Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

அரசியல் சிந்தனை Online Test 11th Political Science Lesson 7 Questions in Tamil

அரசியல் சிந்தனை Online Test 11th Political Science Lesson 7 Questions in Tamil

Congratulations - you have completed அரசியல் சிந்தனை Online Test 11th Political Science Lesson 7 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பிளாட்டோ பிறந்த ஆண்டு எது?
A
பொ.ஆ.மு 420
B
பொ.ஆ.மு.423
C
பொ.ஆ.மு.425
D
பொ.ஆ.மு.427
Question 1 Explanation: 
(குறிப்பு - பிளாட்டோ பிறந்த ஆண்டு பொ.ஆ.மு.427 ஆகும். இவர் கிரேக்க நகர அரசில் உள்ள ஏதன்ஸ் நகரில் பிரபுத்துவ குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்)
Question 2
கீழ்க்கண்டவற்றில் சாக்ரடீஸின் சீடராக இருந்தவர் யார்?
A
அரிஸ்டாட்டில்
B
பிளாட்டோ
C
மாக்கியவல்லி
D
இவர்கள் யாரும் அல்ல
Question 2 Explanation: 
(குறிப்பு - பிளாட்டோவின் பரந்த உடல் அமைப்பின் காரணமாக அவரை பரந்த என பொருள் தரும் பிளாட்டோன் எனப் பெயரிட்டு அழைத்ததாக கூறுகின்றனர். இவர் கிரேக்கத்தின் முன்னணி தத்துவ ஞானிகளில் ஒருவரான சாக்ரடீஸின் சீடர் ஆவார்)
Question 3
பிளாட்டோ தனது அகாடமியை எந்த ஆண்டில் தோற்றுவித்தார்?
A
பொ.ஆ.மு.381
B
பொ.ஆ.மு.383
C
பொ.ஆ.மு.385
D
பொ.ஆ.மு.387
Question 3 Explanation: 
(குறிப்பு - பிளாட்டோ தனது அகாடமியை பொ.ஆ.மு.387 இல் தோற்றுவித்தார். அக்காலத்தில் இயற்கையில் மிகவும் புகழ்வாய்ந்த நபரான அகடெமோஸ் என்பவரின் பெயரால் அகாடமி அமைந்தது)
Question 4
பிளாட்டோவின் அரசியல் தத்துவத்தில் உள்ளடங்காதது கீழ்கண்டவற்றுள் எது?
  1. அரசியல்
  2. நன்நெறி
  3. கணிதம்
  4. சமூகவியல்
  5. ஆன்மீகம்
A
II மட்டும்
B
III மட்டும்
C
V மட்டும்
D
IV மட்டும்
Question 4 Explanation: 
(குறிப்பு - பிளாட்டோ அரசியல், நன்னெறி, கணிதம் மற்றும் சமூகவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியல் தத்துவத்தினை போதித்தார்)
Question 5
பிளாட்டோவின் படைப்புகளில் அல்லாதவை கீழ்கண்டவற்றுள் எது?
A
குடியரசு
B
ராஜதந்திரி
C
சட்டங்கள்
D
சமதர்மம்
Question 5 Explanation: 
(குறிப்பு - குடியரசு, ராஜதந்திரி மற்றும் சட்டங்கள் ஆகியவை பிளாட்டோவின் மூன்று முக்கிய படைப்புகளாகும் படைப்புகளை தவிர பல சிறிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.)
Question 6
பிளாட்டோவின் மூன்று முக்கிய படைப்புகள் வெளிவந்த ஆண்டுகளில் சரியான இணை எது?
A
குடியரசு - பொ.ஆ.மு.386
B
ராஜதந்திரி - பொ.ஆ.மு.360
C
சட்டங்கள் - பொ.ஆ.மு.347
D
இவை அனைத்தும் சரி
Question 6 Explanation: 
(குறிப்பு - குடியரசு (The Republic) - - பொ.ஆ.மு.386இலும், ராஜதந்திரி (The Statesman) - பொ.ஆ.மு.360இலும், சட்டங்கள் (The Laws) - பொ.ஆ.மு.347இலும் வெளிவந்தது)
Question 7
பிளாட்டோவின் கூற்றுப்படி லட்சிய அரசு என்பது கீழ்க்காணும் எந்த வர்க்கத்தை கொண்டிருக்கத் தேவையில்லை?
A
ராணுவ வர்க்கம்
B
ஆளும் வர்க்கம்
C
பொருளாதார வர்க்கம்
D
நீதி வர்க்கம்
Question 7 Explanation: 
(குறிப்பு - அரசு என்பது அரசியல் அறிவியலை கட்டியெழுப்பும் மிக முக்கியமான கருத்தாக்கம் ஆகும். பிளாட்டோவை பொருத்தவரை இலட்சிய அரசு என்பது ஆளும் வர்க்கம், ராணுவ வர்க்கம் மற்றும் பொருளாதார வர்க்கம் என மூன்று வர்க்கங்களை கொண்டதாகும்)
Question 8
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  • கூற்று 1 - பிளாட்டோ,  நீதி என்பது ஒரு தனி மனிதனிடம் மட்டுமல்லாமல் அரசிடமும் இருக்கவேண்டும் என நம்புகிறார்.
  • கூற்று 2 - மனிதனின் தலைப்பகுதியை உறைவிடமாகக் கொண்ட பகுத்தறிவு, இதயத்தை உறைவிடமாகக் கொண்ட உத்வேகம் மற்றும் வயிற்று பகுதியை உறைவிடமாகக் கொண்ட உணவு நாட்டம் ஆகியவை மனிதனிடம் இருக்க வேண்டிய மூன்று தகுதிகளாக பிளாட்டோ கூறுகிறார்.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 8 Explanation: 
(குறிப்பு - மனித ஆன்மாவின் மூன்று பாகங்களாக பிளாட்டோ தலைப்பகுதியையும், இதயத்தையும், வயிற்றுப்பகுதியையும் கூறுகிறார். மேலும் ஒவ்வொரு மனிதனிடமும் மூன்று தகுதிகள் வெவ்வேறு விகிதாச்சாரங்களில் இயல்பாக அமைந்து இருப்பதாக கூறுகிறார்)
Question 9
கீழ்க்கண்டவற்றில் சரியான இணை எது?
A
பகுத்தறிவு - துணை வர்க்கம்
B
உத்வேகம் - ராணுவ வர்க்கம்
C
உணவு நாட்டம் - ஆளும் வர்க்கம்
D
எல்லாமே சரி
Question 9 Explanation: 
(குறிப்பு - பகுத்தறிவு என்பது ஆளும் வர்க்கம், உத்வேகம் என்பது ராணுவ வர்க்கம் மற்றும் உணவு நாட்டம் என்பது துணை வர்க்கம் என பிளாட்டோ கூறுகிறார். இதுவே பிளாட்டோ கூறும் லட்சிய அரசு ஆகும்)
Question 10
பிளாட்டோ எதனால் மக்கள் ஆட்சியின் மீது அவமதிப்பு கொண்டார்?
A
பிளாட்டோவின் போதனையை யாரும் கேட்காததால்
B
பிளாட்டோவின் கருத்து அவமதிக்கப்பட்டதால்
C
சாக்ரடீஸ் கொல்லப்பட்டதால்
D
மக்களாட்சியில் விருப்பம் இல்லாததால்
Question 10 Explanation: 
(குறிப்பு - ஒவ்வொரு தத்துவ ஞானியும் அவர் வாழ்ந்த காலத்தின் வெளிப்பாடாவார்.கிரேக்கத்தின் மிகப்பெரும் ஞானியான சாக்ரடீஸின் படுகொலையால் பிளாட்டோ மக்கள் ஆட்சியின் மீது அவமதிப்பு கொண்டார்.அதனால் மக்களாட்சிக்கு பதிலாக ஞானிகளின் ஆட்சி மீது நம்பிக்கை கொண்டார்)
Question 11
பிளாட்டோ தனது எந்த நூலில் மக்களாட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்?
A
குடியரசு
B
ராஜதந்திரி
C
சட்டங்கள்
D
சமதர்மம்
Question 11 Explanation: 
(குறிப்பு - பிளாட்டோ தனது குடியரசு என்னும் நூலில் மக்களாட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இவரின் கருத்து யாதெனில், அனைவரும் ஆள்வதற்கு தகுதியானவர்கள் அல்ல, ஆள்வதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற தத்துவஞானிகளே ஆட்சி செய்ய வேண்டும் என்பதாகும்)
Question 12
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  • கூற்று 1 - அரசமைப்பு என்ற சொல்லின் தற்கால புரிதலில் இருந்து அதனை பற்றிய பிளாட்டோவின் கருத்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.
  • கூற்று 2 - ஒரு சமுதாயத்தில் உள்ள மக்கள் தங்களின் நலனுக்காக குறிப்பிட்ட வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பது அரசமைப்பு என்று பிளாட்டோ கூறுகிறார்
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 12 Explanation: 
(குறிப்பு - சமூக பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள், நடைமுறைகள் மற்றும் இவற்றினை மேற்பார்வையிடும் அரசியல் மற்றும் அரசாங்கத்தினை உள்ளடக்கியது அரசமைப்பு என்பது பிளாட்டோவின் கருத்தாகும்)
Question 13
பிளாட்டோ அரசமைப்புகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கிறார்?
A
நான்கு
B
எல்லாமே தவறு
C
ஐந்து
D
மூன்று
Question 13 Explanation: 
(குறிப்பு - பிளாட்டோ தான் வாழ்ந்த காலத்தில் உலகத்தின் பல பகுதிகளில் இருந்து அரசு அமைப்புகளை உள்ளவாறு விவாதித்தார்.இவர் அரசமைப்புகளை 5 வகைகளாகப் பிரிக்கிறார்)
Question 14
பிளாட்டோவின் அரசமைப்புகளின் வகைகளுள் அல்லாதவை கீழ்க்கண்டவற்றில் எது?
A
மக்களாட்சி
B
பிரபுக்கள் ஆட்சி
C
புகழ் விரும்புபவர் ஆட்சி
D
அரசாட்சி
Question 14 Explanation: 
(குறிப்பு - பிளாட்டோ அரசமைப்புகளின் வகைகளாக பிரபுக்கள் ஆட்சி, புகழ் விரும்புபவர் ஆட்சி, சிறுகுழு ஆட்சி, மக்களாட்சி மற்றும் கொடுங்கோலாட்சி என ஐந்து வகைகளாகப் பிரிக்கிறார்.)
