Science Questions

11th Std Science Lesson Wise Questions in Tamil – Part 3

11th Science Lesson 9 Questions in Tamil

9] உயிரி உலகம்

1. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு புவி தோன்றியதாக கருதப்படுகிறது?

A) 4 மில்லியன்

B) 4.6 மில்லியன்

C) 4.6 பில்லியன்

D) 5.6 பில்லியன்

விளக்கம்: புவி தோன்றிச் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளாகிறது. இப்புவி மலைகள், சமவெளிகள், பனியாறுகள் போன்றவைகளைக் கொண்டு உயிரினங்களைத் தாங்கும் ஒரு கோளாக விளங்குகிறது.

2. புவியானது கீழ்க்கண்ட எதனை உள்ளடக்கியதாக உள்ளது.

A) மலைகள்

B) சமவெளிகள்

C) பனியாறுகள்

D) மேற்கண்ட அனைத்தும்.

3. கீழ்க்கண்டவற்றுள் பயோஸ்பியருடன் தொடர்பில்லாததைக் கண்டறி:

A) ஹைட்ரோஸ்பியர்

B) அட்மோஸ்பியர்

C) மீசோஸ்பியர்

D) லித்தோஸ்பியர்

விளக்கம்: உயிர்க்கோளம் (பயோஸ்பியர்) என்பது ஹைட்ரோஸ்பியர் (நீர்க்கோளம்), அட்மோஸ்பியர் (வளிக்கோளம்), லித்தோஸ்பியர் (பாறைக்கோளம்) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். உயிர்க்கோளத்தில் காணப்படுகின்ற உயிரினங்களுக்கிடையே பல விந்தையான நிகழ்வுகளும், புதிர்களும் நிறைந்துள்ளன.

4. கீழ்க்கண்டவற்றுள் உயிரற்ற மற்றும் உயிருள்ள அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு அதிசயக்கோளாகக் கருதப்படுவது________

A) செவ்வாய்

B) புதன்

C) புவி

D) யுரேனஸ்

விளக்கம்: புவி என்கிற கோள் உயிரற்ற நில அமைப்புகளையும், உயிருள்ள அமைப்புகளையும் உள்ளடக்கிய ஒரு அதிசயக்கோளாக உள்ளது.

5. கீழ்க்கண்டவற்றுள் உயிரனங்களின் உயிரைக் கட்டுப்படுத்தும் ஒரு மூலக்கூறாக செயல்படுவது________

A) டி.என்.ஏ

B) ஆர்.என்.ஏ

C) எம்.ஆர்.என்.ஏ

D) ஆர்.ஆர்.என்.ஏ

விளக்கம்: டி.என்.ஏ வானது உயிரினங்களின் உயிரைக் கட்டுப்படுத்தும் ஒரு மூலக்கூறாகவும், கார்பன்(C), ஹைட்ரஜன்(H), ஆக்ஸிஜன்(O), நைட்ரஜன்(N), பாஸ்பரஸ்(P) போன்ற உயிரற்ற பொருட்களையும் கொண்டுள்ளது. ஆகவே உயிருள்ள பொருட்களும், உயிரற்ற பொருட்களும் ஒன்றோடொன்று நெருங்கிப் பிணைந்து காணப்படுவது நமது உயிர்க்கோளான புவியைத் தனிச் சிறப்படையச் செய்கிறது.

6. 2011 – இன் கணக்கெடுப்பின்படி புவியில் வாழ்ந்து வரும் சிற்றினங்களின் எண்ணிக்கை__________

A) 4.7 மில்லியன்

B) 6.7 மில்லியன்

C) 8.7 மில்லியன்

D) 5.7 மில்லியன்

விளக்கம்: மோராவும் அவரது சக ஆய்வாளர்களும் 2011-ல் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவாக, புவியில் ஏறத்தாழ 8.7 மில்லியன் சிற்றினங்கள் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உயிரி உலகம் என்பது நுண்ணுயிரிகள், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

7. கூற்று (i): வளர்ச்சி என்பது அனைத்து உயிரினங்களில் நடைபெறக்கூடிய ஓர் புறம் சார்ந்த பண்பாகும்.

கூற்று (ii): இந்நிகழ்வின்போது செல்களின் எண்ணிக்கையும், பொருண்மையும் அதிகரிக்கின்றன. ஒரு செல், பல செல் உயிரினங்கள் அனைத்துமே செல்பிரிதல் மூலம் வளர்ச்சியடைகின்றன.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: வளர்ச்சி என்பது அனைத்து உயிரினங்களில் நடைபெறக்கூடிய ஓர் அகம் சார்ந்த பண்பாகும். இந்நிகழ்வின்போது செல்களின் எண்ணிக்கையும், பொருண்மையும் அதிகரிக்கின்றன. ஒரு செல், பல செல் உயிரினங்கள் அனைத்துமே செல்பிரிதல் மூலம் வளர்ச்சியடைகின்றன.

8. கூற்று (i): உயிருள்ள செல்களுக்குள்ளாகப் புதிய மைட்டோபிளாசம் அதிக அளவில் சேர்க்கப்படுவதால் வளர்ச்சி ஏற்படுகிறது. எனவே உயிரினங்களில் வளர்ச்சி உள்ளார்ந்த செயலாகிறது.

கூற்று (ii): ஒரு செல் உயிரிகளான பாக்டீரியங்கள் மற்றும் அமீபாவில் செல் பிரிதல் நடைபெறுவதால் வளர்ச்சி ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிரினத் தொகையும் அதிகரிக்கின்றது.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: உயிருள்ள செல்களுக்குள்ளாகப் புதிய புரோட்டோபிளாசம் அதிக அளவில் சேர்க்கப்படுவதால் வளர்ச்சி ஏற்படுகிறது. எனவே உயிரினங்களில் வளர்ச்சி உள்ளார்ந்த செயலாகிறது. ஒரு செல் உயிரிகளான பாக்டீரியங்கள் மற்றும் அமீபாவில் செல் பகுப்பு நடைபெறுவதால் வளர்ச்சி ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிரினத் தொகையும் அதிகரிக்கின்றது.

9. செல் அமைப்புப் பற்றியக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:

A) அனைத்து உயிரினங்களும் செல்களால் அனவை.

B) செல்களின் அடிப்படையில் உயிரினங்கள் தொன்மையுட்கரு மற்றும் உண்மையுட்கரு என இரண்டு வகைகளாகும்.

C) தொல்லுட்கரு உயிரிகள் பல செல் அமைப்புடையவை.

D) இவற்றுள் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு, மைட்டோகாண்டிரியங்கள், எண்டோபிளாச வலை, கோல்கை உறுப்புகள் போன்ற சவ்வினால் சூழப்பட்ட பல நுண்ணுறுப்புகளும் காணப்படுவதில்லை.

விளக்கம்: தொல்லுட்கரு உயிரிகள் ஒரு செல் அமைப்புடையவை.

10. மெய்யுட்கரு உயிரிக்கு எ.கா__________

A) கிளாமிடோமோனஸ்

B) பூஞ்சைகள்

C) அமீபா

D) ஊடோகோணியம்.

11. ஊடோகோணியம் என்பது ஒரு__________உயிரியாகும்.

A) ஒரு செல்

B) பல செல்

C) லைக்கன்கள்

D) மைக்கோரைசா

12. கீழ்க்கண்டவற்றுள் இனப்பெருக்க நிலைகளின் கருத்துகளுல் தவறானதைக் கண்டறி:

A) இனப்பெருக்கம் உயிரினங்களின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாகும்.

B) இதன் மூலம் உயிரினங்கள் அனைத்தும் தங்களை ஒத்த சந்ததிகளை உருவாக்குவதில்லை.

C) இது பாலிலா இனப்பெருக்கம், பாலினப்பெருக்கம் என இரண்டு வகைப்படும்.

D) பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் சில அல்லது பல பண்புகளில் பெற்றோரை ஒத்தசந்ததிகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

விளக்கம்: இதன் மூலம் உயிரினங்கள் அனைத்தும் தங்களை ஒத்த சந்ததிகளை உருவாக்குகின்றன.

13. பொருத்துக:

உயிரினங்கள் பாலிலா இனப்பெருக்கம்

A) கொனிடியம் – 1. ஆஸ்பர்ஜில்லஸ்

B) மொட்டுவிடுதல் – 2. ஸ்பைரோகைரா

C) இரு பிளவுறுதல் – 3. பாக்டீரியங்கள், அமீபா

D) துண்டாதல் – 4. ஹைட்ரா, ஈஸ்ட்

A) 1 2 3 4

B) 1 4 3 2

C) 1 2 4 3

D) 4 3 2 1

விளக்கம்:

உயிரினங்கள் பாலிலா இனப்பெருக்கம்

A) கொனிடியம் – 1. ஆஸ்பர்ஜில்லஸ்

B) மொட்டுவிடுதல் – 2. ஹைட்ரா, ஈஸ்ட்

C) இரு பிளவுறுதல் – 3. பாக்டீரியங்கள், அமீபா

D) துண்டாதல் – 4. ஸ்பைரோகைரா

14. கீழ்க்கண்டவற்றுள் பாலிலா இனப்பெருக்க முறைகளுல் சரியாகப் பொருந்தாததைக் கண்டறி:

1) புரோட்டோனிமா – பிளனேரியா

2) மீளுருவாக்கம் – மாஸ்கள்

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:

1) புரோட்டோனிமா – மாஸ்கள்

2) மீளுருவாக்கம் – பிளனேரியா

15. கீழ்க்கண்டவற்றுள் மலட்டுத்தண்மையின் காரணமாக இனப்பெருக்கம் நடைபெறாத உயிரி எது.

A) வேலைக்காரத் தேனீ

B) இராணித் தேனீ

C) கோவேறுக் கழுதை

D) AC இரண்டும்

விளக்கம்: வேலைக்காரத் தேனீக்கள் மற்றும் கோவேறு கழுதைகளில் மலட்டுத்தன்மையின் காரணமாக இனப்பெருக்கம் நடைபெறுவதில்லை.

16. தூண்டலுக்கேற்ற துலங்களை வழங்கும் தாவரங்களுல் அடங்காதது எது.

A) சூரியகாந்தி

B) தொட்டாற்சினுங்கி

C) மைமோசா பூடிகா

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: தாவரங்கள் சூரியஒளியை நோக்கி வளைவதும், தொட்டாற்சிணுங்கி தாவர இலைகள் தொட்டவுடன் மூடிக்கொள்வதும், தாவரங்களில் காணப்படும் தூண்டல்களுக்கேற்ற துலங்கல்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். இவ்வகை துலங்கல்கள் உறுத்துணர்வு என அழைக்கப்படுகின்றன.

17. சமநிலைப்பேணுதல் என்பது கீழ்க்கண்ட எதனைக் குறிக்கிறது.

A) சுற்றுச்சூழலுக்கேற்ப உயிரினங்கள் தங்களை மாற்றிக் கொள்வதுடன் சீரற்ற உடல்நிலையை வைத்துக்கொள்வது

B) சுற்றுச்சூழலுக்கேற்ப உயிரினங்கள் தங்களை தக்கவைத்துக் கொள்வதுடன் சீரான உடல்நிலையை வைத்துக்கொள்வது

C) சுற்றுச்சூழலுக்கேற்ப உயிரினங்கள் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்வதுடன் சீரான உடல்நிலையையும் பாதுகாத்துக் கொள்வது

D) சுற்றுச்சூழலுக்கேற்ப உயிரினங்கள் தங்களை திசைமாற்றிக் கொள்வதுடன் சீரான உடல்நிலையை பாதகாத்துக்கொள்வது

விளக்கம்: சுற்றுச்சூழலுக்கேற்ப உயிரினங்கள் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்வதுடன் சீரான உடல்நிலையையும் பாதுகாத்துக் கொள்கின்றன. இது சமநிலைப்பேணுதல் என்று அழைக்கப்படுகின்றன. இந்நிலை உயிரினங்கள் சூழ்நிலைக்கேற்ப அகநிலையை நிலைப்படுத்திக் கொண்டு வாழ உதவுகிறது.

18. கூற்று (i): உயிரற்ற செல்களில் நடைபெறுகின்ற அனைத்து வேதிவினைகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வளர்சிதை மாற்றம் என்கிறோம்.

கூற்று (ii): இது இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை வளர்மாற்றம், சிதைவு மாற்றம் ஆகும்.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: உயிருள்ள செல்களில் நடைபெறுகின்ற அனைத்து வேதிவினைகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வளர்சிதை மாற்றம் என்கிறோம். இது இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை வளர்மாற்றம், சிதைவு மாற்றம் ஆகும்.

19. கீழ்க்கண்டவற்றுள் வளர்சிதை மாற்ற நிகழ்வுடன் தொடர்பில்லாததைக் கண்டறி:

1) சிதைவூட்டும் வினைகள் காணப்படுகின்றன.

2) சிறுசிறு மூலக்கூறுகள் இணைந்து பெரிய மூலக்கூறு உண்டாக்கப்படுகிறது.

3) வேதிய ஆற்றல் உருவாக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. எ.கா. அமினோ அமிலங்கள் சேர்ந்து புரதம் உற்பத்தியாதல்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: புரோட்டபிளாச கட்டமைப்பு வினைகள் நடைபெறுகின்றன.

20. கீழ்க்கண்டவற்றுள் வளர்சிதை மாற்ற நிகழ்வுடன் தொடர்புடையதைக் கண்டறி:

1) புரோட்டோபிளாச கட்டமைப்பு வினைகள் காணப்படுகின்றன.

2) பெரிய மூலக்கூறு சிறு சிறு மூலக்கூறுகளாக உடைக்கப்படுகிறது.

3) சேமிக்கப்பட்ட வேதிய ஆற்றல் வெளிவிடப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. எ.கா. குளுக்கோஸ் மூலக்கூறு நீராகவும்,CO2 ஆகவும் சிதைவுறுதல்.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 1 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: சிதைவூட்டும் வினைகள் காணப்படுகின்றன.

21. சைக்ளோசிஸ் எனப்படுவது__________

A) புரோட்டோபிளாச இயக்கம்

B) மைட்டோபிளாச இயக்கம்

C) சைட்டோபிளா இயக்கம்

D) ரைபோசோம் இயக்கம்

விளக்கம்: செல்லினுள் நடைபெறும் சைட்டோபிளாச இயக்கம் சைட்டோபிளாச நகர்வு அல்லது சைக்ளோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.

22. உயிரியியலின் புதிர் என்றழைக்கப்படுவது_________

A) தாவரங்களில் மிகக் கடுமையான நோய்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்

B) விலங்குகளில் மிகக் கடுமையான நோய்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்

C) மனிதர்களில் மிகக் கடுமையான நோய்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்

D) பூஞ்சைகளில் மிகக் கடுமையான நோய்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்

விளக்கம்: மனிதர்களில் மிகக்கடுமையான நோய்களை ஏற்படுத்தக்கூடியவை “உயிரியியலின புதிர் என்று அழைக்கப்படக்கூடிய வைரஸ்களாகும்.

23. கீழ்க்கண்டக்கூற்றுகளை கவனித்து தவறானவற்றைக் கண்டறி:

A) இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட “வைரஸ்” என்ற சொல்லுக்கு “நச்சு” என்று பொருள்.

B) வைரஸ்கள் மீநுண்ணிய, செல்லுக்குள்ளே வாழும் நிலைமாறா ஒட்டுண்ணிகள் ஆகும்.

C) இவை கொழுப்பு உறையால் சூழப்பட்ட உட்கரு அமிலத்தைப் பெற்றுள்ளன.

D) இயற்கையான அமைப்பில் DNAஅல்லது RNA உட்கரு அமிலத்தை இவைகள் பெற்றுள்ளன.

விளக்கம்: இவை புரத உறையால் சூழப்பட்ட உட்கரு அமிலத்தைப் பெற்றுள்ளன.

24. வைரஸ்களைப் பற்றிய படிப்பின் பிரிவு__________என்று அழைக்கப்படுகிறது.

A) பாக்டீரியாலஜி

B) வைராலஜி

C) ஆல்காலஜி

D) மைக்காலஜி

விளக்கம்: வைரஸ்களைப் பற்றிய படிப்பின் பிரிவு “வைரஸ் இயல்”(வைராலஜி) என்று அழைக்கப்படுகிறது.

25. 1935 – ல் நோயுற்ற புகையிலைச் சாற்றிலிருந்து வைரஸ்களைப் படிகப்படுத்திய அமெரிக்கா விஞ்ஞானி

A) J.H. நார்த் ட்ராப்

B) இராபர்ட் கோச்

C) W.M. ஸ்டான்லி

D) ஆண்டன்வான் லூவன்ஹாக்

விளக்கம்: அமெரிக்க விஞ்ஞானியான இவர் 1935 ஆம் ஆண்டில் நோயுற்ற புகையிலைச் சாற்றிலிருந்து வைரஸ்களைப் படிகப்படுத்தினார்.

26. 1946 – இல் W.M. ஸ்டான்லி மற்றும் J.H. நார்த் ட்ராப் ஆகியோர் கீழ்க்கண்ட எந்த பிரிவிற்காக நோபல் பரிசு பெற்றனர்.

A) தாவரவியல்

B) விலங்கியல்

C) இயற்பியல்

D) வேதியியல்

விளக்கம்: W.M. ஸ்டான்லி 1946 ஆம் ஆண்டு வேதியியல் பிரிவிற்கான நோபல் பரிசை Dr.J.H. நார்த் ட்ராப்புடன் சேர்ந்து பெற்றார்.

27. எட்வர்ட் ஜென்னர் என்பவரால் பெரியம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு___________

A) 1790

B) 1792

C) 1794

D) 1796

விளக்கம்: 1796 ஆம் ஆண்டு பெரியம்மைக்கு எட்வர்ட் ஜென்னர் தடுப்பூசி கட்டுபிடித்தார்.

28. 1886 ஆம் ஆண்டு புகையிலை தேமல் நோய் வைரஸின் தொற்றுத்தன்மையை, தேமல் பாதித்த இலைச்சாற்றைப் பயன்படுத்தி விளக்கியவர்.

A) டிமிட்ரிக் ஐவான்ஸ்கி

B) அடால்ப் மேயர்

C) M.W. பெய்ஜிரிங்க்

D) எட்வர்ட் ஜென்னர்

விளக்கம்: 1886 ஆம் ஆண்டு அடால்ப் மேயர் புகையிலை தேமல் நோய் வைரஸின் தொற்றுத்தன்மையை, தேமல் பாதித்த இலைச்சாற்றைப் பயன்படுத்தி விளக்கினார்.

29. வைரஸ்கள் பாக்டீரியங்களை விடச்சிறியது என நிரூபித்தவர்___________

A) டிமிட்ரிக் ஐவான்ஸ்கி

B) அடால்ப் மேயர்

C) M.W. பெய்ஜிரிங்க்

D) எட்வர்ட் ஜென்னர்

விளக்கம்: 1892 ஆம் ஆண்டு டிமிட்ரிக் ஐவான்ஸ்கி வைரஸ்கள் பாக்டீரியங்களை விடச்சிறியது என நிரூபித்தார்.

30. M.W. பெய்ஜிரிங்க் புகையிலையில் உள்ள தொற்றுதல் காரணியை__________என்று அழைத்தார்.

A) தொற்றுத்தன்மையற்ற உயிருள்ள திரவம்

B) தொற்றுத்தன்மையற்ற உயிரற்ற திரவம்

C) தொற்றுத்தன்மை வாய்ந்த உயிரற்ற திரவம்

D) தொற்றுத்தன்மை வாய்ந்த உயிருள்ள திரவம்

விளக்கம்: 1898 ஆம் ஆண்டு M.W. பெய்ஜிரிங்க் புகையிலையில் உள்ள தொற்றுதல் காரணியை “தொற்றுத் தன்மை வாய்ந்த உயிருள்ள திரவம்” என்று அழைத்தார்.

31. பாக்டீரியங்களில் வைரஸ் தொற்றுதலை கண்டறிந்தவர்___________

A) B. ஹெரில்லி

B) F.W. ட்வார்ட்

C) லுக் மான்டக்னர்

D) M.W. பெங்ஜிரிங்க்

விளக்கம்: 1915 ஆம் ஆண்டு F.W. ட்வார்ட் – பாக்டீரியங்களில் வைரஸ் தொற்றுதலை கண்டறிந்தவர்.

32. B. ஹெரில்லி என்பவர் “பாக்டீரியஃபேஜ்” எனும் சொல்லைப் பயன்படுத்திய ஆண்டு___________

A) 1900

B) 1910

C) 1915

D) 1917

விளக்கம்: 1917 ஆம் ஆண்டு B. ஹெரில்லி – “பாக்டீரியஃபேஜ்” எனும் சொல்லைப் பயன்படுத்தினார்.

33. HIV வைரஸ் கண்டறியப்பட்ட ஆண்டு_________

A) 1980

B) 1984

C) 1986

D) 1900

விளக்கம்: 1984 – ஆம் ஆண்டு லுக் மான்டக்னர் மற்றும் இராபர்ட் கேலோ – HIV– யை (மனித நோய் எதிர்ப்புசக்தி குறைக்கும் வைரஸ்) கண்டுபிடித்தனர்.

34. HIV வைரஸ் கண்டுபிடித்தவர்____________

A) லுக் மான்டக்னர்

B) டிமிட்ரிக் ஐவான்ஸ்கி

C) இராபர்ட் கேலோ

D) AC இரண்டும்

35. ஒரு நேனோமீட்டர் என்பது___________

A) 10-6

B) 10-7

C) 10-9

D) 10-11

36. கீழ்க்கண்டக் கூற்றுக்களில் சரியானதைக் கண்டறி:

1) வைரஸ்கள் மிக நுண்ணிய துகள்களாகும்.

2) இவை பாக்டீரியங்களை விடப் பெரியவை.

3) பொதுவாக 20nm முதல் 300 nm வரை விட்டமுடயவை.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 1 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: இவை பாக்டீரியங்களை விடச் சிரியவை.

37. பொருத்துக:

A) பாக்டீரியஃபேஜ் – 1. பெரியம்மை

B) RNA வைரஸ் – 2. இராபர்ட் கேலோ

C) HIV வைரஸ் – 3. (300 × 20 nm)

D) எட்வர்ட் ஜென்னர் – 4. (10nm முதல் 100nm)

A) 1 2 3 4

B) 1 4 3 2

C) 1 2 4 3

D) 4 3 2 1

விளக்கம்:

A) பாக்டீரியஃபேஜ் – 1. (10nm முதல் 100nm)

B) RNA வைரஸ் – 2. (300 × 20 nm)

C) HIV வைரஸ் – 3. இராபர்ட் கேலோ

D) எட்வர்ட் ஜென்னர் – 4. பெரியம்மை

38. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:

வடிவம் வைரஸ்கள்

1) கனசதுர வடிவம் – பாக்டீரியஃபேஜ், பாக்ஸினியா வைரஸ்

2) சுருள் வடிவம் – இன்புளுயன்சா வைரஸ்,TMV

3) சிக்கலான வடிவம் – அடினோ வைரஸ், ஹெர்ப்பஸ் வைரஸ்

A) 1 2 மட்டும் தவறு

B) 2 3 மட்டும் தவறு

C) 1 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

வடிவம் வைரஸ்கள்

1) கனசதுர வடிவம் – அடினோ வைரஸ், ஹெர்ப்பஸ் வைரஸ்

2) சுருள் வடிவம் – இன்புளுயன்சா வைரஸ்,TMV

3) சிக்கலான வடிவம் – பாக்டீரியஃபேஜ், பாக்ஸினியா வைரஸ்

39. உயிருள்ள அமைப்புகளில் உள்ள வைரஸ்களின் பண்புகளுல் பொருந்தாததைத் கண்டறி:

A) உட்கரு அமிலம், புரதம் கொண்டிருத்தல்.

B) திடீர்மாற்றம் அடையும் திறன்.

C) உயிருள்ள செல்லுக்குள் மட்டுமே பெருக்கமடையும் திறன்.

D) ஓம்பயிரிக்கு வெளியே செயல்படும் திறனற்றவை.

40. உயிருள்ள அமைப்புகளில் உள்ள வைரஸ்களின் பண்புகளுல் சரியானதைக் கண்டறி:

1) உயிரினங்களில் நோயை உண்டாக்கும் திறன்

2) உறுத்துணர்வு உள்ளவை.

3) குறிப்பிட்ட ஓம்புயிர்ச்சார்பு கொண்டவை.

4) வளர்சிதை மாற்றம் காணப்படுவதில்லை

A) 1 2 3 மட்டும் சரி

B) 2 3 4 மட்டும் சரி

C) 1 3 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

41. உயிரற்ற அமைப்புகளில் உள்ள வைரஸ்களின் பண்புகளுல் தவறானதைக் கண்டறி:

1) படிகங்களாக்க முடியும்.

2) ஓம்புயிரிக்கு வெளியே செயல்படும் திறன் பெற்றவை.

3) ஆற்றலை வெளிப்படுத்தும் நொதிகளின் தொகுப்பு காணப்படுவதில்லை.

4) தன்னிச்சையான செயல்பாடுகள் எதுவும் காணப்படுவதில்லை.

விளக்கம்: ஓம்புயிரிக்கு வெளியே செயல்படும் திறனற்றவை.

42. டேவிட் பால்டிமோர் என்பவரால் வைரஸ் எத்தனை வகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

A) ஐந்து

B) ஆறு

C) ஏழு

D) எட்டு

விளக்கம்: 1971 ஆம் ஆண்டு டேவிட் பால்டிமோர் அவர்களால் வைரஸ்கள் ஏழு வகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

43. கூற்று (i): இரண்டு வகையான உட்கரு அமிலங்களில் வைரஸ்கள் DNAஅல்லது RNA ஒன்றை மட்டுமே கொண்டிருக்கும்.

கூற்று (ii): வைரஸ்களில் காணக்கூடிய உட்கரு அமிலங்கள் நீண்ட இழை போன்றோ, வட்டமாகவோ இருக்கும். பொதுவாக உட்கரு அமிலம் ஒரே அலகாகக் காணப்படுகிறது.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

44. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறிக:

1) DNA வைக் கொண்டுள்ள வைரஸ்கள் – ரிபோவைரஸ்கள்

2) RNA வைக் கொண்டுள்ள வைரஸ்கள் – டீஆக்ஸிவைரஸ்கள்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: DNA வைக் கொண்டுள்ள வைரஸ்கள் “டீஆக்ஸிவைரஸ்கள்” என்றும்,RNA வைக் கொண்டுள்ள வைரஸ்கள் “ரிபோவைரஸ்கள்” என்றும் அழைக்கப்படுகின்றன.

45. கீழ்க்கண்டவற்றுள் சரியான இனையைக் கண்டறி:

1) விலங்கு மற்றும் பாக்டீரிய வைரஸ்கள் – DNA

2) HIV விலங்கு வைரஸ் – RNA

3) தாவர வைரஸ்கள் – DNA

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 1 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

1) விலங்கு மற்றும் பாக்டீரிய வைரஸ்கள் – DNA

2) HIV விலங்கு வைரஸ் – RNA

3) தாவர வைரஸ்கள் – RNA

46. காலிஃபிளவர் மற்றும் தேமல் வைரஸ்கள்__________யைப் பெற்றுள்ளன.

A) டி.என்.ஏ

B) ஆர்.என்.ஏ

C) எம்.ஆர்.என்.ஏ

D) மேற்கண்ட அனைத்தும்

47. பொருத்துக:

A) பார்வோ வைரஸ்கள் – 1. ssDNA

B) பாக்டீரியஃபேஜ்கள் – 2. dsDNA

C) காயக்கழலை வைரஸ் – 3.ssRNA

D) தேமல் வைரஸ் – 4. dsRNA

A) 1 2 3 4

B) 1 4 3 2

C) 1 2 4 3

D) 4 3 2 1

விளக்கம்:

A) பார்வோ வைரஸ்கள் – 1. ssDNA

B) பாக்டீரியஃபேஜ்கள் – 2. dsDNA

C) காயக்கழலை வைரஸ் – 3.ssRNA

D) தேமல் வைரஸ் – 4. dsRNA

48. புகையிலை தேமல் வைரஸைக் கண்டறிந்தவர்________

A) இராபர்ட் கேலோ

B) F.W. ட்வார்ட்

C) டிமிட்ரிக் ஐவான்ஸ்கி

D) எட்வர்ட் ஜென்னர்

விளக்கம்: புகையிலை தேமல் வைரஸ்,1892 ஆம் ஆண்டில் டிமிட்ரி ஐவான்ஸ்கி என்பவரால் நோயுற்ற புகையிலைத் தாவரத்திலிருந்து கண்டறியப்பட்டது. இது செடிப்பேன், வெட்டுக்கிளி போன்ற கடத்திகள் வழியாக நோயுற்ற தாவரங்களிலிருந்து பிற தாவரங்களுக்குப் பரவுகிறது.

49. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி:

A) அடினோ வைரஸ்கள் – 1. ssRNA-RT

B) ரியோ வைரஸ்கள் – 2. ssRNA

C) டோகா வைரஸ்கள் – 3. dsDNA

D) ரேட்ரோ வைரஸ்கள் – 4. dsRNA

A) 1 2 3 4

B) 1 4 3 2

C) 3 4 2 1

D) 4 3 2 1

விளக்கம்:

A) அடினோ வைரஸ்கள் – 1. dsDNA

B) ரியோ வைரஸ்கள் – 2. dsRNA

C) டோகா வைரஸ்கள் – 3. ssRNA

D) ரேட்ரோ வைரஸ்கள் – 4. ssRNA-RT

50. புகையிலை தேமல் வைரஸ்கள்_______வடிவத்தைப் பெற்றுள்ளது.

A) குச்சி

B) கோல்

C) இழை

D) காற்புள்ளி

விளக்கம்: மின்னணு நுண்ணோக்கியைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வு புகையிலை தேமல் வைரஸ்கள் கோல் வடிவமைப்பு பெற்றுள்ளதை உறுதிசெய்கிறது.

51. புகையிலை தேமல் வைரஸின் அமைப்புப் பற்றிய தகவல்களில் சரியற்றதைக் கண்டறி:

A) சுருளமைவுடைய இந்த வைரஸின் அளவு 300 × 20 nm எனக் கண்டறியப்பட்டுள்ளது.

B) இதன் மூலக்கூறு எடை 39 × 106 டால்டன்கள் ஆகும்.

C) விரியான் எனப்படும் வைரஸ் துகள் இரண்டு முக்கியப் பகுதிப்பொருட்களான கேப்சிட் என்ற புரத உறையையும், மையத்தில் உட்கரு அமிலத்தையும் கொண்டுள்ளது.

D) புரத உறை ஏறத்தாழ 2130 அமைப்பில் வேறுபட்ட கேப்சோமியர்கள் என்று அழைக்கப்படும் புரதத் துணை அலகுகளால் ஆனது.

விளக்கம்:புரத உறை ஏறத்தாழ 2130 அமைப்பில் ஒத்தகேப்சோமியர்கள் என்று அழைக்கப்படும் புரதத் துணை அலகுகளால் ஆனது.

52. ஒரு முழு TMV துகள் உருவாவதற்கான மரபியல் தகவல் முழுவதும்__________இல் உள்ளது.

A) டி.என்.ஏ

B) ஆர்.என்.ஏ

C) எம்.ஆர்.என்.ஏ

D) எஸ்.ஆர்.என்.ஏ

விளக்கம்: ஒரு முழு TMV துகள் உருவாவதற்கான மரபியல் தகவல் முழுவதும் RNA வில் உள்ளது. TMV வைரஸின் RNA 6500 நூயூக்லியோடைட்களைக் கொண்டுள்ளது.

53. பாக்டீரியங்களைத் தாக்கி அழிக்கும் வைரஸ்கள்______என்று அழைக்கப்படுகின்றன.

A) பிரியான்கள்

B) விரியான்கள்

C) விராய்டுகள்

D) பாக்டீரியோபேஃஜ்கள்

விளக்கம்: பாக்டீரியங்களைத் தாக்கி அழிக்கும் வைரஸ்கள் பாக்டீரியஃபாஜ்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதன் நேரடியான பொருள் “பாக்டீரிய உண்ணிகள்”(கிரேக்கம் – ஃபாஜின் உண்ணுவது). மண், கழிவுநீர், பழங்கள், காய்கறிகள், பால் போன்றவற்றில் ஃபாஜ்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

54. T4 ஃபாஜ்கள்_________வடிவம் கொண்டவை.

A) கோல்

B) கோள

C) தலைப்பிரட்டை

D) சுருள்

விளக்கம்: T4 ஃபாஜ்கள் தலைப்பிரட்டை வடிவம் கொண்டவை. இவை தலை, கழுத்துப்பட்டை, வால், அடித்தட்டு, வால் நார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அறுங்கோண வடிவம் கொண்ட தலைப்பகுதி 2000 ஒத்த புரதத்துணை அலகுகளால் ஆனது.

55. சிதைவு சுழற்சியின் மூலம் புதிதாக தோன்றும் வைரஸ்கள் செல்லுக்குள்ளே பெருக்கமடைந்து ஓம்புயிர் பாக்டீரிய செல் வெடித்து_______யை வெளியேற்றுகின்றன.

A) விராய்டுகள்

B) விரியான்கள்

C) பிரியான்கள்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்:இதில் புதிதாகத் தோன்றும் வைரஸ்கள் செல்லுக்குள்ளே பெருக்கமடைந்து ஓம்புயிர் பாக்டீரிய செல் வெடித்து விரியான்கள் வெளியேற்றப்படுகின்றன.

56. சிதைவு சுழற்சியானது கீழ்க்கண்ட எந்த படிநிலையில் நடைபெறுகிறது.

A) ஒட்டிக் கொள்ளுதல்

B) ஊடுருவுதல்

C) உற்பத்தி செய்யப்படுதல்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஒட்டிக் கொள்ளுதல், ஊடுருவுதல், உற்பத்தி செய்யப்படுதல், தொகுப்பும் முதிர்ச்சியும், வெளியேற்றம், உறக்கநிலை சுழற்சி போன்ற முறைகளில் சிதைவு சுழற்சியானது நடைபெறுகிறது.

57. பாக்டீரியத்துடன் ஃபாஜ்கள் ஏற்படுத்தும் ஒத்தேற்பு நிகழ்வுகள் அனைத்தும் உள்ளடக்கியது__________எனப்படுகிறது.

A) பரப்பிரங்கள்

B) ஊடுதொற்றல்

C) முதிர்ச்சியடைதல்

D) குத்துதல்

விளக்கம்: பாக்டீரியத்துடன் ஃபாஜ்கள் ஏற்படுத்தும் ஒத்தேற்பு நிகழ்வுகள் அனைத்தும் உள்ளடக்கியது பரப்பிரங்கள் எனப்படும். வால்நார்களுக்கும் பாக்டீரிய செல்களுக்கும் இடையேயான தொடர்பு உறுதி செய்யப்பட்டவுடன் வால் நார்கள் வளைந்த பொருந்தி அடித்தட்டு மற்றும் முட்களினால் பாக்டீரியசெல்களின் மீது நன்கு பொருத்தப்படுகிறது. இந்நிகழ்வானது குத்துதல் எனப்படகிறது.

58. பாக்டீரியாவினுள் RNA துகள் தன்னிச்சையாகச் செலுத்தப்படுவது__________என அழைக்கப்படுகிறது.

A) பரப்பிரங்கள்

B) ஊடுதொற்றல்

C) முதிர்ச்சியடைதல்

D) குத்துதல்

விளக்கம்: பாக்டீரியாவினுள் RNA துகள் தன்னிச்சையாகச் செலுத்தப்படுவது ஊடுதொற்றல் என அழைக்கப்படுகிறது. ஊடுருவலுக்குப் பிறகு ஓம்புயிர் செல்லுக்கு வெளியே காணப்படும் ஃபாஜின் வெற்று புரத உறை “வெறும் கூடு” என்று அழைக்கப்படுகிறது.

59. ஃபாஜ்களின் பகுதிகள் ஒன்று சேர்ந்து முழு வைரஸ் துகள்களாக மாறும் நிகழ்வு_______

A) பரப்பிரங்கள்

B) ஊடுதொற்றல்

C) குத்துதல்

D) முதிர்ச்சியடைதல்

60. தொற்றுத்தன்மை வாய்ந்த, ஓம்புயிர் செல்லுக்கு வெளியே பெருக்கமடைய முடியாத, ஒரு முழுமையான வைரஸ்___________என்றழைக்கப்படுகின்றன.

A) விரியான்கள்

B) விராய்டுகள்

C) பிரியான்கள்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: விரியான் என்பது தொற்றுத்தன்மை வாய்ந்த, ஓம்புயிர் செல்லுக்கு வெளியே பெருக்கமடைய முடியாத, ஒரு முழுமையான வைரஸ் துகளாகும்.

61. விராய்டுகள்___________என்பவரால் கண்டறியப்பட்டது.

A) T.O. டெய்னர்

B) டிமிட்ரிக் ஐவனாஸ்கி

C) ஜென்னர்

D) பெய்ஜிரிங்க்

விளக்கம்: விராய்டுகளை T.O. டெய்னர்,1971 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இவை புரத உறையற்ற, வட்டவடிவமான ஓரிழை RNA க்களாகும். இதன் RNA குறைந்த மூலக்கூறு எடையைக் கொண்டது.

62. உருளைக்கிழங்கில் கதிர் வடிவ கிழங்குநோய் போன்ற தாவரநோய்களை உண்டாக்குவது________

A) விரியான்கள்

B) விராய்டுகள்

C) பிரியான்கள்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: விராய்டுகளை T.O. டெய்னர்,1971 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இவை புரத உறையற்ற, வட்டவடிவமான ஓரிழை RNA க்களாகும். இதன் RNA குறைந்த மூலக்கூறு எடையைக் கொண்டது. இவை சிட்ரஸ் எக்ஸோகார்ட்டிஸ், உருளைக்கிழங்கில் கதிர் வடிவ கிழங்குநோய் போன்ற தாவரநோய்களை உண்டாக்குகின்றன.

63. கீழ்க்கண்டவர்களுல் விராய்டுகளைக் கண்டறிந்த அறிவியல் அறிஞர்_______

A) J.W. ராண்டல்ஸ்

B) T.O. டெய்னர்

C) B. புரூச்னர்

D) மேற்கண்ட எவருமில்லை

விளக்கம்: விராய்டுகளை J.W. ராண்டல்ஸ் மற்றும் சக ஆய்வாளர்களும் 1981 ஆம் ஆண்டு கண்டறிந்தனர். இவை சிறிய வட்டவடிவ RNA க்களைப் பெற்று விராய்டுகளை ஒத்திருந்தாலும், வைரஸின் பெரியமூலக்கூறுடன் எப்பொழுதும் தொடர்பினைக் கொண்டுள்ளன.

64. பிரியான்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு____________

A) 1980

B) 1982

C) 1984

D) 1986

விளக்கம்: பிரியான்களை ஸ்டான்லி B. புரூச்னர் 1982 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இவை தொற்றும் தன்மையுடைய புரதத்துகள்களாகும். மனிதன் மற்றும் பல விலங்குகளின் மைய நரம்புமண்டலத்தைப் பாதிக்கும் பல்வேறு நோய்களுக்குக் காரணமாக உள்ளன.

65. நீலப்பசும் பாசிகளைத் தாக்கக்கூடிய வைரஸ்களை முதன்முதலாகக் கண்டறிந்த அறிஞர்___________

A) சாபர்மேன்

B) புரூச்னர்

C) மோரிஸ்

D) AC இரண்டும்

விளக்கம்: சாபர்மேன் மற்றும் மோரிஸ் ஆகியோர் 1963 ஆம் ஆண்டில் நீலப்பசும் பாசிகளைத் தாக்கக்கூடிய வைரஸ்களை முதன்முதலாகக் கண்டறிந்து அவைகளைச் சயனோஃபாஜ்கள் என்று அழைத்தனர். எ.கா. LPPI – லிங்ஃபயா, பிளக்டோனிமா மற்றும் ஃபார்மிடியம்

66. வளர்ப்புக் காளான்களில் நுனியடிஇறப்பு நோய் உண்டாக்கக்கூடிய வைரஸ்களை முதலில் கண்டறிந்தவர்__________

A) ஹோலிங்ஸ்

B) புரூச்னர்

C) மோரிஸ்

D) சாபர்மேன்

விளக்கம்: 1962 – ல் ஹோலிங்ஸ் என்பவர் வளர்ப்புக் காளான்களில் நுனியடிஇறப்பு நோய் உண்டாக்கக்கூடிய வைரஸ்களை முதலில் கண்டறிந்தார்.

67. பூஞ்சைகளைத் தாக்கக்கூடிய வைரஸ்கள்­­­­­_________என்று அழைக்கப்படுகின்றன.

A) மைக்கோவைரஸ்கள்

B) மைக்கோஃபேஜ்கள்

C) மைக்கோரைசா

D) AB இரண்டும்

விளக்கம்: பூஞ்சைகளைத் தாக்கக்கூடிய வைரஸ்கள் “மைக்கோவைரஸ்கள்” அல்லது மைக்கோஃபேஜ்கள் என்று அழைக்கப்படுகின்றன.

68. பொருத்துக:

தாவரங்கள் வைரஸ் நோய்கள்

A) புகையிலை – 1. நரம்பு வெளிர்தல் நோய்

B) உருளைக்கிழங்கு – 2. உச்சிக்கொத்து நோய்

C) வாழை – 3. இலைச்சுருள் நோய்

D) வெண்டை – 4. தேமல் நோய்

A) 1 2 3 4

B) 1 4 3 2

C) 1 2 4 3

D) 4 3 2 1

விளக்கம்:

தாவரங்கள் வைரஸ் நோய்கள்

A) புகையிலை – 1. தேமல் நோய்

B) உருளைக்கிழங்கு – 2. இலைச்சுருள் நோய்

C) வாழை – 3. உச்சிக்கொத்து நோய்

D) வெண்டை – 4. நரம்பு வெளிர்தல் நோய்

69. வைரஸினால் கீழ்க்கண்ட எந்த தாவரத்திற்கு தேமல் நோய் ஏற்படுகிறது.

A) காலிஃபிளவர்

B) கரும்பு

C) வெள்ளரி

D) மேற்கண்ட அனைத்தும்

70. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி:

தாவரங்கள் வைரஸ் நோய்கள்

1) பப்பாளி – இலைச்சுருள் நோய்

2) நெல் – துங்ரோ நோய்

3) தக்காளி – உச்சிக்கொத்து நோய்

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

தாவரங்கள் வைரஸ் நோய்கள்

A) பப்பாளி – இலைச்சுருள் நோய்

B) நெல் – துங்ரோ நோய்

C) தக்காளி – தேமல் நோய்

71. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது?

A) பொன்னுக்குவீங்கி

B) இளம்பிள்ளைவாதம்

C) சிக்குன்குனியா

D) கோமாரி நோய்

விளக்கம்: கோமாரி நோய் வைரஸினால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோயாகும். மற்றவை வைரஸினால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களாகும்.

72. கீழ்க்கண்டவற்றுள் மனிதர்களுக்கு வைரஸால் ஏற்படும் நோய்களுல் பொருந்தாதது எது.

A) தட்டம்மை

B) சின்னம்மை

C) சிபிலிஸ்

D) பெரியம்மை

விளக்கம்: சிபிலிஸ் பாக்டீரியாவால் மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களாகும்.

73. கீழ்க்கண்டவற்றுள் மனிதர்களுக்கு வைரஸால் ஏற்படும் நோய்களுல் பொருந்தாதது எது.

A) ஹெப்படைட்டிஸ் B

B) புற்றுநோய்

C) வெறி நாய்க்கடி

D) குடற் காய்ச்சல்

விளக்கம்: சளி, ஹெப்படைட்டிஸ் B, புற்றுநோய், சார்ஸ்(அதிதீவிர சுவாசக் குறைபாடு), எய்ட்ஸ்(பெறப்பட்ட நோய் எதிர்ப்புசக்தி குறை நோய்), வெறி நாய்க்கடி, பொன்னுக்குவீங்கி, இளம்பிள்ளைவாதம், சிக்குன்குனியா, பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை ஆகியன வைரஸால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களாகும்.

74. கீழ்க்கண்டவற்றுள் மனிதர்களுக்கு ஏற்படும் அதிதீவிர சுவாசக் குறைபாட்டு நோய்________

A) இளம்பிள்ளைவாதம்

B) சார்ஸ்

C) பொன்னுக்குவீங்கி

D) சிக்குன்குன்யா

75. துலிப் மலர்களில் காணப்படும் வைரஸ்கள் கீழ்க்கண்ட எந்த குடும்பத்தைச் சார்ந்தது.

A) பாட்விரிடே

B) பேக்குலோவிரிடே

C) பாலிஹெட்ரோஸிஸ்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: துலிப் மலர்களின் இதழ்களில் காணக்கூடிய நீண்ட வரிகள் அனைத்தும் துலிப் மலர் விரியும் வைரஸ்களால் உண்டாகிறது. இவை பாட்விரிடே குழுமத்தைச் சார்ந்தவை.

76. கீழ்க்கண்ட எந்த குழுமத்தைச் சார்ந்த வைரஸ்கள் வணிகரீதியாகப் பூச்சிக் கொல்லிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

A) பாட்விரிடே

B) பேக்குலோவிரிடே

C) பாலிஹெட்ரோஸிஸ்

D) எண்டமோபாக்ஸ்

விளக்கம்: பேக்குலோவிரிடே குழுமத்தைச் சார்ந்த வைரஸ்கள் வணிகரீதியாகப் பூச்சிக் கொல்லிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

77. கீழ்க்கண்டவற்றுள் திறன்மிக்க பூச்சிக் கொல்லிகளாகப் பயன்படுத்தப்படும் வைரஸ்கள்_____________

A) சைட்டோபிளாச பாலிஹெட்ரோஸிஸ்

B) கிரானுலோ வைரஸ்கள்

C) எண்டமோபாக்ஸ் வைரஸ்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: சைட்டோபிளாச பாலிஹெட்ரோஸிஸ், கிரானுலோ வைரஸ்கள், எண்டமோபாக்ஸ் வைரஸ்கள் போன்றவை திறன்மிக்க பூச்சிக் கொல்லிகளாகப் பயன்படுத்தப்படுகிறது.

78. தாவரவியலின் தந்தை_________

A) அரிஸ்டாட்டில்

B) ஹிப்போகிரேட்டஸ்

C) கரோலஸ் லின்னேயஸ்

D) தியோஃபிராஸ்டஸ்

விளக்கம்: ‘தாவரவியலின் தந்தை’ யான தியோஃபிராஸ்டஸ் தாவரங்களைப் புறஅமைப்புப் பண்புகளின் அடிப்படையில் மரங்கள், புதர்ச்செடிகள், சிறுசெடிகள் என வகைப்படுத்தினார்.

79. விலங்கினங்களை இரத்த நிறத்தின் அடிப்படையில் வகைப்படுத்தியவர்__________

A) தியோப்ராஸ்டஸ்

B) ஹிப்போகிரேட்டஸ்

C) அரிஸ்டாட்டில்

D) கரோலஸ்லின்னேயஸ்

விளக்கம்: அரிஸ்டாட்டில் விலங்கினங்களை இரத்த நிறத்தின் அடிப்படையில், சிவப்புநிற இரத்த உயிரிகள் சிவப்புநிறமற்ற இரத்த உயிரிகள் என இரு பெரும்பிரிவுகளாகப் பிரித்தார்.

80. உயிரினங்களை அவற்றின் புறப்பண்புகளின் அடிப்படையில் தாவரங்கள், விலங்குகள் என இரு குழுக்களாகப் பிரித்தவர்__________

A) கார்ல் லின்னேயஸ்

B) சாமுவேல் ஹானிமேன்

C) ஹிப்போகிரேட்டஸ்

D) அரிஸ்டாட்டில்

விளக்கம்: கார்ல் லின்னேயஸ் உயிரின உலகத்தை அவற்றின் புறப்பண்புகளின் அடிப்படையில் தாவரங்கள், விலங்குகள் என இரு குழுக்களாகப் பிரித்தார். எனினும் இவரின் வகைப்பாடு மிகுந்த பின்னடைவு அடைந்தது. இதற்குக் காரணம் இவர் உயிரினங்களில் தொல்லுட்கரு உயிரிகள், மெய்யுட்கரு உயிரிகள் ஆகிய இரண்டு பிரிவுளையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே குழுவின் கீழ் வகைப்படுத்தினார்.

81. கீழ்க்கண்டவற்றுள் வகைப்பாட்டின் நோக்கங்களுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

1) பொதுவான பண்புகளின் அடிப்படையில் உயிரினங்களை தொடர்புபடுத்துதல்.

2) சிறப்பியல்புகளின் அடிப்படையில் உயிரினங்களை வரையறை செய்தல்.

3) பல்வேறு உயிரினக் குழுக்களில் உள்ள உயிரினங்களின் தொடர்பைப் பற்றி அறிதல்.

4) உயிரினங்களுக்கு இடையேயுள்ள பரிணாம தொடர்பினை அறிதல்.

A) 1 2 3 மட்டும் சரி

B) 2 3 4 மட்டும் சரி

C) 1 3 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

82. பொருத்துக:

வகைபாட்டுமுறைகள் வகைப்படுத்தியவர்கள்

A) இரண்டுலக வகைப்பாடு – 1. எர்னெஸ்ட் ஹெக்கேல்

B) மூன்றுலக வகைப்பாடு – 2. R.H. விட்டேக்கர்

C) நான்குலக வகைப்பாடு – 3. கார்ல் லின்னேயஸ்

D) ஐந்துலக வகைப்பாடு – 4. கோப்லாண்ட்

A) 1 2 3 4

B) 3 1 4 2

C) 1 2 4 3

D) 4 3 2 1

விளக்கம்:

வகைபாட்டுமுறைகள் வகைப்படுத்தியவர்கள்

A) இரண்டுலக வகைப்பாடு – 1. கோப்லாண்ட்

B) மூன்றுலக வகைப்பாடு – 2. எர்னெஸ்ட் ஹெக்கேல்

C) நான்குலக வகைப்பாடு – 3. கார்ல் லின்னேயஸ்

D) ஐந்துலக வகைப்பாடு – 4. R.H. விட்டேக்கர்

83. பொருத்துக:

வகைபாட்டுமுறைகள் வகைப்படுத்தியவர்கள்

A) இரண்டுலக வகைப்பாடு – 1. 1735

B) மூன்றுலக வகைப்பாடு – 2. 1969

C) நான்குலக வகைப்பாடு – 3. 1956

D) ஐந்துலக வகைப்பாடு – 4. 1866

A) 1 4 3 2

B) 3 1 4 2

C) 1 2 4 3

D) 4 3 2 1

விளக்கம்:

A) இரண்டுலக வகைப்பாடு – 1. 1735

B) மூன்றுலக வகைப்பாடு – 2. 1969

C) நான்குலக வகைப்பாடு – 3. 1956

D) ஐந்துலக வகைப்பாடு – 4. 1866

84. எர்னெஸ்ட் ஹெக்கேல் அறிமுகப்படுத்திய மூன்றுலக வகைபாட்டுமுறைகளுல் பொருந்தாததைக் கண்டறி.

A) புரோட்டிஸ்டா

B) மொனிரா

C) பிளாண்டே

D) அனிமாலியா

85. கார்ல் லின்னேயஸ் அறிமுகப்படுத்திய இரண்டுலக வகைப்பாட்டு முறைகளுல் சரியானதைக் கண்டறி.

A) பிளாண்டே

B) அனிமாலியா

C) AB இரண்டும்

D) மேற்கண்ட எதுவுமில்லை

86. கீழ்க்கண்டவற்றுள் கோப்லாண்ட் அறிமுகப்படுத்திய நான்குலக வகைப்பாட்டு முறையில் பொருந்தாததைக் கண்டறி.

A) மொனிரா

B) புரோட்டிஸ்டா

C) பிளாண்டே

D) பூஞ்சைகள்

விளக்கம்: 1956 இல் கோப்லேண்ட் அறிமுகப்படுத்திய நான்குலக பெரும்பிரிவுகள் மொனிரா, புரோட்டிஸ்டா, பிளாண்டே, அனிமேலியா போன்றவைகளாகும்.

87. R.H. விட்டேக்கர் அறிமுகப்படுத்திய ஐந்துலக வகைபாட்டுமுறைகளுல் மூன்றாவது உலகம் எது?

A) மொனிரா

B) புரோட்டிஸ்டா

C) பூஞ்சைகள்

D) பிளாண்டே

விளக்கம்: 1969 இல் R.H. விட்டேக்கர் அறிமுகப்படுத்திய ஐந்துலக வகைபாட்டு உயிரினங்கள் மொனிரா, புரோட்டிஸ்டா, பூஞ்சைகள், பிளாண்டே, அனிமேலியா ஆகியவைகளாகும்.

88. R.H. விட்டேக்கர் உயிரினங்களை கீழ்க்கண்ட எவற்றின் அடிப்படையில் ஐந்து உலகமாக வகைப்படுத்தினார்.

A) செல் அமைப்பு

B) உடல் அமைப்பு

C) உணவூட்ட முறை

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: R.H. விட்டேக்கர் உயிரிகளை அவற்றின் செல் அமைப்பு, உடல் அமைப்பு, உணவூட்ட முறை, இனப்பெருக்கம், இனப்பரிணாமக் குழுத் தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் மொனிரா, புரோட்டிஸ்டா, பூஞ்சைகள், பிளாண்டே, அனிமேலியா என ஐந்து பெரும்பிரிவுகளாகப் பிரித்தார்

89. R.H. விட்டேக்கரின் ஐந்துலக வகைப்பாட்டு முறைகளின் நிறைகளுல் பொருந்தாதது எது.

A) இந்த வகைப்பாடு சிக்கலான செல் அமைப்பு, உடலமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது.

