Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

அரசு Online Test 11th Political Science Lesson 2 Questions in Tamil

அரசு Online Test 11th Political Science Lesson 2 Questions in Tamil

Congratulations - you have completed அரசு Online Test 11th Political Science Lesson 2 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1

மக்களை அரசுடன் இணைப்பது கீழ்க்கண்டவற்றுள் எது

  1. சாலை வசதிகள்
  2. மருத்துவ சேவை
  3. மின்சாரம்
  4. குடிநீர் மற்றும் சுகாதாரம்
A
I, II மட்டும்
B
I, II, III மட்டும்
C
I, III, IV மட்டும்
D
இவை அனைத்தும்
Question 1 Explanation: 
(குறிப்பு - நாம் அனைவரும் ஒரு அரசின் கீழ் வாழ்ந்து வருகிறோம். சாலை வசதிகள், மருத்துவ சேவை, மின்சாரம், குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்றவை நம்மை அரசுடன் இணைப்பவற்றில் சிலவாகும். அரசு நம்மை சில செயல்களை செய்ய கட்டாயப்படுத்துகிறது. சில செயல்களை செய்ய விடாமல் தடுக்கிறது.)
Question 2

" ஒரு மனிதன் அரசு எனும் அமைப்பிற்குள் வாழ்வது, அவன் மனிதத் தன்மையுடன் வாழ்வது, இவை இரண்டும் ஒன்றே" எனும் கூற்று கீழ்கண்டவர்களில் யாருடையதாகும்

A
பிளாட்டோ
B
அரிஸ்டாட்டில்
C
மாக்கியவல்லி
D
கௌடில்யர்
Question 2 Explanation: 
(குறிப்பு - அரசு என்பது உலகளாவிய ஏனைய சமூக அமைப்புகளை விட, மிகவும் சக்தி வாய்ந்ததாகும். அரசு இயற்கையாகத் தோன்றிய அமைப்பாகும். மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதுடன் மனிதர்கள் அரசியல் சார்ந்து இருப்பது அவர்களின் இயல்பான தன்மை என அரிஸ்டாட்டில் கூறுகிறார்)
Question 3

நவீன சொல்லான அரசு (State) என்னும் சொல் கீழ்க்காணும் எந்த சொல்லிலிருந்து உருவானதாகும்

A
ஸ்டேட்ஸ் (States)
B
ஸ்டேட்டஸ் (Status)
C
ஸ்டேட்டை (Statei)
D
ஸ்டேடம் (Statum)
Question 3 Explanation: 
(குறிப்பு - நவீன சொல்லான அரசு (State) என்பது, ஸ்டேட்டஸ்(Status) எனும் சொல்லிலிருந்து உருவானதாகும். மனிதர்கள் வாழ்வியலுக்கான அடிப்படையினை கொண்டுள்ளதனாலேயே அரசு ஒரு இன்றியமையாத அமைப்பாக கருதப்படுகிறது)
Question 4

முதன் முதலில் அரசு என்னும் சொற்பிரயோகத்தை தமது படைப்புகளில் பயன்படுத்தியவர் யார்

A
பிளாட்டோ
B
அரிஸ்டாட்டில்
C
மாக்கியவல்லி
D
கௌடில்யர்
Question 4 Explanation: 
(குறிப்பு - நிக்கோலோ மாக்கியவெல்லி எனும் அறிஞர் முதன்முதலில் அரசு என்னும் சொல் பிரயோகத்தை தமது படைப்புகளில் பயன்படுத்தினார். அரசு என்பது மனித சமுதாயத்திற்கு நல்வாழ்வினை ஏற்படுத்தித் தருவதற்காக நீடிக்கிறது. மனிதர்களின் நோக்கங்கள், ஆசைகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவை அரசு எனும் அமைப்பின் மூலமே செயல்வடிவம் பெறுகின்றன)
Question 5

சமூக ஒப்பந்த சிந்தனையாளர்கள் என்று அறியப்படுபவர்களுள் அல்லாதவர் கீழ்க்கண்டவர்களில் யார்

A
தாமஸ் ஹாப்ஸ்
B
ஜான் லாக்
C
ஜீன் ஜாக்குவஸ் ரூசோ
D
பேராசிரியர் லாஸ்கி
Question 5 Explanation: 
(குறிப்பு - தாமஸ் ஹாப்ஸ், ஜீன் ஜாக்குவஸ் ரூசோ, ஜான் லாக் ஆகிய மூவரும் சமூக ஒப்பந்த சிந்தனையாளர்கள் என்று அறியப்படுகின்றனர். மனிதர்களை அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்பது இவர்களின் உள்ளார்ந்த கருத்தாகும்)
Question 6

மனிதனுக்கு முழுமையான சுதந்திரம் உண்டு என்று மனிதனின் இயல்பினை கூறும் அரசியல் சிந்தனையாளர் யார்?