Question 15
பிளாட்டோ தேசிய சொத்தாக கீழ்க்கண்டவற்றில் எதை குறிப்பிடுகிறார்?
A
கனிமவளம்
B
விவசாயம்
C
குழந்தை
D
நீதித்துறை
Question 15 Explanation: 
(குறிப்பு - பிளாட்டோவின் கூற்றுப்படி குழந்தைகளை தேசிய சொத்துக்களாக கருதி அவர்களின் மனப்பாங்கிற்கு தக்கவாறு வளர்ப்பது அரசின் கடமையாகும்)
Question 16
பிளாட்டோ தர்க்கவியல் முறையிலான வகையில் எழுதிய நூல் எது?
A
குடியரசு
B
ராஜதந்திரி
C
சட்டங்கள்
D
சமதர்மம்
Question 16 Explanation: 
(குறிப்பு - குடியரசு என்னும் நூலானது பிளாட்டோ தம்மை ஒரு மாணவராக கருதிக்கொண்டு சாக்கரடீஸிடம் வினாக்களை எழுப்புவது போன்றும் அதற்கு ஆசிரியரான சாக்கரடீஸ் பதில் அளிப்பது போன்று அமைந்துள்ளது)
Question 17
கீழ்க்கண்டவற்றில் யார் பிளாட்டோவின் மாணவர் ஆவார்?
A
அரிஸ்டாட்டில்
B
மாக்கியவல்லி
C
சாக்கரடீஸ்
D
இவர்கள் யாரும் அல்ல
Question 17 Explanation: 
(குறிப்பு - அரிஸ்டாடில் பிளாட்டோவின், அகாடமியை சேர்ந்த மாணவர் ஆவார். பிளாட்டோவின் மரணத்திற்குப் பின்னர் அரிஸ்டாட்டில் ஒரு பள்ளியைத் தொடங்கினார்)
Question 18
அரிஸ்டாட்டில் எந்த ஆண்டு லைசீயம் என்ற தமது பள்ளியை தொடங்கினார்?
A
பொ.ஆ.மு. 350
B
பொ.ஆ.மு. 355
C
பொ.ஆ.மு. 360
D
பொ.ஆ.மு. 365
Question 18 Explanation: 
(குறிப்பு - அரிஸ்டாடில் பிளாடோவினுடைய அகாடமியின் மாணவர் ஆவார். பிளாட்டோவின் மரணத்திற்குப் பின்னர் அரிஸ்டாட்டில் பொ.ஆ.மு.355இல் லைசீயம் என்ற பள்ளியை தானே தொடங்கினார்)
Question 19
அலெக்சாண்டர் யாரிடம் கல்வி கற்றார்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
அரிஸ்டாட்டில்
D
மாக்கியவல்லி
Question 19 Explanation: 
(குறிப்பு - அரிஸ்டாட்டில் உருவாக்கிய லைசீயம் என்ற பள்ளியில், அலெக்சாண்டர் அரிஸ்ட்டாட்டிலிடம் கல்வி கற்றார்)
Question 20
அரிஸ்டாட்டில் பிறந்த ஆண்டு எது?
A
பொ.ஆ.மு.380
B
பொ.ஆ.மு.382
C
பொ.ஆ.மு.384
D
பொ.ஆ.மு.386
Question 20 Explanation: 
(குறிப்பு - அரிஸ்டாட்டில் பொ.ஆ.மு.384இல் ஸ்டாகிராவில் பிறந்தார். பிளாட்டோவைப் போலன்றி அரிஸ்டாட்டில் ஒரு உயர் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்)
Question 21
அரிஸ்டாட்டிலின் தந்தை செய்த பணி யாது?
A
மன்னர்
B
வணிகர்
C
மருத்துவர்
Question 21 Explanation: 
(குறிப்பு - மாசிடோனியாவின் மன்னரான அமின்டாசின் (Amyntas) தனி மருத்துவராக அரிஸ்டாட்டிலின் தந்தை நிக்கோமாகஸ் (Nicomachus) இருந்தார்)
Question 22
முழுமை என்பது பகுதிகளின் தொகுப்பைவிட மிகுதியானதாகும் என்பது கீழ்க்கண்டவரில் யாருடைய கூற்றாகும்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
அரிஸ்டாட்டில்
D
மாக்கியவல்லி
Question 22 Explanation: 
(குறிப்பு - அரிஸ்டாட்டில் என்பதன் பொருள் சிறந்த நோக்கம் என்பதாகும். முழுமை என்பது பகுதிகளின் தொகுப்பை விட மிகுதியானதாகும் என்பது அரிஸ்டாட்டில் என்பவரின் கூற்றாகும்)
Question 23
அரசியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
அரிஸ்டாட்டில்
D
மாக்கியவல்லி
Question 23 Explanation: 
(குறிப்பு - அரிஸ்டாட்டில் கிரேக்க இலக்கியத்தில் இருந்து விலங்கியல் வரை பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை எழுதினார்.இருப்பினும், இவரின் மிகப்பிரபலமான படைப்பான 'அரசியல்'என்னும் நூலிலிருந்து தற்கால அரசியல் அறிவியல் வளர்ந்துள்ளது.எனவே இவர் அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்)
Question 24
தனி மனிதனின் பெரிய வடிவமே அரசு எனவும் ஒரு அரசியல் மட்டுமே தனி மனிதனால் முழுமையாக சிந்திக்க இயலும் என்னும் கூற்று கீழ்க்கண்டவற்றில் யார் உடையதாகும்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
அரிஸ்டாட்டில்
D
மாக்கியவல்லி
Question 24 Explanation: 
(குறிப்பு - அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி அரசு இயற்கையானது. அரசின் அதிகாரம் நீதி நெறியிலானதாகும். குடும்பங்கள் ஒன்றிணைந்து அரசினை ஓர் முழுமையான அமைகின்றன)
Question 25
அரிஸ்டாட்டிலின் குடியுரிமை கோட்பாட்டின்படி கீழ்க்கண்டவற்றில் எது ஒருவரை குடிமகன் ஆக்குகிறது?
A
ஒரு நபரின் சட்ட உரிமை
B
ஒரு நபரின் வாழ்விடம்
C
ஒரு நபரின் செய்யும் பணி
D
ஒரு நபரின் பிறப்பு
Question 25 Explanation: 
(குறிப்பு - ஒரு நபரின் வாழ்விடம், சட்ட உரிமை மற்றும் பிறப்பு ஆகியவை மட்டுமே குடியுரிமை வழங்குகாது என அரிஸ்டாட்டில் நம்பினார். அவர் செய்யக்கூடிய பணியே ஒரு நபரை குடிமகனாக்குகிறது எனவும் கூறுகிறார். மேலும் ஒரு நபர் இறையாண்மை அதிகாரங்களை கொண்ட மக்கள் சபையில் பங்கேற்க வேண்டும் என கூறுகிறார்)
Question 26
கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்று எது?
A
முடியாட்சியின் திரிந்த வடிவம் கொடுங்கோலாட்சி ஆகும்.
B
பிரபுக்கள் ஆட்சியின் திரிந்த வடிவம் சிறுகுழு ஆட்சியாகும்.
C
தூய ஆட்சி அமைப்பு முறையின் திரிந்த வடிவம் மக்களாட்சி ஆகும்
D
இவை அனைத்தும் சரி
Question 26 Explanation: 
(குறிப்பு - அரிஸ்டாட்டில் அளவு மற்றும் தரத்தின் அடிப்படையில் அரசுகளை வகைப்படுத்துகிறார். அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி இறையாண்மையானது ஒருவரிடம் இருந்தால் அது முடியாட்சி ஆகும்.அது பின்னர் கொடுங்கோல் ஆட்சியாக சிதைவுறுகிறது)
Question 27
அரிஸ்டாட்டில் கீழ்கண்ட அவர்களில் யார் அடிமை என்று கூறுகிறார்?
A
சொத்து இல்லாதவர்
B
நல்லொழுக்கம் இல்லாதவர்
C
நல்லெண்ணம் இல்லாதவர்
D
இவர்கள் அனைவரும்
Question 27 Explanation: 
(குறிப்பு - அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி அடிமைகளே எஜமானரின் முதல் அசையும் சொத்தாவர்.அதாவது ஒரு வீட்டின் தலைவராக எஜமானரின் உயிருள்ள சொத்துக்களில் அடிமைகள் முதலாவதாவர். அரிஸ்டாட்டில் நல்லொழுக்கம் இல்லாதவரே அடிமையாவார் எனக் கூறுகிறார்)
Question 28
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. கூற்று 1 - இறையாண்மையானது ஒருவரிடம் இருந்தால் அது முடியாட்சி ஆகும் என்பது அரிஸ்டாட்டிலின் கூற்றாகும்.
  2. கூற்று 2 - தனிநபர் சொத்து என்பது சிறந்த மற்றும் இயல்பான வாழ்விற்கான அடிப்படை என அரிஸ்டாட்டில் கூறினார்.
  3. கூற்று 3 - அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி அரசு என்பது செயற்கையானது.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 28 Explanation: 
(குறிப்பு - அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி அரசு என்பது இயற்கையானது.அரசின் அதிகாரம் நீதி நெறியில் ஆனதாகும். தனிமனிதனின் பெரிய வடிவமே அரசு என அரிஸ்டாட்டில் நம்புகிறார்)
Question 29
தனிநபர் சொத்து ஒழிப்பிற்கு ஆட்சேபணை தெரிவித்தவர் யார்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
அரிஸ்டாட்டில்
D
மாக்கியவல்லி
Question 29 Explanation: 
(குறிப்பு - தனிநபர் சொத்து என்பது சிறந்த மற்றும் இயல்பான வாழ்விற்கான அடிப்படை என அரிஸ்டாட்டில் ஆதரித்தார்.இருப்பினும் தனிநபர் சொத்துக்களுக்கு சில வரையறைகளை அவர் பரிந்துரைத்தார்.மேலும் அவர் தனிநபர் சொத்து ஒழிப்பிற்கு ஆட்சேபனை தெரிவித்தார்)
Question 30
அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி புரட்சி எப்போது ஏற்படுகிறது?
