Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

அரசாங்கத்தின் வகைப்பாடுகள் Online Test 11th Political Science Lesson 6 Questions in Tamil

அரசாங்கத்தின் வகைப்பாடுகள் Online Test 11th Political Science Lesson 6 Questions in Tamil

Congratulations - you have completed அரசாங்கத்தின் வகைப்பாடுகள் Online Test 11th Political Science Lesson 6 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1

கீழ்க்கண்டவற்றில் எது அரசியல் மற்றும் நிர்வாகம் சார்ந்த துறைகளில் உறுப்பினர்களை உள்ளடக்கியதாகும்

A
நீதித்துறை
B
அரசு
C
அரசாங்கம்
D
இது எதுவும் இல்லை
Question 1 Explanation: 
(குறிப்பு - அரசாங்கம் என்பது அரசின் மிக முக்கிய அங்கமாகும். அரசாங்கம் என்பது அரசியல் மற்றும் நிர்வாகம் சார்ந்த துறைகளின் உறுப்பினர்களை உள்ளடக்கியதாகும்)
Question 2

அரசாங்கத்தின் பணிகளாவன கீழ்க்கண்டவற்றுள் எது

  1. கொள்கை உருவாக்கம்
  2. சட்டம் இயற்றுதல்
  3. நீதி வழங்குதல்
A
I, II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
இவை அனைத்தும்
Question 2 Explanation: 
(குறிப்பு - மக்கள் நலன் சார்ந்த கொள்கை உருவாக்கத்திலும், நடைமுறைப்படுத்துவதிலும் அரசாங்கம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் அரசாங்கம் என்பது சட்டம் இயற்றுதல், செயல்முறைப்படுத்துதல் மற்றும் நீதி வழங்குதல் ஆகிய பணிகளையும் மேற்கொள்கிறது)
Question 3

அரசாங்கத்தின் அடிப்படை அங்கம் அல்லாதது எது

A
சட்டமன்றம்
B
நீதிமன்றம்
C
காவல்துறை
D
செயலாட்சி துறை
Question 3 Explanation: 
(குறிப்பு - சட்டமன்றம், நீதிமன்றம் மற்றும் செயலாட்சி துறை இவை மூன்றும் அரசாங்கத்தின் முக்கிய அங்கங்கள் ஆகும். இம்மூன்று அங்கங்களும் அரசின் நோக்கங்களுக்கு செயல்முறை வடிவம் கொடுக்கின்றது)
Question 4

அரசாங்கத்தின் வகைகளுள் சரியானது எது

  1. ஒற்றையாட்சி
  2. கூட்டாட்சி
  3. நாடாளுமன்ற முறை
  4. குடியரசு தலைவர் முறை
A
I, II, III மட்டும் சரி
B
I, III, IV மட்டும் சரி
C
I, II, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 4 Explanation: 
(குறிப்பு - அரசாங்கத்தை ஒற்றையாட்சி, கூட்டாட்சி, நாடாளுமன்ற முறை மற்றும் குடியரசு தலைவர் முறை என பல வகைப்படுத்தலாம்)
Question 5

அரசாங்கத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான அணுகுமுறைகளுள் தவறானது எது

A
ஒப்பீட்டு மற்றும் வரலாற்று அணுகுமுறை
B
சட்ட மற்றும் நிறுவனம் சார்ந்த அணுகுமுறை
C
அரசியல் நிறுவன அணுகுமுறை
D
அரசியல் சமூகவியல் அணுகுமுறை
Question 5 Explanation: 
(குறிப்பு - பல்வேறு வகையான அணுகுமுறைகள் மூலம் அரசாங்கத்தை அறிந்து கொள்ள முயல்வது நமக்கு அரசாங்கத்தின் தோற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை விரிவாக அறிந்துகொள்ள உதவுகிறது)
Question 6

ஒப்பீட்டு மற்றும் வரலாற்று அணுகுமுறையை கையாண்டவர்களில் அல்லாதவர் யார்

A
அரிஸ்டாட்டில்
B
மாண்டெஸ்கியூ
C
லாக்
D
ஆஸ்டின்
Question 6 Explanation: 
(குறிப்பு - மேற்கு ஒப்பிட்டு மற்றும் வரலாற்று அணுகுமுறை மேற்கத்திய அரசியல் நிறுவனங்களை பண்டைய காலம் முதல் தற்காலம் வரை கண்டறிந்துள்ளது. இந்த அணுகுமுறை விளக்க ரீதியான தன்மையைக் கொண்டது)
Question 7

அரசியல் என்னும் படைப்பு கீழ்கண்டவர்களில் யாருடையதாகும்

A
அரிஸ்டாட்டில்
B
மாண்டெஸ்கியூ
C
சாக்ரடீஸ்
D
ஆஸ்டின்
Question 7 Explanation: 
(குறிப்பு - அரிஸ்டாட்டில் தனது மிகச் சிறந்த படைப்பான அரசியல் என்னும் புத்தகத்தை எழுதும் முன் 158 நாடுகளின் அரசு அமைப்புகளை பகுத்தாய்ந்துள்ளார்.)
Question 8

இங்கிலாந்து அரசமைப்பின் உறுதி தன்மைக்கு அதிகாரங்களின் பிரிவினையே காரணம் என்று கண்டறிந்தவர் யார்

A
அரிஸ்டாட்டில்
B
மாண்டெஸ்கியூ
C
சாக்ரடீஸ்
D
ஆஸ்டின்
Question 8 Explanation: 
(குறிப்பு - இங்கிலாந்து அரசமைப்பை ஆராய்ந்த பின்னர் இங்கிலாந்து அரசமைப்பின் உறுதித் தன்மைக்கு அதிகாரங்களின் பிரிவினையை காரணம் என்று கண்டறிந்தவர் மாண்டெஸ்கியூ என்பவர் ஆவார்.)
Question 9