A
தாமஸ் ஹாப்ஸ்
B
ஜான் லாக்
C
ஜீன் ஜாக்குவஸ் ரூசோ
D
பேராசிரியர் லாஸ்கி
Question 6 Explanation: 
(குறிப்பு - மனிதர்கள் ஒவ்வொருவரும் பிறரிடம் ஓநாய்களை போன்று பகையுடன் இருக்கக் கூடியவர்கள் என்று தாமஸ் ஹாப்ஸ் குறிப்பிடுகிறார். மனிதன் முழுமையான சுதந்திரம் கொண்டவன் ஆனால் அவன் ஒழுக்கக்கேடானவன் என ரூஸோ குறிப்பிடுகிறார்)
Question 7

அரசு எனப்படுவது யாதெனில், ஓர் குறிப்பிட்ட எல்லைக்குள் சட்டத்தின் மாட்சிமையின் கீழ் ஒளுங்க அமைக்கப்பட்ட மக்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும், எனும் கூற்று யாருடையது

A
உட்ரோ வில்சன் (Woodrow Wilson)
B
அரிஸ்டாட்டில் (Aristotle)
C
கார்னர் (Garner)
D
ஹாலந்து (Holland)
Question 7 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட கூற்று உட்ரோ வில்சன் கூறியதாகும். அரசினை வரையறுக்கும் போது மனித வர்க்கத்தின் ஒரு குறிப்பிட்ட பங்கினர் ஒரு அமைப்பாக இருந்து செயல்படுவதே அரசு என்கிறார் பெர்ஜெஸ் எனும் அறிஞர்)
Question 8

அரசுகளின் உரிமைகள் மற்றும் கடமைகளின் மீதான மாநாடு மான்டிவீடியோ எனும் இடத்தில் எந்த ஆண்டு நடைபெற்றது

A
1930 இல்
B
1931 இல்
C
1932 இல்
D
1933 இல்
Question 8 Explanation: 
(குறிப்பு - மாண்டிவீடியோ எனும் நகரில் 1933 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசுகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் மீதான மாநாடு, அரசு என்பதனைப் பற்றிய ஒரு அடிப்படை புரிதலை அளித்தது)
Question 9

அரசு என்பதனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது

  1. அரசு என்பது ஒரு நிரந்தர மக்கள் தொகையை கொண்டிருக்க வேண்டும்.
  2. அரசு என்பது ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு மற்றும் நிலப்பரப்பின் மீது ஆளுமை செலுத்தும் அரசாங்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
  3. அரசு அதன் மக்களை கட்டுப்படுத்தவல்லது ஆகும்
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 9 Explanation: 
(குறிப்பு - அரசு என்பது மக்கள் மீது அளப்பரிய ஆதிக்கம் செலுத்தவல்ல அதிகாரத்துவம் கொண்ட அமைப்புகளின் தொகுப்பாகும். எனவே அனைத்து நவீன அரசுகளும் ஒருபுறம் அரசின் அளப்பரிய கேள்விக்கு அப்பாற்பட்ட அதிகாரத்தினையும் மறுபுறம் குடிமக்களின் சுதந்திரம் மற்றும் சலுகைகளையும் தத்தமது அரசமைப்பு சட்டத்தின் வாயிலாக சமன்படுத்துவதை காணமுடியும்)
Question 10

கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது

  1. கூற்று 1 - ஒரு அரசு என்பது பிற நாடுகளுடன் பன்னாட்டு உறவுகளையும் நடத்தவல்லது.
  2. கூற்று 2 - ஒரு அரசினை பிற அரசுகள் அங்கீகரித்தல் என்பது ஒரு அரசின் சட்டபூர்வ தன்மைக்கு மிக முக்கியமாகும்.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 10 Explanation: 
(குறிப்பு - அரசமைப்புச் சட்டம் என்பது அரசின் அளப்பரிய அதிகாரம் செலுத்தும் தன்மையினை கட்டுப்படுத்தும் ஒருமுகமையாக கருதப்படுகிறது)
Question 11

கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது

  1. கூற்று 1 - இந்தியா உலக அரங்கில் ஒரு தகுந்த நிலையுடன் சுதந்திரமாக உள்ளது.
  2. கூற்று 2 - இந்தியா பிற அரசுகளின் ஆதிக்கத்திற்கு உட்படாதது
  3. கூற்று 3 - இந்தியா பிற அரசுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம்
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 11 Explanation: 
(குறிப்பு - இந்தியா ஒரு நன்கு வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியினை கொண்டதாகும். இந்தியாவில் இந்தியர்களுக்கான ஒரு அரசாங்கம் இருக்கிறது. இந்தியாவின் தூதரகங்கள் அனைத்து நாடுகளிலும் உள்ளன)
Question 12

ஒரு அரசு கொண்டிருக்க வேண்டியவைகளில் கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது

  1. மக்கள் அல்லது மக்கள் தொகை
  2. நிலப்பரப்பு
  3. அரசாங்கம்
  4. இறையாண்மை
A
I, II மட்டும்
B
I, II, III மட்டும்
C
I, III, IV மட்டும்
D
இவை அனைத்தும்
Question 12 Explanation: 
(குறிப்பு - ஒரு அரசு என்பது மக்கள் அல்லது மக்கள் தொகை, நிலப்பரப்பு, அரசாங்கம் மற்றும் இறையாண்மை போன்றவற்றினை கொண்டிருக்க வேண்டும்)
Question 13