B) உணவூட்டமுறையின் அடிப்படையில் இவ்வகைப்பாடு அமையாதிருப்பது.

C) பூஞ்சைகள் தாவரங்களிலிருந்து பிரித்துத் தனியாக வைக்கப்பட்டுள்ளன.

D) உயிரினங்களுக்கிடையே காணப்படும் இனப்பரிணாம குழுத்தொடர்பினை எடுத்துக்காட்டுகிறது.

விளக்கம்: உணவூட்டமுறையின் அடிப்படையில் இவ்வகைப்பாடு அமைந்துள்ளது.

90. R.H. விட்டேக்கரின் ஐந்துலக வகைபாட்டு முறைப் பற்றிய குறைபாடுகளுல் தவறானதைக் கண்டறி:

1) தற்சார்பு, சார்பூட்ட முறை உயிரினங்கள், செல் சுவருடைய, செல் சுவரற்ற உயிரினங்கள் மொனிரா, புரொட்டிஸ்டா எனும் பெரும்பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.

2) வைரஸ்கள் இந்த வகைப்பாட்டில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்: வைரஸ்கள் இந்த வகைப்பாட்டில் ஒன்றாக சேர்க்கப்படவில்லை.

91. 1990 ஆம் அண்டு கார்ல் வோஸ் அறிமுகப்படுத்திய உயிரினங்களின் மூன்று முக்கிய உயிர்ப்புலங்களுல் அல்லாதது எது.

A) சயனோ பாக்டீரியா

B) பாக்டீரியா

C) ஆர்க்கியே

D) யுகேரியா

விளக்கம்: காரல் வோஸ் மற்றும் அவரது சக ஆய்வாளர்களும் 1990 ஆம் ஆண்டு உயிரினங்களில் மூன்று முக்கிய உயிர்ப்புலங்களை அறிமுகப்படுத்தினர். அவை பாக்டீரியா, ஆர்க்கியே, யுகேரியா என்பவைகளாகும்.

92. 1998 ஆம் ஆண்டு உயிரி உலகத்திற்கு திருத்தப்பட்ட ஆறு பெரும்பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டவர்________

A) காரல் வோஸ்

B) கோப்லேண்ட்

C) தாமஸ் கேவாலியர் – ஸ்மித்

D) விட்டேக்கர்

விளக்கம்: தாமஸ் கேவாலியர் – ஸ்மித்,1998 ஆம் ஆண்டு உயிரி உலகத்திற்கு திருத்தப்பட்ட ஆறு பெரும்பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டார். இதில் மொனிரா என்ற பெரும்பிரிவை ஆர்க்கிபாக்டீரியங்கள், யுபாக்டீரியங்கள் என்று இரண்டாகப் பிரித்தார். அண்மையில் ருகிரோவும் சக ஆய்வாளர்களும் 2015 ஆம் ஆண்டு ஏழு பெரும்பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டனர்.

93. 2015 ஆம் ஆண்டு உயிரி உலகத்திற்கு திருத்தப்பட்ட ஏழு பெரும்பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டவர்_____________

A) காரல் வோஸ்

B) கோப்லேண்ட்

C) தாமஸ் கேவாலியர் – ஸ்மித்

D) ருகிரோ

விளக்கம்: அண்மையில் ருகிரோவும் சக ஆய்வாளர்களும் 2015 ஆம் ஆண்டு ஏழு பெரும்பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டனர். இது தாமஸ் கேவாலியர்-ஸ்மித்தின் ஆறு பெரும்பிரிவு வகைப்பாட்டின் செயல்முறை சார்ந்த விரிவான தொகுப்பாகும். இந்த வகைப்பாட்டின்படி உயிரின் இரண்டு மிகப்பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. (புரோகேரியோட்டா, யுகேரியோட்டா). புரோகேரியோட்டா இரண்டு பெரும்பிரிவுகளாகவும் அதாவது ஆர்க்கிபாக்டீரியா மற்றும் யுபாக்டீரியா எனவும், யுகேரியோட்டாவை புரோட்டோசோவா, குரோமிஸ்டா, பூஞ்சைகள், பிளாண்டே(தாவரங்கள்) மற்றும் அனிமேலியா (விலங்குகள்) எனும் ஐந்து பெரும்பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

94. கீழ்க்கண்டவற்றுள் மொனிரா உலகம் பற்றிய தகவல்களுல் பொருந்தாததைக் கண்டறி:

A) பெரும்பாலானவை ஒரு செல் உயிரினங்கள் அரிதாக பல செல் உயிரினங்கள் காணப்படுகின்றன.

B) செல் சுவர் கிடையாது.

C) தற்சார்பு ஊட்ட முறை மற்றும் சார்பூட்டு ஊட்ட முறை காணப்படுகிறது.

D) இடப்பெயற்ச்சி திறன் உடையவை அல்லது அற்றவை.

விளக்கம்: செல் சுவர் உண்டு.

95. கீழ்க்கண்டவற்றுள் புரோட்டிஸ்டா உலகம் பற்றிய தகவல்களுல் சரியானதைக் கண்டறி:

1) ஒரு சில உயிரினங்களில் செல் சுவர் உண்டு. சில உயிரினங்களில் செல் சுவர் காணப்படுவதில்லை.

2) பிறச்சார்பு ஊட்ட முறை

3) இடப்பெயர்ச்சி திறன் உடையவை அல்லது அற்றவை.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 1 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: தற்சார்பு ஊட்ட முறை

96. கீழ்க்கண்டவற்றுள் பூஞ்சைகள் உலகம் பற்றிய தகவல்களுல் தவறானதைக் கண்டறி:

A) ஒரு செல் மற்றும் பல செல் உயிரினங்களைக் கொண்டது.

B) செல் சுவர் உண்டு. செல்லுலோஸ் அல்லது கைட்டினால் ஆனது.

C) சார்பூட்ட முறை

D) இடப்பெயர்ச்சி திறன் கொண்டது.

விளக்கம்: இடப்பெயர்ச்சி திறன் அற்றவை.

97. கீழ்க்கண்டவற்றுள் பிளாண்டே உலகம் பற்றிய தகவல்களுல் தவறானதைக் கண்டறி:

A) திசு அல்லது உறுப்புகள் கொண்டவை.

B) பொதுவாக செல்சுவர் உண்டு. செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.

C) பிறச்சார்பு ஊட்டமுறை கொண்டது.

D) பெரும்பாலும் இடப்பெயர்ச்சி திறன் அற்றவை.

விளக்கம்: தற்சார்பு ஊட்டமுறை கொண்டது.

98. கீழ்க்கண்டவற்றுள் அனிமேலியா உலகம் பற்றிய தகவல்களுல் தவறானதைக் கண்டறி:

A) திசுக்கள் – உறுப்பு – உறுப்பு மண்டலங்கள் கொண்டவை.

B) செல்சுவர் உண்டு

C) சார்பூட்ட முறை கொண்டவை.

D) பெரும்பாலும் இடப்பெயர்ச்சி திறன் உடையவை.

விளக்கம்: செல்சுவர் கிடையாது.

99. கீழ்க்கண்டவற்றுள் எந்த உலகம் தொல்லுட்கரு உயிரிகளைக் கொண்டது.

A) புரோட்டிஸ்டா

B) பூஞ்சைகள்

C) மொனிரா

D) பிளாண்டே

100. பொருத்துக:

A) மொனிரா – 1. பிரையோஃபைட்கள்

B) புரோட்டிஸ்டா – 2. காளான்கள்

C) பூஞ்சைகள் – 3. சயனோபாக்டீரியா

D) பினாண்டே – 4. பிளாஸ்மோடியம்

A) 1 4 3 2

B) 3 4 2 1

C) 1 2 4 3

D) 4 3 2 1

விளக்கம்:

A) மொனிரா – 1. சயனோபாக்டீரியா

B) புரோட்டிஸ்டா – 2. பிளாஸ்மோடியம்

C) பூஞ்சைகள் – 3. காளான்கள்

D) பினாண்டே – 4. பிரையோஃபைட்கள்

101. கீழ்க்கண்டவற்றுள் விலங்குலகத்துடன் பொருந்தாதது எது.

A) கடற்பஞ்சுகள்

B) டெரிடோஃபைட்கள்

C) முதுகெலும்பு உடையவை

D) முதுகெலும்பற்றவை

102. கீழ்க்கண்டவற்றுள் தாவர உலகத்துடன் பொருந்தாதது எது.

A) பாசிகள்

B) ஜிம்னோஸ்பெர்ம்கள்

C) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

D) ஈஸ்ட்கள்

103. கீழ்க்கண்டவற்றுள் பூஞ்சை உலகத்துடன் பொருந்தாதது எது.

A) ஈஸ்ட்கள்

B) பிரையோஃபைட்கள்

C) காளான்கள்

D) பூஞ்சைகள்

104. கீழ்க்கண்டவற்றுள் மொனிரா உலகத்துடன் பொருந்தாதது எது.

A) ஆக்டினோமைசீட்கள்

B) மைக்கோபிளாஸ்மா

C) டிரைபனோசோமா

D) யூபாக்டீரியா

105. கீழ்க்கண்டவற்றுள் புரோட்டிஸ்டா உலகத்துடன் பொருந்தாதது எது.

A) ஆர்க்கிபாக்டீரியா

B) கிரைசோபைட்கள்

C) டைனோபிளா

D) ஜெல்லேட்கள் சளி

106. ஜிம்னோடினியம் பிரெவி, கோனியலாக்ஸ் டாமரின்ஸிஸ் போன்ற நச்சு பாசிப்பொலிவினால் ஏற்படும் விளைவு___________

A) வெள்ளை அலை

B) சிவப்பு அலை

C) பச்சை அலை

D) வெளிர் சிவப்பு அலை

விளக்கம்: சிவப்பு அலை என்பது டைனோபிளாஜெல்லேட்டுகளான ஜிம்னோடினியம் பிரெவி, கோனியலாக்ஸ் டாமரின்ஸிஸ் போன்ற நச்சு பாசிப்பொலிவினால் ஏற்படும் விளைவாகும்.

107. 1982 ஆம் ஆண்டில் ஃபுளோரிடாவின் மேற்கு கடலோரப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மடியக் காரணமான விளைவு.

A) வெள்ளை அலை

B) பச்சை அலை

C) வெளிர் சிவப்பு அலை

D) சிவப்பு அலை

விளக்கம்: சிவப்பு அலை என்பது டைனோபிளாஜெல்லேட்டுகளான ஜிம்னோடினியம் பிரெவி, கோனியலாக்ஸ் டாமரின்ஸிஸ் போன்ற நச்சு பாசிப்பொலிவினால் ஏற்படும் விளைவாகும். இவ்விளைவு 1982 ஆம் ஆண்டு ஃபளோரிமாவின் மேற்கு கடலோரப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மடியக் காரணமானது.

108. கீழ்க்காண்பவர்களுல் அண்மைக்கால பாக்டீரியயியலின் தோற்றுநராகக் கருதப்படுபவர்_____________

A) கார்ல் வோஸ்

B) தாமஸ் கேவாலியர்

C) ருகிரோ

D) S.G. ஹெர்மன் கோக்

விளக்கம்: ராபர்ட் ஹின்ரிக் ஹெர்மன் கோக் ஜெர்மனி நாட்டைச் சார்ந்த மருத்துவரும், நுண்ணுயிரியியல் வல்லுநரும் ஆவார். இவர் அண்மைக்கால பாக்டீரியயியலின் தோற்றுநராகக் கருதப்படுகிறார்.

109. ராபர்ட் ஹின்ரிக் ஹெர்மன் கோக் என்பவர் கண்டறிந்த நோய்க்காரணிகளுல் அல்லாதது எது.

A) டைபாய்டு

B) கோமாரி நோய்

C) காலரா

D) காசநோய்

விளக்கம்: ராபர்ட் ஹின்ரிக் ஹெர்மன் கோக் ஜெர்மனி நாட்டைச் சார்ந்த மருத்துவரும், நுண்ணுயிரியியல் வல்லுநரும் ஆவார். இவர் அண்மைக்கால பாக்டீரியயியலின் தோற்றுநராகக் கருதப்படுகிறார். இவர் கோமாரி நோய், காலரா, காசநோய் போன்றவைகளுக்கான நோய்க்காரணிகளைக் கண்டுபிடித்தார். தொற்றுதல் எனும் கருத்தை விளக்கிய பின்னர் சோதனை அடிப்படையில் நிரூபித்துக் காட்டினார்.

110. மருத்துவம்/வாழ்வியல் பிரிவிற்கான நோபல் பரிசு S.H. ஹெர்மன் கோக் என்பவருக்கு வழங்கப்பட்ட ஆண்டு.

A) 1900

B) 1903

C) 1905

D) 1907

111. பாலைத் தயிராக்க உதவும் பாக்டீரியா__________

A) பேசில்லஸ் ரமோசஸ்

B) லாக்டோபேசில்லஸ் லாக்டிஸ்

C) பேசில்லஸ் மைக்காய்டஸ்

D) நைட்ரோபாக்டர்

விள்ககம்: லாக்டோபேசில்லஸ் லாக்டிஸ் எனும் பாக்டீரியாவால் பால் தயிராக மாற்றமடைகிறது.

112. மனிதர்களுக்கு டைஃபாய்டு காய்ச்சல்_________எனும் பாக்டீரியத்தால் ஏற்படுகிறது.

A) பேசில்லஸ் பாலிமிக்ஸா

B) லாக்டோபேசில்லஸ் பல்கேரிகஸ்

C) கிளாஸ்ட்டிரிடியம்

D) சால்மோனெல்லா டைஃபி

விளக்கம்: மனிதர்களுக்கு சால்மோனெல்லா டைஃபி என்னும் பாக்டீரியத்தால் டைஃபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே தொல்லுட்கரு கொண்ட பாக்டீரியங்கள் அவைகளின், முறையே நண்பனாகவும், எதிரியாகவும் கருதப்படுகிறது.

113. 1829 ல் பாக்டீரியம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்.

A) டேவிட் H. பெர்ஜி

B) பிரட்ரிக் கிரிஃபித்

C) C.G. எஹ்ரன்பெர்க்

D) ஜோஸ்வா லெடர்பர்க்

விளக்கம்: C.G. எஹ்ரன்பெர்க் பாக்டீரியம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.

114. 1884 ஆம் ஆண்டு சாயமேற்றும் முறையை அறிமுகப்படுத்தியவர்.

A) கிறிஸ்டியன் கிராம்

B) டேவிட் H. பெர்ஜி

C) பிரட்ரிக் கிரிஃபித்

D) C.G. எஹ்ரன்பெர்க்

விளக்கம்: 1884 ஆம் ஆண்டு கிறிஸ்டியன் கிராம் என்பவர் கிராம் சாயமேற்றும் முறையை அறிமுகப்படுத்தினார்.

115. டேவிட் H. பெர்ஜி என்பவர் தன் முதல் பதிப்பான “பெர்ஜி கiயேட்டினை” வெளியிட்ட ஆண்டு__________

A) 1912

B) 1932

C) 1923

D) 1928

விளக்கம்: டேவிட் H. பெர்ஜி “பெர்ஜி கையேட்டின்” முதல் பதிப்பை வெளியிட்டார்.

116. பிரட்ரிக் கிரிஃபித் என்பவர் பாக்டீரியத்தின் மரபணு மாற்றத்தைக் கண்டறிந்த ஆண்டு.

A) 1920

B) 1924

C) 1928

D) 1932

117. கீழ்க்கண்டவர்களுல் 1952 இல் பிளாஸ்மிட்டைக் கண்டறிந்தவர்_______

A) டேவிட் H. பெர்ஜி

B) பிரட்ரிக் கிரிஃபித்

C) C.G. எஹ்ரன்பெர்க்

D) ஜோஸ்வா லெடர்பர்க்

விளக்கம்: 1952 இல் ஜோஸ்வா லெடர்பர்க் என்பவரால் பிளாஸ்மிட் கண்டறியப்பட்டது.

118. பாக்டீரியங்களைப் பற்றி அறியும் பிரிவு__________என அறியப்படுகிறது.

A) வைராலஜி

B) பாக்டீரியாலஜி

C) ஆல்காலஜி

D) பைக்காலஜி

விளக்கம்: பாக்டீரியங்கள் தொல்லுட்கரு உயிரி வகையைச் சார்ந்த ஒரு செல் அமைப்புடைய, அனைத்து இடங்களிலும் பரவியுள்ள நுண்ணுயிரிகளாகும். பாக்டீரியங்களைப் பற்றி அறியும் பிரிவு “பாக்டீரிய இயல்” என அறியப்படுகிறது.

119. 1675 ஆம் ஆண்டு பாக்டீரியங்களை முதன் முதலில் நுண்ணோக்கியின் மூலம் கண்டறிந்தவர்___________

A) டேவிட் H. பெர்ஜி

B) ஆண்டன்வான் லீவன்ஹீக்

C) C.G. எஹ்ரன்பெர்க்

D) ஜோஸ்வா லெடர்பர்க்

விளக்கம்: டச்சு விஞ்ஞானியான ஆண்டன்வான் லீவன்ஹீக் 1675 ஆம் ஆண்டு பாக்டீரியங்களை முதன் முதலில் நுண்ணோக்கியில் கண்டு, அதனை “அனிமல்கியூல்ஸ்” என்று அழைத்தார்.

120. பாக்டீரியங்களை “அனிமல்கியூல்ஸ்” என்று அழைத்தவர்________

A) ஆண்டன்வான் லீவன்ஹீக்

B) டேவிட் H. பெர்ஜி

C) C.G. எஹ்ரன்பெர்க்

D) ஜோஸ்வா லெடர்பர்க்

121. கூற்று (i): சில வகையான பாக்டீரியங்களில் பாக்டீரிய பச்சைய நிறமிகள் காணப்படுவதால் அவை தற்சார்பு ஊட்டமுறையை மேற்கொள்கின்றன. எ.கா. குரோமேஷியம்.

கூற்று (ii): பாக்டீரியங்கள் இரு பிளவுறுதல், அகவித்துகள் உருவாதல் போன்ற முறைகளில் உடல இனப்பெருக்கம் செய்கின்றன.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

122. குடல் மற்றும் இரைப்பை புண்கள்________எனும் கிராம் எதிர் பாக்டீரியத்தால் ஏற்படுகிறது.

A) அசிட்டோபாக்டர் அசிட்டை

B) அசிட்டோபியூட்டிலிக்கம்

C) ஈஸ்டிரிச்சியா கோலை

D) ஹெலிகோபாக்டர் பைலோரி

விளக்கம்: குடல் மற்றும் இரைப்பை புண்கள் ஹெலிகோபாக்டர் பைலோரி எனும் கிராம் எதிர் பாக்டீரியத்தால் ஏற்படுகிறது.

123. _________எனும் பாக்டீரியத்திலிருந்து பெறப்படும் Bt நச்சு, பயிர்களில் பூச்சி எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

A) அசிட்டோபாக்டர் அசிட்டை

B) பேசில்லஸ் துரின்சியன்சிஸ்

C) ஈஸ்டிரிச்சியா கோலை

D) ஹெலிகோபாக்டர் பைலோரி

விளக்கம்: பேசில்லஸ் துரின்சியன்சிஸ் எனும் பாக்டீரியத்திலிருந்து பெறப்படும் Bt நச்சு, பயிர்களில் பூச்சி எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

124. கீழ்க்கண்டவைகளில் பாக்டீரியத்தின் வடிவத்தில் பொருந்தாதது எது.

A) கோல் வடிவம்

B) சுருள் வடிவம்

C) விப்ரியோ வடிவம்

D) காற்புள்ளி வடிவம்

125. கசையிழைகளின் அடிப்படையில் பாக்டீரியங்களின் வடிவத்தில் சரியானதைக் கண்டறி:

A) ஒற்றை கசையிழை

B) ஒரு கற்றைக் கசையிழை

C) இருமுனை கசையிழை

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கசையிழைகளின் அடிப்படையில் ஒற்றைக் கசையிழை, ஒரு கற்றைக் கசையிழை, இருமுனை கசையிழை மற்றும் சுற்று கசையிழை என பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

126. பாக்டீரியங்கள் கீழ்க்கண்ட எந்த படலத்தால் சூழப்பட்டுள்ளது.

A) பாலிசாக்ரைட்கள்

B) பாலிபெப்டைட்

C) AB இரண்டும்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: சில பாக்டீரியங்கள் வழவழப்பான தன்மை கொண்ட பாலிசாக்ரைட்கள் அல்லது பாலிபெப்டைட் அல்லது இரண்டினையும் கொண்ட படலத்தால் சூழப்பட்டுள்ளன.

127. பாக்டீரியத்தில் செல்சுவரோடு மிக நெருக்கமாக அமைந்த கிளைக்கோகேலிக்ஸினாலான அடுக்கு_________என அழைக்கப்படுகிறது.

A) வெளியுறை

B) சைட்டோபிளாசம்

C) கிளைக்கோகேலிக்ஸ்

D) AC இரண்டும்

விளக்கம்: செல்சுவரோடு மிக நெருக்கமாக அமைந்த கிளைக்கோகேலிக்ஸினாலான அடுக்கு வெளியுறை என அழைக்கப்படுகிறது. இவைகள் பாக்டீரியங்களை உலர்தலிலிருந்தும், உயிர் எதிர்பொருட்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவுகின்றன.

128. பாக்டீரிய செல் ஊட்டத்தினைத் தக்க வைத்துக்கொள்ள உதவும் அடுக்கு_________

A) வெளியுறை

B) செல்சுவர்

C) சைட்டோபிளாசம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: வெளியுறையின் ஒட்டும்தன்மை, பாக்டீரியங்களை தாவர வேரின் புறபரப்புகள், மனித பற்கள், திசுக்கள் மீது ஒட்டி வாழவும் உதவுகிறது. மேலும் இந்த அடுக்கு பாக்டீரிய செல் ஊட்டத்தினைத் தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

129. பாக்டீரிய செல்லில் கிளைக்கோகேலிக்ஸ் என்பது________யைக் குறிக்கிறது.

A) வெளியுறை

B) செல்சுவர்

C) சைட்டோபிளாசம்

D) புரோட்டாபிளாசம்

விளக்கம்: பாக்டீரிய செல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை: வெளியுறை, அல்லது கிளைக்கோகேலிக்ஸ், செல்சுவர் மற்றும் சைட்டோபிளாசம் ஆகியவைகளாகும்.

130. பாக்டீரியத்தின் செல்சுவரின் அமைப்புப் பற்றிய தகவல்களுல் பொருந்தாததைக் கண்டறி:

A) பாக்டீரியங்களின் செல்சுவர் மென்மையாது.

B) துகள் ஒத்த தன்மை கொண்டது.

C) இது செல்லிற்கு வடிவத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது.

D) பாக்டீரியங்களின் செல்சுவர் மிகவும் சிக்கலான அமைப்புடையது.

விளக்கம்: பாக்டீரியங்களின் செல்சுவர் கடினமானது.

131. பாக்டீரியங்களில் செல்சுவரானது___________ஆல் ஆனது.

A) பெப்டிடோகிளைக்கான்

B) மியூக்கோபெப்டைட்

C) AB இரண்டும்

D) இவற்றுள் எதுவுமில்லை

விளக்கம்: பாக்டீரியத்தின் செல்சுவரானது பெப்டிடோகிளைக்கான் அல்லது மியூகோபெப்டைட்களால் ஆனது. (n – அசிட்டைல் குளுகோஸமைன்,n – அசிட்டைல் மியுராமிக் அமிலம்,4 அல்லது 5 அமினோ அமிலங்களைக் கொண்ட பெப்டைட் தொடரால் ஆனது). பாக்டீரியங்களின் செல்சுவரில் போரின் பாலிபெப்டைட்கள் மிகுந்து காணப்படுகின்றன. இவை கரைப்பொருட்கள் பரவிச் செல்வதற்கு உதவிபுரிகின்றன.

132. பாக்டீரியத்தில் பிளாஸ்மா சவ்வானது________ஆல் ஆனது.

A) கைட்டின்

B) செல்லுலோஸ்

C) லிப்போபுரதம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பிளாஸ்மாசவ்வு லிப்போபுரதத்தால் ஆனது. இது சிறிய மூலக்கூறுகள், அயனிகள் உட்செல்வதையும், வெளியேறுவதையும் கட்டுப்படுத்துகிறது. சுவாசித்தல் நிகழ்ச்சியில் வளர்சிதை பொருளின் ஆக்ஸிஜனேற்றத்தில் பங்கு பெறும் நொதிகளும், ஒளிச்சேர்க்கையில் ஈடுபடும் நொதிகளும் பிளாஸ்மாசவ்வில் அமைந்துள்ளன.

133. பாக்டீரியத்தின் நுண்ணுறுப்புகளில் ஒளிகடத்தும் தன்மையுடையது________

A) செல்சுவர்

B) பிளாஸ்மா சவ்வு

C) சைட்டோபிளாசம்

D) பிளாஸ்மிட்

விளக்கம்: சைட்டோபிளாசம் அடர்த்தியானது. பகுதி ஒளிகடத்தும் தன்மையுடையது. இதில் ரிபோசோம்களும் இதர செல் உள்ளடக்கப் பொருட்களும் காணப்படுகின்றன. சைட்டோபிளாசத்தில் உட்பொருட்களாக கிளைக்கோஜன், பாலி-டி-ஹைட்ராக்ஸிபியுட்ரேட் துகள்கள், கந்தக துகள்கள், வளிம குமிழ்கள் போன்றவை காணப்படுகின்றன.

134. பாக்டீரியத்தின் குரோமோசோம் பற்றியத் தகவல்களில் தவறானதைக் கண்டறி:

A) பாக்டீரிய குரோமோசோம் வட்டவடிவ, இறுக்கமாக சுருண்ட DNA மூலக்கூறு ஆகும்.

B) இது மெய்யுட்கரு உயிரியில் உள்ளது போல சவ்வினால் சூழப்பட்டு காணப்படுகிறது.

C) இம்மரபியல் பொருள் உட்கரு ஒத்த அமைப்பு அல்லது மரபணுதாங்கி என்று அழைக்கப்படுகிறது.

D) சுருளற்ற நிலையில் ஈ கோலையின் DNA1 mm நீளமுடையதாக இருந்தாலும், அவ்வுயிரினத்திற்குத் தேவையான அனைத்து மரபியல் தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது.

விளக்கம்: இது மெய்யுட்கரு உயிரியில் உள்ளது போல சவ்வினால் சூழப்பட்டு காணப்படுவதில்லை.

135. பாக்டீரியங்களில் காணக்கூடிய ஈரிழைகளாலான, வட்ட வடிவ, சுயமாக பெருக்கமடையும் தன்மை கொண்ட கூடுதல் குரோமோசோம்கள்_________என்று அழைக்கப்படுகிறது.

A) நியூக்ளியோசைட்

B) பிளாஸ்மிட்

C) கேப்சியுல்

D) கைட்டின்

விளக்கம்: பாக்டீரியங்களில் காணக்கூடிய ஈரிழைகளாலான, வட்ட வடிவ, சுயமாக பெருக்கமடையும் தன்மை கொண்ட கூடுதல் குரோமோசோம்கள் பிளாஸ்மிட் என்று அழைக்கப்படுகிறது. இவை வளத்தன்மை, உயிர்எதிர்ப்பொருள் எதிர்ப்புத்தன்மை, வன் உலோகங்களைத் தாங்கும் தன்மை ஆகியவற்றிற்கான மரபணுக்களைப் பெற்றுள்ளன.

136. பாக்டீரியங்களில் காணப்படும் மொத்த DNA வில் பிளாஸ்மிட்கள்______முதல்_________வரை உள்ளன.

A) 0.5% முதல் 1.0% வரை

B) 0.5% முதல் 2.0% வரை

C) 0.1 % முதல் 5.0 % வரை

D) 0.5% முதல் 5.0 % வரை

விளக்கம்: பாக்டீரியங்களில் காணப்படும் மொத்த DNA வில் பிளாஸ்மிட்கள் 0.5 % முதல் 5.0 % வரை உள்ளன. பாக்டீரியங்களில் செல்களில் காணப்படும் பிளாஸ்மிட்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது.

137. பொருத்துக:

நுண்ணுறுப்புகள் பணிகள்

A) செல்சுவர் – 1. வடிவம் மற்றும் பாதுகாப்பு

B) பிளாஸ்மாசவ்வு – 2. ஒளிகடத்தும் தன்மையுடையது

C) சைட்டோபிளாசம் – 3. 0.5 % முதல் 5.0% வரை

D) பிளாஸ்மிட் – 4. லிப்போபுரதம்

A) 1 4 2 3

B) 3 4 2 1

C) 1 2 4 3

D) 4 3 2 1

விளக்கம்:

நுண்ணுறுப்புகள் பணிகள்

A) செல்சுவர் – 1. வடிவம் மற்றும் பாதுகாப்பு

B) பிளாஸ்மாசவ்வு – 2. லிப்போபுரதம்

C) சைட்டோபிளாசம் – 3. ஒளிகடத்தும் தன்மையுடையது

D) பிளாஸ்மிட் – 4. 0.5 % முதல் 5.0 % வரை

138. பாக்டீரியத்தில் மீசோசோம்களின் பணிகளுல் சரியானதைக் கண்டறி:

1) பிளாஸ்மாசவ்வு குறிப்பிட்ட சில இடங்களில் குமிழ்கள், சிறு குழல்கள், மென் அடுக்குகள், போன்ற வடிவங்களில் செல்லில் உள்நோக்கி சில மடிப்புகளை தோற்றுவிக்கின்றன.

2) இவை ஒன்றாக திரண்டு மடிப்புகளை ஏற்படுத்தி தளப்பரப்பை அதிகரிக்கச் செய்து சுவாசித்தலுக்கும், இது பிளவுறுதலுக்கும் உதவி செய்கின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

139. பாக்டீரியங்களில் புரதச்சேர்க்கை நடைபெறும் மையங்களாக செயல்படுவது___________

A) லைசோசோம்

B) ரிபோசோம்

C) சைட்டோபிளாசம்

D) புரோட்டோபிளாசம்

விளக்கம்: ரிபோசோம்கள் புரதச்சேர்க்கை நடைபெறும் மையங்களாகும். ஒரு செல்லில் ரிபோசோம்களின் எண்ணிக்கை 10000 முதல் 15000 வரை வேறுபடுகிறது. ரிபோசோம்கள் 70S வகைகளைச் சார்ந்தது. இவைகள் இரண்டு துணை அலகுகளைப் பெற்றுள்ளன.(50S மற்றும் 30S).

140. பாக்டீரியங்களில் ரிபோசோம்கள்__________வகையைச் சேர்ந்தது.

A) 50S

B) 60S

C) 70S

D) 80S

141. ஏவல் RNA இழையின் மீது பல ரிபோசோம்கள் ஒன்று சேர்ந்து காணப்படுவது___________எனப்படுகிறது.

A) பாலிரிபோசோம்கள்

B) பாலிசோம்கள்

C) AB இரண்டும் சரி

D) மேற்கண்ட எதுவுமில்லை

142. பாக்டீரியங்களில் காணப்படும் கசையிழைப் பற்றிய கருத்துகளில் தவறானதைக் கண்டறி:

A) இடப்பெயர்ச்சி அடையும் சில பாக்டீரியங்களின் செல்சுவரிலிருந்து தோன்றுகின்ற வேறுபட்ட நீளமுடைய எண்ணற்ற மெல்லிய மயிரிழை போன்ற அமைப்புகள் கசையிழைகள் என அழைக்கப்படுகின்றன.

B) இவை 20 – 30 µm விட்டமும்,15µm நீளமும் உடையவை.

C) மெய்யுட்கரு செல்களில் கசையிழைகள் 9 + 2 என்ற அமைப்பில் அமைந்த நுண்ணிழைகளால் ஆனவை.

D) பாக்டீரியங்களில் ஒவ்வொரு கசையிழையும் ஒரே பல நுண்ணிழையால் ஆனது.

விளக்கம்: பாக்டீரியங்களில் ஒவ்வொரு கசையிழையும் ஒரே ஒரு நுண்ணிழையால் மட்டுமே ஆனது.

143. கீழ்க்கண்டக் கூற்றுக்களில் சரியானதைக் கண்டறி:

1) கிராம் எதிர் பாக்டீரியங்களின் செல்சுவரின் மேற்புரத்தில் மயிரிழை போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன.

2) இவை நுண் சிலும்புகள் அல்லது ஃபிம்ரியெ எனப்படும். இவை 0.2 முதல் 20 µm நீளத்தையும் 0.025µmவிட்டத்தையும் உடையன.

3) இயல்பான நுண்சிலும்புகளைத் தவிர பாக்டீரியங்களின் இணைவிற்கு உதவி செய்யும் சிறப்புவகையான பாலியல் நுண்சிலும்புகளும் காணப்படுகின்றன.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 1 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

144. 1884 ஆம் ஆண்டு பாக்டீரியங்களை வேறுபடுத்தும் சாயமேற்றும் முறையை முதன் முதலில் உருவாக்கியவர்.

A) ஆண்டன்வான் லூவன்ஹாக்

B) கிறிஸ்டியன் கிராம்

C) கார்ல் லின்னேயஸ்

D) கோப்லேண்ட்

விளக்கம்: 1884 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டைச் சார்ந்த மருத்துவரான கிறிஸ்டியன் கிராம் என்பவர் பாக்டீரியங்களை வேறுபடுத்தும் சாயமேற்றும்முறையை முதன்முதலில் உருவாக்கினார். இது ஒரு வேறுபடுத்தும் சாயமேற்றும் முறையாகும்.

145. கீழ்க்கண்டவற்றுள் கிராம் நேர் பாக்டீரியங்களின் பண்புகளில் தவறானதைக் கண்டறி:

A) செல்சுவர் 0.015 µm – 0.02 µmஅளவுடன் ஓரடுக்கால் தடித்துக் காணப்படும்.

B) பெப்டிடோகிளைகான் காணப்படுவதால் செல் சுவர் மிகவும் உறுதியற்றது.

C) பெப்டிடோகிளைகான் 80 %, பாலிசாக்கரைட்கள் 20 % டெக்காயிக் அமிலம் ஆகியவற்றைப் பெற்றுள்ளது.

D) வெளிப்புறச் சவ்வு காணப்படுவதில்லை.

விளக்கம்: பெப்டிடோகிளைகான் காணப்படுவதால் செல் சுவர் மிகவும் உறுதியானது.

146. கீழ்க்கண்டவற்றுள் கிராம் நேர் பாக்டீரியங்களின் பண்புகளில் தவறானதைக் கண்டறி:

A) கிராம் நேர் பாக்டீரியாக்களில் பெரிபிளாஸ இடைவெளி காணப்படுகிறது.

B) பெனிசிலினால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.

C) இது மிக சிக்கலான ஊட்ட முறை உடையது.

D) கசையிழைகள் இரண்டு வளையங்களால் ஆன அடித்திரள் உறுப்பு கொண்டது.

விளக்கம்: கிராம் நேர் பாக்டீரியாக்களில் பெரிபிளாஸ இடைவெளி காணப்படுவதில்லை.

147. கீழ்க்கண்டவற்றுள் கிராம் எதிர் பாக்டீரியங்களின் பண்புகளில் தவறானதைக் கண்டறி:

A) செல்சுவரானது 0.0075 µm – 0.012µm அளவுடன் மெல்லிய பல அடுக்குகளால் ஆனது.

B) லிப்போபுரதம், பாலிசாக்கரைட் கலவையால் ஆனதால் செல் சுவர் நெகழ்வுத் தன்மைக் கொண்டது.

C) 3 – 12% பெப்டீடோகிளைகான்கள், பாலிசாக்கரைட்கள், லிப்போபுரதங்களால் ஆனது டெக்காயிக் அமிலம் காணப்படுகிறது.

D) வெளிப்புறச்சவ்வு காணப்படவில்லை

விளக்கம்: வெளிப்புறச்சவ்வு காணப்படுகிறது.

148. கீழ்க்கண்டவற்றுள் கிராம் எதிர் பாக்டீரியங்களின் பண்புகளில் சரியானதைக் கண்டறி:

1) பெரிபிளாஸ இடைவெளி காணப்படவில்லை.

2) பெனிசிலினால் குறைந்த அளவில் பாதிக்கப்படுகிறது.

3) மிக எளிய ஊட்ட முறை உடையது.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 1 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: பெரிபிளாஸ இடைவெளி காணப்படுகிறது.

149. கீழ்க்கண்டவற்றுள் கிராம் எதிர் பாக்டீரியங்களின் பண்புகளில் சரியானதைக் கண்டறி:

1) கசையிழைகள் நான்கு வளையங்களால் ஆன அடித்திரள் உறுப்பு கொண்டது.

2) கொழுப்பு மற்றும் லிப்போபுரதத்தின் அளவு அதிக அளவில் காணப்படுகிறது.

3) லிப்போபாலிசாக்கரைட்கள் காணப்படுவதில்லை.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 1 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: லிப்போபாலிசாக்கரைட்கள் காணப்படுகிறது.

150. கீழ்க்கண்டவற்றுள் கிராம் நேர் பாக்டீரியங்களின் பண்புகளில் தவறானதைக் கண்டறி:

1) கொழுப்பு மற்றும் லிப்போப்புரதமானது அதிக அளவில் காணப்படுகிறது.

2) லிப்போபாலிசாக்கரைட்கள் காணப்படுவதில்லை.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: கொழுப்பு மற்றும் லிப்போப்புரதமானது குறைந்த அளவில் காணப்படுகிறது.

151. கூற்று (i): அக்குவாஸ்பைரில்லம் மேக்னடோடேக்டிகம் எனும் பாக்டீரியத்தினுள் 40 முதல் 50மேக்னடைட்(Fe3O4) துகள்கள் சேர்ந்து சங்கிலிகளாக காணப்படுகின்றன. இவை மேக்னடோசோம்கள் எனப்படுகின்றன.

கூற்று (ii): பாக்டீரியங்கள் இந்த மேக்னடோசோம்களைப் பயன்படுத்தி ஊட்டச்சத்து மிகுந்த படிமங்கள் எளிதில் கண்டறிந்துள்ளன.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

152. பாக்டீரியங்களில் எத்தனை வழிமுறைகளில் சுவாசம் நடைபெறுகிறது.

A) காற்றுச் சுவாசம்

B) காற்றில்லா சுவாசம்

C) வேதியியல் சுவாசம்

D) AB இரண்டும்

விளக்கம்: பாக்டீரியங்களில் இரண்டு வகையான சுவாசித்தல் நிகழ்வுகள் காணப்படுகிறது. (1) காற்று சுவாசித்தல் (2) காற்றில்லா சுவாசித்தல் ஆகியவையாகும்.

153. பொருத்துக:

A) காற்று சுவாசம் – 1. ஸ்ட்ரெப்டோகாக்கஸ்

B) நிலைமாறா காற்று சுவாசம் – 2. மைக்ரோகாக்கஸ்

C) காற்றுணா சுவாசம் – 3. சால்மோனெல்லா

D) நிலைமாறும் காற்றுணா சுவாசம் – 4. கிளாஸ்ட்ரிடியம்

A) 1 4 2 3

B) 3 4 2 1

C) 1 2 4 3

D) 4 3 2 1

விளக்கம்:

A) காற்று சுவாசம் – 1. ஸ்ட்ரெப்டோகாக்கஸ்

B) நிலைமாறா காற்று சுவாசம் – 2. மைக்ரோகாக்கஸ்

C) காற்றுணா சுவாசம் – 3. கிளாஸ்ட்ரிடியம்

D) நிலைமாறும் காற்றுணா சுவாசம் – 4. சால்மோனெல்லா

154. கூற்று (i): காற்றுச் சுவாச முறையில் பாக்டீரியங்களுக்கு இறுதி எலக்ட்ரான் ஏற்பியாக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

கூற்று (ii): காற்றுணா சுவாசித்தல் முறையில் பாக்டீரியங்களின் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் ஆக்ஸிஜன் தேவைப்படுவதில்லை. ஆனால் நொதித்தல் வினைகளின் மூலம் ஆற்றலைப் பெறுகின்றன.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

155. CO2 வைப் பயன்படுத்தி வளரும் பாக்டீரியங்கள்________ஆகும்.

A) அக்குவாஸ்பைரில்லம் மேக்னடோடேக்டிகம்

B) லியுக்கோனாஸ்டாக் சிட்ரோவோரம்

C) கேப்னோஃபிலிக் பாக்டீரியம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கேப்னோஃபிலிக் பாக்டீரியங்கள் CO2 வைப் பயன்படுத்தி வளரும் பாக்டீரியங்கள் ஆகும்.

156. ஊட்டமுறையின் அடிப்படையில் பாக்டீரியங்கள்___________வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

விளக்கம்: ஊட்டமுறையின் அடிப்படையில் பாக்டீரியங்கள் இரண்டு வகைப்படும். அவை: (1) தற்சார்பு ஊட்டமுறை (2) சார்பூட்ட முறை ஆகியவைகளாகும்.

157. கூற்று (i): தங்களுக்கு தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும் பாக்டீரியங்கள் சார்பூட்ட முறை பாக்டீரியங்கள் எனப்படுகின்றன.

கூற்று (ii): தங்களுக்கு தேவையான உணவைப் பிற உயிரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பாக்டீரியங்கள் பிறசார்பு ஊட்ட முறை பாக்டீரியங்கள் எனப்படுகின்றன.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: தங்களுக்கு தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும் பாக்டீரியங்கள் தற்சார்பு ஊட்ட முறை பாக்டீரியங்கள் எனப்படுகின்றன.

158. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க:

கனிம ஒளிச்சார்பு பாக்டீரியங்கள் உதாரணம்

1) பசும் கந்தக பாக்டீரியங்கள் – குளோரோபியம்

2) இளஞ்சிவப்பு கந்தக பாக்டீரியங்கள் – ரோடோஸ்பைரில்லம்

3) இளஞ்சிவப்பு கந்தகம் சாராத பாக்டீரியங்கள் – குரோமேஷியம்

A) 1 2 மட்டும் தவறு

B) 2 3 மட்டும் தவறு

C) 1 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

கனிம ஒளிச்சார்பு பாக்டீரியங்கள் உதாரணம்

1) பசும் கந்தக பாக்டீரியங்கள் – குளோரோபியம்

2) இளஞ்சிவப்பு கந்தக பாக்டீரியங்கள் – குரோமேஷியம்

3) இளஞ்சிவப்பு கந்தகம் சாராத பாக்டீரியங்கள் – ரோடோஸ்பைரில்லம்

159. கூற்று (A): வேதித் தற்சார்பு பாக்டீரியங்களில் ஒளிச்சேர்க்கை நிறமிகள் இல்லாததால் இவை ஒளி ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள இயலாது.

காரணம் (R): அதற்கு பதிலாக இவை கனிம அல்லது கரிமப் பொருட்களிலிருந்து தமக்குத் தேவையான ஆற்றலைப் பெறுகின்றன.

A) கூற்று A காரணம் R இரண்டும் சரி, மேலும் காரணம் R கூற்று A விற்கான சரியான விளக்கமாகும்.

B) கூற்று A காரணம் R இரண்டும் சரி, மேலும் காரணம் R கூற்று A விற்கான சரியான விளக்கமல்ல.

C) கூற்று A சரி காரணம் R தவறு

D) கூற்று A தவறு காரணம் R சரி

160. பொருத்துக:

A) கந்தக பாக்டீரியங்கள் – 1. ஃபெர்ரோபேசில்லஸ் ஃபெர்ரோஆக்சிடன்ஸ்

B) இரும்பு பாக்டீரியங்கள் – 2. தயோபேசில்லஸ் தயோஆக்சிடன்ஸ்

C) ஹைட்ரஜன் பாக்டீரியங்கள் – 3. ஹைட்ரோஜீனோமோனாஸ்

D) நைட்ரஜனாக்க பாக்டீரியங்கள் – 4. நைட்ரோசோமோனாஸ்

A) 1 4 2 3

B) 3 4 2 1

C) 2 1 3 4

D) 4 3 2 1

விளக்கம்:

A) கந்தக பாக்டீரியங்கள் – 1. தயோபேசில்லஸ் தயோஆக்சிடன்ஸ்

B) இரும்பு பாக்டீரியங்கள் – 2. ஃபெர்ரோபேசில்லஸ் ஃபெர்ரோஆக்சிடன்ஸ்

C) ஹைட்ரஜன் பாக்டீரியங்கள் – 3. ஹைட்ரோஜீனோமோனாஸ்

D) நைட்ரஜனாக்க பாக்டீரியங்கள் – 4. நைட்ரோசோமோனாஸ்

161. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) மைக்கோபாக்டீரியம் – சாறுண்ணி வகை பாக்டீரியங்கள்

2) பேசில்லஸ் மைக்காய்டஸ் – ஒட்டுண்ணி வகை பாக்டீரியங்கள்

3) ரைசோபியம் – வேர் முடிச்சி காணப்படும் பாக்டீரியங்கள்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

1) மைக்கோபாக்டீரியம் – ஒட்டுண்ணி வகை பாக்டீரியங்கள்

2) பேசில்லஸ் மைக்காய்டஸ் – சாறுண்ணி வகை பாக்டீரியங்கள்

3) ரைசோபியம் – வேர் முடிச்சி காணப்படும் பாக்டீரியங்கள்

162. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) மீத்தேன் பாக்டீரியங்கள் – மெத்தனோகாக்கஸ்

2) அசிட்டிக் அமில பாக்டீரியங்கள் – அசிட்டோபாக்டர்

3) லாக்டிக் அமில பாக்டீரியங்கள் – லாக்டோபேசில்லஸ்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

163. பொதுவாக அனைத்து பாக்டீரியங்களும்_______வழியில் பாலிலா இனப்பெருக்கம் செய்கின்றன.

A) கொனிடியங்கள் தோற்றுவித்தல்

B) அகவித்து உருவாதல்

C) இரு பிளவுறுதல்

D) பால் இனப்பெருக்கம்

விளக்கம்: பாக்டீரியங்களில் பாலிலா இனப்பெருக்கம் இரு பிளவுறுதல். கொனிடியங்கள் தோற்றுவித்தல், அகவித்து உருவாதல் போன்ற முறைகளில் நடைபெறுகிறது. பொதுவாக அனைத்து பாக்டீரியங்களும் இரு பிளவுறுதல் வழியில் பாலிலா இனப்பெருக்கம் செய்கின்றன.

164. ___________சூழ்நிலையில் பாக்டீரிய செல் இரண்டு சேய் செல்களாகப் பிளவுறுகிறது.

A) வெப்பநிலை

B) சாதகமான

C) சாதகமற்ற

D) குளிர்கால

விளக்கம்: சாதகமான சூழ்நிலையில் பாக்டீரிய செல் இரண்டு சேய் செல்களாகப் பிளவுறுகிறது. உட்கரு ஒத்த பொருள் முதலில் பிளவுற்று, செல்சுவரின் இடையில் ஒரு இறுக்கம் தோன்றுவதன் மூலம் இரண்டு செல்களாகப் பிரிகின்றன.

165. பாக்டீரியங்கள்___________சூழலில் அகவித்துகளைத் தோற்றுவிக்கின்றன.

A) வெப்பநிலை

B) சாதகமான

C) சாதகமற்ற

D) குளிர்கால

விளக்கம்: பாக்டீரியங்கள் சாதகமற்ற சூழலில் அகவித்துகளைத் தோற்றுவிக்கின்றன. பேசில்லஸ் மெகாதீரியம், பேசில்லஸ் ஸ்பெரிகஸ், கிளாஸ்ட்டிரிடியம் டெட்டானி போன்ற பாக்டீரியங்களில் அகவித்துகள் தோன்றுகின்றன. இவை தடித்த சுவருடைய ஓய்வுநிலை வித்துகளாகும். சாதகமான சூழ்நிலையில் இவை முளைத்து பாக்டீரியங்களாக உருவாகின்றன.

166. கீழ்க்கண்டவற்றுள் அகவித்துகள் தோன்றும் பாக்டீரியங்களைக் கண்டறி:

A) பேசில்லஸ் மெகாதீரியம்

B) பேசில்லஸ் ஸ்பெரிகஸ்

C) கிளாஸ்ட்டிரிடியம்

D) மேற்கண்ட அனைத்தும்

167. பாக்டீரியங்களில் மரபணுமறு கூட்டிணைவு கீழ்க்கண்ட எந்த முறைகளில் நடைபெறுகிறது.

A) இணைவு

B) மரபணு மாற்றம்

C) மரபணு ஊடுகடத்தல்

D) மேற்கண்ட அனைத்தும்

168. 1946 ஆம் ஆண்டு பாக்டீரியங்களில் நடைபெறும் இணைவு முறையின் செயல்பாட்டை முதன் முதலில் விளக்கியவர்.

A) J. லெடர்பர்க்

B) எட்வர்டு L. டாட்டம்

C) AB இரண்டும்

D) மேற்கண்ட எவருமில்லை

விளக்கம்: 1946 ஆம் ஆண்டு J. லெடர்பர்க், எட்வர்டு L.டாட்டம் ஆகியோர் பாக்டீரியங்களில் நடைபெறும் இணைவு முறையின் செயல்பாட்டை முதன்முதலில் விளக்கினார். இந்த மரபணு மாற்ற முறையில், கொடுநர் செல் நுண் சிலம்புகளின் மூலமாக ஏற்பி செல்லுடன் இணைகிறது.

169. ஒரு பாக்டீரியத்திலிருந்து மற்றொரு பாக்டீரியத்திற்கு DNA இடமாற்றம் செய்யப்படுவது___________எனப்படுகிறது.

A) இனச்செல் மாற்றம்

B) இனப்பெருக்க மாற்றம்

C) ஜீன் மாற்றம்

D) மரபணு மாற்றம்

விளக்கம்: ஒரு பாக்டீரியத்திலிருந்து மற்றொரு பாக்டீரியத்திற்கு DNA இடமாற்றம் செய்யப்படுவது மரபணு மாற்றம் எனப்படுகிறது.

170. 1928 ஆம் ஆண்டு பிரட்ரிக் கிரிஃபித் எனும் பாக்டீரிய வல்லுநர்________என்ற பாக்டீரியத்தைப் பயன்படுத்தி மரபணு மாற்றத்தை விளக்கினார்.

A) கிளாஸ்ட்டிரிடியம்

B) அசட்டோபாக்டர்

C) ஈஸ்டிரிச்சியா கோலை

D) டிப்ளோகாக்கஸ் நிமோனியா

விளக்கம் 1928 ஆம் ஆண்டு பிரட்ரிக் கிரிஃபித் எனும் பாக்டீரிய வல்லுநர் டிப்ளோகாக்கஸ் நிமோனியா என்ற பாக்டீரியத்தைப் பயன்படுத்தி மரபணு மாற்றத்தை விளக்கினார். இந்த பாக்டீரியம் இரண்டு ரகங்களில் உள்ளது.

171. மரபணு ஊடுகடத்தல் முறையை 1952 ஆம் ஆண்டு ஜிண்டர் மற்றும் லெடர்பர்க் இருவரும் முதன்முதலில்___________பாக்டீரியாவில் கண்டறிந்தனர்.

A) கிளாஸ்ட்டிரிடியம்

B) சால்மோனெல்லா டைஃபிமியுரம்

C) ஈஸ்டிரிச்சியா கோலை

D) டிப்ளோகாக்கஸ் நிமோனியா

விளக்கம்: இம்முறையை 1952 ஆம் ஆண்டு ஜிண்டர் மற்றும் லெடர்பர்க் இருவரும் முதன்முதலில் சால்மோனெல்லா டைஃபிமியுரம் பாக்டீரியாவில் கண்டறிந்தனர். இம்முறையில் பாக்டீரியஃபாஜ் மூலமாக DNA இடமாற்றம் செய்யப்படுகிறது.

172. மரபணு ஊடுகடத்தல் முறையில் பாக்டீரியஃபாஜ் மூலமாக__________இடமாற்றம் செய்யப்படுகிறது.

A) DNA

B) RNA

C) mRNA

D) dRNA

173. புரோபயாட்டிக் தயிர் பற்பசை தயாரிக்க பயன்படுத்தப்படும் பாக்டீரியா__________

A) லாக்டோபேசில்லஸ்

B) பைஃபிடோபாக்டீரியம்

C) AB இரண்டும்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: சந்தையில் புரோபயாட்டிக் பால் பொருட்கள் பற்பசை போன்றவை கிடைக்கின்றன. லாக்டோபேசில்லஸ், பைஃபிடோபாக்டீரியம் போன்றவை புரோபயாட்டிக் தயிர் பற்பசை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

174. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) அம்மோனியாவாக்கம் – நைட்ரோபாக்டர்

2) நைட்ரஜனாக்கம் – பேசில்லஸ் ரமோசஸ்

3) நைட்ரஜனை நிலைப்படுத்துதல் – அஸட்டோபாக்டர்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

A) அம்மோனியாவாக்கம் – பேசில்லஸ் ரமோசஸ்

B) நைட்ரஜனாக்கம் – நைட்ரோபாக்டர்

C) நைட்ரஜனை நிலைப்படுத்துதல் – அஸட்டோபாக்டர்

175. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:

1) அம்மோனியாவாக்கம் – பேசில்லஸ் மைக்காய்டஸ்

2) நைட்ரஜனாக்கம் – நைட்ரசோமோனாஸ்

3) நைட்ரஜனை நிலைப்படுத்துதல் – கிளாஸ்ட்டிரிடியம்

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் சரி

176. கீழ்க்கண்டவற்றுள் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியா_________

A) லாக்டோபேசில்லஸ் லேக்டிஸ்

B) பேசில்லஸ் மெகாதீரியம்

C) லாக்டோபேசில்லஸ் பல்கேரிக்கஸ்

D) ரைசோபியம்

177. பாக்டீரியங்களின் பொருளாதார முக்கியத்துவம் பற்றியக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:

A) தாவரம், விலங்கு போன்றவை இறந்த பின்பு, அவைகளின் உடல்களிலிருக்கும் சிக்கலான புரதங்களை அம்மோனியாவாகவும் பின்பு அம்மோனிய உப்புக்களாகவும் மாற்றுகின்றன.