சட்ட மற்றும் நிறுவனம் சார்ந்த அணுகு முறையை கையாண்டவர்களில் அல்லாதவர் யார்

A
ஆஸ்டின்
B
லாக்
C
பெந்தம்
D
டைசி
Question 9 Explanation: 
(குறிப்பு - பெந்தம், ஆஸ்டின் மற்றும் டைசி போன்ற அறிஞர்கள் சட்ட மற்றும் நிறுவனம் சார்ந்த அணுகுமுறையைக் கையாண்டனர். இது அரசியல் நிறுவனங்களின் முறையான சட்ட கட்டமைப்பை மையமாகக் கொண்டதாகும்)
Question 10

இங்கிலாந்து சட்டத்தினை சீரமைத்தவர் யார்

A
ஆஸ்டின்
B
லாக்
C
பெந்தம்
D
டைசி
Question 10 Explanation: 
(குறிப்பு - அரசாங்கம் மற்றும் சட்டத்திற்கு இடையே ஆன தொடர்புகளை விளக்குவதற்கு ஏதுவாக சில கோட்பாடுகளை உருவாக்கம் செய்ய சட்ட மற்றும் நிறுவனம் சார்ந்த அணுகுமுறை உதவுகின்றது. பெந்தம் இங்கிலாந்து சட்டத்தை சீரமைப்பு செய்த தன்னிகரற்ற அறிஞர் ஆவார்)
Question 11

அரசியல் மற்றும் பொருளாதார அணுகுமுறை கீழ்க்கண்டவற்றில் எதைப் பற்றி விவாதிக்கிறது

A
சந்தையின் பங்களிப்பு
B
உற்பத்தி வழிமுறைகள்
C
சமூகத்திற்கு உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்லுதல்
D
இவை அனைத்தும்
Question 11 Explanation: 
(குறிப்பு - அரசியல் பொருளாதார அணுகுமுறை அரசியலுக்கு பொருளாதாரம் சார்ந்த விளக்கங்களை அளிக்கின்றது. மேலும் சந்தையின் பங்களிப்பு உற்பத்தி வழிமுறைகள் மற்றும் சமூகத்திற்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லுதல் குறித்து இது விவாதிக்கிறது.)
Question 12

அரசாங்கத்தை மூன்று வகைப்படுத்தியவர் யார்

A
மாண்டெஸ்கியூ
B
அரிஸ்டாட்டில்
C
ஆஸ்டின்
D
டைசி
Question 12 Explanation: 
(குறிப்பு - மாண்டெஸ்கியூ அரசாங்கத்தை மூன்று விதமாக வகைப்படுத்துகிறார். அவை முறையே குடியரசு, முடியாட்சி மற்றும் கொடுங்கோல் அரசாங்கம் ஆகும்)
Question 13

கீழ்க்கண்டவற்றில் இது ஒரு தனி மனிதனின் ஆட்சியாகும்

A
குடியரசு அரசாங்கம்
B
கொடுங்கோல் அரசாங்கம்
C
முடியாட்சி அரசாங்கம்
D
இது எதுவும் இல்லை
Question 13 Explanation: 
(குறிப்பு - முடியாட்சி அரசாங்கம் என்பது ஒரு தனி மனிதனின் ஆட்சியாகும். அத்துடன் நிலையாக நிறுவப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப் பெறுவது ஆகும்)
Question 14

ஒரு அரசு தொடர்ந்து நீடித்திருப்பதற்கு உறுதியான சமுதாயத்தினுடைய குறிப்பிட்ட உத்வேகத்தின் பண்பியல் வடிவத்தை சார்ந்து இருக்கிறது என்பது யாருடைய கூற்றாகும்

A
மாண்டெஸ்கியூ
B
அரிஸ்டாட்டில்
C
பெந்தம்
D
லாக்
Question 14 Explanation: 
(குறிப்பு - ஒரு அரசு தொடர்ந்து நீடித்து இருப்பதற்கு உறுதியான சமுதாயத்தினுடைய குறிப்பிட்ட உத்வேகத்தின் பண்பியல் வடிவத்தை சார்ந்து இருக்கிறது என்பது மாண்டெஸ்கியூ என்பவரின் கூற்று ஆகும். கொடுங்கோல் அரசாங்கம் என்பது ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்பிற்கு உட்பட்டே ஆளுகை நடைபெறுவதாகும்)
Question 15

அரசாங்கம் என்பது கீழ்க்கண்டவற்றில் எவைகளுக்கு சட்டமியற்றி செயல்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பினை குறிப்பதாகும்

A
குடிமை
B
பெரு நிறுவனம்
C
மதம், கல்வி, பிற குழுக்கள்
D
இவை அனைத்திற்கும்
Question 15 Explanation: 
(குறிப்பு - அரசாங்கம் என்பது அரசின் செயல் ஆட்சிப் பணிகளை குறிப்பதாகும். இது குடிமை, பெருநிறுவன மற்றும் பிற குழுக்களுக்கு சட்டமியற்றி செயல்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பினை குறிப்பதாகும்)
Question 16

அரசாங்கம் என்னும் சொல் கீழ்க்காணும் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டதாகும்

A
ஆங்கிலம்
B
பிரெஞ்ச்
C
லத்தீன்
D
கிரேக்கம்
Question 16 Explanation: 
(குறிப்பு - அரசாங்கம் என்ற சொல்லானது பழைய பிரெஞ்சு வார்த்தையான ஆளுநர் (Governor) என்பதில் இருந்து பெறப்பட்டதாகும்)
Question 17

கீழ்க்காணும் எந்த நாட்டின் முடியாட்சி மிகப்பழமை வாய்ந்த அரசாங்க வடிவமாகும்

A
இங்கிலாந்து
B
ஸ்வீடன்
C
ருமேனியா
D
ஸ்பெயின்
Question 17 Explanation: 
(குறிப்பு - இங்கிலாந்தின் முடியாட்சியை மிகப் பழமை வாய்ந்த அரசாங்க வடிவமாகும். குடியாட்சியில் மன்னர் அல்லது ராணி அரசின் தலைவராக இருப்பார். இங்கிலாந்து முடியாட்சியானது அரசமைப்பிலான முடியாட்சி என அழைக்கப்படுகிறது)
Question 18

ஆளுநர் என்னும் சொல் கீழ்காணும் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டதாகும்