2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகையானது

A
120 கோடி
B
121 கோடி
C
122 கோடி
D
123 கோடி
Question 13 Explanation: 
(குறிப்பு - மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2011ம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகையானது 121.02 கோடியாகும்)
Question 14

முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எந்த ஆண்டில் நடத்தப்பட்டது

A
1870 இல்
B
1872 இல்
C
1874 இல்
D
1876 இல்
Question 14 Explanation: 
(குறிப்பு - 1872 ஆம் ஆண்டில் தொடங்கி தற்போது 2011 வரை பதினைந்தாவது புள்ளிவிவர கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது)
Question 15

2011ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரப்பட்டியல் எத்தனை மொழிகளில்  தயாரிக்கப்பட்டது

A
16 மொழிகளில்
B
18 மொழிகளில்
C
20 மொழிகளில்
D
22 மொழிகளில்
Question 15 Explanation: 
(குறிப்பு - 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான மொத்த செலவு ரூபாய் 2200 கோடியாகும். ஒவ்வொரு நபருக்கான செலவு ரூபாய் 18.19 ஆகும் )
Question 16

2001ஆம் ஆண்டில் இருந்து 2011ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகை எத்தனை கோடி அதிகரித்துள்ளது

A
18 கோடி
B
20 கோடி
C
22 கோடி
D
24 கோடி
Question 16 Explanation: 
(குறிப்பு - இந்தியாவின் மக்கள் தொகை 2011ம் ஆண்டு 121.02கோடி என கணக்கெடுக்கப்பட்டது. இது அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், வங்காளதேசம், மற்றும் ஜப்பான் ஆகிய அனைத்து நாடுகளின் மக்கள்தொகையில் ஒட்டு மொத்தக் கூட்டுத் தொகைக்கு சமமானதாகும்)
Question 17

முந்தைய கணக்கெடுப்புகளை காட்டிலும் குறைவான மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தினை பதிவு செய்த முதல் 10 ஆண்டு கணக்கெடுப்பு எது

A
1951 - 1961
B
1991 - 2001
C
2001 - 2011
D
1981 - 1991
Question 17 Explanation: 
(குறிப்பு - 2001-2011 ஆகிய பத்து ஆண்டு கணக்கெடுப்புதான் அதன் முந்தைய பத்தாண்டுகளில் கணக்கெடுப்பு காட்டிலும் குறைவான மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்த முதல் 10 ஆண்டு கனக்கெடுப்பு ஆகும்)
Question 18

ஒட்டுமொத்த ஆண் பெண் பாலின விகிதம் 2001ம் ஆண்டில் இருந்து 2011ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் எத்தனை புள்ளிகள் அதிகரித்தன

A
5 புள்ளிகள்
B
7 புள்ளிகள்
C
9 புள்ளிகள்
D
11 புள்ளிகள்
Question 18 Explanation: 
(குறிப்பு - 2001 ஆம் ஆண்டு ஆண் பெண் பாலின விகிதம் 933 ஆக இருந்தது. அது 2011 ஆம் ஆண்டு 940 ஆக உயர்ந்தது. 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் 7 புள்ளிகள் அதிகரித்துள்ளன)
Question 19

மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது

A
1948 இல்
B
1950 இல்
C
1952 இல்
D
1954 இல்
Question 19 Explanation: 
(குறிப்பு - 1948 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படியும், அரசமைப்பின் வழிகாட்டுதலின்படியும் சுதந்திரத்திற்குப் பிந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பு பத்தாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது)
Question 20

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது கீழ்க்கண்டவற்றில் எது கணக்கெடுப்பில் கொண்டு வரப்பட்டது

  1. வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை
  2. மக்களின் வங்கி பயன்பாடுகள்
  3. கணிப்பொறி, வலைத்தள இணைப்பு
  4. மிதிவண்டி, உந்து வண்டி, மகிழுந்து 
A
I, II, III மட்டும்
B
II, III, IV மட்டும்
C
I, III, IV மட்டும்
D
இவை அனைத்தும்
Question 20 Explanation: 
(குறிப்பு - கடைசியாக 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை விவர கணக்கெடுப்பில் ஒரு வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, அதன் தலைவர், அந்த வீட்டின் வசதிகள், அதன் உள்ளிருப்பு, உடமைகள் ஆகியன அடிப்படையிலும் வீட்டின் தரை, சுவர் மற்றும் மேற்கூரை ஆகியவற்றின் தன்மை போன்றவற்றையும் அடிப்படையாக கொண்டு கணக்கு எடுக்கப்பட்டது)
Question 21

