்கள் குரல் கொடுக்கின்றனர். அதேசமயம், பருவநிலை மாற்றத்தை உலகளாவிய அவசரநிலையாகக் கருதும் வயதுவந்தோருள் இந்திய தேசத்தில் 58% பேர் மட்டுமே உள்ளனர்.

2. இந்திய கடற்படை நாள் கொண்டாடப்படுகிற தேதி து?

அ) மார்ச் 10

ஆ) டிசம்பர் 04 

இ) பிப்ரவரி 10

ஈ) ஆகஸ்ட் 04

  • 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, ‘ஆபரேஷன் டிரைடென்ட்’ நடவடிக்கையில் இந்திய கடற் படையின் எதிர்த்தாக்குதலுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிச.4 அன்று இந்திய கடற்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு (2021), “ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்” என்ற கருப்பொருளின்கீழ் கடற்படை இந்த நிகழ்வைக்கொண்டாடியது.

3. 2022 – உலக நுகர்வோர் உரிமைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Consumer Rights First

ஆ) Leaving No one Behind

இ) Fair Digital Finance 

ஈ) Sustainable Consumerism

  • உலகளாவிய நுகர்வோர் உரிமைகள் நாளானது மார்ச் 15 அன்று நுகர்வோரின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • ஒவ்வோர் ஆண்டும், உலகம் முழுவதும் இந்த நாளைக் கொண்டாட ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் பின்பற்றப்படுகி -றது. நடப்பு 2022ஆம் ஆண்டுக்கான உலக நுகர்வோர் உரிமைகள் நாளின் கருப்பொருள், “Fair Digital Finance”.

4. தேசிய சுற்றுலா நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஜன.25

ஆ) பிப்.25

இ) மார்ச்.25

ஈ) ஏப்.25

  • சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி.25 அன்று நாடு முழுவதும் தேசிய சுற்றுலா நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்த ஆண்டு, சுற்றுலா அமைச்சகம் ‘அமுதப்பெருவிழா’ என்ற பெயரில் தேசிய சுற்றுலா நாளை அனுசரிக்கிறது. “Rural and Community Centric Tourism” என்பது இந்த ஆண்டு தேசிய சுற்றுலா நாளுக்கானக் கருப்பொருளாகும்.

5. எந்த இந்திய வங்கிக்கு, IFR ஆசியாவின், ‘ஆசிய வங்கிக்கான விருது’ வழங்கப்பட்டுள்ளது?

அ) ஐசிஐசிஐ வங்கி

ஆ) பாரத ஸ்டேட் வங்கி

இ) ஆக்சிஸ் வங்கி 

ஈ) HDFC வங்கி

  • இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி, ஈக்விட்டி மற்றும் கடன் வழங்குவதில் அதன் செயல்திறனுக்காக, IFR ஆசியாவின் ஆசிய வங்கிக்கான விருதைப்பெற்றுள்ளது. இந்த ஆண்டு, பைனான்ஸ் ஆசியாவின் விருதுகளில், ‘இந்தியாவின் சிறந்த DCM ஹௌஸ்’ விருதையும் அது வென்றுள்ளது.
  • 2021 டிச.31 நிலவரப்படி, அவ்வங்கிக்கு நாடு முழுவதும் 4,700 உள்நாட்டு கிளைகள் மற்றும் 11,060 ATM-கள் உள்ளன.

6. சமீபத்தில் முதன்முறையாக மெட்டாவெர்ஸில் நுழைந்த வங்கி எது?

அ) உலக வங்கி

ஆ) இந்திய ரிசர்வ் வங்கி

இ) JP மோர்கன் 

ஈ) சிட்டி யூனியன் வங்கி

  • JP மோர்கன் மெட்டாவெர்ஸில் ஓர் அங்காடியை அமைத்த உலகின் முதல் வங்கியாக மாறியுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான இவ்வங்கி, பிளாக்செயின் அடிப்ப -டையில் இயங்கும் ஓர் உலகான டீசென்ட்ராலாந்தில் இதனைத் திறந்துள்ளது.