B) அம்மோனிய உப்புக்களை நைட்ரைட், நைட்ரேட்டாக மாற்றுகின்றன.

C) வளிமண்டல நைட்ரஜனை கனிம நைட்ரஜனாக மாற்றுகின்றன.

D) நைட்ரஜன் அடங்கிய கூட்டுப் பொருட்களை ஆக்ஸிஜனேற்றம் செய்து நைட்ரஜனாக மாற்றுகின்றன.

விளக்கம்: வளிமண்டல நைட்ரஜனை கரிம நைட்ரஜனாக மாற்றுகின்றன.

178. சிறுநீர்க் குழாய் தொடர்பான நோய்களைக் குணப்படுத்த பயன்படும் பாக்டீரிய உயிர்எதிர்ப்பொருள்.

A) ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரைசியஸ்

B) ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஆரியோபேசியன்ஸ்

C) ஸ்ட்ரெப்டோமைசிஸ் வெனிசுலே

D) பேசில்லஸ் லைக்கனிபார்மிஸ்

விளக்கம்: சிறுநீர்க்குழாய் தொடர்பான நோய்கள், எலும்புருக்கி நோய், மூளைச்சவ்வு பாதிப்பு, நிமோனியா காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

179. கக்குவான் இருமல், கண் சம்பந்தப்பட்ட தொற்றுதல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் பாக்டீரியா___________

A) ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரைசியஸ்

B) ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஆரியோபேசியன்ஸ்

C) ஸ்ட்ரெப்டோமைசிஸ் வெனிசுலே

D) பேசில்லஸ் லைக்கனிபார்மிஸ்

180. டைப்பாய்டு காய்ச்சலைக் குணப்படுத்த பயன்படும் பாக்டீரியா__________

A) ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரைசியஸ்

B) ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஆரியோபேசியன்ஸ்

C) ஸ்ட்ரெப்டோமைசிஸ் வெனிசுலே

D) பேசில்லஸ் லைக்கனிபார்மிஸ்

181. மேக நோய்க்கு மருந்தாகப் பயன்படும் பாக்டீரியா________

A) ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரைசியஸ்

B) ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஆரியோபேசியன்ஸ்

C) ஸ்ட்ரெப்டோமைசிஸ் வெனிசுலே

D) பேசில்லஸ் லைக்கனிபார்மிஸ்

182. பொருத்துக:

A) ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரைசியஸ் – 1. பேசிட்ராசின்

B) ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஆரியோபேசியன்ஸ் – 2. குளோரோமைசிட்டிஸ்

C) ஸ்ட்ரெப்டோமைசிஸ் வெனிசுலே – 3. ஆரியோமைசின்

D) பேசில்லஸ் லைக்கனிபார்மிஸ் – 4. ஸ்ட்ரெப்டோமைசின்

A) 1 4 2 3

B) 3 4 2 1

C) 2 1 3 4

D) 4 3 2 1

விளக்கம்:

A) ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரைசியஸ் – 1. ஸ்ட்ரெப்டோமைசின்

B) ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஆரியோபேசியன்ஸ் – 2. ஆரியோமைசின்

C) ஸ்ட்ரெப்டோமைசிஸ் வெனிசுலே – 3. குளோரோமைசிட்டிஸ்

D) பேசில்லஸ் லைக்கனிபார்மிஸ் – 4. பேசிட்ராசின்

183. பாலில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை லாக்டிக் அமிலமாக மாற்றும் பாக்டீரியா___________

A) லாக்டோபேசிலஸ் லாக்டிஸ்

B) லியுக்கோனாஸ்டாக் சிட்ரோவோரம்

C) லாக்டோபேசில்லஸ் பல்கேரிகஸ்

D) AC இரண்டும் சரி

184. பொருத்துக:

A) லியுக்கோனாஸ்டாக் சிட்ரோவோரம் – 1. பாலாடைக் கட்டி

B) லாக்டோபேசில்லஸ் அசிடோபில்லஸ் – 2. வெண்ணெய்

C) லாக்டோபேசில்லஸ் லாக்டிஸ் – 3. தயிர்

D) லாக்டோபேசில்லஸ் பல்கேரிக்கஸ் – 4. யோகார்ட்

A) 1 4 2 3

B) 3 4 2 1

C) 2 1 3 4

D) 4 3 2 1

விளக்கம்:

A) லியுக்கோனாஸ்டாக் சிட்ரோவோரம் – 1. வெண்ணெய்

B) லாக்டோபேசில்லஸ் அசிடோபில்லஸ் – 2. பாலாடைக் கட்டி

C) லாக்டோபேசில்லஸ் லாக்டிஸ் – 3. தயிர்

D) லாக்டோபேசில்லஸ் பல்கேரிக்கஸ் – 4. யோகார்ட்

185. வெல்லப்பாகிலிருந்து பெறப்பட்ட எத்தில் ஆல்கஹாலை நொதித்தல் விளைவு வழி வினிகர் தயாரிக்க உதவும் பாக்டீரியா___________

A) லாக்டோபேசிலஸ் லாக்டிஸ்

B) லியுக்கோனாஸ்டாக் சிட்ரோவோரம்

C) லாக்டோபேசில்லஸ் பல்கேரிகஸ்

D) அசிட்டோபாக்டர் அசிட்டை

186. காற்றுணா சுவாச பாக்டீரியங்கள் வெல்லப்பாகிலிருந்து நொதித்தல் வழி அசிட்டோன், ஆல்கஹால் தயாரிக்க உதவும் பாக்டீரியா_________

A) லாக்டோபேசிலஸ் லாக்டிஸ்

B) கிளாஸ்ட்டிரிடியம் அசிட்டோபியூட்டிலிங்கம்

C) லாக்டோபேசில்லஸ் பல்கேரிகஸ்

D) அசிட்டோபாக்டர் அசிட்டை

187. நார் தரும் தாவரங்களிலிருந்து நார்களைப் பிரித்தெடுக்கப்படும் செயலுக்கு________என்று பெயர்.

A) ஜின்னிங்

B) ரெட்டிங்

C) கிளின்டிங்

D) ஆர்ட்கிளிப்

விளக்கம்: நார் தரும் தாவரங்களிலிருந்து நார்களைப் பிரித்தெடுக்கப்படும் செயலுக்கு நார் பிரித்தல்(Retting) என்று பெயர்.

188. நார் தரும் தாவரங்களிலிருந்து நார்களைப் பிரித்தெடுக்கப்பயன்படும் பாக்டீரியா___________

A) லாக்டோபேசிலஸ் லாக்டிஸ்

B) கிளாஸ்ட்டிரிடியம் அசிட்டோபியூட்டிலிங்கம்

C) லாக்டோபேசில்லஸ் பல்கேரிகஸ்

D) கிளாஸ்ட்டிரிடியம் டெர்ஷியம்

189. மனிதனின் குடற்பகுதியில் உயிர் வாழ்ந்து அதிக அளவு வைட்டமின் K, வைட்டமின் B கூட்டுப்பொருளை உற்பத்தி செய்யும் பாக்டீரியா__________

A) லாக்டோபேசிலஸ் லாக்டிஸ்

B) கிளாஸ்ட்டிரிடியம் அசிட்டோபியூட்டிலிங்கம்

C) ஈஸ்டிரிச்சியா கோலை

D) கிளாஸ்ட்டிரிடியம் டெர்ஷியம்

190. சர்க்கரைப் பொருளிலிருந்து நொதித்தல் மூலம் வைட்டமின் B2 பெறப்பயன்படும் பாக்டீரியா___________

A) கிளாஸ்ட்டிரிடியம் அசிட்டோபியூட்டிலிக்கம்

B) கிளாஸ்ட்டிரிடியம் அசிட்டோபியூட்டிலிங்கம்

C) ஈஸ்டிரிச்சியா கோலை

D) கிளாஸ்ட்டிரிடியம் டெர்ஷியம்

191. நொதித்தல் மூலம் புகையிலை, தேயிலை போன்றவற்றை பதப்படுத்தி நறுமணமும், சுவையையும் மேம்படுத்தப் பயன்படும் பாக்டீரியா________

A) மைக்ரோகோக்கஸ் கேண்டிகன்ஸ்

B) பேசில்லஸ் மெகாதீரியம்

C) கிளாஸ்ட்டிரிடியம் டெர்ஷியம்

D) AB இரண்டும் சரி

192. பொருத்துக:

ஓம்புயிரின் பெயர் நோய்க்காரணி

A) நெல் வெப்பு நோய் – 1. சாந்தோமோனாஸ் சிட்ரி

B) ஆப்பிள் தீவெப்பு நோய் – 2. எர்வினியா அமைலோவோரா

C) கேரட் மென் அழுகல் – 3. எர்வினியா கேரட்டோவோரா

D) எலுமிச்சை திட்டு நோய் – 4. சாந்தோமோனாஸ் ஒரைசே

A) 1 4 2 3

B) 3 4 2 1

C) 2 1 4 3

D) 4 2 3 1

விளக்கம்:

ஓம்புயிரின் பெயர் நோய்க்காரணி

A) நெல் வெப்பு நோய் – 1. சாந்தோமோனாஸ் ஒரைசே

B) ஆப்பிள் தீவெப்பு நோய் – 2. எர்வினியா அமைலோவோரா

C) கேரட் மென் அழுகல் – 3. எர்வினியா கேரட்டோவோரா

D) எலுமிச்சை திட்டு நோய் – 4. சாந்தோமோனாஸ் சிட்ரி

193. சரியான இணையைத் தேர்ந்தெடு:

ஓம்புயிரின் பெயர் நோய்க்காரணி

1) பருத்தி கோண இலைப்புள்ளி நோய் – சாந்தோமோனாஸ் மால்வாஸியேரம்

2) உ.கிழங்கு வளைய அழுகல் நோய் – செபிடோனிக்கஸ்

3) உ.கிழங்கு படைப்புண் நோய் – ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஸ்கேபிஸ்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

194. பொருத்துக:

நோயின் பெயர் நோய்க்காரணி

A) ஆந்தராக்ஸ்(அடைப்பான்) – 1. பேசில்லஸ் ஆந்தராசிஸ்

B) புரூசெல்லோசிஸ் – 2. மைக்கோபாக்டீரியம் போவைஸ்

C) எலும்புருக்கி நோய் – 3. புருசெல்லா அபோர்டஸ்

D) கருங்கால் நோய் – 4. கிளாஸ்ட்டிரிடியம் சான்வி

A) 1 3 2 4

B) 3 4 2 1

C) 2 1 4 3

D) 4 2 3 1

விளக்கம்:

நோயின் பெயர் நோய்க்காரணி

A) ஆந்தராக்ஸ்(அடைப்பான்) – 1. பேசில்லஸ் ஆந்தராசிஸ்

B) புரூசெல்லோசிஸ் – 2. புருசெல்லா அபோர்டஸ்

C) எலும்புருக்கி நோய் – 3. மைக்கோபாக்டீரியம் போவைஸ்

D) கருங்கால் நோய் – 4. கிளாஸ்ட்டிரிடியம் சான்வி

195. பாலி-ஹைட்ராக்ஸி பியுட்டிரேட் எனும் நுண்ணுயிரிசார் நெகிழி_________எனும் பாக்டீரியத்தால் பெறப்படுகிறது.

A) கிளைக்கோபோடியம்

B) மைக்கோரைசோ

C) ராஸ்டோனியா

D) புரூசெல்லோசிஸ்

விளக்கம்: “ராஸ்டோனியா” எனும் பாக்டீரியத்தால்PHB (பாலி-ஹைட்ராக்ஸி பியுட்டிரேட்) எனும் நுண்ணுயிரிசார் நெகிழி பெறப்படுகிறது. இது உயிரி வழி சிதைவடையும் தன்மைகொண்டது.

196. பொருத்துக:

நோயின் பெயர் நோய்க்காரணி

A) காலரா – 1. மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்

B) டைஃபாய்டு – 2. சால்மோனெல்லா டைஃபி

C) எலும்புருக்கி நோய் – 3. மைக்கோபாக்டீரியம் லெப்ரே

D) தொழுநோய் – 4. விப்ரியோ காலரே

A) 1 3 2 4

B) 3 4 2 1

C) 2 1 4 3

D) 4 2 1 3

விளக்கம்:

நோயின் பெயர் நோய்க்காரணி

A) காலரா – 1. விப்ரியோ காலரே

B) டைஃபாய்டு – 2. சால்மோனெல்லா டைஃபி

C) எலும்புருக்கி நோய் – 3. மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்

D) தொழுநோய் – 4. மைக்கோபாக்டீரியம் லெப்ரே

197. பொருத்துக:

நோயின் பெயர் நோய்க்காரணி

A) நிமோனியா – 1. எர்சினியா பெஸ்டிஸ்

B) பிளேக்(கொள்ளை நோய் – 2. டிப்லோக்காக்கஸ் நிமோனியே

C) டிப்தீரியா – 3. கார்னிபாக்டீரியம் டிப்தீரியே

D) டெட்டனஸ் – 4. கிளாஸ்ட்டிரிடியம் டெட்டானி

A) 1 3 2 4

B) 3 4 2 1

C) 2 1 3 4

D) 4 2 1 3

விளக்கம்:

நோயின் பெயர் நோய்க்காரணி

A) நிமோனியா – 1. டிப்லோக்காக்கஸ் நிமோனியே

B) பிளேக்(கொள்ளை நோய் – 2. எர்சினியா பெஸ்டிஸ்

C) டிப்தீரியா – 3. கார்னிபாக்டீரியம் டிப்தீரியே

D) டெட்டனஸ் – 4. கிளாஸ்ட்டிரிடியம் டெட்டானி

198. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

நோயின் பெயர் நோய்க்காரணி

A) உணவு நஞ்சாதல் – டிரிப்போனிமா பேலிடம்

B) மேக நோய் – கிளாஸ்ட்டிரிடியம் போட்டுலினம்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:

நோயின் பெயர் நோய்க்காரணி

A) உணவு நஞ்சாதல் – கிளாஸ்ட்டிரிடியம் போட்டுலினம்

B) மேக நோய் – டிரிப்போனிமா பேலிடம்

199. ஆர்க்கிபாக்டீரியங்கள் பற்றிய தகவல்களில் தவறானதைக் கண்டறி:

A) இவை பழமையான தொல்லுட்கரு உயிரிகளாகும்.

B) மிக கடுமையான சூழ்நிலைகளாகிய வெப்ப ஊற்றுகள், அதிக உப்புத்தன்மை, குறைந்த pH போன்ற சூழ்நிலைகளில் வாழ்பவை.

C) பெரும்பாலும் வேதிய பிறசார்பு ஊட்டமுறையைச் சார்ந்தவை.

D) இத்தொகுப்பு உயிரினங்களின் செல்சவ்வில் கிளிசரால், ஐசோஃபுரோபைல் ஈதர்கள் காணப்படுவது தனிச் சிறப்பாகும்.

விளக்கம்: பெரும்பாலும் வேதிய தற்சார்பு ஊட்டமுறையைச் சார்ந்தவை.

200. சயனோபாக்டீரியங்கள் அல்லது நீலப்பசும்பாசிகள் கால்சியம் கார்பனேட்டுடன் பிணைந்து தோன்றும் கூட்டமைப்புகளின் படிவிற்கு__________என்று பெயர்.

A) கிளைக்கோலைட்

B) ஸ்ட்ரோமட்டோபைட்

C) ஸ்ட்ரோமட்டோலைட்

D) ஸ்ட்ரெப்டோமைட்

விளக்கம்: சயனோபாக்டீரியங்கள் அல்லது நீலப்பசும்பாசிகள் கால்சியம் கார்பனேட்டுடன் பிணைந்து தோன்றும் கூட்டமைப்புகளின் படிவிற்கு ஸ்ட்ரோமட்டோலைட்கள் என்று பெயர்.

201. சயனோபாக்டீரியாவானது புவியியல் கால அளவையிலிருந்து____________ஆண்டுகள் பழமையானவையாக கருதப்படுகிறது.

A) 2.7 மில்லியன்

B) 3.7 மில்லியன்

C) 4.7 பில்லியன்

D) 2.7 பில்லியன்

விளக்கம்: புவியியல் கால அளவையிலிருந்து இவைகள் 2.7 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என அறியப்படுகின்றன. தொல்லுயிர் எச்சத்தில் சயனோபாக்டீரியங்கள் மிகையாக உள்ள பதிவிலிருந்து இவை வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவை உயர்த்தின என்பதை அறியமுடிகிறது.

202. மிகவும் பிரபலமாக நீலம்பசும்பாசி அல்லது சயனோஃபைசி என அறியப்படுவது________

A) பாக்டீரியா

B) நாஸ்டாக்

C) அனபீனா

D) சயனோபாக்டீரியா

விளக்கம்: சயனோபாக்டீரியங்கள் பிரபலமாக நீலப்பசும்பாசி அல்லது சயனோஃபைசி என அறியப்படுகின்றன. ஒளிச்சேர்க்கையில் ஈடுபடும் தொல்லுட்கரு உயிரிகளான இவைகள் பரிணாமப் பதிவேடுகளின்படி மிகப் பழமையான உயிரிகள் என்றும், பல வகை வாழ்விடங்களில் வாழவல்லன எனவும் தெரிகிறது.

203. சூடோமோனாஸ் பூடிடா எனும் மரபியல் மாற்றத்திற்கு உட்பட்ட மீயுயிரி________யை சிதைவுறச் செய்யும் திறன் வாய்ந்தவை ஆகும்.

A) கார்பன்

B) ஹைட்ரோகார்பன்

C) ஹைட்ரஜன்

D) நைட்ரோகார்பன்

விளக்கம்: சூடோமோனாஸ் பூடிடா எனும் மரபியல் மாற்றத்திற்கு உட்பட்ட மீயுயிரி ஹைட்ரோகார்பனை சிதைவுறச் செய்யும் திறன் வாய்ந்தவை ஆகும்.

204. “புரூட்டின்” என்பது கீழ்க்கண்ட எந்த பாக்டீரியத்திலிருந்து பெறப்படும் ஒரு செல் புரதமாகும்.

A) மெத்திலோஃபில்லஸ்

B) மெத்திலோடிராபஸ்

C) மெத்திலோஹைட்ரஸ்

D) AB இரண்டும் சரி

205. தாவரங்களில் நுன்கழலை நோய்___________என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

A) மெத்தனோபாக்டீரியம்

B) மெத்திலோடிராபஸ்

C) மெத்திலோஃபில்லஸ்

D) அக்ரோபாக்டீரியம் டுமிபேசியன்ஸ்

விளக்கம்: தாவரங்களில் நுன்கழலை நோய் அக்ரோபாக்டீரியம் டுமிபேசியன்ஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. கழலைகளை தூண்டச்செய்யும் இதன் உள்ளார்ந்த தன்மை மரபியல் தொழில்நுட்பத்தில் விரும்பத்தக்க மரபணுவை எடுத்துச் செல்ல உதவுகிறது.

206. _________என்ற வெப்பநாட்டமுடைய, கிராம் எதிர் வகை பாக்டீரியம் உற்பத்தி செய்யும் டாக் பாலிமெரேஸ் என்ற முக்கிய நொதி பலபடியாக்க தொடர்வினையில் பயன்படுத்தப்படுகிறது.

A) மெத்தனோபாக்டீரியம்

B) தெர்மஸ் அக்குவாட்டிகஸ்

C) மெத்திலோஃபில்லஸ்

D) அக்ரோபாக்டீரியம் டுமிபேசியன்ஸ்

விளக்கம்: தெர்மஸ் அக்குவாட்டிகஸ் என்ற வெப்பநாட்டமுடைய, கிராம் எதிர் வகை பாக்டீரியம் உற்பத்தி செய்யும் டாக் பாலிமெரேஸ் என்ற முக்கிய நொதி பலபடியாக்க தொடர்வினையில் பயன்படுத்தப்படுகிறது.

207. _________பாக்டீரியம் உயிரிவளி உற்பத்திச் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

A) மெத்தனோபாக்டீரியம்

B) தெர்மஸ் அக்குவாட்டிகஸ்

C) மெத்திலோஃபில்லஸ்

D) அக்ரோபாக்டீரியம் டுமிபேசியன்ஸ்

விளக்கம்: மெத்தனோபாக்டீரியம் உயிரிவளி உற்பத்திச் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. ஹாலோபாக்டீரியம் மிகக் கடுமையான சூழலில் அதிக உப்புத்தன்மையில் வாழும் பாக்டீரியம், இது பீட்டா கரோட்டீன் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

208. கீழ்க்கண்டவற்றுள் பீட்டா கரோட்டான் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் பாக்டீரியா_________

A) மெத்தனோபாக்டீரியம்

B) தெர்மஸ் அக்குவாட்டிகஸ்

C) ஹாலோபாக்டீரியம்

D) அக்ரோபாக்டீரியம் டுமிபேசியன்ஸ்

209. _________என்னும் சயனோபாக்டீரியம் கடலின் சிவப்புநிறத்திற்கு காரணமாகிறது.

A) டிரைக்கோடெஸ்மியம் எரித்ரேயம்

B) தெர்மஸ் அக்குவாட்டிகஸ்

C) ஹாலோபாக்டீரியம்

D) அக்ரோபாக்டீரியம் டுமிபேசியன்ஸ்

விளக்கம்: டிரைக்கோடெஸ்மியம் எரித்ரேயம் என்னும் சயனோபாக்டீரியம் கடலின் சிவப்புநிறத்திற்கு காரணமாகிறது. நாஸ்டாக் அனபீனா சிற்றினங்கள் சைகஸின் பவளவேரிலும், நீர்வாழ் பெரணியான அசோலாவிலும், ஒருங்குயிரி வாழ்க்கையில் ஈடுபட்டு, நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன.

210. சைகஸின் பவளவேரிலும், நீர்வாழ் பெரணியான அசோலாவிலும், ஒருங்குயிரி வாழ்க்கையில் ஈடுபட்டு, நைட்ரஜனை நிலைப்படுத்துவது_______

A) அனபீனா

B) நாஸ்டாக்

C) ரைசோபியம்

D) AB இரண்டும்

211. லைக்கென்களின் உடலத்தில் பல உறுப்பினர்களாக வாழ்பவை_________

A) கிளியோகாப்சா

B) நாஸ்டாக்

C) சைட்டோனீமா

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கிளியோகாப்சா, நாஸ்டாக், சைட்டோனீமா போன்றவை லைக்கன்களின் உடலத்தில் பல உறுப்பினர்களாக(ஒளி உயிரிகளாக) வாழ்கின்றன.

212. சயனோபாக்டீரியங்கள் பற்றியச் சிறப்பியல்புகளுல் பொருந்தாதது எது.

A) இந்தத் தொகுப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் தொல்லுட்கரு உயிரிகளாகவும், நகரும் இனப்பெருக்க அமைப்புகள் அற்று காணப்படுகின்றன.

B) குரூக்காக்கஸ் ஒரு கூட்டமைப்பிலும், கிளியோகாப்சா ஒரு செல் உடலமைப்பிலும், நாஸ்டாக் இழை வடிவிலும் காணப்படுகிறது.

C) சில சிற்றினங்களில் வழுக்கு நகர்வு இயக்கம் காணப்படுகிறது. (ஆசில்லடோரியா).

D) புரோட்டோபிளாசத்தின் மையப் பகுதி சென்ட்ரோபிளாசம் எனவும், விளிம்புப் பகுதி வண்ணத்தாங்கிகள் கொண்டு குரோமோபிளாசம் எனவும் வேறுபட்டுள்ளது.

விளக்கம்: குரூக்காக்கஸ ஒரு செல் உடலமைப்பிலும்,கிளியோகாப்சா கூட்டமைப்பிலும், நாஸ்டாக் இழை வடிவிலும் காணப்படுகிறது.

213. சயனோபாக்டீரியங்கள் பற்றியச் சிறப்பியல்புகளுல் பொருந்தாதது எது.

A) இவை ஒளிச்சேர்க்கை நிறமிகளான C-பைக்கோசயனின்,C-பைக்கோஎரித்ரின் போன்றவை மிக்சோஸாந்தின், மிக்சோஸாந்தோபில்லுடன் இணைந்து காணப்படுகின்றன.

B) சேமிப்பு உணவாகச் சயனோஃபைசிய தரசம் காணப்படுகிறது.

C) சில சிற்றினங்களில் அளவில் சிறிய நிறமற்ற செல்கள் உடலத்தின் நுனி அல்லது இடைப்பகுதியில் காணப்படுகின்றன. இவை ஹெட்டிரோசிஸ்டுகள் ஆகும். இவவமைப்பு ஹைட்ரஜனை நிலைப்படுத்த உதவுகின்றன.

D) இவை தழை உடல இனப்பெருக்கம் வழி மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன. உறக்க நகராவித்துகள், ஹார்மோன்கள், பிளவுறுதல், அகவித்துகள் போன்றவற்றைத் தோற்றுவிக்கின்றன.

விளக்கம்: சில சிற்றினங்களில் அளவில் பெரிய நிறமற்ற செல்கள் உடலத்தின் நுனி அல்லது இடைப்பகுதியில் காணப்படுகின்றன. இவை ஹெட்டிரோசிஸ்டுகள் ஆகும். இவவமைப்பு நைட்ரஜனை நிலைப்படுத்த உதவுகின்றன.

214. கூற்று (i): சயனோ பாக்டீரியங்கள் உயிரினங்களின் உடலத்தைச் சூழ்ந்து மியுசிலேஜ் படலம் காணப்படுவது சிறப்புப்பண்பாகும். இக்காரணத்தினால் இவைகள் மிக்ஸோஃபைசி எனவும் அறியப்படுகின்றன.

கூற்று (ii): இவற்றிள் பாலினப்பெருக்கம் நடைபெறுகின்றன.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: இவற்றிள் பாலினப்பெருக்கம் காணப்படுவதில்லை.

215. அபனோகேப்சா மான்டானா எனும் நீலப்பசும்பாசி__________ன் மேல் உல்லாச பயணம் மேற்கொள்கிறது.

A) முயல்

B) நாய்

C) யானை

D) துருவக்கரடி

விளக்கம்: ஒரு தொல்லுட்கருஉயிரி துருவக்கரடி மேல் உல்லாசப் பயணம் மேற்கொள்கிறது. (அபனோகேப்சா மான்டானா எனும் நீலப்பசும்பாசி துருவக்கரடியின் உரோமங்களின் மேல் வளர்கிறது).

216. மைக்கோபிளாஸ்மா அல்லது மொல்லிகியுட்களின் அளவு_______

A) 0.1 – 1.0 µm

B) 0.1 – 0.5µm

C) 0.1 – 2.0 µm

D) 0.1 – 3.0 µm

விளக்கம்: மைக்கோபிளாஸ்மா அல்லது மொல்லிகியுட்கள் மிகச் சிறிய (0.1 – 0.5 µm) பல்வகை உருவமுடைய கிராம் எதிர் நுண்ணுயிரிகளாகும்.

217. கீழ்க்கண்டவற்றுள் மைக்கோபிளாஸ்மா பற்றியக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:

A) நக்கார்டும், சக ஆய்வாளர்களும் 1898-ஆம் ஆண்டு போவின் புளுரோ நிமோனியாவால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் நுரையீரல் திரவத்திலிருந்து தனிமைப்படுத்தினர்.

B) இவைகளில் செல்சுவர் காணப்படுகின்றன. மேலும் வளர் ஊடகத்தில் “பொரித்த முட்டை” போன்று காட்சியளிக்கின்றன.

C) மேலும் உண்மையான பாக்டீரியங்களின் DNA– வை ஒப்பிடும் போது, குறைந்த குவனைன், சைட்டோசைன் பெற்றுள்ளன.

D) இவை விலங்கு மற்றும் தாவரத்தில் நோயை ஏற்படுத்துகின்றன.

விளக்கம்: இவைகளில் செல்சுவர் காணப்படுவதில்லை. மேலும் வளர் ஊடகத்தில் “பொரித்த முட்டை” போன்று காட்சியளிக்கின்றன.

218. பொருத்துக:

A) கத்தரி – 1. துடைப்பம் நோய்

B) லெகூம் வகை தாவரம் – 2. சிறிய இலை

C) இலவங்கம் – 3. கூர்நுனி நோய்

D) சந்தனம் – 4. இலைக்கொத்து நோய்

A) 1 3 2 4

B) 3 4 2 1

C) 2 1 4 3

D) 4 2 1 3

விளக்கம்:

A) கத்தரி – 1. சிறிய இலை

B) லெகூம் வகை தாவரம் – 2. துடைப்பம் நோய்

C) இலவங்கம் – 3. இலைக்கொத்து நோய்

D) சந்தனம் – 4. கூர்நுனி நோய்

219. கீழ்க்கண்டவற்றுள் கதிர் பூஞ்சைகள் என்றழைக்கப்படுவது_________

A) ஆக்டினோமைசீட்கள்

B) ஆக்டினோபாக்டீரியங்கள்

C) ஸ்ட்ரெப்டோமைசிஸ்

D) AB இரண்டும்

விளக்கம்: ஆக்னோமைசீட்கள் அல்லது ஆக்டினோபாக்டீரியங்கள், மைசீலியம் போன்ற வளர்ச்சியைப் பெற்றுள்ளதால் இவைகள் ‘கதிர் பூஞ்சைகள்’ என அழைக்கப்படுகின்றன. இவை காற்றுணா அல்லது நிலைமாறும் காற்றுணா சுவாச கிராம் நேர் நுண்ணுயிரிகளாகும். இவைகள் நிமிர்ந்த மைசீலியத்தைத் தோற்றுவிப்பதில்லை.

220. கூற்று (i): ஃபிரான்கியா எனும் ஒருங்குயிரி ஆக்டினோபாக்டீரியம் வேர் முடிச்சுகளை உருவாக்கி, லெகூம் அல்லாத தாவரங்களான அல்னஸ் மற்றும் கேசுரைனா தாவரங்களில் ஹைட்ரஜனை நிலைப்படுத்துகிறது.

கூற்று (ii): இவை பல செல்களுடைய வித்தகங்களை உருவாக்குகின்றன. ஆக்டினோமைசீட்ஸ் போவிஸ் கால்நடைகளின் வாய் பகுதியில் வளர்ந்து கழலைத் தாடை நோயை ஏற்படுத்துகிறது.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

221. மழைக்குப்பின் மண்வாசன ஏற்பட காரணமான பாக்டீரியம்___________

A) மெத்தனோபாக்டீரியம்

B) தெர்மஸ் அக்குவாட்டிகஸ்

C) ஹாலோபாக்டீரியம்

D) ஸ்ட்ரெப்டோமைசிஸ்

விளக்கம்: ஸ்ட்ரெப்டோமைசிஸ் மண்ணில் வாழும் மைசீலியத்தை உருவாக்கும் ஒரு ஆக்டினோபாக்டீரியம் ஆகும். இவை மழைக்குப்பின் மண்வாசன ஏற்பட காரணமாகிறது. இதற்கு “ஜியோஸ்மின்” எனும் எளிதில் ஆவியாகக்கூடிய கூட்டுப்பொருள் காரணமாகும்.

222. ஆக்டினோபாக்டீரியம் பேரினத்தில் உள்ள உயிர்எதிர்ப்பொருட்கள்__________

A) ஸ்ட்ரெப்டோமைசின்

B) குளோரம்ஃபெனிகால்

C) டெட்ராசைக்கிள்

D) மேற்கண்ட அனைத்தும்

223. அலெக்சாண்டர் ஃபிளமிங் என்பவரால் பெனிசிலின் கண்டறியப்பட்ட ஆண்டு__________

A) 1920

B) 1924

C) 1928

D) 1932

விளக்கம்: 1928 ஆம் ஆண்டு பெனிசிலின் அலெக்சாண்டர் ஃபிளமிங் என்பவரால் கண்டறியப்பட்டது. மருத்துவ உலகில் ஒரு தற்செயல் நிகழ்வாகும். இரண்டாம் உலகப் போர் வரலாற்று நிகழ்வின் போது போர் வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகப் பெனிசிலினை மஞ்சள் நிறப் பொடியாகப் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று குறிப்புள்ளது.

224. பெனிசிலினை கண்டறிந்ததற்காக 1945 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்___________

A) அலெக்சாண்டர் ஃபிளமிங்

B) எர்னஸ்ட் போரிஸ்

C) சர் ஹோலார்ட் வால்ட்டர் ஃபுளோரே

D) மேற்கண்ட அனைத்தும்

225. 1729 இல் வித்து வளர்ப்பு சோதனை செய்தவர்_________

A) P.A. மைச்சிலி

B) பாண்டானா

C) C.H. ப்பிளாக்கிலி

D) A.F. ப்ளாக்ஸ்லி

விளக்கம்: 1729 ஆம் ஆண்டு P.A. மைச்சிலி வித்து வளர்ப்புசோதனை செய்தார்.

226. பூஞ்சைகள் தாவரங்களில் நோய் ஏற்படுத்தும் என்பதை நிரூபித்தவர்.

A) P.A. மைச்சிலி

B) பாண்டானா

C) C.H. ப்பிளாக்கிலி

D) A.F. ப்ளாக்ஸ்லி

விளக்கம்: 1767 இல் பாண்டானா பூஞ்சைகள் தாவரங்களில் நோய் ஏற்படுத்தும் என்பதை நிரூபித்தார்.

227. மனிதர்களில் பூஞ்சைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதை நிரூபித்தவர்.

A) P.A. மைச்சிலி

B) பாண்டானா

C) C.H. ப்பிளாக்கிலி

D) A.F. ப்ளாக்ஸ்லி

விளக்கம்: 1873C.H. ப்பிளாக்கிலி மனிதர்களில் பூஞ்சைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதை நிரூபித்தார்.

228. 1904 ஆம் ஆண்டு பூஞ்சைகளில் மாற்று உடலத்தன்மையை கண்டறிந்தவர்_________

A) P.A. மைச்சிலி

B) பாண்டானா

C) C.H. ப்பிளாக்கிலி

D) A.F. ப்ளாக்ஸ்லி

விளக்கம்: 1904 இல் A.F. ப்ளாக்ஸ்லி பூஞ்சைகளில் மாற்று உடலத்தன்மையை கண்டறிந்தார்.

229. பூஞ்சையில் பாலினை ஒத்தத்தன்மையை கண்டறிந்தவர்_________

A) P.A. மைச்சிலி

B) பான்டிகோர்

C) ரோப்பர்

D) BC இரண்டும்

விளக்கம்: 1952 இல் பான்டிகோர்வோவும் ரோப்பரும் இணைந்து பாலினை ஒத்தத்தன்மையை கண்டறிந்தவர்.

230. “பூஞ்சை” என்ற இலத்தீன் மொழிச் சொல்லுக்கு_______என்று பொருள் ஆகும்.

A) மரம்

B) குடை

C) காளான்

D) குட்டித்திசு

விளக்கம்: “பூஞ்சை” என்ற சொல் லத்தீன் மொழி வழிவந்த சொல்லாகும். இதற்கு “காளான்” என்று பொருள். பூஞ்சைகள் எங்கும் பரவிக் காணப்படுகின்ற, மெய்யுட்கரு கொண்ட பச்சையமற்ற, பிறசார்பூட்ட உயிரிகளாகும். இவை ஒரு செல் அல்லது பல செல்களால் ஆனது.

231. பூஞ்சைகள் பற்றிய படிப்பிற்கு________என்று பெயர்.

A) ஆல்காலஜி

B) பைக்காலஜி

C) வைராலஜி

D) மைக்காலஜி

விளக்கம்: பூஞ்சைகள் பற்றிய படிப்பானது “பூஞ்சையியல்” (மைக்காலஜி) என அறியப்படுகிறது. (கிரேக்கம் – மைக்கஸ் = காளான், லோகோஸ் = படிப்பு).

232. கீழ்க்கண்டவர்களுல் பூஞ்சையியலைத் தோற்றுவித்தவராகக் கருதப்படுபவர்_________

A) அலெக்சாண்டர் ஃபிளமிங்

B) எர்னஸ்ட் போரிஸ்

C) P.A. மைச்சிலி

D) சர் ஹோலார்ட் வால்ட்டர்

233. இந்தியப் பூஞ்சையியலின் தந்தை என்றழைக்கப்படுபவர்__________

A) E.J. பட்லர்

B) எர்னஸ்ட் போரிஸ்

C) P.A. மைச்சிலி

D) சர் ஹோலார்ட் வால்ட்டர்

விளக்கம்: E.J. பட்லர் இந்தியப் பூஞ்சையியலின் தந்தை ஆவார். இவரே பீகாரில் உள்ள பூசா என்ற இடத்தில் இம்ப்பீரியல் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். இதுவே பிறகு புதுதில்லிக்கு மாற்றப்பட்டு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம்(IARI) என்ற பெயரில் அறியப்படுகிறது.

234. E.J. பட்லர் என்பவரால் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் இம்ப்பீரியல் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்டது.

A) ஆந்திரபிரதேசம்

B) தமிழ்நாடு

C) பீகார்

D) குஜராத்

235. பீகாரில் நிறுவப்பட்ட இம்ப்பீரியல் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் பின்பு எங்கு மாற்றப்பட்டது.

A) பூசா

B) புதுடெல்லி

C) கொல்கத்தா

D) மும்பை

236. 1918 ஆம் ஆண்டு இந்திய தாவர நோய்களைத் தொகுத்து “பூஞ்சை மற்றும் தாவர நோய்கள்” என்ற பெயரில் புத்தகத்தை வெளியிட்டவர்_______

A) எர்னஸ்ட் போரிஸ்

B) P.A. மைச்சிலி

C) சர் ஹோலார்ட் வால்ட்டர்

D) E.J. பட்லர்

விளக்கம்: E.J. பட்லர்1918 ஆம் ஆண்டு இந்திய தாவர நோய்களைத் தொகுத்துப் “பூஞ்சை மற்றும் தாவர நோய்கள்” என்ற பெயரில் புத்தகத்தை வெளியிட்டார்.

237. கீழ்க்கண்டவற்றுள் பூஞ்சைகளின் பொதுப்பண்புகளுல் சரியாகப் பொருந்தாதது எது.

1) பெரும்பாலான பூஞ்சைகளின் உடலம் கிளைத்த இழை போன்ற கைட்டினால் ஆனது.

2) எண்ணற்ற ஹைஃபாக்கள் இணைந்து மைசீலியத்தை உருவாக்குகின்றன.

3) பூஞ்சைகளின் செல்சுவரில் ஹைபாக்கள் எனும் பாலிசாக்கரைட்களாலும் மற்றும் பூஞ்சை செல்லுலோஸால் ஆனது.

A) 1 2 மட்டும் தவறு

B) 2 3 மட்டும் தவறு

C) 1 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: பெரும்பாலான பூஞ்சைகளின் உடலம் கிளைத்த இழை போன்ற ஹைபாக்களால் ஆனது. எண்ணற்ற ஹைஃபாக்கள் இணைந்து மைசீலியத்தை உருவாக்குகின்றன. பூஞ்சைகளின் செல்சுவரில் கைட்டின் எனும் பாலிசாக்கரைட்களாலும் மற்றும் பூஞ்சை செல்லுலோஸால் ஆனது.

238. பூஞ்சைகளில் ஹைஃபாக்கள் தடுப்புச் சுவரற்றும், எண்ணற்ற உட்கருக்களைக் கொண்டும் காணப்படுவது__________என்று அறியப்படுகிறது.

A) பல்உட்கரு மைசீலியம்

B) பல்வெளிக்கரு மைசீலியம்

C) பல்உட்கரு ஹைஃபாக்கள்

D) பல்வெளிக்கரு ஹைஃபாக்கள்

விளக்கம்: பூஞ்சைகளில் ஹைஃபாக்கள் தடுப்புச் சுவரற்றும், எண்ணற்ற உட்கருக்களைக் கொண்டும் காணப்படுவது பல்உட்கரு மைசீலியம் என்று அறியப்படுகிறது. எ.கா. அல்புகோ, மேம்பாடடைந்த வகுப்புப் பூஞ்சைகளில் ஹைஃபாக்களின் செல்களுக்கிடையே தடுப்புச்சுவர் காணப்படுகிறது. எ.கா. ஃபியுசேரியம்.

239. கூற்று (i): மைசீலியத்தில் காணக்கூடிய ஹைஃபாக்கள் நெருக்கமின்றியோ அல்லது நெருக்கமாகவோ பிணைந்து பூஞ்சை திசுக்களை உருவாக்குகிறது. இது பிளக்டங்கைமா என்று அழைக்கப்படுகிறது.

கூற்று (ii): அவை புரோசங்கைமா, போலியான பாரங்கைமா ஆகும். புரோசங்கைமாவில் ஹைஃபாக்கள் நெருக்கமின்றியும், ஒன்றோடொன்று இணைப்போக்கான அமைப்பிலும் உள்ளன. போலியான பாரங்கைமாவில் ஹைஃபாக்கள் நெருக்கமாக அமைவதோடு மட்டுமின்றி தனித்தன்மையை இழந்தும் காணப்படுகின்றன.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

240. பொருத்துக:

பாலிலா இனப்பெருக்க முறைகள் உதாரணம்

A) இயங்குவித்துகள் – 1. ஈஸ்ட்

B) கொனிடியங்கள் – 2. எரிசைஃபி

C) ஆய்டிய வித்துகள் – 3. ஆஸ்பெர்ஜில்லஸ்

D) பிளவுறுதல் – 4. கைட்ரிடுகள்

A) 1 3 2 4

B) 3 4 2 1

C) 2 1 4 3

D) 4 3 2 1

விளக்கம்:

பாலிலா இனப்பெருக்க முறைகள் உதாரணம்

A) இயங்குவித்துகள் – 1. கைட்ரிடுகள்

B) கொனிடியங்கள் – 2. ஆஸ்பெர்ஜில்லஸ்

C) ஆய்டிய வித்துகள் – 3. எரிசைஃபி

D) பிளவுறுதல் – 4. ஈஸ்ட்

241. பூஞ்சைகளின் பாலிலா இனப்பெருக்க முறையில் மொட்டுவிடுதல் முறையில் நடைபெறும் பூஞ்சை.

A) சாக்கரோமைசிஸ்-ஈஸ்ட்

B) ஃபியுசேரியம்

C) எரிசைஃபி

D) ஆஸ்பர்ஜில்லஸ்

242. பூஞ்சைகளின் பாலின இனப்பெருக்க முறையில் சரியான இணையைக் கண்டறி:

1) ஒத்தகேமீட் இணைவு – அல்லோமைசிஸ்

2) சமமற்ற கேமீட் இணைவு – சின்கைட்ரியம்

3) கேமீட்டகத்தொடர்பு – அல்பகோ

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

1) ஒத்தகேமீட் இணைவு – சின்கைட்ரியம்

2) சமமற்ற கேமீட் இணைவு – அல்லோமைசிஸ்

3) கேமீட்டகத்தொடர்பு – அல்பகோ

243. பூஞ்சைகளின் பாலினப்பெருக்கத்தின் போது ஆந்திரிடியம், ஊகோணியம் இடையே தொடர்பு ஏற்படுதலுக்கு__________என்று பெயர்.

A) கேமீட்டக இணைவு

B) கேமீட்டகத் தொடர்பு

C) ஸ்பெர்மேஷிய இணைவு

D) உடலசெல் இணைவு

விளக்கம்: கேமீட்டகத்தொடர்பு – பாலினப்பெருக்கத்தின் போது ஆந்திரிடியம், ஊகோணியம் இடையே தொடர்பு ஏற்படுதல். எ.கா. அல்புகோ

244. கேமீட்டகங்கள் இணைந்து உறக்கக் கருமுட்டை உருவாதலுக்கு______என்று பெயர்.

A) கேமீட்டக இணைவு

B) கேமீட்டகத் தொடர்பு

C) ஸ்பெர்மேஷிய இணைவு

D) உடலசெல் இணைவு

245. இரண்டு ஹைஃபாக்களின் உடலசெல்களின் இணைவுக்கு________என்று பெயர்.

A) கேமீட்டக இணைவு

B) கேமீட்டகத் தொடர்பு

C) ஸ்பெர்மேஷிய இணைவு

D) உடலசெல் இணைவு

246. மரபுசார் வகைப்பாடுகளில் பூஞ்சைகள்__________வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

A) ஃபைக்கோமைசீட்ஸ்

B) ஆஸ்கோமைசீட்ஸ்

C) பசிடியோமைசீட்ஸ்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மரபுசார் வகைப்பாடுகளில் பூஞ்சைகள் ஃபைக்கோமைசீட்ஸ், ஆஸ்கோமைசீட்ஸ், பசிடியோமைசீட்ஸ், டியூட்டிரோமைசீட்ஸ் என நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஃபைக்கோமைசீட்ஸ் வகுப்பில் ஊமைசீட்ஸ், கைட்ரிடியோமைசீட்ஸ், சைகோமைசீட்ஸ் பூஞ்சைகள் அடங்கும்.

247. 1979 ஆம் ஆண்டில் “Introductory Mycology“ என்ற நூலில் பூஞ்சைகளின் வகைப்பாட்டை வெளியிட்டவர்.

A) கான்ஸ்டான்டின் த. அலெக்சோபோலஸ்

B) சார்லஸ் W. மிம்ஸ்

C) AB இரண்டும்

D) மேற்கண்ட எவருமல்ல

விளக்கம்: கான்ஸ்டான்டின் J. அலெக்சோபோலஸ் மற்றும் சார்லஸ் W. மிம்ஸ் ஆகியோர் 1979 ஆம் ஆண்டில் “Introductory Mycology “ என்ற நூலில் பூஞ்சைகளின் வகைப்பாட்டை வெளியிட்டனர். இதில் பூஞ்சைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஜிம்னோமைக்கோட்டா, மாஸ்டிகோமைக்கோட்டா, ஏமாஸ்டிகோமைக்கோட்டா ஆகும்.

248. பூஞ்சைகளில் சைகோமைசீட்ஸின் பொதுவானப் பண்புகளில் சரியானதைக் கண்டறி:

1) பெரும்பாலான சிற்றினங்கள் மட்குண்ணிகளாக மண்ணில் உள்ள அழுகிய தாவர, விலங்கின உடல்களின் மீது வாழ்கின்றன. சில ஒட்டுண்ணி வகையைச் சார்ந்தவை. எ.கா. வீட்டு ஈக்களில் வாழும் எண்டமஃப்தோரா.

2) மைசீலியம் கிளைத்து பல்உட்கரு நிலையைப் பெற்றுள்ளது.

3) பாலிலா இனப்பெருக்கம் வித்தகங்களில் வித்துகளைத் தோற்றுவிப்பதன் மூலம் நடைபெறுகிது.

4) பாலினப்பெருக்கத்தின்போது கேமீட்டுகங்கள் இணைந்து தடித்த சுவருடைய உட்கருமுட்டை தோற்றுவிக்கின்றன.

A) 1 2 3 மட்டும் சரி

B) 2 3 4 மட்டும் சரி

C) 1 3 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

249. பூஞ்சைகளில் சைகோமைசீட்ஸின் பொதுவானப் பண்புகளில் தவறானதைக் கண்டறி:

1) ஆஸ்கோமைசீட்ஸ் என்பவை ஈஸ்ட்கள், மாவொத்தப் பூசணங்கள், கிண்ணப்பூஞ்சைகள், மோரல்கள் போன்றவைகளைக் கொண்ட தொகுப்பாகும்.

2) பெரும்பாலான சிற்றினங்கள் நிலத்தில் வாழ்பவையாக இருப்பினும் சில நன்னீர் மற்றும் கடல்நீரிலும் வாழ்கின்றன.

3) ஹைபாக்கள் கிளைத்து, நன்கு வளர்ச்சியடைந்து எளிய தடுப்புச்சுவரைப் பெற்றுள்ளது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: மைசீலியம் கிளைத்து, நன்கு வளர்ச்சியடைந்து எளிய தடுப்புச்சுவரைப் பெற்றுள்ளது.

250. பூஞ்சைகளில் சைகோமைசீட்ஸின் பொதுவானப் பண்புகளில் தவறானதைக் கண்டறி:

1) பெரும்பாலானவை சாற்றுண்ணிகளாகவும், சில ஒட்டுண்ணிகளாகவும் அறியப்படுகின்றன எ.கா. மாவொத்த பூசணங்கள் – எரிசைஃபி

2) பாலிலா இனப்பெருக்கம் பிளவுறுதல், மொட்டுவிடுதல், ஆய்டியவித்துகள் கொனிடியங்கள், கிளாமிடவித்துகள் வழி நடைபெறுகிறது.

3) இரண்டு ஒத்த உட்கருக்கள் இணைவதன் வழி பாலிலாப்பெருக்கம் நடைபெறுகிறது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: இரண்டு ஒத்த உட்கருக்கள் இணைவதன் வழி பாலினப்பெருக்கம் நடைபெறுகிறது.

251. பூஞ்சைகளில் சைகோமைசீட்ஸின் பொதுவானப் பண்புகளில் சரியானதைக் கண்டறி:

1) ஆஸ்கோமைசீட்ஸில் சைட்டோபிளாச இணைவைத் தொடர்ந்து உட்கரு இணைவு உடனே நடைபெறுவதில்லை. பதிலாக இரட்டை உட்கருநிலையிலேயே நீண்ட காலம் ஹைஃபாக்கள் காணப்படுகின்றன.

2) ஆஸ்கஸ் உருவாக்கச் சிறப்பு ஹைஃபாக்கள் தோன்றுகின்றன.

3) ஆஸ்கஸ்களை மலட்டு ஹைஃபாக்கள் சூழ்ந்து ஆஸ்கோகனியுருப்பு உருவாகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

252. பூஞ்சைகளில் பசிடியோமைசீட்ஸின் பொதுவானப் பண்புகளில் சரியானதைக் கண்டறி:

1) இவ்வகுப்பு பூஞ்சைகள் சாற்றுண்ணிகளாகவோ, ஒட்டுண்ணிகளாகவோ நீரில் வாழ்கின்றன.

2) நன்கு வளர்ச்சியடைந்த, மத்தளத் துளைத் தடுப்பு சுவருடைய மைசீலியம் காணப்படுகிறது.

3) இரட்டை உட்கரு நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்குப் பிடிப்பு இணைப்பு தோற்றுவிக்கப்படுகிறது.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 1 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: இவ்வகுப்பு பூஞ்சைகள் சாற்றுண்ணிகளாகவோ, ஒட்டுண்ணிகளாகவோ நிலத்தில் வாழ்கின்றன.

253. பூஞ்சைகளில் பசிடியோமைசீட்ஸின் பொதுவானப் பண்புகளில் சரியானதைனதைக் கண்டறி:

1) பாலிலா இனப்பெருக்கம் கொனிடியங்கள், ஆய்டிய வித்துகள், மொட்டுவிடுதல் வழி நடைபெறுகிறது.

2) பாலுறுப்புகள் காணப்படுவதால் பாலினப்பெருக்கம் நடைபெறுகிறது. உடலசெல் இணைவு அல்லது ஸ்பெர்மேஷிய இணைவு வழி சைட்டோபிளாச இணைவு நடைபெறுகிறது.

3) உட்கரு இணைவு தாமதமடைந்து நீண்ட இரட்டைஉட்கரு நிலையில் ஹைஃபாக்கள் உள்ளன. பசிடியத்தில் உட்கரு இணைவு நடைபெற்று உடனடியாகக் குன்றல் பகுப்படைதல் நடைபெறுகிறது.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 1 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: பாலினப்பெருக்கம் நடைபெறுகிறது, ஆயினும் பாலுறுப்புகள் காணப்படுவதில்லை. உடலசெல் இணைவு அல்லது ஸ்பெர்மேஷிய இணைவு வழி சைட்டோபிளாச இணைவு நடைபெறுகிறது.

254. கீழ்க்கண்டவற்றுள் முழுமைப்பெறா பூஞ்சைகள் என்றழைக்கப்படுவது_________

A) ஊமைசீட்ஸ்

B) சைகோமைசீட்ஸ்

C) ஆஸ்கோமைசீட்ஸ்

D) டியூட்டிரோமைசீட்ஸ்

விளக்கம்: இவ்வகை பூஞ்சைகளில் பாலினப்பெருக்கம் காணப்படுவதில்லை. எனவே இவை முழுமைப்பெறாப் பூஞ்சைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. எண்ணற்ற சிற்றினங்கள் மண்ணில் சாற்றுண்ணிகளாகவும் பல தாவர மற்றும் விலங்குகளில் ஒட்டுண்ணிகளாகவும் வாழ்கின்றன.

255. கீழ்க்கண்டவற்றுள் உணவாகப் பயன்படுத்தப்படும் பூஞ்சைகளுல் அல்லாதது எது.

A) லென்டினஸ் எடோடஸ்

B) அமானிட்டா ஃபேலாய்ட்ஸ்

C) அகாரிகஸ் பைஸ்போரஸ்

D) வால்வேரியெல்லா வால்;வேசியே

விளக்கம்: லென்டினஸ் எடோடஸ், அகாரிகஸ் பைஸ்போரஸ், வால்வேரியெல்லா வால்வேசியா போன்றவை ஊட்ட மதிப்புடையதால் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஈஸ்ட்கள் வைட்டமின் B-யையும் எரிமோதீசியம் ஆஷ்பியி வைட்டமின் B12 – யையும் தருகின்றன.

