Tnpsc

October Tamil Current Affairs Online Model Test

October Tamil Current Affairs Online Model Test

Congratulations - you have completed October Tamil Current Affairs Online Model Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
லண்டனில் புதுமையான IT தீர்வுகளுக்காக ஆண்டின் மிகச்சிறந்த சர்வதேச வணிக நபர் விருதை வென்ற இந்திய தொழிலதிபர் யார்? [Which Indian entrepreneur has won the prestigious International Business Person of the Year award in London for innovative IT solutions?]  
A
பிரேந்திர சஸ்மால் [Birendra Sasmal]
B
உதய் லஞ்சே [Uday Lanje]
C
மதிரா ஸ்ரீநிவாசு [Madhira Srinivasu] 
D
ரஞ்சன் குமார் [Ranjan Kumar]
Question 1 Explanation: 
லண்டனில் நடைபெற்ற ஆசிய சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில், ஆப்பிரிக்காவுக்கான புதுமையான IT தீர்வுகளை வழங்கிய கானாவைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் பிரேந்திர சஸ்மால், ஆண்டின் மிகச்சிறந்த சர்வதேச வணிக நபர் விருதை வென்றுள்ளார். சஸ்மால் கினியா, சியாரா லியோன், நியூயார்க் மற்றும் துபாயில் உள்ள அலுவலகங்களில் மொத்தம் 350 பேர் பணியாற்றும் சுபா குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலராவார். சஸ்மால் தலைமையின் கீழ், குழுவின் வருவாய் 3000 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதுடன், ஆப்பிரிக்காவின் மிக வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகவும் இந்நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது. Birendra Sasmal, a Ghana-based Indian entrepreneur, has won a prestigious International Business Person of the Year at the Asian Achievers Awards in London for his efforts to bring innovative IT solutions to Africa. Sasmal is CEO of Subah Group, which employs around 350 people with offices in Guinea, Sierra Leone, New York City and Dubai. Under Sasmal’s leadership, the group’s revenues have increased by over 3,000% and it has been named among one of Africa’s fastest growing tech companies.
Question 2
சஷஸ்த்ரா சீமா பாலின் புதிய தலைவர் யார்? [Who is the new chief of the Sashastra Seema Bal (SSB)?]
A
சுபாஷ் மிஸ்ரா [Subhash Misra]
B
R. K. மிஸ்ரா [R. K. Mishra]
C
நவ்ரங் சைனி [Navrang Saini]
D
நந்தன் செளகான் [Nandan Chauhan]
Question 2 Explanation: 
1984–ல் உத்தரப்பிரதேசத்தில் IPS அதிகாரியாக பணிபுரிந்த ரஜினிகாந்த் மிஸ்ரா, சஷஸ்த்ரா சீமா பாலின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். செப்.30 அன்று ஓய்வுபெறும் அர்ச்சனா ராமசுந்தரத்தை தொடர்ந்து இவர் பதவியேற்கவுள்ளார். இந்த முடிவை அமைச்சரவை நியமனங்கள் குழு முடிவு செய்துள்ளது. 2019 ஆகஸ்ட் 31 வரையோ அல்லது மேலதிக உத்தரவுகள் வரும்வரையோ, மிஸ்ரா இப்பதவியை வகிப்பார். Rajni Kant Mishra, a 1984 batch Uttar Pradesh cadre IPS officer, will be the new chief of the Sashastra Seema Bal (SSB). He will succeed Archana Ramasundaram, who is set to retire on September 30, 2017. The decision was taken by the Appointments Committee of the Cabinet. Mishra will hold the post till his superannuation on August 31, 2019, from the date of assumption of charge of the post or until further orders.
Question 3
எந்த தேதியில் ஐ.நா. சபையின் சர்வதேச அகிம்சை நாள் அனுசரிக்கப்படுகிறது? [The United Nations’ (UN) International Day of Nonviolence is observed on which date?]
