Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

தமிழக அரசியல் சிந்தனை Online Test 11th Political Science Lesson 15 Questions in Tamil Online Test

தமிழக அரசியல் சிந்தனை Online Test 11th Political Science Lesson 15 Questions in Tamil Online Test

Congratulations - you have completed தமிழக அரசியல் சிந்தனை Online Test 11th Political Science Lesson 15 Questions in Tamil Online Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஸ்டராபோ எனும் கிரேக்க வரலாற்று சிந்தனையாளர் மற்றும் புவியியலாளர் கீழ்காணும் எந்த காலத்தை சேர்ந்தவர் ஆவார்?
A
கிமு 60 முதல் கிபி 20 வரை
B
கிமு 63 முதல் கிபி 25 வரை
C
கிமு 63 முதல் கிபி 24 வரை
D
கிமு 65 முதல் கிபி 25 வரை
Question 1 Explanation: 
(குறிப்பு -ஸ்டராபோ எனும் கிரேக்க வரலாற்று சிந்தனையாளர் மற்றும் புவியியலாளர் கிமு 63 முதல் கிபி 25 வரை வரையான காலத்தில் வாழ்ந்தவராவார். இவர் தமிழ் முடியாட்சியின் பாண்டியர்கள் காலத்தில் உள்ள ராஜதந்திர வரலாற்றினை உற்றுநோக்கியிருந்தார்)
Question 2
பண்டைக்கால துறைமுகங்கள் கீழ்க்கண்டவற்றுள் எது?
  1. பூம்புகார், கொற்கை
  2. வசவசமுத்திரம், பெரிமுளா
  3. அரிக்கமேடு, அழகன்குளம்
A
I, II மட்டும்
B
I, III மட்டும்
C
II, III மட்டும்
D
இவை அனைத்தும்
Question 2 Explanation: 
(குறிப்பு - இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்தியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் வர்த்தகத்தை வளர்ப்பதற்காக தமிழக கரையோரங்களில் இருந்த துறைமுகங்கள் முக்கிய மையமாக செயல்பட்டன. )
Question 3
கீழ்க்காணும் எந்த இடங்களில் பண்பாட்டு பரிமாற்றங்கள் நடந்தவகையாக அறியப்படுகிறது?
  1. தென்கிழக்கு ஆசிய நாடுகள்
  2. சீனா, எகிப்து
  3. ரோமாபுரி, கிரேக்கம்
A
I, II மட்டும்
B
I, III மட்டும்
C
II, III மட்டும்
D
இவை அனைத்தும்
Question 3 Explanation: 
(குறிப்பு - வர்த்தகம், வாணிபம் மற்றும் பண்பாட்டு பரிமாற்றங்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை, சீனா, எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமாபுரி போன்ற நாடுகளுடன் திறம்பட மேற்கொள்ளப்பட்டது. கப்பல் கட்டுதல் பாரம்பரியமிக்க தமிழர்கள் சிறந்த கடலோடிகளான நமது முன்னோர்கள் உலகின் அடிப்படைத் தன்மைகளின் தாக்கங்களாக அரசியல், சமுதாயம், பண்பாடு, வர்த்தகம் மற்றும் வாணிப தொடர்புகளை உலகின் மற்ற நாடுகளுடன் ஏற்படுத்தினர்)
Question 4
சங்கப் பாடலின் வகைப்பாட்டியலில் புறம் என்பது கீழ்காணும் எதைப்பற்றி கூறுவதில்லை?
A
போர்
B
நன்மை மற்றும் தீமை
C
சமூகம், நீதி, முடியரசு
D
அன்பு சார்ந்து இருத்தல்
Question 4 Explanation: 
(குறிப்பு - சங்கப் பாடலின் வகைப்பாட்டியலில் அகம் என்பது அன்பு சார்ந்து இருத்தல் என்பதையும், புறம் என்பது போர், நன்மை மற்றும் தீமை, சமூகம், நீதி மற்றும் முடியரசு போன்றவற்றையும் கூறுகிறது
Question 5
கீழ்க்கண்ட நூல்களுள் எட்டுத்தொகை நூல் அல்லாதது எது?
A
பதிற்றுப்பத்து
B
கலித்தொகை
C
பரிபாடல்
D
மதுரை காஞ்சி
Question 5 Explanation: 
(குறிப்பு - சங்க இலக்கிய புத்தகமான எட்டுத்தொகை, எட்டு நூல் திரட்டு என்றும் அழைக்கப்படுகிறது. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை எட்டுத்தொகை நூல்கள் ஆகும்)
Question 6
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. ஆரம்பகாலத்தில் தொல்காப்பியத்தின் முதல் இரண்டு புத்தகங்களும் தமிழ்க் இலக்கணமாக கருதப்பட்டது.
  2. சங்க இலக்கியங்களுக்கு பிறகு சேகரிக்கப்பட்ட பிரபலமான நூற்கோவை அல்லது பாடல் திரட்டு என்பது கீழ்க்கணக்கு என அழைக்கப்படுகிறது.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 6 Explanation: 
(குறிப்பு - சங்க இலக்கிய நூல்களாக எட்டுத்தொகை மற்றும் ஒன்பதாவது குழுவாக விளங்கும் பாட்டுகளான பத்துப்பாட்டும் காணப்பட்டது. எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்கள் ஆகியவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்பட்டன)
Question 7
திருக்குறள் கீழ்கண்டவற்றில் எதனின் கீழ் அமைந்துள்ளது?
A
ஐம்பெரும் காப்பியம்
B
ஐஞ்சிறு காப்பியம்
C
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
D
பதினெண்மேல்கணக்கு நூல்கள்
Question 7 Explanation: 
(குறிப்பு - திருக்குறள் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். பிரபந்த இலக்கியம் என்பது பல்வேறு வகையான பாடல்களை கொண்டிருந்தது.அவற்றுள் கோவை என்பது குறிப்பிட்ட கருத்திலான வரிகளைக் கொண்டிருக்கும். கலம்பகம் என்பது ஒரு பக்தியின் முடிவு என்பது, அடுத்த வரிக்கு ஆரம்பமாக வழி இருப்பதுடன், மேலும் பரணி என்பதற்கும் வழிவகுக்கிறது)
Question 8
கிமு 165இல் வாழ்ந்த காரவேலா என்பவர் யார்?
A
சோழ அரசன்
B
பாண்டிய அரசன்
C
கலிங்க அரசன்
D
பல்லவ அரசன்
Question 8 Explanation: 
(குறிப்பு - நிலம், புவியமைப்பு ஆட்சியாளர்கள் மற்றும் தலைவர்களால் வேறுபட்டு இருந்தாலும் தமிழ் பேசும் பகுதிகளில் தமிழரின் நாடு மற்றும் தேசக் கூட்டமைவு என்பது இருந்தது. கலிங்க அரசன் காரவேலா (கிமு 165) காலத்தின் கல்வெட்டுகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் 132 வருடமாக இருந்த தமிழ் கூட்டமைவு என்பதனை அழித்தார் என கல்வெட்டுகள் கூறுகின்றன)
Question 9
தமிழ் அரசர்களின் கூட்டமைவின் பிறநாட்டு படையெடுப்பிற்கு எதிராக சண்டையிட்டதை கூறும் சங்ககால இலக்கிய நூல் எது?
A
அகநானூறு
B
புறநானூறு
C
பரிபாடல்
D
கலித்தொகை
Question 9 Explanation: 
(குறிப்பு - தமிழ் அரசர்களின் கூட்டமைப்பின் பிற நாட்டு படையெடுப்பிற்கு எதிராக சண்டையிட்டதை சங்க கால இலக்கியமான அகநானூறு விவரித்துள்ளது.ஆனால் தமிழ் தேசியவாதம் என்பது காலனி ஆதிக்கத்தின் விளைவினால் தோன்றியது என்று சாதாரணமாக கூறி விட முடியாது)
Question 10
கோவலன் மற்றும் கண்ணகியின் வாழ்ந்த இடமாக அறியப்படுவது எது?
A
கொற்கை
B
பூம்புகார்
C
மதுரை
D
மாமல்லபுரம்
Question 10 Explanation: 
(குறிப்பு - சங்க இலக்கிய நூலான சிலப்பதிகாரம், கோவலன் மற்றும் கண்ணகி கிழக்கு கடற்கரையோரம் உள்ள பூம்புகாரில் வாழ்ந்ததாக கூறுகிறது)
Question 11
பொருத்துக
  1. குறிஞ்சி                     - a) காடுகளை சார்ந்த பகுதி
  2. முல்லை                     - b) வயல் சார்ந்த பகுதி
  3.  மருதம்                       - c) மலைசார்ந்த பகுதி
  4. நெய்தல்                     - d) கடல் சார்ந்த பகுதி
A
I-c, II-a, III-b, IV-d
B
I-a, II-d, III-b, IV-c
C
I-b, II-a, III-c, IV-d
D
I-d, II-a, III-b, IV-c
Question 11 Explanation: 
(குறிப்பு - பண்டைய தமிழ் நாடு என்பது தமிழகம் என்று அழைக்கப்பட்டது. இந்த நிலமானது பாரம்பரியமாக ஐந்து புவியியல் சார்ந்த பிராந்தியமாக இயற்கைத் தன்மையுடன் பிரிக்கப்பட்டுள்ளது. அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய ஐந்திணைகள் ஆகும்)
Question 12
தமிழ் மன்னர்கள் மற்றும் அவர்களின் தலைநகரை  பொருத்துக
  1. சோழர்கள்                   - a) கேரளா
  2. பாண்டியர்கள் - b) காஞ்சிபுரம்
  3. சேரர்கள்                         - c) உறையூர்
  4. பல்லவர்கள் - d) மதுரை
A
I-c, II-d, III-a, IV-b
B
I-a, II-d, III-b, IV-c
C
I-b, II-a, III-c, IV-d
D
I-d, II-a, III-b, IV-c
Question 12 Explanation: 
(குறிப்பு - தமிழ்நாடு பல்வேறு அரசர்கள் மற்றும் குறுநில மன்னர்களால் ஆளப்பட்டது. சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் போன்றவர்கள் தமிழகத்தை ஆண்டனர். கடையெழு வள்ளல்கள் புலவர்களுக்கு வாரி வழங்கியதைப் பற்றி சங்கப் புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர்
Question 13
கீழ்க்கண்டவர்களில் கடையெழு வள்ளல்களுள் அல்லாதவர் யார்?