256. வைட்டமின் B12 யை தரும் பூஞ்சைகள்__________

A) லென்டினஸ் எடோடஸ்

B) அமானிட்டா ஃபேலாய்ட்ஸ்

C) எரிமோதீசியம் ஆஷ்பியி

D) வால்வேரியெல்லா வால்;வேசியே

257. பொருத்துக:

எதிர்ப்புப்பொருள் பூஞ்சை

A) பெனிசிலின் – 1. கிளாவிசெப்ஸ் பர்பூரியா

B) செபலோஸ்போரின்கள் – 2. பெனிசிலியம் கிரைசோபல்வம்

C) கிரைசியோ பல்வின் – 3. அக்ரிமோனியம் கிரைசோஜீனம்

D) எர்காட் ஆல்கலாய்டு – 4. பெனிசிலியம் நொட்டேட்டம்

A) 1 3 2 4

B) 3 4 2 1

C) 2 1 4 3

D) 4 3 2 1

விளக்கம்:

எதிர்ப்புப்பொருள் பூஞ்சை

A) பெனிசிலின் – 1. பெனிசிலியம் நொட்டேட்டம்

B) செபலோஸ்போரின்கள் – 2. அக்ரிமோனியம் கிரைசோஜீனம்

C) கிரைசியோ பல்வின் – 3. பெனிசிலியம் கிரைசோபல்வம்

D) எர்காட் ஆல்கலாய்டு – 4. கிளாவிசெப்ஸ் பர்பூரியா

258. இரத்தக்குழாயினைச் சுருங்க வைக்கும் மருந்தாகப் பயன்படுவது_______

A) பெனிசிலின்

B) கிரைசியோ பல்வின்

C) எர்காட்டமைன்

D) செபலோஸ்போரின்கள்

259. ஆஸ்பர்ஜில்லஸ் நைஜர் என்ற பூஞ்சையானது கீழ்க்கண்ட எந்த அமிலத்தைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

A) சிட்ரிக் அமிலம்

B) குளுக்கோனிக் அமிலம்

C) AB இரண்டும்

D) சல்பியூரிக் அமிலம்

விளக்கம்: கரிம அமிலங்களை வணிகரீதியில் உற்பத்தி செய்வதற்கு தொழிற்சாலைகளில் பூஞ்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிட்ரிக் அமிலம், குளுக்கோனிக் அமிலம் தயாரிக்க ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர் என்ற பூஞ்சை பயன்படுகிறது.

260. கீழ்க்கண்ட சரியற்ற இணையைத் கண்டறி:

1) ஆஸ்பெர்ஜில்லஸ் டெரியஸ் – கோஜிக் அமிலம்

2) ஆஸ்பெர்ஜில்லஸ் ஒரைசா – இட்டகோனிக் அமிலம்

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்:

1) ஆஸ்பெர்ஜில்லஸ் டெரியஸ் – இட்டகோனிக் அமிலம்

2) ஆஸ்பெர்ஜில்லஸ் ஒரைசா – கோஜிக் அமிலம்

261. கீழ்க்கண்டவற்றுள் நொதித்தல் மூலம் சர்க்கரையை ஆல்கஹாலாக மாற்ற உதவும் பூஞ்சை_______

A) சக்காரோமைசிஸ் செரிவிசியே

B) ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர்

C) ஆஸ்பெர்ஜில்லஸ் டெரியஸ்

D) ஆஸ்பெர்ஜில்லஸ் ஒரைசா

விளக்கம்: சக்காரோமைசிஸ் செரிவிசியே என்ற பூஞ்சை நொதித்தல் மூலம் சர்க்கரையை ஆல்கஹாலாக மாற்ற உதவுகிறது. அடுமனையில் பெறப்படும் பொருட்களான ரொட்டி, பன், ரோல் போன்றவை தயாரிக்க ஈஸ்ட் பயன்படுத்தப்படுகின்றன.

262. அடுமனையில் உள்ள ரொட்டி, பன், ரோல் போன்றவை தயாரிக்க________பயன்படுகிறது.

A) பாக்டீரியா

B) புரோட்டோசோவா

C) ஈஸ்ட்

D) அமீபா

263. கீழ்க்கண்டவற்றுள் பாலாடைக்கட்டி தயாரிக்க பயன்படும் பூஞ்சை__________

A) பெனிசிலியம் ராக்குவிபோர்ட்டை

B) பெனிசிலியம் கேமம்பர்ட்டை

C) AB இரண்டும்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பெனிசிலியம் ராக்குவிபோர்ட்டை, பானிசிலியம் கேமம்பர்ட்டை ஆகியவை பாலாடைக்கட்டி உற்பத்தி செய்வதில் உபயோகப்படுத்தப்படுகிறது.

264. ஆஸ்பெர்ஜில்லஸ் ஒரைசே மற்றும் ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர் போன்றவை கீழ்க்கண்ட எந்த நொதிகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

A) அமைலேஸ்

B) புரோட்டியேஸ்

C) லாக்டேஸ்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஆஸ்பெர்ஜில்லஸ் ஒரைசே மற்றும் ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர் போன்றவை அமைலேஸ், புரோட்டியேஸ், லாக்டேஸ் போன்ற நொதிகளைத் தயாரித்தலில் பால் உறைதலுக்கு தேவையான “ரென்னட்” மியூக்கர் சிற்றினம் பயன்படுத்திப் பெறப்படுகிறது.

265. கீழ்க்கண்டவற்றுள் தாவரங்கள், கனிமப்பொருட்களை உறிஞ்ச உதவும் பூஞ்சை__________

A) ரைசோக்டோனியா

B) ஃபாலஸ்

C) ஸ்கிளிரோடெர்மா

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பூஞ்சைவேரிகளை உருவாக்கும் ரைசோக்டோனியா, ஃபாலஸ், ஸ்கிளிரோடெர்மா போன்ற பூஞ்சைகள் தாவரங்கள், கனிமப்பொருட்களை உறிஞ்ச உதவுகின்றன.

266. கீழ்க்கண்டவற்றுள் வேளாண்மைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க உதவும் பூஞ்சை________

A) பியுவேரியா பேசியானா

B) மெட்டாரைசியம் அனைசோபிளியா

C) AB இரண்டும்

D) ஜிப்பெரெல்லா ஃபுயுஜி

விளக்கம்: பியுவேரியா பேசியானா, மெட்டாரைசியம் அனைசோபிளியா போன்றவை வேளாண்மை பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க உதவுகின்றன.

267. _________என்ற தாவர வளர்ச்சிப்பொருள் தாவரங்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

A) ஜிப்பெரெல்லா ஃபுயுஜி

B) ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர்

C) ஆஸ்பெர்ஜில்லஸ் டெரியஸ்

D) ஆஸ்பெர்ஜில்லஸ் ஒரைசா

விளக்கம்: ஜிப்பெரெல்லா ஃபுயுஜிகுரை என்ற பூஞ்சை உற்பத்தி செய்யும் ஜிப்ரெல்லின் என்ற தாவர வளர்ச்சி சீராக்கிப்பெறுமம் தாவரங்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

268. கீழ்க்கண்டவற்றுள் நச்சுத் தன்மையுடைய காளான்களுல் அல்லாதது எது.

A) அமானிட்டா ஃபேலாய்ட்ஸ்

B) லென்டினஸ் எடோடஸ்

C) அமானிட்டா வெர்னா

D) போலிட்டஸ் சடானஸ்

விளக்கம்: அமானிட்டா ஃபபேலாய்ட்ஸ். அமாநிடா வெர்னா, போலிட்டஸ் சடானஸ் போன்றவை அதிக நச்சுத்தன்மையுடைய காளான்களாகும். இவை பொதுவாக “தவளை இருக்கை பூஞ்சை” என்ற பெயரில் அறியப்படுகிறது.

269. கீழ்க்கண்டவற்றுள் “தவளை இருக்கை பூஞ்சை” என்றழைக்கப்படுவது______

A) அமானிட்டா ஃபேலாய்ட்ஸ்

B) அமானிட்டா வெர்னா

C) போலிட்டஸ் சடானஸ்

D) மேற்கண்ட அனைத்தும்

270. பொருத்துக: (மனிதர்களில் பூஞ்சையால் ஏற்படும் நோய்)

A) சேற்றுப்புண் – 1. கேண்டிடா அல்பிகன்ஸ்

B) கேண்டிடியாசிஸ் – 2. எபிடெர்மோ பைட்டான் பிளாக்கோசம்

C) கோகிடியோய்டோமைகோசிஸ் – 3. கோகிடியோய்டிஸ் இம்மிட்டிஸ்

D) ஆஸ்பர்ஜில்லோசிஸ் – 4. ஆஸ்பர்ஜில்லஸ் ஃபுயுமிகேட்டஸ்

A) 1 3 2 4

B) 3 4 2 1

C) 2 1 3 4

D) 4 3 2 1

விளக்கம்:

A) சேற்றுப்புண் – 1. எபிடெர்மோ பைட்டான் பிளாக்கோசம்

B) கேண்டிடியாசிஸ் – 2. கேண்டிடா அல்பிகன்ஸ்

C) கோகிடியோய்டோமைகோசிஸ் – 3. கோகிடியோய்டிஸ் இம்மிட்டிஸ்

D) ஆஸ்பர்ஜில்லோசிஸ் – 4. ஆஸ்பர்ஜில்லஸ் ஃபுயுமிகேட்டஸ்

271. பொருத்துக: (பூஞ்சைகளால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்)

A) நெல்லின் கருகல் நோய் – 1. மாக்னபோர்தே கிரைசியே

B) கரும்பின் செவ்வழுகல் நோய் – 2. கொ.டிரைக்கம் ஃபால்கேட்டம்

C) பீச் இலைச்சுருள் நோய் – 3. பக்சீனியா கிராமினிஸ்-டிரிட்டிசை

D) கோதுமையின் துரு நோய் – 4. டாப்ரினா டிபார்மன்ஸ்

A) 1 2 4 3

B) 3 4 2 1

C) 2 1 3 4

D) 4 3 2 1

விளக்கம்:

A) நெல்லின் கருகல் நோய் – 1. மாக்னபோர்தே கிரைசியே

B) கரும்பின் செவ்வழுகல் நோய் – 2. கொ.டிரைக்கம் ஃபால்கேட்டம்

C) பீச் இலைச்சுருள் நோய் – 3. டாப்ரினா டிபார்மன்ஸ்

D) கோதுமையின் துரு நோய் – 4. பக்சீனியா கிராமினிஸ்-டிரிட்டிசை

272. பீன்ஸின் ஆந்த்ரக்னோஸ் நோய் ஏற்படக் காரணமான பூஞ்சை_________

A) மாக்னபோர்தே கிரைசியே

B) டாப்ரினா டிபார்மன்ஸ்

C) பக்சீனியா கிராமினிஸ் – டிரிட்டிசை

D) கொலிட்டோ டிரைக்கம் லிண்டிமுத்தியானம்

273. குருசிபெரே குடும்பத் தாவரங்களின் வெண்துரு நோய்க்கு காரணமான பூஞ்சை________

A) மாக்னபோர்தே கிரைசியே

B) அல்புகோ கேண்டிடா

C) பக்சீனியா கிராமினிஸ் – டிரிட்டிசை

D) கொலிட்டோ டிரைக்கம் லிண்டிமுத்தியானம்

274. கீழ்க்கண்டவற்றுள் உணவுப் பொருள் கெட்டுப்போவதற்கு காரணமான பூஞ்சை__________

A) அஸ்பெர்ஜில்லஸ்

B) ரைசோபஸ்

C) மியூக்கர்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: அஸ்பெர்ஜில்லஸ், ரைசோபஸ், மியூக்கர், பெனிசிலியம் போன்றவை உணவுப் பொருட்கள் கெட்டுப்போவதற்குக் காரணமாகின்றன.

275. கீழ்கண்டவற்றுள் உலர்ந்த உணவுப்பொருட்களில் புற்றுநோயைத் தூண்டும் “அப்ளாடாக்சின்” நச்சுப்பொருளை உண்டாக்கும் பூஞ்சை எது?

A) கேண்டிடா அல்பிகன்ஸ்

B) அஸ்பெர்ஜில்லஸ் பிளாவஸ் பூஞ்சை

C) டாப்ரினா டிபார்மன்ஸ்

D) மாக்னபோர்தே கிரைசியே

விளக்கம்: அஸ்பெர்ஜில்லஸ் பிளாவஸ் பூஞ்சை உலர்ந்த உணவுப்பொருட்களில் புற்றுநோயைத் தூண்டும் “அப்ளாடாக்சின்” நச்சுப்பொருளை உண்டாக்குகிறது. பாட்டுலின், ஆக்ராடாக்சின் A போன்றவை பூஞ்சைகள் உற்பத்தி செய்யும் சில நச்சுப்பொருட்களாகும்.

276. கீழ்க்கண்டவற்றுள் தோலில் நோய்த் தொற்றை ஏற்படுத்தக்கூடியப் பூஞ்சை எது.

A) டிரைகோஃபைட்டான் டினியா

B) எபிடெர்மோபைட்டான்

C) மைக்ரோஸ்போரம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: டெர்மோபைட்கள் என்பவை தோலில் நோய்த்தொற்றுதல் ஏற்படுத்தக்கூடிய பூஞ்சைகளாகும். எ.கா. டிரைகோஃபைட்டான் டினியா, மைக்ரோஸ்போரம், எபிடெர்மோபைட்டான் ஆகியவைகளாகும்.

277. உருளைக்கிழங்கில் பைட்டோப்தோரா இன்பெஸ்டன்ஸ் என்ற பூஞ்சையால் ஏற்பட்ட தாமதித்த வெப்பு நோய் கீழ்க்கண்ட எந்த நாட்டில் 1843 இல் பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தியது.

A) நியுசிலாந்து

B) இங்கிலாந்து

C) அயர்லாந்து

D) கிரீன்லாந்து

விளக்கம்: உருளைக்கிழங்கில் பைட்டோப்தோரா இன்பெஸ்டன்ஸ் என்ற பூஞ்சையால் ஏற்பட்ட தாமதித்த வெப்பு நோய் காரணமாக அயர்லாந்தில் 1843 – 1845 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும்பஞ்சத்தினால் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

278. நெல்லில் ஹெல்மிந்தோஸ்போரியம் ஒரைசே எனும் பூஞ்சையால் ஏற்பட்ட வெப்பு நோயால் கீழ்க்கண்ட எந்த நாட்டில் 1942 – இல் பெரும்பஞ்சம் ஏற்பட்டது.

A) இந்தியா

B) வங்காளம்

C) இந்தோனேசியா

D) தாய்லாந்து

விளக்கம்: நெல்லில் ஹெல்மிந்தோஸ்போரியம் ஒரைசே எனும் பூஞ்சை ஏற்படுத்திய வெப்பு நோய் வங்காளத்தில் 1942 – 1943 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பஞ்சத்திற்கு ஒரு காரணமாகும்.

279. பூஞ்சைகளின் மைசீலியங்கள் மற்றும் தாவர வேர்களுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிரி வாழ்க்கை அமைப்பிற்கு_______என்று பெயர்.

A) லைக்கன்கள்

B) மைக்கோரைசா

C) பூஞ்சைவேரிகள்

D) ஆல்காக்கள்

விளக்கம்: பூஞ்சைகளின் மைசீலியங்கள் மற்றும் தாவர வேர்களுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிரி வாழ்க்கை அமைப்பிற்கு பூஞ்சைவேரிகள் என்று பெயர். இந்தத் தொடர்பில் பூஞ்சைகள் வேரிலிருந்து ஊட்டத்தை உறிஞ்சுகின்றன.

280. கீழ்க்கண்டக் கூற்றுகளில் பூஞ்சைவேரிகளின் முக்கியத்துவங்களில் பொருந்தாததைக் காண்க.

A) இவை மட்குண்ணி வகையைச் சார்ந்த பூக்கும் தாவரமான மோனோட்ரோப்பா தாவரத்தில் ஊட்டத்தினை எடுத்துக்கொள்ள உதவுகின்றன.

B) தாவரங்களுக்குக் கனிமப்பொருட்கள் மற்றும் நீர் அதிகளவில் கிடைக்கப் பூஞ்சைவேரிகள் உதவுகின்றன.

C) தாவரங்களுக்கு வறட்சியைத் தாங்கும் திறனைத் குறைக்கிறது

D) மேம்பாடடைந்த தாவரங்களின் வேர்களைத் தாவர நோய்க்காரணிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது.

விளக்கம்: தாவரங்களுக்கு வறட்சியைத் தாங்கும் திறனைத் தருகிறது.

281. பொருத்துக:

A) புற பூஞ்சைவேரிகள் – 1. ஜிகாஸ்போரா

B) ஆர்பஸ்குலர் பூஞ்சைவேரிகள் – 2. ஆய்டியோடென்டிரான்

C) எரிகாய்டு பூஞ்சைவேரிகள் – 3. ரைசோக்டானியா

D) ஆர்க்கிட் பூஞ்சைவேரிகள் – 4. பைசோலித்தஸ் டிங்டோரியஸ்

A) 1 2 4 3

B) 3 4 2 1

C) 2 1 3 4

D) 4 1 2 3

விளக்கம்:

A) புற பூஞ்சைவேரிகள் – 1. பைசோலித்தஸ் டிங்டோரியஸ்

B) ஆர்பஸ்குலர் பூஞ்சைவேரிகள் – 2. ஜிகாஸ்போரா

C) எரிகாய்டு பூஞ்சைவேரிகள் – 3. ஆய்டியோடென்டிரான்

D) ஆர்க்கிட் பூஞ்சைவேரிகள் – 4. ரைசோக்டானியா

282. பாசிகள் மற்றும் பூஞ்சைகளுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிரி அமைப்பிற்கு_________என்று பெயர்

A) மைக்கோரைசா

B) ஆல்காக்கள்

C) லைக்கன்கள்

D) வேரிகள்

விளக்கம்: பாசிகள் மற்றும் பூஞ்சைகளுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிரி அமைப்பிற்கு லைக்கன்கள் என்று பெயர். இதில் பாசி உறுப்பினர் பாசி உயிரி அல்லது ஒளி உயிரி என்றும் பூஞ்சை உறுப்பினர் பூஞ்சை உயிரி என்றும் அழைக்கப்படுகிறது.

283. கூற்று (i): பாசிகள் மற்றும் பூஞ்சைகளுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிரி அமைப்பிற்கு மைக்கோரைசா என்று பெயர்.

கூற்று (ii): இதில் பாசி உயிரி பூஞ்சைக்கு ஊட்டத்தைத் தருகிறது. பூஞ்சை உயிரி பாசிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதுடன் உடலத்தைத் தளப்பொருள் மீது நிலைப்படுத்த ரைசினே என்ற அமைப்பை ஏற்படுத்த உதவுகின்றது.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: பாசிகள் மற்றும் பூஞ்சைகளுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிரி அமைப்பிற்கு லைக்கன்கள் என்று பெயர்.

284. லைக்கன்களில் பாலிலா இனப்பெருக்கம் கீழ்க்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது.

A) துண்டாதல்

B) சொரீடியங்கள்

C) ஐசிடியங்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: லைக்கன்களில்பாலிலா இனப்பெருக்கமானது துண்டாதல், சொரீடியங்கள், ஐசிடியங்கள் மூலம் நடைபெறுகின்றன. பாசி உயிரி உறக்க நகராவித்துகள், ஹார்மோகோனியங்கள், நகராவித்துகள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.

285. பொருத்துக: (லைக்கன்களின் வகைப்பாடு – வாழிடத்தின் அடிப்படை)

A) கார்ட்டிகோலஸ் – 1. பாறை மீது வாழ்பவை

B) லிக்னிகோலஸ் – 2. நிலத்தில் வாழ்பவை

C) சாக்ஸிகோலஸ் – 3. கட்டை மீது வாழ்பவை

D) டெர்ரிகோலஸ் – 4. மரப்பட்டை மீது காணப்படுபவை

A) 1 2 4 3

B) 3 4 2 1

C) 2 1 3 4

D) 4 3 1 2

விளக்கம்:

A) கார்ட்டிகோலஸ் – 1. மரப்பட்டை மீது காணப்படுபவை

B) லிக்னிகோலஸ் – 2. கட்டை மீது வாழ்பவை

C) சாக்ஸிகோலஸ் – 3. பாறை மீது வாழ்பவை

D) டெர்ரிகோலஸ் – 4. நிலத்தில் வாழ்பவை

286. பொருத்துக: (லைக்கன்களின் வகைப்பாடு – உடலப் புற அமைப்பு)

A) லெப்ரோஸ் – 1. கிளைத்த புதர் போன்ற தொங்கும் அமைப்பு

B) கிரஸ்டோஸ் – 2. இலை ஒத்த வகை

C) ஃபோலியோஸ் – 3. ஓடு போன்ற அமைப்பு

D) புருட்டிகோஸ் – 4. பூஞ்சை அடுக்கு காணப்படுவதில்லை

A) 4 3 2 1

B) 1 2 4 3

C) 3 4 2 1

D) 2 1 3 4

விளக்கம்:

A) லெப்ரோஸ் – 1. பூஞ்சை அடுக்கு காணப்படுவதில்லை

B) கிரஸ்டோஸ் – 2. ஓடு போன்ற அமைப்பு

C) ஃபோலியோஸ் – 3. இலை ஒத்த வகை

D) புருட்டிகோஸ் – 4. கிளைத்த புதர் போன்ற தொங்கும் அமைப்பு

287. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) ஹோமியோமிரஸ் – வரையறுக்கப்பட்ட பாசி, பூஞ்சை அடுக்குகள் காணப்படுதல்.

2) ஹெட்டிரோமிரஸ் – பாசி செல்கள் லைக்கென் உடலத்தில் சீராகப் பரவியிருத்தல்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:

ஹாமியோமிரஸ் – பாசி செல்கள் லைக்கென் உடலத்தில் சீராகப் பரவியிருத்தல்.

ஹெட்டிரோமிரஸ் – வரையறுக்கப்பட்ட பாசி, பூஞ்சை அடுக்குகள் காணப்படுதல்.

288. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) ஆஸ்கோலைக்கென் – லைக்கென் உடலத்தில் உள்ள பூஞ்சை உயிரி ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்தவையாக இருத்தல்.

2) பசிடியோலைக்கென் – லைக்கென் உடலத்தில் உள்ள பூஞ்சை உயிரி பசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்தவையாக இருத்தல்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

289. கீழ்க்கண்டவற்றுள் சீரோசீர் என்ற வறள்நிலத் தாவர வழிமுறை வளர்ச்சியில் முன்னோடி உயிரினங்களாகத் திகழ்பவை.

A) மைக்கோரைசா

B) ஆல்காக்கள்

C) பாசிகள்

D) லைக்கன்கள்

விளக்கம்: லைக்கென்கள் பாறைகள் மீது படிந்து வாழும்பொழுது ஆக்சாலிக் அமிலம் போன்ற கரிம அமிலங்களைச் சுரப்பதால் பாறைகளின் தளம் அரிக்கப்பட்டு மண் உருவாக உதவுகிறது. ஆகையால் இவை சீரோசீர் என்ற வறள்நிலத் தாவர வழிமுறை வளர்ச்சியில் முன்னோடி உயிரினங்களாகத் திகழ்கின்றன.

290. கூற்று (i): லைக்கென்களில் இருந்து பெறப்படும் டானிக் அமிலம் உயிர் எதிர்ப்பொருள் தன்மையைப் பெற்றுள்ளது.

கூற்று (ii): லைக்கென்கள் காற்று மாசுக்காரணியை எளிதில் உணரக்கூடியவை என்பதால் இவை மாசு சுட்டிக்காட்டிகளாக கருதப்படுகின்றன.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: லைக்கென்களில் இருந்து பெறப்படும் அஸனிக் அமிலம் உயிர் எதிர்ப்பொருள் தன்மையைப் பெற்றுள்ளது.

291. சோதனைக்கூடங்களில் அமில கார குறியீடாகப் பயன்படுத்தப்படும் லிட்மஸ் காகிதத்திற்கு தேவையான சாயம்_________என்ற லைக்கெனிலிருந்துப் பெறப்படுகிறது.

A) டிரைகோஃபைட்டான் டினியா

B) எபிடெர்மோபைட்டான்

C) கிளாடோனியா ரான்ஜிஃபெரினா

D) ரோசெல்லா மாண்டாக்னே

விளக்கம்: சோதனைக்கூடங்களில் அமில கார குறியீடாகப் பயன்படுத்தப்படும் லிட்மஸ் காகிதத்திற்கு தேவையான சாயம் ரோசெல்லா மாண்டாக்னே என்ற லைக்கெனிலிருந்துப் பெறப்படுகிறது.

292.________லைக்கென்கள் துருவப் பிரதேசத்தில் வாழும் விலங்குகளுக்கு உணவாக பயன்படுத்தப்படுகிறது.

A) டிரைகோஃபைட்டான் டினியா

B) எபிடெர்மோபைட்டான்

C) கிளாடோனியா ரான்ஜிஃபெரினா

D) ரோசெல்லா மாண்டாக்னே

293. பின்வருவனவற்றுள் வைரஸ்களைப் பற்றிய சரியான கூற்று எது?

A) வளர்சிதை மாற்றத்தைக் கொண்டுள்ளன.

B) நிலைமாறும் ஒட்டுண்ணிகளாகும்.

C) DNA அல்லது RNA வை கொண்டுள்ளன.

D) நொதிகள் காணப்படுகின்றன.

294. கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக.

A) டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை.

B) செல்சுவரில் அதிகளவு பெப்டிடோ கிளைக்கான் உள்ளது.

C) செல்சுவர் ஓரடுக்கால் ஆனது.

D) லிப்போபாலிசாக்கரைட்கள் கொண்ட செல்சுவர்

295. ஆர்க்கிபாக்டீரியம் எது?

A) அசட்டோபாக்டர்

B) எரிவினீயா

C) டிரிப்போனிமா

D) மெத்தனோ பாக்டீரியம்

296. நீலப்பசும் பாசிகளோடு தொடர்புடைய சரியான கூற்று எது?

A) நகர்வதற்கான உறுப்புகள் இல்லை.

B) செல்சுவரில் செல்லுலோஸ் காணப்படுகிறது.

C) உடலத்தைச் சுற்றி மியூசிலேஜ் காணப்படுவதில்லை

D) ஃபுளோரிடியன் தரசம் காணப்படுகிறது.

297. சரியாகப் பொருந்திய இணையைக் கண்டறிக.

A) ஆக்டீனோமைசீட்கள் – தாமதித்த வெப்புநோய்

B) பாக்டீரியங்கள் – நுனிக்கழலை நோய்

C) பூஞ்சைகள் – சந்தனக் கூர்நுனி நோய்

D) மைக்கோ பிளாஸ்மா – கழலைத் தாடை நோய்

298. கீழ்க்கண்ட பாக்டீரியங்கள் பற்றிய பொதுவான பண்புகளில் பொருந்தாததைக் காண்க:

A) இவை மெய்யுட்கரு உயிரிகளாகும், உட்கரு சவ்வும், சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகளும் காணப்படுகிறது.

B) மரபணுப் பொருள் உட்கரு ஒத்த அமைப்பு அல்லது மரபணுதாங்கி அல்லது தோற்றுவிநிலை உட்கரு என்று அறியப்படுகிறது.

C) செல்சுவர் பாலிசாக்ரைட்கள், புரதங்களால் ஆனது.

D) பெரும்பான்மையான பாக்டீரியங்களில் பச்சையம் காணப்படுவதில்லை. எனவே இவை சார்பூட்ட முறையைச் சார்ந்தவையாக உள்ளன. எ.கா விப்ரியோ காலரே.

விளக்கம்: இவை தொல்லுட்கரு உயிரிகளாகும், உட்கரு சவ்வும், சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகளும் காணப்படுவதில்லை.

11th Science Lesson 10 Questions in Tamil

10] தாவர உலகம்

1. புவியில் காணப்படும் உயிரினங்களை கீழ்க்கண்ட எதன் அடிப்படையில் தாவரங்கள், விலங்கினங்கள் எனப் பிரிக்கப்படுகின்றன?

A) ஊட்டமுறை

B) நகரும்தன்மை

C) செல்சுவர்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பொதுவாக புவியில் காணப்படும் உயிரினங்களை அவைகளின் ஊட்டமுறை, நகரும்தன்மை மற்றும் செல்சுவர் உடைய அல்லது செல்சுவர் அற்ற பண்புகளின் அடிப்படையில் தாவரங்கள், விலங்குகள் என பிரிக்கப்பட்டன.

2. கீழ்க்கண்டவற்றுள் தாவரக்குழுவுடன் பொருந்தாததைக் கண்டறி:

A) பிரையோஃபைட்கள்

B) டெரிடோஃபைட்கள்

C) அனிமாலியா

D) ஜிம்னோஸ்பெர்ம்கள்

விளக்கம்: தாவரக்குழுவில் பாக்டீரிங்கள், பூஞ்சைகள், பாசிகள், பிரையோஃபைட்கள், டெரிடோஃபைட்கள், ஜிம்னோஸ்பெர்ம்கள், ஆஞ்சியோஸ்பெர்ம்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. அண்மையில் மூலக்கூறு பண்புகளின் அடிப்படையில் பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகள் பிரிக்கப்பட்டு தனிப்பெரும்பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

3. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று உலகின் மிகப் பழமை வாய்ந்த ஒரு அறிவியல் பிரிவாக உள்ளது.

A) விலங்கியல்

B) தாவரவியல்

C) இயற்பியல்

D) வேதியியல்

விளக்கம்: தாவரவியல் உலகின் மிகப்பழமை வாய்ந்த ஒரு அறிவியல் பிரிவாகும். ஏனென்றால், ஆதி மனிதர்கள் தங்கள் தேவைகளை ஈடுசெய்வதற்கும், உணவு, உடை, மருந்து, தங்குமிடம் போன்றவைகளுக்கும் தேவையான தாவரங்களைக் கண்டறிந்து பயன்படுத்தி வந்தனர்.

4. தாவரங்கள் சூரியனிலிருந்து பெறப்படும் ஒளியாற்றலை வேதியஆற்றலாக மாற்றும் நிகழ்விற்கு__________என்று பெயர்.

A) சுவாசித்தல்

B) ஒளிச்சேர்க்கை

C) நீராவிப்போக்கு

D) ஆக்ஸிஜனேற்றம்

விளக்கம்: தாவரங்கள் மட்டுமே சூரியனிலிருந்து பெறப்படும் ஒளியாற்றலை வேதிய ஆற்றலாக மாற்றி, ஒளிச்சேர்க்கை எனும் வியப்பான வினையை நடைபெறச் செய்து, உணவை தயாரித்துக் கொள்கின்றன.

5. தாவரங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனித்து சரியானதைக் கண்டறி:

1) அனைத்து தாவரங்களும் செல்களால் ஆனவை. இருப்பினும் வடிவம் மற்றும் அமைப்பில் பல்வகைத்தன்மை காணப்படுகின்றன.

2) புவியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஊட்டம் வழங்குகிறது.

3) உலக வெப்பமயமாதலுக்கு காரணமான கார்பன்-டை-ஆக்சைடு எனும் வளியை பிரித்தெடுத்து ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படுத்தி தீயவிளைவிலிருந்து புவியைப் பாதுகாக்குகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

6. பொருத்துக:

A) கிரிப்டோகேமே – 1. மூடிய விதைத் தாவரம்

B) பெனரோகேமே – 2. திறந்த விதைத் தாவரம்

C) ஜிம்னோஸ்பெர்ம் – 3. பூவாதத் தாவரம்

D) ஆஞ்சியோஸ்பெர்ம் – 4. பூக்கும் தாவரம்

A) 1 2 3 4

B) 2 1 4 3

C) 3 4 2 1

D) 4 3 1 2

விளக்கம்:

A) கிரிப்டோகேமே – 1. பூவாதத் தாவரம்

B) பெனரோகேமே – 2. பூக்கும் தாவரம்

C) ஜிம்னோஸ்பெர்ம் – 3. திறந்த விதைத் தாவரம்

D) ஆஞ்சியோஸ்பெர்ம் – 4. மூடிய விதைத் தாவரம்

7. பொருத்துக:

A) கிரிப்டோகேமே – 1. நீர் மற்றும் நிலவாழ்த் தாவரம்

B) டெரிடோஃபைட்டா – 2. நிலவாழ்த்தாவரம்

C) பெனரோகேமே – 3. விதை உண்டாக்காத தாவரம்

D) பிரையோஃபைட்டா – 4. விதை உண்டாக்கும் தாவரம்

A) 1 2 3 4

B) 2 1 4 3

C) 3 4 2 1

D) 3 2 4 1

விளக்கம்:

A) கிரிப்டோகேமே – 1. விதை உண்டாக்காத தாவரம்

B) டெரிடோஃபைட்டா – 2. நிலவாழ்த்தாவரம்

C) பெனரோகேமே – 3. விதை உண்டாக்கும் தாவரம்

D) பிரையோஃபைட்டா – 4. நீர் மற்றும் நிலவாழ்த் தாவரம்

8. கீழ்க்கண்டவற்றுள் கிரிப்டோகேமுடன் தொடர்பில்லாத வகைபாட்டினை கண்டறி:

A) ஜிம்னோஸ்பெர்ம்

B) ஆல்காக்கள்

C) பிரையோஃபைட்டா

D) டெரிடோஃபைட்டா

9. கீழ்க்கண்டவற்றுள் விதை உண்டாக்கும் தாவரங்களின் வகைபாட்டுடன் பொருந்துவது எது.

A) ஜிம்னோஸ்பெர்ம்

B) டெரிடோஃபைட்டா

C) ஆஞ்சியோஸ்பெர்ம்

D) AC இரண்டும்

10. கூற்று (i): அனைத்து தாவரங்களிலும் பொதுவாக சந்ததி மாற்றம் காணப்படுகிறது.

கூற்று (ii): ஒற்றைமடிய(n) கேமிட்டகத்தாவர நிலையும்(n), இரட்டைமடிய(2n) வித்தகத்தாவர நிலையும் மாறிமாறி வாழ்க்கைச்சுழற்சியில் காணப்படுவதே சந்ததி மாற்றம் எனப்படுகிறது.

A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் ii ஆனது கூற்று i கான சரியான விளக்கமாகும்.

B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் ii ஆனது கூற்று i கான சரியான விளக்கமல்ல.

C) கூற்று i சரி, காரணம் ii தவறு

D) கூற்று i தவறு காரணம் ii சரி

11. ஒற்றைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச்சூழல் பற்றியக் கூற்றுகளில் பொருந்தாததைக் கண்டறி:

1) கேமீட்டகத் தாவரநிலை(n) ஓங்கி காணப்பட்டு, ஒளிச்சேர்க்கைத் திறனுடன் சார்பின்றி காணப்படுகிறது.

2) வித்தகத்தாவரநிலை பல செல்லால் ஆன கருமுட்டையை மட்டும் குறிப்பிடுகிறது.

3) கருமுட்டை குன்றாப் பகுப்படைந்து ஒற்றைமடியநிலையை தக்கவைத்து கொள்கிறது. எ.கா. வால்வாக்ஸ், ஸ்பைரோகைரா.

A) 1 2 மட்டும் தவறு

B) 2 3 மட்டும் தவறு

C) 1 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: கேமீட்டகத் தாவரநிலை(n) ஓங்கி காணப்பட்டு, ஒளிச்சேர்க்கைத் திறனுடன் சார்பின்றி காணப்படுகிறது. வித்தகத்தாவரநிலை ஒரு செல்லால் ஆன கருமுட்டையை மட்டும் குறிப்பிடுகிறது. கருமுட்டை குன்றல் பகுப்படைந்து ஒற்றைமடியநிலையை தக்கவைத்து கொள்கிறது. எ.கா. வால்வாக்ஸ், ஸ்பைரோகைரா.

12. இரட்டைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச்சூழல் பற்றியக் கூற்றுகளில் சரியாகப் பொருந்தியதைக் கண்டறி:

1) வித்தகத்தாவர நிலை(2n) ஓங்கி காணப்பட்டு ஒளிச்சேர்க்கை திறன்பெறாத சார்புடன் வாழ்கின்றன.

2) கேமீட்டகத்தாவர நிலை ஒரு செல்லிலிருந்து சில செல்களைக் கொண்ட கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது.

3) கேமீட்கள் இணைந்து கருமுட்டை உருவாகி வித்தகத்தாவரமாக வளர்கிறது. எ.கா. ஃபியுகஸ் சிற்றினம்.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 1 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: வித்தகத்தாவர நிலை(2n) ஓங்கி காணப்பட்டு ஒளிச்சேர்க்கை திறன்பெற்று சார்பின்றி வாழ்கின்றன. கேமீட்டகத்தாவர நிலை ஒரு செல்லிலிருந்து சில செல்களைக் கொண்ட கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது. கேமீட்கள் இணைந்து கருமுட்டை உருவாகி வித்தகத்தாவரமாக வளர்கிறது. எ.கா. ஃபியுகஸ் சிற்றினம்.

13. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இனையைக்கண்டறி:

1) ஒற்றைமடிய கேமீட் உயிரி வாழ்க்கை சுழல் – டிப்லாண்டிக்

2) இரட்டைமடிய கேமீட் உயிரி வாழ்க்கை சுழல் – ஹாப்லாண்டிக்

3) ஒற்றைஇரட்டைமடிய உயிரி வாழ்க்கை சுழல் – ஹாப்லோடிப்லாண்டிக்

A) 1 2 மட்டும் தவறு

B) 2 3 மட்டும் தவறு

C) 1 3 மட்டும் தவறு

D) அனைத்தும் சரி

விளக்கம்:

1) ஒற்றைமடிய கேமீட் உயிரி வாழ்க்கை சுழல் – ஹாப்லாண்டிக்

2) இரட்டைமடிய கேமீட் உயிரி வாழ்க்கை சுழல் – டிப்லாண்டிக்

3) ஒற்றைஇரட்டைமடிய உயிரி வாழ்க்கை சுழல் – ஹாப்லோடிப்லாண்டிக்

14. ஒற்றை இரட்டைமடிய உயிரி வாழ்க்கைச்சூழல் பற்றியக் கூற்றுகளில் சரியாகப் பொருந்தாததை கண்டறி:

A) இவ்வகை வாழ்க்கை சுழல் பிரையோஃபைட்கள், டெரிடோஃபைட்களில் காணப்படுகிறது.

B) இது ஒற்றைமடிய கேமீட் உயிரி, இரட்டைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச்சுழல்களுக்கு இடைப்பட்ட நிலையில் உள்ளது.

C) கேமீட்டக, வித்தகத் தாவரநிலைகள் ஒரு செல்களால் ஆனவை. இருப்பினும் ஒடுங்கு நிலையில் மட்டும் வேறுபாடு காணப்படுகிறது.

D) குறுகிய காலம் வாழும் வித்தகத்தாவரம் பல செல்களை பெற்று கேமீட்டகத்தாவரத்தினை முழுமையாகவோ, ஓரளவிற்கோ சார்ந்துள்ளது.

விளக்கம்: கேமீட்டக, வித்தகத் தாவரநிலைகள் பல செல்களால் ஆனவை. இருப்பினும் ஓங்கு நிலையில் மட்டும் வேறுபாடு காணப்படுகிறது.

15. கீழ்க்கண்டவற்றுள் உண்மையான வேர், தண்டு, இலைகளற்ற எளிய தாவரம்__________

A) வேம்பு

B) ஒப்பன்சியா

C) அகேசியா

D) பாசிகள்

விளக்கம்: பாசிகள் உண்மையான வேர், தண்டு, இலைகளற்ற எளிய தாவரங்களாகும். புவியின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெருங்கடல்களாலும், கடல்களாலும் சூழப்பட்டுள்ளது. ஒளிச்சேர்க்கை செய்யும் பாசிகள் இங்கு மிகுதியாக உள்ளன.

16. “இந்திய பாசியியலின் தந்தை” எனப்படுபவர் யார்___________

A) ஹிப்போகிரேட்டஸ்

B) E.J. பட்லர்

C) M.O. பார்த்தசாரதி

D) எரோடட்டஸ்

விளக்கம்: “இந்திய பாசியியலின் தந்தை”எனப்படுபவர் M.O. பார்த்தசாரதி ஆவார். இவர் பாசிகளின் அமைப்பு, செல்லியல், இனப்பெருக்கம், வகைப்பாட்டியல் ஆகியவற்றைப் பற்றி ஆய்வுகளை மேற்க்கொண்டார். இவர் வால்வகேல்ஸ் பற்றி தனிக்கட்டுறை வெளியிட்டுள்ளார்.

17. M.O. பார்த்தசாரதி கண்டறிந்த புதிய பாசி இனங்களைக் கண்டறி.

A) ஃபிரிட்சியல்லா

B) எக்பல்லோசிஸ்டாப்சிஸ்

C) கேராசைஃபான்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஃபிரிட்சியல்லா, எக்பல்லோசிஸ்டாப்சிஸ், கேராசைஃபான், சிலிண்ட்சோகேப்சோப்சிஸ் ஆகிய புதிய பாசி இனங்களைக் கண்டறிந்தவர் M.O. பார்த்தசாரதி ஆவார்.

18. பொருத்துக:

வளரிடம் பாசிகள்

A) கடல்நீர் – 1. குளோரெல்லா

B) நன்னீர் – 2. ஃப்ரிட்சியல்லா, வவுச்சீரியா

C) நிலம் – 3. ஊடோகோணியம், யூலோத்ரிக்ஸ்

D) கடற்பஞ்சு – 4. கிராசிலேரியா, சர்காசம்

A) 1 2 3 4

B) 2 1 4 3

C) 3 4 2 1

D) 4 3 2 1

விளக்கம்:

வளரிடம் பாசிகள்

A) கடல்நீர் – 1. கிராசிலேரியா, சர்காசம்

B) நன்னீர் – 2. ஊடோகோணியம், யூலோத்ரிக்ஸ்

C) நிலம் – 3. ஃப்ரிட்சியல்லா, வவுச்சீரியா

D) கடற்பஞ்சு – 4. குளோரெல்லா

19. கீழ்க்கண்டவற்றுள் மெல்லுடலிகளின் ஓடுகளின் மேல் வளரும் பாசி___________

A) கிளாடோஃபோரா கிரிஸ்பேட்டா

B) டுனாலியல்லா

C) கிளாமிடோமோனஸ்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கிளாடோஃபோரா கிரிஸ்பேட்டா மெல்லுடலிகளின் ஓடுகளின் மேலும் வளர்கின்றன. சில பாசிகள் கடுமையான சூழ்நிலைகளிலும் வளரும் தகவமைப்பைப் பெற்றுள்ளன.

20. கீழ்க்கண்டவற்றுள் உப்பளத்தில் வளரும் திறன் பெற்ற பாசி____________

A) கிளாடோஃபோரா கிரிஸ்பேட்டா

B) டுனாலியல்லா

C) கிளாமிடோமோனஸ்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: டுனாலியல்லா பாசியானது உப்பளத்தில் வளரும் திறன் பெற்ற பாசியாகும்.

21. குளிர்நாட்ட பாசிகள் என்றழைக்கப்படுவது_________

A) கடலில் வாழும் பாசி

B) மழைக்காலங்களில் வாழும் பாசி

C) கடலோரத்தில் வாழும் பாசி

D) பனிப்பாறைகளில் வளரும் பாசி

22. பனிநிறைந்த மலைகளில் வளர்ந்து பனிக்கு சிவப்பு நிறத்தைத் தரும் பாசி_____________

A) கிளாமிடோமோனஸ்

B) கோலியோகீட்

C) கிளாடோஃபோரா கிரிஸ்பேட்டா

D) டுனாலியல்லா

விளக்கம்: கிளாமிடோமோனஸ் நிவாலிஸ் பனிநிறைந்த மலைகளில் வளர்ந்து, பனிக்கு சிவப்பு நிறத்தைத் தருகிறது. சில பாசிகள் நீர்வாழ்தாவரங்களின் மீது தொற்றுத்தாவரமாக வளர்கின்றன.

23. கீழ்க்கண்டவற்றுள் நீர்வாழ்த்தாவரங்களின் மீது தொற்றுத்தாவரமாக வாழும் பாசி___________

A) கிளாமிடோமோனஸ்

B) கோலியோகீட்

C) ரோடிமீனியா

D) BC இரண்டும்

24. பாசிகளைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு____________

A) ஆல்காலஜி

B) மைக்காலஜி

C) பைக்காலஜி

D) AC இரண்டும்

25. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) கிளாமிடோமோனஸ் – ஒரு செல் அமைப்புடன் நகரும் தன்மை கொண்டது.

2) குளோரெல்லா – ஒரு செல் அமைப்புடன் நகரும் தன்மை கொண்டது.

3) வால்வாக்ஸ் – காலனி அமைப்புடன் நகரும் தன்மை அற்றது.

4) ஹைட்ரோடிக்டியான் – காலனி அமைப்புடன் நகரும் தன்மை கொண்டது.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 3 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

1) கிளாமிடோமோனஸ் – ஒரு செல் அமைப்புடன் நகரும் தன்மை கொண்டது.

2) குளோரெல்லா – ஒரு செல் அமைப்புடன் நகரும் தன்மை கொண்டது.

3) வால்வாக்ஸ் – காலனி அமைப்புடன் நகரும் தன்மை கொண்டது.

4) ஹைட்ரோடிக்டியான் – காலனி அமைப்புடன் நகரும் தன்மை அற்றது.

26. பொருத்துக:

பாசிகள் வடிவங்கள்

A) வவுச்சீரியா – 1. வட்டு வடிவம்

B) ஸ்பைரோகைரா – 2. கிளைத்த இழை வடிவம் கொண்டது

C) கிளாடோஃபோரா – 3. கிளைத்தலற்ற இழை வடிவம் கொண்டது

D) கோலியோகீட் – 4. குழல் அமைப்புடையது

A) 1 2 3 4

B) 4 3 2 1

C) 2 1 4 3

D) 3 4 2 1

விளக்கம்:

பாசிகள் வடிவங்கள்

A) வவுச்சீரியா – 1. குழல் அமைப்புடையது

B) ஸ்பைரோகைரா – 2. கிளைத்தலற்ற இழை வடிவம் கொண்டது

C) கிளாடோஃபோரா – 3. கிளைத்த இழை வடிவம் கொண்டது

D) கோலியோகீட் – 4. வட்டு வடிவம்

27. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:

பாசிகள் வடிவங்கள்

1) ஃப்ரிட்சியல்லா – இலை வடிவம்

2) அல்வா – இரு வடிவ உடலம்

3) கெல்ப் – இராட்சத கடல் பாசி

A) 1 2 மட்டும் தவறு

B) 2 3 மட்டும் தவறு

C) 1 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

28. கீழ்க்கண்டவற்றுள் பாசிகள் பற்றியக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:

A) நீலப்பசும்பாசிகளைத் தவிர பிற பாசிகள் மெய்யுட்கரு உயிரிகளாகும்.

B) உடலத்தில் திசுத்தொகுப்பு வேறுபாடு காணப்படுவதில்லை.

C) பாசிகளின் செல்சுவர் கைட்டின் மற்றும் ஹைபாக்களால் ஆனது.

D) டயாட்டம்களில் சிலிக்கவால் ஆன செல்சுவர் காணப்படுகின்றது.

விளக்கம்: பாசிகளின் செல்சுவர் செல்லுலோஸ் மற்றும் ஹெமிசெல்லுலோசால் ஆனது.

29. பாசிகளில் உள்ள கேராவின் உடலமானது___________ஆல் சூழப்பட்டுள்ளது.

A) சோடியம் கார்பனேட்

B) கால்சியம் பாஸ்பேட்

C) கால்சியம் கார்பனேட்

D) கால்சியம் நைட்ரேட்

விளக்கம்: பாசிகளில் உள்ள கேராவின் உடலமானது கால்சியம் கார்பனேட்டால் சூழப்பட்டுள்ளது. சில பாசிகளில் அல்ஜினேட், அகார் அகார் மற்றும் கோஜீனன் உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருட்களான ஆல்ஜின், பாலிசாக்கரைட்களின் பாலிசல்பேட் எஸ்டர்கள் போன்றவை செல்சுவரில் காணப்படுகின்றன.

30. பாசிகளில் கீழ்க்கண்ட எந்த முறையில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

A) பாலிலா இனப்பெருக்கம்

B) பாலின இனப்பெருக்கம்

C) உடல இனப்பெருக்கம்

D) மேற்கண்ட அனைத்தும்

31. பொருத்துக:

பாசிகள் இனப்பெருக்க முறை

A) இரு பிளவுறுதல் – 1. யூலோத்ரிக்ஸ்

B) துண்டாதல் – 2. கிளாமிடோமோனஸ்

C) மொட்டுவிடுதல் – 3. ஸ்பேசிலேரியா

D) சிறுகுமிழ் மொட்டுவிடுதல் – 4. புரோட்டோசைஃபான்

A) 1 2 3 4

B) 4 3 2 1

C) 2 1 4 3

D) 3 4 2 1

விளக்கம்:

பாசிகள் இனப்பெருக்க முறை

A) இரு பிளவுறுதல் – 1. கிளாமிடோமோனஸ்

B) துண்டாதல் – 2. யூலோத்ரிக்ஸ்

C) மொட்டுவிடுதல் – 3. புரோட்டோசைஃபான்

D) சிறுகுமிழ் மொட்டுவிடுதல் – 4. ஸ்பேசிலேரியா

32. பொருத்துக:

பாசிகள் பாலிலா இனப்பெருக்கமுறை

A) இயங்குவித்துகள் – 1. ஊடோகோணியம்

B) நகராவித்துகள் – 2. வவுச்சீரியா

C) சுயவித்து – 3. குளோரெல்லா

D) ஹிப்கோஸ்போர் – 4. கிளாமிடோமோனஸ்

A) 1 2 3 4

B) 4 3 2 1

C) 2 1 4 3

D) 3 4 2 1

33. பாசிகளில் பாலினப்பெருக்கம் கீழ்க்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது.

A) ஒத்த கேமீட்களின் இணைவு

B) சமமற்ற கேமீட்களின் இணைவு

C) முட்டை கருவுறுதல்

D) மேற்கண்ட அனைத்தும்

34. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

பாசிகள் பாலினப்பெருக்கம்

1) ஒத்த கேமீட்களின் இணைவு – யூலோத்ரிக்ஸ்

2) சமமற்ற கேமீட்களின் இணைவு – சர்காஸம்

3) முட்டை கருவுறுதல் – பாண்டோரினா

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

பாசிகள் பாலினப்பெருக்கம்

1) ஒத்த கேமீட்களின் இணைவு – யூலோத்ரிக்ஸ்

2) சமமற்ற கேமீட்களின் இணைவு – பாண்டோரினா

3) முட்டை கருவுறுதல் – சர்காஸம்

35. “தி ஸ்ட்ரக்சர் அண்டு ரீப்ரொடக்ஷன் ஆஃப் தி ஆல்கே” என்ற நூலை வெளியிட்டவர்.

A) M. பார்த்தசாரதி

B) F.E. ஃப்ரிட்ச்

C) E.J. பட்லர்

D) ஹிப்போகிரேட்டஸ்

விளக்கம்: பாசிகளில் காணப்படும் நிறமிகள், கசையிழை வகை, சேமிப்பு உணவு, உடலமைப்பு, இனப்பெருக்க முறை ஆகியவற்றின் அடிப்படையில் S.E. ஃப்ரிட்ச் “தி ஸ்ட்ரக்சர் அண்டு ரீப்ரொடக்ஷன் ஆஃப் தி ஆல்கே” என்ற நூலில் பாசிகளை 11 வகுப்புகளின் கீழ் வகைப்படுத்தியுள்ளார்.

36. F.E. ஃப்ரிட்ச் தன்னுடைய “தி ஸ்ட்ரக்சர் அண்டு ரீப்ரொடக்ஷன் ஆஃப் தி ஆல்கே” என்ற நூலில் பாசிகளை எத்தனை வகுப்புகளாக வகைப்படுத்தியுள்ளார்.

A) எட்டு

B) ஒன்பது

C) பத்து

D) பதினொன்று

37. மிகத் தொன்மையான ஆல்கா__________என பதிவு குறிப்பில் உள்ளது.

A) பான்டோரினா

B) சர்காஸம்

C) கிரிப்பேனியா

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மிகத் தொன்மையான ஆல்கா கிரிப்பேனியா என பதிவு குறிப்பில் உள்ளது. இது ஏறத்தாழ 2100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு மிச்சிகளின் இரும்பு படிம தோன்றல்களில் கண்டறியப்பட்டது.

38. கீழ்க்கண்டவற்றுள் பசும்பாசிகள் என்றழைக்கப்படுவது__________

A) குளோரோஃபைசி

B) ஃபியோஃபைசி

C) ரோடோஃபைசி

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: இவை பொதுவாக “பசும்பாசிகள்”என அழைக்கப்படுகின்றன. இவற்றுள் சில நீரிலும் சில நிலத்திலும் வாழக்கூடியவை. மேலும் பசுங்கணிகத்தின் வடிவத்தில் மிகுந்த வேறுபாடு காணப்படுகிறது.

39. பொருத்துக:

குளோரோஃபைசி பாசி பசுங்கணிகத்தின் வடிவம்

A) கிளாமிடோமோனஸ் – 1. வலைப்பன்னல் வடிவம்

B) கேரா – 2. கச்சை வடிவம்

C) யூலோத்ரிக்ஸ் – 3. கிண்ண வடிவம்

D) ஊடோகோணியம் – 4. வட்டு வடிவம்

A) 1 2 3 4

B) 4 3 2 1

C) 2 1 4 3

D) 3 4 2 1

விளக்கம்:

குளோரோஃபைசி பாசி பசுங்கணிகத்தின் வடிவம்

A) கிளாமிடோமோனஸ் – 1. கிண்ண வடிவம்

B) கேரா – 2. வட்டு வடிவம்

C) யூலோத்ரிக்ஸ் – 3. கச்சை வடிவம்

D) ஊடோகோணியம் – 4. வலைப்பன்னல் வடிவம்

40. குளோரோஃபைசி பற்றிய கீழ்க்கண்டகூற்றுகளில் தவறானதைக் கண்டறி:

A) பச்சையம் a,b ஆகியவை முக்கிய ஒளிச்சேர்க்கை நிறமிகள் ஆகும்.