7. ஏர் இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?

அ) N சந்திரசேகரன் 

ஆ) நந்தன் நிலேகனி

இ) சஞ்சீவ் மேத்தா

ஈ) தீபக் பரேக்

  • டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் N சந்திரசேகரன், இந்திய அரசாங்கத்திடமிருந்து அண்மையில் டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்ட ஏர் இந்தியா என்ற விமான நிறுவனத்தின் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜெனரல் இன்சூரன்சு கழகத்தின் முன்னாள் CMD ஆலிசு ஜீ வர்கீசு வைத்யன் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவரின் தலைவர் சஞ்சீவ் மேத்தா ஆகியோர் இந்தக் குழுவில் தன்னாட்சிமிக்க இயக்குநர்களாக சேர்க்கப்பட்டனர்.

8. 2022 – ஜெர்மன் ஓபன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?

அ) P V சிந்து

ஆ) கிடாம்பி ஸ்ரீகாந்த்

இ) லக்ஷ்யா சென் 

ஈ) சாய்நா நேவால்

  • 2022 – ஜெர்மன் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை லக்ஷ்யா சென், தாய்லாந்தின் மூத்த வீரரும், உலகின் இருபாதாம் நிலை வீரருமான குன்லௌட் விடிட்சார்னைச் சந்தித்தார். இதில் லக்ஷ்யா சென், விடிட்சார்னுக்கு எதிராக அபாரமாக போராடி வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

9. 2022 – பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?

அ) இந்தியா

ஆ) சீனா

இ) நார்வே 

ஈ) ஜப்பான்

  • 2022 – பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பதினாறு தங்கப்பதக்கங்களுடன் நார்வே தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்தது.
  • அதைத்தொடர்ந்து ஜெர்மனி 12 தங்கங்களையும், சீனா 9 தங்கங்களையும் பெற்றன.

10. 2022 – ISSF உலகக்கோப்பை பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?

அ) இந்தியா 

ஆ) சீனா

இ) பிரான்ஸ்

ஈ) ரஷ்யா

  • எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற 2022 – ISSF உலகக் கோப்பையில் இந்தியா நான்கு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. நார்வே ஆறு பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் சார்பாக தங்கம் வென்றவர்கள்: பெண்கள் 25 மீ பிஸ்டல் அணி – (ரகி சர்னோபத், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான்); ஆடவர்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் – சௌரப் சௌத்ரி; மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் அணி – (ஈஷா சிங், நிவேதா பரமானந்தம், ருசிரா வினர்கர்) மற்றும் 25 மீ ரேபிட் பையர் பிஸ்டல் கலப்பணி – (ரிதம் சங்வான் மற்றும் அனிஷ் பன்வாலா).

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வீடுகளின் விலை அதிகரிப்பு: உலக பட்டியலில் இந்தியாவுக்கு 51-ஆவது இடம்

உலக அளவில் வீடுகளின் விலை அதிகரிப்பு பட்டியலில் இந்தியா 2.1 சதவீதத்துடன் 51ஆவது இடத்தில் இருப்பதாக சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் ப்ராக் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

உலக அளவில் மிக முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை ஆண்டுக்கு ஆண்டு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தப் பட்டியலில் கடந்தாண்டு அக்-டிசம்பர் காலாண்டு நிலவரப்படி 59.6% விலை அதிகரிப்புடன் துருக்கி முதலிடத்தில் உள்ளது.