A
பொது மக்கள் கொதித்தெழுவதால்
B
அரசமைப்பு மாற்றங்களினால்
C
கடுமையான வறட்சியினால்
D
இது எதுவும் அல்ல
Question 30 Explanation: 
(குறிப்பு - அரசமைப்பு மாற்றங்களினால் முதலில் புரட்சி ஏற்படுவதாக அரிஸ்டாட்டில் கருதுகிறார். இம்மாற்றம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம்)
Question 31
மேற்கு ஐரோப்பாவில் இடைக்கால மேற்கத்திய தத்துவத்தின் பொற்காலமாக கருதப்படுவது?
A
பன்னிரண்டாம் நூற்றாண்டு
B
பதிமூன்றாம் நூற்றாண்டு
C
பதினான்காம் நூற்றாண்டு
D
பதினைந்தாம் நூற்றாண்டு
Question 31 Explanation: 
(குறிப்பு - பதின்மூன்றாம் நூற்றாண்டானது மேற்கு ஐரோப்பாவில் இடைக்கால மேற்கத்திய தத்துவத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது.மேற்கு ஐரோப்பாவின் பெரும்பான்மை மதமாக கத்தோலிக்கம் உருவானது)
Question 32
புனித தாமஸ் அக்வினாஸ் நேப்பிள்சின் பிறந்த ஆண்டு எது?
A
பொ.ஆ.1120
B
பொ.ஆ.1125
C
பொ.ஆ.1130
D
பொ.ஆ.1135
Question 32 Explanation: 
(குறிப்பு - புனித தாமஸ் அக்வினாஸ் நேப்பிள்சின் வடக்கே உள்ள ராக்காசீக்காவில் உள்ள தனது குடும்பத்திற்கு சொந்தமான கோட்டையில் பொ.ஆ.1225 இல் பிறந்தார்.)
Question 33
கீழ்க்கண்டவற்றில் யாருடைய தந்தை ஒரு முக்கிய நிலவுடமை குடும்பத்தின் தலைவர் ஆவார்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
தாமஸ் அக்வினாஸ்தாமஸ்
D
மாக்கியவல்லி
Question 33 Explanation: 
(குறிப்பு - தாமஸ் அக்வினாஸ் என்பவரின் தந்தையான அக்வினோ லேண்டல்ஃப் (Landulf of Acquino) ஒரு முக்கிய நிலவுடமை குடும்பத்தின் தலைவர் ஆவார். தாயாரான தியோடோரா ரோசி அவர்கள் நியோபாலிட்டன் கராசியாலோ குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்)
Question 34
கீழ்க்கண்டவற்றில் தாமஸ் அக்வினாஸ் என்பவரின் படைப்புகளில் அல்லாதவை எது?
A
சம்மா காண்ட்ரா ஜென்டிலஸ்
B
சம்மா தியாலாஜிக்கா
C
சம்மா தியோசோபி
D
அரசுரிமை
Question 34 Explanation: 
(குறிப்பு - அக்வினாசின் படைப்புகளில் உள்ள கருத்துரைகள் அனைத்தும் அவரது சமயவாத வடிவமைப்பில் இருந்து தோன்றியதாகும். அவரது முக்கிய படைப்புகள், சம்மா காண்ட்ரா ஜென்டிலஸ், சம்மா தியாலாஜிக்கா, அரசுரிமை போன்றவை ஆகும்)
Question 35
தாமஸ் அக்வினாசின் படைப்புகளும் அது தோன்றிய வருடங்களில் உள்ள தவறான இணை எது?
A
சம்மா காண்ட்ரா ஜென்டிலஸ் - பொ.ஆ.1264
B
சம்மா தியாலாஜிக்கா - பொ.ஆ.1274
C
அரசுரிமை - பொ.ஆ.1271
D
எல்லாமே சரி
Question 35 Explanation: 
(குறிப்பு - சம்மா காண்ட்ரா ஜென்டிலஸ் - பொ.ஆ.1264, சம்மா தியாலஜிக்கா - பொ.ஆ.1274, மாறும் அரசுரிமை போன்றவை தாமஸ் அக்வினாசின் படைப்புகளாகும்.)
Question 36
அக்வினாஸ் தனது எந்த நூலினை ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய மதக்கணக்கீட்னை கிறிஸ்தவர்கள் நேர் செய்ய டொமினியன் சமயப் பரப்பு குழுவினருக்கு ஒரு கையேடு அல்லது பாடநூலாக வடிவமைத்தார்?
A
சம்மா காண்ட்ரா ஜென்டிலஸ்
B
சம்மா தியாலாஜிக்கா
C
அரசுரிமை
D
இவை எதுவும் அல்ல
Question 36 Explanation: 
(குறிப்பு - அக்வினாஸ் தனது சம்மா காண்ட்ரா ஜென்டிலஸ் என்னும் நூலினை ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய மதத்துடனான கணக்கீட்டினை கிறிஸ்துவர்கள் நேர் செய்ய டொமினிக்கன் சமயப் பரப்பு குழுவினருக்கு ஒரு கையேடு அல்லது பாடநூலாக வடிவமைத்தார் என பரவலாக கூறப்படுகிறது)
Question 37
அக்வினாஸ் தன்னுடைய சம்மா தியாலாஜிக்காவில் பகுத்தறிவு அடிப்படையில் ஒற்றுமையை ஏற்படுத்த நிலைநாட்டிய நான்கு வகையான சட்டங்களுள் அல்லாதது எது?
A
நித்திய சட்டம்
B
தெய்வீக சட்டம்
C
இயற்கை சட்டம்
D
நீதி சட்டம்
Question 37 Explanation: 
(குறிப்பு - அக்வினாஸ் தன்னுடைய சம்மா தியாலஜிக்காவில் பகுத்தறிவு அடிப்படையில் ஒற்றுமையை ஏற்படுத்த நான்கு நிலைகளில் சட்டங்களை நிலை நாட்டினார். அவை தெய்வீகச் சட்டம், நித்திய சட்டம், இயற்கை சட்டம் மற்றும் மனித சட்டம் என்பதாகும்) இந்த பிரபஞ்சம் முழுமைக்கும் செயலாற்றக்கூடிய பகுத்தறிவு மிகவும் உயர்ந்தது மற்றும்
Question 38
விரிவானது என அக்வினாஸ் வகுத்த சட்டம் எது?
A
நித்திய சட்டம்
B
தெய்வீக சட்டம்
C
இயற்கை சட்டம்
D
மனிதச்சட்டம்
Question 38 Explanation: 
(குறிப்பு - இந்த பிரபஞ்சம் முழுமைக்கும் செயலாற்றக்கூடிய பகுத்தறிவு மிகவும் உயர்ந்தது மற்றும் விரிவானது என்று கூறும் சட்டம் நித்திய சட்டம் ஆகும். இது கடவுளால் நிறுவப்பட்ட இயற்கையான நன்நெறி முறைமையாகும்)
Question 39
கீழ்க்காணும் எது புவிசார் சூழ்நிலைகளில் இயற்கை சட்ட நல்லொழுக்க நெறி உரைகளில் மனித பகுத்தறிவின் செயலாக்கம் என அக்வினாஸ் கூறுகிறார்?
A
நித்திய சட்டம்
B
தெய்வீக சட்டம்
C
இயற்கை சட்டம்
D
மனிதச்சட்டம்
Question 39 Explanation: 
(குறிப்பு - மனிதச் சட்டம் என்பது குறிப்பிட்ட புவிசார் சூழ்நிலைகளில் இயற்கை சட்ட நல்லொழுக்க நெறியுரைகளில் மனித பகுத்தறிவின் செயலாக்கமாகும் என அக்வினாஸ் கூறுகிறார்)
Question 40
அக்வினாசின் அரசியல் கோட்பாடானது யாருடைய கோட்பாட்டினை ஒத்துள்ளது?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
அரிஸ்டாட்டில்
D
மாக்கியவல்லி
Question 40 Explanation: 
(குறிப்பு - அக்வினாசின் அரசியல் கோட்பாடானது அரிஸ்டாட்டிலின் கோட்பாட்டினை ஒத்துள்ளது. அரசுரிமை பற்றிய அக்வினாசின் எழுத்துக்கள் மிக சீரான அரசியல் படைப்பாக கருதப்படுகிறது)
Question 41
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  • கூற்று 1 - அரிஸ்டாட்டில் தனது அரசியல் என்னும் நூலில் பின்பற்றிய தர்க்க முறைபாணியினை அக்வினாஸ் பின்பற்றுகிறார்.
  • கூற்று 2 - அக்வினாஸ், அரிஸ்டாட்டிலைப் போன்றே அரசு என்பது நீதிநெறியிலான சமூகம் என நம்புகிறார்.
  • கூற்று 3 - அக்வினாஸ் அரசியல் செயல்பாடுகள் தேவை மற்றும் நன்மையானதாகும் என வலியுறுத்தினார்.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 41 Explanation: 
(குறிப்பு - இவ்வாறு அரசு என்பது நீதியின் அடிப்படையிலானது எனவும், சட்ட வரையறைக்கு உட்பட்ட குடிமக்களின் நன்மைக்காக சிறந்தவர்கள் ஆள வேண்டும் என்றும் அக்வினாஸ் வாதிட்டார்.)
Question 42
சட்டம் என்பது சமூக அக்கறையுடன் உள்ள நபரால் பொது நலனுக்காக பகுத்தறிவின் அடிப்படையில் குறிப்பிட்ட விதிமுறைகளை ஏற்படுத்துவதன்றி வேறொன்றுமில்லை என்னும் கூற்று கீழ்கண்டவரில் யாருடையதாகும்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
தாமஸ் அக்வினாஸ்
D
மாக்கியவல்லி
Question 42 Explanation: 
(குறிப்பு - அக்வினாஸ், "அரசு இயற்கையானது.ஏனெனில், அது மனிதனுக்கும் இயற்கையானது.ஒரு சமூக மற்றும் அரசியல் விலங்காக ஒரு குழுவாக வாழ்வதற்கு" என வாதிடுகிறார்.)
Question 43
தாமிசம் என்னும் மரபினை தோற்றுவித்தவராக கருதப்படுபவர் யார்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
தாமஸ் அக்வினாஸ்
D
மாக்கியவல்லி
Question 43 Explanation: 
(குறிப்பு - புனித தாமஸ் அக்வினாஸ் இடைக்கால சிந்தனையாளர்களில் பெரும் சிந்தனையாளராக கருதப்படுவதுடன் புதிய மரபினையும் தோற்றுவித்தார். இது தாமிசம் (Thomism) என அழைக்கப்படுகிறது)
Question 44
தாமஸ் அக்வினாஸ் எந்த ஆண்டு காலத்தில் போப்பின் அவையில் இருந்தார்?