B) பசுங்கணிகத்திலுள்ள பைரினாய்டுகள் தரசம் சேமிக்கின்றன. மேலும் இவைகள் புரதத்தையும் பெற்றுள்ளன.

C) செல்சுவரின் உள்ளடுக்கு செல்லுலோசாலும் வெளியடுக்கு கைட்டினாலும் ஆனது.

D) துண்டாதல் முறையில் உடல் இனப்பெருக்கமும் இயங்கு வித்துகள், நகராவித்துகள் உறக்க நகராவித்துகள் மூலம் பாலிலா இனப்பெருக்கமும் நடைபெறுகிறது.

விளக்கம்: செல்சுவரின் உள்ளடுக்கு செல்லுலோசாலும் வெளியடுக்கு பெக்டினாலும் ஆனது.

41. கீழ்க்கண்டவற்றுள் பழுப்புப்பாசிகள் என்றழைக்கப்படுவது_________

A) குளோரோஃபைசி

B) ஃபியோஃபைசி

C) ரோடோஃபைசி

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: இவ்வகுப்பைச் சார்ந்த பாசிகள் “பழுப்புப்பாசிகள்” என அறியப்படுகின்றன. பெரும்பாலானவை கடலில் வாழ்பவை. ஃப்ளியூரோக்ளாடியா நன்னீரில் வாழ்கிறது. உடலம் இழை வடிவம் (எக்டோகார்பஸ்), இலை வடிவம் (டிக்டியோட்டா) முதல் மிகப்பெரிய ராட்சத கடல்பாசிகள் (லாமினேரியா மைக்ரோசிஸ்டிஸ்) வரை வேறுபடுகிறது.

42. ஃபியோஃபைசி பற்றியக் கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

A) பச்சையம் a மற்றும் c கரோடினாய்டுகள், ஸாந்தோஃபில்கள் போன்ற நிறமிகள் காணப்படுகின்றன.

B) செம்பழுப்பு நிறமியான ஃபியுக்கோ ஸாந்தின் காணப்படுகிறது.

C) இதுவே இவ்வகுப்பு பாசிகளுக்கு ஆலிவ் பச்சையிலிருந்து பழுப்பு நிறம் வரை வேறுபட்டிருக்க காரணமாகிறது.

D) மானிட்டால், லாமினாரின் சேமிப்பு உணவாகும்.

விளக்கம்: தங்கப் பழுப்பு நிறமியான ஃபியுக்கோ ஸாந்தின் காணப்படுகிறது.

43. கீழ்க்கண்டவற்றுள் “சிவப்புப்பாசிகள்” என்று அழைக்கப்படுவது________

A) குளோரோஃபைசி

B) ஃபியோஃபைசி

C) ரோடோஃபைசி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இவை பொதுவாக “சிவப்புபாசிகள்” என அறியப்படுகின்றன. பெரும்பாலானவை கடலில் வாழ்பவை. உடலம் பல செல்களால் ஆனது. கண்களுக்கு புலப்படுபவை. பல்வகை உருவ அமைப்புடையது. அதிக சுண்ணாம்பு நிறைந்துள்ளதால் பவழத்திட்டுகளை உருவாக்குகின்றன. பச்சையம் a தவிர r– பைக்கோஎரித்ரின்,r– பைக்கோசயனின் போன்ற ஒளிச்சேர்க்கை நிறமிகளும் காணப்படுகின்றன. பாலிலா இனப்பெருக்கம் ஒற்றை வித்துகள், இடைநிலை வித்துகள், நான்மய வித்துகள் நடைபெறுகிறது. புளோரிடிய தரசம் சேமிப்புப் பொருளாக உள்ளது.

44. பாசிகளில் பெண் இனப்பெருக்க உறுப்பு___________என்று அழைக்கப்படுகிறது.

A) ஸ்பெர்மேஷியம்

B) கார்போகோணியம்

C) வித்தகம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ரோடோஃபைசியில் முட்டைகரு இணைவு முறையில் பாலினப்பெருக்கம் நடைபெறுகிறது. ஆண் இனப்பெருக்க உறுப்பான ஸ்பெர்மேஷியவித்தகத்திலிருந்து ஸ்பெர்மேஷியம் தோன்றுகிறது. பெண் இனப்பெருக்க உறுப்பு கார்போகோணிம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்பெர்மேஷியம் நீரோட்டத்தில் எடுத்துச் செல்லப்பட்டு முட்டை உட்கருவுடன் இணைந்து கருமுட்டை உருவாகிறது.

45. கீழ்க்கண்டவற்றுள் உணவாக பயன்படும் பாசிகளுல் அல்லாதது எது?

A) குளோரெல்லா

B) லாமினேரியா

C) செபலூரஸ் வைரசென்ஸ்

D) சர்காஸம்

விளக்கம்: குளோரெல்லா, லாமினேரியா, சர்காஸம், அல்வா, என்டிரோமார்பா ஆகியவை உணவாக உட்கொள்ளத் தகுந்த பாசிகளாகும்.

46. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று நுண்ணுயிரியியல் ஆராய்ச்சி கூடங்களில் வளர் ஊடகம் தயாரிக்க பயன்படுகிறது?

A) கேராஜினின்

B) ஆல்ஜினேட்

C) அகார் அகார்

D) குளோரெல்லின்

விளக்கம்: கிராசிலேரியா, ஜெலிடியல்லா, ஜிகார்டினா ஆகியவற்றின் செல்சுவரிலிருந்து பெறப்படும் அகார் அகார் என்னும் பொருள், நுண்ணுயிரியியல் ஆராய்ச்சி கூடங்களில் வளர் ஊடகம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. புட்டியிடுதல் துறையில் உணவு பொதிவு செய்தல், அழகு பொருட்கள், காகிதம், துணிகள் தொடர்பான தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

47. கான்ட்ரஸ் கிரிஸ்பஸ் என்ற பாசியிலிருந்து பெறப்படும் கேராஜினின்____________தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது.

A) பற்பசை

B) வண்ணப்பூச்சு

C) இரத்தம் உறைவிகள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கான்ட்ரஸ் கிரிஸ்பஸிலிருந்து பெறப்படும் கேராஜினிலிருந்து பற்பசை, வண்ணப்பூச்சி, இரத்தம் உறைவிகள் போன்றவை தயாரிக்கப்படுகிறது.

48. ஆஸ்கோபில்லம் பாசியிலிருந்து பெறப்படும் ஆல்ஜினேட்__________தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

A) ஐஸ்கிரிம்

B) வண்ணப்பூச்சு

C) தீப்பற்றிக் கொள்ளாத துணிகள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: லேமினேரியா, ஆஸ்கோபில்லம் போன்ற பாசியிலிருந்து பெறப்படும் ஆல்ஜினேட் ஆனது ஐஸ்கிரிம், வண்ணப்பூச்சு, தீப்பற்றிக் கொள்ளாத துணிகள் தாயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

49. கீழ்க்கண்டவற்றுள் தீவனமாக பயன்படும் பாசிகளுல் அல்லாதது எது.

A) கான்ட்ரஸ் கிரிஸ்பஸ்

B) லாமினேரியா

C) சர்காஸம்

D) ஆஸ்கோபில்லம்

விளக்கம்: லாமினேரியா, சர்காஸம், ஆஸ்கோபில்லம், பியுகஸ் ஆகிய பாசிகள் தீவனமாகப் பயன்படுகிறது.

50. நீர் வடிகட்டி, மின்காப்பு போன்றவற்றில் வலிமைக் கூட்டும் பொருளாக சேர்க்கப்படுவது.

A) கிராசிலேரியா

B) டயாட்டம்

C) என்டிரோமார்பா

D) ஆஸ்கோபில்லம்

விளக்கம்: டயாட்டம் என்ற பாசியிலிருந்து பெறப்படும் டையட்டமேசிய மண் – நீர் வடிகட்டி, மின்காப்பு பொருள்கள் தயாரிக்க, கான்கீரிட் மற்றும் ரப்பர் வலிமை கூட்டும் பொருளாக சேர்க்கப்படுகிறது.

51. கீழ்க்கண்டவற்றுள் உரங்களாக பயன்படுத்த உதவும் பாசிகளுல் அல்லாதது எது.

A) லித்தோபில்லம்

B) குளோரெல்லா

C) கேரா

D) ஃபியுகஸ்

விளக்கம்: லித்தோபில்லம், கேரா, ஃபியுகஸ் போன்ற பாசிகள் உரங்களாக பயன்படுத்தப்படுகிறது.

52. கீழ்க்கண்டவற்றுள் உயிர்எதிர்ப்பொருள் தாயாரிக்க பயன்படும் பாசி_______

A) செபலூரஸ் வைரசென்ஸ்

B) கிளாமிடோமோனாஸ்

C) குளோரெல்லா

D) செனிடெஸ்மஸ்

53. கீழ்க்கண்டவற்றுள் கழிவு நீர் சுத்திகரித்தலில் பயன்படுத்தப்படும் பாசி____________

A) குளொரெல்லா

B) செனிடெஸ்மஸ்

C) கிளாமிடோமோனாஸ்

D) மேற்கண்ட அனைத்தும்

54. கீழ்க்கண்டவற்றுள் காஃபி தாவரத்தில் சிவப்பு துரு நோயை ஏற்படுத்தும் பாசி வகை___________

A) செபலூரஸ் வைரசென்ஸ்

B) கிளாமிடோமோனாஸ்

C) குளொரெல்லா

D) செனிடெஸ்மஸ்

55. கீழ்க்கண்டவற்றுள் உயிர் எரிபொருள் தயாரித்தலில் பயன்படுத்தப்படும் பாசி____________

A) செபலூரஸ் வைரசென்ஸ்

B) கிளாமிடோமோனாஸ்

C) பாட்ரியோகாக்கஸ் பிரோனி

D) செனிடெஸ்மஸ்

விளக்கம்: பாட்ரியோகாக்கஸ் பிரோனி எனும் பசும்பாசி உயிர் எரிபொருள் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தை காப்பதில் பாசிகள் இராட்சத கடற்பாசிகள் அயோடின் நிறைந்த ஆதாரப் பொருட்களாகும். குளோரெல்லா தனி செல் புரதமாக பயன்படுத்தப்படுகிறது.

56. உப்பலங்களில் வளரும் டுனாலியல்லா சலைனா எனும் பாசி உடல்நலத்திற்கு தேவையான________யினைத் தருகிறது.

A) புரதம்

B) கொழுப்பு

C) β – கரோட்டின்

D) தாதுஉப்புகள்

விளக்கம்: உப்பளங்களில் வளரும் டுனாலியல்லா சலைனா எனும் பாசி உடல்நலத்திற்கு தேவையான β– கரோட்டினைத் தருகிறது.

57. கீழ்க்கண்ட எந்த பாசிக் கூழ்மங்கள் அறுவடைச் செய்ய வணிகரீதியில் வளர்க்கப்படுகின்றன.

A) கப்பாபைகஸ் ஆல்வர்ஜே

B) கிராசிலேரியா எடுலிஸ்

C) ஜெலிடியெல்லா ஏசரோசா

D) மேற்கண்ட அனைத்தும்

58. கீழ்க்கண்டவற்றுள் கடல்பனை என்றழைக்கப்படும் பாசி___________

A) கப்பாபைகஸ் ஆல்வர்ஜே

B) போஸ்டிலியா பால்மிபார்மிஸ்

C) கிராசிலேரியா எடுலிஸ்

D) ஜெலிடியெல்லா ஏசரோசா

59. இந்தியப் பிரையோலஜியின் தந்தை என்றழைக்கப்படுபவர்_________

A) சிவ் ராம் காஷியாப்

B) பார்த்தசாரதி

C) பட்லர்

D) சாமுவேல் ஹானிமேன்

விளக்கம்: இந்தியப் பிரையோலஜியின் தந்தை என்று அறியப்படுபவர் சிவ் ராம் காஷியாப் ஆவார். இவர் “லிவர்வோர்ட்ஸ் ஆஃப் வெஸ்டர்ன் ஹிமாலயாஸ் அண்ட் பஞ்சாப் பிளெயின்ஸ்” என்ற நூலை வெளியிட்டார். அட்ச்சின் சோனிஸல்லா, சாச்சியா, சிவார்டியெல்லா மற்றும் ஸ்டீபன் சோனியெல்லா போன்ற புதிய பேரினங்களை இவர் கண்டு பிடித்துள்ளார்.

60. “லிவர்வோர்ட்ஸ் ஆஃப் வெஸ்டர்ன் ஹிமாலயாஸ் அண்ட் பஞ்சாப் பிளெயின்ஸ்” என்ற நூலை வெளியிட்டவர்_________

A) பெந்தம் ஹீக்கர்

B) லின்னேயஸ்

C) சிவ் ராம் காஷியாப்

D) சாமுவேல் ஹானிமேன்

61. சிவ் ராம் காஷியாப் அவர்களால் கண்டறியப்பட்ட புதிய வகை பேரினங்களுல் அல்லாததைக் கண்டறி:

A) அட்ச்சின்சோனிஸல்லா

B) சிவார்டியெல்லா

C) பாட்ரியோகாக்கஸ் பிரோனி

D) ஸ்டீபன் சோனியெல்லா

62. கீழ்க்கண்டவற்றுள் வாஸ்குலத்திசுக்களற்ற பூவாத்தாவரங்கள் என்று அழைக்கப்படுவது____________

A) பாசிகள்

B) ஆல்காக்கள்

C) பிரையோஃபைட்டாக்கள்

D) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

விளக்கம்: பிரையோஃபைட்கள் ஈரமான, நிழலான இடங்களில் வளரக்கூடிய எளிய நில வாழ்தாவரங்களாகும். இவைகளில் வாஸ்குலத்திசுக்கள் காணப்படுவதில்லை. எனவே இவை “வாஸ்குலத்திசுக்களற்ற பூவாத்தாவரங்கள் என்று அழைக்கப்படுகிறது. நிலவாழ்தாவரங்களாக இருப்பினும் வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்ய நீர் அவசியமாதலால் தாவரப் பெரும்பிரிவின் “நீர்நில வாழ்வன” எனவும் இவை அழைக்கப்படுகின்றன.

63. கீழ்க்கண்டவற்றுள் பிரையோஃபைட்களின் பொதுப்பண்புகள் பற்றிய கூற்றுகளில் பொருந்தாததைக் கண்டறி:

A) வேர், தண்டு, இலை என வேறுபாடுறாத தாவர உடலம் கேமீட்டக தாவரச் சந்ததியைச் சார்ந்தது.

B) பெரும்பாலானவை எளிய, நிலவாழ்த்தாவரங்கள், ஒரு சில நீர்வாழ்வன.

C) வாழ்க்கைச் சுழற்சியில் பெரும்பகுதியை நீண்ட வாழ்நாள் கொண்ட கேமீட்டக உடல நிலை அக்கிரமிக்கிறது. ஈரல் தாவரங்கள், கொம்புத் தாவரங்கள் போன்றவை உடல வகையைச் சார்ந்தவை.

D) வாஸ்குலத் திசுக்களான சைலமும், புளோயமும் காணப்படுகின்றன.

விளக்கம்: வாஸ்குலத் திசுக்களான சைலமும், புளோயமும் காணப்படுவதில்லை. ஆகையால் இவை வாஸ்குலத்திசுக்களற்ற பூவாத்தாவரங்கள் எனவும் அறியப்படுகின்றன.

64. பொருத்துக:

பிரையோஃபைட்கள் உடல இனப்பெருக்கம்

A) ரிக்சியா ப்ளுயிட்டன்ஸ் – 1. துண்டான சிறு கிளைகள்

B) ஆந்தோசெரஸ் – 2. வேர்க்கிழங்குகள்

C) பிரையாப்டெரிஸ் – 3. வேற்றிட மொட்டுகள்

D) மார்கான்ஷியா – 4. ஜெம்மாக்கள் உருவாதல்

A) 1 2 3 4

B) 4 3 2 1

C) 3 2 1 4

D) 2 1 4 3

விளக்கம்:

பிரையோஃபைட்கள் உடல இனப்பெருக்கம்

A) ரிக்சியா ப்ளுயிட்டன்ஸ் – 1. வேற்றிட மொட்டுகள்

B) ஆந்தோசெரஸ் – 2. வேர்க்கிழங்குகள்

C) பிரையாப்டெரிஸ் – 3. துண்டான சிறு கிளைகள்

D) மார்கான்ஷியா – 4. ஜெம்மாக்கள் உருவாதல்

65. பிரையோஃபைட்டுகளின் பொதுப்பண்புகளில் பொருந்தாததைக் காண்க.

A) பாலினப்பெருக்கம் முட்டைகரு இணைவு முறையைச் சார்ந்தது. ஆந்திரீடியமும், ஆர்க்கிகோணியமும் பல செல்களால் ஆன பாதுகாப்பு உறையால் சூழப்பட்டுள்ளன.

B) ஆந்திரீடியங்களில் உருவாகும் இரு கசையிழைகளை கொண்ட நகரும் ஆண் கேமீட்கள் மெல்லிய நீர் மென்படலத்தில் நீந்தி ஆர்க்கிகோணியத்தை அடைந்து முட்டையுடன் இணைந்து இரட்டைமடிய கருமுட்டையை உருவாக்குகின்றது.

C) கருவுறுதலுக்கு நீர் அவசியமில்லை.

D) வித்தகத் தாவரச் சந்ததியின் முதல் செல் கருமுட்டை ஆகும். இது குன்றலில்லா செல் பகுப்பிற்குட்பட்டு வேறுபாடு இடையாக பல செல் கருவைத் தோற்றுவிக்கிறது.

விளக்கம்: கருவுறுதலுக்கு நீர் இன்றியமையாதது.

66. பிரையோஃபைட்டுகளின் பொதுப்பண்புகளில் பொருந்தாததைக் காண்க.

1) வித்தகத் தாவரம் கேமீட்டக தாவரத்தைச் சார்ந்து வாழும் தன்மை கொண்டது.

2) வித்தகத் தாவரம் பாதம், சீட்டா, வெடிவித்தகம் என மூன்று பகுதிகளாக வேறுபாடு அடைந்துள்ளது.

3) வித்தகத் தாவரத்தின் பாதம் கேமீட்டக தாவரத்தில் புதைந்துள்ளது. வித்தகத் தாவரத்திற்குத் தேவையான ஊட்டப்பொருட்களும், நீரும் இதன் வழியாகக் கடத்தப்படுகிறது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) மேற்கண்ட எதுவுமில்லை

67. பிரையோஃபைட்களை மூன்று வகுப்புகளாக வகைப்படுத்தியவர்.

A) புரோஸ்காயர்

B) ஜார்ஜ்

C) ஜோசப் டால்டன் ஹீக்கர்

D) கரோலஸ் லின்னேயஸ்

விளக்கம்: 1957 – ல் புரோஸ்காயர் பிரையோஃபைட்களை மூன்று வகுப்புகளாக வகைப்படுத்தினார்.

68. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) ஹெப்பாட்டிகாப்சிடா – ரிக்ஸியா, மார்கான்ஷியா, பொரெல்லா

2) ஆந்த்ரோசெரடாப்சிடா – ஃபியூனேரியா, பாலிடிரைக்கம்

3) பிரையாப்சிடா – ஆந்த்தோசெராஸ், டென்ரோசெராஸ்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

1) ஹெப்பாட்டிகாப்சிடா – ரிக்ஸியாஇ மார்கான்ஷியா, பொரெல்லா

2) ஆந்த்ரோசெரடாப்சிடா – ஆந்த்தோசெராஸ், டென்ரோசெராஸ்

3) பிரையாப்சிடா – ஃபியூனேரியா, பாலிடிரைக்கம்

69. கீழ்க்கண்டவற்றுள் சாறுண்ணி வகை பிரையோஃபைட்களைக் கண்டறி:

A) பக்ஸ்பாமியா ஏபில்லா

B) கிரிப்டோதாலஸ்

C) AB இரண்டும்

D) மார்கான்ஷியா

விளக்கம்: பக்ஸ்பாமியா ஏபில்லா, கிரிப்டோதாலஸ் மிராபிலிஸ் போன்றவை சாற்றுண்ணி வகை பிரையோஃபைட்களாகும்.

70. கீழ்க்கண்டவற்றுள்உணவாகப் பயன்படுத்தப்படும் பிரையோஃபைட்களுல் பொருந்தாததைக் கண்டறி:

A) ஸ்பேக்னம்

B) மார்கான்ஷியா பாலிமார்பா

C) பிரையம்

D) பாலிடிரைக்கம்

விளக்கம்: ஸ்பாக்னம், பிரையம், பாலிடிரைக்கம் ஆகியன உணவாக உபயோகப்படுத்தப்படுகின்றன.

71. கூற்று (i): ஸ்பேக்னம் தாவரங்கள் மிகையாக வளர்ந்து மடிந்த பின்னர்ப் புவியில் புதையுண்டு அழுத்தப்பட்டுக் கடினமான “பீட்” உண்டாகிறது.

கூற்று (ii): இது வட ஐரோப்பாவில் (நெதர்லாந்து) வணிகரீதியில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

A) கூற்று i சரி ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

72. கீழ்க்கண்டவற்றுள் ஸ்பாக்னம் தாவரத்தில் இருந்து பெறப்படும் பொருட்களைக் கண்டறி:

A) நைட்ரேட்கள்

B) பழுப்பு நிறச்சாயம்

C) டானின் பொருட்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

73. கீழ்க்கண்டவற்றுள் அடைக்கும் பொருளாக தோட்டக்கலைத்துறையில் பயன்படுத்தப்படும் பொருளைக் கண்டறி:

A) ஸ்பாக்னம்

B) பீட்

C) AB இரண்டும்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஸ்பாக்னம் தாவரத்திலிருந்து நைட்ரேட்கள், பழுப்பு நிறச்சாயம், டானின் பொருட்கள் போன்றவைகளை இதிலிருந்து பெறப்படுகிறது. ஸ்பேக்னம் மற்றும் பீட் ஆகியவை அதிகளவில் நீரைத் தேக்கிவைக்கும் திறன் கொண்டிருப்பதால் அடைப் பொருட்களாகத் தோட்டக்கலைத்துறையில் பயன்படுத்தப்படுகின்றன.

74. கீழ்க்கண்டவற்றுள் நுரையீரல் காசநோயை குணப்படுத்த உதவும் தாவரம்___________

A) ஸ்பாக்னம்

B) பீட்

C) மார்கான்ஷியம் பாலிமார்பா

D) பக்ஸ்பாமியா ஏபில்லா

விளக்கம்: மார்கான்ஷியம் பாலிமார்பா நுரையீரல் காசநோயை குணப்படுத்த உதவுகின்றது. ஸ்பேக்னம், பிரையம், பாலிடிரைக்கம் ஆகியன உணவாக உபயோகப்படுத்தப்படுகின்றன. பிரையோஃபைட்கள் வழிமுறை வளர்ச்சியின் மூலமாக மண் தோன்றுதலுக்கும், மண்வளத்தினைப் பாதுகாப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றன.

75. முதன் முதலாக உண்மை நிலத்தாவரமாக அறியப்படும் தாவரம்_____________

A) தாலோஃபைட்

B) பிரையோஃபைட்

C) டெரிடோஃபைட்

D) ஜிம்னோஸ்ஃபெர்ம்

விளக்கம்: முதன்முதலாக உண்மை நிலத்தாவரத் தொகுப்பாக அறியப்படுபவை டெரிடோஃபைட்களாகும். மேலும் இவைதான் வாஸ்குலத் திசுக்களான சைலம், ஃபுளோயம் பெற்ற முதல் தாவரங்களானதால் “வாஸ்குலத்தொகுப்புடைய பூவாத்தாவரங்கள்” என அழைக்கப்படுகின்றன.

76. வாஸ்குலத் திசுக்களான சைலம் மற்றும் புளோயத்துடன் புவியில் தோன்றிய முதல் தாவரத்தொகுப்பு________

A) தாலோஃபைட்

B) டெரிடோஃபைட்

C) பிரையோஃபைட்

D) ஜிம்னோஸ்ஃபெர்ம்

77. டெரிடோஃபைட்கள் பற்றிய கருத்துகளில் தவறானதைக் கண்டறி:

1) டெரிடோஃபைட்கள் சைலம், ஃபுளோயம் ஆகிய வாஸ்குலத் திசுக்களைப் பெற்று நிலச்சூழலுக்கேற்பத் தம்மைச் சிறப்பாகத் தகவமைத்துக் கொண்ட தாவரங்கள் ஆகும்.

2) இவை பேலியோசோயிக் ஊழியின் டிவோனியன் காலகட்டத்தில் மிகுதியாகக் காணப்பட்டன.

3) இத்தாவரங்கள் பெரும்பாலும் ஈரபதமற்ற, வெப்பமான பகுதிகளில் வளரக்கூடிய சிறு செடிகளாகும்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: இத்தாவரங்கள் பெரும்பாலும் ஈரபதம் நிறைந்த, குளிர்ந்த நீருள்ள, நிழலான பகுதிகளில் வளரக்கூடிய சிறு செடிகளாகும்.

78. கீழ்க்கண்டவற்றுள் டெரிடோஃபைட்களின் பொதுப்பண்புகளுல் பொருந்தாதது எது.

A) தாவர உடல் ஓங்கிய வித்தகத் தாவர(n) சந்ததியைச் சார்ந்தது. இது உண்மையான வேர், தண்டு, இலை என வேறுபாடு அடைந்து காணப்படுகிறது.

B) வேற்றிட வேர்கள் காணப்படுவதில்லை.

C) தண்டு ஒரு பாத அல்லது கவட்டை கிளைத்தலைப் பெற்றுள்ளது.

D) நுண்ணிலைகள் அல்லது பேரிலைகள் கொண்டுள்ளன.

விளக்கம்: வேற்றிட வேர்கள் காணப்படுகின்றன.

79. கீழ்க்கண்டவற்றுள் டெரிடோஃபைட்களின் பொதுப்பண்புகளுல் பொருந்தாதது எது.

A) வாஸ்குலக் கற்றைகள் புரோட்டோஸ்டீல் வகையைச் சார்ந்தவை. சிலவற்றில் சைபனோஸ்டீல் காணப்படுகிறது. எ.கா. மார்சீலியா.

B) நீரைக் கடத்தும் முக்கியக் கூறுகள் டிரக்கீடுகள் ஆகும். செலாஜினெல்லாவில் சைலக்குழாய்கள் காணப்படுவதில்லை.

C) வித்தை தாங்கும் பை போன்ற பகுதி வித்தகம் எனப்படும். வித்தகங்கள் வித்தக இலைகள் எனப்படும் சிறப்பு இலைகளில் தோன்றுகின்றன. சில தாவரங்களில் வித்தகயிலைகள் நெருக்கமாக அமைந்து கூம்பு அல்லது ஸ்ட்ரொபைலஸ் என்ற அமைப்பை உருவாக்குகின்றன.

D) இவை ஒத்தவித்துத்தன்மை அல்லது மாற்றுவித்துத்தன்மை உருவாக்குகின்றன.

விளக்கம்: நீரைக் கடத்தும் முக்கியக் கூறுகள் டிரக்கீடுகள் ஆகும். செலாஜினெல்லாவில் சைலக்குழாய்கள் காணப்படுகின்றன.

80. கீழ்க்கண்டவற்றுள் டெரிடோஃபைட்களின் பொதுப்பண்புகளுல் சரியானதைக் கண்டறி:

1) வித்தகம் உண்மை வித்தகம் அல்லது மெலிவித்தகம் என இருவகை வளர்ச்சியைச் சார்ந்துள்ளது.

2) வித்துதாய்செல் குன்றாப் பிரிவிற்கு உட்பட்டு ஒற்றைமடிய வித்துகளை உருவாக்குகின்றன.

3) வித்துகள் முளைத்துப் புசுமையான, பல செல் கொண்ட, தனித்த வாழும் திறன் கொண்ட, இதய வடிவ ஒற்றைமடிய சார்பின்றி வாழும் முன்உடலத்தை உருவாக்குகின்றன.

A) 1, 2 மட்டும் சரி

B) 2, 3 மட்டும் சரி

C) 1, 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: வித்துதாய்செல் குன்றல் பிரிவிற்கு உட்பட்டு ஒற்றைமடிய வித்துகளை உருவாக்குகின்றன.

81. டெரிடோபைட்டுகளில் உடல இனப்பெருக்கமானது எவ்வாறு நடைபெறுகிறது.

A) துண்டாதல்

B) ஓய்வுநிலை மொட்டுகள்

C) வேர்க்கிழங்குகள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: உடல இனப்பெருக்கம் துண்டாதல், ஓய்வுநிலை மொட்டுகள், வேர்க்கிழங்குகள், வேற்றிட மொட்டுகள் தோற்றுவித்தல் ஆகிய முறைகளில் நடைபெறுகிறது.

82. கீழ்க்கண்டவற்றுள் டெரிடோஃபைட்களின் பொதுப்பண்புகளுல் பொருந்தாதது எது.

1) பாலினப்பெருக்கம் கருமுட்டை இணைவு வகையைச் சார்ந்தது. ஆந்திரிடியம் ஆர்க்கிகோனியம் முன்உடலத்தில் தோற்றுவிக்கப்படுகிறது.

2) ஆந்திரீடியம் பலகசையிழைகளை கொண்ட சுருண்ட அமைப்புடைய நகரும் தன்மையற்ற ஆண் கேமீட்களை உருவாக்குகிறது.

3) கருவுறுதலுக்கு நீர் அவசியமாகும் கருவுறுதலுக்குப் பின் உருவாகும் இரட்டைமடிய கருமுட்டை குன்றலில்லா பகுப்பிற்கு உட்பட்டுக் கருவைத் தோற்றுவிக்கிறது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: ஆந்திரீடியம் பலகசையிழைகளை கொண்ட சுருண்ட அமைப்புடைய நகரும் ஆண் கேமீட்களை உருவாக்குகிறது.

83. கீழ்கண்டத் தாவரங்களில் வெட்டுமலர் ஒழுங்கமைப்பு செயல்முறைகளில் பயன்படும் டெரிடோஃபைட் தாவரம்____________

A) மார்சீலியா

B) ருமோஹ்ரா அடியாண்டிபார்மிஸ்

C) அசோல்லா

D) டிரையாப்டரிஸ் பிலிக்ஸ்

84. பொருத்துக:

டெரிடோஃபைட் தாவரம் பயன்பாடு

A) மார்சீலியா – 1. உயிரி உரமாக பயன்படுகிறது

B) அசோல்லா – 2. உணவாகப் பயன்படுகிறது

C) டிரையாப்டரிஸ் பிலிக்ஸ் – 3. நாடாப்புழு நீக்குவதற்கு

D) சைலோட்டம் – 4. சைலோட்டம்

A) 1 2 3 4

B) 4 3 2 1

C) 3 2 1 4

D) 2 1 3 4

விளக்கம்:

டெரிடோஃபைட் தாவரம் பயன்பாடு

A) மார்சீலியா – 1. உணவாகப் பயன்படுகிறது

B) அசோல்லா – 2. உயிரி உரமாக பயன்படுகிறது

C) டிரையாப்டரிஸ் பிலிக்ஸ் – 3. நாடாப்புழு நீக்குவதற்கு

D) சைலோட்டம் – 4. சைலோட்டம்

85. மண்ணில் உள்ள வன் உலோகங்களை நீக்கம் செய்யப் பயன்படும் டெரிடோஃபைட் தாவரம்____________

A) லைக்கோபோடியம்

B) லாஜினெல்லா

C) ஆஞ்சியாப்டெரிஸ்

D) டெரிஸ் விட்டேட்டா

விளக்கம்: டெரிஸ் விட்டேட்டா என்ற டெரிடோஃபைட் தாவரம் மண்ணில் உள்ள வன்உலோகங்களை நீக்கம் செய்து உயிரிவழி சீர்திருத்தம் செய்யப் பயன்படுகிறது.

86. பச்சை நிறச் சாயத்தை தரும் டெரிடோஃபைட் தாவரம்____________

A) லைக்கோபோடியம்

B) டெரிடியம் சிற்றினம்

C) ஆஞ்சியாப்டெரிஸ்

D) டெரிஸ் விட்டேட்டா

87. ஈக்விசிட்டம் தாவரத்தின் எந்த பகுதி அழுக்கு அகற்றுதலுக்கு பயன்படுகிறது.

A) வேர்

B) இலை

C) தண்டு

D) மலர்

88. கீழ்க்கண்டவற்றுள் அலங்காரச் தாவரச் வகைகளுல் பொருந்தாதது எது.

A) மராஷியா

B) லைக்கோபோடியம்

C) மாஸ்

D) சைலோட்டம்

விளக்கம்: சைலோட்டம், லைக்கோபோடியம், செலாஜினெல்லா, ஆஞ்சியாப்டெரிஸ், மராஷியா போன்ற தாவரங்கள் அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகிறது.

89. பொருத்துக:

A) ருமோஹ்ரா அடியாண்டிபார்மிஸ் – 1. கிளப் மாஸ்கள்

B) லைக்கோபோடியம் – 2. தோலொத்த இலைப்பெரணி

C) ஈக்குவிசிட்டம் – 3. நீர்ப் பெரணிகள்

D) அசோல்லா – 4. குதிரைவாலிகள்

A) 1 2 3 4

B) 2 1 4 3

C) 4 3 2 1

D) 3 2 1 4

விளக்கம்:

A) ருமோஹ்ரா அடியாண்டிபார்மிஸ் – 1. தோலொத்த இலைப்பெரணி

B) லைக்கோபோடியம் – 2. கிளப் மாஸ்கள்

C) ஈக்குவிசிட்டம் – 3. குதிரைவாலிகள்

D) அசோல்லா – 4. நீர்ப் பெரணிகள்

90. வாஸ்குலத் தாவரங்களின் ஓங்குத்தன்மைக்கும் வெற்றிகரமான வளர்ச்சிக்குமான காரணங்களில் தவறானதைக் கண்டறி:

A) பரந்து வளர்ந்த வேர்த்தொகுப்பு.

B) திறனற்ற கடத்துத் திசுக்கள் காணப்படுதல்.

C) உலர்தலைத் தடுப்பதற்குக் கியூட்டிகிள் காணப்படுதல்.

D) வளிப் பரிமாற்றம் திறம்பட செயல்பட இலைத்துளைகள் காணப்படுதல்.

விளக்கம்: திறன்மிக்க கடத்துத் திசுக்கள் காணப்படுதல்.

91. ரெய்மர் என்பவரால் டெரிடோஃபைட்டிற்கான வகைபாடு முன்மொழியப்பட்ட ஆண்டு__________

A) 1948

B) 1950

C) 1954

D) 1958

விளக்கம்: ரெய்மர் 1954 – ல் டெரிடோஃபைட்களுக்கு ஒரு வகைப்பாட்டை முன்மொழிந்தார். இதில் டெரிடோஃபைட்கள் ஐந்து துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை – சைலோஃபைட்டாப்சிடா, சைலோடாப்சிடா, லைகாப்சிடா, ஸ்பீனாப்சிடா, டீராப்சிடா.

92. ரெய்மர் வகைப்பாட்டில் உள்ள துறை மற்றும் குடும்பங்கள் முறையே________

A) துறை 15, குடும்பம் 40

B) துறை 19, குடும்பம் 48

C) துறை 19, குடும்பம் 45

D) துறை 29, குடும்பம் 48

விளக்கம்: ரெய்மர் 1954 – ல் டெரிடோஃபைட்களுக்கு ஒரு வகைப்பாட்டை முன்மொழிந்தார். இதில் டெரிடோஃபைட்கள் ஐந்து துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை – சைலோஃபைட்டாப்சிடா, சைலோடாப்சிடா, லைகாப்சிடா, ஸ்பீனாப்சிடா, டீராப்சிடா. இவ்வகைப்பாடு 19 துறைகளையும்,48 குடும்பங்களையும் உள்ளடக்கியுள்ளது.

93. கூற்று (i): ஸ்டீல் என்பது வாஸ்குலத் திசுக்களற்ற மைய உருளையைக் குறிக்கும்.

கூற்று (ii): இது சைலம், புளோயம், பெரிசைக்கிள், மெடுல்லரி கதிர்கள், பித் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைவதில்லை.

A) கூற்று i சரி ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: ஸ்டீல் என்பது வாஸ்குலத் திசுக்களாலான மைய உருளையைக் குறிக்கும். இது சைலம், புளோயம், பெரிசைக்கிள், மெடுல்லரி கதிர்கள், பித் ஆகியவற்றை உள்ளடக்கியது.

94. கீழ்க்கண்டவற்றுள் புரோட்டோஸ்டீலின் வகைகளுடன் பொருந்தாதது எது.

A) ஹேப்ளோஸ்டீல்

B) ஆக்டினோஸ்டீல்

C) பிளெக்டோஸ்டீல்

D) அடாக்டோஸ்டீல்

95. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) ஹேப்ளோஸ்டீல் – மையத்திலுள்ள ஃபுளோயம் சைலத்தால் சூழப்பட்டிருக்கும்.

2) ஆக்டினோஸ்டீல் – நட்சத்திர வடிவ ஃபுளோயம் சைலத்தால் சூழப்பட்டிருக்கும்.

3) பிளெக்டோல்டீல் – சைலமும் ஃபுளோயம் தட்டுகள் போன்று மாறி மாறி அமைந்திருக்கும்.

4) கலப்பு புரோட்டோஸ்டீல் – சைலம் ஃபுளோயத்தில் ஆங்காங்கே சிதறி காணப்படும்.

A) 1 2 3 மட்டும் சரி

B) 3 4 மட்டும் சரி

C) 1 3 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

ஹேப்ளோஸ்டீல் – மையத்திலுள்ள சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும்.

ஆக்டினோஸ்டீல் – நட்சத்திர வடிவ சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும்.

96. பொருத்துக:

A) ஹேப்ளோஸ்டீல் – 1. லைக்கோபோடியம் செர்ரேட்டம்

B) ஆக்டினோஸ்டீல் – 2. செலாஜினெல்லா

C) பிளெக்டோஸ்டீல் – 3. லைக்கோபோடியம் செர்னுவம்

D) கலப்பு புரோட்டோஸ்டீல் – 4. லைக்கோபோடியம் கிளாவேட்டம்

A) 2 1 4 3

B) 1 2 3 4

C) 4 3 2 1

D) 3 2 1 4

விளக்கம்:

A) ஹேப்ளோஸ்டீல் – 1. செலாஜினெல்லா

B) ஆக்டினோஸ்டீல் – 2. லைக்கோபோடியம் செர்ரேட்டம்

C) பிளெக்டோஸ்டீல் – 3. லைக்கோபோடியம் கிளாவேட்டம்

D) கலப்பு புரோட்டோஸ்டீல் – 4. லைக்கோபோடியம் செர்னுவம்

97. சைபனோஸ்டீல் பற்றியக் கூற்றுகளில் சரியானவற்றைக் காண்க:

1) இதில் சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும்.

2) மையத்தில் பித் காணப்படுவதில்லை.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:

1) இதில் சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும்.

2) மையத்தில் பித் காணப்படும்.

98. சைலத்தின் வெளிப்புறத்தில் மட்டும் ஃபுளோயம் காணப்பட்டு மையத்தில் பித் காணப்படும் நிலை_________

A) இருபக்க ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல்

B) வெளிப்புற ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல்

C) உட்புற ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல்

D) வெளிப்புற சைலம் சைபனோஸ்டீல்

விளக்கம்: சைலத்தின் வெளிப்புறத்தில் மட்டும் ஃபுளோயம் காணப்படும். மையத்தில் பித் காணப்படும். எ.கா. ஆஸ்முண்டா.

99. சைலத்தின் இருபுறமும் ஃபுளோயம் காப்பட்டு மையத்தில் பித் காணப்படும் நிலை_____________

A) இருபக்க ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல்

B) வெளிப்புற ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல்

C) உட்புற ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல்

D) வெளிப்புற சைலம் சைபனோஸ்டீல்

100. பித் மையத்தில் அமைந்து, சைலத்தைச் சூழ்ந்து ஃபுளோயம் காணப்படும் நிலை____________

A) வெளிப்புற ஃபுளோயம்சூழ் சொலினோஸ்டீல்

B) இருபக்க ஃபுளோயம்சூழ் சொலினோஸ்டீல்

C) வெளிப்புற ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல்

D) உட்புற ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல்

விளக்கம்: பித் மையத்தில் அமைந்து, சைலத்தைச் சூழ்ந்து ஃபுளோயம் காணப்படும் நிலை வெளிப்புற ஃபுளோயம்சூழ் சொலினோஸ்டீல் என்றழைக்கப்படுகிறது.

101. பித் மையத்திலும், சைலத்தின் இருபுறமும் ஃபுளோயம் காணப்படும் நிலை__________

A) வெளிப்புற ஃபுளோயம்சூழ் சொலினோஸ்டீல்

B) இருபக்க ஃபுளோயம்சூழ் சொலினோஸ்டீல்

C) வெளிப்புற ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல்

D) உட்புற ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல்

விளக்கம்: பித் மையத்திலும், சைலத்தின் இருபுறமும் ஃபுளோயம் காணப்படும் நிலைக்கு இருபக்க ஃபுளோயம்சூழ் சொலினோஸ்டீல் என்றழைக்கப்படுகிறது. எ.கா. அடியாண்டம் பெடேட்டம்.

102. பல ஒருங்கமைந்த வாஸ்குலக் கற்றைகளாகப் பிரிந்து பித்தைச் சூழ்ந்து ஒரு வளையமாக அமைந்திருக்கும் நிலை______________

A) சைபனோஸ்டீல்

B) டிக்டியோஸ்டீல்

C) யூஸ்டீல்

D) அடாக்டோஸ்டீல்

விளக்கம்: யூஸ்டீல் பல ஒருங்கமைந்த வாஸ்குலக் கற்றைகளாகப் பிரிந்து பித்தைச் சூழ்ந்து ஒரு வளையமாக அமைந்திருக்கும். எ.கா. இருவிதையிலைத் தாவரத்தண்டு.

103. ஸ்டீல் பிளவுற்று தெளிவான ஒருங்கமைந்த வாஸ்குலக்கற்றைகளாகவும், அடிப்படைத்திசுவில்சிதறியும் காணப்படும் நிலை_____________

A) சைபனோஸ்டீல்

B) டிக்டியோஸ்டீல்

C) யூஸ்டீல்

D) அடாக்டோஸ்டீல்

விளக்கம்: ஸ்டீல் பிளவுற்று தெளிவான ஒருங்கமைந்த வாஸ்குலக்கற்றைகளாகவும், அடிப்படைத்திசுவில்சிதறியும் காணப்படும். எ.கா. ஒரு விதையிலைத் தாவரத்தண்டு.

104. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வளையங்களைக் கொண்ட வாஸ்குலத் திசுக்கள்____________

A) சைபனோஸ்டீல்

B) பாலிசைக்ளிக்ஸ்டீல்

C) யூஸ்டீல்

D) அடாக்டோஸ்டீல்

விளக்கம்: வாஸ்குலத் திசுக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வளையங்களாகக் காணப்படும் எ.கா. டெரிடியம்.

105. பொருத்துக:

A) டிக்டியோஸ்டீல் – 1. அடியாண்டம் காப்பில்லஸ்-வெனிரிஸ்

B) யூஸ்டீல் – 2. டெரிடியம்

C) அடாக்டோஸ்டீல் – 3. ஒரு விதையிலைத் தாவரத்தண்டு

D) பாலிசைக்ளிக்ஸ்டீல் – 4. இரு விதையிலைத் தாவரத்தண்டு

A) 2 1 4 3

B) 1 4 3 2

C) 4 3 2 1

D) 3 2 1 4

விளக்கம்:

A) டிக்டியோஸ்டீல் – 1. அடியாண்டம் காப்பில்லஸ்-வெனிரிஸ்

B) யூஸ்டீல் – 2. இரு விதையிலைத் தாவரத்தண்டு

C) அடாக்டோஸ்டீல் – 3. ஒரு விதையிலைத் தாவரத்தண்டு

D) பாலிசைக்ளிக்ஸ்டீல் – 4. டெரிடியம்

106. ஜீராசிக் பார்க் என்ற திரைப்படம் வெளியான ஆண்டு___________

A) 1990

B) 1991

C) 1992

D) 1993

விளக்கம்: மைக்கேல் கிரிக்டனுடைய அறிவியல் சார்ந்த கற்பனை கதையைத் தழுவி ஸ்டீவன் ஸ்பீல்பர்க் என்பவர் 1993 ஆம் ஆண்டு “ஜீராசிக் பார்க்” என்ற திரைப்படத்தை எடுத்தார். இத்திரைப்படத்தில் ஆம்பர் எனும் ஒளி புகும் பிசின் பொருள் பூச்சிகளை உட்பொதித்து வைத்து அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கிறது.

107. ஜீராசிக் பார்க் என்ற திரைப்படத்தின் இயக்குனர்____________

A) மைக்கேல் கிரிக்டன்

B) ஸ்டீவன் ஸ்பீல்பர்க்

C) பீர்பல் ஸானி

D) மைக்கேல் பட்லர்

108. ஜீராசிக் பார்க் கீழ்க்கண்ட யாருடைய அறிவியல் சார்ந்த கற்பனை கதையைத் தழுவி தயாரிக்கப்பட்டது.

A) மைக்கேல் கிரிக்டன்

B) ஸ்டீவன் ஸ்பீல்பர்க்

C) பீர்பல் ஸானி

D) மைக்கேல் பட்லர்

109. _________என்பது தாவரங்கள் சுரக்கும் திறன்மிக்க ஒரு பாதுகாக்கும் பொருளாகும்

A) அகார்

B) ஆம்பர்

C) சால்ட்பீட்டர்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஆம்பர் என்பது தாவரங்கள் சுரக்கும் திறன்மிக்க ஒரு பாதுகாக்கும் பொருளாகும். இதன் சிதைவடையா பண்பு அழிந்துபோன உயிரினங்களைப் பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.

110. _________என்ற ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் ஆம்பரை உற்பத்தி செய்கிறது.

A) பைனிட்டிஸ் சக்ஸினிஃபெரா

B) லைக்கோபோடியம்

C) நீட்டம்

D) நீட்டாப்சிடா

விளக்கம்: ஆம்பர் என்பது தாவரங்கள் சுரக்கும் திறன்மிக்க ஒரு பாதுகாக்கும் பொருளாகும். இதன் சிதைவடையா பண்பு அழிந்துபோன உயிரினங்களைப் பாதுகாப்பாக வைக்க உதவுகிறது. பைனிட்டிஸ் சக்ஸினிஃபெரா என்ற ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் ஆம்பரை உற்பத்தி செய்கிறது.

111. ஜிம்னோஸ்பெர்ம் என்பது ஒரு____________தாவரமாகும்.

A) மூடியவிதைத்தாவரம்

B) திறந்தவிதைத்தாவரம்

C) நிலவாழ்த்தாவரம்

D) நீர்வாழ்த்தாவரம்

விளக்கம்: ஜிம்னோஸ்பெர்ம்கள் (கிரேக்கம் : ஜிம்னோ = திறந்த, ஸ்பெர்மா = விதை) திறந்தவிதைத்தாவரங்கள் ஆகும்). இத்தாவரங்கள் மீசோசோயிக் ஊழியின் ஜீராசிக் மற்றும் சிரிடேசியஸ் காலத்தில் அதிக அளவில் பரவிக் காணப்பட்டன.

112. ஜிம்னோஸ்பெர்ம்கள் கீழ்க்கண்ட எந்த நிலப்பகுதியில் காணப்படுகிறது.

A) வறண்ட நிலப்பகுதி

B) வெப்ப மண்டலப்பகுதி

C) மித வெப்பமண்டலப் பகுதி

D) AC இரண்டும்

113. கீழ்க்கண்டவற்றுள் ஜிம்னோஸ்பெர்ம்களின் பொதுப்பண்புகளில் பொருந்தாதது எது.

A) பெரும்பாலானவை பசுமை மாறா மரங்கள் அல்லது புதர்ச்செடிகளாக உள்ளன. ஒரு சில வன்கொடிகளாக உள்ளன. எ.கா. நீட்டம்.

B) தாவர உடல் வித்தகத்தாவரச் சந்ததியைச் சார்ந்தது. இது வேர், தண்டு, இலை என வேறுபாடுடன் காணப்படுகிறது.

C) நன்கு வளர்ச்சியடைந்த ஆணி வேர்த்தொகுப்பு காணப்படுகிறது. சைகஸ் தாவரத்தில் காணப்படும் பவழவேர்கள் நீலப்பசும்பாசிகளுடன் ஒருங்குயிரி வாழ்க்கை மேற்கொள்கிறது.

D) தரை மேல் காணப்படும் நிமிர்ந்த கட்டைத்தன்மையுடைய தண்டு கிளைத்தோ, கிளைக்காமலோ இலைத்தழும்புடன் காணப்படும்.

விளக்கம்: தாவர உடல் வித்தகத்தாவரச் சந்ததியைச் சார்ந்தது. இது வேர், தண்டு, இலை என வேறுபாடற்று காணப்படுகிறது.

114. கீழ்க்கண்டவற்றுள் ஜிம்னோஸ்பெர்ம்களின் பொதுப்பண்புகளில் பொருந்தாதது எது.

A) கோனிஃபெர் தாவரங்களில் வரம்பு வளர்ச்சி கொண்ட கிளைகள், வரம்பற்ற வளர்ச்சி கொண்ட கிளைகள் என இருவகைக் கிளைகள் காணப்படுகின்றன.

B) மேல்கீழ் வேறுபாடு கொண்ட இலைகள் காணப்படுகின்றன. அவை தழை மற்றும் செதில் இலைகளாகும். தழை இலைகள் பசுமையான, ஒளிச் சேர்க்கையில் ஈடுபடும் வரம்பு வளர்ச்சி கொண்ட கிளைகளில் தோன்றுகின்றன.

C) சைலத்தில் டிரக்கீடுகள் காணப்படுவதில்லை. நீட்டம் மற்றும் எபிட்ராவில் சைலக்குழாய்கள் காணப்படுகின்றன.

D) பொதுவாக இரண்டாம் நிலை வளர்ச்சி காணப்படுகிறது. பாரங்கைமா அதிகம் கொண்ட மானோசைலிக் துளையுடைய மென்மையான அதிகப் பாரங்கைமா பெற்று அகன்ற மெடுல்லரி கதிர் கொண்டது. அல்லது பிக்னோசைலிக் குறுகிய மெடுல்லரி கதிர் கொண்டு அடர்த்தியாக உள்ளவை(பைனஸ்) கட்டைகள் காணப்படுகின்றன.

விளக்கம்: சைலத்தில் டிரக்கீடுகள் காணப்படுகின்றன. நீட்டம் மற்றும் எபிட்ராவில் சைலக்குழாய்கள் காணப்படுகின்றன.

115. கீழ்க்கண்டவற்றுள் ஜிம்னோஸ்பெர்ம்களின் பொதுப்பண்புகளில் சரியானதைக் கண்டறி:

1) நுண்வித்தகம் மற்றும் பெருவித்தகம் முறையே நுண்வித்தகயிலை மற்றும் பெருவித்தகயிலைகளில் தோன்றுகின்றன.

2) ஆண் மற்றும் பெண் கூம்புகள் தனித்தனியே உண்டாக்கப்படுகின்றன.

3) காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில்லை.

A) 1 மட்டும் சரி

B) 1 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.

116. ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களில் ஆண் உட்கருக்கள் மகரந்தக் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கருவுறுதல் நடைபெறுவது___________

A) ஹைட்ரோகேமி

B) எண்டோபிலி

C) சூஃப்லி

D) சைஃபனோகேமி

விளக்கம்: ஆண் உட்கருக்கள் மகரந்தக் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு (சைஃபனோகேமி) கருவுறுதல் நடைபெறுகிறது.

117. 1965 ல் ஜிம்னோஸ்பெர்ம்களை 3 வகுப்புகளாக வகைப்படுத்தியவர்_______

A) கரோலஸ் லின்னேயஸ்

B) அரிஸ்டாட்டில்

C) ஸ்போர்ன்

D) பட்லர்

விளக்கம்: ஸ்போர்ன் என்பவர் 1965 இல் ஜிம்னோஸ்பெர்ம்களை 3 வகுப்புகளின் கீழ் 9 துறைகளாகவும் 31 குடும்பங்களாகவும் வகைப்படுத்தியுள்ளார்.

118. ஸ்போர்ன் என்பவரின் வகைப்பாட்டின்படி ஜிம்னோஸ்பெர்ம்களின் துறை மற்றும் குடும்பங்கள் முறையே___________,___________

A) 9 துறை,37 குடும்பம்

B) 7 துறை,31 குடும்பம்

C) 9 துறை,31 குடும்பம்

D) 9 துறை,41 குடும்பம்

119. கீழ்க்கண்டவற்றுள் ஜிம்னோஸ்பெர்முக்கும் ஆஞ்சியோஸ்பெர்முக்கும் உள்ள ஒற்றுமைகளுல் பொருந்தாதது எது.

A) வேர், தண்டு, இலைகளைக் கொண்ட நன்கு வரையறுக்கப்பட்ட தாவர உடல் காணப்படுகிறது.

B) இருவிதையிலைத் தாவரங்களில் உள்ளது போலவே ஜிம்னோஸ்பெர்ம்களிலும் கேம்பியத்தைக் கொண்டிருத்தல்.

C) தண்டில் யூஸ்டில் காணப்படுவதில்லை.

D) நீட்டம் தாவரத்தில் காணப்படும் இனப்பெருக்க உறுப்புகள் மூடுதாவரங்களின் மலர்களை ஒத்திருத்தல்

விளக்கம்: தண்டில் யூஸ்டில் காணப்படுகிறது.