அதற்கடுத்தபடியாக, நியூஸிலாந்து (22.6%), செக் குடியரசு (22.1%), ஸ்லோவேக்கியா (22.1%), ஆஸ்திரேலியா (21.8%) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா 2.1 சதவீத உயர்வுடன் இப்பட்டியலில் 51-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 2021-இல், மலேசியா, மால்டா, மொரக்கோ நாடுகளின் சந்தைகளில் வீடுகளின் விலை முறையே 0.7%, 3.1% மற்றும் 6.3% குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

2. இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை 8.5%-ஆக குறைத்தது பிட்ச்

அடுத்த நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 8.5 சதவீதமாக குறைத்துள்ளதாக தரமதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

ரஷியா மற்றும் உக்கரைன் இடையேயான போர் சர்வதேச அளவில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது. ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ச்சியாக வர்த்தக தடை அறிவிப்புகளை வெளியிட்டு வருவது சர்வதேச நிலைத்தன்மையை கேள்விக்குறியாக் -கியுள்ளது. இதனால் வரும் நாள்களில் எரிபொருள்களின் உயரும் என்பதுடன் பணவீக்கமும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு பின்னடைவு சூழல்களைக் கருத்தில்கொண்டு அடுத்த நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 10.3 சதவீதத்தி -லிருந்து 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடு 0.6 சதவீதம் உயர்த்தப்பட்டு 8.7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2023-24-இல் இந்த வளர்ச்சி விகிதம 7 சதவீதமாக இருக்கும் என பிட்ச் தெரிவித்துள்ளது.

3. மார்ச்.24 – உலக காசநோய் நாள்

கருப்பொருள்: Invest to End TB. Save Lives

4. மார்ச்.23 – தியாகிகள் நாள்

5. ‘H2Ooooh!’ முன்னெடுப்பின் கீழ் இந்திய நதிகளின் பாதுகாப்பு குறித்த 3 அனிமேஷன் படங்கள் வெளியீடு

உலக தண்ணீர் நாளையொட்டி, தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம், UNESCO மற்றும் பிற பங்குதாரர்கள் இணைந்து “H2Ooooh! – இந்தியாவின் குழந்தைகளுக்
-கான நீர் திட்டம்” முன்முயற்சியின்கீழ் 3 அனிமேஷன் படங்களை வெளியிட்டனர்.

இந்திய ஆறுகளின் பாதுகாப்பை மையமாகக்கொண்டு பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்த கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் இவை ஆகும். தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து 2021 ஜூலை மாதம் UNESCOஆல் இந்த முயற்சி தொடங்கப்பட்டது.

இது தொடங்கப்பட்டதில் இருந்து, 18 மாநிலங்களில் உள்ள 53 பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 31000 மாணவர்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் வலுவான ஆதரவைப் பெற்றது.

6. மூன்று நாள் சர்வதேச புவியியல் மாநாடு தில்லியில் நிறைவடைந்தது

“அடுத்த தசாப்தத்திற்கான புவி அறிவியல்: சவால்கள் மற்றும் சமூகம்” என்ற கருப்பொருளில் மூன்று நாள் சர்வதேச புவி அறிவியல் நிகழ்வான 36ஆவது சர்வதேச புவியியல் மாநாடு நேற்று நிறைவுபெற்றது.

புவியியல் செயல்முறைகள், ஓபியோலைட் அடைப்பு, இமயமலையில் மேலோடு தடித்தல் மற்றும் உருமாற்றம், புவியியல் கரியமில சேமிப்பு உள்ளிட்டவை குறித்து மாநாட்டின் மூன்றாவது நாளில் விவாதிக்கப்பட்டது.

7. தமிழ்நாட்டில் உள்ள தேசிய விரைவுச் சாலைகளின் நீளம்

பாரத்மாலா திட்டத்தின் முதல் கட்டத்திற்கு முன்னும், பாரத்மாலா முதல் கட்டத்தின் போதும், 2014ஆம் ஆண்டு முதல் கட்டமைக்கப்பட்ட தேசிய விரைவுச் சாலைகளின் நீளம் (இந்த அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது) தமிழ்நாட்டில் மட்டும் 106 கிலோமீட்டர் ஆகும்.