A
அக்டோபர் 4 [October 4]
B
அக்டோபர் 1 [October 1]
C
அக்டோபர் 2 [October 2]
D
அக்டோபர் 3 [October 3]
Question 3 Explanation: 
இந்திய விடுதலை இயக்கத்தின் தலைவரும் அகிம்சை தத்துவம் மற்றும் உத்தியின் முன்னோடியுமான மகாத்மா காந்தியின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்.2 அன்று ஐ.நா. சபை சர்வதேச அகிம்சை நாளை அனுசரிக்கிறது. கல்வி மற்றும் பொதுவான விழிப்புணர்வின் மூலம் அகிம்சை பற்றிய செய்தியை பரப்புவது இந்நாளின் நோக்கமாகும். இந்நாள், இந்தியாவில் ‘காந்தி ஜெயந்தி’ என குறிப்பிடப்படுகிறது.   The United Nations’ International Day of Non-Violence is observed every year on October 2 to mark the birthday of Mahatma Gandhi, leader of the Indian independence movement and pioneer of the philosophy and strategy of non-violence. The day is an occasion to disseminate the message of nonviolence, including through education and public awareness. This day is referred to in India as ‘Gandhi Jayanti’.
Question 4
6வது உலக அரசு உச்சிமாநாட்டை நடத்தவுள்ள நாடு எது? [Which country to host the 6th edition of World Government Summit (WGS)?]
A
இஸ்ரேல் [Israel]
B
அமெரிக்கா [United States]
C
இந்தியா [India]
D
ஐக்கிய அரபு அமீரகம் [UAE]
Question 4 Explanation: 
6வது உலக அரசு உச்சிமாநாடு 2018 பிப்ரவரி 11–13 வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெறவுள்ளது. இந்த உச்சிமாநாட்டில் இந்தியா கெளரவ விருந்தினராக இருக்கும். இவ்வுச்சிமாநாடு சிறந்த அனுபவங்களை ஆய்வுசெய்ய மற்றும் பகிர்ந்துகொள்வதற்கான மிகப்பெரும் இயக்கமாகும் மற்றும் எதிர்கால தொழிற்துறையில் ஆர்வங்கொண்ட அரசுகள், நாடுகள், நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை தலைவர்களுக்கு இது முதல் உலக மன்றமாகும். 2017 பிப்ரவரியில் நடைபெற்ற இதன் 5வது மாநாட்டில், 139 நாடுகளிலிருந்து 4,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் 150 பேச்சாளர்கள் 114 அமர்வுகளில் கலந்துகொண்டனர். The sixth edition of the World Government Summit (WHS) is scheduled to be held from February 11th – 13th, 2018 in Dubai, UAE. India will be the guest of honor in this summit. The summit is the largest movement to review and share the best experiences, and the first global forum for governments, countries, organizations and private sector leaders interested in the industry of the future. At its 5th session in February 2017, the World Summit of Governments attracted more than 4,000 participants from 139 countries and 150 speakers attended 114 sessions.
Question 5
எந்த நகரம், 2017–க்கான உலகளாவிய வனவுயிர் திட்ட மாநாட்டை நடத்துகிறது? [Which city is hosting the Global Wildlife Programme (GWP) conference-2017?]
A
புது டெல்லி [New Delhi]
B
உதய்ப்பூர் [Udaipur]
C
இண்டூர் [Indore]
D
கான்பூர் [Kanpur]
Question 5 Explanation: 
அக்.2 அன்று புது டெல்லியில் உலகளாவிய வனவுயிர் திட்ட மாநாடு தொடங்கியது. 19 ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் சட்டவிரோதமான வனவுயிர் வர்த்தகத்தை பற்றி வெளிப்படுத்த உலக வங்கி மற்றும் ஐ. நா மேம்பாட்டுத்திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியா இத்திட்டத்தை நடத்துகிறது. வனவுயிரிகள் பாதுகாப்பிற்கான எதிர்கால திட்ட வரைவை விளக்குவதற்காக, சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 2017–2031ம் ஆண்டுக்கான 3வது தேசிய வனவுயிர் நடவடிக்கைத் திட்டத்தை வெளியிட்டார். இந்த 4 நாள் மாநாடு, சட்டவிரோத வனவுயிர் வேட்டையாடுதலை தடுக்கும் மற்றும் வனவுயிரிகளை காப்பதற்கான மேம்பட்ட நிர்வாகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாகும். The Global Wildlife Programme (GWP) conference has started in New Delhi on October 2, 2017. India is hosting the program jointly with World Bank (WB) and United Nations Development Programme (UNDP) to address illegal wildlife trade across 19 Asian and African countries.   In it, Environment Minister Dr. Harsh Vardhan unveiled the 3rd National Wildlife Action Plan (NWAP) for 2017-2031 to spell out the future road map for wildlife conservation. The 4-day conference will act as a platform for knowledge exchange and coordination on the action taken on the ground to combat illegal poaching of wildlife and improve governance on wildlife conservation.
