TnpscTnpsc Current Affairs

22nd November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

22nd November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 22nd November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

22nd November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. 2022 – உலகளாவிய தகவல் தொழில்நுட்ப அறிக்கையின்படி, வலையமைப்பு தயார்நிலை குறியீட்டில் முதலிடம் வகிக்கிற நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. சிங்கப்பூர்

இ. இந்தியா

ஈ. சுவீடன்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அமெரிக்கா

  • அமெரிக்கா, சிங்கப்பூர், சுவீடன், நெதர்லாந்து மற்றும் சுவிச்சர்லாந்து ஆகியவை 2022–வலையமைப்பு தயார்நிலைக் குறியீட்டின்படி நெட்வொர்க் தயார்நிலையிலுள்ள நாடுகளாகும். உலகளாவிய தகவல் தொழில்நுட்ப அறிக்கையின் ஒருபகுதியாக உலக பொருளாதார மன்றத்தால், கடந்த 2002இல் இந்தக்குறியீடு தொடங்கப்பட்டது. மேம்பாடு மற்றும் போட்டித்தன்மைக்கு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான முக்கிய அளவீடாகும் இந்தக் குறியீடு. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “Stepping into the new digital era: How and why digital natives will shape the world” என்பதாகும்.

2. இந்தியாவின் 53ஆவது சர்வதேச திரைப்பட விழாவின்போது (IFFI) 2022ஆம் ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதானது கீழ்க்காணும் யாருக்கு வழங்கப்பட்டது?

அ. இரஜினிகாந்த்

ஆ. சிரஞ்சீவி

இ. கமல்ஹாசன்

ஈ. மோகன்லால்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சிரஞ்சீவி

  • 53ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) தொடக்க விழாவில், தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ சிரஞ்சீவிக்கு 2022ஆம் ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்பட்டது. நடுவண் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், கோவா ஆளுநர் PS ஸ்ரீதரன்பிள்ளை, முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்துகொண்ட தொடக்க விழாவுடன் 53ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது.

3. ஏழை நாடுகளை ஆதரிப்பதற்காக, “இழப்பு மற்றும் சேத நிதியத்தை” தொடங்கிய மாநாடு எது?

அ. COP–27

ஆ. G–20 வருடாந்திர உச்சிமாநாடு

இ. ASEAN வருடாந்திர உச்சிமாநாடு

ஈ. WEF வருடாந்திர உச்சிமாநாடு

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. COP–27

  • ஐநாஇன் காலநிலை உச்சிமாநாடான COP–27இல் ஏறக்குறைய இருநூறு நாடுகள் பருவநிலை தாக்கங்களால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளை ஆதரிப்பதற்காக, “இழப்பு மற்றும் சேத நிதியத்தை” அமைப்பதற்கு ஒப்புக்கொண்டன. “இழப்பு மற்றும் சேதம்” என்பது காலநிலை இயக்கத்தால் ஏற்படும் வானிலை தீவிரங்கள் அல்லது கடல்மட்ட உயர்வு போன்ற தாக்கங்களால் ஏற்படும் செலவினங்களைக் குறிக்கிறது. ஏழை நாடுகளால் தவிர்க்க முடியாத அல்லது மாற்றியமைக்க முடியாத சேதத்தின் செலவை இந்த நிதியம் ஈடுசெய்கிறது.

4. ITTF–ATTU ஆசிய கோப்பையில் பதக்கம் வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் / வீராங்கனை யார்?

அ. சரத் கமல்

ஆ. மனிகா பத்ரா

இ. ஸ்ரீஜா அகுல

ஈ. சத்தியன் ஞானசேகரன்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மனிகா பத்ரா

  • தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற ITTF–ATTU ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனையாக மனிகா பத்ரா ஆனார். உலகின் 6ஆம்நிலை டேபிள் டென்னிஸ் வீராங்கனையான ஜப்பானின் ஹினா ஹயாடாவை தோற்கடித்து அவர் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டில் வெள்ளி மற்றும் 2000ஆம் ஆண்டில் வெண்கலம் வென்ற சேத்தன் பாபூர், இதற்கு முன் ஆசிய கோப்பையில் பதக்கம் வென்ற ஒரே இந்திய டேபிள் டென்னிஸ் வீரராக இருந்தார்.

5. 2022ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மையின் தலைவராக இருக்கும் நாடு எது?