A
ஆங்கிலம்
B
பிரெஞ்ச்
C
லத்தீன்
D
கிரேக்கம்
Question 18 Explanation: 
(குறிப்பு - ஆளுநர் என பொருள் தரும் கவர்னர் (Governor) என்ற சொல்லானது இலத்தீன் சொல்லான குபர்னேட் (Gubernate) என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்)
Question 19

அரசாங்கத்தின் வகைப்பாடுகளை இரண்டு அடிப்படைகளின் இணைவில் பகுப்பாய்ந்தவர் கீழ்க்கண்டவற்றில் யார்

A
அரிஸ்டாட்டில்
B
சாக்ரடீஸ்
C
பெந்தம்
D
டைசி
Question 19 Explanation: 
(குறிப்பு - அரிஸ்டாட்டில் இரண்டு அடிப்படைகளில் இணைவில் அவர் பகுப்பாய்ந்த அரசமைப்புகளை வகைபடுத்தியுள்ளார். முதலாவது அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒன்று, சில மற்றும் பல என்பதன் அடிப்படையில் முடியாட்சி, பிரபுக்கள் ஆட்சி, தூய அரசியல் அமைப்பு முறை என வகைப்படுத்தியுள்ளார்)
Question 20

கீழ்க்காணும் எந்த ஆட்சிமுறையில் மத்திய அரசாங்கமே அனைத்து அதிகாரத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்

A
குடியரசு ஆட்சி முறை
B
ஒற்றையாட்சி முறை
C
முடியாட்சி முறை
D
கொடுங்கோல் ஆட்சி முறை
Question 20 Explanation: 
(குறிப்பு - ஒற்றையாட்சி அரசாங்கம் அல்லது அரசு என்பது ஒன்றாக இணைந்து செயல்பட கூடிய இறையாண்மை உடைய அரசு ஆகும். ஒற்றையாட்சி முறை அரசாங்கத்தில் மத்திய அரசாங்கமே அனைத்து அதிகாரத்தையும் உள்ளடக்கியதாகும்)
Question 21

ஒற்றை ஆட்சி முறை அரசாங்கங்கள் நடைபெறும் நாடுகளில் தவறானது எது

A
இங்கிலாந்து
B
பிரான்ஸ்
C
சுவிட்சர்லாந்து
D
ஜப்பான்
Question 21 Explanation: 
(குறிப்பு - இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒற்றையாட்சி முறை அரசாங்கங்கள் நடைபெறுகிறது. சுவிட்சர்லாந்தில் நேரடி மக்களாட்சி முறை நடைபெறுகிறது.)
Question 22

ஒரு மத்திய அமைப்பிடம் அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களும் அரசமைப்பு மூலம் வழங்கப்பட்டிருப்பது ஒற்றையாட்சி முறை என்பது கீழ்க்கண்டவரில் யாருடைய கூற்றாகும்

A
சி.எப்.ஸ்ட்ராங்
B
கார்னர்
C
ஏ.வி.டைசி
D
ஏ.வி.டைசி
Question 22 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட கூற்று கார்னர் என்பவருடைய கூற்றாகும். நேர்மையான சக்தியே மேலான சட்டமியற்றும் அதிகாரத்தை வழக்கமாக கொண்டு செயல்படுகிறது என்று ஒற்றையாட்சி முறை பற்றி டைசி என்பவர் கூறுகிறார்)
Question 23

ஒற்றையாட்சி அரசாங்கத்திற்கு தேவையான இரண்டு முக்கிய தகுதிகளாக கருதப்படுபவற்றில் சரியானது எது

  1. மத்திய அரசாங்கத்தின் மேலான தன்மை
  2. இறையாண்மை உடைய துணை அமைப்புகள் இல்லாதிருத்தல்.
  3. துணை சட்டமியற்றும் அமைப்பு இல்லாதிருத்தல்.
A
I, II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
இவை அனைத்தும்
Question 23 Explanation: 
(குறிப்பு - ஒற்றையாட்சி அரசாங்கத்திற்கு இரண்டு முக்கிய தகுதிகள் உள்ளன. அவை மத்திய அரசாங்கத்தின் மேலான தன்மை, இறையாண்மை உடைய துணை அமைப்புகள் இல்லாதிருத்தல் என்பன ஆகும். இவ்வாறு கூறியவர் C.F.ஸ்ட்ராங் என்பவராவார்)
Question 24

ஒற்றை ஆட்சி முறை அரசாங்கத்தின் நிறைகளுள்  அல்லாதது கீழ்க்கண்டவற்றில் எது

A
இது சிறிய நாடுகளுக்கு உகந்தது
B
அதிகாரம் மற்றும் பொறுப்பு சார்ந்த மோதல்கள் ஏற்படாது.
C
செயல்பாடுகள் விரைவாக இருக்கும்.
D
அதிக செலவீனம் கொண்டதாகும்
Question 24 Explanation: 
(குறிப்பு - ஒற்றை ஆட்சி முறை அரசாங்கத்தின் நிறைகளாக கருதப்படுபவை இது சிறிய நாடுகளுக்கு உகந்தது, அதிகாரம் மற்றும் பொறுப்பு சார்ந்த மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை, ஒற்றையாட்சி முறையில் சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படுவதுடன் செயல்பாடுகள் விரைவாக இருக்கும். மேலும் இது குறைந்த செலவினம் கொண்டதாகும்)
Question 25

கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது

  1. கூற்று 1- ஒற்றையாட்சி அரசாங்கத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது எளிதானது அல்ல.
  2. கூற்று 2 - ஒற்றையாட்சி அரசாங்கத்தில் நாடு முழுவதற்குமான ஒரே சீரான சட்டங்கள் கொள்கைகள் மற்றும் நிர்வாகம் ஆகியவை இருக்கும்.
  3. கூற்று 3 - இது குறைந்த செலவீனம் கொண்டதாகும்.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 25 Explanation: 
(குறிப்பு - ஒற்றையாட்சி அரசாங்கத்தில் திருத்தங்கள் கொண்டுவருவது எளிதானது. ஒற்றையாட்சி முறையில் சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படுவதுடன் செயல்பாடுகள் மிக விரைவாக இருக்கும்)
Question 26
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. கூற்று 1 - ஒற்றையாட்சி அரசாங்க முறை சிறிய நாடுகளுக்கு பொருந்தாது.
  2. கூற்று 2 - ஒற்றையாட்சி முறை அரசாங்கத்தில் பல சிக்கலான பிரச்சனைகளை சமாளிக்க நேர்வதால் நிர்வாக ரீதியான தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
  3. கூற்று 3 - ஒற்றையாட்சி முறையில் மத்திய அரசாங்கத்திடம் அதிக அதிகாரங்கள் குவிந்துள்ளதால் மத்திய அரசு எதேச்சதிகார போக்கை
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 26 Explanation: 
(குறிப்பு - ஒற்றையாட்சி முறை பெரிய நாடுகளுக்கு பொருந்தாது. ஒற்றையாட்சி முறையில் மத்திய அரசானது தேவைகள் சார்ந்து துவக்க முறை மற்றும் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. இவை அனைத்தும் ஒற்றையாட்சி முறையில் குறைகளாக கருதப்படுகிறது.
Question 27

இந்திய அரசமைப்பின் ஒற்றையாட்சி இயல்புகளில் தவறானது எது

A
அதிகாரப் பகிர்வு அல்லது மத்திய அரசுக்கு சாதகமாக இருக்கும்.
B
இந்தியாவில் மத்திய பட்டியலானது மாநில பட்டியலை விட அதிக அதிகாரங்களை கொண்டிருக்கிறது.
C
முக்கியமான அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசிடமே இருக்கிறது.
D
பொதுப்பட்டியலில் மாநில அரசின் அதிகாரமே மேலோங்கியிருக்கிறது.
Question 27 Explanation: 
(குறிப்பு - இந்திய அரசமைப்பின்படி மத்திய பட்டியல், பொதுப்பட்டியல் மற்றும் எஞ்சிய அதிகாரங்களும் மத்திய அரசாங்கத்திடமே உள்ளது. இதற்கு மாற்றாக அமெரிக்க அரசு அமைப்பின்படி எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் உள்ளது)
Question 28

கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?  

  1. இந்தியாவில் மாநில அரசுகளுக்கு தங்களது நிலப்பரப்பிற்கு உட்பட்ட பகுதிகளின் மீது அதிகாரம் கிடையாது.
  2. இந்திய அரசமைப்பானது மத்திய அரசாங்கத்தினை அதிக வலிமையானதாக உருவாக்கியுள்ளது.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 28 Explanation: 
(குறிப்பு - இந்திய நாடாளுமன்றம் தன்னிச்சையாக மாநிலங்களின் பெயர், நிலப்பரப்பு மற்றும் எல்லைகளை வரையறை செய்ய முடியும்)
Question 29

கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது

  1. இந்திய அரசமைப்பின் பெரும்பான்மையான பகுதியை நாடாளுமன்றம் தன்னிச்சையாக அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாக மாற்றலாம்
  2. அரசமைப்பு சட்ட திருத்தத்திற்கு ஆனது பக்கத்தினை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே உள்ளது.
  3. அமெரிக்காவில் மாநிலங்களுக்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை துவக்க உரிமை உண்டு.
A
I, II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 29 Explanation: 
(குறிப்பு - இந்தியாவில் அரசமைப்புச் சட்ட திருத்தத்திற்கான துவக்கத்தினை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கே உள்ளது. மாநில அரசாங்கங்களுக்கு அவ்வுரிமை கிடையாது)
Question 30

இந்தியாவில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் பற்றிய கூற்றுகளில் எது சரியானது

  1. கூட்டாட்சித் தத்துவத்தின் படி நாடாளுமன்றத்தின் மேலவையில் மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் அளித்தல் வேண்டும்.
  2. இந்தியாவில் மேலவையில் மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 30 Explanation: 
(குறிப்பு - இந்திய மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் மாநிலங்களவையில் அளிக்கப்படவில்லை)
Question 31

கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது

A
இந்தியா ஒற்றைக் குடியுரிமை என்னும் முறையினை ஏற்றுக்கொண்டுள்ளது.
B
இந்தியாவில் மாநிலங்களுக்கு தனி குடியுரிமை கிடையாது.
C
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற கூட்டாட்சி அரசுகளில் குடிமக்கள் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளனர்.
D
நம் நாட்டில் எந்த மாநிலத்திலும் பிறந்த குடிமக்கள் மாநில வேறுபாடின்றி நாடு முழுவதும் ஒரே மாதிரியான உரிமைகளை கொண்டிருக்க முடியாது.
Question 31 Explanation: 
(குறிப்பு - இந்தியா ஒற்றைக் குடியுரிமை என்னும் முறையினை ஏற்றுக்கொண்டுள்ளது. நம் நாட்டில் எந்த மாநிலத்திலும் பிறந்த அல்லது வசிக்கின்ற அனைத்து குடிமக்களும் மாநில வேறுபாடின்றி நாடு முழுவதும் ஒரே மாதிரியான உரிமைகளை கொண்டிருக்கின்றனர்)
Question 32

ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்

A
குடியரசு தலைவர்
B
பிரதமர்
C
முதல்வர்
D
இவர்கள் யாரும் அல்ல
Question 32 Explanation: 
(குறிப்பு - ஒரு மாநிலத்தின் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை மாறாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவர் குடியரசு தலைவரின் விருப்பத்தின் அடிப்படையிலேயே பணியை தொடர்கிறார்)
Question 33

கீழ்க்காணும் நாடுகளில் கூட்டாட்சி முறையிலான அரசாங்கம் நாடு எது

A
பிரேசில்
B
ஆஸ்திரேலியா
C
கனடா
D
இந்தியா
Question 33 Explanation: 
(குறிப்பு - அமெரிக்கா, பிரேசில், கனடா, ரஷ்யா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் கூட்டாட்சி முறையிலான அரசாங்கத்தினை கொண்டுள்ளன. இந்தியா ஒற்றையாட்சி என்னும் முறையை கொண்டுள்ளது.)
Question 34

இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி இயல்புகளுள் அல்லாதவை எது

A
இரட்டை அரசாங்கம்
B
எழுதப்பட்ட அரசமைப்பு
C
நெகிழும் அரசமைப்பு
D
சுதந்திரமான நீதித்துறை
Question 34 Explanation: 
(குறிப்பு - இரட்டை அரசாங்கம், எழுதப்பட்ட அரசமைப்பு, அதிகார பங்கீடு, அரசமைப்பின் மேலான தன்மை, நெகிழா அரசமைப்பு, சுதந்திரமான நீதித்துறை, ஈரவை சட்டமன்றமுறை போன்றவை இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி இயல்புகள் ஆகும்)
Question 35

இந்தியாவில் அதிகாரப் பங்கீடு என்பவற்றில் கீழ்க்கண்டவற்றில் எது இல்லை

A
மத்திய பட்டியல்
B
மாநிலபட்டியல்
C
பொதுப்பட்டியல்
D
மேலவை பட்டியல்
Question 35 Explanation: 
(குறிப்பு - இந்திய அரசமைப்பின் படி மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் மத்திய பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் என்ற அடிப்படையில் அதிகாரம் பங்கிட்டு அளிக்கப்பட்டுள்ளது)
Question 36

கூட்டாட்சி முறையில் நிறைகள் அல்லாதது எது

A
உள்ளாட்சினுடைய தன்னாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு இடையே சமரச ஏற்படுத்துகிறது
B
மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையே அதிகாரம் பகிரபடுவதால் நிர்வாகத் திறன் மேம்படுகிறது
C
மிக சிறிய நாடுகளுக்கு கூட்டாட்சி அரசாங்கம் மிகவும் பொருத்தமானதாகும்
D
பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சிகளுக்கு இது மிகவும் நன்மையாகும்.
Question 36 Explanation: 
(குறிப்பு - கூட்டாட்சி முறை மிகப்பெரிய நாடுகளுக்கு பொருத்தமானதாகும். மிக சிறிய நாடுகளுக்கு இவை பொருந்தாது.)
Question 37

கீழ்காணும் கூட்டாட்சி முறை அரசாங்கத்தின் குறைகளுள் தவறானது எது

A
கூட்டாட்சி அரசாங்கள் அதிக செலவினங்களை கொண்டதாகும்
B
பிரிவினைவாத மனப்போக்கு உருவாக பொதுவான வாய்ப்புகள் உள்ளன
C
தேசியவாத ஒருமைப்பாட்டிற்கு இது வழிவகுக்கிறது
D
சிலசமயங்களில் மாநில அரசாங்கங்கள் அயலுறவுக் கொள்கையில் தடையை ஏற்படுத்துகின்றன
Question 37 Explanation: 
(குறிப்பு - கூட்டாட்சி முறை அரசாங்கம் தேசியவாத ஒருமைப்பாட்டிற்கு ஒரு அச்சுறுத்தலாகும். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பங்கீடு பிரச்சனைகளை ஏற்படுத்தும்)
Question 38
நாடுகளையும் அதன் நாடாளுமன்றத்தின் பெயர்களையும் பொருத்துக.
  1. ஜெர்மனி                  - a) டூமா
  2. ஜப்பான்                    - b) தேசிய சபை
  3. பாகிஸ்தான்           - c) டயட்
  4. ரஷ்யா                        - d) பன்டஸ்டாக்
A
I-d, II-c, III-b, IV-a
B
I-d, II-b, IIi-a, IV-c
C
I-c, II-a, III-d, IV-b
D
I-d, II-a, III-c, IV-b
Question 38 Explanation: 
(குறிப்பு - இஸ்ரேல் - நெசட், நார்வே - ஸ்டோர்டிங், நேபாளம் - பஞ்சாயத்து எனவும் நாடாளுமன்ற பெயர்களை வைத்துள்ளன)
Question 39
பொருத்துக
  1. குடியரசு தலைவர் முறை                   - a) இந்தியா
  2. நாடாளுமன்ற முறை                            - b) அமெரிக்கா
  3. நேரடி மக்களாட்சி                                 - c) இங்கிலாந்து
  4. மறைமுக மக்களாட்சி                         - d) சுவிட்சர்லாந்து
A
I-b, II-c, III-d, IV-a
B
I-d, II-b, IIi-a, IV-c
C
I-c, II-a, III-d, IV-b
D
I-d, II-a, III-c, IV-b
Question 39 Explanation: 
(குறிப்பு - முழுமையான முடியாட்சி பக்ரைனிலும், ஆர்எஸ் அமைப்பிலான முடியாட்சி ஜப்பானிலும் நடைபெறுகிறது. காமன்வெல்த் பகுதிகளாக ஆஸ்திரேலியா அறியப்படுகிறது)
Question 40
பொருத்துக
  1. எழுதப்படாத அரசமைப்பு                  - a) அமெரிக்கா
  2. நெகிழாத அரசமைப்பு                        - b) இந்தியா
  3. ஓரவை சட்டமன்றம்                               - c) இங்கிலாந்து
  4. மதச்சார்பின்மை                                     - d) சீனா
A
I-b, II-a, III-d, IV-b
B
I-d, II-b, IIi-a, IV-c
C
I-c, II-a, III-d, IV-b
D
I-d, II-a, III-c, IV-b
Question 40 Explanation: 
(குறிப்பு - ஓரவை சட்டமன்றம் சீனாவிலும் ஈரவை சட்டமன்றம் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ளது.)
Question 41

சமய ஆட்சி நடைபெறும் நாடுஅல்லாதவை எது

A
வாடிகன்
B
ஈரான்
C
பாகிஸ்தான்
D
ஜப்பான்
Question 41 Explanation: 
(குறிப்பு - பாகிஸ்தான், ஈரான், வாடிகன் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் சமய ஆட்சி நடைபெறுகிறது. இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது முன்வைக்கப்படுகிறது)
Question 42

பொதுவுடைமை கொள்கை அல்லாத நாடு எது

A
கியூபா
B
சீனா
C
வடகொரியா
D
அமெரிக்கா
Question 42 Explanation: 
( குறிப்பு - அரசின் தன்மை அதாவது நோக்கம் லட்சியம் மற்றும் கொள்கை அடிப்படையிலான முறையில் பொதுவுடைமைக் கொள்கையை பின்பற்றும் நாடுகள் கியூபா, சீனா மற்றும் வடகொரியா ஆகும். அமெரிக்க முதலாளித்துவ கொள்கையை பின்பற்றும் நாடாகும்)
Question 43