Question 6
கர்லபட் வனவுயிர் சரணாலயம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? [The Karlapat Wildlife Sanctuary is located in which state?]
A
ஜார்க்கண்ட் [Jharkhand]
B
ஒடிசா [Odisha]
C
மேற்கு வங்கம் [West Bengal]
D
அசாம் [Assam]
Question 6 Explanation: 
கர்லபட் வனவுயிர் சரணாலயம் ஒடிசாவின் காலஹண்டி மாவட்டத்தில் 75 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. The Karlapat Wildlife Sanctuary is located in Kalahandi district of Odisha and covers an area of 75 square kilometers.
Question 7
2017–ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவர்கள் யார்? [Who of the following have won the Nobel Prize in Chemistry 2017?]
A
Jean-Pierre Sauvage, Fraser Stoddart and Ben Feringa
B
Tomas Lindahl and Paul L. Modrich
C
Brian K. Kobilka and Robert J. Lefkowitz
D
Jacques Dubochet, Joachim Frank and Richard Henderson
Question 7 Explanation: 
உயிர் மூலக்கூறுகளை முப்பரிமாண முறையில் துல்லியமாக படம் பிடித்ததற்காக சுவிட்சர்லாந்தின் ஜேக்குஸ் டுபோசெட், அமெரிக்காவின் ஜோச்சிம் பிராங்க், இங்கிலாந்தின் ரிச்சர்ட் ஹெண்டர்சன் ஆகியோருக்கு 2017–ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.   The Nobel Prize in Chemistry 2017 was awarded to Jacques Dubochet, Joachim Frank and Richard Henderson for developing cryo-electron microscopy for the high-resolution structure determination of biomolecules in solution. It’s a method of simplifying and improving the imaging of biomolecules.
Question 8
உலக சுகாதார அமைப்பில் துணை இயக்குநர் பதவியை வகிக்கவுள்ள முதல் இந்தியர் யார்? [Who has become the first Indian to hold deputy director general post at World Health Organization (WHO)?]
A
ரிது கரிதல் [Ritu Karidhal]
B
செளமியா சுவாமிநாதன் [Soumya Swaminathan]
C
மினல் சம்பத் [Minal Sampath]
D
அனுராதா TK [Anuradha TK]
Question 8 Explanation: 
உலக சுகாதார அமைப்பின் துணை இயக்குநர் பதவிக்கு, இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் செளமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவைச்சேர்ந்த ஒருவர், இவ்வமைப்பின் மிகவுயரிய பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இவர், தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைமை இயக்குநராக உள்ளார். இந்தியாவில் பசுமைப்புரட்சியை அறிமுகப்படுத்திய S. சுவாமிநாதனின் மகளான இவர், காச நோய் மற்றும் HIV குறித்த ஆய்விலும், விழிப்புணர்வு ஏற்படுத்தியதிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். இவருடன், பிரிட்டனைச் சேர்ந்த ஜேன் எல்லிசன், பெருநிறுவன இயக்கங்களின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.   Soumya Swaminathan has become the first Indian to hold deputy director general post for Programme at the World Health Organization (WHO). Currently, she is the Director General (DG) of the Indian Council of Medical Research (ICMR).   Swaminathan is a pediatrician and is known for her research in tuberculosis and HIV. She is daughter of M.S. Swaminathan, the acclaimed geneticist and father of green revolution. Beside her, Jane Ellison from Britain has been appointed as a Deputy Director General for Corporate Operations (DDC).