ஒரு லட்சிய அரசில் 5040 குடிமக்கள் வாழ்வது போதுமானது எனக் குறிப்பிட்டவர் யார்

A
பிளாட்டோ
B
அரிஸ்டாட்டில்
C
நிக்கோலோ மாக்கியவல்லி
D
இவர்கள் யாரும் அல்ல
Question 21 Explanation: 
(குறிப்பு - பிளாட்டோவின் கருத்துப்படி ஒரு லட்சிய அரசின் மக்கள் தொகை என்பது 5040 ஆகும். இதற்கு காரணம் இந்த 5040 என்ற எண்ணை ஒன்று முதல் 12 வரையிலான எந்த எண்ணாலும் வகுக்க முடியும். நெருக்கடியான காலங்களில் மக்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து அவர்களுக்குரிய தனித்தனி அறிவிப்புகள் தருவதற்கு வசதியாகவே இந்த 5040 என்ற மக்கள் தொகை எண்ணிக்கை பிளாட்டோவினால் தேர்வு செய்யப்பட்டது)
Question 22

ஒரு லட்சிய அரசு என்பது 10, 000 மக்கள் தொகையை உடையதாக இருத்தல் வேண்டும் என்று கூறியவர் யார்

A
பிளாட்டோ
B
அரிஸ்டாட்டில்
C
நிக்கோலோ மாக்கியவல்லி
D
ஜீன் ஜாக்குவஸ் ரூசோ
Question 22 Explanation: 
(குறிப்பு - பிளாட்டோவின் கூற்றுப்படி ஒரு லட்சிய அரசில் 5040 குடிமக்கள் வாழ்வது போதுமானது என்றார். அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி மக்கள் தொகையினை துல்லியமாக கூறாமல் மிகக் குறைவாக அல்லது மிக அதிகமாக இருக்கக்கூடாது என்று மட்டும் அறிவுறுத்தினார். ரூஸோ ஒரு லட்சிய அரசு என்பது பத்தாயிரம் மக்கள் தொகை உடையதாக இருக்க வேண்டும் என்று கூறினார்)
Question 23

கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது

  1. கூற்று 1 - நிலப்பரப்பு இல்லாமல் ஒரு அரசு இருக்க முடியாது. நிலப்பகுதி என்பது அந்த நாட்டின் நிலம் நீர் மற்றும் ஆகாயம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
  2. கூற்று 2 - மக்கள் தொகை என்ற கூற்றினை போல் நிலப்பகுதி என்பதற்கு குறிப்பிட்ட அளவு என்பது கிடையாது.
  3. கூற்று 3 - குடியுரிமைக்கு நிலப்பகுதி முக்கியமானதாகும்.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 23 Explanation: 
(குறிப்பு - மக்கள் வசிக்க இருப்பிடம் அதாவது நிலப்பகுதி அவசியமாகிறது. மேலும் மக்கள் தங்களை சமூக மற்றும் அரசியல் அடிப்படையில் தயார்படுத்திக்கொள்ள நிலப்பகுதி தேவையாகிறது.)
Question 24

இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு இந்திய நிலப்பரப்பை பற்றி குறிப்பிடுகிறது

A
முதல் உறுப்பு
B
இரண்டாம் உறுப்பு
C
மூன்றாம் உறுப்பு
D
நான்காம் உறுப்பு
Question 24 Explanation: 
(குறிப்பு - இந்திய அரசின் நிலப்பகுதி 32, 87, 263 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்திய அரசமைப்பின் முதல் உறுப்பு இந்தியாவின் நிலப்பரப்பை பற்றி குறிப்பிட்டுள்ளது)
Question 25

உலக அளவில் இந்தியாவின் நிலப்பரப்பு சதவீதம் எவ்வளவு

A
1.5%
B
2.4%
C
3.7%
D
4.2%
Question 25 Explanation: 
(குறிப்பு - இந்திய அரசின் நிலப்பகுதி 32, 87, 263 சதுர கிலோமீட்டர் ஆகும். இது உலக அளவில் கிட்டத்தட்ட 2.4 சதவீத நிலப்பரப்பு ஆகும்)
Question 26

அரசாங்கம் என்பதற்குரிய சரியான விளக்கம் கீழ்கண்டவற்றுள் எது

  1. அரசாங்கம் என்பது ஒரு அரசின் செயல்படக்கூடிய ஓர் முகமையாகும்.
  2. அரசாங்கம் என்பது அரசின் அரசியல் அடிப்படையிலான ஒருங்கிணைப்பு ஆகும்.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 26 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட இரண்டு கூற்றுகளும் அரசாங்கம் என்பதற்கான சரியான விளக்கங்கள் ஆகும்)
Question 27

"அரசின் விருப்பங்களை உருவாக்கி வெளிப்படுத்தி உடன் நிறைவேற்றும் ஒரு முகமையாக அரசாங்கம் விளங்குகிறது" கூற்று யாருடையதாகும்

A
பேராசிரியர் அப்பாதுரை
B
சி.எப்.ஸ்ட்ராங்
C
ஜீன் போடின்
D
ஹெரால்டு லாஸ்கி
Question 27 Explanation: 
(குறிப்பு - அரசாங்கம் ஒரு நிலைப்படுத்தப்பட்ட அமைப்பாகும். அரசாங்கத்தில் வழிநடத்த ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும், அவர்கள் மாறுவதும் இயல்பு என்றாலும், மாறாதது அரசாங்கத்தின் கட்டமைப்பாகும்)
Question 28