A
காரி
B
பாரி
C
பேகன்
D
நளன்
Question 13 Explanation: 
(குறிப்பு - ஆய், பாரி, ஓரி, காரி, அதியமான், பேகன் மற்றும் நல்லி ஆகியோர் கடையெழு வள்ளல்கள் ஆவர். கபிலர் மற்றும் அவ்வையார் இவர்களைப் பற்றி புகழ்ந்து பாடியுள்ளனர். ஒரு சிறந்த அரசனின் குணங்களாக அவன் பாகுபாடற்ற நீதி வழங்கும் அரசனாகவும், மக்களிடத்தில் அன்பு உடையவனாகவும், போர்க்களத்தில் எதிரிகளிடம் வீரத்தை வெளிப்படுத்துபவனாகவும் இருக்கவேண்டும் என குறிப்பிடுகிறது)
Question 14
சங்க காலத்தில் அரசன் தலைமையேற்று நடத்தும் நாட்டின் உயர்ந்த நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
சபை
B
நீதிசபா
C
அவை
D
இவை எதுவும் இல்லை
Question 14 Explanation: 
(குறிப்பு - சபை அல்லது மன்றம் எனப்படுவது அரசன் தலைமையேற்று நடத்தும் நாட்டின் உயர்ந்த நீதிமன்றம் ஆகும். இதைப்போலவே ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு மன்றம் உண்டு. அது அந்த கிராமத்தின் பொது இடத்தில் கூடி அந்த கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கும்)
Question 15
பாண்டிய அரசனை புகழ்ந்து எழுதப்பட்ட நூல் கீழ்க்கண்டவற்றுள் எது?
A
அகநானூறு
B
புறநானூறு
C
கலித்தொகை
D
பரிபாடல்
Question 15 Explanation: 
(குறிப்பு - போரின் நல்ல நடை முறைகள் பலவற்றை சங்க இலக்கியங்கள் நிறைய தெரிவிக்கின்றன. புறநானூறு என்பது ஒரு சங்க இலக்கியம் ஆகும். இது பாண்டிய அரசனை புகழ்கிறது. அவன், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் வயோதிக மக்கள் கால்நடைகள் இவைகள் அனைத்தையும் பாதுகாப்பான இடங்களில் போர் காலங்களில் இடம்பெயரச் செய்தான். அதைப் பற்றி புகழ்ந்து கூறுகிறது.)
Question 16
பல்வேறு வகையான வரிகளை பற்றி கூறும் சங்க பாடல் எது?
A
புறநானூறு
B
பட்டினப்பாலை
C
கலித்தொகை
D
ஐங்குறுநூறு
Question 16 Explanation: 
(குறிப்பு - சங்க இலக்கியமான பட்டினப்பாலை பல்வேறு வகையான வரிகளை பற்றி கூறுகிறது. அவைகள், சுங்க வரி வருமான வரி, பொருள்கள் மீது வரி மற்றும் பல வரிகள் அரசின் வருவாயை பெருக்கும் ஆதாரமாக கூறப்பட்டுள்ளன)
Question 17
கீழ்க்காணும் யாருடைய கல்வெட்டில் முத்துக்குளித்தல் பற்றி கூறப்பட்டுள்ளது?  
A
சேரர்கள் கால கல்வெட்டு
B
சோழர்கள் கால கல்வெட்டு
C
பாண்டியர் கால கல்வெட்டு
D
பல்லவர்கள் கால கல்வெட்டு
Question 17 Explanation: 
(குறிப்பு - எளிமையான நிர்வாக கட்டமைப்பின் வழியே (அமைச்சர்கள், அதிகாரிகள்) தமிழ் அரசர்கள் தமிழகத்தை ஆட்சி புரிந்தனர். வெளிநாட்டு வர்த்தகம், சுங்கவரி முதலானவை அரசின் வருவாயில் பெரும் பங்கு வகித்தன. பாண்டியர் கல்வெட்டில் முத்துக்குளித்தல் (கலாத்திகர்) பற்றியும் முதன்மை எழுத்தர் (கணத்திகன்) பற்றியும் கூறப்பட்டுள்ளது)
Question 18
சங்க காலத்தில் அடிமைகள் கீழ்க்கண்டவற்றுள் எதற்கு பயன்படுத்தப்பட்டனர்?
  1. பரிசுக்காக பரிமாற்றம் செய்ய
  2. கட்டுமானம் மற்றும் கட்டிட வேலை செய்ய
  3. வர்த்தகங்கள்
A
I, II க்கு மட்டும்
B
II, III க்கு மட்டும்
C
I, III க்கு மட்டும்
D
இவை அனைத்திற்கும்
Question 18 Explanation: 
(குறிப்பு - அடிமைகளை படையெடுத்தபின் பிடிப்பதும், அடிமைகளை வர்த்தகத்திற்கு பயன்படுத்தவும், பரிசுக்காக பரிமாற்றம் செய்யவும் அரசு ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. குறிப்பாக கட்டுமானம் மற்றும் கட்டிட வேலைகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டனர்)
Question 19
சங்க காலத்திய சமுதாயப் பிரிவுகளை பொருத்துக
  1. துடியன்          - a) விவசாயி
  2. கடம்பன்        - b) குடி
  3.  வைசியன்   - c) அரசன்
  4. வேளாளர்      - d) வியாபாரி
A
I-b, II-c, III-d, IV-a
B
I-b, II-c, III-d, IV-a
C
I-b, II-a, III-c, IV-d
D
I-d, II-a, III-b, IV-c
Question 19 Explanation: 
(குறிப்பு - பண்டைய தமிழில் சாதிமுறை என்பது காணப்படவில்லை. வர்க்க கொள்கை மற்றும் வர்க்க கருத்து வேறுபாடுகள் அவரவர்களின் தொழில் சார்ந்த முறையில் காணப்பட்டன. சங்க கால சமுதாயத்தில் சாதிய முறை என்பது வெளியிடத்திற்க்குரியதாகவும் மற்றும் அறியப்படாததாகவும் இருந்தது)
Question 20
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. வர்ண முறை மற்றும் சாதி அமைப்பு சங்க கால சமுதாயத்தில் சிறிதளவே காணப்பட்டன.
  2. பண்டைய தமிழ் சமூக அமைப்புகளில் மனுதர்மம் மூலமாக சட்டமாக்கப்படவில்லை.
  3. ஆரம்பகால ஆரிய பிராமண சாதி அமைப்புகள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படவில்லை.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 20 Explanation: 
(குறிப்பு - இது போன்ற அமைப்புகள் சங்க காலத்திற்குப் பிறகு தோன்றின பண்டைய தமிழ் மதங்கள் நாட்டுப்புற கலையை சார்ந்தே இருந்தது. இயற்கையை வழிபடுதல் மற்றும் இயற்கை காரணிகளே பொதுவாக காணப்பட்டன)
Question 21
கீழ்க்காணும் எந்த கடவுளை வழிபடுவதே தமிழ்நாடு பழங்குடியினரின் வழிபாட்டு மரபு ஆகும்?
A
சிவன்
B
முருகன்
C
அய்யனார்
D
விஷ்ணு
Question 21 Explanation: 
(குறிப்பு - இயற்கையை வழிபடுதல் மற்றும் இயற்கை காரணிகளே பொதுவாக காணப்பட்டன. முருகக் கடவுளை வழிபடுவது தமிழ்நாடு பழங்குடியினரின் வழிபாட்டு மரபு ஆகும். முருகக் கடவுளை போராளிகளின் அல்லது மாவீரர்களின் கடவுளாக நாட்டுப்புறக் கலாச்சாரமாக செயல்படுத்தினர்.)
Question 22
எந்த நூற்றாண்டுக்கு பிறகு தமிழ் மற்றும் சமஸ்கிருதம் போன்ற எழுத்துக்கள் தோன்ற ஆரம்பித்தன?
A
கிபி நான்காம் நூற்றாண்டுக்குப் பின்
B
கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்
C
கிபி ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்
D
கிபி ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்
Question 22 Explanation: 
(குறிப்பு - முருகர், உலகில் பற்றுடைய கடவுளாக தமிழ் திராவிட மரபுகளின் கட்டுரைகளில் வேரூன்ற ஆரம்பித்தன.கிபி ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே தமிழ் மற்றும் சமஸ்கிருதம் போன்ற எழுத்துக்கள் தோன்ற ஆரம்பித்தது. சமஸ்கிருதமயமாதல் மெதுவாக பொதுவெளிக்கு பரவ ஆரம்பித்தது)
Question 23
தொழில் ரீதியாக பிரிக்கப்பட்டிருந்தது திராவிட சமூகத்தை மேலிருந்து கீழாக சாதிரீதியாக பிரித்தது கீழ்கண்டவற்றுள் எது?