அ. இலங்கை

ஆ. வங்காளதேசம்

இ. இந்தியா

ஈ. இங்கிலாந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்தியா

  • செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மைக்கான (GPAI) தலைமைப்பொறுப்பை பிரான்ஸிடம் இருந்து இந்தியா பெற்றுக்கொண்டது. GPAI என்பது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, கொரியா குடியரசு மற்றும் சிங்கப்பூர் உட்பட 25 உறுப்புநாடுகளின் சங்கமாகும். இந்தியா, கடந்த 2020இல் GPAIஇன் நிறுவன உறுப்பினராக இணைந்தது.

6. UN–FAO கூட்டறிக்கையின்படி, எந்த நாட்டைச் சார்ந்த எட்டு மில்லியன் மக்கள் பட்டினியால் வாடும் அபாயத்தில் உள்ளனர்?

அ. தெற்கு சூடான்

ஆ. இஸ்ரேல்

இ. இலங்கை

ஈ. எகிப்து

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தெற்கு சூடான்

  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), ஐநா குழந்தைகள் நிதியமான UNICEF மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவை கூட்டாக இணைந்து வெளியிட்ட ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, தெற்கு சூடானில் கிட்டத்தட்ட எட்டு மில்லியன் மக்கள் பட்டினியால் வாடும் அபாயத்தில் உள்ளனர். இந்த அறிக்கையின்படி, அதிக அளவிலான உணவுப்பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்துக குறைபாட்டை எதிர்கொள்ளும் மக்களின் விகிதம், கடந்த 2013 மற்றும் 2016ஆம் ஆண்டில் நடந்த மோதலின்போது இருந்த அளவைவிட அதிகரித்துள்ளது.

7. அண்மையில் இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை நிறுவப்பட்ட மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. குஜராத்

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. குஜராத்

  • அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை மின்னியற்றியை குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ராவில் நிறுவியுள்ளது. இந்த விசையாழி ஒற்றுமை சிலையைவிட (182 மீ) உயரமானது என்று கூறப்படுகிறது. அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெடின் துணை நிறுவனமான முந்த்ரா விண்ட்டெக் லிமிடெட்மூலம் இவ்விசையாழி நிறுவப்பட்டுள்ளது.

8. ஆசிய கான்டினென்டல் செஸ் சாம்பியன்ஷிப்பில் ஓபன் மற்றும் மகளிர் பட்டங்களை வென்ற இந்திய செஸ் வீரர்/ வீராங்கனைகள் யார்?

அ. R பிரக்ஞானந்தா மற்றும் P V நந்திதா

ஆ. B அதிபன் மற்றும் கோனேரு ஹம்பி

இ. R பிரக்ஞானந்தா மற்றும் கோனேரு ஹம்பி

ஈ. B அதிபன் மற்றும் P V நந்திதா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. R பிரக்ஞானந்தா மற்றும் P V நந்திதா

  • ஆசிய கான்டினென்டல் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா மற்றும் சகநாட்டு வீரரான PV நந்திதா ஆகியோர் முறையே ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் பட்டங்களை வென்றனர். பிரக்ஞானந்தா ஒன்பதாவது மற்றும் கடைசி சுற்றில் சகநாட்டவரான B அதிபனுடன் டிரா செய்து ஏழு புள்ளிகளுடன் பட்டத்தை வென்றார். இந்த வெற்றி பிரக்ஞானந்தாவுக்கு அடுத்த FIDE உலகக்கோப்பைக்கான அனுமதியையும் பெற்றுத்தந்தது. பெண்களுக்கான போட்டியில் நந்திதா ஆட்டமிழக்காமல் 7.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.

9. அண்மையில் காலஞ்சென்ற எலா பட், கீழ்க்காணும் எந்த முதன்மை நிறுவனத்தின் நிறுவனராவார்?

அ. SEWA

ஆ. AICTU

இ. CII

ஈ. FICCI

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. SEWA

  • SEWAஇன் (Self Employed Women’s Association) நிறுவனரும் புகழ்பெற்ற பெண்ணுரிமை ஆர்வலருமான எலா பட் அண்மையில் காலமானார். SEWA ஆனது அமைப்புசாரா துறையில் பணிபுரியும் பெண்களின் தொழிற்சங்கமாக உருவாக்கப்பட்டது; இதில் இப்போது இரண்டு மில்லியன் உறுப்பினர்கள் உள்ளனர். 89 வயதான, ‘பத்ம பூஷண்’ விருதாளரான இவர், பெண்கள் அதிகாரமளிப்புத் துறையில் முன்னோடியாக இருந்தார்.