8. வளரிளம் பெண்களுக்கான திட்டம்

நாடு முழுவதும் 11 வயது முதல் 14 வயது உள்ள பள்ளிக்குச்செல்லாத வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதில் இத்திட்டம் கவனஞ்செலுத்துகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வளரிளம் பெண்களுக்கு 600 கலோரி துணை ஊட்டச்சத்துக்கள், 18 முதல் 20 கிராம் புரதச்சத்து மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் ஆண்டுக்கு 300 நாட்கள் வழங்கப்படுகிறது.

சமீபத்தில், வளரிளம் பெண்களுக்கான திட்டம், சக்‌ஷம் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டது.

11 முதல் 14 வயதுடைய பெண்கள், கல்வி உரிமைச் சட்டம் 2009இன்கீழ் கொண்டுவரப்பட்டனர். இந்த மாற்றியமைக் -கப்பட்ட திட்டத்தின் பயனாளிகளாக முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் வடகிழக்கு மாவட்டங்கள் உள்ள 14 வயது முதல் 18 வயதுள்ள பெண்களும் அடங்குவர்.

தமிழ்நாட்டில் 299 பயனாளிகள் உள்ளனர். இவர்களுக்
-கான கடந்த 2020-21ஆம் ஆண்டில் `1.23 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

9. ஊட்டச்சத்து திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு `250 கோடி ஒதுக்கீடு

நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, ஊட்டச்சத்து திட்டம் கடந்த 2018 மார்ச்.8ஆம் தேதி தொடங்கப்பட்டது. 6 வயது வரை உள்ள குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பினிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து நிலவரத்தை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு `250 கோடியே 60 இலட்சத்து 44 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் `218 கோடியே 79 இலட்சத்து 36 ஆயிரத்தை தமிழ்நாடு பயன்படுத்தியுள்ளது.

10. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊக்கம்மிக்க மூன்று பெண்கள் NITI ஆயோக்-இன், “இந்தியாவின் மாற்றத்திற்கான பெண்கள்” விருதுகளைப் பெற்றுள்ளனர்.

“வலிமையும், திறமையும் மிக்க இந்தியா” என மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெண்கள் தொடர்ந்து முக்கியப்பங்களிப்பு செய்து வருகின்றனர். பல்வேறு துறைகளில் இத்தகைய பெண்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், NITI ஆயோக் இந்தியாவின் மாற்றத்திற்கான பெண்கள் விருதுகளை நிறுவியுள்ளது.

இந்த ஆண்டு இந்திய விடுதலையின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவின் பகுதியாக 75 பெண் சாதனையாளர்களு -க்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இவற்றுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் அவ்விருதைப் பெற்றுள்ளனர். அவர்கள்.,

1. வித்யா சுப்பிரமணியன், சென்னை, வித்யா சுப்பிரமணியன் கல்வி நிறுவனம்.

2. டாக்டர் இரம்யா S மூர்த்தி, சென்னை, நிர்மயா இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிட்.

3. தேவிபாலா உமாமகேஸ்வரன், சென்னை, பிக்பிக்ஸ் கேட்ஜெட் கேர் எல்எல்பி.

1. Which institution released the ‘G20 People’s Climate Vote 2021 report’?

A) UNDP

B) UNESCO

C) World Bank

D) WHO

  • According to the G20 People’s Climate Vote 2021 report, which was recently released by the United Nations Development Program (UNDP), around 67 percent of the youth in India consider the climate crisis as a global emergency. The youth are also vocal about the need for urgent policy creation and change. Whereas, India has only about 58 per cent adults, who consider climate change a global emergency.

2. When is the Indian Navy Day celebrated every year?

A) March 10

B) December 04 

C) February 10

D) August 04

  • Every Year, the 4th December is celebrated as the Indian Navy Day, to respect the Indian Navy’s counter-attack in Operation Trident during the Indo-Pakistan war in 1971. This year, the Navy had celebrated the event under the theme – “Swarnim Vijay Varsh” to commemorate 50th Anniversary of India’s victory in the 1971 war.