  1. சமஸ்கிருதமயமாதல்
  2. வேத சடங்குகள்
  3. மனு கொண்டுவந்த வர்ணாசிரம அமைப்பு
A
I மட்டும்
B
I, III மட்டும்
C
II, III மட்டும்
D
இவை அனைத்தும்
Question 23 Explanation: 
(குறிப்பு - பிராமணர்கள் அரசனுக்கு ஆசி வழங்குபவர்களாகவும், மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாகவும் கருதும் மனப்பாங்கு தொடங்கியது. இக்கால கட்டத்திற்குப் பின் பிராமணர்களிடம் ஆசி பெறுவது சட்டபூர்வ வழியாக துவங்கியது. சமஸ்கிருதமயமாதலுடன் சேர்ந்து வேத சடங்குகள், மனு கொண்டு வந்த வர்ணாசிரமம் அமைப்பு போன்றவை ஏற்கனவே தொழில் ரீதியாக பிரிக்கப்பட்டு இருந்த திராவிட சமூகத்தை மேலிருந்து கீழாக சாதிரீதியாக பிரித்தது)
Question 24
அரசுரிமையானது, புனிதத்தன்மை உடையது மற்றும் மரபுவழியானது என கூறியவர்கள் யார்?
A
சேரர்கள்
B
சோழர்கள்
C
பாண்டியர்கள்
D
பல்லவர்கள்
Question 24 Explanation: 
(குறிப்பு - அரசுரிமையானது புனிதத்தன்மை உடையது மற்றும் மரபுவழியானது என பல்லவர்கள் கூறினர். பல்லவர்கள் காலத்தில் வட இந்தியாவில் இருந்த ஆரிய கலாச்சாரம் தமிழ்நாட்டில் ஊடுருவியது. இரண்டு கலாச்சாரங்களிலும் உள்ள கருத்துகள், அமைப்புகள், சில ஒன்றிணையும் முரண்பட்ட சில வழக்கொழிந்து போகவும் இந்த ஊடுருவல் வழிவகுத்தது.இந்த கலப்பின் விளைவாக தமிழ் பக்தி கலாச்சாரம் தோன்றியது.
Question 25
சங்ககாலத்தில் நடைமுறையில்  இருந்தவையாக கருதப்படுபவனவற்றில் கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
  1. பெண்கள் மிகவும் உயரிய மரியாதையுடன் நடத்தப்பட்டனர் மற்றும் இவர்கள் அரசர்களுக்கு பாதுகாவல் மற்றும் பல்வேறு வகையான பணிகளையும் செய்தனர்.
  2. அதிகாரங்கள் அனைத்தும் ஆண்களிடம் மட்டுமே இருந்தது. பெண்கள் பொது அவையில் பங்கேற்கலாம், ஆனால் ஆண்களின் நிர்வாகிகளாகவும் மற்றும் ஆட்சியாளர்களாகவும் இருந்தனர்.
  3. பெண்கள் சமூக சடங்குகளில் முக்கிய பங்கு வகித்தனர்.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
இவை அனைத்தும் சரி
Question 25 Explanation: 
(குறிப்பு - மரபுவழி உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் ஆண்களிடம் இருந்தாலும் குடும்பத்தில் பெண்ணின் பங்கு முக்கியமானதாக இருந்தது)
Question 26
ஒளவையார் என்பதற்கான பொருள் என்ன?
A
அறிவுடைய பெண்
B
மதிப்பிற்குரிய பெண்
C
செல்வமிக்க பெண்
D
அதிகாரமுள்ள பெண்
Question 26 Explanation: 
(குறிப்பு - தமிழ் சமூகத்தில் பெண்களின் பங்கு பற்றி விவரிக்கையில் அவ்வையார் பற்றி குறிப்பிடுவது அவசியமாகிறது. அவ்வையார் என்பதற்கு மதிப்பிற்குரிய பெண் என்று பொருளாகும். எந்தப் பெண்மணிகள் எல்லாம் முக்கிய பங்களித்தனரோ, அவர்கள் அவ்வையார் என்று பட்டப்பெயரிட்டு அழைக்கப்பட்டனர்)
Question 27
ஒளவையார் எனும் பட்டப்பெயர் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது?
A
ஆறு
B
ஏழு
C
எட்டு
D
ஒன்பது
Question 27 Explanation: 
(குறிப்பு - அவ்வையார் என்பதற்கு மதிப்பிற்குரிய பெண் என்று பொருளாகும். தமிழ் இலக்கியத்திற்கு எந்த பெண்மணிகள் எல்லாம் முக்கிய பங்களித்தனரோ, அவர்கள் அவ்வையார் என்று பட்டப்பெயரிட்டு அழைக்கப்பட்டனர். வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த ஆறு பெண் தமிழ் புலவர்களுக்கு பட்டப்பெயர் வழங்கப்பட்டது)
Question 28
ஒளவையார் கீழ்க்காணும் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர் ஆவார்?
A
இரண்டாம் நூற்றாண்டு
B
மூன்றாம் நூற்றாண்டு
C
நான்காம் நூற்றாண்டு
D
ஐந்தாம் நூற்றாண்டு
Question 28 Explanation: 
(குறிப்பு - சங்க காலத்தில் வாழ்ந்த அவ்வையாரும் மற்றும் சோழர்களும் சிறந்த சிறப்புத் தன்மை வாய்ந்தவர்களாக கருதப்பட்டனர். இலக்கியம், கலாச்சாரம், உலகளாவிய அறநெறி, அரசியல் தன்மை, போர், அமைதி மற்றும் ராஜதந்திரம் போன்றவற்றில் இவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர்.இந்த அவ்வையார் ஒன்று மற்றும் இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் வசித்தவர் ஆவார். இவர் அதியமானின் அவையில் இருந்தார்)
Question 29
கீழ்கண்டவரில் யார் ஒளவையாரின் சமகாலத்தவர் ஆவார்?
A
திருவள்ளுவர்
B
கபிலர்
C
இருவரும்
D
இருவரும் அல்ல
Question 29 Explanation: 
(குறிப்பு - ஒளவையார் அதியமானின் அவையில் இருந்தார். இவர் திருவள்ளுவர் மற்றும் கபிலரின் சமகாலத்தவர் ஆவார் இவர் ஒரு சிறந்த தூதுவராகவும் இருந்தார். அதியமானுடைய அவையில் புலவராகவும், அதியமானின் உற்ற தோழராகவும் இருந்தார்)
Question 30
ஒளவையார் கீழ்காணும் எந்த நூலில் தமது பங்களிப்பை அளித்துள்ளார்?
A
குறுந்தொகை
B
அகநானூறு
C
புறநானூறு
D
இவை அனைத்திலும்
Question 30 Explanation: 
(குறிப்பு - நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு இவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவ்வையார் செய்துள்ளார். தனது தூது திறமையின் மூலம் போர்களை கூட இவர் தவிர்த்துள்ளார்)
Question 31
"உங்களின் ஆயுத கிடங்கில் ஆயுதங்கள் பளபளப்பாகவும் நெய் பூசப்படும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதியமானின் ஆயுதங்கள் உடைந்தும், ரத்தக்கறை படிந்தும் உள்ளன" என ஔவையார் யாரிடம் கூறினார்?
A
தொண்டைமான்
B
செங்குட்டுவன்
C
இரும்போரால் சேறை
D
இவர்கள் யாரும் அல்ல
Question 31 Explanation: 
(குறிப்பு - ஒருமுறை காஞ்சியை ஆண்ட தொண்டைமான், அதியமான் ஆண்ட தகடூரை தாக்கி போர் புரியும் எண்ணத்துடன் இருந்தான்.இதை அறிந்த அவ்வையார் காஞ்சி சென்று தொண்டைமானை சந்தித்து மேற்கண்டவாறு கூறி, போரினை தவிர்த்தார்)
Question 32
ஆத்திச்சூடி மற்றும் கொன்றை வேந்தன் போன்ற நூல்களை எழுதிய ஔவையார் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர் ஆவார்?
A
எட்டாம் நூற்றாண்டு
B
ஒன்பதாம் நூற்றாண்டு
C
பத்தாம் நூற்றாண்டு
D
பதினோராம் நூற்றாண்டு
Question 32 Explanation: 
(குறிப்பு - சோழர் காலத்தில் பத்தாம் நூற்றாண்டில் இன்னொரு புகழ்பெற்ற அவ்வையார் இருந்தார். இவரே குழந்தைகளுக்கான நீதிக் கதைகளையும், ஆத்திச்சூடியையும், கொன்றைவேந்தனையும் எழுதியவர். சற்றே வளர்ந்த குழந்தைகளுக்காக மூதுரை மற்றும் நல்வழி என்ற இரண்டு நூல்களை இவர் எழுதியுள்ளார்)
Question 33
அரசியல் சிந்தனையாளர் காண வரையறைகளைகளாக கீழ்க்கண்டவற்றுள் எதனை கூறலாம்?
  1. சமூகத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய கொள்கைகள், நிகழ்வுகளுக்கு காரணியாக இருத்தல்
  2. சமூகத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய அரசியல் முடிவுகளை எடுத்தல்
  3. மக்களின் பொதுப்புத்தியில் மாற்றத்தை உருவாக்குதல்
A
I, II மட்டும்
B
I, III மட்டும்
C
II, III மட்டும்
D
இவை அனைத்தையும்
Question 33 Explanation: 
(குறிப்பு - சமூகத்தின் பல பிரிவுகளை சேர்ந்த பயனாளர்களுக்கும் பலன்கள் அளித்த அரசு முடிவுகளுக்கு காரணமாக இருத்தல், சமூகத்தின் பல பிரிவு மக்களின் முன்னேற்றத்துக்கு காரணமான அரசியல் கருத்துக்களை பொதுக் கருத்தாக உருவாக்குதல் போன்றவை அரசியல் சிந்தனையாளர்களாக வரையறையாக கூறப்படுகிறது)
Question 34
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
  1. அரசியல் சிந்தனையாளர்களின் நடவடிக்கைகள் புதிய அரசியல் சிந்தனைகளுக்கு ஆதரவாக மக்களின் ஈடுபாட்டினையும், பகுத்தறிவினையும் உருவாக்குகின்றன.