10. 17ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கீழ்க்காணும் எந்த நாட்டின் அதிபர் முதன்மை விருந்தினராக கலந்துகொள்கிறார்?

அ. ஆஸ்திரேலியா

ஆ. இஸ்ரேல்

இ. கயானா

ஈ. பிரேசில்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. கயானா

  • 17ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கயானா அதிபர் Dr முகமது இர்பான் அலி முதன்மை விருந்தினராக கலந்துகொள்கிறார். இந்த மாநாடு 2023 ஜனவரியில் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரில் நடைபெறும். இளையோர் பிரவாசி பாரதிய திவாஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் சனெட்டா மஸ்கரென்ஹாஸ் கலந்துகொள்வார் என்றும் நடுவண் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 17ஆவது பிரவாசி பாரதிய திவாஸின் கருப்பொருள், “Diaspora: Reliable Partners for India’s Progress in Amrit Kaal” என்பதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஜோகோவிச் சாதனை சாம்பியன்

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில் அவர் 7-5, 6-3 என்ற செட்களில் நார்வேயின் கேஸ்பர் ரூடை தோற்கடித்தார். இந்தப் போட்டியில் அவர் 2015ஆம் ஆண்டுக்குப்பிறகு சாம்பியன் ஆவது இதுவே முதல் முறையாகும். இப்போட்டியில் சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆறு முறை சாம்பியன் ஆனதே அதிகபட்சமாக இருக்கும் நிலையில், தற்போது ஜோகோவிச்சும் அதே எண்ணிக்கையிலான பட்டங்களை வென்று அவரது சாதனையை சமன் செய்திருக்கிறார்.

மேலும், இந்தப் பட்டத்தை வெல்லும் மிக வயதான வீரர் (35) என்ற பெருமையையும் பெற்ற அவர், ரொக்கப் பரிசாக ரூ.38 கோடியை கைப்பற்றியுள்ளார். இந்தப் போட்டி முழுவதுமாக அவர் ஒரு தோல்வியைக் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் நடப்பு ஆண்டை, விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் உள்பட 5 சாம்பியன் பட்டங்களுடன் ஜோகோவிச் நிறைவு செய்திருக்கிறார்.

22nd November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. As per the Global Information Technology Report (GITR) 2022, which country tops the Network Readiness Index?

A. USA

B. Singapore

C. India

D. Sweden

Answer & Explanation

Answer: A. USA

  • USA, Singapore, Sweden, Netherlands and Swiss are the most network ready countries as per Network Readiness Index 2022. The Index was launched in 2002 by the World Economic Forum as part of the Global Information Technology Report (GITR). It is a key metric of the use of Information and Communication Technology (ICT) for development and competitiveness. This year’s theme is ‘Stepping into the new digital era: How and why digital natives will shape the world’.

2. Who was honoured with the Indian Film Personality of the Year 2022 award in the 53rd International Film Festival of India (IFFI)?

A. Rajinikanth

B. Chiranjeevi

C. Kamal Hassan

D. Mohanlal

Answer & Explanation

Answer: B. Chiranjeevi

  • At the opening ceremony of the 53rd International Film Festival of India (IFFI), Telugu superstar Chiranjeevi was honoured with the Indian Film Personality of the Year 2022 award. IFFI Goa began with an opening ceremony attended by Union Information and Broadcasting Minister Anurag Thakur, Goa Governor PS Sreedharan Pillai, Chief Minister Pramod Sawant.

3. Which forum launched the “Loss and Damage fund” to support poorer countries?

A. COP–27

B. G–20 Annual Summit

C. ASEAN Annual Summit

D. WEF Annual Summit

Answer & Explanation

Answer: A. COP–27

  • Nearly 200 countries at the UN climate summit COP–27 agreed to set up a “loss and damage fund” to support poorer countries which are affected by climate impacts. ‘Loss and damage’ refer to costs being incurred from climate–fuelled weather extremes or impacts, like rising sea levels. The fund covers the cost of damage that poorer countries cannot avoid or adapt to.