இறையாண்மை என்பதன் பொருள் கீழ்க்கண்டவற்றுள் எது

A
மேலான சட்ட அதிகாரம்
B
மேலான மற்றும் இறுதியான சட்ட அதிகாரம்
C
உயர்ந்த சட்ட அதிகாரம்
D
இது எதுவும் அல்ல
Question 28 Explanation: 
(குறிப்பு - இறையாண்மை என்பது ஒரு அரசியல் நான்காவது அடிப்படை கூற்றாகும். இறையாண்மை என்பதன் பொருள் மேலான மற்றும் இறுதியான சட்ட அதிகாரம் என்பதாகும்)
Question 29

இறையாண்மை என்னும் சொல் கீழ்காணும் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது

A
அரேபிய
B
பிரெஞ்ச்
C
இலத்தீன்
D
கிரேக்கம்
Question 29 Explanation: 
(குறிப்பு - இறையாண்மை என்னும் சொல் இலத்தீன் மொழிச் சொல்லான "சூப்பரானஸ்" என்பதிலிருந்து பெறப்பட்டது. இதற்கு உயர்ந்த அதிகாரம் என்று பொருளாகும்)
Question 30

இறையாண்மை என்பது கீழ்கண்ட எந்த பண்புகளை உள்ளடக்கியது ஆகும்

  1. முழுமையானது
  2. நிரந்தரமானது
  3. பிரிக்கக்கூடியது
  4. தனித்துவமானது
A
I, II, III மட்டும் சரி
B
I, III, IV மட்டும் சரி
C
I, II, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 30 Explanation: 
(குறிப்பு - தொன்று தொட்டு வரும் புரிதலின்படி இறையாண்மை என்பது முழுமையானது, நிரந்தரமானது, அனைவருக்குமானது, பிரிக்க முடியாதது, தனித்துவமானது மற்றும் மாற்றித் தர இயலாதது என்பன போன்ற பண்புகளை உள்ளடக்கி உள்ளது)
Question 31

நவீன இறையாண்மை கோட்பாட்டின் தந்தையாக கருதப்படுபவர் யார்

A
ஹெரால்டு லாஸ்கி
B
ஜீன் போடின்
C
சி.எப்.ஸ்ட்ராங்
D
இவர்கள் யாரும் அல்ல
Question 31 Explanation: 
(குறிப்பு - பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் போடின் (Jean Bodin) என்பவர் நவீன இறையாண்மை கோட்பாட்டின் தந்தை ஆவார்)
Question 32

கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது

  1. கூற்று 1 - குடும்பங்கள், தங்கள் பாதுகாப்பிற்காகவே சமூகம் எனும் கட்டமைப்பின் கீழ் வந்தன.
  2. கூற்று 2 - சமூகங்கள் தங்களின் மேம்பட்ட பாதுகாப்பிற்காக சமுதாயம் எனும் அமைப்பினை தோற்றுவித்தன.
  3. கூற்று 3 - தனிநபர்கள் தங்கள் உலகியல் தேவைக்காக மற்றவரைச் சார்ந்து இருந்ததினால் குடும்பம் எனும் அமைப்பில் வாழ்ந்து வந்தனர்.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 32 Explanation: 
(குறிப்பு - சமுதாயத்தில் வாழும் அவருடைய தேவை அதே சமுதாயத்தின் ஒட்டு மொத்த கூட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்பட்டது. இவ்வாறு தனித்தனியாக ஒவ்வொரு மனிதரும் தமது அன்றாட உணவிற்காக உழைப்பது, பொருள் உற்பத்தியை தோற்றுவிக்கும்.)
Question 33

கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது

  1. சமுதாயம் சீரழிந்து போகும் போது அதன் தாக்கம் சமூகக் குழுக்களின் மீதும் ஏற்படும்.
  2. சமூகங்கள் சிதைவு பெறும்போது குடும்பங்களும் சிதைய தொடங்கும்.
  3. குடும்பங்கள் சிதையத் துவங்கினால் ஒவ்வொருவரும் துன்புற நேரிடும்.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 33 Explanation: 
(குறிப்பு - ஒரு சரிசெய்ய இயலாத சீரழிவை தடுக்கும் பொருட்டு, மனிதர்கள் ஒன்றுபட்டு, பகுத்தறிவின் வழிகாட்டுதலின் பேரில் அரசியலும் மாட்சிமை பொருந்திய வலிமையோடு இருக்கக்கூடிய அமைப்பின் அவசியத்தினை உணர்ந்தனர்)
Question 34

கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது

  1. கூற்று 1 - மக்களாட்சியில் சட்டங்கள் சட்டமன்றத்தில் இயற்றப்படும்.
  2. கூற்று 2 - இயற்றப்பட்ட சட்டங்கள், செயலாட்சி துறை மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டும், நீதிமன்றத்தால் சட்டங்களின் சட்டப்பூர்வ தன்மை ஆய்வு செய்யப்படுகிறது.
  3. கூற்று 3 - சட்டம் இயற்றுதல், இயற்றிய சட்டத்தை அமலாக்கம் செய்தல் மற்றும் அதற்கு விளக்கம் அளித்தல் ஆகியன அரசாங்கத்தின் பணிகளாகும்.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 34 Explanation: 
(குறிப்பு - மனிதர்கள் ஒருவருக்கொருவர் தம்மை அழைத்துக் கொள்வதில் இருந்து அவர்களை காக்கும் நோக்கிலேயே அதிகாரங்கள் குவிக்கப்பட்டு அவ்வதிகாரங்களை நிர்ப்பந்திக்கும் அதிகாரமும் கொண்ட அரசு எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது)
Question 35