  2. அடுத்த காலகட்டத்துக்கு அறைகூவல் விடுக்கும் அரசியல் மாற்றத்திற்கான அரசியல் முடிவுகளை அரசியல் சிந்தனையாளர்கள் மேற்கொள்கிறார்கள்.
  3. அரசியல் சிந்தனையாளர்களின் அரசியல் முடிவுகள் அனேக மக்களின் அன்றாட வாழ்வில் நீண்ட கால மாற்றங்களை உருவாக்குகின்றன.
A
I, III மட்டும் சரி
B
I, II மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
இவை அனைத்தும் சரியானது
Question 34 Explanation: 
(குறிப்பு - உலகம் முழுவதிலும் இத்தகைய அரசியல் சிந்தனையாளர்கள் அரசியல், சமூக மாற்றங்களை உருவாக்கியுள்ளனர். இந்தியாவிலும், தமிழகத்திலும் பண்டைய காலத்திலிருந்து இத்தகைய அரசியல் சிந்தனையாளர்கள் உருவாக்கியுள்ளனர்)
Question 35
அரசியல் சிந்தனையாளர்களை கீழ்க்கண்டவற்றுள் எவ்வாறு வகைப்படுத்தலாம்?
A
பொதுவுடைமை வாத அரசியல் சிந்தனையாளர்கள்
B
திராவிட பண்பாட்டு அரசியல் சிந்தனையாளர்கள்
C
ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்தனையாளர்கள்
D
அனைத்தும் சரி
Question 35 Explanation: 
(குறிப்பு - நவீன அரசியல் கருத்தாக்கங்களின் படி தேசிய அரசியல் சிந்தனையாளர்கள், பொதுவுடைமைவாத அரசியல் சிந்தனையாளர்கள், திராவிட பண்பாட்டு அரசியல் சிந்தனையாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்தனையாளர்கள் என அரசியல் சிந்தனையாளர்களை நாம் பகுக்க முடியும்)
Question 36
திருக்குறளின் பொருட்பாலில் அதிகாரங்களையும், அதன் எண்ணிக்கையையும் பொருத்துக.
  1. அரசியல்                 - a) 17
  2. அமைச்சியல்        - b) 25
  3. நட்பு                            - c) 13
  4. குடி                              - d) 10
A
I-b, II-d, III-a, IV-c
B
I-a, II-d, III-b, IV-c
C
I-b, II-a, III-c, IV-d
D
I-d, II-a, III-b, IV-c
Question 36 Explanation: 
(குறிப்பு - பொருட்பால் ஏழு பகுதிகளை உடையது. அரசியல் 25, அமைச்சியல் 10, அரண் 2, கூழ் 1, படை 2, நட்பு 17, குடி 13 ஆக பொருட்பாலின் 70 அதிகாரங்கள் 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன)
Question 37
"படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு " என்னும் குறளில் அரசின் அங்கம் என குறியிடப்படுவது எது?
  1. அமைச்சர்கள், அரண்
  2. கூழ், படை
  3. நட்பு, குடிமக்கள்
A
I, II ஐ மட்டும்
B
II, III ஐ மட்டும்
C
I, III ஐ மட்டும்
D
இவை அனைத்தையும்
Question 37 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட குறள் பொருட்பாலின் முதல் குறட்பாவிலேயே வருகிறது. இந்த குறட்பாவில் உள்ளவாறு அரசாங்கம் என்பதன் அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி என்னும் ஆறு அங்கங்களையும் தனித்தனியே வகுத்து, இந்த ஆறு அங்கங்களையும் உடைய தலைவனைப் பற்றி தனியே சில அதிகாரங்களில் கூறி, ஏழுவகையாக வேறுபாடு செய்வது திருக்குறளின் அமைப்பு முறைக்கு ஏற்றதாக உள்ளது)
Question 38
பொருட்பாலின் எத்தனை அதிகாரங்களில் அரசனது இயல்பு கூறும் அரசியலை திருவள்ளுவர் கூறுகிறார்?
A
15 அதிகாரங்களில்
B
25 அதிகாரங்களில்
C
35 அதிகாரங்களில்
D
45 அதிகாரங்களில்
Question 38 Explanation: 
(குறிப்பு - பொருட்பாலின் முதலில் அரசரது இயல்பு கூறும் அரசியலை மிக விரிவாக 25 அதிகாரங்களில் கூறியுள்ளார் திருவள்ளுவர்.இறைமாட்சி ( அதிகாரம் 39) தொடங்கி இடுக்கண் அழியாமை ( அதிகாரம் 63) வரையிலான 25 அதிகாரங்களில் பிறகு இயல்பு கூறும் அரசியலை திருவள்ளுவர் கூறுகிறார்)
Question 39
அதிகாரம் 39 (இறைமாட்சி) முதல் அதிகாரம் 63 (இடுக்கண் அழியாமை) வரையிலான குறள்களில் அரசர், வேந்தர், நிலன் ஆண்டவர், மன்னவர் முதலான பெயர்களால் எத்தனை முறை திருவள்ளுவர் ஆட்சித் தலைவனை சுட்டிக்காட்டுகிறார்?
A
40 முறை
B
46 முறை
C
53 முறை
D
66 முறை
Question 39 Explanation: 
(குறிப்பு - அதிகாரம் 39 (இறைமாட்சி) முதல் அதிகாரம் 63 (இடுக்கண் அழியாமை) வரையிலான குறள்களில் அரசர், வேந்தர், நிலன் ஆண்டவர், மன்னவர் முதலான பெயர்களால் நாற்பத்தாறு முறை திருவள்ளுவர் ஆட்சித் தலைவனை சுட்டிக்காட்டுகிறார்)
Question 40
அதிகாரங்களையும் அதன் எண்ணையும் பொருத்துக.
  1. கல்வி வேண்டும்                                    - a) அதிகாரம் 44
  2. பெரியாரை துணை கொள்ளல்      - b) அதிகாரம் 46
  3. சிற்றினம் சேராமை                             - c) அதிகாரம் 40
  4. குற்றம் கடிந்த வாழ்வு வேண்டும் - d) அதிகாரம் 45
A
I-c, II-d, III-b, IV-a
B
I-a, II-d, III-b, IV-c
C
I-b, II-a, III-c, IV-d
D
I-d, II-a, III-b, IV-c
Question 40 Explanation: 
(குறிப்பு - மேற்கண்டவகைகள் அரசியலில் ஆட்சித் தலைவர்களுக்கு திருவள்ளுவர் வலியுறுத்தும் இயல்புகள் ஆகும். இவையாவும் நன்மக்கள் எல்லோருக்கும் வேண்டும் பண்புகளே என்பது நெற்றித் திலகம்)
Question 41
அதிகாரங்களையும் அதன் எண்ணையும் பொருத்துக
  1. வெருவந்த செய்யாமை                      - a) அதிகாரம் 53
  2. ஒற்றாளும் முறை வேண்டும்           - b) அதிகாரம் 55
  3. சுற்றம் தழுவுதல்                                     - c) அதிகாரம் 59
  4. செங்கோன்மை வேண்டல்                - d) அதிகாரம் 57
A
I-d, II-c, III-a, IV-b
B
I-a, II-d, III-b, IV-c
C
I-b, II-a, III-c, IV-d
D
I-d, II-a, III-b, IV-c
Question 41 Explanation: 
(குறிப்பு - மேற்கண்டவகைகள் அரசியலில் ஆட்சித் தலைவர்களுக்கு திருவள்ளுவர் வலியுறுத்தும் இயல்புகள் ஆகும். இவையாவும் நன்மக்கள் எல்லோருக்கும் வேண்டும் பண்புகளே என்பது நெற்றித் திலகம்)
Question 42
"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் " எனும் குறட்பா எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது?
A
இறைமாட்சி
B
மெய்யுணர்தல்
C
வலியறிதல்
D
மன்னரை சேர்ந்தொழுதல்
Question 42 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட குறட்பா இறைமாட்சி என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ளது. இது குறள் எண் - 388 இல் அமைந்துள்ளது.)
Question 43
"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் " எனும் குறட்பாவில் திருவள்ளுவர் கூறும் கருத்து யாது?
  1. ஒரு மன்னன் நீதி நெறி வழுவாமல் தன் கடமையை செய்தால் அவன் இறையென்று வைக்கப்படுவான்.
  2. அரச குடும்பத்தில் பிறந்தவர்கள் அனைவரையும், அரசனாக கருதலாம்.
  3. இந்த திருக்குறள் முடியாட்சி காலத்திற்கு மட்டுமன்றி,  குடியாட்சி மலர்ந்துள்ள இக்காலகட்டத்திற்கும் பொருந்துகிறது
A
I, II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
III, II மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 43 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட குறட்பாவில் " அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, அரசனாக பொறுப்பை ஏற்றால் மட்டுமே ஒருவன் அரசனாக சிறக்க முடியாது", எனும் கருத்தியலை தெள்ளத்தெளிவாக பறைசாற்றி உள்ளார் திருவள்ளுவர். ஒரு மன்னன் நீதி நெறி வழுவாமல் தன் கடமையை சரிவரச் செய்தால், குடிமக்களை காப்பாற்றினான் என்றால் அவன் இறை என்று வைக்கப்படுவான்)
Question 44
"அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு" எனும் குறட்பா எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது?