A
பொ.ஆ.1150 - பொ.ஆ.1160 வரை
B
பொ.ஆ.1159 - பொ.ஆ.1168 வரை
C
பொ.ஆ.1155 - பொ.ஆ.1169 வரை
D
பொ.ஆ.1157 - பொ.ஆ.1167 வரை
Question 44 Explanation: 
(குறிப்பு - தாமஸ் அக்வினாஸினது அரசியல் கோட்பாட்டின் அடிப்படைகளை இவரின் அரிஸ்டாட்டிலினுடைய அரசியல் பற்றிய கருத்துரையான 'டி ரெஜிமினிபிரின்சிபம்' என்பதில் காணலாம்)
Question 45
அக்வினாசின் கருத்தின்படி ___________ என்பது ஆளப்படுவோரின் பிரதிநிதி ஆகும்.  
A
நேர்மையான அரசன் அல்லது அரசாங்கம்
B
இறையாண்மை மிக்க அரசன் அல்லது அரசாங்கம்
C
பலம் பொருந்திய அரசன் அல்லது அரசாங்கம்
D
பணம் மிக்க அரசன் அல்லது அரசாங்கம்
Question 45 Explanation: 
(குறிப்பு - மக்களைக் கட்டுப்படுத்த முடிவுகளை எடுக்கக்கூடிய ஆளும் அமைப்பு இல்லாவிடில் குழப்பம் விளைந்து மக்கள் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வர் என்கிறார் அக்வினாஸ். எனவே இறையாண்மை மிக்க அரசன் அல்லது அரசாங்கம் என்பது ஆளப்படுவோரின் பிரதிநிதி ஆகும் என்று அக்வினாஸ் கூறுகிறார்)
Question 46
நிக்கோலோ மாக்கியவல்லி எங்கு பிறந்தார்?
A
பாரிஸ்
B
ஃபிளாரன்ஸ்
C
ஸ்பெயின்
D
ரோம்
Question 46 Explanation: 
(குறிப்பு - இத்தாலிய பண்பாட்டின் மையமான ஃபிளாரன்சில் நிக்கோலோ மாக்கியவெல்லி பிறந்தார். பிற பகுதிகளை விட அங்கு ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தாக்கம் அதிகமாக இருந்தது)
Question 47
கீழ்க்கண்டவர்களில் யாருடைய தந்தை வழக்கறிஞராக இருந்தார்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
சாக்ரடீஸ்
D
தாமஸ் அக்வினாஸ்
Question 47 Explanation: 
(குறிப்பு - நிக்கோலோ மாக்கியவெல்லியின் தந்தை பெர்னார்டோ டி நிக்கோலோ மாக்கியவல்லி என்னும் வழக்கறிஞர் ஆவார். மாக்கியவல்லியின் தாயார் ஸ்டெஃ பானோ நெல்லி பார்தோலோமியா என்பவராவார்)
Question 48
நிக்கோலோ மாக்கியவெல்லி எந்த ஆண்டு குடியரசு அரசாங்கத்தின் பணியில் நுழைந்தார்?
A
பொ.ஆ.1490 இல்
B
பொ.ஆ.1494 இல்
C
பொ.ஆ.1496 இல்
D
பொ.ஆ.1498 இல்
Question 48 Explanation: 
(குறிப்பு - நிக்கோலோ மாக்கியவெல்லி பொ.ஆ.1494 இல் மெடிசி (Medici) வீழ்ந்த பிறகு குடியரசு அரசாங்கத்தின் பணியில் நுழைந்தார். பொ.ஆ.1498 முதல் 1512 வரை வேந்தர் பணியகத்தின் செயலராக இருந்தார்)
Question 49
நிக்கோலோ மாக்கியவெல்லி எந்த ஆண்டு சிறைபடுத்தப்பட்டார்?
A
பொ.ஆ.1510 இல்
B
பொ.ஆ.1512 இல்
C
பொ.ஆ.1513 இல்
D
பொ.ஆ.1518 இல்
Question 49 Explanation: 
(குறிப்பு - பொ.ஆ.1512 இல் மெடிசி மீண்டும் நிறுவப்பட்டதன் விளைவாக மாக்கியவல்லி தனது பதவியை இழந்து சில காலத்திற்கு சிறைப்படுத்தப்பட்டார். இதன் பின்னர் அவர் இலக்கிய பாதையில் பயணித்தார்)
Question 50
மாக்கியவல்லி லோரென்ஸோ டி மெடிசிக்காக "இளவரசன்" என்னும் நூலை எந்த ஆண்டு எழுதினார்?
A
பொ.ஆ.1510 இல்
B
பொ.ஆ.1512 இல்
C
பொ.ஆ.1513 இல்
D
பொ.ஆ.1518 இல்
Question 50 Explanation: 
(குறிப்பு - மாக்கியவல்லி பொ.ஆ.1513 இல் லோரென்ஸோ டி மெடிசிக்காக இளவரசன் என்னும் தனி வரைவு நூலை எழுதினார்)
Question 51
மாக்கியவல்லியின் "இளவரசன்" மற்றும் "லிவி மீதான உரைக்கோவை" என்னும் இரு நூல்களும் எந்த ஆண்டு வெளியிடப்பட்டன?
A
பொ.ஆ.1510 இல்
B
பொ.ஆ.1512 இல்
C
பொ.ஆ.1513 இல்
D
பொ.ஆ.1518 இல்
Question 51 Explanation: 
(குறிப்பு - மாக்கியவல்லி லோரென்ஸோ டி மெடிசிக்காக எழுதிய இளவரசன் என்னும் நூலும், டைட்டஸ் லிவியஸின் முதல் 10 புத்தகங்களுக்கான உரைக்கோவை என்னும் இரு நூல்களும் அவர் மறைந்த பின்பு பொ.ஆ.1531 இல் வெளியிடப்பட்டன)
Question 52
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  • கூற்று 1 - மாக்கியவல்லியின் அரசாங்கம் பற்றிய கோட்பாடானது அவரது மனிதனின் தன்மை பற்றிய கருத்தாக்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • கூற்று 2 - மாக்கியவல்லி ஹாப்சை போன்றே மனிதனின் தன்மை மீது அவநம்பிக்கை கொண்டிருந்தார்.
  • கூற்று 3 - மனிதர்கள் இயற்கையில் முழுமையான சுயநலம் கொண்டிருப்பதுடன் அவர்களின் வாழ்விலும் சுயநல விருப்பங்களால் உந்தப்படுகின்றனர் என மாக்கியவல்லி நம்புகிறார்.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 1, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 52 Explanation: 
(குறிப்பு - மாக்கியவல்லி இளவரசன் என்னும் நூலில் ஒரு இடத்தில் மனிதன் நன்றி மறந்தவன், நிலையற்றவன், ஏமாற்றுபவன், கோழைத்தனம் மற்றும் கஞ்சத்தனம் உள்ளவன் என கூறுகிறார். மேலும் மனிதன் என்பவன் இயற்கையில் முழுமையான சுயநலம் கொண்டிருப்பதுடன் அவர்களின் வாழ்விலும் சுயநல விருப்பங்களால் உந்தப்படுகின்றனர் என நம்புகிறார்)
Question 53
மனிதர்கள் முடிவற்ற விருப்பமுள்ளவர்கள் என்றும் அவர்களின் அடிப்படை விருப்பமாக பொருளாதார ஆதாயமே உள்ளது என்பதும் கீழ்கண்டவர்களில் யாருடைய கூற்றாகும்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
மாக்கியவல்லி
D
தாமஸ் அக்வினாஸ்
Question 53 Explanation: 
(குறிப்பு - மனிதனின் அடிப்படை விருப்பமாக பொருளாதார ஆதாயமே உள்ளது என்றும், இந்த நோக்கமே அவர்களை குடியரசினை விரும்பவும், முடியாட்சியை வெறுக்கவும் வைக்கிறது என்று மாக்கியவல்லி கூறுகிறார்)
Question 54
அரசியல் மற்றும் நீதி முறைமையை பிரித்தல் தொடர்பாக மாக்கியவல்லி கூறியவற்றில் தவறானது எது?
A
அரசியல் என்பது அதன் சுதந்திரமான சுயமதிப்பளவின் அடிப்படையிலானதாகும்.
B
அரசியலை அதன் மரபார்ந்த நன்னெறி மதிப்பளவின் கீழ் வரையறை செய்ய முடியாது.
C
அரசியல் மற்றும் நன்னெறி கடைபிடிக்க முடியாது
D
நடப்பவராகவும் இருக்கவேண்டும் என்கிறார்
Question 54 Explanation: 
(குறிப்பு - மாக்கியவல்லி அரசியல் மற்றும் நன்னெறியினை பிரிப்பதனை வலியுறுத்துகிறார். மேலும் நீதிநெறி கடப்பாடுகளற்ற அரசைப் பாதுகாப்பதில் இளவரசன் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்)
Question 55
அரசியலை மதம் மற்றும் நீதிமுறைமை ஆகியவற்றில் இருந்து பிரித்து அரசியலுக்கு ஒரு தன்னாட்சி நிலையினை தந்தவர் யார்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
மாக்கியவல்லி
D
தாமஸ் அக்வினாஸ்
Question 55 Explanation: 
(குறிப்பு - அரசின் நன்னெறி நோக்கம் பற்றிய பிளாட்டோ அரிஸ்டாட்டில் புனித தாமஸ் அக்குவினாஸ் மற்றும் பலரின் நம்பிக்கையிலிருந்து மாக்கியவல்லி மாறுபட்டுள்ளார். அவர் அரசியலை மதம் மற்றும் நீதி முறைமை ஆகியவற்றில் இருந்து பிரித்து அரசியலுக்கு ஒரு தன்னாட்சி நிலையினை தருகிறார்)
Question 56
மாக்கியவல்லியின் இளவரசன் மற்றும் லிவி மீதான உரை கோவை ஆகியவற்றுக்கு இடையே எத்தகைய முரண்பாடுகளும் இல்லை என்று கூறியவர் யார்?