முடியாட்சி முறை அரசாங்கம் நடைபெறும் நாடுகளில் அல்லாதது எது

A
பக்ரைன்
B
ஜப்பான்
C
இங்கிலாந்து
D
ஆஸ்திரேலியா
Question 43 Explanation: 
(குறிப்பு - முழுமையான முடியாட்சி பஹ்ரைன் நாட்டிலும், அரசியல் அமைப்பிலான முடியாட்சி ஜப்பானிலும், காமன்வெல்த் பகுதி ஆஸ்திரேலியாவிலும் நடைபெறுகிறது. இங்கிலாந்தில் நாடாளுமன்ற முறை அரசாங்கம் நடைபெறுகிறது)
Question 44

நாடாளுமன்ற முறை அரசாங்கத்தை அமைச்சர் குழு முறை என்று அழைத்தவர் யார்

A
ஜவஹர்லால் நேரு
B
டைசி
C
லாக்
D
ஐவர் ஜென்னிங்ஸ்
Question 44 Explanation: 
(குறிப்பு - ஐவர் ஜென்னிங்ஸ் நாடாளுமன்ற முறை அரசாங்கத்தை அமைச்சர் குழு முறை அரசாங்கம் என்று அழைக்கிறார். ஏனெனில் அமைச்சரவை என்பது நாடாளுமன்ற அரசாங்கமுறையினுடைய அதிகாரத்தின் மையக்கருவாக விளங்குகிறது)
Question 45

நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் வேறு பெயர்கள் ஆவன கீழ்க்கண்டவற்றுள் எது

  1. அமைச்சரவை முறை அரசாங்கம்
  2. கடமைப்பாடு உடைய அரசாங்கம்
  3. வெஸ்ட்மினிஸ்டர் அரசாங்கம்
A
I, II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 45 Explanation: 
(குறிப்பு - நாடாளுமன்ற முறையை அரசாங்கம் என்பது அமைச்சரவை முறை அரசாங்கம் என்றும், கடமைப்பாடு உடைய அரசாங்கம் அல்லது வெஸ்ட்மினிஸ்டர் அரசாங்கம் என்றும் அழைக்கப்படுகிறது)
Question 46

நாடாளுமன்ற முறை அரசாங்கம் அல்லாத நாடு கீழ்கண்டவற்றுள் எது

A
இந்தியா
B
அமெரிக்கா
C
இங்கிலாந்து
D
கனடா
Question 46 Explanation: 
(குறிப்பு - நாடாளுமன்ற முறை அரசாங்கம் இங்கிலாந்து, ஜப்பான், கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது)
Question 47

நாடாளுமன்ற முறை அரசாங்கம் கீழ்க்காணும் எந்த நாட்டில் தோன்றியது

A
இந்தியா
B
அமெரிக்கா
C
இங்கிலாந்து
D
கனடா
Question 47 Explanation: 
(குறிப்பு - நாடாளுமன்ற அரசாங்க முறையில் அமைச்சரவை என்பது உண்மையான செயலாட்சியாகும். மேலும் இது நாடாளுமன்றத்திற்கு பொறுப்பாளராக இருப்பதுடன் அதன் நம்பிக்கையை பெற்ற வரையிலும் பதவியில் நீடிக்கிறது. இங்கிலாந்தில்தான் நாடாளுமன்ற முறை அரசாங்கம் தோன்றியது.)
Question 48

நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் இயல்புகளுள் தவறானது எது

A
குடியரசு தலைவர் பெயர் அளவு அதிகாரம் கொண்ட செயலாட்சி ஆவார்.
B
நாடாளுமன்றத்தின் கீழவையில் பெரும்பான்மை பெற்ற கட்சியே ஆட்சி அமைகின்றது.
C
பிரதம மந்திரி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
D
நாடாளுமன்ற முறை அரசாங்கத்தில் குடியரசு தலைவரே தலைமை பொறுப்பு வகிக்கிறார். அவரே அனைத்து அமைச்சர்களுக்கும் தலைவராவார்.
Question 48 Explanation: 
(குறிப்பு - நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் பிரதம மந்திரியே தலைமை பொறுப்பு வகிக்கிறார்.அவரே அமைச்சரவை குழு, நாடாளுமன்றம் மற்றும் ஆட்சியிலுள்ள கட்சியின் தலைவர் ஆவார்)
Question 49

நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் பற்றிய தவறான கூற்று எது

A
நாடாளுமன்ற முறையானது நிலைத் தன்மை உடைய அரசாங்கத்தை தராது.
B
நீண்டகால கொள்கைகளையும் திட்டங்களையும் அரசாங்கத்தின் மூலம் உருவாக்கி செயல்படுத்துவது கடினமாகும்.
C
நாடாளுமன்ற அமைச்சரவையானது எல்லையற்ற அதிகாரம் பெற்று ஒரு சர்வாதிகார தன்மையுடன் செயல்பட வாய்ப்புகள் உண்டு
D
நாடாளுமன்ற முறை அரசாங்கம் அதிகாரப் பிரிவினை அடிப்படையிலான கோட்பாட்டிற்கு ஆதரவாக செயல்படுகிறது.
Question 49 Explanation: 
(குறிப்பு - நாடாளுமன்ற முறையில் அமைச்சரவையானது சட்டமன்றம் மற்றும் செயலாட்சி பிரிவிற்கு தலைமை ஏற்கிறது. இந்த காரணத்தால் நாடாளுமன்ற முறை அரசாங்கம் அதிகாரப் பிரிவினை அடிப்படையிலான கோட்பாட்டிற்கு எதிராக செயல்படுகிறது)
Question 50

நாடாளுமன்ற முறை அரசாங்கத்தினை அமைச்சர் குழுவின் சர்வாதிகாரம் என்று குற்றம் சாட்டுபவர் யார்