A
வெருவந்த செய்யாமை
B
இறைமாட்சி
C
குடியியல் வெகுளாமை
D
வெகுளாமை
Question 44 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட குறட்பா இறைமாட்சி என்னும் அதிகாரத்தின் கீழ், குறள் எண் 384 ஆக அமைந்துள்ளது. திருவள்ளுவரின் கண்ணோட்டத்தில் 'அறம் வழுவாது, தீமைகளை நீக்கி, மறம் வழுவாது, மானம் காப்பது அரசு என்னும் பொருளால் எழுதப்பட்டுள்ளது)
Question 45
"அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு" எனும் குறள் உணர்த்தும் செய்தி எது?
A
மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி. நாட்டின் மானமே தன் மானமாக கொண்டு மன்னன் வாழ்க்கை நடத்த வேண்டும்
B
நாடாளும் மன்னன் தனது குடிமக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியவன் ஆவான்.எனவே அவன் ஒழுக்கமாக இருக்க வேண்டும்
C
மன்னன் தலைவனாக இருப்பதால் அவனுடைய ஒழுக்கம் மற்றும் தனி வாழ்வு பற்றிய செய்திகள் நாடெங்கும் பரவுகிறது. ஆகவே அவனுக்கு அறநெறி கட்டாயம் வேண்டும்.
D
இவை அனைத்தும் சரி
Question 45 Explanation: 
(குறிப்பு - மானம் வேண்டும் என்று கூறும் போதும், தனிவாழ்க்கை பற்றிய மான உணர்ச்சியை குறிப்பிடாமல், 'மறன் இழுக்கா மானம்' என வீரத்திற்கு ஏற்புடைய மானத்தை குறிப்பிட்டு, நாட்டின் மானமே தான் மானமாகக் கொண்டு மன்னன் வாழ்க்கை நடத்த வேண்டும் என திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.)
Question 46
"வானோக்கி வாழும் உலகெல்லாம் ; மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி " எனும் குறட்பா எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது?
A
செங்கோன்மை
B
கொடுங்கோன்மை
C
குடிமை
D
மன்னரை சேர்ந்தொழுகல்
Question 46 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட குறட்பா, செங்கோன்மை என்னும் அதிகாரத்தில் குறள் எண் - 542 ஆக அமைந்துள்ளது. இந்த அதிகாரத்தில் நல்லாட்சி பற்றிய காலத்திற்கும் பொருந்தி வருகின்ற அடிப்படையான கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார் திருவள்ளுவர்.)
Question 47
குடிமக்களை அன்போடு அணைத்துக் கொண்டு ஆட்சி புரியும் அரசனுடைய அடிகளை பொருந்தி நிற்குமாம் உலகம், எனும் பொருள்தரும் குறள் எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது?
A
செங்கோன்மை
B
கொடுங்கோன்மை
C
குடிமை
D
மன்னரை சேர்ந்தொழுகல்
Question 47 Explanation: 
(குறிப்பு - "குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு " குறள் எண் - 544. செங்கோன்மை என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ள இந்த குறட்பா, திருவள்ளுவரின் காலம் கடந்து நிற்கும் பொதுமை நோக்கினை தெற்றென புலப்படுத்தி நிற்கின்றது.குடிமக்களை அன்போடு அணைத்துக் கொண்டு ஆட்சி புரியும் அரசனுடைய அடிகளை பொருந்தி நிற்குமாம் உலகம், என பொருள்தரும் வகையில் இந்த குறள் அமைந்துள்ளது)
Question 48
"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை " எனும் குறட்பா எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது?
A
செங்கோன்மை
B
கொடுங்கோன்மை
C
குடிமை
D
மன்னரை சேர்ந்தொழுகல்
Question 48 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட குறட்பா, கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தில் குறள் எண் 555 ஆக அமைந்துள்ளது. கொடுமையை பொறுத்துக்கொள்ள முடியாமல் துன்புற்று மக்கள் அழும் கண்ணீருக்கு மிகுந்த ஆற்றல் உண்டு என திருவள்ளுவர் கூறுகிறார்.)
Question 49
"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை " எனும் குறளில் ஒரு கொடுமையான மன்னனை வீழ்த்தும் படையாக திருவள்ளுவர் எதை குறிப்பிடுகிறார்?
A
மன்னனின் ஆணவம்
B
குடிமக்களின் கண்ணீர்
C
மன்னனின் செல்வம்
D
எதிரிகளின் ஆற்றல்
Question 49 Explanation: 
(குறிப்பு - கொடுமையை பொறுத்துக்கொள்ள முடியாமல் துன்புற்று குடிமக்கள் அழும் கண்ணீருக்கு மிகுந்த ஆற்றல் உண்டு.அதுவே ஆற்றல்மிக்க படையாகி முறை செய்யாத மன்னனுடைய அரசை அடியோடு அழித்துவிடும், என்று மேற்கண்ட குறள் மூலம் திருவள்ளுவர் கூறுகிறார்)
Question 50
"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு " எனம் குறட்பா கீழ்காணும் எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது?
A
வெகுளாமை
B
வெருவந்த செய்யாமை
C
இறைமாட்சி
D
குடியியல்
Question 50 Explanation: 
(குறிப்பு - ஒரு மன்னன் தனது அரசின் வருவாயைப் பெருக்கும் துறையிலும், வரவு செலவுத் திட்டத்திலும் வல்லவனாக விளங்க வேண்டும் என்பதை மேற்கண்ட குறட்பாவில் திருவள்ளுவர் கூறுகிறார். மேற்கண்ட குறட்பா இறைமாட்சி என்னும் அதிகாரத்தில் குறள் எண் 385இல் அமைந்துள்ளது)
Question 51
"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு " என்னும் குறட்பாவில் ஒரு மன்னன் எத்தனை வழிமுறைகளில் பணத்தை கையாள வேண்டும் என திருவள்ளுவர் கூறுகிறார்?
A
இரண்டு வழிமுறைகளில்
B
மூன்று வழிமுறைகளில்
C
நான்கு வழிமுறைகளில்
D
ஐந்து வழிமுறைகளில்
Question 51 Explanation: 
(குறிப்பு - இயற்றல், ஈட்டல், காத்தல், அழித்தல் என்னும் நான்கு வழிமுறைகளில் அரசின் வருவாயை சேர்த்து, பகிர்ந்து, திட்டமிட்டு, பயன்படுத்திக்கொள்வது ஒரு தேர்ந்த மன்னனின் தலையாய கடமை ஆகும் என்கிறார் திருவள்ளுவர்)
Question 52
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது
  1. திருவள்ளுவர் பொருட்பாலில் வலியுறுத்தியுள்ள அரசியல் சிந்தனைகளில், அறநெறியே முதன்மையான இடத்தினை பெறுகின்றது.
  2. திருவள்ளுவரின் அரசியல் அமைப்பில் மக்கள் நலமே அடிப்படையாக விளங்குகின்றது.
  3. திருவள்ளுவரின் பெரும்பாலான அரசியல் சிந்தனைகள் இன்றைய குடியாட்சி காலத்திற்கும் ஏற்புடையதாக இல்லை.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 52 Explanation: 
(குறிப்பு - திருக்குறளை நாம் படிக்க ஆரம்பித்த உடனேயே அது ஒரு மதச்சார்பற்ற நூல் என்ற உண்மையை நாம் அறியமுடியும். அரசனுக்கு என்று திருவள்ளுவர் பொருட்பாலில் கூறியுள்ள நல்ல இயல்புகள் நாட்டு மக்கள் எல்லோருக்கும் வேண்டியனவாக, பொருந்தக்கூடியனவாக இருக்கின்றன)
Question 53
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலிருந்த மதம் கீழ்க்கண்டவற்றுள் எது?
  1. பௌத்தமதம்
  2. சீக்கிய மதம்
  3. ஜைன மதம்
  4. இந்து மதம்
A
I, II, IV மட்டும்
B
II, III, IV மட்டும்
C
I, III, IV மட்டும்
D
இவை அனைத்தும்
Question 53 Explanation: 
(குறிப்பு - திருக்குறள் என்பது ஒரு மதச்சார்பற்ற நூல். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் பௌத்த மதம், சீக்கிய மதம், ஜைன மதம் மற்றும் இந்து மதம் போன்ற பல மதங்கள் இருந்தன. அதைப்போலவே இறைமறுப்பாளர்களும் இருந்துள்ளனர். ஆனால் மதச்சார்பற்ற தன்மை எனும் கருத்தாக்கத்தை பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.)
Question 54
"ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே" என பாடியவர் யார்?
A
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
B
நாமக்கல் வெ.ராமலிங்கம்
C
சுப்பிரமணிய பாரதியார்
D
பாரதிதாசன்
Question 54 Explanation: 
(குறிப்பு - நாம் சாதி மதங்களை பார்க்க வேண்டாம். இந்த நிலத்தில் வாழும் அனைத்து மனிதர்களும் ஒன்று. அவர்கள் எந்த ஜாதியினரை சார்ந்து இருந்தாலும் அல்லது எந்த வேதத்தை போதிப்பவராக இருந்தாலும், நாம் அனைவரும் ஒன்றே. அது மனித குலம் ஆகும் என்று சுப்பிரமணிய பாரதியார் பாடியுள்ளார்)
Question 55
சுப்ரமணிய பாரதியார் பிறந்த ஆண்டு எது?
A
1880ஆம் ஆண்டு
B
1881ஆம் ஆண்டு
C
1882ஆம் ஆண்டு
D
1883ஆம் ஆண்டு
Question 55 Explanation: 
(குறிப்பு - சுப்பிரமணிய பாரதியார் எட்டயபுரம் என்னும் ஊரில் 1882 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர், சுதந்திர போராளி மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவர் மகாகவி பாரதியார் என்று மிகவும் போற்றப்படுகிறார்.மகாகவி என்றால் மிகப் பெரிய கவிஞர் என்று பொருள்படும்)
Question 56
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எந்த ஆண்டு சுதேச கீதங்கள் எனப்படும் உணர்ச்சிமிக்க பாடல் தொகுப்பினை வெளியிட்டார்?