சமுதாயம் என்பது கீழ்கண்டவைகளில் எதை உள்ளடக்கியதாகும்

  1. தனிநபர்கள்
  2. குடும்பங்கள்
  3. குழுக்கள் மற்றும் அமைப்புகள்
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 35 Explanation: 
(குறிப்பு - சமுதாயம் என்பது தனி நபர்கள், குடும்பங்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ஆரம்பகால அரசியல் சிந்தனையாளர்கள் அரசு மற்றும் சமுதாயம் ஆகிய இரண்டும் ஒன்றே என கருதினர். அரசு என்பது சமுதாயத்தின் பகுதியாகும் எனினும் அதுவே சமுதாயத்தின் வடிவம் ஆகிவிடாது)
Question 36

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் கீழ்க்காணும் எந்த ஆண்டில் நடைபெற்றது

A
2011 இல்
B
2013 இல்
C
2016 இல்
D
2018 இல்
Question 36 Explanation: 
(குறிப்பு - சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்றது. தமிழக நிதிநிலை அறிக்கையில் சேவைகளுக்கான வரி சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன)
Question 37

அரசு என்பதன் சரியான விளக்கம் கீழ்க்கண்டவற்றில் எது

  1. அரசின் எல்லை வரையறுக்கப்பட்டது.
  2. அரசு என்பது அரசியல் சார்ந்த அமைப்பாகும்
  3. அரசருக்கு சட்டங்களை நடைமுறைப் படுத்தும் அதிகாரம் இல்லை.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 37 Explanation: 
(குறிப்பு - சமுதாயம் தோன்றிய பின்னரே அரசு என்ற அமைப்பு தோன்றியது. அரசு என்பது ஒரு அரசியல் சார்ந்த அமைப்பாகும். அரசிற்கு சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உள்ளது.)
Question 38

சமுதாயம் என்பதற்கான கீழ்காணும் விளக்கங்களில் சரியானது எது

  1. சமுதாயமானது அரசு தோன்றுவதற்கு முன்னரே தோன்றியது.
  2. சமுதாயத்தின் பரப்பெல்லை பரந்ததாகும்.
  3. சமுதாயம் என்பது ஓர் சமூக அமைப்பாகும்.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 38 Explanation: 
(குறிப்பு - சமுதாயத்திற்கு என நிலையான நிலப்பரப்பு எதுவுமில்லை. சமுதாயத்திற்கு என அதிகாரங்கள் எதுவும் இல்லை. சமுதாயம் என்பது ஒரு சமூக அமைப்பாகும்)
Question 39

அரசு என்பதற்கான சரியான விளக்கம் எது

  1. அரசு என்பது மக்கள் தொகை, நிலப்பரப்பு, அரசாங்கம் மற்றும் இறையாண்மை ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டது ஆகும்.
  2. அரசு என்பது நிரந்தரமானது என்பதுடன் என்றைக்கும் நீடித்திருப்பதாகும்.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 39 Explanation: 
(குறிப்பு - பேச்சுவழக்கில் அரசும் அரசாங்கமும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் அரசு என்பதும் அரசாங்கம் என்பதும் வெவ்வேறானவை ஆகும்.)
Question 40

அரசாங்கம் என்பதற்கான விளக்கங்களில் எது தவறானது

A
அரசாங்கம் என்பது அரசின் நான்கு கூறுகளில் ஒன்றாகும்.
B
அரசாங்கத்தின் அதிகாரங்கள் அரசிடமிருந்து பெற்றவையாகும்.
C
அரசாங்கம் என்பது நிரந்தரமானது ஆகும்.
D
அரசாங்கம் என்பது உறுதியானது மட்டும் காணக் கூடியது ஆகும்.
Question 40 Explanation: 
(குறிப்பு - அரசாங்கம் என்பது தற்காலிகமானதாகும். மக்கள் விருப்பத்தின் பேரில் அரசாங்கங்கள் மாற்றப்படலாம். அது நிரந்தரமானது அல்ல)
Question 41

மேலைநாட்டு பழக்கவழக்கங்கள் தொடர்பான நூல்களை இயற்றியவர் கீழ்க்கண்டவர்களில் யார்

A
மகாத்மா காந்தி
B
ஜவஹர்லால் நேரு
C
அவிஸாய் மர்காலித்
D
ஜீன் போடிங்
Question 41 Explanation: 
(குறிப்பு - நவீன அரசியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கு நவீனத்துவம் ஆற்றிய பங்களிப்புகளையும், மேலை நாட்டுப் பழக்க வழக்கங்கள் நவீனத்துவத்தோடு நெருங்கிய தொடர்புடையதாக கருதப்படுகிறது என்பது அவிஷாய் மர்காலித் என்பவருடைய கூற்றாகும். மேலைநாட்டு பழக்கவழக்கம் தொடர்பான நூல்களை இவர் இயற்றியுள்ளார்)
Question 42