A
ராம்சே மூர்
B
ஹரால்டு J.லாஸ்கி
C
ஐவர் ஜென்னிங்ஸ்
D
இவர்கள் யாரும் அல்ல
Question 50 Explanation: 
(குறிப்பு - ராம்சே மூர் (Ramse muir) என்னும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி, நாடாளுமன்ற முறை அரசாங்கத்தினை அமைச்சர் குழுவின் சர்வாதிகாரம் என குற்றம் சாட்டுகிறார்)
Question 51

கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது

  1. கூற்று 1 - அமெரிக்க அதிபர் ஆட்சி முறையில் நாட்டின் நிர்வாக அதிகாரம் அனைத்தும் ஒரு தனி நபரின் கையில் குவிகிறது.
  2. கூற்று 2 - நாடாளுமன்ற ஆட்சி முறையில் பிற அமைச்சர்களுக்கு சமமான முதலாமவர் என்ற அந்தஸ்து மட்டும் பிரதமருக்கு வழங்கப்படுகிறது.
  3. கூற்று 3 - அதிபர் ஆட்சி முறையில் அமைச்சராக நியமிக்கப்பட்டவர் தன்னை நியமித்தவருக்கு மட்டும் பதில் சொல்லக்கடமைப்பட்டவராக இருப்பார்.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 51 Explanation: 
(குறிப்பு - பன்முகத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாட்டில், வெற்றியாளருக்கு எல்லா பரிசுகளும் என்ற கோட்பாட்டின்படி ஆட்சிமுறையில் அதிபருக்கு எல்லா அதிகாரமும் வழங்கி விட்டால் பல்வேறு சமூகங்களின் நலனை, விருப்பத்தை ஒரு தனிநபர் புறக்கணித்து முடிவெடுக்க வாய்ப்பு இருக்கிறது)
Question 52

இந்தியா ஒரு நாடாக தொடர்ந்து நீடிக்க___________ அவசியமாகிறது.

A
முடியாட்சி
B
அரசாட்சி
C
மக்களாட்சி
D
அதிபராட்சி
Question 52 Explanation: 
(குறிப்பு - இந்தியா ஒரு நாடாக தொடர்ந்து நீடிக்க மக்களாட்சி மிக மிக அவசியமாகிறது. இவ்வாறு வாக்குச்சீட்டு மூலம் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் நிர்வாக அமைப்பை ஏற்படுத்தும் முறையை இங்கிலாந்து நாட்டினர் கொண்டு வந்தனர்.)
Question 53

கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது

  1. அமெரிக்க அதிபர் முப்படைகளுக்கும் தலைமை தளபதியாக விளங்குகிறார்.
  2. நாடாளுமன்றத்தின் தீர்மானங்களை கொண்டு ரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு உள்ளது.
  3. அமெரிக்காவில் அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான நாடாளுமன்ற நடைமுறைகள் மிகவும் எளிதானவை.
A
I, II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 53 Explanation: 
(குறிப்பு - அமெரிக்காவில் அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான நாடாளுமன்ற நடைமுறைகள் மிகவும் சிக்கலானவை. நாடாளுமன்றத்தின் திருமணங்களை கூட ரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு உள்ளது)
Question 54

குடியரசுத் தலைவர் முறை அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டு அல்லாதது எது

A
ரஷ்யா
B
இலங்கை
C
பாகிஸ்தான்
D
பிரேசில்
Question 54 Explanation: 
(குறிப்பு - குடியரசு தலைவர் முறை அரசாங்கமானது அதிகாரப் பிரிவினை கோட்பாட்டின்படி கட்டமைக்கப்பட்டது. அமெரிக்கா, பிரேசில், மற்றும் இலங்கை போன்ற நாடுகள் குடியரசு தலைவர் முறை அரசாங்கத்திற்கு உதாரணமாகும்)
Question 55

அமெரிக்க குடியரசு தலைவரின் பதவிகாலம் எத்தனை ஆண்டுகள் ஆகும்

A
மூன்று ஆண்டுகள்
B
நான்கு ஆண்டுகள்
C
ஐந்து ஆண்டுகள்
D
ஆறு ஆண்டுகள்
Question 55 Explanation: 
(குறிப்பு - அமெரிக்காவில் குடியரசுத்தலைவர் வாக்காளர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவரது பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பதவி நீக்கம் முறையின் மூலம் அரசு அமைப்பிற்கு எதிரான தீவிரமான செயல்பாட்டின் காரணமாக மட்டுமே அவரை பதவி நீக்கம் செய்ய முடியும்)
Question 56

உலக வங்கியின் " மாறிவரும் சூழலில் அரசின் நிலை " என்னும் உலக மேம்பாட்டு அறிக்கை கீழ்க்காணும் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது

A
1991இல்
B
1993இல்
C
1995இல்
D
1997 இல்
Question 56 Explanation: 
(குறிப்பு - உலகவங்கியின், மாறிவரும் சூழலில் அரசின் நிலை என்னும் தலைப்பில் உலக மேம்பாட்டு அறிக்கை 1997 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையானது வேகமாக மாறிவரும் உலகச் சூழலில் அரசு எவ்வகையில் நாட்டின் வளர்ச்சியில் சிறப்பாக பங்களிக்கலாம் என்பதை குறித்ததாகும்)
Question 57

உலக மேம்பாட்டு அறிக்கை 1997ஆம் ஆண்டின் படி ஒரு அரசாங்கத்தின் அடிப்படை பணிகளாக கூறப்பட்டுள்ளவை எது

  1. நாட்டில் அடிப்படை சட்டத்தை நிறுவுதல்
  2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  3. அடிப்படை கட்டமைப்பு மற்றும் சமூக பாதுகாப்பில் முதலீடு செய்தல்
A
I, II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 57 Explanation: 
(குறிப்பு - நாட்டில் அடிப்படை சட்டத்தை நிறுவுதல், பேரியல் பொருளாதாரம் நிலைத்தன்மையை பாதுகாத்தல், அடிப்படை கட்டமைப்பு மற்றும் சமூக பாதுகாப்பில் முதலீடு செய்தல், சமூகத்தில் எளிதில் இலக்காகும் நிலையில் உள்ளவர்களை பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை உலக மேம்பாட்டு அறிக்கையின் படி ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய அடிப்படை பணிகளாக உள்ளன)
Question 58