A
V. ராபர்ட்
B
H. சபைன்
C
வில்லியம் ஹென்றி
D
இவர்கள் யாரும் அல்ல
Question 56 Explanation: 
(குறிப்பு - ஜார்ஜ் H.சபைன் என்னும் அறிஞர் மாக்கியவல்லியின் இரு முன்னணி புத்தகங்களான இளவரசன் மற்றும் நிதி மீதான உரை கோவை ஆகியவற்றுக்கு இடையே எத்தகைய முரண்பாடுகளும் இல்லை என்று உற்று நோக்குகிறார். இரண்டும் ஒரே பொருளை பற்றியவையாகும் எனக் கூறுகிறார்.)
Question 57
மாக்கியவல்லியின் கீழ்காணும் எந்த நூல் ரோமப் பேரரசின் விரிவாக்கம் பற்றி கூறுவதாகும்?
  1. இளவரசன்
  2. லிவி மீதான உரைக்கோவை
A
I மட்டும்
B
II மட்டும்
C
இவ்விரண்டும்
D
இரண்டும் அல்ல
Question 57 Explanation: 
(குறிப்பு - மாக்கியவல்லியின் இளவரசன் என்னும் நூல் முடியாட்சிகள் அல்லது முழுமையான அரசாங்கங்களை பற்றியும், லிவி மீதான உரைக்கோவை என்னும் நூல் ரோமப் பேரரசின் விரிவாக்கம் பற்றியதாகும்)
Question 58
மாக்கியவல்லியின் ஆட்சிக்கலை பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது?
  • கூற்று 1 - கலை என்பது மாக்கியவல்லி எடுத்தியம்பியவற்றில் குறிப்பிடத்தகுந்த மற்றும் சர்ச்சைக்குரிய பங்களிப்பாகும்.
  • கூற்று 2 - ஆட்சியாளர் தமது நோக்கத்தினை எட்டுவதற்காக நீதிநெறியிலான கட்டமைப்பினை ஒதுக்கி வைக்கவேண்டும் என மாக்கியவல்லி கூறுகிறார்.
  • கூற்று 3 - இளவரசன் தமது குடிமக்கள் மத்தியில் தான் மிகவும் உயர்ந்த மதிப்பீட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என மாக்கியவல்லி விரும்புகிறார்.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 1, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 58 Explanation: 
(குறிப்பு - மாக்கியவல்லி ஆட்சியாளர் தமது நோக்கத்தினை எட்டுவதற்காக நீதிநெறியிலான கட்டமைப்பினை ஒதுக்கி வைக்க வேண்டுமென அறிவுரை கூறுகிறார்.இருப்பினும் மரபார்ந்த நீதிமுறைமை என்பது அரசியலுக்கு முற்றிலும் தேவையற்றது எனவும் அவர் நினைக்கவில்லை)
Question 59
தம் அரசியல் உள்ள பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என இளவரசனுக்கு அறிவுறுத்தியவர் யார்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
தாமஸ் அக்வினாஸ்
D
மாக்கியவல்லி
Question 59 Explanation: 
(குறிப்பு - ஓர் அறிவார்ந்த ஆட்சியாளர் மக்களின் உயிர் மற்றும் உடமைகள் பாதுகாப்பு மற்றும் மக்களின் மாண்பினை பாதுகாக்கும் சூழலை ஏற்படுத்தும் வகையிலான கொள்கைகளை உருவாக்க வேண்டும் எனவும், பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் தங்களின் ஆட்சியாளருக்கு விசுவாசமாக இருப்பர் எனவும் நிக்கோலோ மாக்கியவல்லி கூறுகிறார்)
Question 60
இத்தாலி ஐந்து பகுதிகளாக பிரிந்து கிடந்தது. அவற்றுள் தவறானது கீழ்க்கண்டவற்றுள் எது?
A
வெனிஸ்
B
நேப்பிள்ஸ்
C
மிலன்
D
ரியோ ஜெனிரோ
Question 60 Explanation: 
(குறிப்பு - அக்காலத்தில் இத்தாலி ஐந்து பகுதிகளாக பிரிந்து கிடந்தது.அவை ஃபிளாரன்ஸ், வெனிஸ், நேப்பிள்ஸ், மிலன் மற்றும் கத்தோலிக்க திருச்சபை நிலப்பரப்பு ஆகியன ஆகும்)
Question 61
கீழ்க்கண்டவர்களில் அறிவியல் புரட்சி நிகழ்ந்த காலத்தவர் யார்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
தாமஸ் ஹாப்ஸ்
D
மாக்கியவல்லி
Question 61 Explanation: 
(குறிப்பு - பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேய தத்துவ ஞானியான தாமஸ் ஹாப்ஸ்( Thomas Hops) அறிவியல் புரட்சி (Scientific Revolution) நிகழ்ந்த காலத்தவர் ஆவார். தற்கால சமூக கோட்பாட்டிற்க்காண முதல் முயற்சியை இவரே மேற்கொண்டார்)
Question 62
தாமஸ் ஹாப்ஸ் ஏப்ரல் 5, ___________ இங்கிலாந்தில் பிறந்தார்.
A
1582 இல்
B
1584 இல்
C
1586 இல்
D
1588 இல்
Question 62 Explanation: 
(குறிப்பு - தாமஸ் ஹாப்ஸ் ஏப்ரல் 5ஆம் நாள், 1588 ஆம் ஆண்டு மால்ம்ஸ்பெரி(Malmesbury) என்னும் இடத்தில் இங்கிலாந்தின் கடற்பகுதிக்கு அருகில் பிறந்தார்)
Question 63
தாமஸ் ஹாப்ஸ் எந்த ஆண்டு தூசிடிடசின் "பெலோப்பினீசியபோர் வரலாறு" என்னும் நூலினை மொழிமாற்றம் செய்து பதிப்பித்தார்?
A
1690 இல்
B
1692 இல்
C
1694 இல்
D
1696 இல்
Question 63 Explanation: 
(குறிப்பு - தாமஸ் ஹாப்ஸ் ஆக்ஸ்போர்டின் மெக்தலின் கல்லூரியில் சேர்ந்தார். தனது பத்தொன்பதாவது வயதில் பட்டம் பெற்ற பிறகு, வில்லியம் கேவண்டிஷுக்கு ஆசிரியர் ஆனார். அவர் 1692 ஆம் ஆண்டு தூசிடிடசின் "பெலோப்பினீசியபோர் வரலாறு" என்னும் நூலினை மொழிமாற்றம் செய்து பதிப்பித்தார்)
Question 64
தாமஸ் ஹாப்சின் முதிர்ந்த மற்றும் அற்புதப் படைப்பாக கருதப்படுவது எது?
A
பெலோப்பினீசியபோர் வரலாறு
B
டி சைவ்
C
லெவியதான்
D
இவை எதுவும் இல்லை
Question 64 Explanation: 
(குறிப்பு - தாமஸ் ஹாப்சின் லெவியதான் என்னும் நூல் அவரின் முதிர்ந்த மற்றும் அற்புதப் படைப்பாக கருதப்படுகிறது. இதில் கலிலியோவின் இயற்பியல் வழியில் மனித உளவியலுக்கு செயல் விளக்கம் அளிக்க முயற்சித்தத்துடன் தற்கால அரசியலுக்கு அடித்தளம் இடுகிறார்)
Question 65
"அச்சமும் நானும் இரட்டையர்களாக பிறந்தவர்கள்" என்னும் கூற்று யார் உடையதாகும்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
தாமஸ் ஹாப்ஸ்
D
மாக்கியவல்லி
Question 65 Explanation: 
(குறிப்பு - மனிதனின் தன்மை பற்றிய கருத்தாக்கம், இயற்கை நிலை, சமூக ஒப்பந்தம் மற்றும் அவரது இறையாண்மை பற்றிய கருத்துக்கள் ஆகியவை தாமஸ் ஹாப்ஸினுடைய அரசியல் தத்துவத்தினை படிக்கும் அனைவரையும் கவர்ந்துள்ளது)
Question 66
அறிஞர்கள் அடிக்கடி ஹாப்சியன் (Hobbesian) என்னும் பதத்தினை பயன்படுத்துகின்றனர், இதன் பொருள் என்ன?
A
தன்னம்பிக்கை
B
அவநம்பிக்கை
C
மூடத்தனம்
D
இது எதுவும் அல்ல
Question 66 Explanation: 
(குறிப்பு - பல சமயங்களில் ஹாப்ஸின் லெவியதான் மனிதனைப் பற்றி தெளிவும், எளிமையும் கொண்ட கோட்பாட்டுடன் தொடங்குவதாகவும் அரசியலை புரிந்துகொள்வதன் முன்தேவையாகவும் இருக்கிறது. அரசியல் அறிஞர்கள் அடிக்கடி ஹாப்ஸியன் என்னும் பதத்தினை பயன்படுத்துகின்றனர். இது மனிதனின் மீதான அவநம்பிக்கை கருத்தினை குறிப்பதாகும்)
Question 67
ஹாப்ஸின் இயற்கை நிலை கோட்பாடு பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  • கூற்று 1 - இதில் ஹாப்ஸ் மனித நடத்தையை புரிந்து கொள்வதற்கான அனுமான முறையினை கூறுகிறார்.
  • கூற்று 2 - இயற்கை நிலை என்பது முழுமையான சுதந்திரம் மற்றும் சமத்துவம் உள்ள சூழல் என ஹாப்ஸ் வாதிடுகிறார்.
  • கூற்று 3 - தனிமனிதர்களை கட்டுப்படுத்த எவ்வித சட்டமும் இல்லாத முழுமையான சுதந்திரத்தில் அனைத்தையும் செய்யும் உரிமை உண்டு என ஹாப்ஸ் கூறுகிறார்.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 1, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 67 Explanation: 
(குறிப்பு - தாமஸ் ஹாப்ஸ் தனது இயற்கை நிலை கோட்பாட்டில் மேற்கண்ட கூற்றுகளை கூறுகிறார். இயற்கை நிலையில் அனைவருமே மற்றவரின் மீதான நிலையான பயத்திலேயே வாழ்கின்றனர்.இதனால் மனிதர்கள் இயற்கையில் சமூக விரோதமாக அதிகாரத்தை பெறுபவர்களாக உள்ளனர் என்கிறார்.)