Question 9
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய தலைவர் யார்? [Who is the new chairman of the State Bank of India (SBI)?]
A
ரவீந்திர தோலக்கியா [Ravindra Dholakia]
B
ரஜ்னிஷ் குமார் [Rajnish Kumar]
C
மெளமிதா தத்தா [Moumita Dutta]
D
நந்தினி ஹரிநாத் [Nandini Harinath]
Question 9 Explanation: 
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக்காலம், அக்.6–ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, தற்போது SBI-ன் மேலாண்மை இயக்குநராக பதவியிலுள்ள ரஜ்னிஷ் குமார், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.   Rajnish Kumar, the Managing Director of SBI, has been appointed as the new chairman of the State Bank of India (SBI) for a period of three years. He will succeed Arundhati Bhattacharya, whose tern is going to end on October 6, 2017.
Question 10
2017–ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர் யார்? [Who of the following has won the Nobel Prize for Literature 2017?]
A
ஸ்வெட்லனா அலெக்சிவிச் [Svetlana Alexievich]
B
மோ யன் [Mo Yan]
C
பேட்ரிக் மோடியானோ [Patrick Modiano]
D
கசுவோ இஷிகுரோ [Kazuo Ishiguro]
Question 10 Explanation: 
பிரிட்டிஷ் எழுத்தாளரான கசுவோ இஷிகுரோ, 2017–ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசினை வென்றுள்ளார். கசுவோவின் நாவல்கள் மிகச்சிறந்த மனித உணர்வுகளின் பிம்பங்களாக உள்ளன. அவரின் எழுத்துக்கள் நாம் வாழும் உலகத்துடனான தொடர்பை, மனித கற்பனை உணர்வுகளின் அடி ஆழத்திலிருந்து வெளிப்படுத்துவதாக உள்ளன என்று நோபல் பரிசுக்குழு பெருமைப்படுத்தியுள்ளது. இவருக்கு 9 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த இலக்கியப்பரிசானது அவரின் ஒரு பணிக்கு மட்டுமல்லாமல் வாழ்நாளில் அவர் செய்த மொத்த பணிக்குமாக வழங்கப்படுகிறது. இஷிகுரோ எழுதிய 8 நூல்களும் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது மிகப் பிரபலமான நாவல்களான “The Remains of the Day” மற்றும் “Never Let Me Go” ஆகியவை திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. 1989–ல் “The Remains of the Day” எனும் நூலுக்காக புக்கர் பரிசை இவர் வென்றுள்ளார். மேலும் 1995–ல் ஆடர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயரை பெற்றுள்ளார்.   British writer Kazuo Ishiguro has won the 2017 Nobel Prize for Literature. The novelist was praised by the Swedish Academy as a writer “who, in novels of great emotional force, has uncovered the abyss beneath our illusory sense of connection with the world”.   The prize of 9 million Swedish kronor will be awarded to him. The literature prize is given for a lifetime of writing rather than for a single work. Ishiguro has written eight books, which have been translated into over 40   His most famous novels “The Remains of the Day” and “Never Let Me Go” were adapted into highly acclaimed films. He won the Booker Prize in 1989 for The Remains of the Day and made an Order of the British Empire (OBE) in 1995.
Question 11
பூஜா கடியன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவராவார்? [Pooja Kadian is associated with which sports?]