A
1906ஆம் ஆண்டு
B
1907ஆம் ஆண்டு
C
1908ஆம் ஆண்டு
D
1910ஆம் ஆண்டு
Question 56 Explanation: 
(குறிப்பு - மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற நூல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் 1908 ஆம் ஆண்டு சுதேச கீதங்கள் எனப்படும் உணர்ச்சிமிக்க பாடல் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்)
Question 57
மகாகவி பாரதியார் எந்தப் பத்திரிகையில் துணை ஆசிரியராக தன் பத்திரிக்கை வாழ்க்கையைத் தொடங்கினார்?
A
சுதேசமித்திரன்
B
பால பாரதா
C
இந்தியா
D
சூர்யோதயம்
Question 57 Explanation: 
(குறிப்பு - பாரதியார் தன்னுடைய வாழ்க்கையில் பல வருடங்களை பத்திரிக்கையாளராக செலவிட்டார். பாரதி இளம் வயதில் தன்னுடைய வாழ்க்கையை உற்பத்திக்கு பத்திரிக்கையாளர் மற்றும் துணை ஆசிரியராக சுதேசமித்திரன் என்ற பத்திரிக்கையில், 1904ஆம் ஆண்டு தொடங்கினார்)
Question 58
இந்தியா எனப்படும் நாளிதழ் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A
மே மாதம், 1905ஆம் ஆண்டு
B
மே மாதம், 1906ஆம் ஆண்டு
C
மே மாதம், 1907ஆம் ஆண்டு
D
மே மாதம், 1908ஆம் ஆண்டு
Question 58 Explanation: 
(குறிப்பு - 1906 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா எனப்படும் ஒரு புதிய நாளிதழ் தொடங்கப்பட்டது. இது பிரெஞ்சு புரட்சியின் மூன்று முக்கிய முழக்கங்களான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றை தனது குறிக்கோளாக அறிவித்தது. இது தமிழ் பத்திரிக்கை துறையில் ஒரு புதிய பாதையை ஏற்படுத்தியது என கூறலாம்)
Question 59
தனது புரட்சிகரமான முனைப்புகளை வெளியிடுவதற்கு பாரதியார் தனது வார இதழை, எந்த நிறதாளில் வெளியிட்டார்?
A
சிவப்பு
B
பச்சை
C
மஞ்சள்
D
நீலம்
Question 59 Explanation: 
(குறிப்பு - தனது புரட்சிகரமான முனைப்புகளை வெளியிடுவதற்கு பாரதியார் அவர்கள் வார இதழை சிகப்புதாளில் அச்சிட்டு பிரசுரித்தார். அரசியல் கேலிச்சித்திரங்கள் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டின் முதல் நாளேடு இந்தியா என்பது ஆகும்)
Question 60
பொருத்துக
  1. இந்தியா                         - a) உள்நாட்டு வார இதழ்
  2. விஜயா                            - b) கேலிச்சித்திரம்
  3. பால பாரதா                 - c) தமிழ் தினசரி
  4. சூர்யோதயம்               - d) ஆங்கில மாத இதழ்
A
I-b, II-c, III-d, IV-a
B
I-a, II-d, III-b, IV-c
C
I-b, II-a, III-c, IV-d
D
I-d, II-a, III-b, IV-c
Question 60 Explanation: 
(குறிப்பு - அரசியல் கேலிச்சித்திரங்கள் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டின் முதல் நாளில் இந்தியா என்பதாகும். பாரதியார் விஜயா என்கிற தமிழ் தினசரியில் அதன் பதிப்பாசிரியராகவும் இருந்து வெளியிட்டார். பால பாரதா என்ற ஆங்கில இதழையும் பாண்டிச்சேரியில் சூரியோதயம் எனும் உள்நாட்டு வார இதழையும் அவர் வெளியிட்டார்)
Question 61
சுயராஜ்ஜிய தினம் கொண்டாடுவதற்காக எந்த ஆண்டு சென்னையில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்திற்கு பாரதியார் ஏற்பாடு செய்தார்?
A
1907 ஆம் ஆண்டு
B
1908 ஆம் ஆண்டு
C
1909 ஆம் ஆண்டு
D
1910 ஆம் ஆண்டு
Question 61 Explanation: 
(குறிப்பு - சுயராஜ்ய தினம் கொண்டாடுவதற்காக 1908 ஆம் ஆண்டு சென்னையில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்திற்கு சுப்பிரமணிய பாரதியார் ஏற்பாடு செய்தார். வந்தே மாதரம், எந்தையும் தாயும், ஜெயபாரத் போன்ற பாரதியாரின் கவிதைகள் இலவசமாக மக்களுக்கு வினியோகிக்கப்பட்டன)
Question 62
கீழ்க்கண்டவர்களில் யாருடைய இயற்பெயர் சுப்பையா என்பதாகும்?
A
நாமக்கல் கவிஞர்
B
திரு வி கல்யாண சுந்தரனார்
C
பாவேந்தர் பாரதிதாசன்
D
சுப்பிரமணிய பாரதியார்
Question 62 Explanation: 
(குறிப்பு - சுப்பிரமணிய பாரதியார் டிசம்பர் 11ம் நாள் 1882 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் எனும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய குழந்தைப்பருவ பெயர் சுப்பையா ஆகும். இவரது தந்தையார் சின்னசாமி மற்றும் தாயார் லட்சுமி அம்மாள் ஆவார்)
Question 63
சுப்பிரமணிய பாரதியார் எங்கு தங்கி இருந்தபோது முறுக்கு மீசை, சீக்கியர்களின் தலைப்பாகை மற்றும் வீறு கொண்ட நடை போன்றவற்றை தனக்கே உரிதாக்கிக்கொண்டார்?
A
திருநெல்வேலி
B
புதுச்சேரி
C
காசி
D
புதுடில்லி
Question 63 Explanation: 
(குறிப்பு - சுப்பிரமணிய பாரதியார் தனது திருமணத்திற்கு பிறகு காசிக்குச் சென்றார். இன்று சில ஆண்டுகள் தனது அத்தை வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவர் சமஸ்கிருதம் இந்தி மற்றும் ஆங்கில மொழி அறிவினைப் பெற்றார். காசியில் தங்கியிருந்தது பாரதியின் ஆளுமையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது)
Question 64
சுப்பிரமணிய பாரதியார் எந்த ஆண்டு பாண்டிச்சேரிக்குச் சென்றார்?
A
1907ஆம் ஆண்டு
B
1908ஆம் ஆண்டு
C
1909ஆம் ஆண்டு
D
1910ஆம் ஆண்டு
Question 64 Explanation: 
(குறிப்பு - இந்தியா என்கிற இதழின் பதிப்பாசிரியராக இருந்து செயல்பட்டதினால் பாரதியாருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் நிலைமை மோசமானதால் 1908ஆம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு செல்ல முடிவெடுத்து அவர் அங்கே சென்றார்.)
Question 65
பாரதியார் எந்த ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தார்?
A
1917 இல்
B
1918 இல்
C
1919 இல்
D
1920 இல்
Question 65 Explanation: 
(குறிப்பு - பாரதியார் 1919 ஆம் ஆண்டு சென்னையில் ராஜாஜி வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார். பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இந்தியாவிற்கு அருகில், 1917 ஆம் ஆண்டு கடலூரில் நெருங்கினார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார்)
Question 66
சுப்பிரமணிய பாரதியார் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  • கூற்று 1 - 1905 ஆம் ஆண்டு மற்றும் 1907 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்.
  • கூற்று 2 - சுப்பிரமணிய பாரதியார் வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவா,  மண்டயம் திருமலாச்சாரியார் மற்றும் சீனுவாச்சாரி போன்றவர்களிடம் நல்லுறவை வளர்த்திருந்தார்.
  • கூற்று 3 - சுப்பிரமணிய பாரதியார் பாண்டிச்சேரியில் பத்து ஆண்டு காலம் வரை தங்கியிருந்தார்.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 66 Explanation: 
(குறிப்பு - சுப்ரமணிய பாரதியார் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். தேசிய பிரச்சினைகளை தீவிரமான இந்திய தேசியவாதத் தலைவர்களான பிபின் சந்திரபால், பாலகங்காதர திலக் மற்றும் வி.வி.சுப்பிரமணியம் போன்றோரிடம் விவாதித்தார்)
Question 67
பாரதியார் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  • கூற்று 1 - பாரதியார் சாதி அமைப்புக்கு எதிராக செயல்பட்டார்.
  • கூற்று 2 - பாரதியார் அட்டவணை சாதியினரையும் பூணூல் அணிய செய்து வேதம் ஓதச் செய்தார்.
  • கூற்று 3 - சுப்ரமணிய பாரதியார் பட்டியலினத்தவர் கோயிலுக்குள் அனுமதிப்பதை ஆதரித்தார்
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 67 Explanation: 
(குறிப்பு - ஆணும் பெண்ணும் சமமாக கருதப்பட்டால் மட்டுமே இவ்வுலகம் அறிவு மற்றும் புத்தி கூர்மையும் சிறப்புறும், இத பாரதியார் கூறினார். உலகில் இரண்டு சாதிகள் உள்ளன.ஒன்று ஆண் சாதி, மற்றொன்று பெண் சாதி என்பதைத் தாண்டி வேறு ஒன்றுமில்லை என்று பிரகடனப்படுத்தினார்)
Question 68
நிவேதிதா என்பவர் கீழ்க்கண்டவர்களில் யாருடைய சீடர் ஆவார்?