வெஸ்ட் பாலியா உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது

A
1640 இல்
B
1644 இல்
C
1646 இல்
D
1648 இல்
Question 42 Explanation: 
(குறிப்பு - முற்றிலும் மாறுபட்ட நவீன அரசு மேற்கத்திய ஐரோப்பாவில் புதுவடிவம் பெற்ற அரசியல் நிறுவனமாக இடைக்காலத்தில் தோன்றியது. நவீன அரசின் அறிவுப்பூர்வமான அடித்தளம் பெரும்பாலும் 1648 ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்ட வெஸ்ட் பாலியா உடன்படிக்கையின் விளைவே என்று கூறப்படுகிறது.)
Question 43

நிரந்தர அமைதி எனும் சிந்தனை கீழ்க்கண்டவரில் யாருடையதாகும்

A
இமானுவேல்
B
அரிஸ்டாட்டில்
C
பிளாட்டோ
D
சாக்ரடீஸ்
Question 43 Explanation: 
(குறிப்பு - தத்துவஞானி இமானுவேல் கான்ட் அவர்களின் நிரந்தர அமைதி என்னும் சிந்தனையின் படி உலக நாடுகள் ஒன்றிணைந்து பன்னாட்டு சங்கம் எனவும் பின்னாளில் ஐக்கியநாடுகள் சபை எனவும் ஒன்றிணைந்து தற்காப்பு மற்றும் பாதுகாப்பு முதலியவற்றை விவாதித்து உலக அமைதியை பெறுகின்றன)
Question 44

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை கீழ்க்கண்டவரில் யார்

A
சர் சி வி ராமன்.
B
அமர்த்தியா சென்
C
சந்திரசேகர பட்டாச்சார்யா
D
சுரேந்திரநாத் பானர்ஜி
Question 44 Explanation: 
(குறிப்பு - செயல் திறன் குறித்த சிந்தனைகளை வெளியிட்டவர் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் ஆவார். நலிவுற்ற பிரிவினர் மற்றும் நுகர்வோரின் நலன்களை பாதுகாத்தல், லாபம் ஈட்ட இயலாத துறைகளில் முதலீடு செய்வது போன்றவை நவீன அரசின் பொருளாதார பணிகளாக கருதப்படுகிறது)
Question 45

மதிய உணவுத் திட்டம், சத்துணவு திட்டம் ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்திய மாநிலம் எது

A
மகாராஷ்டிரம்
B
கேரளா
C
தமிழ்நாடு
D
ஒடிசா
Question 45 Explanation: 
(குறிப்பு - சுத்தமான குடிநீர், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியன அரசின் முதன்மையான பொறுப்புகள் ஆகும். இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்களின் பல்வேறு நலத்திட்டங்கள் இந்த திசையில் இருப்பதை காணமுடியும். தமிழக அரசாங்கத்தின் மதிய உணவுத் திட்டம் மற்றும் அரசு பள்ளி குழந்தைகளுக்கான சத்துணவு திட்டம் நாட்டின் பிற பகுதிகளில் பின்பற்றப்படுகிறது)
Question 46

மக்கள் நல அரசு மாதிரியின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணங்களாக விளங்குவது எது

  1. குறைந்தபட்சம் மக்கள் தொகை
  2. மிகுதியான வளம்
  3. வருமானம்
A
I, II மட்டும்
B
I, III மட்டும்
C
II, III மட்டும்
D
இவை அனைத்தும்
Question 46 Explanation: 
(குறிப்பு - குறைந்தபட்ச மக்கள் தொகை மற்றும் அதே நேரத்தில் வளங்கள் மிகுதியாக இருப்பது மக்கள் நல அரசு மாதிரியின்(Welfare State Model) வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணங்களாகும்)
Question 47

மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எந்த இடத்தில் ஏற்பட்டது

A
ஐரோப்பா
B
ஆசியா
C
ஆப்பிரிக்கா
D
அமெரிக்கா
Question 47 Explanation: 
(குறிப்பு - மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்டதாகும். மக்கள் நல அரசின் அரசாங்கத்தினுடைய முதன்மை சிந்தனை என்பது மனித வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதாகும்)
Question 48

கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது

  1. ஸ்கண்டிநேவிய நாடுகள் மக்கள் நல அரசு இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
  2. இந்தியாவின் வளங்கள் போதாமை, பெருகும் மக்கள் தொகை ஆகியவை மக்கள் நல அரசின் இலக்குகளை எட்ட தடையாக உள்ளது.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 48 Explanation: 
(குறிப்பு - குடி மக்களின் நல்வாழ்விற்கான பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டினை பேணுதல் நல அரசின் பங்கு ஆகும். இந்தியாவின் அரசமைப்பு ஒரு நல அரசை நிறுவ முயல்கிறபோதிலும் வளங்கள் போதாமை, அதேசமயம் பெருகும் மக்கள் தொகை ஆகியவை மக்கள் நல அரசின் இலக்குகளை எட்ட தடையாக உள்ளது)
Question 49