120. கீழ்க்கண்டவற்றுள் ஜிம்னோஸ்பெர்முக்கும் ஆஞ்சியோஸ்பெர்முக்கும் உள்ள ஒற்றுமைகளுல் சரியாக பொருந்துவது எது.

1) சூல்களைச் சூழ்ந்து சூலுறை காணப்படுவதில்லை.

2) இரு தாவரக் குழுமங்களும் விதைகளை உண்டாக்குதல்.

3) ஆண் உட்கருக்கள் மகரந்தக்குழல் உதவியுடன் எடுத்துச் செல்லப்படுகின்றன.

4) யூஸ்டீல் காணப்படுவதில்லை.

A) 1 2 3 மட்டும் சரி

B) 1 3 மட்டும் சரி

C) 2 3 மட்டும் சரி

D) 2 3 4 மட்டும் சரி

விளக்கம்: சூல்களைச் சூழ்ந்து சூலுறை காணப்படுகிறது. யூஷ்டீல் காணப்படுகிறது.

121. கீழ்க்கண்டவற்றுள் ஜிம்னோஸ்பெர்ம்களின் பண்புகளுல் தவறானதைக் கண்டறி:

1) ஜிம்னோஸ்பெர்ம்களில் சைலக்குழாய்கள் காணப்படுகின்றன. நீட்டேல்ஸ் உட்பட.

2) ஃபுளோயத்தில் துணை செல்கள் காணப்படுகின்றன.

3) சூல்கள் திறந்தவை.

4) பொதுவாக மகரந்தச் சேர்க்கை காற்றின் மூலம் நடைபெறுகிறது.

A) 1 2 மட்டும் தவறு

B) 2 3 மட்டும் தவறு

C) 3 4 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: ஜிம்னோஸ்பெர்ம்களில் சைலக்குழாய்கள் காணப்படுவதில்லை. (நீட்டேல்ஸ் நீங்கலாக). ஃபுளோயத்தில் துணை செல்கள் காணப்படுவதில்லை.

122. கீழ்க்கண்டவற்றுள் ஜிம்னோஸ்பெர்ம்களின் பண்புகளுல் சரியானதைக் கண்டறி:

1) இதில் இரட்டை கருவுறுதல் நடைபெறுகிறது.

2) இரட்டைமடிய கருவூண்திசு காணப்படுகிறது.

3) கனி தோன்றுவதில்லை.

4) மலர்கள் காணப்படுகிறது.

A) 1, 2 மட்டும் சரி

B) 3 மட்டும் சரி

C) 1, 2, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: இதில் இரட்டை கருவுறுதல் இல்லை. ஒற்றைமடிய கருவூண்திசு காணப்படுகிறது. மலர்கள் காணப்படுவதில்லை.

123. கீழ்க்கண்டவற்றுள் ஆஞ்சியோஸ்பெர்ம்களின் பண்புகளுல் சரியானதைக் கண்டறி:

1) பொதுவாக சைலக்குழாய்கள் காணப்படுவதில்லை.

2) துணைசெல்கள் காணப்படுகின்றன.

3) சூல்கள் சூலகத்தால் மூடப்பட்டுப் பாதுகாக்கப்படுவதில்லை.

4) பூச்சிகள், காற்று. நீர், பறவைகள், விலங்குகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.

A) 1, 2 மட்டும் சரி

B) 2, 4 மட்டும் சரி

C) 1, 2, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: பொதுவாக சைலக்குழாய்கள் காணப்படுகின்றன. சூல்கள் சூலகத்தால் மூடப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன.

124. கீழ்க்கண்டவற்றுள் ஆஞ்சியோஸ்பெர்ம்களின் பண்புகளுல் தவறானதைக் கண்டறி:

A) இரட்டைக் கருவுறுதல் உண்டு

B) மும்மடிய கருவூண் திசு காணப்படுகிறது.

C) கனி தோன்றுவதில்லை

D) மலர்கள் காணப்படுகின்றன.

விளக்கம்: கனி தோன்றுகிறது.

125. பொருத்துக:

தாவரங்கள் பயன்பாடுகள்

A) வறுத்த விதைகள் – 1. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுகிறது

B) டர்பன்டைன், ரெசின் – 2. தோல்துறையில் பயன்படுகிறது

C) டானின்கள் – 3. உணவாகப் பயன்படுகிறது

D) டாக்ஸால் – 4. வார்னிஷ் தயாரிக்க பயன்படுகிறது

A) 2 1 4 3

B) 1 4 3 2

C) 4 3 2 1

D) 3 4 2 1

விளக்கம்:

தாவரங்கள் பயன்பாடுகள்

A) வறுத்த விதைகள் – 1. உணவாகப் பயன்படுகிறது

B) டர்பன்டைன், ரெசின் – 2. வார்னிஷ் தயாரிக்க பயன்படுகிறது

C) டானின்கள் – 3. தோல்துறையில் பயன்படுகிறது

D) டாக்ஸால் – 4. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுகிறது

126. பொருத்துக:

தாவரங்கள் பயன்பாடுகள்

A) சாகோ – 1. நிலையான கண்ணாடித் துண்டம் தயாரிக்க

B) கனடாபால்சம் – 2. கோந்து, அச்சுமை தயாரிக்க

C) எஃபிடிரின் – 3. தரசம் நிறைந்த உணவு

D) ஓலியோரெசின் – 4. மூச்சுக்குழல் நோய்களை குணப்படுத்த

A) 2 1 4 3

B) 3 1 4 2

C) 1 4 3 2

D) 4 3 2 1

விளக்கம்:

தாவரங்கள் பயன்பாடுகள்

A) சாகோ – 1. தயாரிக்க தரசம் நிறைந்த உணவு

B) கனடாபால்சம் – 2. நிலையான கண்ணாடித் துண்டம்

C) எஃபிடிரின் – 3. மூச்சுக்குழல் நோய்களை குணப்படுத்த

D) ஓலியோரெசின் – 4. கோந்து, அச்சுமை தயாரிக்க

127. பொருத்துக:

தாவரங்கள் பெறப்படும் பொருட்கள்

A) சைகஸ் சிர்சினாலிஸ் – 1. வறுத்த விதைகள்

B) பைனஸ் ஜெரார்டியானா – 2. சாகோ

C) ஏபிஸ் பால்சாமியா – 3. கனடாபால்சம்

D) பைனஸ் இன்சுலாரிஸ் – 4. ரெசின், டர்பன்டைன்

A) 2 1 3 4

B) 3 1 4 2

C) 1 4 3 2

D) 4 3 2 1

விளக்கம்:

தாவரங்கள் பெறப்படும் பொருட்கள்

A) சைகஸ் சிர்சினாலிஸ் – 1. சாகோ

B) பைனஸ் ஜெரார்டியானா – 2. வறுத்த விதைகள்

C) ஏபிஸ் பால்சாமியா – 3. கனடாபால்சம்

D) பைனஸ் இன்சுலாரிஸ் – 4. ரெசின், டர்பன்டைன்

128. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

தாவரங்கள் பெறப்படும் பொருட்கள்

1) அரக்கேரியா, பில்லோகிளாடஸ், பைசியா – டானின்கள்

2) டாக்ஸஸ் பிரிவிஃபோலியா – டாக்ஸாஸ்

3) எபிட்ரா ஜெரார்டியானா – ஒலியோரெசின்

4) பைனஸ் ராக்ஸ்பரோயியை – எஃபிடிரின்

A) 1, 2 மட்டும் சரி

B) 2, 3 மட்டும் சரி

C) 2, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

தாவரங்கள் பெறப்படும் பொருட்கள்

1) அரக்கேரியா, பில்லோகிளாடஸ், பைசியா – டானின்கள்

2) டாக்ஸஸ் பிரிவிஃபோலியா – டாக்ஸாஸ்

3) எபிட்ரா ஜெரார்டியானா – எஃபிடிரின்

4) பைனஸ் ராக்ஸ்பரோயியை – ஒலியோரெசின்

129. பொருத்துக:

தாவரங்கள் பயன்பாடுகள்

A) பைனஸ் ராக்ஸ்பரோயியை – 1. காகிதம் தயாரிக்க

B) செட்ரஸ் டியோடரா – 2. வாசனை திரவியம் தயாரிக்க

C) செட்ரஸ் அட்லாண்டிகா – 3. கதவு, படகுகள் தயாரிக்க

D) துஜா, குப்ரசஸ், அரக்கேரியா – 4. அலங்காரத் தாவரமாக

A) 2 1 3 4

B) 3 1 4 2

C) 1 3 2 4

D) 4 3 2 1

விளக்கம்:

தாவரங்கள் பயன்பாடுகள்

A) பைனஸ் ராக்ஸ்பரோயியை – 1. காகிதம் தயாரிக்க

B) செட்ரஸ் டியோடரா – 2. கதவுஇ படகுகள் தயாரிக்க

C) செட்ரஸ் அட்லாண்டிகா – 3. வாசனை திரவியம் Dதயாரிக்க

D) துஜா, குப்ரசஸ், அரக்கேரி2யா – 4. அலங்காரத் தாவரமாக

130. தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் “தேசிய கல்மரப் பூங்கா” அமைந்துள்ளது.

A) கள்ளக்குறிச்சி

B) விழுப்புரம்

C) சேலம்

D) திருவள்ளுர்

விளக்கம்: தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை கிராமத்தில் “தேசியக் கலமரப் பூங்கா” அமைந்துள்ளது. இங்கு ஏறக்குறைய 20 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்து மடிந்த மரக்கட்டைகளின் எச்சங்கள் உள்ளன.

131. ____________என்ற சொல் தொல்லுயிர் எச்சத்தாவரங்களுக்கு பெயர் சூட்டப் பயன்படுத்தப்படகிறது.

A) உரு சிற்றினம்

B) உரு பேரினம்

C) உரு தொகுதி

D) உரு வகுப்பு

விளக்கம்: உரு பேரினம் என்ற சொல் தொல்லுயிர் எச்சத்தாவரங்களுக்கு பெயர் சூட்டப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் தொல்லுயிர் எச்சங்கள் முழுத் தாவரங்களாகக் கிடைப்பதில்லை. பதிலாக அழிந்துப்போன தாவரப் பகுதிகள், உறுப்புகள் சிறுசிறு துண்டுகளாகவே பெறப்படுகின்றன.

132. பொருத்துக:

இந்தியப் பூங்காக்கள் அமைவிடம்

A) ஷிவாலிக் தொல்லுயிர்ப் பூங்கா – 1. ஜார்க்கண்ட்

B) மாண்ட்லா தொல்லுயிர்ப் பூங்கா – 2. மத்தியப்பிரதேசம்

C) இராஜ்மஹால் குன்றுகள் – 3. ஹிமாச்சலபிரதேசம்

D) அரியலூர் பூங்கா – 4. தமிழ்நாடு

A) 2 1 3 4

B) 3 2 1 4

C) 1 3 2 4

D) 4 3 2 1

விளக்கம்:

இந்தியப் பூங்காக்கள் அமைவிடம்

A) ஷிவாலிக் தொல்லுயிர்ப் பூங்கா – 1. ஹிமாச்சலபிரதேசம்

B) மாண்ட்லா தொல்லுயிர்ப் பூங்கா – 2. மத்தியப்பிரதேசம்

C) இராஜ்மஹால் குன்றுகள் – 3. ஜார்க்கண்ட்

D) அரியலூர் பூங்கா – 4. தமிழ்நாடு

133. பொருத்துக:

A) பாசிகள் – 1. பேலியோபொரல்லா

B) பிரையோஃபைட்கள் – 2. நயடைட்டா

C) டெரிடோஃபைட்கள் – 3. குக்சோனியா

D) ஜிம்னோஸ்பெர்ம்கள் – 4. மெடுல்லோசா

A) 2 1 3 4

B) 3 2 1 4

C) 1 2 3 4

D) 4 3 2 1

134. பொருத்துக:

A) பாசிகள் – 1. டைமார்ஃபோசைஃபான்

B) பிரையோஃபைட்கள் – 2. ஹெப்பாட்டிசைட்டிஸ்

C) டெரிடோஃபைட்கள் – 3. லெப்பிடோகார்பான்

D) ஜிம்னோஸ்பெர்ம்கள் – 4. பாரக்வாங்கியா

A) 2 1 3 4

B) 3 2 1 4

C) 4 3 2 1

D) 1 2 4 3

விளக்கம்:

A) பாசிகள் – 1. டைமார்ஃபோசைஃபான்

B) பிரையோஃபைட்கள் – 2. ஹெப்பாட்டிசைட்டிஸ்

C) டெரிடோஃபைட்கள் – 3. பாரக்வாங்கியா

D) ஜிம்னோஸ்பெர்ம்கள் – 4. லெப்பிடோகார்பான்

135. கீழ்க்கண்டவர்களுல் இந்தியத் தொல்தாவரவியலின் தந்தை என்று அறியப்படுபவர்.

A) மைக்கேல் கிரிக்டன்

B) ஸ்டீவன் ஸ்பீல்பர்க்

C) பீர்பல் ஸானி

D) மைக்கேல் பட்லர்

விளக்கம்: பேராசிரியர் பீர்பல் ஸானி இந்தியத் தொல்தாவரவியலின் தந்தை என்று அறியப்படுகிறார். கிழக்கு பீஹாரில் தொல்லுயிர் எச்சத் தாவரங்களை இவர் விவரித்துள்ளார். இவர் விவரித்த உருப்பேரினங்களில் பெண்டோசைலான் ஸானி, நிப்பானியோ ஸைலான் போன்றவை அடங்கும். “பீர்பால் ஸானி” தொல்தாவர நிறுவனம் லக்னோவில் அமைந்துள்ளது.

136. “பீர்பால் ஸானி” தொல்தாவர நிறுவனம் எங்கு அமைந்துள்ளது.

A) கல்கத்தா

B) ஹைதராபாத்

C) லக்னோ

D) புதுடெல்லி

137. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று உலகளவில் பெரும்பான்மையான தாவரக்கூட்டமாக காணப்படுகிறது?

A) பிரையோஃபைட்

B) டெரிடோஃபைட்

C) ஜிம்னோஸ்பெர்ம்

D) ஆஞ்சியோஸ்பெர்ம்

விளக்கம்: இத்தாவரத் தொகுப்பானது ஆரம்பக் காலக் கிரிட்டேஷியஸ் காலத்தில் தோன்றி (140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) உலகளவில் பெரும்பான்மையான தாவரக்கூட்டமாக காணப்படுகின்றன.

138. கீழ்க்கண்டவற்றுள் ஆஞ்சியோஸ்பெர்ம்களின் சிறப்பியல்பகளுல் பொருந்தாதது எது?

A) வாஸ்குலத்திசு(சைலம் மற்றும் ஃபுளோயம்) நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.

B) கூம்புகளுக்குப் பதிலாக மலர்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

C) சூல் சூலகத்தினால் சூழப்பட்டிருப்பதில்லை.

D) மகரந்தச்சேர்க்கைக்கு மகரந்த குழல் உதவி செய்கிறது. ஆகையால் கருவறுதலுக்கு நீர் அவசியமில்லை.

விளக்கம்: சூல் சூலகத்தினால் சூழப்பட்டுள்ளது.

139. கூற்று (i): ஆஞ்சியோஸ்பெர்ம்களில் இரட்டைக் கருவுறுதல் காணப்படுகிறது. கருவூண் திசு மும்மடியத்தில் உள்ளது.

கூற்று (ii): ஆஞ்சியோஸ்பெர்ம்கள் இருவிதையிலை மற்றும் ஒருவிதையிலைத் தாவரங்கள் எனும் இரண்டு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

A) கூற்று i சரி ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

140. இரு விதையிலை தாவரங்களில் உள்ள புற அமைப்புசார் பண்புகளில் பொருந்தாததைக் கண்டறி:

A) இலைகளில் வலைப்பின்னல் நரம்பமைப்பு உள்ளது.

B) விதையில் இரண்டு விதையிலைகள் உள்ளன.

C) முதன்மை வேரான முளைவேர் நிலைத்துக் காணப்பட்டு சல்லி வேராகிறது

D) மலர்கள் நான்கங்க அல்லது ஐந்தங்க வகையைச் சார்ந்தது. முக்குழியடைய மகரந்தத்தூள் காணப்படுகிறது.

விளக்கம்: முதன்மை வேரான முளைவேர் நிலைத்துக் காணப்பட்டு ஆணி வேராகிறது

141. இரு விதையிலை தாவரங்களில் உள்ளமைப்புசார் பண்புகளில் பொருந்தாததைக் கண்டறி:

1) வாஸ்குலக் கற்றைகள் தண்டில் வளையம் போன்று அமைந்தள்ளது.

2) வாஸ்குலக் கற்றைகள் மூடிய வகையைச் சார்ந்தது. (கேம்பியம் அற்றது).

3) இரண்டாம் நிலை வளர்ச்சி காணப்படுகிறது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: வாஸ்குலக் கற்றைகள் திறந்த வகையைச் சார்ந்தது. (கேம்பியம் அற்றது).

142. ஒரு விதையிலை தாவரங்களில் உள்ள புற அமைப்புசார் பண்புகளில் பொருந்தாததைக் கண்டறி:

A) இலைகளில் இணைப்போக்கு நரம்பமைப்பு உள்ளது. விதைகளில் ஒருவிதையிலை உள்ளது.

B) முளைவேர் நிலைத்துக் காணப்படுவதில்லை.

C) ஆணி வேர் தொகுப்பு உள்ளது. மூவங்க மலர்கள் உள்ளது.

D) ஒற்றைக்குழியுடைய மகரந்தத்துகள் காணப்படுகிறது.

விளக்கம்: சல்லி வேர் தொகுப்பு உள்ளது. மூவங்க மலர்கள் உள்ளது.

143. ஒரு விதையிலை தாவரங்களில் உள்ளமைப்புசார் பண்புகளில் பொருந்தாததைக் கண்டறி:

1) தண்டில் வாஸ்குலக் கற்றைகள் சிதறிக் காணப்படுகிறது.

2) திறந்த வாஸ்குலக் கற்றைகள்(கேம்பியம் காணப்படுகின்றன).

3) இரண்டாம் நிலை வளர்ச்சி காணப்படுவதில்லை.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: மூடிய வாஸ்குலக் கற்றைகள்(கேம்பியம் காணப்படுவதில்லை).

144. எப்பிரிவு தாவரம் ஓங்கிய கேமீட்டாக தாவர சந்ததியைக் கொண்டது?

A) டெரிடோஃபைட்கள்

B) பிரையோஃபைட்கள்

C) ஜிம்னோஸ்பெரம்கள்

D) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

145. டெரிடோஃபைட்களில் கேமீட்டக தாவர சந்ததியைக் குறிப்பது.

A) முன் உடலம்

B) உடலம்

C) கூம்பு

D) வேர்த்தாங்கி

146. ஒரு ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரத்தின் ஒற்றைமடிய குரோமோசோம் எண்ணிக்கை 14 எனில் அதன் கருவூண் திசுவில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை?

A) 7

B) 14

C) 42

D) 28

147. ஜிம்னோஸ்பெர்ம்களில் கருவூண் திசு உருவாவது.

A) கருவுறுதலின் போது

B) கருவுறுதலுக்கு முன்

C) கருவுறுதலுக்குப் பின்

D) கரு வளரும் போது

11th Science Lesson 11 Questions in Tamil

11] வகைபிரித்தல் மற்றும் தாவரவகைப்பாட்டியல்

1. புவியில் மனிதனின் முதன்மைத் துணையாக இருப்பவை_____________

A) விலங்குகள்

B) தாவரங்கள்

C) பறவைகள்

D) இரு வாழ்விகள்

விளக்கம்: புவியில் மனிதனின் முதன்மைத் துணையாக இருப்பவை தாவரங்கள் ஆகும். ஆற்றல், இருப்பிடம், ஆடை, மருந்துகள், பானங்கள், ஆக்ஸிஜன் மற்றும் அமைதியான அழகான சூழ்நிலை ஆகியவற்றிற்கு ஆதாரங்களாகத் தாவரங்கள் விளங்குகின்றன.

2. “தாவரவியலின் தந்தை” என்றழைக்கப்படுபவர்_________

A) ஹிப்போகிரேட்டஸ்

B) தியோஃப்ராஸ்டஸ்

C) அரிஸ்டாட்டில்

D) லவாய்சியர்

விளக்கம்: கிரேக்கத் தத்துவஞானியான தியோப்ராஸ்டஸ் (பொ.ஆ.மு 372 – 287) “தாவரவியலின் தந்தை” என்றழைக்கப்படுகிறார். சுமார் 500 தாவரங்களைத் தனது “டி ஹிஸ்டாரியா ப்ளாண்டாரம்” என்ற நூலில் பெயரிட்டு, விவரித்தார்.

3. “டி ஹிஸ்டாரியா ப்ளாண்டாரம்” என்ற நூலின் ஆசிரியர்__________

A) கரோலஸ் லின்னேயஸ்

B) பெந்தம் மற்றும் ஹீக்கர்

C) அரிஸ்டாட்டில்

D) தியோஃப்ராஸ்டஸ்

4. “மெட்டிரியா மெடிக்கா” என்ற நூலின் ஆசிரியர்____________

A) டயஸ்கோரிடஸ்

B) சாமுவேல் ஹானிமன்

C) கார்ல் மார்க்ஸ்

D) காஸ்பார்டு பாஹின்

விளக்கம்: கிரேக்கர் மருத்துவரான டயஸ்கோரிடஸ் (பொ.ஆ.பின் 62 – 127) சுமார் 600 மருத்துவத்தாவரங்களை பட விளக்கங்களுடன் தனது “மெட்டிரியா மெடிக்கா” வில் விளக்கியிருந்தார்.

5. கீழ்க்கண்டவர்களுல் பட விளக்கங்களுடன் 600 மருத்துவத்தாவரங்களை விளக்கிக் கூறிய கிரேக்க மருத்துவர்.

A) சாமுவேல் ஹானிமேன்

B) காஸ்பர்டு பாஹின்

C) லின்னேயஸ்

D) டயஸ்கோரிடஸ்

விளக்கம்: கிரேக்கர் மருத்துவரான டயஸ்கோரிடஸ் (பொ.ஆ.பின் 62 – 127) சுமார் 600 மருத்துவத்தாவரங்களை பட விளக்கங்களுடன் தனது “மெட்டிரியா மெடிக்கா” வில் விளக்கியிருந்தார். பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் வகைப்பாட்டியலில் மிகப்பெரிய வளர்ச்சியைக் காண முடிந்தது.

6. “தி ஸ்பீசிஸ் பிளாண்டாரம்” என்றநூலின் ஆசிரியர்____________

A) ஜான் ரே

B) ஜீன் பாஹின்

C) கரோலஸ் லின்னேயஸ்

D) அன்ட்ரியா சிஸல்பினோ

விளக்கம்: லின்னேயஸ் தனது “ஸ்பீசிஸ் பிளாண்டாரம்” (1753) எனும் நூலில் இரு பெயரிடல் முறைக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கினார்.

7. பொருத்துக:

A) டாக்ஸிஸ் – 1. 1753

B) நாமோஸ் – 2. வரிசைப்படுத்துதல்

C) ஸ்பீசிஸ் பிளாண்டாரம் – 3. விதிகள்

D) சிற்றினங்களின் தோற்றம் – 4. 1859

A) 1 2 3 4

B) 2 3 1 4

C) 2 1 3 4

D) 4 3 2 1

விளக்கம்:

A) டாக்ஸிஸ் – 1. வரிசைப்படுத்துதல்

B) நாமோஸ் – 2. விதிகள்

C) ஸ்பீசிஸ் பிளாண்டாரம் – 3. 1753

D) சிற்றினங்களின் தோற்றம் – 4. 1859

8. வகைப்பாட்டியல் என்பது அடிப்படை கொள்கைகள், விதிகள், செய்முறைகள் அடங்கிய ஒரு வகைப்படுத்தும் அறிவியல் என்றுக் கூறியவர்____________

A) டூர்ன்ஃபோர்ட்

B) ஜான் ரே

C) ஜீன் பாஹின்

D) டேவிஸ் மற்றும் ஹேவுட்

விளக்கம்: டேவிசும் ஹேவுட்டும் (1963) கூறியபடி வகைப்பாட்டியல் என்பது அடிப்படை கொள்கைகள், விதிகள், செய்முறைகள் அடங்கிய ஒரு வகைப்படுத்தும் அறிவியல் ஆகும்.

9. குழுப்பரிணாம வகைப்பாட்டியல் என்பது பல்வேறு வகையான உயிரினங்களையும் அவற்றிற்கு இடையேயான உறவுமுறைகளையும் படித்தறியும் அறிவியல் பிரிவு என்றுக் கூறியவர்.

A) அன்ட்ரியா சிஸல்பினோ

B) சிம்ப்சன்

C) லின்னேயஸ்

D) பெந்தம் மற்றும் ஹீக்கர்

விளக்கம்: குழுப்பரிணாம வகைப்பாட்டியல் என்ற சொல் பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட போதிலும்,20 – ஆம் நூற்றாண்டின் கடைசியில்தான் ஒரு முறையான பிரிவாக அறியப்பட்டது. 1961 – ஆம் ஆண்டு சிம்ப்சன் என்ற அறிஞர் குழுமப்பரிணாம வகைப்பாட்டியல் என்பது பல்வேறு வகையான உயிரினங்களையும் அவற்றிற்கு இடையேயான உறவுமுறைகளையும் படித்தறியும் அறிவியல் பிரிவு என்று கூறினார்.

10. வகைப்பாட்டியல் குறித்தக் கீழ்க்கண்டக்கூற்றுகளில் பொருந்தாததைக் கண்டறி:

1) உயிரினங்களைப் பல்வேறு வகைப்பாட்டு படிநிலை அலகுகளாக வகைப்படுத்தும் பிரிவு.

2) விளக்கமளித்தல், இனங்கண்டறிதல், உயிரினங்களைப் பதப்படுத்துதல் போன்ற செய்முறைகளைப் கவனிக்கக் கூடியது.

3) வகைப்படுத்துதல் + பெயரிடுதல் = வகைப்பாட்டியல்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) மேற்கண்ட எதுவுமில்லை

11. குழுமப்பரிணாம வகைப்பாட்டியல் குறித்தக் கீழ்க்கண்டக்கூற்றுகளில் பொருந்தாததைக் கண்டறி:

1) ஒரே சிற்றினங்களைப்பற்றி படிக்கக்கூடிய ஒரு பரந்த உயிரியல் பிரிவு.

2) வகைப்பாட்டியலுடன் சேர்த்துப் பரிணாம வரலாறு மற்றும் குழுமப்பரிணாமத் தொடர்புகளைப் பற்றி அறியக் கூடிய பிரிவு.

3) வகைப்படுத்துதல் + குழுமப்பரிணாமம் = குழுமப்பரிணாம வகைப்பாட்டியல்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: வேறுபட்ட சிற்றினங்களைப்பற்றி படிக்கக்கூடிய ஒரு பரந்த உயிரியல் பிரிவு.

12. வகைப்பாட்டியல் படிநிலைகள் கீழ்க்கண்ட யாரால் அறிமுகம் செய்யப்பட்டது.

A) ஜான் ரே

B) சிம்ப்சன்

C) கரோலஸ் லின்னேயஸ்

D) அரிஸ்டாட்டில்

விளக்கம்: கரோலஸ் லின்னேயஸ் அவர்களால் வகைப்பாட்டியல் படிநிலைகள் அறிமுகம் செய்யப்பட்டது. வகைப்பாட்டின் பல்வேறு நிலைகளான பெரும்பிரிவு முதல் சிற்றினம் வரை இறங்கு வரிசையில் படிநிலைகளாக அமைந்துள்ளன. இந்தப் படிநிலைகளின் கீழ்ப்படியாகச் சிற்றினம் உள்ளது.

13. வகைபாட்டியலின் படிநிலைகள் குறித்த தவறானக்கூற்றை கண்டறி:

1) அரிஸ்டாட்டில் அவர்களால் வகைப்பாட்டியல் படிநிலைகள் அறிமுகம் செய்யப்பட்டது.

2) வகைப்பாட்டின் பல்வேறு நிலைகளான பெரும்பிரிவு முதல் சிற்றினம் வரை ஏறு வரிசையில் படிநிலைகளாக அமைந்துள்ளன.

3) இந்தப் படிநிலைகளின் கீழ்ப்படியாக குடும்பம் உள்ளது.

A) 1 2 மட்டும் தவறு

B) 2 3 மட்டும் தவறு

C) 1 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: கரோலஸ் லின்னேயஸ் அவர்களால் வகைப்பாட்டியல் படிநிலைகள் அறிமுகம் செய்யப்பட்டது. வகைப்பாட்டின் பல்வேறு நிலைகளான பெரும்பிரிவு முதல் சிற்றினம் வரை இறங்கு வரிசையில் படிநிலைகளாக அமைந்துள்ளன. இந்தப் படிநிலைகளின் கீழ்ப்படியாகச் சிற்றினம் உள்ளது.

14. கூற்று (i): உயிரினங்களில் ஒன்றோடொன்று மிக அதிகளவு உருவ வேற்றுமையுடன் காணப்படுபவைச் சிற்றினங்களாகும்.

கூற்று (ii) இவை வகைப்பாட்டியலின் கடைசிப் படிநிலை ஆகும். எ.கா. ஹீலியாந்தஸ் அன்னுவஸ்

A) கூற்று i சரி ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: உயிரினங்களில் ஒன்றோடொன்று மிக அதிகளவு உருவ ஒற்றுமையுடன் காணப்படுபவைச் சிற்றினங்களாகும். இவை வகைப்பாட்டியலின் கடைசிப் படிநிலை ஆகும்.

15. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒத்தப்பண்புகளைக் கொண்ட பல சிற்றினங்களின் தொகுப்பு____________எனப்படும்.

A) குடும்பம்

B) பேரினம்

C) துறை

D) வகுப்பு

விளக்கம்: ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒத்தப்பண்புகளைக் கொண்ட பல சிற்றினங்களின் தொகுப்பு பேரினமாகும். ஒரே பேரினத்தின் பல சிற்றினங்கள் பல பண்புகளில் ஒத்துக்காணப்பட்டாலும் மற்றொரு பேரினத்தின் சிற்றினங்களிலுருந்து வேறுபடுகின்றன.

16. ஒன்றோடொன்று ஒரே வகையான ஒத்த பண்புகளுடன் காணப்படும் பல பேரினங்கள் கொண்டத் தொகுப்பு____________எனப்படும்.

A) குடும்பம்

B) பேரினம்

C) துறை

D) வகுப்பு

விளக்கம்: ஒன்றோடொன்று ஒரே வகையான ஒத்த பண்புகளுடன் காணப்படும் பல பேரினங்கள் கொண்டத் தொகுப்பு ஒரு குடும்பம் ஆகும். சிற்றினங்களைவிடப் பேரினங்கள் அவற்றிற்கிடையே குறைந்த அளவிலேயே வேறுபடுகின்றன.

17. ஒத்த பண்புகளோடு அமைந்த குடும்பங்களின் தொகுப்பு___________

A) குடும்பம்

B) பேரினம்

C) துறை

D) வகுப்பு

18. பல துறைகளின் குறைந்த அளவு ஒத்தப்பண்புகளுடன் கூடிய தொகுப்பு_____________

A) குடும்பம்

B) பேரினம்

C) துறை

D) வகுப்பு

19. வகைப்பாட்டியல் படிநிலையில் பல வகுப்புகளைக் கொண்ட ஒரு தொகுப்பு____________எனப்படுகிறது.

A) பெரும்பிரிவு

B) பிரிவு

C) துறை

D) வகுப்பு

விளக்கம்: வகைப்பாட்டியல் படிநிலையில் பல வகுப்புகளைக் கொண்ட ஒரு தொகுப்பு பிரிவு எனப்படுகிறது. எ.கா. மக்னோலியோஃபைட்டா.

20. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று வகைப்பாட்டியலின் உச்சகட்ட உயர்ந்த படிநிலையாக உள்ளது.

A) பேரினம்

B) குடும்பம்

C) பெரும்பிரிவு

D) பிரிவு

விளக்கம்: இது வகைப்பாட்டியலின் படிநிலைகளில் உச்சகட்ட, உயர்ந்த படிநிலையாகும். எ.கா. ப்ளாண்டே.

21. வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு_____________

A) பேரினம்

B) சிற்றினம்

C) குடும்பம்

D) பிரிவு

விளக்கம்: வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு சிற்றினமாகும். பெரிய தத்துவ ஞானியாகிய “பிளாட்டோ” வின் கூற்றுப்படி அனைத்து வடிவங்களும் “சிற்றினம்” (அ) “ஐடாஸ்” இன் நிழற்படிவங்கள் என நம்பப்படுகின்றன. “ஸ்டெப்பின்ஸ்” (1977) அவர்களின் கூற்றுப்படி “சிற்றினம்” என்பது “பரிணாமச் செயல் முறையின் அடிப்படை அலகு” ஆகும்.

22. அனைத்து வடிவங்களும் “சிற்றினம்” (அ) “ஐடாஸ்” இன் நிழற்படிவங்கள் என நம்பப்படுகின்றன என்பது கீழ்க்கண்ட யாருடையக் கூற்று.

A) கரோலஸ் லின்னேயஸ்

B) பிளாட்டோ

C) ஸ்டெப்பின்ஸ்

D) காஸ்பார்டு பாஹின்

23. “சிற்றினம்” என்பது பரிணாமச் செயல் முறையின் அடிப்படை அலகு என்பது கீழ்க்கண்ட யாருடையக் கூற்று.

A) கரோலஸ் லின்னேயஸ்

B) பிளாட்டோ

C) ஸ்டெப்பின்ஸ்

D) காஸ்பார்டு பாஹின்

24. கீழ்க்கண்டவற்றுள் சிற்றினங்களின் பண்புகளுடன் தொடர்பில்லாதது எது.

A) மற்ற உயிரினக் கூட்டங்ளிலிருந்து ஒரு உயிரினக் கூட்டத்திலுள்ள உயிரினங்கள் யாவும் நெருங்கிய தொடர்புடன் ஒத்துக்காணப்படுவதில்லை.

B) சிற்றினம் பொது மூதாதையரின் இனத்தோன்றல்கள் ஆகும்.

C) பாலினப்பெருக்கம் செய்யும் உயிரினங்களில் இவை இயற்கையில் தங்களுக்குள்ளாகவே இனப்பெருக்கம் செய்து வளமான சந்ததிகளை உருவாக்கும் திறன் பெற்றவை.

D) பாலிலா இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்களில் சிற்றினம் புறத்தோற்ற ஒற்றுமையின் அடிப்படையில் இனம் கண்டறியப்படுகிறது.

விளக்கம்: மற்ற உயிரினக் கூட்டங்களிலிருந்து ஒரு உயிரினக் கூட்டத்திலுள்ள உயிரினங்கள் யாவும் நெருங்கிய தொடர்புடன் ஒத்துக்காணப்படுகின்றன.

25. கீழ்க்கண்டவற்றுள் சிற்றினங்களின் பண்புகளுடன் பொருந்துவதைக் கண்டறி:

1) தொல்லுயிர் எச்ச உயிரினங்களாக இருப்பின் புறத்தோற்றம் மற்றும் உள்ளமைப்பியலில் காணப்படும் ஒற்றுமையின் அடிப்படையில் இனம் காணப்படுகிறது.

2) சிற்றினக்கோட்பாடு பொதுவாக இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

3) இனப்பரிணாமவியல் செயல்முறைகளுக்கு வலியுறுத்தும் கோட்பாடுகள் சிற்றினங்களைத் தனி அலகுகளாகப் பராமரிப்பதன் விளைவாக வேறுபட்ட புதிய சிற்றினங்களைப் பரிணாமத்தின் வாயிலாகத் தோற்றுவிக்கின்றன.

4) பரிணாமத்தின் முடிவுகளால் தோன்றியவைகளை வலியுறுத்துவது மற்றொரு கோட்பாடாகும்.

A) 1, 2, 3 மட்டும் சரி

B) 2, 3, 4 மட்டும் சரி

C) 1, 3, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

26. கீழ்க்கண்டவற்றுள் சிற்றினங்களின் வகைபாடுகளுல் பொருந்தாதது எது.

கூற்று (i): பரிணாமச் செயல்முறை விளைவாகத் தோன்றியவை புறத்தோற்றச் சிற்றினங்கள் மற்றும் இனப்பரிமாணச் சிற்றினங்களாகும்.

கூற்று (ii): பரிணாம முடிவின் விளைவாகத் தோன்றியவை உயிரியல் சிற்றினங்கள் அல்லது தனிமை படுத்துதலால் தோன்றியச் சிற்றினங்களாகும்.

A) கூற்று i சரி ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்:

1) பரிணாமச் செயல்முறை விளைவாகத் தோன்றியவை உயிரியல் சிற்றினங்கள் அல்லது தனிமை படுத்துதலால் தோன்றியச் சிற்றினங்களாகும்.

2) பரிணாம முடிவின் விளைவாகத் தோன்றியவை புறத்தோற்றச் சிற்றினங்கள் மற்றும் இனப்பரிமாணச் சிற்றினங்களாகும்.

27. ஒரு தனித்தாவரம் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளில் ஒத்துக் காணப்பட்டு மற்ற குழுக்களிலிருந்து வேறுபட்டுக் காணப்பட்டால் அவை____________என அழைக்கப்படுகின்றன.

A) உயிரியல் சிற்றினங்கள்

B) தனிமை படுத்துதால் தோன்றிய சிற்றினங்கள்

C) புறத்தோற்றச் சிற்றினங்கள்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஒரு தனித்தாவரம் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளில் ஒத்துக் காணப்பட்டு மற்ற குழுக்களிலிருந்து வேறுபட்டுக் காணப்பட்டால் அவை புறத்தோற்றச் சிற்றினம் என அழைக்கப்படுகின்றன. இனப்பரிணாம வரலாறு, மரபணு பரிமாற்றம் அல்லது விரிவான இனப்பெருக்கச் செயல்முறைகளின் அடிப்படையில் இவ்வகை சிற்றினங்கள் வரையறுக்கப்படவோ அல்லது வகைப்படுத்தப்படவோ இல்லை.

28. உயிரிய சிற்றினம் என்பது இயற்கையாகவே தங்களுக்குள்ளேயே இனப்பெருக்கம் செய்துகொள்வதால் மற்ற குழுக்களிலிருந்து தனித்துக் காணப்படுகிறது என்பது கீழ்க்கண்ட யாருடையக் கூற்று.

A) ஏ.பி. டீ காண்டோல்

B) மெக்லிட்ஜ் சிம்சன்

C) வைலி

D) எர்னஸ்ட் மேயர்

விளக்கம்: எர்னஸ்ட் மேயர் (1963) அவர்களின் கூற்றுப்படி உயிரிய சிற்றினம் என்பது இயற்கையாகவே தங்களுக்குள்ளேயே இனப்பெருக்கம் செய்துகொள்வதால் மற்ற குழுக்களிலிருந்து தனித்துக் காணப்படுகிறது.

29. இனப்பரிணாம சிற்றினக் கோட்பாட்டை உருவாக்கியர்கள்____________

A) மெக்லிட்ஜ்

B) சிம்சன்

C) வைலி

D) மேற்கண்ட அனைவரும்

30. இனப்பரிணாம வழிச் சிற்றினம் என்பது ஒரு பரிணாமச் சிற்றினம் என்றுக் கூறியவர்___________

A) மெக்லிட்ஜ்

B) வைலி

C) ஏ.பி.டீ காண்டோல்

D) சிம்சன்

விளக்கம்: இந்தக் கோட்பாடு மெக்லிட்ஜ் (1954) சிம்சன், சிம்சன் (1961), வைலி (1978) ஆகியோரால் உருவாக்கப்பட்டது. வைலியின் கூற்றுப்படி இனப்பரிணாம வழிச் சிற்றினம் என்பது ஒரு பரிணாமச் சிற்றினம். இது மூதாதையரின் வழி தோன்றிய ஒரு தனி இனத்தோன்றலாகும். பிறவழித்தோன்றகளிலிருந்து அதற்கென்று ஒரு குறிப்பிட்ட அடையாளம், பரிணாமப் போக்கு, வரலாறு போன்றவற்றைக் கொண்டது.

31. “ஃபிலாசோபியா பொட்டானிகா” என்ற புத்தகத்தின் ஆசிரியர்__________

A) பெந்தம் மற்றும் ஹீக்கர்

B) கரோலஸ் லின்னேயஸ்

C) காஸ்பார்டு பாஹின்

D) சிம்சன்

விளக்கம்: கரோலஸ் லின்னேயஸ் ஆரம்பக்கால தாவரப் பெயரிடுதல் அடிப்படை விதிகளை 1737 மற்றும் 1751ல் வெளியிடப்பட்ட தன்னுடைய “ஃபிலாசோபியா பொட்டானிகா” என்ற புத்தகத்தில் முன்மொழிந்தார்.

32. “தியரி எலிமெண்டரி டி லா பொட்டானிக்” என்ற நூலின் ஆசிரியர்__________

A) ஏ.பி. டி காண்டோல்

B) கரோலஸ் லின்னேயஸ்

C) காஸ்பார்டு பாஹின்

D) அல்போன்ஸ் டி காண்டோல்

விளக்கம்: தாவர பெயரிடுதல் விதிமுறைகளை ஏ.பி. டி காண்டோல் 1813 ல் வெளியிட்ட தனது “தியரி எலிமெண்டரி டி லா பொட்டானிக் எனும் நூலில் வழங்கினார்.

33. தற்போது நடைமுறையில் உள்ள ICBN பெயரிடுதல் பற்றிய விதிமுறைகளை வழங்கியர்____________

A) கரோலஸ் லின்னேயஸ்

B) ஏ.பி. டீ காண்டோல்

C) அல்போன்ஸ் டீ காண்டோல்

D) மேற்கண்ட அனைவரும்

விளக்கம்: தற்போது நடைமுறையில் உள்ள ICBNபெயரிடுதல் பற்றிய விதிமுறைகள் கரோலஸ் லின்னேயஸ்,A.B. டீ காண்டோல் மற்றும் அவருடைய மகன் அல்போன்ஸ் டீ காண்டோல் ஆகியோர் உருவாக்கியதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

34. ICBN தற்போது_________என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

A) ICEN

B) ICUN

C) ICN

D) ICM

விளக்கம்: தாவர உலகத்தினை மற்ற உயிரினங்களிலிருந்து தனிமைப்படுத்தவும் சில குறிப்பிட்ட காரணங்களுக்காகவும் ICBN தற்போது ICN எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் ஜீலை 2011 ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் தாவரவியல் மாநாட்டில் கொண்டுவரப்பட்டது. ICN என்பது பாசிகள், பூஞ்சைகள், தாவரங்களுக்குரிய சர்வதேசப் பெயர்சூட்டு சட்டமாக விளங்குகிறது.

35. 2011 ஆம் ஆண்டு பன்னாட்டு தாவரவியல் மாநாடு நடைபெற்ற இடம்____________

A) புது டெல்லி

B) நியூயார்க்

C) மெல்போர்ன்

D) வூகான் மகானம்

36. பன்னாட்டு பெயர் சூட்டும் சட்டத்தின் கொள்கைகளுல் பொருந்தாததைக் காண்க.

A) தாவரவியல் பெயர் சூட்டுமுறை, விலங்குகள் மற்றும் பாக்டீரியங்களின் பெயரிடுதல் முறைகளிலிருந்து தன்னிச்சையானது.

B) ஒரு வகைப்பாட்டு குழுவின் பெயர், பெயரீட்டு வகைகளின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

C) வகைப்பாட்டு குழுவின் பெயர் வெளியீட்டல் முன்னுரிமையின் அடிப்படையில் அமைகிறது.

D) வகைப்பாட்டு குழுக்களின் அறிவியல் பெயர் அதன் மூலத்தோற்றத்தைப் பொருட்படுத்தாமல் கிரேக்க மொழியில் அமைய வேண்டும்.

விளக்கம்: வகைப்பாட்டு குழுக்களின் அறிவியல் பெயர் அதன் மூலத்தோற்றத்தைப் பொருட்படுத்தாமல் இலத்தீன் மொழியில் அமைய வேண்டும்.

37. பன்னாட்டு தாவரவியல் சட்டக்குழு________வருடங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு இடங்களில் கூடுகிறது.

A) நான்கு

B) ஐந்து

C) ஆறு

D) ஏழு

விளக்கம்: CINஅமைப்பு தாவரங்களுக்குப் பெயரிடுதல் பற்றிய விதிகள் மற்றும் பரிந்துரைகளின் தொகுப்பை முறைப்படுத்தி உருவாக்கி உள்ளது. பன்னாட்டு தாவரவியல் சட்டக்குழு 6 வருடங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு இடங்களில் கூடுகிறது. அக்கூட்டத்தில் பெயரிடுதலில் செய்யப்படும் மாற்றங்களின் முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அவ்வாறு செய்யப்படும் மாற்றங்கள் அனைத்தும் அதற்குரிய வலைதளங்களில் வெளியிடப்படுகின்றன.

38. 18 வது பன்னாட்டு தாவரவியல் மாநாடு கீழ்க்கண்ட எந்த நாட்டில் நடைபெற்றது.

A) இந்தியா

B) சீனா

C) அமெரிக்கா

D) ஆஸ்திரேலியா

விளக்கம்: 2011 – ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் 18 வது பன்னாட்டு தாவரவியல் மாநாடு நடைபெற்றது.

39. 18 – வது பன்னாட்டு தாவரவியல் மாநாட்டில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் பொருந்தாதது எது.

1) புதிய தாவரப் பெயர்களின் வெளியீடு, மின்னணு முறை பதிப்பாக வெளியிட விதிகள் அனுமதியளிக்கிறது.

2) 39 – வது சட்ட விதிப்படி ஒரு புதிய பெயரின் விளக்கம் அல்லது வரையறை இலத்தீன் மொழி மட்டுமல்லாது கிரேக்கத்திலும்வெளியிட அனுமதியளிக்கிறது.

3) ஒரு பூஞ்சை ஒரே பெயர் மற்றும் ஒரு தொல்லுயிர் ஒரே பெயர் என்ற முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: 39 – வது சட்ட விதிப்படி ஒரு புதிய பெயரின் விளக்கம் அல்லது வரையறை இலத்தீன் மொழி மட்டுமல்லாது ஆங்கிலத்திலும்வெளியிட அனுமதியளிக்கிறது.

40. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி:

1) அனாமார்ஃப் – பூஞ்சையின் பாலினப்பெருக்க நிலை

2) டீலியோமார்ஃப் – பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்க நிலை

A) 1 தவறு

B) 2 தவறு

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்:

1) அனாமார்ஃப் – பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்க நிலை

2) டீலியோமார்ஃப் – பூஞ்சையின் பாலினப்பெருக்க நிலை

41. கீழ்க்கண்டவற்றுள் அங்கீகரிக்கப்பட்ட சேமிப்புக்களஞ்சியங்கள் எவை.

A) இன்டெக்ஸ் ஃபங்கோரம்

B) பூஞ்சை அல்லது மைக்கோ வங்கி

C) மேற்கண்ட அனைத்தும்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: இன்டெக்ஸ் ஃபங்கோரம் மற்றும் பூஞ்சை அல்லது மைக்கோ வங்கி என அங்கீகரிக்கப்பட்ட சேமிப்புகளஞ்சியங்கள் இரண்டு உள்ளன. புதிய பூஞ்சை பற்றிய விளக்கங்கள் மற்றும் பெயர் பதிவு ஓர் பூஞ்சையினைக் கண்டறிபவர் மூலம் பூஞ்சை களஞ்சியத்தில் பதியப்படவேண்டும்.

42. 19-வது பன்னாட்டு தாவரவியல் மாநாடு நடைபெற்ற ஆண்டு­­­­­­­­­­­­­___________

A) 1999

B) 2005

C) 2011

D) 2017

விளக்கம்: 19 – வது பன்னாட்டு தாவரவியல் மாநாடு 2017 – ஆம் ஆண்டு சீனாவில் ஷென்ஜென் என்ற இடத்தில் நடைபெற்றது. இத்தாவரப் பன்னாட்டு மாநாட்டில் செய்யப்பட்ட மாற்றங்கள் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை.

43. 2017 – ஆம் ஆண்டு பன்னாட்டு தாவரவியல் மாநாடு கீழ்க்கண்ட எந்த நாட்டில் நடைபெற்றது.

A) அமெரிக்கா

B) சீனா

C) இந்தியா

D) பிரேசில்

44. அல்பீஸியா அமாரா பற்றிய வட்டாரப் பெயர்களில் சரியான இணையைக் கண்டறி:

1) தென்தமிழகம் – துரிஞ்சி

2) வட தமிழகம் – உசிலை

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்:

1) தென்தமிழகம் – உசிலை

2) வட தமிழகம் – துரிஞ்சி

45. கூற்று (i): ஒவ்வொரு வகைப்பாட்டு அலகும் ICN விதிகளின்படி ஒரு சரியான அறிவியல் பெயரை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.

கூற்று (ii): ஒரு சிற்றினத்தின் அறிவியல் பெயரானது எப்பொழுதும் இருசொற் பெயரை கொண்டிருக்க வேண்டும்.

A) கூற்று i சரி ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

46. ஒரைசா சட்டைவா என்பது_________ன் அறிவியல் பெயராகும்.

A) நெல்

B) கம்பு

C) கேழ்வரகு

D) சாமை

47. இரு சொற் பெயரிடல் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்__________

A) கரோலஸ் லின்னேயஸ்

B) காஸ்பார்ட் பாஹின்

C) அரிஸ்டாட்டில்

D) மெக்லிட்ஜ்

விளக்கம்: காஸ்பார்ட் பாஹின் முதன்முதலாக இரு சொற் பெயரிடல் முறையை அறிமுகப்படுத்தினார். லின்னேயஸ் அதனை நடைமுறைப்படுத்தினார்.

48. இரு சொற் பெயரிடல் முறையை நடைமுறைப்படுத்தியவர்____________

A) கரோலஸ் லின்னேயஸ்

B) காஸ்பார்ட் பாஹின்

C) அரிஸ்டாட்டில்

D) மெக்லிட்ஜ்

விளக்கம்: காஸ்பார்ட் பாஹின் முதன்முதலாக இரு சொற் பெயரிடல் முறையை அறிமுகப்படுத்தினார். லின்னேயஸ் அதனை நடைமுறைப்படுத்தினார். ஒரு சிற்றினத்தின் அறிவியல் பெயர் இரு சொற்களால் ஆனது முதல்சொல் பேரினத்தையும் இரண்டாம் சொல் சிற்றினத்தையும் குறிக்கும். எ.கா. மாஞ்சிஃபெரா இண்டிகா இதில் மாஞ்சிஃபெரா என்ற முதற்சொல் பேரினத்தையும் இண்டிகா என்ற இரண்டாம் சொல் சிற்றினத்தையும் குறிக்கிறது. தற்போது இம்முறை தான் நடைமுறையில் உள்ளது.

49. ஆசிரியரால் நேரிடையாகக் கண்டறியப்பட்டு, பெயரிடப்பட்ட தாவர வகைக்காட்டு அல்லது வரைபட விளக்கம் என்பது___________

A) மாற்று வகைக்காட்டு

B) புது வகைக்காட்டு

C) முதன்மை வகைக்காட்டு

D) இணை வகைக்காட்டு

விளக்கம்: முதன்மை வகைக்காட்டு என்பது ஆசிரியரால் நேரிடையாகக் கண்டறியப்பட்டு, பெயரிடப்பட்ட தாவர வகைக்காட்டு அல்லது வரைபட விளக்கமாகும். தாவரங்களை இனம் கண்டறிய உள்ள வரையறுக்கப்பட்ட குறிப்புகள் ஆதாரமாகப் பயன்படுகின்றன. முதன்மை வகைக்காட்டுகள் அங்கீகாரம் பெற்ற உலர் தாவரச் சேகர மையங்களில் கிடைக்கும்.

50. பொருத்துக:

A) முதன்மை வகைக்காட்டு – 1. ஹோலோடைப்

B) முதன்மை நகல் வகைக்காட்டு – 2. ஐசோடைப்

C) மாற்று வகைக்காட்டு – 3. லாக்டோடைப்

D) கூட்டு வகைக்காட்டு – 4. சைன்டைப்

A) 1 2 4 3

B) 4 3 2 1

C) 3 1 2 4

D) 1 2 3 4

விளக்கம்:

A) முதன்மை வகைக்காட்டு – 1. ஹோலோடைப்

B) முதன்மை நகல் வகைக்காட்டு – 2. ஐசோடைப்

C) மாற்று வகைக்காட்டு – 3. லாக்டோடைப்

D) கூட்டு வகைக்காட்டு – 4. சைன்டைப்

51. பொருத்துக:

A) மாற்று வகைக்காட்டு – 1. நியோடைப்

B) புது வகைக்காட்டு – 2. லேக்டோடைப்

C) இணை வகைக்காட்டு – 3. பாராடைப்

D) கூடுதல் வகைக்காட்டு – 4. எபிடைப்

A) 1 2 4 3

B) 4 3 2 1

C) 3 1 2 4

D) 2 1 3 4

விளக்கம்:

A) மாற்று வகைக்காட்டு – 1. லேக்டோடைப்

B) புது வகைக்காட்டு – 2. நியோடைப்

C) இணை வகைக்காட்டு – 3. பாராடைப்

D) கூடுதல் வகைக்காட்டு – 4. எபிடைப்

52. கீழ்க்கண்டவற்றுள் வகைப்பாட்டுக் கருவியாக பயன்படுவது எது.