Question 68
"பிறர் உனக்கு பாதகமானவற்றை செய்வதற்கு முன், நீ அவர்களுக்கு பாதகமானவற்றை செய்துவிடு" என்பது கீழ்கண்டவர்களில் யாருடைய கூற்றாகும்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
மாக்கியவல்லி
D
தாமஸ் ஹாப்ஸ்
Question 68 Explanation: 
(குறிப்பு - மனிதனின் தன்மை பற்றிய ஹாப்ஸின் கருத்துக்கள் அவரது அரசியல் கோட்பாட்டில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதனின் உண்மையான தன்மையை அறிந்ததால் ஹாப்ஸ் அரசியலின் அறிவியல் கோட்பாடாக சமூக ஒப்பந்தத்தினை முன்வைத்தார்)
Question 69
பொதுநல கூட்டமைப்பில் தனி மனிதனின் அனைத்து அதிகார அடிப்படைகளையும் நீக்குவதுடன் அதனை அரசனிடம் ஒருமுகப்படுத்துவது அவசியமென வாதிடுபவர் யார்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
மாக்கியவல்லி
D
தாமஸ் ஹாப்ஸ்
Question 69 Explanation: 
(குறிப்பு - ஹாப்ஸின் அரசன் அல்லது இறையாண்மை பற்றிய கருத்தாக்கத்தை தனிமனிதனுக்கும் அரசனுக்கும் இடையேயான உறவின் தொகுப்பாக பார்க்கலாம். தனிமனிதனுக்கும் அரசனுக்கும் இடையேயான உறவு என்பது முழுமையான அதிகாரமற்ற நிலை மற்றும் முழுமையான அதிகார ஒன்றிப்பு ஆகியவற்றுக்கு இடையேயானதாகும் என்று ஹாப்ஸ் கூறுகிறார்)
Question 70
ஹாப்ஸின் அரசியல் தத்துவம் கீழ்கண்டவர்களில் யாருக்கு அடிப்படையாக இருந்தது?
  1. ஜான்லாக்
  2. ஜீன் ஜாக்குவாஸ் ரூசோ
  3. இம்மானுவேல் காண்ட்
A
I, II மட்டும்
B
II, III மட்டும்
C
II, III மட்டும்
D
இவை அனைத்தும்
Question 70 Explanation: 
(குறிப்பு - ஹாப்ஸின் அரசியல் தத்துவமே ஜான்லாக், ஜீன் ஜாக்குவாஸ் ரூசோ, இம்மானுவேல் காண்ட் போன்ற பிற அரசியல் சிந்தனையாளர்களுக்கு அடிப்படையாக இருந்தது. அவர்கள் தற்கால அறிவியல் அணுகுமுறையின் வழியே அரசியலை ஆராயும் ஹாப்ஸின் மரபினை பின்பற்றினர்)
Question 71
ஜான்லாக் எந்த ஆண்டு பிறந்தார்?
A
1630 இல்
B
1631 இல்
C
1632 இல்
D
1633 இல்
Question 71 Explanation: 
(குறிப்பு - இங்கிலாந்தின் சோமர்ஷெட்ஷயரில் உள்ள ரிங்டன் என்னுமிடத்தில் ஆகஸ்ட் 29-ஆம் நாள் 1632 ஆம் ஆண்டு பிறந்தார். பிரிஸ்டல் அருகேயுள்ள பென்ஸ்போர்டு இன்னும் இடத்தில் தனது குழந்தைப் பருவத்தை அவர்களை கழித்தார்)
Question 72
மகத்தான புரட்சி (Glorious Revolution) நடைபெற்ற ஆண்டு எது?
A
1680 ஆம் ஆண்டு
B
1683 ஆம் ஆண்டு
C
1686 ஆம் ஆண்டு
D
1688 ஆம் ஆண்டு
Question 72 Explanation: 
(குறிப்பு - ஜான் லாக் குழந்தைப் பருவத்தை பென்ஸ்போர்டு என்னுமிடத்தில் கழித்தார்.ஆரஞ்சின் இளவரசர் வில்லியம் உடன் லாக்கிற்கு நட்பு ஏற்பட்டது.1688 ஆம் ஆண்டு நடைபெற்ற மகத்தான புரட்சியின் விளைவாக வில்லியம் இங்கிலாந்தின் அரியணை ஏறினார்)
Question 73
தத்துவார்த்தமான சுதந்திரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
ஜான் லாக்
D
மாக்கியவல்லி
Question 73 Explanation: 
(குறிப்பு - மனிதனின் தன்மை பற்றிய ஜான் லாக்கின் புரிதலை அவரது மனித புரிதல் பற்றிய கட்டுரையில் அறிய முடியும். ஜான் லாக் தத்துவார்த்தமான சுதந்திரத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்)
Question 74
ஜான் லாக்கின் படைப்புகளையும் அது தோன்றிய ஆண்டுகளையும் பொருத்துக.
  1. சகிப்புத்தன்மை தொடர்பான கடிதங்கள்                    - a) 1693
  2. மனித புரிதலை பற்றிய கட்டுரை                                     - b) 1689
  3.  சகிப்பு தன்மை பற்றிய இரண்டாவது கடிதம்            - c) 1690
  4. கல்வி தொடர்பான சில சிந்தனைகள்                             - d) 1692
A
I-b, II-c, III-d, IV-a
B
I-d, II-b, III-c, IV-a
C
I-b, II-a, III-c, IV-d
D
I-d, II-b, III-a, IV-c
Question 74 Explanation: 
(குறிப்பு - சகிப்புத்தன்மை தொடர்பான கடிதங்கள், மனித புரிதலை பற்றிய கட்டுரை, குடிமை அரசாங்கம் பற்றிய ஆய்வு நூல்கள், சகிப்புத் தன்மை பற்றிய இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது கடிதம் போன்றவை ஜான் லாக்கின் படைப்புகள் ஆகும்)
Question 75
ஜான் லாக்கின் மனிதனின் தன்மை பற்றிய கருத்தாக்கத்தில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A
ஹாப்சை போல மனிதனின் தன்மை மீதான அவநம்பிக்கையை ஜான் லாக் பரிந்துரைக்கவில்லை.
B
காரணங்களை ஆராய்வதே மனிதர்களின் பகுத்தறிவு உருவாக காரணமாகும் என்ன ஜான் லாக் அடையாளப்படுத்துகிறார்.
C
தனிமனித மற்றும் சமூக வாழ்வின் அடிப்படையாக பகுத்தறிவினை ஜான் லாக் ஒப்புக்கொள்கிறார்.
D
தனி மனிதனின் இயற்கை சமநிலையை ஜாக்கின் கருத்து ஆதரிப்பதில்லை.
Question 75 Explanation: 
(குறிப்பு - மனிதர்கள் சமூகமயமானவர்கள், பகுத்தறிவு, நாகரீகம், நிலையான மனநிலை மற்றும் தன்னாட்சி திறன் உள்ளவர்கள் ஆவர் என்று ஜான் லாக் பரிந்துரைக்கிறார். தனி மனிதனின் இயற்கை சமநிலையை ஜான்லாக்கின் கருத்து ஆதரிக்கிறது)
Question 76
இயற்கை நிலைப்பற்றி ஜான் லாக் கூறும் கருத்துக்களுள் சரியானது எது?
  1. ஹாப்சின் இயற்கை நிலைக்கு முரணாக மனிதனுடைய சமூக உள்ளுணர்வின் காரணமாக நல்லொழுக்கத்தினால் அமைதியான சூழ்நிலை ஏற்படுவதாக ஜான் லாக் அனுமானிக்கிறார்.
  2. இயற்கை சட்ட நியதிகளின் படி அவரது இயற்கை நிலை முழுமையான சுதந்திரத்தின் அடிப்படையில் ஆனதாகும்.
  3. பரஸ்பர வலிமை மற்றும் அதிகார எல்லைகள் வரையறுக்கப்பட்ட சமத்துவமே இக்காலகட்டத்தின் பண்பியல் ஆகும் என்று ஜான் லாக் கூறுகிறார்.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 76 Explanation: 
(குறிப்பு - ஜான் லாக் அவர்களின் கூற்றுப்படி இயற்கை நிலை என்பது ஓர் அமைதியான நிலை, நல் விருப்பம், பரஸ்பர உதவி மற்றும் பாதுகாப்பாகும்)
Question 77
இயற்கை நிலையில் சமநிலைக்கு அச்சுறுத்தலாக உள்ளவையாக ஜான் லாக் கூறுவன எது?
  1. சட்டப்படியான கட்டமைப்பு இல்லாமை
  2. அறிவார்ந்த மற்றும் நடுநிலையான நீதிபதி இல்லாமை
  3. ஆட்சித்துறை அமைப்பு இல்லாமை
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 77 Explanation: 
(குறிப்பு - இயற்கை நிலையில் சமநிலைக்கு அச்சுறுத்தலாக உள்ள மூன்று அடிப்படை குறைபாடுகளை அடையாளம் காட்டுகிறார். சட்டப்படியான கட்டமைப்பு இல்லாமை, அறிவார்ந்த மற்றும் நடுநிலையான நீதிபதி இல்லாமை மற்றும் முடிவுகளை செயலாக்கபடுத்த செயலாட்சி துறை இல்லாமை என்பவை அவையாகும்)
Question 78
ஜான் லாக்கின் கருத்துப்படி முன்மொழியபடும் சமூக ஒப்பந்தங்கள் கீழ்க்கண்டவற்றுள் எது?
  1. குடிமைச் சமூகத்தை நிறுவும் ஒப்பந்தம்
  2. அரசமைப்பிலான அரசாங்கத்திற்கான ஒப்பந்தம்
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 78 Explanation: 
(குறிப்பு - குடிமைச் சமூகத்தில் நுழைவதற்கான கருவியாகவே சமூக ஒப்பந்தம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜான் லாக்கின் கருத்துப்படி இரு சமூக ஒப்பந்தங்கள் முன்மொழியபடுகின்றன. முதலாவதாக குடிமைச் சமூகத்தை நிறுவவும், இரண்டாவது அரசு அமைப்பிலான அரசாங்கத்திற்கானதும் ஆகும்)
Question 79
ஜான் லாக் அரசாங்கத்தின் அதிகாரங்களின் அங்கங்கள் என்று குறிப்பிடுபவைகளில் அல்லாதவை எது?