3. What is the theme of ‘World Consumer Rights Day 2022’?

A) Consumer Rights First

B) Leaving No one Behind

C) Fair Digital Finance 

D) Sustainable Consumerism

  • World Consumer Rights Day is celebrated on March 15 globally to acknowledge the rights of consumers. It aims to encourage awareness on consumer rights across the world. Every year, a particular theme is followed to celebrate this day across the world. The theme for World Consumer Rights Day 2022 is “Fair Digital Finance”.

4. When is the National Tourism Day celebrated?

A) January 25 

B) February 25

C) March 25

D) April 25

  • National Tourism Day is celebrated across the country on January 25 every year to spread awareness about the importance of tourism and its impact on the economy.
  • This year, the Ministry of Tourism is observing National Tourism Day under the aegis of ‘Azadi Ka Amrit Mahotsav’. This year’s theme for National Tourism Day is ‘Rural and Community Centric Tourism’.

5. Which Indian bank has been awarded IFR Asia’s ‘Asian Bank of The Year’?

A) ICICI Bank

B) State Bank of India

C) Axis Bank 🗹

D) HDFC Bank

  • India’s third-largest private sector bank, Axis Bank, has been awarded IFR Asia’s Asian Bank of The Year, to acknowledge its performance in equity and debt issuance. The bank has also won the ‘Best DCM House in India’ Award at the Finance Asia’s Country Awards, this year. The bank has 4,700 domestic branches and 11,060 ATMs across the country as on December 31, 2021.

6. Which bank was the first to enter the metaverse recently?

A) World Bank

B) Reserve Bank of India

C) JP Morgan 

D) Citi Union Bank

  • JPMorgan has become the world’s first bank to set up shop in the metaverse. The largest bank in the US has opened a lounge in the blockchain-based world Decentraland.

7. Which Indian personality has been appointed as the Chairperson of Air India?

A) N Chandrasekaran 

B) Nandan Nilekani

C) Sanjiv Mehta

D) Deepak Parekh

  • N Chandrasekaran, the Chairman of Tata Sons, has been officially appointed as the chairman of Air India, the airline entity recently acquired by Tata group from the Indian Government.
  • Alice Gee Varghese Vaidyan, former CMD of General Insurance Corporation, and Sanjiv Mehta, chairman of Hindustan Unilever, were also inducted as Independent Directors on the board.

8. Which Indian player won the silver medal in German Open 2022 tournament?

A) P V Sindhu

B) Kidambi Srikanth

C) Lakshya Sen 

D) Sain Nehwal

  • Indian badminton player Lakshya Sen met Thailand’s ace player and World No. 20 Kunlavut Vitidsarn in the Men’s Singles finals of German Open 2022. Lakshya Sen, who took medical breaks for blisters, settled for silver after he put up a great fight against Vitidsarn.

9. Which country topped the medal tally in the 2022 Beijing Winter Olympics?

A) India

B) China

C) Norway 

D) Japan

  • For the second Games in a row, Norway topped the medal tally in the 2022 Beijing Winter Olympics, with 16 golds. It was followed by Germany with 12 golds and China with 9.

10. Which country topped the medal tally in the ISSF World Cup 2022?

A) India 

B) China

C) France

D) Russia

  • India topped the medal tally in the ISSF World Cup 2022 in Cairo, Egypt with a total of seven, four gold, two silver and one bronze, medals. Norway was at the second place India with six medals.
  • India’s Gold medal winners are Women’s 25m pistol team – (Rahi Sarnobat, Esha Singh and Rhythm Sangwan); Men’s 10m air pistol – (Saurabh Chaudhary); Women’s 10m air pistol team – (Esha Singh, Nivetha Paramanantham, Ruchira Vinerkar) and 25m rapid fire pistol mixed team – (Rhythm Sangwan and Anish Bhanwala).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!