A) தாவரப் பட்டியல்கள்

B) தாவரத் தொகுப்புகள்

C) தாவரவியல் தோட்டங்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: வகைப்பாட்டியலைப் பற்றி அறிய உதவும் முக்கியத் துணைக்கருவிகள் வகைப்பாட்டு துனைக்கருவிகள் எனப்படும். வகைப்பாட்டு திறவுகள், தாவரப் பட்டியல்கள், தாவரத் தொகுப்புகள், தனிவரைவு நூல்கள், உலர்த்தாவரத் தொகுப்புகள், தாவரவியல் தோட்டங்கள் யாவும் வகைப்பாட்டு கருவிகளாகப் பயன்படுகின்றன.

53. கூற்று A: அறிமுகமில்லாத தாரவங்களைச் சரியாக இனம் கண்டறிய வகைப்பாட்டு திறவுகள் பயன்படுகின்றன.

காரணம் R: இந்த வகைப்பாட்டு திறவு, நிலையான மற்றும் நம்பத்தகுந்த பண்புகளை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் திறவு கவட்டுக் கிளைத்தல் திறவு ஆகும்.

A) கூற்று A காரணம் R இரண்டும் சரி, மேலும் காரணம் R கூற்று A விற்கான சரியான விளக்கமாகும்.

B) கூற்று A காரணம் R இரண்டும் சரி, மேலும் காரணம் R கூற்று A விற்கான சரியான விளக்கமல்ல.

C) கூற்று A சரி, காரணம் R தவறு

D) கூற்று A தவறு, காரணம் R சரி

54. பல்வழித் திறவு முறை என்பது____________

A) விலங்கினப்பெயர் அறிய பயன்படும் மற்றொரு முறை

B) தாவரப்பெயர் அறிய பயன்படும் மற்றொரு முறை

C) இரு வாழ்விகளின் பெயர் அறிய பயன்படும் மற்றொரு முறை

D) பறவைகளின் பெயர் அறிய பயன்படும் மற்றொரு முறை

விளக்கம்: தாவரப்பெயர் அறிய பயன்படும் மற்றொரு வகை பல்வழித் திறவு முறை என அழைக்கப்படுகிறது. அவைகளில் பல்வேறு வகை பண்புகளின் தொகுப்புகளைக் கொண்டுள்ளன.

55. தமிழ்நாடு கர்நாடிக் தாவர தொகுப்பு புத்தகத்தின் ஆசிரியர்__________

A) R. விஜய சங்கர்

A) K. ரவிக்குமார்

C) P. ரவிச்சந்திரன்

D) K.M மாத்யூ

56. திருவண்ணாமலை மாவட்டத் தாவர தொகுப்பு புத்தகத்தின் ஆசிரியர்__________

A) R. விஜய சங்கர்

B) K. ரவிக்குமார்

C) P. ரவிச்சந்திரன்

D) மேற்கண்ட அனைவரும்

57. மெட்ராஸ் பிரசிடென்சி தாவர தொகுப்பு புத்தகத்தின் ஆசிரியர்___________

A) J.S. காம்பிள்

B) ஃபிஷ்ஷர்

C) D.A. வெப்

D) AB இருவரும்

58. “பாபிலோன்” தொங்கும் தோட்டம் எங்கு அமைந்துள்ளது_________

A) மெல்போர்ன்

B) மொசப்படோமியா

C) நியுயார்க்

D) ஏதென்ஸ்

விளக்கம்: தாவரங்கள் பல நிலைகளில் பல வகைகளில் அமைந்த இடத்தைக் குறிப்பது தாவரயியல் தோட்டம் ஆகும். தோட்டங்களில் அலங்காரத் தாவரங்கள் அழகு, வாசன, மதம் மற்றும் கௌரவத்திற்காக வளர்க்கப்படுகின்றன. எ.கா. மொசப்படோமியாவில் உள்ள புகழ்மிக்க “பாபிலோன்” தொங்கும் தோட்டம் சிறந்த எ.கா. ஆகும்.

59. தியோஃப்ராஸ்டஸ் முதன் முதலில் அறிவியல் மற்றும் கல்வி பயில்வதற்காக தோட்டம் அமைத்த நகரம்___________

A) மெல்போர்ன்

B) மொசப்படோமியா

C) நியுயார்க்

D) ஏதென்ஸ்

60. முதல் நவீன தாவரவியல் தோட்டத்தை நிறுவியவர்_____________

A) தியோஃப்ராஸ்டஸ்

B) ஹிப்போகிரேட்டஸ்

C) லூகா கினி

D) சிம்சன்

விளக்கம்: 1544 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள பைசா என்னும் இடத்தில் தாவரவியல் பேராசியராகப் பணிபுரிந்த லூகா கினி என்பவர் முதல் நவீன தாவரவியல் தோட்டத்தை நிறுவினார். கள்ளி வகைகள், சதைப்பற்றுள்ள தாவரங்கள், பசுமைஇல்லம், நிழலகம், வெப்ப மண்டல குளிர் மற்றும் அயல்நாட்டு தாவரவகைகள் எனச் சிறப்புத்தன்மை பெற்ற தாவரங்கள், தாவரத் தோட்டங்களில் அமைந்துள்ளன.

61. கீழ்க்கண்டவற்றுள் தாவரத் தோட்டங்களின் பங்களிப்புப் பற்றிய கருத்துக்களுல் பொருந்தியதை கண்டறி.

1) தாவரத் தோட்டங்களில் உள்ள அலங்கார மற்றும் அழகு மிகைத் தாவரங்கள் பெருமளவில் பார்வையாளர்களைக் கவர்ந்து ஈர்க்கின்றன.

2) தாவரத் தோட்டங்களில் பெருமளவில் காணப்படும் தாவரச் சிற்றினங்களை, தாவரவியல் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

3) சுய-வழி கற்பதற்கும் செயல்முறை ஆராய்ச்சிக்கு உதவுவதற்கும் தாவரத் தோட்டங்களில் உள்ள பல்வகைத்தாவரங்கள் பயன்படுகின்றன.

4) தாவர உள்ளமைப்பியல், கருவியல், தாவர வேதியியல், செல்லியல், வாழ்வியல், சூழ்நிலை உயிரியல் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒருங்கிணைந்துப் பயில ஆதாரமாகத் தோட்டங்கள் விளங்குகின்றன.

A) 1 2 3 மட்டும் சரி

B) 2 3 4 மட்டும் சரி

C) 1 3 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

62. கீழ்க்கண்டவற்றுள் தாவரத் தோட்டங்களின் பங்களிப்புப் பற்றிய கருத்துக்களுல் பொருந்தியதை கண்டறி.

1) உயிரி பன்மத் தன்மை பற்றி மட்டுமின்றி அரிதான மற்றும் அழியும், நிலையிலுள்ள தாவரங்களைப் பாதுகாக்கும் மையமாகத் தாவரத் தோட்டங்கள் விளங்குகின்றன.

2) ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடிய தாவரச் சிற்றினங்கள் மற்றும் இலவச விதை பரிமாற்றம் தொடர்பான அறிக்கையை அளிக்க உதவுகின்றன.

3) தாவரங்களின் இனப்பெருக்க முறைகள், பொது மக்களுக்கு விற்கப்படும் தாவரங்கள் பற்றிய தகவல்களைத் தாவரத் தோட்டங்கள் வழங்குகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

63. நியூ சௌவுத் வேல்ஸ் தாவரவியல் தோட்டம் அமைந்துள்ள இடம்_______

A) USA

B) இங்கிலாந்து

C) சிட்னி

D) பிரேசில்

64. ராயல் தாவரவியல் தோட்டம் அமைந்துள்ள இடம்__________

A) USA

B) இங்கிலாந்து

C) சிட்னி

D) பிரேசில்

65. தேசிய தாவரவியல் தோட்டம் நிறுவப்பட்ட ஆண்டு மற்றும் அமைந்துள்ள இடம்____________

A) 1948, லக்னோ

B) 1979, திருவனந்தபுரம்

C) 1963, ஏற்காடு

D) 1786, கல்கத்தா

66. JNTBGRI அமைந்துள்ள மாநிலம்____________

A) தமிழ்நாடு

B) குஜராத்

C) கேரளா

D) உத்தரபிரதேசம்

விளக்கம்: இந்த அமைப்பானது கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் 1979 ல் நிறுவப்பட்டது. இங்கு அதிகம் கவருபவை மூங்கில் தொகுப்பாகும்.

67. தேசிய ஆர்க்கிடேரியம் அமைந்துள்ள மாநிலம்_____________

A) ஆந்திரபிரதேசம்

B) உத்திரபிரதேசம்

C) தமிழ்நாடு

D) மேற்குவங்காளம்

விளக்கம்: தேசிய ஆர்க்கிடேரியம் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் 1963 ல் நிறுவப்பட்டது. இது BSIன் தெற்கு வட்டாரமையத்தால் பராமரிக்கப்படுகிறது. இங்கு அதிகம் கவருபவை பூச்சியுண்ணும் தாவரங்களாகும்.

68. இந்திய தாவரவியல் தோட்டம் அமைந்துள்ள இடம்___________

A) ஏற்காடு

B) லக்கோ

C) ஹைதராபாத்

D) கொல்கத்தா

விளக்கம்: இந்திய தாவரவியல் தோட்டம்(AJCB) கொல்கத்தாவில் 1786 ல் கர்னல் இராபர்ட் கிட் என்பவரால் நிறுவப்பட்டது. இது மிகப்பெரியது மற்றும் மிகப் பழமையானதாகும். இங்கு இருப்பனவற்றுள் அதிகம் கவருபவை பேராலமரமாகும்.

69. கொல்கத்தாவில் உள்ள இந்திய தாவரவியல் தோட்டத்தை நிறுவியவர்__________

A) மெக்கலிட்ஜ்

B) சிம்சன்

C) கர்னல் இராபர்ட் கிட்

D) வைலி

70. பொருத்துக:

A) தேசிய தாவரவியல் தோட்டம் – 1. 1963

B) JNTBGRI – 2. 1786

C) தேசிய ஆர்க்கிடேரியம் – 3. 1979

D) இந்திய தாவரவியல் தோட்டம் – 4. 1948

A) 1 2 4 3

B) 4 3 1 2

C) 3 1 2 4

D) 2 1 3 4

விளக்கம்:

A) தேசிய தாவரவியல் தோட்டம் – 1. 1948

B) JNTBGRI – 2. 1979

C) தேசிய ஆர்க்கிடேரியம் – 3. 1963

D) இந்திய தாவரவியல் தோட்டம் – 4. 1786

71. உலகிலேயே மிகப் பெரிய தாவரவியல் தோட்டம் அமைந்துள்ள நாடு_________

A) சீனா

B) அமெரிக்கா

C) இங்கிலாந்து

D) நியுசிலாந்து

விளக்கம்: உலகிலேயே மிகப் பெரிய தாவரவியல் தோட்டம் இங்கிலாந்து நாட்டில் கியூ என்னுமிடத்தில் அமைந்துள்ள அரச (அ) ராயல் தாவரவியல் தோட்டமாகும். இது 1760 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக 1841 – ல் திறக்கப்பட்டது. நீர் வாழ் தாவரத்தோட்டம்,1400 ஆர்போரிய மரங்கள், போன்சாய் தொகுப்பு, கள்ளி வகைகளின் தொகுப்பு, கார்னிவோரஸ் தாவரத் தொகுப்புகளையும் கொண்டுள்ளன.

72. உலகிலேயே மிகப் பெரிய தாவரவியல் தோட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு__________

A) 1700

B) 1740

C) 1760

D) 1780

விளக்கம்: உலகிலேயே மிகப் பெரிய தாவரவியல் தோட்டம் இங்கிலாந்து நாட்டில் கியூ என்னுமிடத்தில் அமைந்துள்ள அரச (அ) ராயல் தாவரவியல் தோட்டமாகும். இது 1760 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக 1841 – ல் திறக்கப்பட்டது.

73. கீழ்க்கண்டக் கூற்றுகளைக் கவனித்து சரியானதைக் கண்டறி:

1) ஹெர்பேரியம் என்பது உலர் தாவரங்களைப் பாதுகாக்கும் நிலையம் அல்லது இடமாகும்.

2) தாவரங்களைச் சேகரித்து அழுத்தி, உலர்த்தியபின்பு தாளில் ஒட்டிப் பாதுகாக்கப்படும் இடமாகும்.

3) ஹெர்பேரியம் ஆய்வு மையமாகவும் தாவர வகைப்பாட்டிற்குத் தொடர்புடைய தாவர மூலப்பொருட்களைப் பெற்றும் விளங்குகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

74. சேகரித்த தாவரங்களை உலரவைத்து பதப்படுத்தும் முறைக்கு________என்று பெயர்.

A) பதப்படுத்துதல்

B) உலர வைத்தல்

C) உலர்த்துதல்

D) ஹெர்பேரியம்

75. உலகின் மிகச்சிறிய நீர் அல்லி_________

A) நிம்பேயா தெர்மாரம்

B) விக்னா ரேடியாட்டா

C) ஃபேசியோலஸ் வல்காரிஸ்

D) கிளைசின் மாக்ஸ்

விளக்கம்: 2009 – ஆம் ஆண்டில் கியூ ஹெர்பேரியம் மூலம் உலகின் மிகச் சிறிய நீர் அல்லி நிம்பேயா தெர்மாரம் அழியும் நிலையில் இருந்து விதை வளர்ப்பு மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

76. ஹெர்பேரியம் தயாரித்தலின் போது அவற்றை பூஞ்சை மற்றும் பூச்சிகள் தாக்குதல்களிலிருந்து உலர்தாவரம் ஒட்டியத்தாளை பாதுகாக்க பயன்படுத்துவதில் பொருந்தாதது_____________

A) மெர்குரிக் குளோரைடு

B) நாப்தலின்

C) சல்பியுரிக் அமிலம்

D) கார்பன்-டை-சல்பைட்டு

77. ஹெர்பேரியம் தயாரித்தலில் தற்போது உலகெங்கும் பயன்படுத்தும் முறை___________

A) வெப்பப்படுத்தல் முறை

B) உலர்த்தி காயவைத்தல் முறை

C) ஆழ்ந்த குளிரூட்டல் முறை

D) மேற்கண்ட அனைத்தும்

78. ஹெர்பேரிய தயாரித்தலில் உள்ள படிநிலைகளைக் கண்டறி?

A) தாவரம் சேகரித்தல்

B) களத்தில் விபரங்களைச் சேகரித்து ஆவணப்படுத்துதல்

C) தாவர மாதிரி தயாரித்தல்

D) மேற்கண்ட அனைத்தும்

79. ஹெர்பேரிய தயாரித்தலில் உள்ள படிநிலைகளைக் கண்டறி?

A) தாவர மாதிரிகளை உலர்தாவர ஒட்டுத்தாளில் ஒட்டுதல்

B) ஹெர்பேரிய குறிப்பு விவரச்சீட்டு

C) பூஞ்சை மற்றும் பூச்சிகள் தாக்குதல்களிலிருந்து உலர்தாவரம் ஒட்டியத்தாளை பாதுகாத்தல்

D) மேற்கண்ட அனைத்தும்

80. பொருத்துக:

A) மியுசியம் நேஷனல் டி ஹிஸ்டரி நேச்சுரல் – 1. ரஷ்யா

B) நியுயார்க் தாவரவியல் தோட்டம் – 2. அமெரிக்கா

C) கோமரோவ் தாவரவியல் நிறுவனம் – 3. பிரான்ஸ்

D) ராயல் தாவரவியல் பூங்கா – 4. இங்கிலாந்து

A) 1 2 4 3

B) 4 3 1 2

C) 3 2 1 4

D) 2 1 3 4

விளக்கம்:

A) மியுசியம் நேஷனல் டி ஹிஸ்டரி நேச்சுரல் – 1. பிரான்ஸ்

B) நியுயார்க் தாவரவியல் தோட்டம் – 2. அமெரிக்கா

C) கோமரோவ் தாவரவியல் நிறுவனம் – 3. ரஷ்யா

D) ராயல் தாவரவியல் பூங்கா – 4. இங்கிலாந்து

81. பொருத்துக:

A) மியுசியம் நேஷனல் டி ஹிஸ்டரி நேச்சுரல் – 1. 1635

B) நியுயார்க் தாவரவியல் தோட்டம் – 2. 1841

C) கோமரோவ் தாவரவியல் நிறுவனம் – 3. 1823

D) ராயல் தாவரவியல் பூங்கா – 4. 1891

A) 1 4 3 2

B) 4 3 1 2

C) 3 2 1 4

D) 2 1 3 4

விளக்கம்:

A) மியுசியம் நேஷனல் டி ஹிஸ்டரி நேச்சுரல் – 1. 1635

B) நியுயார்க் தாவரவியல் தோட்டம் – 2. 1891

C) கோமரோவ் தாவரவியல் நிறுவனம் – 3. 1823

D) ராயல் தாவரவியல் பூங்கா – 4. 1841

82. பொருத்துக:

A) மெட்ராஸ் ஹெர்பேரியம் டிளiவளாகம் – 1. மேற்குவங்கம்

B) மத்தியத் தேசிய ஹெர்பேரிய நிலையம் – 2. கோயம்புத்தூர்

C) நேரு வெப்பமண்டல தாவரவியல் தோட்டம் – 3. சென்னை

D) மாநிலக் கல்லூரி ஹெர்பேரியம் – 4. கேரளா

A) 1 4 3 2

B) 4 3 1 2

C) 3 2 1 4

D) 2 1 4 3

விளக்கம்:

A) மெட்ராஸ் ஹெர்பேரியம் டிளiவளாகம் – 1. கோயம்புத்தூர்

B) மத்தியத் தேசிய ஹெர்பேரிய நிலையம் – 2. மேற்குவங்கம்

C) நேரு வெப்பமண்டல தாவரவியல் தோட்டம் – 3. கேரளா

D) மாநிலக் கல்லூரி ஹெர்பேரியம் – 4. சென்னை

83. பொருத்துக:

A) மெட்ராஸ் ஹெர்பேரியம் டிளiவளாகம் – 1. 1795

B) மத்தியத் தேசிய ஹெர்பேரிய நிலையம் – 2. 1995

C) நேரு வெப்பமண்டல தாவரவியல் தோட்டம் – 3. 1979

D) மாநிலக் கல்லூரி ஹெர்பேரியம் – 4. 1844

A) 1 4 3 2

B) 4 3 1 2

C) 3 2 1 4

D) 2 1 3 4

விளக்கம்:

A) மெட்ராஸ் ஹெர்பேரியம் டிளiவளாகம் – 1. 1995

B) மத்தியத் தேசிய ஹெர்பேரிய நிலையம் – 2. 1795

C) நேரு வெப்பமண்டல தாவரவியல் தோட்டம் – 3. 1979

D) மாநிலக் கல்லூரி ஹெர்பேரியம் – 4. 1844

84. ஹெர்பேரியத்தின் பயன்களுல் பொருந்தாதது எது.

A) வகைப்பாட்டியல் தொடர்பான படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு ஆதாரங்களாகப் பயன்படுகிறது.

B) தாவர ஈரவகை மாதிரிகளை ஒழுங்கான முறையில் வரிசைப்படுத்தி வைத்துப் பயன்படுத்திட உதவுகிறது.

C) புதிதாகச் சேகரிக்கப்பட்டு, சந்தேகத்திற்குட்பட்ட புதிய தாவர வகைமாதிரிகளை ஒப்பிட, தாவர ஒப்பீட்டு வகைக்காட்டு உதவுகிறது.

D) தாவரப் பல்வகைத்தன்மை, சுற்றுசூழல் மதிப்பீடு, சுற்றுச்சூழல் செயல் நுணுக்கும் ஆய்வுக்குரிய புதிய பகுதிகளைக் கணக்கிட ஆவணப்படுத்தப்பட்ட ஒப்பீடு வகைகாட்டு தாவரவகை உலர்மாதிரி முக்கியப் பங்கு வகிக்கிறது.

விளக்கம்: தாவர உலர்வகை மாதிரிகளை ஒழுங்கான முறையில் வரிசைப்படுத்தி வைத்துப் பயன்படுத்திட உதவுகிறது.

85. உலகின் மிகப்பெரிய ராயல் தாவரவியல் தோட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு__________

A) 1800

B) 1810

C) 1820

D) 1840

விளக்கம்: தென்மேற்கு இலண்டனில் 1840-ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய ஹெர்பேரியம் என அழைக்கப்படும் ராயல் தாவரவியல் தோட்டம் உருவாக்கப்பட்டது. இங்கு 30000 க்கும் மேற்பட்ட பல்வேறுப்பட்ட உயிருள்ள தாவரங்களும், பல்வகைத்தன்மையுடைய தாவரவகைகளும் பூஞ்சை வகைகளும் காணப்படுகின்றன.

86. முதன் முதலில் பொட்டானிக்கல் சர்வே உருவாக்கப்பட்ட ஆண்டு_________

A) 1885

B) 1890

C) 1895

D) 1900

விளக்கம்: 1890 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 – இல் முதன் முதலில் பொட்டானிக்கல் சர்வே உருவாக்கப்பட்டுப் பின்னர் இந்தியத் தாவரவியல் களஆய்வு மையம் எனப் பெயரிடப்பட்டது. இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இந்தியச் சுதந்திரத்துக்குப்பின் நாட்டின் தாவர வளங்களைப் பராமரிக்க வேண்டுமென உணரப்பட்டது.

87. பத்மஸ்ரீ முனைவர் E.K. ஜானகியம்மாள் இந்தியத் தாவரவியல் களஆய்வு பணியில் பணியமர்த்தப்பட்ட ஆண்டு__________

A) 1950

B) 1952

C) 1956

D) 1958

விளக்கம்: பத்மஸ்ரீ முனைவர் E.K. ஜானகியம்மாள் அவர்கள் 1952 அக்டோபர் 14-ந் தேதியன்று இந்திய தாவரவியல் களஆய்வு பணியில் பணியமர்த்தப்பட்டார். 1954 மார்ச் 29ந் தேதி இந்திய அரசு அனுமதி அளித்தப்பின் இறுதியாகக் கொல்கத்தாவைத் தலைமையகமாகத் தாவரவியல் கள ஆய்வு மையம் மாற்றியமைக்கப்பட்டது.

88. இந்திய தாவரவியல் களஆய்வு மையம் கொல்கத்தாவிற்கு மாற்றியமைக்கப்பட்ட ஆண்டு____________

A) 1950

B) 1952

C) 1954

D) 1958

89. கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் முனைவர் E.K. ஜானகியம்மாள் பெயரில் தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது.

A) தெலுங்கானா

B) கேரளா

C) குஜராத்

D) ஜம்முகாஷ்மீர்

விளக்கம்: பத்மஸ்ரீ முனைவர் E.K. ஜானகியம்மாள் அவர்கள் 1952 அக்டோபர் 14-ந் தேதியன்று இந்திய தாவரவியல் களஆய்வு பணியில் பணியமர்த்தப்பட்டார். 1954 மார்ச் 29ந் தேதி இந்திய அரசு அனுமதி அளித்தப்பின் இறுதியாகக் கொல்கத்தாவைத் தலைமையகமாகத் தாவரவியல் கள ஆய்வு மையம் மாற்றியமைக்கப்பட்டது. ஜம்முவிலுள்ள தாவித் தாவரவியல் பூங்காவானது முனைவர் E.K. ஜானகியம்மாளின் பெயரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

90. “வகைப்பாட்டியலின் தந்தை”____________

A) அரிஸ்டாட்டில்

B) கரோலஸ் லின்னேயஸ்

C) பெந்தம் மற்றும் ஹீக்கர்

D) காஸ்பர்டு பாஹின்

விளக்கம்: “வகைப்பாட்டியலின் தந்தை” என போற்றப்படும் கரோலஸ் லின்னேயஸ்(1707 – 1778) ஒரு சிறந்த ஸ்வீடன் நாட்டுத் தாவரவியலாளர். இவர் 1753 – ம் ஆண்டில் “ஸ்பீசிஸ் பிளாண்டாரம்” எனும் நூலில் செயற்கை முறை வகைப்பாட்டினை விளக்கினார். இதில் 7300 சிற்றினங்களை விவரித்து 24 வகுப்புகளாகப் பட்டியலிட்டுள்ளார்.

91. கரோலஸ் லின்னேயஸின் “ஸ்பீசிஸ் பிளாண்டாரம்” என்ற நூல் வெளியான ஆண்டு____________

A) 1723

B) 1743

C) 1753

D) 1763

விளக்கம்: “வகைப்பாட்டியலின் தந்தை” என போற்றப்படும் கரோலஸ் லின்னேயஸ்(1707 – 1778) ஒரு சிறந்த ஸ்வீடன் நாட்டுத் தாவரவியலாளர். இவர் 1753 – ம் ஆண்டில் “ஸ்பீசிஸ் பிளாண்டாரம்” எனும் நூலில் செயற்கை முறை வகைப்பாட்டினை விளக்கினார். இதில் 7300 சிற்றினங்களை விவரித்து 24 வகுப்புகளாகப் பட்டியலிட்டுள்ளார். இவர் தம் வகைப்பாட்டில் மகரந்தத்தாள்களின் எண்ணிக்கை, இணைவு, நீளம் போன்ற பல பண்புகளின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்தினார்.

92. கூற்று A: கரோலஸ் லின்னேயஸ் சூலக இலைகளின் சிறப்புப் பண்புகளின் அடிப்படையில் வகுப்புகளைப் பல துறைகளாகப் பிரித்தார்.

காரணம் R: எனவே இவ்வகைப்பாடு “பாலின வழி வகைப்பாடு” என்று அழைக்கப்படுகிறது.

A) கூற்று A காரணம் R இரண்டும் சரி, மேலும் காரணம் R ஆனது கூற்று A விற்கான சரியான விளக்கமாகும்.

B) கூற்று A காரணம் R இரண்டும் சரி, மேலும் காரணம் R ஆனது கூற்று A விற்கான சரியான விளக்கமல்ல.

C) கூற்று A சரி காரணம் R தவறு

D) கூற்று A தவறு காரணம் R சரி

93. கரோலஸ் லின்னேயஸின் வகைப்பாடானது பிற்காலத்தில் தொடர்ந்து பின்பற்றபடாததற்கான காரணங்களுல் தவறானதைக் காண்க.

1) முற்றிலும் தொடர்புடைய தாவரங்கள் ஒரு பிரிவின் கீழும், தொடர்பற்ற தாவரங்கள் தனித்தனிப் பிரிவுகளின் கீழும் வகைப்படுத்தப்பட்டிருந்தன

2) ஒரு விதையிலைத் தாவரத் தொகுப்பைச் சேர்ந்த ஜிஞ்ஜிபெரேசி தாவரங்களும் இருவிதையிலைத் தாவர வகுப்பைச் சேர்ந்த அனகார்டியேசி தாவரங்களும், ஒரே ஒரு மகரந்தத்தாளைப் பெற்றிருப்பதால் மோனாண்டிரியா என்ற ஒரே வகுப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

3) மகரந்த தாள்களின் எண்ணிக்கை அடிப்படையில் ப்ரூனஸ் எனும் பேரினம் கேக்டஸ் குழுமத்துடன் சேர்த்து வகைப்படுத்தப்பட்டுள்ளது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: முற்றிலும் தொடர்பற்ற தாவரங்கள் ஒரு பிரிவின் கீழும், நெருங்கிய தொடர்புடைய தாவரங்கள் தனித்தனிப் பிரிவுகளின் கீழும் வகைப்படுத்தப்பட்டிருந்தன

94. லின்னேயஸ் அவரது “ஸ்பீசிஸ் பிளாண்டாரம்” என்ற நூலில் மகரந்தத் தாள் மற்றும் பால்பண்புகளின் அடிப்படையில்_________வகுப்புகளாக வகைப்படுத்தியுள்ளார்.

A) 14

B) 24

C) 34

D) 44

95. பொருத்துக:

A) மோனாண்ட்ரியா – 1. இரு மகரந்தத்தாள்களுடையவை

B) டையாண்ட்ரியா – 2. ஒரு மகரந்தத்தாளுடைய மலர்கள்

C) ட்ரையாண்ட்ரியா – 3. நான்கு மகரந்தத்தாள்களுடையவை

D) டெட்ராண்ட்ரியா – 4. மூன்று மகரந்தத்தாள்களுடையவை

A) 1 4 3 2

B) 4 3 1 2

C) 3 2 1 4

D) 2 1 4 3

விளக்கம்:

A) மோனாண்ட்ரியா – 1. ஒரு மகரந்தத்தாளுடைய மலர்கள்

B) டையாண்ட்ரியா – 2. இரு மகரந்தத்தாள்களுடையவை

C) ட்ரையாண்ட்ரியா – 3. மூன்று மகரந்தத்தாள்களுடையவை

D) டெட்ராண்ட்ரியா – 4. நான்கு மகரந்தத்தாள்களுடையவை

96. தாவரங்களில் காணப்படும் ஒற்றுமைகளின் அடிப்படையில் இயற்கை முறையில் வகைப்படுத்தும் ஒரு அணுகுமுறையை 1789-ஆம் ஆண்டு உருவாக்கியவர்.

A) லின்னேயஸ்

B) சிம்சன்

C) மெக்கலிட்ஜ்

D) அன்டோனின் லாரெண்ட் டி ஜெஸி

விளக்கம்: லின்னேயஸீக்கு பின் வந்த தாவரவியலாளர்கள் வகைப்பாட்டிற்குப் பாலினப் பண்புகளைவிட ஏனைய பண்புகளும் முக்கியமானவை என்பதை உணர்ந்தார்கள். எனவே மாற்று வகைப்பாட்டிற்கான முயற்சி பிரான்ஸ் நாட்டில் தொடங்கியது. இதன் விளைவாக, தாவரங்களில் காணப்படும் ஒற்றுமைகளின் அடிப்படையில் இயற்கை முறையில் வகைப்படுத்தும் ஒரு அணுகுமுறை உருவாகி 1789-ஆம் ஆண்டில் அன்டோனின் லாரெண்ட் டி ஜெஸியுவால் முதன்முதலாக வழங்கப்பட்டது.

97. “ஜெனிரா பிளாண்டாரம்” என்ற நூலின் ஆசிரியர்__________

A) கரோலஸ் லின்னேயஸ்

B) பெந்தம் மற்றும் ஹீக்கர்

C) அன்டோனின் லாரெண்ட் டி ஜெஸி

D) காஸ்பர்டு பாஹின்

விளக்கம்: பரவலாக பின்பற்றப்பட்ட சிறந்த ஒரு இயற்கை முறை வகைப்பாடு ஜார்ஜ் பெந்தாம் (1800 – 1884) மற்றும் ஜோசப் டால்டன் ஹீக்கர் (1817 – 1911) என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இரு தாவரவியல் வல்லுநர்களால் வழங்கப்பட்டது. இவ்வகைப்பாட்டை அவர்களுடைய “ஜெனிரா பிளாண்டாரம்” (1862 – 1883) எனும் நூலில் மூன்று தொகுதிகளாக வெளியிட்டனர்.

98. பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைபாடுகளுல் பொருந்தாதது எது.

A) மூடியவிதைத் தாவரங்கள்

B) திறந்த விதைத்தாவரங்கள்

C) இருவிதையிலைத் தாவரங்கள்

D) ஒருவிதையிலைத் தாவரங்கள்

விளக்கம்: பெந்தாம் மற்றும் ஹீக்கர் வகைப்பாடானது விதைத்தாவரங்கள், இருவிதையிலைத் தாவரங்கள், திறந்தவிதைத் தாவரங்கள், ஒருவிதையிலைத் தாவரங்கள் என மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

99. கீழ்க்கண்டவற்றுள் இருவிதையிலை தாவரங்களின் பண்புகளுல் பொருந்தாதது எது.

A) விதைகள் இரண்டு விதையிலைகளை கொண்டுள்ளன.

B) இலைகள் வலைப்பின்னல் நரம்பமைப்புடையவை.

C) சல்லி வேர்த் தொகுப்பினைக் கொண்டுள்ளன.

D) நான்கு அல்லது ஐந்து அங்கமலர் தொகுப்பினை கொண்டுள்ளன.

விளக்கம்:

இரு விதையிலைத் தாவரங்கள் ஆணிவேர்த் தொகுப்பினைக் கொண்டுள்ளன.

100. கீழ்க்கண்டவற்றுள் திறந்த விதைக் குழுமத்தில் சரியானதைக் கண்டறி.

A) சைக்கடேசி

B) கோனிஃபெரே

C) நீட்டேசி

D) மேற்கண்ட அனைத்தும்

101. ஒரு விதையிலைத் தாவரங்களில் உள்ள வரிசை மற்றும் குடும்பங்கள் முறையே_______,_______

A) 7 வரிசை 14 குடும்பம்

B) 7 வரிசை 24 குடும்பம்

C) 7 வரிசை 34 குடும்பம்

D) 7 வரிசை 44 குடும்பம்

102. பொருத்துக:

A) டைகாட்டிலிடனே – 1. அல்லி தனித்தவை

B) பாலிபெட்டாலே – 2. இருவிதையிலைத் தாவரங்கள்

C) கேமோபெட்டாலே – 3. அல்லி இணைந்தவை

D) மோனோக்ளமைடியே – 4. வேறுபாடற்றப் பூவிதழ் குழுமம்

A) 1 4 3 2

B) 2 1 3 4

C) 4 3 1 2

D) 3 2 1 4

விளக்கம்:

A) டைகாட்டிலிடனே – 1. இருவிதையிலைத் தாவரங்கள்

B) பாலிபெட்டாலே – 2. அல்லி தனித்தவை

C) கேமோபெட்டாலே – 3. அல்லி இணைந்தவை

D) மோனோக்ளமைடியே – 4. வேறுபாடற்றப் பூவிதழ் குழுமம்

103. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:

1) தலாமிஃபுளோரே – பூத்தளக் குழுமம்

2) டிஸ்கிஃபுளோரே – கோப்பை பூத்தளக் குழுமம்

3) காலிசிஃபுளோரே – பூத்தட்டுக் குழுமம்

A) 1 2 மட்டும் தவறு

B) 2 3 மட்டும் தவறு

C) 3 4 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) தலாமிஃபுளோரே – பூத்தளக் குழுமம்

2) டிஸ்கிஃபுளோரே – பூத்தட்டுக் குழுமம்

3) காலிசிஃபுளோரே – கோப்பை பூத்தளக் குழுமம்

104. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) இன்ஃபெரே – கீழ்மட்ட சூலகக் குழுமம்

2) ஹெட்டிரோமிரே – இரு சூலக இலைக் குழுமம்

3) பைகார்பெல்லேட்டே – பல் சூலக இலைக் குழுமம்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

1) இன்ஃபெரே – கீழ்மட்ட சூலகக் குழுமம்

2) ஹெட்டிரோமிரே – பல் சூலக இலைக் குழுமம்

3) பைகார்பெல்லேட்டே – இரு சூலக இலைக் குழுமம்

105. பொருத்துக: (பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாடு)

அல்லி தனித்தவை துறைகள் (ம) குடும்பம்

A) தலாமிஃபுளோரே – 1. 6 துறைகள் 34 குடும்பங்கள்

B) டிஸ்கிஃபுளோரே – 2. 4 துறைகள் 23 குடும்பங்கள்

C) காலிசிஃபுளோரே – 3. 5 துறைகள் 27 குடும்பங்கள்

A) 1 2 3

B) 2 1 3

C) 3 2 1

D) 1 3 2

106. பொருத்துக: (பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாடு)

அல்லி இணைந்தவை துறைகள் (ம) குடும்பம்

A) இன்ஃபெரே – 1. 4 துறைகள் 24 குடும்பங்கள்

B) ஹெட்டிரோமிரே – 2. 3 துறைகள் 9 குடும்பங்கள்

C) பைகார்பெல்லேட்டே – 3. 3 துறைகள் 12 குடும்பங்கள்

A) 1 2 3

B) 2 3 1

C) 3 2 1

D) 1 3 2

விளக்கம்:

A) இன்ஃபெரே – 1. 3 துறைகள் 9 குடும்பங்கள்

B) ஹெட்டிரோமிரே – 2. 3 துறைகள் 12 குடும்பங்கள்

C) பைகார்பெல்லேட்டே – 3. 4 துறைகள் 24 குடும்பங்கள்

107. “டி நேச்சர்லிக்கன் ஃபிளான்ஸன் ஃபேமிலியன்” என்ற நூலின் ஆசிரியர்_________

A) அடால்ஃப் எங்ளர்

B) கார்ல் ஏ பிரான்டிஸ்

C) ஆர்தர் கிரான்கிவிஸ்ட்

D) AB இரண்டும்

விளக்கம்: ஆரம்பகால முழுத் தாவர உலகின் பரிணாம வகைப்பாடு இரண்டு ஜெர்மனிய தாவரவியலாளர்களாகிய அடால்ஃப் எங்ளர்(1844 – 1930) மற்றும் கார்ல் ஏ பிரான்டில் (1849 – 1893) ஆகியோரால் “ டி நேச்சர்லிக்கன் ஃபிளான்ஸன் ஃபேமிலியன்” (1877 – 1915) எனும் நூலில் 23 தொகுதிகளாக வெளியிடப்பட்டது.

108. “பூக்கும் தாவரங்களின் பரிணாமம் மற்றும் வகைப்பாடு” என்ற புத்தகத்தின் ஆசிரியர்____________

A) அடால்ஃப் எங்ளர்

B) கார்ல் ஏ பிரான்டிஸ்

C) ஆர்தர் கிரான்கிவிஸ்ட்

D) மேற்கண்ட எவருமில்லை

விளக்கம்: ஆர்தர் கிரான்கிவிஸ்ட் ஒரு சிறந்த அமெரிக்க வகைப்பாட்டியலாளர். இவர் உள்ளமைப்பியல், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த தாவர வேதிப்பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையிலான பூக்கும் தாவரங்களின் பரிணாம வகைப்பாட்டு முறையை முன்மொழிந்தார். 1968 ம் ஆண்டில் “பூக்கும் தாவரங்களின் பரிணாமம் மற்றும் வகைப்பாடு” என்ற தலைப்பிலமைந்த புத்தகத்தில் அவர் தனது வகைப்பாட்டை அளித்தார்.

109. பூக்கும் தாவரங்களை இரண்டு முக்கிய வகுப்புகளாக மேக்னோலியாப்சிடா மற்றும் லிலியாப்சிடா என வகைப்படுத்தியவர்_________

A) அடால்ஃப் எங்ளர்

B) கார்ல் ஏ பிரான்டிஸ்

C) ஆர்தர் கிரான்கிவிஸ்ட்

D) கிரான்கிவிஸ்ட்

விளக்கம்: கிரான்கிவிஸ்ட் பூக்கும் தாவரங்களை இரண்டு முக்கிய வகுப்புகளாக மேக்னோலியாப்சிடா மற்றும் லிலியாப்சிடா என வகைப்படுத்தியுள்ளார்.

110. பூக்கும் தாவரங்களின் பதிப்புகள் வெளியான ஆண்டுகளில் பொருந்தாதது எது.

A) 1998

B) 2003

C) 2009

D) 2015

விளக்கம்: பூக்கும் தாவரங்களின் மிக அண்மைக்கால வகைப்பாடு இருபதாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகளில் இனப்பரிணாம வழி தரவுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது. இக்குழும வகைப்பாட்டின் நான்கு பதிப்புகள் APGI, APG II, APG III & APG IV முறையே 1998,2003,2009,2016 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு பதிப்பும் முந்தைய பதிப்பிற்கு மேம்பட்டதாக உள்ளது.

111. பூக்கும் தாவரங்களின் சமீபத்திய மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியான ஆண்டு___________

A) 2003

B) 2007

C) 2013

D) 2016

விளக்கம்: சமீபத்திய மேம்படுத்தப்பட்ட பதிப்பு APG IV (2016)-ல் 64 துறைகள் மற்றும் 416 குடும்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 416 குடும்பங்களில் 259 குடும்பங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.

112. தொடக்க கால மூடுவிதைத் தாவரங்களின் வகைபாடுகளில் பொருந்தாதது.

A) ஒரு விதையிலைத் தாவரங்கள்

B) இருவிதையிலைத் தாவரங்கள்

C) விதையிலாத் தாவரங்கள்

D) AB இரண்டும்

விளக்கம்: மூடுவிதை தாவரங்கள் மூன்று கிளைகளாகத் தொடக்ககால மூடுவிதை தாவரங்கள், ஒரு விதையிலைத் தாவரங்கள் மற்றும் உண்மை இருவிதையிலைத் தாவரங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூடுவிதை தாவரங்கள் 8 துறைகள் மற்றும் 26 குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

113. கீழ்க்கண்டவற்றுள் மூடுவிதைத் தாவரங்களின் பண்புகளில் பொருந்தாதது எது.

A) விதைகள் பொதுவாக இருவிதையிலையுடையவை.

B) நறுமண எண்ணெய்கள் இருத்தல்.

C) இலைகள் இணைப்போக்கு நரம்பமைவுடையவை.

D) மலரின் ஒவ்வொரு வட்டமும் பல பாகங்களைக் கொண்டிருத்தல் அல்லது மூன்றாக / மூன்றின் மடங்கில் காணப்படல்.

விளக்கம்: இலைகள் வலை நரம்பமைவுடையவை.

114. கீழ்க்கண்டவற்றுள் மூடுவிதைத் தாவரங்களின் பண்புகளில் பொருந்தாதது எது.

A) மகரந்தத்தாள் நான்கு மகரந்தப் பைகள் பெற்றது.

B) மகரந்தத்துகள் பல குழியுடையது.

C) சூலக இலைகள் தனித்திருத்தல்.

D) கரு மிகச்சிறியது.

விளக்கம்: மகரந்தத்துகள் ஒரு குழியுடையது.

115. ஒரு விதையிலைத் தாவரங்களின் பண்புகளில் பொருந்தாதது எது.

A) விதைகள் ஒரு விதையிலையுடையவை.

B) முதன்மை வேர் நீண்ட வாழ்வுடையது.

C) ஒற்றை அடிபக்க முதன்மையிலை

D) நறுமண எண்ணெய்கள் அரிதாகக் காணப்படல்.

விளக்கம்: முதன்மை வேர் குறுகிய வாழ்வுடையது.

116. ஒரு விதையிலைத் தாவரங்களின் பண்புகளில் சரியானதைக் கண்டறி:

1) வாஸ்குலார் கற்றைகள் சிதறிக் காணப்படும் தண்டுகள்.

2) இலைகள் தனித்தவை மற்றும் வலை நரம்பமைவுடையவை.

3) மலரின் பாகங்கள் மூன்றின் மடங்காக அமைந்திருத்தல்.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 1 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: இலைகள் தனித்தவை மற்றும் இணை நரம்பமைவுடையவை.

117. ஒரு விதையிலைத் தாவரங்களின் பண்புகளில் தவறானதைக் கண்டறி:

A) பூவிதழ் வட்டம் பெரும்பாலும் இதழ்களையுடையது.

B) மகரந்தத்துகள் பலகுழியுடையது.

C) சூலகத்தண்டு பொதுவாக உள்ளீடற்றது.

D) நுண்வித்தாக்கம் அடுத்தடுத்து நடைபெறும்.

118. “பிரிட்டிஷ் தீவுகளின் நிலையான தாவரங்களின் பட்டியல்” என்ற நூலினை எழுதியவர்____________

A) லின்னேயஸ்

B) பெந்தம் (ம) ஹீக்கர்

C) ஸ்டேஸ்

D) பெர்கர்

விளக்கம்: இங்கிலாந்தில், ஸ்டேஸ் எழுதிய பிரிட்டிஷ் தீவுகளின் நிலையான தாவரங்களின் பட்டியல் எனும் நூலின் சமீபத்திய பதிப்பானது,APG III அமைப்பை அடிப்படையாகக் கொண்டது.

119. இரு விதையிலைத் தாவரங்களின் பண்புகளில் பொருந்தாதது எது.

A) விதைகள் எப்பொழுதும் ஒருவிதையிலைகளுடையவை.

B) கணுக்கள் மூன்று இடைவெளியுடன் மூன்று இலை இழுவையுடையது.

C) நறுமண எண்ணெய் அரிதாக உள்ளது.

D) கட்டைத்தன்மையுள்ள அல்லது மென்மையான தாவரங்கள்.

விளக்கம்: விதைகள் எப்பொழுதும் இருவிதையிலைகளுடையவை.

120. இரு விதையிலைத் தாவரங்களின் பண்புகளில் பொருந்தாதது எது.

A) இலைகள் தனியிலை அல்லது கூட்டிலை பொதுவாக இணை நரம்பமையுடையவை.

B) மலரின் பாகங்கள் பெரும்பாலும் இரண்டின் மடங்கு, நான்கின் மடங்கு, ஐந்தின் மடங்காகக் காணப்படும்.

C) நுண்வித்தாக்கம் ஒரே நேரத்தில் நடைபெறும்.

D) சூலகத்தண்டு திடமானது.

விளக்கம்: இலைகள் தனியிலை அல்லது கூட்டிலை பொதுவாக வலை நரம்பமையுடையவை.

121. உயிரிய முறைமை என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்_________

A) கேம்ப்

B) கில்லி

C) சிம்சன்

D) AB இரண்டும்

விளக்கம்: உயிரிய முறைமை என்ற சொல்லைக் கேம்ப் மற்றும் கில்லி என்பவர்கள் 1943 – ல் அறிமுகப்படுத்தினார்கள். பல ஆய்வாளர்கள் உயிரிய முறைமை சைட்டோஜெனிட்டிக்ஸ் மற்றும் சூழ்நிலையியலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கருதி வகைப்பாட்டை விடப் பரிணாமத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

122. உயிரிய முறைமையின் நோக்கங்களில் சரியானதைக் கண்டறி:

1) இயற்கை உயிர் அலகுகளின் வரையறைகளை நிர்ணயித்தல்.

2) பரிணாம வளர்ச்சி மற்றும் மரபுவழியைப் புரிந்து கொள்வதன் மூலம் ஒரு தாவரக் குழுமத்தின் பரிணாமத்தை நிறுவுவதற்கு வழி செய்தல்.

3) புற அமைப்பியல் மற்றும் உள்ளமைப்பியல் மட்டுமன்றி நவீன கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட தரவுகளையும் உள்ளடக்குதல்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

123. குன்றல் பகுப்பின் போது காணப்படும் குரோமோசோம்களின் பண்புகள் மற்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் தாவர வகைப்பாட்டு சிக்கல்களைக் களைவது___________எனப்படுகிறது.

A) கேரியோடாக்ஸானமி

B) டாக்ஸானமி

C) சைட்டோடாக்ஸானமி

D) AC இரண்டும்

விளக்கம்: குன்றல் பகுப்பின் போது காணப்படும் குரோமோசோம்களின் பண்புகள் மற்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் தாவர வகைப்பாட்டு சிக்கல்களைக் களைவது கேரியோடாக்ஸானமி அல்லது சைட்டோடாக்ஸானமி எனப்படும்.

124. குருதிநீர்ச்சார் வகைப்பாடு / ஊநீர் வகைப்பாடு பற்றிய கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

1) முறைப்பாட்டு ஊநீரியல் அல்லது குருதிநீர்ச்சார் வகைப்பாடு இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் எதிர்வினைகளின் கண்டுபிடிப்பு மற்றும் நோய் தடுப்பு பற்றிய துறையின் வளர்ச்சியினால் தோற்றுவிக்கப்பட்டது.

2) இவ்வகைப்பாட்டை ஸ்மித் (1976) ஆன்டிசீரங்களின் தோற்றம் மற்றும் பண்புகளைப் பற்றி அறிதல் என்று வரையறுத்தார்.

3) ஒத்த பண்புகளைக் கொண்ட தாவரங்களின் வகைப்பாட்டில் காணப்படும் சிக்கல்களைத் தீர்க்க, அவற்றில் காணப்படும் கொழுப்புகளின் அடிப்படையில் இவ்வகைப்பாட்டை குருதிநீர்ச்சார் / ஊநீர் வகைப்பாடு எனப்படும்.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 1 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: ஒத்த பண்புகளைக் கொண்ட தாவரங்களின் வகைப்பாட்டில் காணப்படும் சிக்கல்களைத் தீர்க்க, அவற்றில் காணப்படும் புரதங்களின் அடிப்படையில் இவ்வகைப்பாட்டை குருதிநீர்ச்சார் / ஊநீர் வகைப்பாடு எனப்படும்.

125. மூலக்கூறு வகைப்பாட்டின் பயன்கள் பற்றியக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

1) DNA அளவில் வெவ்வேறு தாவரக் குழுக்களின் இனப்பரிணாம உறவை உருவாக்குவதில் மூலக்கூறு வகைப்பாடு உதவுகிறது.

2) இது உயிரினங்களின் பரிணாம வரலாற்றின் தகவல்கள் அடங்கிய புதையல் பேழையைத் திறக்கின்றது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

126. கீழ்க்கண்டவற்றுள் மூலக்கூறு வகைப்பாட்டின் முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களுல் சரியானதைக் கண்டறி:

1) இது பாதுகாக்கப்பட்ட மூலக்கூறு வரிசைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மிக அதிக எண்ணிக்கையிலான இனங்களை அடையாளம் காண உதவுகிறது.

2) DNA தரவுகளைப் பயன்படுத்தி உயிரி பல்வகைமைக்கான பரிணாம முறைகள் / வடிவங்கள் ஆராயப்படுகிறது.

3) DNA வகைப்பாடு தாவரப்புவியமைப்பியலில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இது மரபணுத் தொகுப்பு வரைபடம் உருவாக்கவும், பல்லுயிர் பாதுகாப்பிலும் உதவுகிறது.

4) DNA சார்ந்த மூலக்கூறு குறிப்பான்கள் DNA சார்ந்த மூலக்கூறு ஆய்வுகளை வடிவமைப்பதற்கும், மூலக்கூறு முறைப்பாட்டியலிலும் பயன்படுகிறது.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 4 மட்டும் சரி

C) 1 2 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

127. ஒரு தாவரத்தை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் மரபணு வரிசை_________என்று அழைக்கப்படுகிறது.

A) RNA குறிச்சொற்கள்

B) DNA குறிச்சொற்கள்

C) DNA வரிக்குறியீட்டுகள்

D) BC இரண்டும்

விளக்கம்: ஒரு தாவரத்தை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் மரபணு வரிசை “DNA குறிச்சொற்கள்” அல்லது “DNA வரிக்குறியீட்டுகள்” என்று அழைக்கப்படுகிறது. பால் ஹெபர்ட் 2003-ல் DNA வரிக்குறியிடுதலை முன்மொழிந்தார். அவர் “DNA வரிக்குறியிடுதலின் தந்தை” என்று கருதப்படுகிறார்.

128. “DNA வரிக்குறியிடுதலின் தந்தை” என்றழைக்கப்படுபவர்_________

A) கேம்ப்

B) கிறிஸ்பீல்ஸ்

C) பால் ஹெபர்ட்

D) கார்ட்னர்

129. கீழ்க்கண்டவற்றுள் பாரம்பரிய வகைப்பாடு பற்றியக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:

A) இது பழைய வகைப்பாடு அல்லது ஆல்பா வகைப்பாடு என அழைக்கப்படுகிறது.

B) அடிப்படை அலகான குடும்பங்கள் நிலையானவையாகக் கருதப்படுகின்றன.

C) இவை புறப்பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.

D) இது குறிப்பிட்ட சில மாதிரிகளின் கூர்நோக்கு அடிப்படையில் அமைந்தது.

விளக்கம்: அடிப்படை அலகான சிற்றினங்கள் நிலையானவையாகக் கருதப்படுகின்றன.

130. கீழ்க்கண்டவற்றுள் நவீன வகைப்பாடு பற்றியக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:

A) இது டார்வினுக்குப் முந்தைய காலம்

B) அடிப்படை அலகான சிற்றினங்கள் மாறும் நிலையில் இருப்பவையாகக் கருதப்படுகின்றன.

C) புறப்பண்புகளுடன் இனப்பெருக்கப் பண்புகளையும், மூலக்கூறு தரவுகள் மற்றும் பரிணாம உறவுகளின் அடிபப்டையில் அமைந்தது.

D) இது பெருமளவு மாதிரிகளின் கூர்நோக்கு அடிப்படையில் அமைந்தது.

விளக்கம்: இது டார்வினுக்குப் பிந்தைய காலம்

131. நவீன வகைப்பாட்டு முறையானது___________என்றும் அழைக்கப்படுகிறது.

A) புதிய வகைப்பாட்டு முறை

B) உயிரிய முறைமை

C) ஒமேகா வகைப்பாட்டு முறை

D) மேற்கண்ட அனைத்தும்

132. DNA வரிக்குறியிடுதலின் முக்கியத்துவம் பற்றியக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

1) உயிரினங்களை அடையானம் காண்பதிலும், வகைப்படுத்துதலிலும் DNA வரிக்குறியிடுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

2) பல்லுயிர்த் தன்மையின் அளவை வரையறுக்க மற்றும் வரைபடமாக்க உதவுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

133. கூற்று (i): DNA வரிக்குறியிடுதல் தொழில்நுட்பத்திற்கு, பெரிய தரவுத் தளங்கள் மூலம் ஒப்பிடுவதற்கான திறமையும், வரிக்குறியிடுதல் பகுதி குறித்த முன்னறிவும் தேவைப்படுகின்றன.

கூற்று (ii): DNA வரிக்குறியிடுதல் என்பது முழுத்தாவரத்தையோ துண்டாக்கப்பட்ட அல்லது தூளாக்கப்பட்ட தாவர மாதிரிகளையோ அடையாளம் காணும் ஓர் நம்பகத்தன்மையற்ற தொழில்நுட்பமாகும்.

A) கூற்று i சரி ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: DNA வரிக்குறியிடுதல் என்பது முழுத்தாவரத்தையோ துண்டாக்கப்பட்ட அல்லது தூளாக்கப்பட்ட தாவர மாதிரிகளையோ அடையாளம் காணும் ஓர் நம்பகத்தன்மையுடைய தொழில்நுட்பமாகும்.