A
சட்டமன்றம்
B
ஆட்சித்துறை
C
கூட்டாட்சி
D
நீதிமன்றம்
Question 79 Explanation: 
(குறிப்பு - ஜான் லாக்கினை பொறுத்தவரை அரசாங்கத்தின் அதிகாரங்கள் மூன்று அங்கங்களிடம் பிரிக்கப்பட்டுள்ளன.முதலாவதாக சட்டமன்றம் ஆகும். இரண்டாவதாக நீதித்துறையின் அதிகாரங்களை உள்ளடக்கிய ஆட்சித்துறை ஆகும். மூன்றாவதாக அரசின் வெளியுறவு அதிகாரத்தை குறிக்கும் கூட்டாட்சி ஆகும்)
Question 80
சொத்தினை பாதுகாப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு நோக்கம் கிடையாது என்பது கீழ்கண்டவர்களில் யாருடைய கூற்றாகும்?
A
பிளாட்டோ
B
ஜான் லாக்
C
மாக்கியவல்லி
D
தாமஸ் அக்வினாஸ்
Question 80 Explanation: 
(குறிப்பு - ஒருவரின் கையில் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஆட்சியாளர் பற்றிய கருத்தை ஜான் லாக் ஏற்பதுடன் அது பெரும்பான்மையினருடைய ஒப்புதலின் வெளிப்பாடாகும் என்கிறார்)
Question 81
ஜான் லாக்கின் அரசாங்கம் பற்றிய ஆய்வு நூல்கள் அமெரிக்கப் புரட்சியின் பாடப்புத்தகமாகவே மாறின என்று கூறியவர் யார்?
A
வால்டேர்
B
டிடராட்
C
பாரிங்டன்
D
ரூசோ
Question 81 Explanation: 
(குறிப்பு - வால்டேர், டிடராட், ரூசோ போன்ற சிந்தனையாளர்களுக்கு மட்டுமல்லாமல் பிரெஞ்சுப் புரட்சி கூட தூண்டுதல் மற்றும் உத்வேகம் அளித்த பெரும் மூல ஆதாரமாக ஜான் லாக்கின் படைப்புகள் உள்ளன)
Question 82
ஜீன் ஜாக்குவஸ் ரூசோ பிறந்த ஆண்டு எது?
A
ஜூலை 28, 1771
B
ஜூலை 28, 1772
C
ஜூலை 28, 1774
D
ஜூலை 28, 1773
Question 82 Explanation: 
(குறிப்பு - தற்கால அரசியல் உரைக்கோவையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தத்துவ ஞானிகளில் ஒருவரான ஜீன் ஜாக்குவஸ் ரூசோ, ஜூலை 28, 1772 இல் ஜெனீவாவில் பிறந்தார்.)
Question 83
மான்ஷியர் டி மால்பை (Monsier de Malby) குடும்பத்தில் ஆசிரியராக பணிபுரிந்தவர் யார்?
A
ரூசோ
B
ஜான் லாக்
C
மாக்கியவல்லி
D
தாமஸ் அக்வினாஸ்
Question 83 Explanation: 
(குறிப்பு - இளம் விதவையான டி வாரன்ஸ் அம்மையார் என்பவர் ரூசோவிற்கு அடைக்கலம் தந்தார். அம்மையாரின் உதவியோடு மான்ஷியர் டி மால்பை குடும்பத்தில் ஆசிரியராக ரூசோ பணியில் சேர்ந்தார். இருப்பினும் அவர் தனது பணியை விட்டு விலகி இலக்கற்ற ஆத்மாவாக தனது பயணத்தை தொடர்ந்தார்)
Question 84
ஜீன் ஜாக்குவஸ் ரூசோ, கலைகள் மற்றும் அறிவியல்களினுடைய நீதிநெறி விளைவுகளின் சொற்கோவை என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரை எந்த ஆண்டு வெளியானது?
A
1740 இல்
B
1750 இல்
C
1760 இல்
D
1770 இல்
Question 84 Explanation: 
(குறிப்பு - 1749 இல் டிஜோன் அகாடெமியானது "அறிவியல் மற்றும் கலைகளின் முன்னேற்றம் நீதி நெறிகளை வீழ்ச்சி அடைய வைத்துள்ளதா அல்லது தூய்மைப்படுத்த பங்களித்துள்ளதா? " என்னும் தலைப்பில் சிறந்த கட்டுரைக்கான பரிசினை அறிவித்தது. அதில் ரூசோ முதல் பரிசினை வென்றார்)
Question 85
ஜீன் ஜாக்குவஸ் ரூசோவின் படைப்புகளில் கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
  1. புதிய ஹெலாய்சே
  2. எமிலி
  3. சமூக ஒப்பந்தம்
  4. டி சைவ்
A
I, II, III மட்டும்
B
II, III, IV மட்டும்
C
I, III, IV மட்டும்
D
இவை அனைத்தும்
Question 85 Explanation: 
(குறிப்பு - ஜீன் ஜாக்குவஸ் ரூசோ புதிய ஹெலாய்சே, எமிலி, சமூக ஒப்பந்தம் போன்ற நூல்களை படைத்துள்ளார். இவரது புத்தகங்களுக்கு பெரும்பாலும் கண்டனங்களை பெற்றதால், இவர் பல்வேறு இடங்களுக்கு குடிபெயர வேண்டியதாயிற்று)
Question 86
ஜீன் ஜாக்குவஸ் ரூசோ எந்த ஆண்டு மறைந்தார்?
A
ஜூலை 2, 1772
B
ஜூலை 2, 1774
C
ஜூலை 2, 1776
D
ஜூலை 2, 1778
Question 86 Explanation: 
(குறிப்பு - ஜீன் ஜாக்குவஸ் ரூசோ, ஜூலை 2, 1778ஆம் ஆண்டு மறைந்தார். இவரது மறைவு அதிர்ச்சியுடனும் தத்துவத்திற்கு பெரும் இழப்பாகவும் பார்க்கப்பட்டது) அரசியல் தத்துவ உலகினில் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டிற்காக முக்கியமாக அறியப்படுபவர்
Question 87
ஜீன் ஜாக்குவஸ் ரூசோ எந்த ஆண்டு மறைந்தார்?
A
ஜூலை 2, 1772
B
ஜூலை 2, 1774
C
ஜூலை 2, 1776
D
ஜூலை 2, 1778
Question 87 Explanation: 
(குறிப்பு - ஜீன் ஜாக்குவஸ் ரூசோ, ஜூலை 2, 1778ஆம் ஆண்டு மறைந்தார். இவரது மறைவு அதிர்ச்சியுடனும் தத்துவத்திற்கு பெரும் இழப்பாகவும் பார்க்கப்பட்டது)
Question 88
அரசியல் தத்துவ உலகினில் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டிற்காக முக்கியமாக அறியப்படுபவர் கீழ்க்கண்டவரில் யார்?
A
ஜீன் ஜாக்குவஸ் ரூசோ
B
ஜான் லாக்
C
மாக்கியவல்லி
D
தாமஸ் அக்வினாஸ்
Question 88 Explanation: 
(குறிப்பு - அரசியல் தத்துவ உலகினில் ரூசோ முக்கிய நிலையினை வகிக்கிறார். அவரது சமூக ஒப்பந்தக் கோட்பாட்டிற்காக அவர் முக்கியமாக அறியப்படுகிறார்.தீவிர சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளரான ரூசோ பொது விருப்பம் (General Will)மூலமாக அரசின் தோற்றத்தினை வெளிப்படுத்த முனைகிறார்)
Question 89
மனிதர்கள் இயற்கையில் சிந்திக்கும் திறன் பெற்றவர்கள் என்பது கீழ்க்கண்டவர்களில் யாருடைய கருத்தாகும்?
A
ஜீன் ஜாக்குவஸ் ரூசோ
B
ஜான் லாக்
C
மாக்கியவல்லி
D
தாமஸ் அக்வினாஸ்
Question 89 Explanation: 
(குறிப்பு - குடிமை சமூகம் இயற்கைக்கு முரணானதாகவும், மனிதனின் பகுத்தறிவினுடைய வெளிப்பாடாகவும் உள்ளது என்று ரூசோ கூறினார். இயற்கைக்கு திரும்புதல் என்னும் முழக்கத்தினை ரூசோ வலியுறுத்தினார்)
Question 90
ரூசோவின் சமூக ஒப்பந்தம் பற்றி " இன்று வரை உள்ள அரசியல் தத்துவ பாடல் நூல்களில் இது மிகச் சிறந்ததாகும்" என்று கூறியவர் யார்?
A
மார்லே பிரபு
B
ஜி.டி.எச்.கோல்
C
ஜி.டி.எச்.கோல்
D
இவர்கள் யாரும் அல்ல
Question 90 Explanation: 
(குறிப்பு - ரூசோவின் ஆளுமை மற்றும் அவரது படைப்புகளை பற்றி பல வகையான கருத்துகள் உள்ளன. மார்லே பிரபு என்பவர் ரூசோவின் தத்துவார்த்தமான சொற்கோவை பற்றிய தமது மாறுபட்ட கருத்தினை ' ரூஸோ பிறக்காமலே இருந்திருப்பின் உலகம் மேலும் சிறந்திருக்காதோ' என்கிறார்.)
Question 91
தத்துவ அறிஞர் ஜான் ஸ்டூவர்ட் மில் பிறந்த ஆண்டு எது?
A
மே 20, 1802
B
மே 20, 1804
C
மே 20, 1806
D
மே 20, 1808
Question 91 Explanation: 
(குறிப்பு - மே 20, 1806 இல் ஜான் ஸ்டூவர்ட் மில் லண்டனின் வடக்கு புறநகர்ப் பகுதியிலுள்ள பென்டன் வில்லே(Bentonville) என்னும் இடத்தில் ஹரியத் பரோ மற்றும் ஜேம்ஸ் மில் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார்)
Question 92
ஜான் ஸ்டூவர்ட் மில்லின் படைப்புகளுள் அல்லாதவை எது?