A
மேசைப்பந்தாட்டம் [Table Tennis]
B
இறகுப்பந்தாட்டம் [Badminton]
C
குத்துச்சண்டை [Boxing]
D
உஷு [Wushu]
Question 11 Explanation: 
அக்.5 அன்று ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற சர்வதேச உஷு இறுதிப் போட்டியில், 75 கிலோ மகளிர் சாண்டா எடைப்பிரிவில் இந்தியாவின் பூஜா கடியன், ரஷ்யாவின் எவ்ஜெனியா ஸ்டெப்பனோவாவை வீழ்த்தி இந்தியாவுக்கு முதன்முறையாக தங்கப்பதக்கத்தை வென்றுகொடுத்துள்ளார். ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் ரமேஷ்சந்திர சிங் மொய்ரங்தம், பானு பிரதாப் சிங், ரஜிந்தர் சிங் மற்றும் அருண்பமா தேவி கெய்ஷம் ஆகியோர் வெண்கலப்பதக்கங்களை வென்றனர். உஷு என்பது குங்க்ஃபூ போன்றதொரு சீன தற்காப்புக்கலையாகும். இதனை சர்வதேச உஷு கூட்டமைப்பு நடத்துகிறது. Pooja Kadian has created history by becoming the first Indian to clinch a gold medal at Wushu World Championships in the 75 kilogram women Sanda category after defeating Evgeniya Stepanova in the final at Kazan on October 5, 2017.   Apart from her, four other members of the Indian contingent – Rameshchandra Singh Moirangthem, Bhanu Pratap Singh, Rajinder Singh, and Arunpama Devi Keisham – won bronze medals in the tournament held at Kazan, Russia. Wushu is one of the two umbrella words used to describe Chinese Martial arts, the other one being Kung-Fu. It is also a full contact sport and is governed by the International Wushu Federation.
Question 12
தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார்? [Who is the new Governor of Tamil Nadu?]
A
கங்கா பிரசாத் [Ganga Prasad]
B
இந்திரா பானர்ஜி [Indira Banerjee]
C
பன்வாரிலால் புரோஹித் [Banwarilal Purohit]
D
கிரிஜா வைத்தியநாதன் [Girija Vaidyanathan]
Question 12 Explanation: 
மகாராஷ்டிர மாநிலம் விதார்பா மாவட்டத்தின் மூத்த அரசியல் தலைவரான பன்வாரிலால் புரோஹித், அக்.6 அன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். தமிழகத்தின் 20வது ஆளுநராகப் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றுள்ளார். அவருக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் மற்றும் இரகசியக்காப்புப் பிரமாணம் செய்துவைத்தார்.   Banwarilal Purohit, a veteran political leader from Vidarbha district of Maharashtra, has been sworn-in as the new Governor of Tamil Nadu in a function held at Raj Bhavan in Chennai on October 6, 2017. Mr. Purohit was sworn in as the State’s 20th Governor. The Madras High Court Chief Justice Indira Banerjee administered the oath of office and secrecy to him.
Question 13
தரோஜி தேன்கரடி சரணாலயம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? [The Daroji Sloth Bear Sanctuary is located in which state?]
A
மகாராஷ்டிரா [Maharashtra]
B
கர்நாடகா [Karnataka]
C
சத்தீஸ்கர் [Chhattisgarh]
D
கேரளா [Kerala]
Question 13 Explanation: 
தரோஜி தேன்கரடி சரணாலயம் கர்நாடகத்தின் பல்லாரி மாவட்டத்தில், 82.72 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இது இந்திய தேன்கரடிக்கு புகழ்பெற்ற சரணாலயமாகும். The Daroji Sloth Bear Sanctuary is located in Ballari district in Karnataka and covers an area of 82.72 square kilometers. The sanctuary’s flagship species is the Indian sloth bear (Melursus ursinus).
Question 14
அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருதைப்பெறும் முதல் இந்தியர் யார்? [Who has become the first person from India to win Anna Politkovskaya Award?]