4. Which is the first Indian table tennis player to win a medal in the ITTF–ATTU Asian Cup?

A. Sharath Kamal

B. Manika Batra

C. Sreeja Akula

D. Sathiyan Gnanasekaran

Answer & Explanation

Answer: B. Manika Batra

  • Manika Batra became the first Indian table tennis player to win a medal in the ITTF–ATTU Asian Cup Table Tennis Tournament, held in Bangkok, Thailand. She has won a bronze medal by defeating world No. 6 Hina Hayata of Japan. Chetan Baboor, with silver in 1997 and bronze in 2000, was the only Indian table tennis player to win a medal at the Asian Cup before this.

5. Which country is the chair of the Global Partnership on Artificial Intelligence (GPAI) in 2022?

A. Sri Lanka

B. Bangladesh

C. India

D. United Kingdom

Answer & Explanation

Answer: C. India

  • India assumed the Chair of the Global Partnership on Artificial Intelligence (GPAI) from the outgoing chair France. GPAI is an association of 25 member countries, including the US, the UK, EU, Australia, Canada, France, Germany, Italy, Japan, Mexico, New Zealand, Republic of Korea, and Singapore. India joined GPAI in 2020 as a founding member.

6. As per the UN–FAO joint report, eight million people of which country is at the risk of hunger?

A. South Sudan

B. Israel

C. Sri Lanka

D. Egypt

Answer & Explanation

Answer: A. South Sudan

  • As per a recent report released by Food and Agriculture Organisation (FAO), the UN children’s fund UNICEF and the World Food Programme, almost eight million people in South Sudan, or two thirds of the population in the deeply troubled country, are at risk of hunger. As per the report, proportion of people facing high levels of food insecurity and malnourishment is at the highest level ever, surpassing levels seen even during the conflict in 2013 and 2016.

7. India’s largest wind turbine has been recently installed in which state?

A. Tamil Nadu

B. Maharashtra

C. Gujarat

D. Karnataka

Answer & Explanation

Answer: C. Gujarat

  • Adani New Industries has installed India’s largest Wind Turbine Generator (WTG) at Mundra in Gujarat. The turbine is said to be taller than Statue of Unity (182 meters). The turbine has been installed by Mundra Windtech Ltd (MWL), a wholly–owned subsidiary incorporated by Adani Enterprises Ltd (AEL).

8. Which Indian chess players won the open and women’s titles in the Asian Continental Chess championship?

A. R Praggnanandhaa and P V Nandhidhaa

B. B Adhiban and Koneru Humpy

C. R Praggnanandhaa and Koneru Humpy

D. B Adhiban and P V Nandhidhaa

Answer & Explanation

Answer: A. R Praggnanandhaa and P V Nandhidhaa

  • Top–seeded Indian Grandmaster, R Praggnanandhaa and compatriot P V Nandhidhaa won the titles in the Open and women’s sections respectively in the Asian Continental Chess championship. Praggnanandhaa drew with compatriot B Adhiban in the ninth and final round to win the title with seven points. The victory also earned Praggnanandhaa a ticket to the next FIDE World Cup. In the women’s event, Nandhidhaa remained unbeaten throughout to finish first with 7.5 points.

9. Ela Bhatt, who passed away recently, was the founder of which flagship institution?

A. SEWA

B. AICTU

C. China

D. Indonesia

Answer & Explanation

Answer: A. SEWA

  • Renowned women’s rights activist Ela Bhatt, who is also the founder of SEWA (Self Employed Women’s Association), passed away recently. SEWA was formed as a trade union of women working in the unorganized sector, which now has two million members. The 89–year–old, also a Padma Bhushan recipient, was a pioneer in the field of women empowerment and received international recognition.

10. Which country’s President will be the Chief Guest at the 17th Pravasi Bharatiya Divas Convention?

A. Australia

B. Israel

C. Guyana

D. Brazil

Answer & Explanation

Answer: C. Guyana

  • Guyana President Dr. Mohamed Irfaan Ali will be the chief guest at the 17th Pravasi Bharatiya Divas Convention. It will be held in January 2023 in Indore, Madhya Pradesh. The External Affairs Ministry also said that Zaneta Mascarenhas, Member of Parliament of Australia, will be the guest of honour at the Youth Pravasi Bharatiya Divas. The theme of the 17th Pravasi Bharatiya Divas is – Diaspora: Reliable Partners for India’s Progress in Amrit Kaal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!