A
தர்க்கவாத முறைமை
B
அரசியல் பொருளாதார தத்துவக் கொள்கைகள்
C
டி சைவ்
D
பிரதிநிதித்துவ அரசாங்கம் மீதான பரிசீலனைகள்
Question 92 Explanation: 
(குறிப்பு - ஜான் ஸ்டூவர்ட் மில் அவரது வாழ்வின் இறுதி காலகட்டமான கடைசி 30 ஆண்டுகளில் தர்க்கவாத முறைமை, அரசியல் பொருளாதாரத் தத்துவத்தின் கொள்கைகள், சுதந்திரம், பிரதிநிதித்துவ அரசாங்கம் மீதான பரிசீலனைகள் போன்ற படைப்புகளை படைத்து பதிப்பித்தார்)
Question 93
ஜான் ஸ்டூவர்ட் மில் சுதந்திரம் என்னும் நூலினை எந்த ஆண்டில் வெளியிட்டார்?
A
1853 இல்
B
1856 இல்
C
1859 இல்
D
1860 இல்
Question 93 Explanation: 
(குறிப்பு - 1859 இல் வெளியிடப்பட்ட சுதந்திரம்(On Liberty) எனும் நூல் ஜான் ஸ்டூவர்ட் மில்லுக்கு நீடித்த புகழைத் தேடித் தந்தது. அவரது பிற படைப்புகளை காட்டிலும் முன்னறிவித்ததைப் போன்று இதுவே மிக நீண்ட காலம் நீடித்து இருந்தது)
Question 94
ஜான் ஸ்டூவர்ட் மில் தனது சுதந்திரம் என்னும் நூலில் எந்த அலகில் பண்பியல் சுதந்திரம் என்பதற்கான சாதகமான வாதங்களை முன்வைக்கிறார்?
A
முதலாவது அலகில்
B
இரண்டாம் அலகில்
C
மூன்றாம் அலகில்
D
நான்காம் அலகில்
Question 94 Explanation: 
(குறிப்பு - சுதந்திரம் என்னும் நூலின் இரண்டாவது அலகில், உணர்ச்சி வெளிப்பாட்டினை கட்டுப்படுத்துவதற்கு எதிரான வாதங்களை ஜான் ஸ்டூவர்ட் மில் விளக்கியுள்ளார். சுதந்திரத்தின் மூன்றாவது அலகில் பண்பியல் சுதந்திரம் என்பதற்கு சாதகமான வாதங்களை மில் முன்வைக்கிறார்)
Question 95
ஜான் ஸ்டூவர்ட் மில்லின் அரசியல் பற்றிய கருத்துகளை கொண்ட பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் மீதான பரிசீலனைகள் எந்த ஆண்டு பதிப்பிக்கப்பட்டது?
A
1860 இல்
B
1861 இல்
C
1862 இல்
D
1863 இல்
Question 95 Explanation: 
(குறிப்பு - 1861 ஆம் ஆண்டு மில்லின் அரசியல் பற்றிய கருத்துக்களைக் கொண்ட பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் மீதான பரிசீலனைகள் பதிப்பிக்கப்பட்டது. மில் ஒரு பற்றுறுதி உள்ள மக்களாட்சி வாதியாவார்.)
Question 96
பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் மீதான பரிசீலனைகள் குறித்து மில் கூறுவதில் கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது?
  • கூற்று 1 - பெரும்பான்மையினரே ஆட்சி செய்தாலும் சிறுபான்மையினர் ஆட்சியே அநேகமாக சரியாக உள்ளது.
  • கூற்று 2 - ஜான் ஸ்டூவர்ட் மில் பெரும்பான்மையிடம் அதிகாரம் இருந்தாலும் சிறுபான்மையினரிடமே ஞானம் உள்ளது என வாதிடுகிறார்
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 96 Explanation: 
(குறிப்பு - ஒவ்வொரு குடிமகனுக்கும் எப்பொழுதேனும் அரசாங்கத்தின் பொதுவான மக்கள் பணிகளில் உண்மையாக பங்கேற்க அழைப்பு வரும் என்று ஜான் ஸ்டூவர்ட் மில் கூறுகிறார்)
Question 97
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் நீங்கள் இழப்பதற்கு உங்கள் விலங்கினைத் தவிர வேறொன்றுமில்லை என்று கூறியவர் யார்?
A
ஜி.டி.எச்.கோல்
B
காரல் மார்க்ஸ்
C
ஜே.எஸ்.மில்லின்
D
இவர்கள் யாரும் அல்ல
Question 97 Explanation: 
(குறிப்பு - காரல் மார்க்சை பொறுத்தவரையிலும் கோட்பாடு என்பது நம்மை சுற்றியுள்ள உலகை புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, ஒரு படி முன்னே சென்று உணவை மாற்றுவதற்கும் ஆதரவளிக்க வேண்டும் என்பதாகும்)
Question 98
பிரெஞ்சு புரட்சி கீழ்காணும் எந்த ஆண்டு ஏற்பட்டது?
A
1788 இல்
B
1789 இல்
C
1790 இல்
D
1791 இல்
Question 98 Explanation: 
(குறிப்பு - ஐரோப்பாவில் சமதர்மத்தின் வளர்ச்சிக்கு பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதி சாட்சியானது எனக் கூறலாம். இக்காலகட்டம் இரட்டைப் புரட்சி சகாப்தம் என அறியப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் அரசியல் அடிப்படையில் 1789ம் ஆண்டு பிரெஞ்சு புரட்சி ஏற்பட்டது)
Question 99
காரல் மார்க்ஸ் மற்றும் ஃபிரடெரிக் ஏங்கல்ஸின் கூட்டு படைப்பான பொதுவுடைமை அறிக்கை எந்த ஆண்டு வெளியானது?
A
1842
B
1844
C
1846
D
1848
Question 99 Explanation: 
(குறிப்பு - பொதுவுடைமை அறிக்கை 1848ஆம் ஆண்டு, காரல் மார்க்ஸ் மற்றும் ஃபிரடெரிக் ஏங்கல்ஸின் கூட்டு படைப்பாக வெளிவந்தது. இது 1850 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஐரோப்பாவில் இருந்த சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பெருங்குழப்பங்களின் விளைவான படைப்பாகும்)
Question 100
பொதுவுடைமை அறிக்கையின் முக்கியமான கருத்துக்களாவன கீழ்க்கண்டவற்றுள் எது?
  1. பாட்டாளிகளை ஆளும் வர்க்கம் என்ற நிலைக்கு உயர்த்துவது.
  2. மக்களாட்சி யுத்தத்தில் வெற்றி பெறுவது
  3. சுதந்திரம் அடைவது
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 100 Explanation: 
(குறிப்பு - பொதுவுடைமை அறிக்கையை நிறைவு செய்யும் வகையில் இது கருத்துக்கள் அருகருகே வைக்கப்படுகின்றன.ஒன்று பாட்டாளிகளை ஆளும் வர்க்கம் என்ற நிலைக்கு உயர்த்துவது ஆகும். மற்றொன்று மக்களாட்சி யுத்தத்தில் வெற்றி பெறுவதாகும்)
Question 101
காரல் மார்க்சின் தலை சிறந்த படைப்பான மூலதனம் எந்த ஆண்டு வெளியானது?
A
1863 இல்
B
1865 இல்
C
1867 இல்
D
1869 இல்
Question 101 Explanation: 
(குறிப்பு - காரல் மார்க்சின் தலை சிறந்த படைப்பான மூலதனம் என்னும் நூல் 1867 ஆம் ஆண்டு பெர்லினில் வெளியானது. அது உழைக்கும் வர்க்கத்தின் வேதாகமம் என்று விவரிக்கப்பட்டது)
Question 102
காரல் மார்க்சின் மூலதனம் என்னும் நூலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் யாரால் தொகுத்து அமைக்கப்பட்டது?
A
ஜே.எஸ்.மில்லின்
B
ஜே.எஸ்.மில்லின்
C
ஏங்கல்ஸ்
D
இவர்கள் யாரும்
Question 102 Explanation: 
(குறிப்பு - காரல் மார்க்சின் வாழ்நாளில் மூலதனம் என்னும் நூலின் முதல் தொகுதி மட்டுமே நிறைவுபெற்று வெளியிடப்பட்டது. காரல் மார்க்ஸ் நிறைவு செய்யாத இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதிகள் ஏங்கல்ஸ் அவர்களால் தொகுக்கப்பட்டு 1885 மற்றும் 1894 இல் வெளியிடப்பட்டது)
Question 103
இயங்கியல் பொருள் முதல்வாதம் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  • கூற்று 1 - இயங்கியல் பொருள் முதல்வாதம் என்பது காரல் மார்க்ஸ் மற்றும் ஃபிரடெரிக் ஏங்கல்ஸ் ஆகியோரின் போதனைகளிலிருந்து உண்மையில் பெறப்பட்ட தத்துவார்த்த அணுகுமுறையாகும்.
  • கூற்று 2 - கோட்பாடு அளவில் தர்க்கவாதப் பொருள்முதல்வாதம் என்பது அறிவியல் பிரச்சனைகளை புலனாய்வு செய்ய பொதுவான உலகளாவிய பார்வை மற்றும் அதற்கான முறையினை தந்துள்ளது.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 103 Explanation: 
(குறிப்பு - மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோர் சமுதாயத்தினுடைய ஒவ்வொரு அடிப்படைப் பிரிவினையையும் பொருளாக பார்ப்பதுடன் சமூக மாற்றும் என்பது எதிர்தரப்பினரின் போராட்டத்தின் மூலமே நிகழும் என்கின்றனர்)
Question 104
எந்த ஆண்டு மார்க்ஸ் தமது பங்களிப்புகளை மூன்று பிரிவுகளாக தொகுத்தார்?
A
1850 இல்
B
1852 இல்
C
1854 இல்
D
1856 இல்
Question 104 Explanation: 
(குறிப்பு - 1852 ஆம் ஆண்டு மார்க்ஸ் தமது பங்களிப்புகளை மூன்று பிரிவுகளாக தொகுத்துள்ளார். அவை வர்க்கங்கள், வர்க்கப்போராட்டம், பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்பன ஆகும்)
Question 105
காரல் மார்க்சின் கோட்பாடுகளால் தாக்கத்திற்க்குள்ளான நாடுகளில் அல்லாதது எது?
A
ரஷ்யா
B
சீனா
C
பிரேசில்
D
வியட்நாம்
Question 105 Explanation: 
(குறிப்பு - காரல் மார்க்சின் படைப்புகள் பலரின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தின. மார்க்சியக் கோட்பாடுகளின் தாக்கத்திற்கு உள்ளான லெனின், ஸ்டாலின், மவோ போன்ற தலைவர்கள் ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு முயன்று சாதித்தனர்)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 105 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!