அரசாங்கம் என்பதைக் குறிக்கும் வேறு சொல் எது

A
அரசு
B
ஆட்சி
C
ஆளுகை
D
அதிகாரம்
Question 58 Explanation: 
(குறிப்பு - அரசாங்கம் மற்றும் ஆளுகை ஆகிய இரண்டுமே ஒரு பொருளைக் கொண்டதாகும். இது ஓர் அமைப்பு, நிறுவனம் அல்லது அரசில் அதிகாரத்தை செயல்படுத்துவதை குறிப்பதாகும்)
Question 59

புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக 200 நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து பசுமை வாயுக்களை படிப்படியாக நீக்குவதற்கு எந்த இடத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டனர்

A
பிரேசில்
B
கனடா
C
ருவாண்டா
D
நைஜீரியா
Question 59 Explanation: 
(குறிப்பு - ருவாண்டாவின் தலைநகர் கிகாலியில் 200 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பசுமை வாயுக்களை படிப்படியாக நீக்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டனர்)
Question 60

ஒரு நல்ல அரசாங்கத்தின் பண்புகளாக கருதப்படுபவை எது

  1. சட்டத்தின் ஆட்சியை பின்பற்றுவது
  2. நாட்டின் எல்லையை விரிவுபடுத்துவது
  3. ஒருமித்த கருத்திலான திசைப்போக்கு
A
I, II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 60 Explanation: 
(குறிப்பு - ஒரு நல்ல அரசாங்கம் என்பது, ஒருமித்த கருத்திலான திசைப்போக்கினை கொண்டிருத்தல், சிறப்பான மற்றும் செயல் திறன் வாய்ந்ததாக இருத்தல், சட்டத்தின் ஆட்சியை பின்பற்றுதல், சமநீதிபங்கிலானது மற்றும் உள்ளடக்கியதாக இருத்தல், வெளிப்படையாக, பொறுப்பாக, மறுமொழி பகிர்தலாக இருத்தல் ஆகிய இயல்புகளை கொண்டிருத்தல் வேண்டும்)
Question 61
அரசாங்கத்தின் செயல்திறனை மதிப்பிடும் காரணிகளை பொருத்துக.
  1. சமூக பண்பாட்டு காரணிகள்                 - a) சுதந்திரமான பத்திரிக்கைகள்
  2. அரசியல் காரணிகள்                                    - b) மொத்த உள்நாட்டு  உற்பத்தி
  3. பொருளாதார காரணிகள்                          - c) மத சுதந்திரம்
  4. சுற்றுச்சூழல் காரணிகள்                            - d) பேரிடர் மேலாண்மை
A
I-c, II-a, III-b, IV-d
B
I-d, II-b, IIi-a, IV-c
C
I-c, II-a, III-b, IV-d
D
I-d, II-a, III-c, IV-b
Question 61 Explanation: 
(குறிப்பு - ஒரு அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஏதோ ஒரு காரணியை கொண்டு பகுப்பாய்தல் என்பது இயலாத காரியமாகும். ஆகவே உண்மையான மதிப்பீட்டினை மேற்கொள்ள ஆளுகையின் பல்வேறு அம்சங்களான சமூக பண்பாட்டுக் காரணிகள், அரசியல், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவற்றினை பரிசீலிக்க வேண்டும்)
Question 62

அரசாங்கத்தின் செயல்திறனை மதிப்பீடு செய்யும் அரசியல் காரணிகளுள் அல்லாதது கீழ்கண்டவற்றுள் எது

A
நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை
B
மனித உரிமைகள்
C
மத சுதந்திரம்
D
சுதந்திரமான பத்திரிக்கைகள்
Question 62 Explanation: 
(குறிப்பு - மக்களாட்சி நடைமுறையின் சிறப்பான செயல்பாடு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள், ஊழலற்ற அரசியல் மற்றும் நிர்வாகம், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, சுதந்திரமான நீதித்துறை மற்றும் பத்திரிக்கை துறை, இந்த உரிமைகள் போன்றவை அரசாங்கத்தின் செயல்திறன் மதிப்பீடு செய்யும் அரசியல் காரணிகள் ஆகும்)
Question 63

தேசிய ஒட்டுமொத்த மகிழ்ச்சி குறியீடு எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது

A
2002ஆம் ஆண்டு
B
2004ஆம் ஆண்டு
C
2006ஆம் ஆண்டு
D
2008ஆம் ஆண்டு
Question 63 Explanation: 
(குறிப்பு - தேசிய ஒட்டுமொத்த மகிழ்ச்சி குறியீடு என்பது தற்பொழுது மேம்பட்டு வரும் ஒரு தத்துவம் மட்டுமல்லாமல் குறிப்பிட்ட எந்த ஒரு தேசத்தின் கூட்டு மகிழ்ச்சியினை அளவீடுசெய்யும் குறியீடு ஆகும். இது முதன்முதலில் ஜூலை 18ஆம் நாள், 2008 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட பூட்டான் நாட்டினுடைய அரசமைப்பில் குறிப்பிடப்பட்டது)
Question 64

ஒட்டு மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய பூட்டான் மன்னர் யார்

A
இரண்டாம் மன்னர்
B
மூன்றாம் மன்னர்
C
நான்காம் மன்னர்
D
ஐந்தாம் மன்னர்
Question 64 Explanation: 
(குறிப்பு - 1970களில் பூடானின் நான்காவது மன்னரான ஜிக்மே சிங்யே வாங்க்சு அவர்களால் ஒட்டு மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது)
Question 65

அரசுகளால் உருவாக்கப்படும் தன்விருப்ப சங்கமாக கருதப்படுவது எது

A
கூட்டாட்சி
B
கூட்டமைவு
C
கூட்டரசு
D
இது எதுவும் இல்லை
Question 65 Explanation: 
(குறிப்பு - கூட்டமைவு என்பது அரசுகளால் உருவாக்கப்படும் தன்விருப்ப சங்கமாகும். இது மைய அதிகாரத்தினை வெளியுறவு விவகாரங்களுடன் வரையறை செய்து கூட்டாட்சியை விட குறைவான நிலைத்தன்மையுடையதாக விளங்குகிறது)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 65 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!