குடி மக்களின் பொருளாதார மற்றும் சமூக நலன் கீழ்காணும் எதன் அடிப்படையிலானதாகும்

A
வாய்ப்புகளில் சமத்துவம் எனும் கொள்கை
B
பொருளாதார வளங்களை சமமாக வழங்குவதற்கான கொள்கை.
C
குறைந்தபட்ச நல்வாழ்க்கையை தங்களால் ஏற்படுத்திக் கொள்ள இயலாதவர்களுக்கு ஏற்படுத்தித் தருதல்.
D
இவை அனைத்தும்.
Question 49 Explanation: 
(குறிப்பு - சுதந்திரத்திற்கு முன்பு இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் ஒரு காலனித்துவ அரசாக இருந்தது. இந்தியர்கள் ஆங்கிலேய முடியாட்சியின் கீழ் இருந்தனர். நம் நாடு சுதந்திரம் அடைந்ததும் நாம் நமது அரசமைப்பின் உருவாக்கினோம். நமது அரசு அமைப்பானது மேற்கத்திய மக்கள் நல அரசின் சிந்தனைகளை உள்வாங்கியதாகும்)
Question 50

மேற்கத்திய அரசுகளுடன் ஆசிய அரசுகளை ஒப்பிடும்போது ஆசிய அரசுகளில் நிலவும் சமுதாய ஒழுங்கீனங்கள் ஆசிய அரசுகளை மென்மை அரசுகளாக ஆக்குவதை கண்டறிந்தவர் யார்

A
அமர்த்தியா சென்
B
குன்னர் மிர்டால்
C
மார்த்தா நூசுபாம்
D
ஜே.எஸ்.மில்
Question 50 Explanation: 
(குறிப்பு - நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் குன்னர் மிர்டால் (Gunner Mirtaal) மேற்கத்திய அரசுகளுடன் ஆசிய அரசுகளை ஒப்பிடும் போது, ஆசிய அரசுகளின் நிலவும் சமுதாய ஒழுங்கீனங்கள் ஆசிய அரசுகளை மென்மை அரசுகளாக ஆக்குவதை கண்டறிந்தார். சமூக ஒழுங்கீனம், ஊழல் மற்றும் மிக பலவீனமான சட்ட அமலாக்கம் ஆகியன மென்மை அரசின் முக்கிய தன்மைகள் ஆகும்)
Question 51

இந்தியாவை மென்மை அரசாக மாற்றுவது கீழ்க்கண்டவற்றுள் எது

  1. தரநிலைகளை கடைபிடிக்காமை 
  2. சட்ட அமலாக்கம் செய்ய இயலாமை.
  3. ஒழுக்கத்தை பராமரிக்க இயலாமை
A
I, II மட்டும்
B
II, III மட்டும்
C
I, III மட்டும்
D
இவை அனைத்தும்
Question 51 Explanation: 
(குறிப்பு - முழு வளர்ச்சி பெறாத ஆளுமைத் திறன்கள் கொண்ட காலனியாதிக்க காலத்திற்கு பிந்தைய நாடுகள் மென்மை அரசுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. தரநிலைகளை கடைப்பிடிக்காமை, ஒழுக்கத்தை பராமரிக்க இயலாமை, சட்ட அமலாக்கம் செய்ய இயலாமை போன்றவை நமது நாட்டினை மென்மை அரசாக மாற்றி விடுகிறது)
Question 52

கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்று எது

  1. கூற்று 1 - இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னரே அதன் பாலினத்தை தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும்.
  2. கூற்று 2 - மேற்கத்திய நாடுகளில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ளுதல் சட்டப்படி குற்றமல்ல.
  3. கூற்று 3 - PCPNDT Act எனும் சட்டம், இந்தியாவில் சிசுவின் பாலினத்தை குழந்தையின் பிறப்பிற்கு முன்னர் தெரிவிப்பதற்கான தடைச்சட்டம் ஆகும்.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 52 Explanation: 
இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னரே அதன் பாலினத்தை தெரிவிப்பது, தெரிந்து கொள்ள முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.'கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிதல் தடை சட்டம்' எதும் சட்டத்தின் மூலம் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கருவுற்று இருக்கும் பெண்ணிற்கு, அவரது உறவினருக்கோ சொல், செயல் மற்றும் பிற குறியீடுகள் வழியாக தெரிவிப்பது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது)
Question 53

ஸ்கண்டிநேவியா நாடுகளில் அல்லாதது எது

A
டென்மார்க்
B
நார்வே
C
இத்தாலி
D
ஸ்வீடன்
Question 53 Explanation: 
(குறிப்பு - ஸ்கண்டிநேவிய நாடுகள் என்பது வடக்கு ஐரோப்பாவில் உள்ள டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய மூன்று நாடுகளின் ஒருங்கிணைந்த பகுதியை குறிப்பதாகும்)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 53 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!