A
ராமகிருஷ்ண பரமஹம்சர்
B
விவேகானந்தர்
C
அரவிந்த கோஷ்
D
இவர்கள் யாரும் அல்ல
Question 68 Explanation: 
(குறிப்பு - விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதா என்பவர் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர் ஆவார். சுப்பிரமணிய பாரதியார், நிவேதிதா ஆகியோரின் சந்திப்பு பெண்களுக்கான உரிமைகள் பற்றி சிந்தனையை பாரதியாரிடம் ஏற்படுத்தின.இவர் சாதிய பிரச்சனைகள் இருந்து சுதந்திரம் வரைக்கும் மற்றும் ஆன்மிகம் வரை பாடுபட்டவர்)
Question 69
பெண்களுக்கு சக்தி என்ற அடையாளத்தை அளித்தவர் யார்?
A
விவேகானந்தர்
B
சுப்பிரமணிய பாரதியார்
C
வ.உ. சுப்பிரமணியம்
D
ம. சிங்காரவேலர்
Question 69 Explanation: 
(குறிப்பு - சுப்பிரமணிய பாரதியார் தற்கால பெண்களுக்கு சக்தி என்கிற அடையாளத்தை ஏற்படுத்தியவராவார். குறிப்பாக நவீன பெண்களின் அதிகாரம், பலமான, சுதந்திரமான மற்றும் ஆண்களுக்கு சமமான பங்குதாரர் என்று பெண்களை சுப்பிரமணிய பாரதியார் குறிப்பிடுகிறார்)
Question 70
பாரதியார் எந்த ஆண்டு இயற்கை எய்தினார்?
A
செப்டம்பர் 11, 1920 இல்
B
செப்டம்பர் 11, 1921 இல்
C
செப்டம்பர் 11, 1922 இல்
D
செப்டம்பர் 11, 1923 இல்
Question 70 Explanation: 
(குறிப்பு - சுப்பிரமணிய பாரதியார் செப்டம்பர் 11 1921 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். ஆனால் இவரின் இறுதி சடங்கில் 14 நபர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதற்கு சாதியை விட்டு தள்ளி வைக்கப்படுவோம், என்பதுடன் ஆங்கிலேய அரசாங்கத்தின் அடக்குமுறையினால் ஏற்பட்ட பயமே காரணம் ஆகும்)
Question 71
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுச்சி பெற்ற சுதேசி மற்றும் தன்னாட்சி இயக்கங்களால் நாடு முழுவதும் விடுதலை உணர்வு பரவியது. இருந்தபோதும் இவை மதவாத தன்மையை கொண்டிருந்தன.
  2. இந்த இயக்கங்களில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் படித்த மேல்தட்டு வர்க்கத்தினராக இருந்தனர். அவர்கள் கூறும் விடுதலை மட்டுமே அரசியல் விடுதலையாக இருந்தது
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 71 Explanation: 
(குறிப்பு - அடித்தட்டு மக்களான விவசாயிகள், தொழிலாளர்களின் பொருளாதார நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பெரும்பாலான விவசாயிகள் ஏழைகளாக இருந்தனர்)
Question 72
சென்னை மாகாணத்தில் இருந்த தொழிலாளர் அமைப்புகளுக்கு தலைமை தாங்கியவர்கள் யார்?
  1. சுப்பிரமணிய பாரதியார்
  2. திரு வி கல்யாண சுந்தரனார்
  3. தி.வரதராஜுலு
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 72 Explanation: 
(குறிப்பு - இந்தியாவில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் அனைத்திலும் தொழிலாளர்கள் மிகக் குறைவான கூலிக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அடிமைகள் போல உழைத்தனர். போராடினால் கடுமையான அடக்கு முறையால் ஒடுக்கப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்காக தொழிலாளர் அமைப்புகள் உருவாகத் தொடங்கின)
Question 73
தொழிலாளர்களை அரசியல்மயப்படுத்தி விடுதலை  இயக்கத்தோடு இணைக்க வேண்டும் என்று இந்திய காங்கிரசுக்கு ம.சிங்காரவேலர் எந்த ஆண்டு தந்தி அனுப்பினார்?
A
1920 இல்
B
1921 இல்
C
1922 இல்
D
1923 இல்
Question 73 Explanation: 
(குறிப்பு - சிங்காரவேலர் தொழிலாளர்களை அரசியல்மயப்படுத்தி விடுதலை இயக்கத்தோடு இணைக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை விரும்பவில்லை. சிங்காரவேலர் இதனை கடுமையாக விமர்சித்து 1920 ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் தலைமைக்கு தந்தி அனுப்பினார். தொடர்ந்து அண்ணல் காந்திக்கு பகிரங்க கடிதமும் எழுதினார்)
Question 74
சிங்காரவேலர் எந்த ஆண்டு நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் குழுவின் கூட்டத்தில் தமிழக பிரதிநிதியாக கலந்து கொண்டார்?
A
1920 இல்
B
1921 இல்
C
1922 இல்
D
1923 இல்
Question 74 Explanation: 
(குறிப்பு - ம. சிங்காரவேலர் தொழிலாளர் நலன்களுக்காக பெரிதும் பாடுபட்டார். ஹிந்து, சுதேசமித்திரன் உள்ளிட்ட முன்னணி நாளிதழ்களிலும், நவசக்தி போன்ற பருவ இதழ்களிலும் ஏராளமான கட்டுரைகள் எழுதினார். 1922 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் குழுவின் கூட்டத்தில் தமிழக பிரதிநிதியாக கலந்து கொண்ட அவர், அங்கும் தனது விவாதத்தை உருவாக்கி தனக்கு ஆதரவு திரட்டினார்)
Question 75
கீழ்க்கண்டவற்றுள் எது ம.சிங்காரவேலரின் 1922ஆம் ஆண்டு, அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய கருத்தாகும்?
  1. இந்திய விடுதலை என்பது விவசாயிகள்,  தொழிலாளர்களின் பொருளாதார சுதந்திரத்தை உள்ளடக்கியதாகும்.
  2. தொழிலாளர்கள், விவசாயிகள் நலன்களுக்காகவும் காங்கிரஸ் பேரியக்கம் போராடவேண்டும்.
  3. விடுதலைப் போராட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகளையும் இணைத்து கொள்ள வேண்டும்.
A
I, II மட்டும்
B
I, III மட்டும்
C
II, III மட்டும்
D
இவை அனைத்தும்
Question 75 Explanation: 
(குறிப்பு - 1922 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய காங்கிரசு குழுவின் கூட்டத்தில் தமிழக பிரதிநிதியாக சிங்காரவேலர் கலந்து கொண்டார்.அங்கு நடந்த கூட்டத்தில் சிங்காரவேலர் மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்தார். அவரது கருத்துக்களை ஏற்றுக் கொண்ட காங்கிரசு, தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக ஒன்றுதிரட்ட தீர்மானம் நிறைவேற்றியது)
Question 76
எந்த ஆண்டு தொழிலாளர் நலன்களைப் பேணும் சட்டம் இயற்றப்பட்டது?
A
1926 இல்
B
1927 இல்
C
1928 இல்
D
1929 இல்
Question 76 Explanation: 
(குறிப்பு - 1922 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக ஒன்றுதிரட்ட தீர்மானம் நிறைவேற்றியதுடன், 6 பேர் கொண்ட குழுவினை அமைத்தது. அதில் சிங்காரவேலரும் ஒருவராக இருந்தார்.அவரின் தொடர் முயற்சிகளால் முதன் முறையாக 1926 ஆம் ஆண்டு தொழிலாளர் நலன்களை பேணும் சட்டம் இயற்றப்பட்டது)
Question 77
காங்கிரசு தலைவர்கள் அந்தந்த வட்டார மொழிகளில் பேச வேண்டும், அப்போதுதான் விடுதலை கருத்துக்கள் மக்களைச் சென்றடையும் என வலியுறுத்தியவர் யார்?
A
பிபின் சந்திர பால்
B
சிங்காரவேலர்
C
சுப்ரமணிய பாரதியார்
D
மகாத்மா காந்தி
Question 77 Explanation: 
(குறிப்பு - காங்கிரசு தலைவர்கள் அந்தந்த வட்டார மொழிகளில் பேசினால் தான் விடுதலை கருத்துக்கள் மக்களைச் சென்றடையும் என்பதுடன், மக்களுக்கும் காங்கிரஸ் பேரியக்கத்தின் இடையே நெருக்கம் உருவாகும் என்று சிங்காரவேலர் வலியுறுத்தினார்.)
Question 78
சுயமரியாதை இயக்கத்தினை, சமூக நீதி கட்சி என்று பெயர் மாற்றியவர் யார்?
A
சிங்காரவேலர்
B
ஈ.வெ.ரா பெரியார்
C
மூவலூர் ராமாமிருதம்
D
இவர்கள் யாரும் அல்ல
Question 78 Explanation: 
(குறிப்பு - சோவியத் யூனியன் சென்று வந்த ஈ.வெ.ரா பெரியார், அதன் தாக்கத்தில் பொதுவுடைமைவாத கருத்துக்களை ஏற்றுக்கொண்டு சுயமரியாதை இயக்கத்தினை, சுயமரியாதை சமூகநீதி கட்சி என்று பெயர் மாற்றினார். அதற்கான கொள்கைத் திட்டங்களை வகுப்பதில் சிங்காரவேலர் உறுதுணையாக நின்றார்)
Question 79
இந்தியாவின் முதல் உழைப்பாளர் தினம் எந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது?