134. கிளைப்பரிணாமவியலின் அவசியம் பற்றியக் கருத்துகளுல் சரியானதைக் கண்டறி:

1) கிளைப்பரிணாமவியல் இனப்பரிணாம வகைப்பாட்டு அமைப்பு முறைமைகளை உருவாக்குவதற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும்.

2) உயிரினங்களின் இனத்தோன்றல்களின் புறப்பண்புகளை முன்னறிவதற்கும் இனப்பரிணமாம உறவு பற்றிய கோட்பாடுகளை உருவாக்குவதற்கும் உதவுகிறது.

3) பரிணாம வளர்ச்சி பற்றிய நுட்பத்தைத் தெளிவுப்படுத்துவதற்கும் கிளைபரிணாமவியல் உதவுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

135. ஃபேபேசி வகை தாவரங்கள்_________பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன.

A) வெப்பமண்டலம்

B) குளிர் மண்டலம்

C) மிதவெப்ப மண்டலம்

D) AC இரண்டும்

விளக்கம்: ஃபேபேசி குடும்பம் 741 பேரினங்களையும் 20,200 க்கும் மேற்பட்ட சிற்றினங்களையும் உள்ளடக்கியது. உலகெங்கும் இத்தாவரங்கள் காணப்பட்டாலும், வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.

136. பொருத்துக:

A) குரோட்டலேரியா – 1. தரைப்படர்ச்செடி

B) இன்டிகோஃபெரா எனியஃபில்லா – 2. குறுஞ்செடிகள்

C) குரோட்டலேரியா வெருகோசா – 3. புதர்ச்செடி

D) கஜானஸ் கஜான் – 4. நிமிர்செடிகள்

A) 1 4 3 2

B) 2 1 4 3

C) 4 3 1 2

D) 3 2 1 4

விளக்கம்:

A) குரோட்டலேரியா – 1. குறுஞ்செடிகள்

B) இன்டிகோஃபெரா எனியஃபில்லா – 2. தரைப்படர்ச்செடி

C) குரோட்டலேரியா வெருகோசா – 3. நிமிர்செடிகள்

D) கஜானஸ் கஜான் – 4. புதர்ச்செடி

137. பொருத்துக:

A) கிளைட்டோரியா – 1. சிறுமரம்

B) செஸ்பேனியா – 2. பின்னுக்கொடி

C) மரம் – 3. பொங்கேமியா

D) நீர்த்தாவரம் – 4. ஆஸ்கினோமின் ஆஸ்பினா

A) 2 1 3 4

B) 2 1 4 3

C) 4 3 1 2

D) 3 2 1 4

விளக்கம்:

A) கிளைட்டோரியா – 1. பின்னுக்கொடி

B) செஸ்பேனியா – 2. சிறுமரம்

C) மரம் – 3. பொங்கேமியா

D) நீர்த்தாவரம் – 4. ஆஸ்கினோமின் ஆஸ்பினா

138. நைட்ரஜனை நிலைநிறுத்தும் ரைசோபியம் லெகுமினோசாரம் என்னும் பாக்டீரியமானது தாவரத்தின்_________பகுதியில் காணப்படுகிறது.

A) தண்டு

B) இலை

C) வேர்

D) வேர்முண்டு

விளக்கம்: வேர்முண்டுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் ரைசோபியம் லெகுமினோசாரம் போன்ற பாக்டீரியாக்கள் உள்ளன.

139. பொருத்துக:

A) ஒரைசா சட்டைவா – 1. குன்றிமணி

B) மாஞ்சிபெரா இண்டிகா – 2. பட்டானி

C) பைசம் சட்டைவம் – 3.மா

D) ஆப்ரஸ்ப்ரிக்ககேட்டோடிரிஸ் – 4. நெல்

A) 2 1 3 4

B) 2 1 4 3

C) 4 3 2 1

D) 3 2 1 4

விளக்கம்:

A) ஒரைசா சட்டைவா – 1. நெல்

B) மாஞ்சிபெரா இண்டிகா – 2. மா

C) பைசம் சட்டைவம் – 3.பட்டானி

D) ஆப்ரஸ்ப்ரிக்ககேட்டோடிரிஸ் – 4. குன்றிமணி

140. உலகெங்கிலும் நீரிழிவு நோய் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும் தாவரம்___________

A) கேலிகா அஃபிசினாலிஸ்

B) லாப்லாப் பர்பூரியஸ்

C) பொங்கேமியா பின்னேட்டா

D) செஸ்பேனியா கிராண்டிஃபுளோரா

விளக்கம்: கேலிகா அஃபிசினாலிஸ் (ஃபேபேசி குடும்பம்) தாவரத்தின் தண்டுப்பகுதிகள் டைமெதில் பைகுவானைட் என்கிற மெட்ஃபோர்மினைக் கொண்டுள்ளது. இது உலகெங்கிலும் நீரிழிவு நோய் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

141. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கீழ்க்கண்ட எந்த ஆண்டை பருப்பு வகைகளின் ஆண்டாக அறிவித்துள்ளது.

A) 2016

B) 2017

C) 2018

D) 2019

விளக்கம்: உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு(FAO) மற்றும் ஐக்கிய நாடுகளில் 2016 ஆம் ஆண்டை பருப்பு வகைகளின் ஆண்டாக அறிவித்துள்ளது. பருப்பு வகைகளில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

142. கீழ்க்கண்டவற்றுள் எந்த தாவரத்தின் விதைகள் மாலைகள் மற்றும் ஜெபமாலைகள் செய்யப் பயன்படுகிறது.

A) ஆப்ரஸ்ப்ரிக்ககேட்டோடிரிஸ்

B) அடினான்தெரா பவோனியா

C) குன்றிமணி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஆப்ரஸ்ப்ரிக்ககேட்டோடிரிஸ்(குன்றிமணி) மற்றும் அடினான்தெரா பவோனியாஃஆனைக் குன்றிமணி(சீசல்பீனியேசி) தாவரங்களின் அழகிய விதைகள், மாலைகள் மற்றும் ஜெபமாலைகள் செய்யப் பயன்படுகிறது. தங்கத்தை எடைபோடவும் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. மேலும் இதனை உட்கொண்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

143. இந்தியாவில் தங்கத்தை எடைபோட பரவலாக பயன்படுத்தப்பட்டது________

A) ஆலிவ் விதை

B) ஆர்க்கிட் விதை

C) குன்றிமணி

D) மேற்கண்ட எதுவுமில்லை

144. பொருத்துக:

A) கஜானஸ் கஜான் – 1. உளுந்து

B) ஃபேசியோலஸ் வல்காரிஸ் – 2. கொண்டைக் கடலை

C) சைசெர் அரிடினம் – 3. பிரெஞ்சு பீன்

D) விக்னா முங்கோ – 4. துவரை

A) 2 1 3 4

B) 2 1 4 3

C) 3 2 1 4

D) 4 3 2 1

விளக்கம்:

A) கஜானஸ் கஜான் – 1. துவரை

B) ஃபேசியோலஸ் வல்காரிஸ் – 2. பிரெஞ்சு பீன்

C) சைசெர் அரிடினம் – 3. கொண்டைக் கடலை

D) விக்னா முங்கோ – 4. உளுந்து

145. பொருத்துக:

A) விக்னா ரேடியேட்டா – 1. கொள்ளு

B) விக்னா உங்கிகுலேட்டா – 2. பச்சைப் பயறு

C) கிளைசின் மாக்ஸ் – 3. காராமணி

D) மேக்ரோடைலோமா யூனிஃப்ளோரம் – 4. சோயா பீன்ஸ்

A) 2 1 3 4

B) 2 3 4 1

C) 3 2 1 4

D) 4 3 2 1

விளக்கம்:

A) விக்னா ரேடியேட்டா – 1. பச்சைப் பயறு

B) விக்னா உங்கிகுலேட்டா – 2. காராமணி

C) கிளைசின் மாக்ஸ் – 3. சோயா பீன்ஸ்

D) மேக்ரோடைலோமா யூனிஃப்ளோரம் – 4. கொள்ளு

146. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) லாப்லாப் பர்பூரியஸ் – அவரை

2) செஸ்பேனியா கிராண்டிஃபுனோரா – கொத்தவரை

3) சயமாப்சிஸ் டெட்ராகோனலோபா – அகத்தி

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

1) லாப்லாப் பர்பூரியஸ் – அவரை

2) செஸ்பேனியா கிராண்டிஃபுனோரா – அகத்தி

3) சயமாப்சிஸ் டெட்ராகோனலோபா – கொத்தவரை

147. பொருத்துக:

A) அராக்கிஸ் ஹைபோஜியா – 1. புங்கம்

B) பொங்கேமியா பின்னேட்டா – 2. நிலக்கடலை

C) டால்பெர்ஜியா லாட்டிஃபோலியா – 3. நூக்கமரம்

D) டீரோகார்ப்பஸ் சாண்ட்டலினஸ் – 4. செம்மரம்

A) 2 1 3 4

B) 2 3 4 1

C) 3 2 1 4

D) 4 3 2 1

விளக்கம்:

A) அராக்கிஸ் ஹைபோஜியா – 1. நிலக்கடலை

B) பொங்கேமியா பின்னேட்டா – 2. புங்கம்

C) டால்பெர்ஜியா லாட்டிஃபோலியா – 3. நூக்கமரம்

D) டீரோகார்ப்பஸ் சாண்ட்டலினஸ் – 4. செம்மரம்

148. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:

1) டீரோகார்ப்பஸ் மார்சுபியம் – வேங்கை

2) டீரோகார்ப்பஸ் டால்பெர்ஜியாய்டஸ் – கார்போக அரிசி

3) சொராலியா கோரிலிஃபோலியா – படாக்

4) கிளைசிரைசா கிளாப்ரா – அதிமதுரம்

A) 1 2 மட்டும் தவறு

B) 2 3 மட்டும் தவறு

C) 1 2 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) டீரோகார்ப்பஸ் மார்சுபியம் – வேங்கை

2) டீரோகார்ப்பஸ் டால்பெர்ஜியாய்டஸ் – படாக்

3) சொராலியா கோரிலிஃபோலியா – கார்போக அரிசி

4) கிளைசிரைசா கிளாப்ரா – அதிமதுரம்

149. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) முக்குனா ப்ரூரியன்ஸ் – தக்கைப் பூண்டு

2) குரோட்டலேரியா ஜன்ஷியா – சணப்பை

3) செஸ்பானியா செஸ்பான் – சித்தகத்தி

4) அஸ்கினோமீன் அஸ்பெரா – பூனைக்காலி

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 1 3 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

1) முக்குனா ப்ரூரியன்ஸ் – பூனைக்காலி

2) குரோட்டலேரியா ஜன்ஷியா – சணப்பை

3) செஸ்பானியா செஸ்பான் – சித்தகத்தி

4) அஸ்கினோமீன் அஸ்பெரா – தக்கைப் பூண்டு

150. பொருத்துக:

A) இன்டிகோஃபெரா டிங்க்ட்டோரியா – 1. காட்டுத்தீ மரம்

B) கிளைட்டோரியா டெர்னேஸியா – 2. முருக்கு

C) பியூட்டியா மானோஸ்பெர்மா – 3. சங்குப்பூ

D) பியூடியா மோனோஸ்பெர்மா – 4. அவுரி

A) 2 1 3 4

B) 2 3 4 1

C) 3 2 1 4

D) 4 3 2 1

விளக்கம்:

A) இன்டிகோஃபெரா டிங்க்ட்டோரியா – 1. அவுரி

B) கிளைட்டோரியா டெர்னேஸியா – 2. சங்குப்பூ

C) பியூட்டியா மானோஸ்பெர்மா – 3. முருக்கு

D) பியூடியா மோனோஸ்பெர்மா – 4. காட்டுத்தீ மரம்

151. கீழ்க்கண்டவற்றுள் நீலச்சாயம் தயாரிக்கப் பயன்படுவது__________

A) லூபின்

B) அவுரி

C) சங்குப்பூ

D) சித்தகத்தி

152. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இண்டிகோ என்ற அடர்நீலச்சாய அச்சு மை மற்றும் வண்ணப்பூச்சு தயாரிக்கப் பயன்படுகிறது.

A) லூபின்

B) அவுரி

C) சங்குப்பூ

D) சித்தகத்தி

153. கீழ்க்கண்டவற்றுள் தொழுநோய் மற்றும் வெண்புள்ளி நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுவது_________

A) கார்போக அரிசி

B) அதிமதுரம்

C) பூனைக்கல்லி

D) சணப்பை

154. கீழ்க்கண்டவற்றுள் எந்த தாவரம் பசுமை உரமாகப் பயன்படுகிறது.

A) இன்டிகேஃபெரா டிங்க்ட்டோரியா

B) தெப்ரோசியா பர்பியூரியா

C) கிளிரிசிடியா செப்பியம்

D) மேற்கண்ட அனைத்தும்

155. கீழ்க்கண்டவற்றுள் கயிறு தயாரிக்கப் பயன்படும் தாவரம்___________

A) சணப்பை

B) சித்தகத்தி

C) அவுரி

D) AB இரண்டும்

156. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று நோய் எதிர்ப்பு தடுப்பாற்றல் ஒழுங்கு படுத்தியாக பயன்படுகிறது.

A) அதிமதுரம்

B) அவுரி

C) லூபின்

D) செம்மரம்

157. கீழ்க்கண்டவற்றுள் பேதியூக்கியாக பயன்படுவது____________

A) குரோட்டலேரியா ஆல்பிடா

B) லூபினஸ் ஹிர்சுட்டஸ்

C) பியூட்டியா மானோஸ்பெர்மா

D) அஸ்கினோமீன் அஸ்பெரா

158. பொருத்துக:

இருசொற்பெயர் தாவரப் பெயர்

A) சொலானம் டியூபரோசம் – 1. ஊசி மிளகாய்

B) லைக்கோ பெர்சிகான் எஸ்குலெண்டம் – 2. உருளைகிழங்கு

C) சொலானம் மெலாஞ்சினா – 3. தக்காளி

D) காப்சிகம் அன்னுவம் – 4. கத்திரிக்காய்

A) 2 1 3 4

B) 2 3 4 1

C) 3 2 1 4

D) 4 3 2 1

விளக்கம்:

இருசொற்பெயர் தாவரப் பெயர்

A) சொலானம் டியூபரோசம் – 1. உருளைகிழங்கு

B) லைக்கோ பெர்சிகான் எஸ்குலெண்டம் – 2. தக்காளி

C) சொலானம் மெலாஞ்சினா – 3. கத்திரிக்காய்

D) காப்சிகம் அன்னுவம் – 4. ஊசி மிளகாய்

159. பொருத்துக:

இருசொற்பெயர் தாவரப் பெயர்

A) காப்சிகம் ப்ரூட்டசென்ஸ் – 1. சொடக்கு தக்காளி

B) ஃபைசாலிஸ் பெருவியானா – 2. மிளகாய்

C) சொலானம் ட்ரைலோபேட்டம் – 3. ஊமத்தை

D) டாட்டுரா ஸ்ட்ராமோனியம் – 4. தூதுவளை

A) 2 1 3 4

B) 2 1 4 3

C) 3 2 1 4

D) 4 3 2 1

விளக்கம்:

இருசொற்பெயர் தாவரப் பெயர்

A) காப்சிகம் ப்ரூட்டசென்ஸ் – 1. மிளகாய்

B) ஃபைசாலிஸ் பெருவியானா – 2. சொடக்கு தக்காளி

C) சொலானம் ட்ரைலோபேட்டம் – 3. தூதுவளை

D) டாட்டுரா ஸ்ட்ராமோனியம் – 4. ஊமத்தை

160. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) வைத்தானியா சாம்னிஃபெரா – அமுக்காரா

2) நிக்கோட்டியானா டொபாக்கம் – பகல்மல்லி

3) செஸ்ட்ரம் டையூர்னம் – புகையிலை

4) செஸ்ட்ரம் நாக்டர்னம் – இரவு மல்லி

A) 1 2 3 மட்டும் சரி

B) 1 3 மட்டும் சரி

C) 1 3 4 மட்டும் சரி

D) 1 2 4 மட்டும் சரி

விளக்கம்:

1) வைத்தானியா சாம்னிஃபெரா – அமுக்காரா

2) நிக்கோட்டியானா டொபாக்கம் – புகையிலை

3) செஸ்ட்ரம் டையூர்னம் – பகல்மல்லி

4) செஸ்ட்ரம் நாக்டர்னம் – இரவு மல்லி

161. தசைவலியை நீக்கப்பயன்படும் பெல்லட்டோனா பிளாஸ்டர், டிங்ச்சர் போன்றவை_________தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.

A) சொலானம் ட்ரைலோபேட்டம்

B) வைத்தானியா சாம்னிஃபெரா

C) அட்ரோபா பெல்லடோனா

D) லைக்கோ பெர்சிகான்

விளக்கம்: அட்ரோபா பெல்லடோனா என்ற தாவரத்தின் வேரிலிருந்து பெறப்படும் சக்தி வாய்ந்த அல்கலாய்டு அட்ரோபின் தலைவலியை நீக்கப்பயன்படும் பெல்லடோனா பிளாஸ்டர், டிங்ச்சர் ஆகியவை தயாரிக்கப் பயன்படுகிறது. மேலும் கண்பரிசோதனையில் கண்பாவைகள் (கண்மணி) விரிவடையச்செய்ய பயன்படுகிறது.

162. “ஸ்ட்ராமோனியம்” என்ற மருந்துப்பொருள் கீழ்க்கண்ட எந்த தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.

A) கேப்நெல்லி

B) கத்திரிக்காய்

C) ஊமத்தை

D) தூதுவளை

விளக்கம்: டாட்டூரா ஸ்ட்ராமோனியம் (ஊமத்தை) தாவரத்தின் வேர் மற்றும் இலைகளிலிருந்து பெறப்படும் மருந்துப்பொருளான “ஸ்ட்ராமோனியம்”ஆஸ்துமா மற்றும் கக்குவான் இருமலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

163. நிக்கோட்டியானா டொபாக்கம் தாவரத்தில் உள்ள அல்கலாய்டுகள்_________

A) நிக்கோட்டின்

B) நார் நிக்கோட்டின்

C) அனபேசின்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: நிக்கோட்டியானா டொபாக்கம்(புகையிலை) தாவரத்தின் இலைகளில் நிக்கோட்டின், நார் நிக்கோட்டின் மற்றும் அனபேசின் போன்ற அல்கலாய்டுகள் உள்ளன. சிகரெட், பீடி, குழாய் உறிஞ்சுகுழல், குட்கா போன்றவைகளிலும், மென்று சுவைப்பதற்கும், மூக்குப்பொடி தயாரிப்பிலும் புகையிலை முதன்மையான பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

164. கீழ்க்கண்டவற்றுள் சிறுநீர் பெருக்கியாகவும், பாக்டீரியக் கொல்லியாகவும் பயன்படும் தாவரம்___________

A) அல்லியம் சீபா

B) அல்லியம் சட்டைவம்

C) அஸ்பராகஸ் அஃபிஸினாலிஸ்

D) அஸ்பராகஸ் ரெசிமோஸஸ்

விளக்கம்: அல்லியம் சீபாவின் குமிழமானது காய்கறிகளாகவும், தூண்டும் ஆற்றலுக்கும், சிறுநீர் பெருக்கியாகவும், இருமல், சளி நீக்கியாகவும், பாக்டீரியக் கொல்லியாகவும் பயன்படுகின்றன.

165. பேதியூக்கியாகப் பயன்படும் தாவரம்___________

A) அலோ வீரா

B) அலோ பார்படென்ஸ்

C) அஸ்பராகஸ் ரெசிமோஸஸ்

D) கோல்சீக்கம் லூட்டியம்

விளக்கம்: அலோ பார்படென்ஸ் தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் ரெசின்கள் பேதியூக்கியாகப் பயன்படுகிறது.

166. அலோவிரா தாவரத்தின் இலைகளால் ஏற்படும் பயன்படுகளில் பொருந்துவது எது.

A) மூல வியாதி மற்றும் வீக்கத்தை குணப்படுத்த

B) இரத்தக்கட்டு புண்களை குணப்படுத்த

C) சுத்தம் செய்நீர்மம் தயாரிக்க

D) மேற்கண்ட அனைத்தும்

167. ____________தாவரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் மருத்துவ எண்ணெய் நரம்புத்தளர்ச்சி, கீல்வாத நோய் மற்றும் தோல் நோய்களுக்கு பயன்படுகிறது.

A) கோல்சீக்கம் லூட்டியம்

B) அஸ்பராகஸ் ரெசிமோனஸ்

C) குளோரியோஸா சூப்பர்பா

D) ஸில்லா ஹையஸிந்தியானா

விளக்கம்: அஸ்பராகஸ் ரெசிமோனஸ் தாவரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் மருத்துவ எண்ணெய் நரம்புத்தளர்ச்சி, கீல்வாத நோய் மற்றும் தோல் நோய்களுக்கும் பயன்படுகிறது.

168. கோல்சீக்கம் லூட்டியம்________யைக் குணப்படுத்த பயன்படுகிறது.

A) பெருவிரல் வீக்கம்(கவுட்)

B) கீல் வாதம்(முடக்கு வாதம்)

C) வாத நோய்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கோல்சீக்கம் லூட்டியம் என்ற தாவரத்தின் வேர்களில் இருந்து பெறப்படும் மருந்துப்பொருள் பெருவிரல் வீக்கம்(கவுட்), கீல் வாதம்(முடக்கு வாதம்), வாத நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

169. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மகப்பேறு வலியைத் தூண்ட பயன்படுகிறது.

A) கோல்சீக்கம் லூட்டியம்

B) அஸ்பராகஸ் ரெசிமோனஸ்

C) குளோரியோஸா சூப்பர்பா

D) ஸில்லா ஹையஸிந்தியானா

விளக்கம்: குளோரியோஸா சூப்பர்பாவின் தண்டுகிழங்கானது மகப்பேறு வலியைத்தூண்ட பயன்படுகிறது.

170. பால்வினை நோய்களைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம்__________

A) ஸ்மைலாக்ஸ் கிளாப்ரா

B) ஸில்லா ஹையஸிந்தியானா

C) ஸ்மைலாக்ஸ் ஓவலிஃபோலியா

D) AC இரண்டும்

171. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மீன் பிடிக்கும் வலைகள் மற்றும் மிதியடிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

A) ஊர்ஜீனியா இண்டிகா

B) ஃபார்மியம் டெனாக்ஸ்

C) வெராட்ரம் ஆல்பம்

D) கோல்சீக்கம் லூட்டியம்

விளக்கம்: ஃபார்மியம் டெனாக்ஸ் தாவரத்தின் நார்ப் பகுதியில் பெறப்படும் நார்கள் கயிறு, மீன் படிக்கும் வலைகள் மற்றும் மிதியடிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

172. எலிக்கொல்லியாகப் பயன்படுவது___________

A) ஊர்ஜீனியா இண்டிகா

B) ஃபார்மியம் டெனாக்ஸ்

C) வெராட்ரம் ஆல்பம்

D) கோல்சீக்கம் லூட்டியம்

173. பூச்சிக்கொல்லியாகப் பயன்படுவது______________

A) ஊர்ஜீனியா இண்டிகா

B) ஃபார்மியம் டெனாக்ஸ்

C) வெராட்ரம் ஆல்பம்

D) கோல்சீக்கம் லூட்டியம்

174. ___________தாவரம் கோல்சிசைன் பன்மயங்களைத் தூண்டுவதற்குப் பயன்படுகிறது.

A) ஊர்ஜீனியா இண்டிகா

B) ஃபார்மியம் டெனாக்ஸ்

C) வெராட்ரம் ஆல்பம்

D) கோல்சீக்கம் லூட்டியம்

175. பொருத்துக:

A) அகபேந்தஸ் ஆப்பிரிக்கானஸ் – 1. மலபார் குளோரி லில்லி

B) ஹைமரோகேல்லிஸ் ஃபூவியா – 2. ஆரஞ்சு நார் லில்லி

C) குளோரியோஸா சூப்பர்பா – 3. ஆப்பிரிக்கன் லில்லி

A) 1 2 3

B) 2 1 3

C) 3 2 1

D) 3 1 2

விளக்கம்:

A) அகபேந்தஸ் ஆப்பிரிக்கானஸ் – 1. ஆப்பிரிக்கன் லில்லி

B) ஹைமரோகேல்லிஸ் ஃபூவியா – 2. ஆரஞ்சு நார் லில்லி

C) குளோரியோஸா சூப்பர்பா – 3. மலபார் குளோரி லில்லி

176. யுக்கா தாவரத்தின் பண்புகளுல் பொருந்தாததைக் கண்டறி:

A) இந்த தாவரத்தில் தன்மகரந்தச் சேர்க்கை நடைபெறுபது இதன் சிறப்பம்சமாகும்.

B) இது புரோநூபா யுக்காசெல்லா என்ற ஒருவகை அந்து பூச்சியினால் நடைபெறுகிறது.

C) இத்தாவரத்தின் மலர்கள் இரவு நேரங்களில் மலர்ந்து நறுமணம் வீசுவதால் பெண் பூச்சிகள் அதனை நாடுகின்றன.

D) இச்சமயங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் பெண் அந்துப்பூச்சிகள் ஒரு மலரிலிருந்து தேவையான அளவு மகரந்தங்களைச் சேகரித்த பின்னர் மற்றொரு மலரை நாடிச் செல்கின்றன.

விளக்கம்: இந்த தாவரத்தில் அயல்மகரந்தச் சேர்க்கை நடைபெறுபது இதன் சிறப்பம்சமாகும்.

177. தமிழ்நாட்டு மாநில மலர்__________

A) குளோரியோசா சுப்பர்பா

B) ஊர்ஜினியா இண்டிகா

C) வெராட்ரம் ஆல்பம்

D) கோல்சீக்கம் லூட்டியன்

178. தமிழ்நாட்டு மாநில மலர்______குடும்பத்திலிருந்து_______குடும்பத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

A) லில்லியேசி லிருந்து யூபோர்ஃபியேசி

B) கால்சிகேசி லிருந்து லில்லியேசி

C) லில்லியேசி லிருந்து கால்சிகேசி

D) கால்சிகேசி லிருந்து யூபோர்ஃபியேசி

179. தமிழ்நாட்டு மாநில மலரான குளோரியோசா சூப்பர்பா தாவரத்தின் பண்புகளில் தவறானதைக் கண்டறி:

A) இது படர்ந்து அல்லது பற்றி வளரும் தாவரமாகும்.

B) மகரந்ததாள்கள் வெளிநோக்கியது, மகரந்தப்பைகள் சுழலும் வகையுடையது.

C) எதிரிலைகளுடன் சற்றேறக்குறைய அமைந்த இலை நுனி பற்றுக்கம்பியாக மாற்றுரு பெற்றுள்ளது.

D) இதழ்கள் அலை அலையான விளிம்புகளுடன் முன்னோக்கி வளைந்தது.

விளக்கம்: இதழ்கள் அலை அலையான விளிம்புகளுடன் பின்னோக்கி வளைந்தது.

180. தமிழ்நாட்டு மாநில மலரான குளோரியோசா சூப்பர்பா தாவரத்தின் பண்புகளில் சரியானதைக் கண்டறி:

1) பூவிதழ்கள் அலை அலையான விளிம்புகளுடன் மலரும் போது பசுமை கலந்த மஞ்சள் நிறத்துடனும், முதிரும் போது சுடர் சிவப்பு நிறத்துடனும் காணப்படுகிறது.

2) இத்தாவரத்தில் கால்சிசைன் என்ற அல்கலாய்டு உள்ளது. இது செல் பகுப்பாய்வுகளில் ஒரு சோதனைக் கருவியாக பயன்படுத்தப்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

181. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) குளோரியோசா – கம்பீரமான அல்லது சிறப்பான

2) சூப்பர்பா – மகிமையால் நிறைந்த

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:

1) குளோரியோசா – மகிமையால் நிறைந்த

2) சூப்பர்பா – கம்பீரமான அல்லது சிறப்பான

182. உலகிலேயே மிகப்பெரிய உலர்த்தாவரச் சேமிப்பு நிலையம்______________

A) MH

B) PCM

C) CAL

D) கியூ

விளக்கம்: முக்கிய தேசிய மற்றும் பன்னாட்டு ஹெர்பேரியங்கள் பல உள்ளன. MH, PCM, CAL ஆகியன சில் தேசிய உலர்த்தாவரச் சேமிப்பு நிலையங்களாகும். கியூ உலர்த்தாவரச் சேமிப்பு நிலையம் உலகிலேயே பெரியதாகும்.

183. முதன்மை வகைக்காட்டு காணப்படாத போது, அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்பட்ட மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது.

A) ஹோலோடைப்

B) நியோடைப்

C) ஐசோடைப்

D) பாராடைப்

184. மரபுவழி வகைப்பாடு எதனைப் பிரதிபலிப்பதால் மிகவும் விரும்பத்தக்க வகைப்பாடாக உள்ளது.

A) ஒப்பீட்டு உள்ளமைப்பியல்

B) உற்பத்தி செய்யப்பட்ட பூக்களின் எண்ணிக்கையை

C) ஒப்பீட்டு செல்லியல்

D) பரிணாம உறவுமுறை

185. பல்வேறு வகைப்பட்ட தாவர நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் அடங்கிய வகைப்பாடு.

A) வேதிய வகைப்பாடு

B) மூலக்கூறு வகைப்பாட்டு அமைப்புமுறை

C) ஊநீர்சார் வகைப்பாடு

D) எண்ணியல் வகைப்பாடு

186. பின்வரும் எந்தத் தாவரத்தின் வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் இழை நுண்ணுயிர்கள் உள்ளன.

A) குரோட்டலேரியா ஜன்சியா

B) சைகஸ் ரெவலூட்டா

C) சைசர் அரிட்டினம்

D) கேசியுவரைனா ஈகுசிடிஃபோலியா

187. இருபக்கச்சீர் கொண்ட மலர்கள்

A) சீரோஃபிஜியா

B) தெவிஷியா

C) டட்டுரா

D) சொலானம்

11th Science Lesson 12 Questions in Tamil

12] அறிவியல் பெயர்கள்

1. பொருத்துக:

A) எலுமிச்சை – 1. பைசம் சட்டைவம்

B) நெல் – 2. காஸ்பியம் ஆர்போரியம்

C) பருத்தி – 3. சிட்ரஸ் லிமோன்

D) பட்டாணி – 4. ஒரைசா சட்டைவா

A) 1 2 3 4

B) 3 4 2 1

C) 2 3 4 1

D) 1 3 2 4

விளக்கம்:

A) எலுமிச்சை – 1. சிட்ரஸ் லிமோன்

B) நெல் – 2. ஒரைசா சட்டைவா

C) பருத்தி – 3. காஸ்பியம் ஆர்போரியம்

D) பட்டாணி – 4. பைசம் சட்டைவம்

2. ஒப்பன்சியா என்பது__________ன் அறிவியல் பெயராகும்.

A) கேரட்

B) சப்பாத்திக்கள்ளி

C) முள்ளங்கி

D) உருளை

3. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி:

1) மா – சொலானம் டியுபரோசம்

2) உருளை – மாஞ்சிபெரா இண்டிகா

3) அல்லியம் சீபா – வெங்காயம்

A) 1 2 மட்டும் தவறு

B) 2 3 மட்டும் தவறு

C) 1 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) மா – மாஞ்சிபெரா இண்டிகா

2) உருளை – சொலானம் டியுபரோசம்

3) அல்லியம் சீபா – வெங்காயம்

4. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) நாயுருவி – மிளகு

2) பைப்பர் லாங்கம் – நாயுருவி

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:

1) நாயுருவி – நாயுருவி

2) பைப்பர் லாங்கம் – மிளகு

5. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) டாக்கஸ் கரோட்டா – காரட்

2) ஹீலியாந்தஸ் அமராந்தஸ் – ஊமைத்தம்பூ

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:

1) டாக்கஸ் கரோட்டா – காரட்

2) ஹீலியாந்தஸ் அமராந்தஸ் – சூரியகாந்தி

6. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:

1) ஆசிமம் – துளசி

2) லியூக்காஸ் அஸ்பெரா – தும்பை

3) ஹைபிஸ்கஸ் ரோசா சைனின்சிஸ் – சூரியகாந்தி

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) ஆசிமம் – துளசி

2) லியூக்காஸ் அஸ்பெரா – தும்பை

3) ஹைபிஸ்கஸ் ரோசா சைனின்சிஸ் – செம்பருத்தி

7. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:

1) ஃபைக்கஸ் பெங்காலென்ஸிஸ் – வேப்பமரம்

2) அஸ்போடிஸ் – சிலந்தி அல்லி

3) அனானஸ் சட்டைவஸ் – பலாப்பழம்

A) 1 2 மட்டும் தவறு

B) 1 மட்டும் தவறு

C) 1 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) ஃபைக்கஸ் பெங்காலென்ஸிஸ் – ஆலமரம்

2) அஸ்போடிஸ் – சிலந்தி அல்லி

3) அனானஸ் சட்டைவஸ் – அன்னாசி பழம்

8. கீழ்க்கண்டவற்றுள் வெண்டையின் அறிவியல் பெயர்___________

A) அகேசியா காக்சினியா

B) அகிராந்தஸ் ஆஸ்பெரா

C) ஏபல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ்

D) அனோனா ஸ்குவாமோசா

9. பொருத்துக:

A) அகேசியா காக்சினியா – 1. நாயுருவி

B) அகிராந்தஸ் ஆஸ்பெரா – 2. சிகைக்காய்

C) அனோனா ஸ்குவாமோசா – 3. சீதாப்பழம்

D) பிரையோபில்லம் – 4. கட்டிப்போட்டால் குட்டிப்போடும்

A) 1 2 3 4

B) 3 4 2 1

C) 2 1 3 4

D) 1 3 2 4

விளக்கம்:

A) அகேசியா காக்சினியா – 1. சிகைக்காய்

B) அகிராந்தஸ் ஆஸ்பெரா – 2. நாயுருவி

C) அனோனா ஸ்குவாமோசா – 3. சீதாப்பழம்

D) பிரையோபில்லம் – 4. கட்டிப்போட்டால் குட்டிப்போடும்

10. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தாததைக் கண்டறி:

1) அனகார்டியம் ஆக்சிடெண்டேல் – முந்திரி

2) ஆர்டோ கார்பஸ் இண்டக்ரிஃபோலியா – மாதுளை

3) கலோட்ரோபிஸ் ஜைஜெண்டியா – கருவேலம்

A) 1 மட்டும் தவறு

B) 1 3 மட்டும் தவறு

C) 2 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) அனகார்டியம் ஆக்சிடெண்டேல் – முந்திரி

2) ஆர்டோ கார்பஸ் இண்டக்ரிஃபோலியா – பலா

3) கலோட்ரோபிஸ் ஜைஜெண்டியா – எருக்கு

11. கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளதைக் கண்டறி:

A) சிட்ரஸ் சைனென்சிஸ் – எலுமிச்சை

B) கோக்கஸ் நியுசிஃபெரா – தென்னை

C) கொரியாண்ட்ரம் சட்டைவம் – கொத்துமல்லிஃதனியா

D) குக்குமிஸ் சட்டைவஸ் – வெள்ளரிக்காய்

விளக்கம்:

A) சிட்ரஸ் சைனென்சிஸ் – சாத்துக்குடி

B) கோக்கஸ் நியுசிஃபெரா – தென்னை

C) கொரியாண்ட்ரம் சட்டைவம் – கொத்துமல்லிஃதனியா

D) குக்குமிஸ் சட்டைவஸ் – வெள்ளரிக்காய்

12. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளதைக் கண்டறி:

1) குக்குமிஸ் சட்டைவஸ் – தோசைக்காய்

2) குக்கர்பிட்டா மேச்சிமா – அரசாணைக்காய்

3) கஸ்கூட்டா ரிஃளெக்ஸா – சடதாரி

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

13. கீழ்க்கண்டவற்றுள் குக்கர்பிட்டா மேக்சிமா வுடன் பொருந்தாதது எது?

A) பூசணிக்காய்

B) பரங்கிக்காய்

C) அரசாணைக்காய்

D) முருங்கைக்காய்

14. கீழ்க்கண்டவற்றுள் கஸ்கூட்டா ரிஃளெக்ஸா வுடன் தொடர்பில்லாதது எது?

A) அம்மையார் கூந்தல்

B) அத்தி

C) சடதாரி

D) தங்கக்கொடி

15. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:

1) ஃபைகஸ் க்ளாமரேட்டா – அத்தி

2) இன்பேஷியின்ஸ் பால்சாமியா – பால்சம்ஃபால்செண்டு

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் தவறு

D) மேற்கண்ட எதுவுமில்லை

16. கீழ்க்கண்டவற்றுள் மைமோசா புடிகா வுடன் தொடர்பில்லாததைக் கண்டறி:

A) தொட்டால் வாடி

B) தொட்டால் சுருங்கி

C) தொட்டால் சிணுங்கி

D) அந்தி மல்லிகை

17. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:

A) லாப்லாப் பர்பூரியஸ் – அவரை

B) நீலம்போ நியூஸிஃபெரா – தாமரை

C) பைரஸ் மேலஸ் – திராட்சை

D) ரிசினஸ் கம்யூனிஸ் – ஆமணக்கு

விளக்கம்:

A) லாப்லாப் பர்பூரியஸ் – அவரை

B) நீலம்போ நியூஸிஃபெரா – தாமரை

C) பைரஸ் மேலஸ் – ஆப்பிள்

D) ரிசினஸ் கம்யூனிஸ் – ஆமணக்கு

18. லைகோபெர்சிகம் எஸ்குலெண்டம் என்பது_____________

A) தக்காளி

B) பீட்ரூட்

C) முள்ளங்கி

D) அவரை

19. மிராவிலிஸ் ஜலபா என்பது__________

A) அந்திமந்தாரை

B) அந்தி மல்லிகை

C) AB இரண்டும்

D) நெட்டிலிங்கம்

20. பாலியால்தியா லாங்கிஃபோலியா என்பது_____________

A) ஆமணக்கு

B) எல்லு

C) நெட்டிலிங்கம்

D) வெட்டுக்காயப் பூண்டுச் செடி

21. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) ரிசினஸ் கம்யூனிஸ் – வெட்டுக்காயப் பூண்டுச் செடி

2) டிரைடாக்ஸ் புரோகும்பன்ஸ் – முத்துக்கொட்டை

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:

1) ரிசினஸ் கம்யூனிஸ் – முத்துக்கொட்டை

2) டிரைடாக்ஸ் புரோகும்பன்ஸ் – வெட்டுக்காயப் பூண்டுச் செடி

22. கீழ்க்கண்டவற்றுள் தவறானதைக் கண்டறி:

1) மால்வா ரோட்டண்டிஃபோலியா – புளிச்சைக்கீரை

2) ஹைபிஸ்கஸ் கென்னாபினஸ் – திரிகாலமல்லி

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:

1) மால்வா ரோட்டண்டிஃபோலியா – திரிகாலமல்லி

2) ஹைபிஸ்கஸ் கென்னாபினஸ் – புளிச்சைக்கீரை

23. பொருத்துக:

A) காஸ்பியம் பார்படென்ஸ் – 1. டெக்கான் பருத்தி

B) காஸ்பியம் ஹிர்சுட்டம் – 2. பருத்தி

C) ஹைபிஸ்கஸ் கென்னாபினஸ் – 3. எகிப்து பருத்தி

D) காஸ்பியம் ஹெர்பேசியம் – 4. அமெரிக்கப் பருத்தி

A) 1 2 3 4

B) 3 4 1 2

C) 2 1 3 4

D) 1 3 2 4

விளக்கம்:

A) காஸ்பியம் பார்படென்ஸ் – 1. எகிப்து பருத்தி

B) காஸ்பியம் ஹிர்சுட்டம் – 2. அமெரிக்கப் பருத்தி

C) ஹைபிஸ்கஸ் கென்னாபினஸ் – 3. டெக்கான் பருத்தி

D) காஸ்பியம் ஹெர்பேசியம் – 4. பருத்தி

24. கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமில்லாததைக் கண்டறி:

1) தெஸ்பிசியா பாப்புல்னியா – பூவரசு

2) அபுட்டிலான் இன்டிகம் – துத்தி

3) ஹைபிஸ்கஸ் சைசோபெட்டாலஸ் – செம்பருத்தி

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) தெஸ்பிசியா பாப்புல்னியா – பூவரசு

2) அபுட்டிலான் இன்டிகம் – துத்தி

3) ஹைபிஸ்கஸ் சைசோபெட்டாலஸ் – அல்லிகள் பிளவுற்று காணப்படும் ஒரு வகை செம்பருத்தி

25. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) இன்டிகோஃபெரா எனியஃபில்லா – செப்பு நெருஞ்சி

2) ஆஸ்கினோமினி ஆஸ்பிரா – தக்கைத் தாவரம்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

26. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தாததைக் கண்டறி:

A) கிளைட்டோரியா டெர்னேஷியா – சங்குப்பூ

B) குரோட்டலேரியா வெருகோசா – கிலுகிலுப்பை

C) கஜானஸ் கஜான் – அவரை

D) விக்னோ முங்கோ – உளுந்து

விளக்கம்:

A) கிளைட்டோரியா டெர்னேஷியா – சங்குப்பூ

B) குரோட்டலேரியா வெருகோசா – கிலுகிலுப்பை

C) கஜானஸ் கஜான் – துவரை

D) விக்னோ முங்கோ – உளுந்து

27. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) விக்னா ரேடியேட்டா – மூக்கடலை

2) விக்னா உங்கிகுளேட்டா – கொள்ளு

3) சைசெர் ஆரிடினம் – பச்சைப்பயறு

A) 1 3 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) விக்னா ரேடியேட்டா – பச்சைப்பயறு

2) விக்னா உங்கிகுளேட்டா – கொள்ளு

3) சைசெர் ஆரிடினம் – மூக்கடலை

28. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி:

A) லாப்லாப் பர்பூரீயஸ் – அவரை

B) செஸ்பேனியா கிராண்டிஃபுளோரா – அகத்தி

C) அராக்கிஸ் ஹைபோஜியா – ஆமணக்கு

D) பொங்கேமியா பின்னேட்டா – புங்கம்

விளக்கம்:

A) லாப்லாப் பர்பூரீயஸ் – அவரை

B) செஸ்பேனியா கிராண்டிஃபுளோரா – அகத்தி

C) அராக்கிஸ் ஹைபோஜியா – வேர்க்கடலை

D) பொங்கேமியா பின்னேட்டா – புங்கம்

29. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) டால்பெர்ஜியா லாட்டிஃபோலியா – வேங்கைமரம்

2) டிரோகார்ப்பஸ் சாண்ட்டலினஸ் – நூக்கமரம்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:

1) டால்பெர்ஜியா லாட்டிஃபோலியா – நூக்கமரம்

2) டிரோகார்ப்பஸ் சாண்ட்டலினஸ் – வேங்கைமரம்

30. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தாததைக் கண்டறி:

1) குரோட்டலேரியா ஜன்ஷியா – சணப்பை

2) செஸ்பேனியா ஏஜிப்;டியாக்கா – செஸ்பேன்

3) இன்டிகோஃபெரா டிங்டோரியா – அவரை

A) 1 2 மட்டும் தவறு

B) 1 3 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) குரோட்டலேரியா ஜன்ஷியா – சணப்பை

2) செஸ்பேனியா ஏஜிப்;டியாக்கா – செஸ்பேன்

3) இன்டிகோஃபெரா டிங்டோரியா – அவுரி

31. கீழ்க்கண்டவற்றுள் அலங்காரத் தாவரமாக பயன்படுவது__________

A) குரோட்டலேரியா ஜன்ஷியா

B) செஸ்பேனியா ஏஜிப்டியாக்கா

C) பியூடியா பிராண்டோசா

D) டால்பெர்ஜியா லாட்டிஃபோலியா

32. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி:

1) பியூடியா பிராண்டோசோ – காட்டுத்தீ

2) லாத்திரஸ் ஓடோரேட்டஸ் – இனிப்புப் பட்டாணி

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

33. ஆந்தோசெஃபாலஸ் இன்டிகஸ் என்பது­­­­­­­­­­­­­­­­­­­­­­___________மரமாகும்.

A) ஆலமரம்

B) அரசமரம்

C) வேங்கை மரம்

D) கடம்ப மரம்

34. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) காஃபியா அராபிக்கா – காஃபி செடி

2) அடைனா கார்டிஃபோலியா – மஞ்சக்கடம்பு

3) மொரிண்டா டிங்டோரியா – எலந்தை மரம்

A) 1 மட்டும் சரி

B) 1 2 மட்டும் சரி

C) 2 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

1) காஃபியா அராபிக்கா – காஃபி செடி

2) அடைனா கார்டிஃபோலியா – மஞ்சக்கடம்பு

3) மொரிண்டா டிங்டோரியா – நுனா மரம்

35. கீழ்க்கண்டவற்றுள் சரியான பொருத்தமற்றதைக் கண்டறி:

1) கார்டினியா ஜாஸ்மினாய்டஸ் – பன்னீர் பூ

2) இக்ஸோரா காக்ஸினியா – இட்லிப்பூ

3) மியூஸாண்டா பிராண்டோஸா – வெள்ளை மடந்தை

A) 1 2 மட்டும் தவறு

B) 2 3 மட்டும் தவறு

C) 1 3 மட்டும் தவறு

D) மேற்கண்ட எதுவுமில்லை

36. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தாதது எது.

A) கிரைசாந்திமம் இன்டிகம் – அக்கரகாரம்

B) ஹீலியாந்தஸ் அனுவஸ் – வெட்டுக்காயச்செடி

C) டிரைடாக்ஸ் புரோக்கும்பன்ஸ் – குப்பைமேனி

D) கார்தாமஸ் டிங்டோரியஸ் – சாஃப்ளவர்

விளக்கம்:

A) கிரைசாந்திமம் இன்டிகம் – அக்கரகாரம்

B) ஹீலியாந்தஸ் அனுவஸ் – வெட்டுக்காயச்செடி

C) டிரைடாக்ஸ் புரோக்கும்பன்ஸ் – வெட்டுக்காயச்செடி

D) கார்தாமஸ் டிங்டோரியஸ் – சாஃப்ளவர்

37. எக்லிப்டா புரோஸ்ட்ரேட்டா என்பது_____________

A) அகத்திக்கீரை

B) கரிசலாங்கண்ணி

C) புளிச்சைக்கீரை

D) அரக்கீரை

38. பொருத்துக:

A) சிக்கோரியம் இன்டிபஸ் – 1. காசினிக்கீரை

B) டாஜிடஸ் பெட்டுலா – 2. ஃபிரன்ச் மாரிகோல்டு

C) காலெண்டுலா அஃபிஸினாலிஸ் – 3. பாட் மாரிகோல்டு

A) 3 2 1

B) 2 1 3

C) 1 2 3

D) 2 3 1

39. கீழ்க்கண்டவற்றுள் சரியாண இணையைக் கண்டறி:

1) சொலானம் டார்வம் – கண்டங்கத்திரி

2) சொலானம் சாந்தோகார்ப்பம் – சுண்டைக்காய்

3) சொலானம் நைக்ரம் – ஊமத்தை

4) டாட்டூரா மெட்டல் – மணத்தக்காளி

A) 1 2 3 மட்டும் சரி

B) 2 3 4 மட்டும் சரி

C) 1 3 4 மட்டும் சரி

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) சொலானம் டார்வம் – சுண்டைக்காய்

2) சொலானம் சாந்தோகார்ப்பம் – கண்டங்கத்திரி

3) சொலானம் நைக்ரம் – மணத்தக்காளி

4) டாட்டூரா மெட்டல் – ஊமத்தை

40. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தாததைக் கண்டறி:

1) சொலானம் ட்ரைலோபேட்டம் – தூதுவளை

2) வைத்தானியா சாம்னிஃபெரா – அமுக்கிரா

3) நிக்கோட்டியானா டொபாக்கம் – புகையிலை

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) மேற்கண்ட எதுவுமில்லை

41. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) செஸ்ட்ரம் டையூர்னம் – இரவுமல்லி

2) செஸ்ட்ரம் நாக்டர்னம் – பகல் மல்லி

3) பெட்டுனியா ஹைபிரிடா – இளஞ்சிவப்பு மலர்

A) 1 மட்டும் சரி

B) 1 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

1) செஸ்ட்ரம் டையூர்னம் – பகல் மல்லி

2) செஸ்ட்ரம் நாக்டர்னம் – இரவுமல்லி

3) பெட்டுனியா ஹைபிரிடா – இளஞ்சிவப்பு மலர்

42. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி:

1) குரோட்டன் ஸ்பார்சிஃபுளோரஸ் – குப்பைமேனி

2) அக்காலிஃபா இன்டிகா – எலி ஆமணக்கு

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:

1) குரோட்டன் ஸ்பார்சிஃபுளோரஸ் – எலி ஆமணக்கு

2) அக்காலிஃபா இன்டிகா – குப்பைமேனி

43. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) மானிஹாட் எஸ்குலெண்டா – சர்க்கரைவள்ளி

2) ஃபில்லாந்தஸ் எம்பிளிக்கா – கீழாநெல்லி

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:

1) மானிஹாட் எஸ்குலெண்டா – மரவள்ளி

2) ஃபில்லாந்தஸ் எம்பிளிக்கா – நெல்லி

44. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) ரிஸினஸ் கம்யூனிஸ் – காட்டாமணக்கு

2) ஜட்ரோஃபா குர்காஸ் – ஆமணக்கு

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:

1) ரிஸினஸ் கம்யூனிஸ் – ஆமணக்கு

2) ஜட்ரோஃபா குர்காஸ் – காட்டாமணக்கு

45. ஃபில்லாந்தஸ் அமாரஸ் என்பது__________ன் தாவரவியல் பெயராகும்.

A) நெல்லி

B) கீழாநெல்லி

C) ஆமணக்கு

D) மலைநெல்லி

46. பொருத்துக:

A) ஹீவியா பிரேசிலியன்ஸிஸ் – 1. மணிக்கோபா இரப்பர்

B) மானிஹாட் கிளாசியோவி – 2. பாரா இரப்பர்

C) கோடியம் வேரிகேட்டம் – 3. பால் புதர்

D) யூஃபோர்பியா திருக்கள்ளி – 4. தோட்டத்தின் குரோட்டன்

A) 1 2 3 4

B) 3 4 1 2

C) 2 1 4 3

D) 1 3 2 4

விளக்கம்:

A) ஹீவியா பிரேசிலியன்ஸிஸ் – 1. பாரா இரப்பர்

B) மானிஹாட் கிளாசியோவி – 2. மணிக்கோபா இரப்பர்

C) கோடியம் வேரிகேட்டம் – 3. தோட்டத்தின் குரோட்டன்

D) யூஃபோர்பியா திருக்கள்ளி – 4. பால் புதர்

47. கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமல்லாத இணையைக் கண்டறி:

1) மியூஸா பாரடிஸியாகா – குட்டை நேந்திர வாழை

2) மியூஸா டெக்ஸ்டைலிஸ் – வாழை

3) ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ் – பறவைகளின் சொர்க்க மலர்

4) ஸடெரிலிட்சியா ரெஜினே – பயணிகளின் பனை

A) 1 2 3 மட்டும் தவறு

B) 2 3 4 மட்டும் தவறு

C) 1 2 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) மியூஸா பாரடிஸியாகா – வாழை

2) மியூஸா டெக்ஸ்டைலிஸ் – குட்டை நேந்திர வாழை

3) ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ் – பயணிகளின் பனை

4) ஸடெரிலிட்சியா ரெஜினே – பறவைகளின் சொர்க்க மலர்

48. கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைக் கண்டறி:

1) கொரிஃபா அம்ப்ரகுலிஃபெரா – குடைப்பனை

2) கோகாஸ் நியூசிஃபெரா – கல்ப விருட்சம் (அ) பனை

3) பொராசஸ் பிலாபெல்லிஃபெர் – தென்னை

A) 1 மட்டும் தவறு

B) 2 3 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) கொரிஃபா அம்ப்ரகுலிஃபெரா – குடைப்பனை

2) கோகாஸ் நியூசிஃபெரா – கல்ப விருட்சம் (அ) பனை

3) பொராசஸ் பிலாபெல்லிஃபெர் – பனை

49. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) ஃபோனிக்ஸ் சில்வெஸ்ட்ரிஸ் – ஈச்சை

2) அடோநிடியா மெரிலி – ஒயின் பனை

3) கேரியோடா யூரன்ஸ் – மணிலா பனை

A) 1 2 மட்டும் சரி

B) 1 மட்டும் சரி

C) 1 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

1) ஃபோனிக்ஸ் சில்வெஸ்ட்ரிஸ் – ஈச்சை

2) அடோநிடியா மெரிலி – மணிலா பனை

3) கேரியோடா யூரன்ஸ் – ஒயின் பனை

50. பொருத்துக:

A) மால்வேசி – 1. பருத்தி குடம்பம்

B) ஃபேபேசி – 2. அவரைக் குடும்பம்

C) ரூபியேசி – 3. காஃபி குடும்பம்

D) ஆஸ்ட்ரேசி – 4. சூரியகாந்தி குடும்பம்

A) 1 2 3 4

B) 3 4 1 2

C) 2 1 4 3

D) 1 3 2 4

51. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தாத இணையைக் கண்டறி:

A) உருளைக்கிழங்கு குடும்பம் – சொலானேசி

B) ஆமணக்கு குடும்பம் – யூஃபோர்பியேசி

C) வாழைக் குடும்பம் – ரூஃபியேசி

D) பனைக் குடும்பம் – அரிகேசி

விளக்கம்:

A) உருளைக்கிழங்கு குடும்பம் – சொலானேசி

B) ஆமணக்கு குடும்பம் – யூஃபோர்பியேசி

C) வாழைக் குடும்பம் – மியூசேசி

D) பனைக் குடும்பம் – அரிகேசி