A
1921 முதல்
B
1922 முதல்
C
1923 முதல்
D
1924 முதல்
Question 79 Explanation: 
(குறிப்பு - சிங்காரவேலர் தொழிலாளர்கள் பலமாக திகழ்ந்த சென்னை நகரில், இந்தியாவின் முதல் உழைப்பாளர் தினத்தை 1923 ஆம் ஆண்டு, மே முதல் நாள் அன்று நடத்திக் காட்டினார்.)
Question 80
சிங்காரவேலர், தொழிலாளர் விவசாயிகள் கட்சி அமைக்கப்படுவதாக எந்த நாளில் தெரிவித்தார்?
A
மே 1, 1921 இல்
B
மே 1, 1922 இல்
C
மே 1, 1923 இல்
D
மே 1, 1924 இல்
Question 80 Explanation: 
(குறிப்பு - 1923 ஆம் ஆண்டு மே முதல் நாள் அன்று தொழிலாளர் விவசாயிகள் கட்சி அமைக்கப்படுவதாக சிங்காரவேலர் அறிவித்தார்.)
Question 81
சிங்காரவேலர் உருவாக்கிய தொழிலாளர் விவசாய கட்சியின், முக்கிய கோரிக்கைகளுள் தவறானது எது?
A
குறைந்தபட்ச ஊதியம் மற்றும் 8 மணி நேர வேலை
B
சங்கம் அமைக்கும் உரிமை
C
சம்பளத்துடன் கூடிய ஈட்டிய விடுப்பு
D
ஒப்பந்த முறை கொண்டு வருதல்
Question 81 Explanation: 
(குறிப்பு - தங்களது கோரிக்கைகளை பரிசீலிக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை குழு, அடிப்படை வசதிகளுடன் கூடிய சுகாதாரமான குடியிருப்பு வசதி, மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு வருங்கால வைப்பு நிதி பேறுகால விடுப்பு, ஒப்பந்த முறை ஒழிப்பு போன்றவைகள் தொழிலாளர் விவசாயிகள் கட்சியின் கோரிக்கைகளாக சிங்காரவேலன் தெரிவித்தார்)
Question 82
இந்தியாவின் முதல் பொதுவுடைமை வாதம் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
A
1924 இல்
B
1925 இல்
C
1926 இல்
D
1927 இல்
Question 82 Explanation: 
(குறிப்பு - 1925 ஆம் ஆண்டு கான்பூர் நகரில் இந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதம் மாநாடு நடந்த போது அதற்கு தலைமை ஏற்று நடத்திய தந்தவர் சிங்காரவேலர் ஆவார். அப்போது வன்முறையற்ற மார்க்சிய பாதையை வலியுறுத்திப் பேசினார்)
Question 83
சிங்காரவேலர் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?.
  1. சிங்காரவேலர் இளம் வயதிலேயே இந்து மதத்தில் நிலவும் வறுமை அமைப்பிலும் மூட நம்பிக்கைகளிலும் அதிருப்தி அடைந்திருந்தார்,
  2. 1890 களிலேயே பல இடங்களில் பௌத்த சங்கம் அமைத்து, வர்ண அமைப்புக்கும்,  மூடநம்பிக்கைகளுக்கும் எதிராகப் பரப்புரை செய்தார்.
  3. பெரியார் நடத்திய குடியரசு உள்ளிட்ட இதழ்களில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஏராளமான கட்டுரைகளை எழுதினார்.
A
I, II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 83 Explanation: 
(குறிப்பு - காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே பொதுவுடைமைவாதிகள் தனி பிரிவாக இயங்கவேண்டும் என்று சிங்காரவேலர் வலியுறுத்தினார். இதையொட்டி காங்கிரஸ் கட்சிக்குள் சமதர்ம பிரிவு உருவானது)
Question 84
தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதி என்று நினைவு கூறப்படுபவர் யார்?
A
ஈவெரா பெரியார்
B
சிங்காரவேலர்
C
தி.வரதராஜுலு
D
திரு வி கல்யாண சுந்தரனார்
Question 84 Explanation: 
(குறிப்பு - சிங்காரவேலர், 50 வயதைக் கடந்த பின்பு அரசியலில் இறங்கினாலும் சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக முதுமையையும் பொருட்படுத்தாமல் பகுத்தறிவு மற்றும் பொதுவுடைமைவாதி கருத்துக்களையும் விடாது பிரசாரம் செய்தார். சிங்காரவேலர் தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதி என்று நேசத்துடன் நினைவுகூரப்படுகிறார்
Question 85
ஈ.வெ.ராமசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட தந்தை பெரியார் எந்த ஆண்டு பிறந்தார்?
A
1878 இல்
B
1879 இல்
C
1880 இல்
D
1881 இல்
Question 85 Explanation: 
(குறிப்பு - ஈ.வெ.ராமசாமி என்னும் இயற்பெயரைக் கொண்ட தந்தை பெரியார் ஈரோட்டில் செல்வ செழிப்புள்ள வணிக குடும்பத்தில் 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இளமைப் பருவத்திலேயே தனது குடும்பத்திலும் சுற்றியுள்ள சமுதாயத்தில் நிலவிய மூட நம்பிக்கையை எள்ளி நகையாடிய பெரியார், தொடக்கத்தில் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. ஆனாலும் ஈரோடு நகரமன்றத் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்தார்)
Question 86
'தேசத்தின் பெயரால் ஒரு குழு மக்களை சுரண்ட நினைத்தால், அத்தேசம் போராடிப் பெற்ற உண்மையான சுதந்திரம் அதுவல்ல' என்று கூறியவர் யார்?
A
சிங்காரவேலர்
B
தந்தை பெரியார்
C
அறிஞர் அண்ணாதுரை
D
இவர்கள் யாரும் அல்ல
Question 86 Explanation: 
(குறிப்பு - பண்பாட்டு ரீதியாக பெரியார் வகுத்துத் தந்த திராவிட கருத்துக்கள் இன்று இந்தியா முழுவதும் ஒளி வீசுகிறது என்று புகழ்பெற்ற சமூக நீதி அறிஞர்கள் கூறுகிறார்கள். பெரியார் பல்வேறு நிலைகளில் தேசம், இனம் மற்றும் தேசிய வாதம் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்தார். தேசம், தேசியவாதம் மற்றும் தேசிவாதம் ஆகியவை ஒரே மாதிரியான கருத்தாக்கங்களே என அவர் கருதினார்)
Question 87
பெரியார் எந்த ஆண்டுகளில் பட்டியலினத்தவர் சமைக்கப்பட்ட உணவை பொதுக்கூட்டங்களின் பின்னர் சமபந்தியாக நடத்திக் காட்டினார்?
A
1920 களில்
B
1925 களில்
C
1930 களில்
D
1935 களில்
Question 87 Explanation: 
(குறிப்பு - சுயமரியாதை இயக்கம், சடங்குகள் இல்லாத திருமணங்களை ஊக்குவித்ததுடன் பெண்களுக்கு சொத்துரிமை மற்றும் விவாகரத்து செய்யும் உரிமைகளும் வழங்கவேண்டுமென போராடினார். மேலும் அவர் மக்கள் தங்களின் பெயருக்கு பின்னால் உள்ள ஜாதி பெயரை கைவிடுமாறும், அதனைக் குறிப்பிட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார். 1930களில் பட்டியலினத்தவரால் சமைக்கப்பட்ட உணவை பொதுக்கூட்டங்களின் பின்னர் சமபந்தியாக நடத்தி காட்டினார்)
Question 88
நவீன தமிழகத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
A
சிங்காரவேலர்
B
பெரியார்
C
அறிஞர் அண்ணாதுரை
D
இவர்கள் யாரும் அல்ல
Question 88 Explanation: 
(குறிப்பு - பல்வேறு தேசிய இனங்களையும், தேசங்களையும் உள்ளடக்கிய நாடு ரஷ்யா. அந்த ஒன்றுபட்ட ரஷ்யாவில் எந்த வகையான ஏற்றத்தாழ்வுகளும் இல்லை எனக்கூறி அந்த வகையான புரட்சிக்கு ஆதரவாக நின்றவர் பெரியார். காலப்போக்கில் சாதி, மத, அரசியல் வேறுபாடுகளை கடந்த பெருமதிப்புடன் பெரியார் நவீன தமிழகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்)
Question 89
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  • கூற்று 1 - இந்தியா ஒரு தேசம் என்று சொல்வதைவிட, திராவிட நாடு ஒரு தேசம், ஆந்திர நாடு ஒரு தேசம்,  வங்காள நாடு ஒரு தேசம் என்று சொல்வது பொருந்தும், என்று பெரியார் வலியுறுத்துகிறார்.
  • கூற்று 2 - எந்த ஒரு மொழியும்,  மற்றொரு மொழி பேசுபவர் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படக்கூடாது என்பது பெரியாரின் கூற்றாகும்.
  • கூற்று 3 - தமிழ்நாடு தமிழருக்கே திராவிட நாடு திராவிடருக்கே என்று கூறியவர் பெரியார் ஆவார்.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 89 Explanation: 
(குறிப்பு - மாறுபட்ட ஆட்சிகளின் கீழ் இருந்து வரும் ஒரு நாட்டை ஒரு தேசம் என்று சொல்லி எல்லா மக்களையும் ஒன்றுபடுத்தி அன்னியனிடம் இருந்து விடுதலை அடைந்த பின்னர் ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரை ஆளலாம் என்றால் இதை யார் ஒப்புக் கொள்வார்கள் என்று பெரியார் கேட்கிறார். பெரியார் முன்மொழிந்த திராவிட தேசியவாதம் முற்றிலும் பெருவாரியாக மத ஆதிக்கங்களுக்கு எதிராக இருந்தது)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 89 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!