A
ராஜ்தேவ் ரஞ்சன் [Rajdev Ranjan]
B
கெளரி லங்கேஷ் [Gauri Lankesh]
C
தருண் குமார் ஆச்சார்யா [Tarun Kumar Acharya]
D
M.V.N. ஷங்கர் [M.V.N. Shankar]
Question 14 Explanation: 
அரசியல் ஆர்வலரும் ரஷ்ய நிருபருமான அன்னா பொலிட்கோவ்ஸ்கயாவின் நினைவாக உலகளவில் வழங்கப்படும் இவ்விருது செப்.5 அன்று பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்ட கன்னட பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷுக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவைச்சேர்ந்த ஒருவர் இவ்விருதை பெறுவது இதுவே முதல்முறையாகும். இவ்விருதை பாகிஸ்தான் சமூக செயற்பாட்டாளர் குலாலாய் இஸ்மாயில் உடன் கெளரி லங்கேஷுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய புலனாய்வு செய்தியாளரான அன்னா பொலிட்கோவ்ஸ்கயா படுகொலையின் 11வது ஆண்டு நிறைவையொட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் செச்சன்யாவில், குறிப்பாக ஊழல் மற்றும் உரிமை மீறல்கள் பற்றி அம்பலப்படுத்தினார். லண்டனில் உள்ள ரீச் ஆல் வுமன் (ரா இன் வார்) என்கிற தொண்டு நிறுவனம் இவ்விருதை வழங்குகிறது.   Kannada journalist Gauri Lankesh, who was shot dead in Bengaluru on September 5, 2017, has been awarded a prestigious global Anna Politkovskaya Award, which is given in the memory of a slain Russian reporter and political activist. With this, she became the first person from India to receive the honor.   Lankesh shared the award with Gulalai Ismail, a Pakistani peace activist who has faced death threats for speaking out against the Taliban. The award marks the 11th anniversary of the killing of Anna Politkovskaya, a Russian investigative reporter and activist who uncovered state corruption and rights abuses, especially in Chechnya. The award is presented annually by Reach All Women in War (the RAW in WAR organization) and honors women human rights defenders from around the world.
Question 15
போரி வனவுயிர் சரணாலயம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? [The Bori Wildlife Sanctuary is located in which state?]
A
மகாராஷ்டிரா [Maharashtra]
B
மத்தியப்பிரதேசம் [Madhya Pradesh]
C
சத்தீஸ்கர் [Chhattisgarh]
D
கேரளா [Kerala]
Question 15 Explanation: 
போரி வனவுயிர் சரணாலயம் மத்தியப்பிரதேசத்தின் ஹோஷங்காபாத் மாவட்டத்தில், 518 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இது மேற்கு மற்றும் கிழக்கிந்திய காடுகளுக்கிடையில் அமைந்துள்ள ஒரு முக்கிய மண்டலமாகும். The Bori Wildlife Sanctuary is located in in Hoshangabad District of Madhya Pradesh and covers an area of 518 square kilometers. It is an important transition zone between the forests of western and eastern India.
Question 16
2017 உலக U-16 ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற இந்திய வீராங்கனை யார்? [Which Indian sportsperson has clinched the World Open U-16 Snooker Championship-2017?]
A
அரண்ட்சா சஞ்சிஸ் [Arantxa Sanchis]
B
கீர்த்தனா பாண்டியன் [Keerthana Pandian]
C
அனுபமா ராமச்சந்திரன் [Anupama Ramachandran]
D
அனுஜா தாக்கூர் [Anuja Thakur]
Question 16 Explanation: 
உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி அக்.8 அன்று ரஷ்யாவின் செயி்ன்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்தது. இதில் இந்தியாவின் சார்பில் U-16 பிரிவில், அனுபமா 3-1 என்ற செட் கணக்கில் தனது சகநாட்டு வீராங்கனை கீர்த்தனாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். இப்போட்டிகளை ரஷ்ய பில்லியர்ட்ஸ் கூட்டமைப்பு நடத்துகிறது. வேல்சின் டைலன் எமிரே சிறுவர் பிரிவில் பட்டத்தை வென்றார். உலகெங்கிலுமிருந்து மொத்தம் 73 வீரர்கள் இந்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றனர். Anupama Ramachandran from India has clinched the World Open Under-16 Snooker Championship title at St. Petersburg in Russia on October 8, 2017. In the girl’s category, second seed Anupama knocked out her compatriot and top seed Keerthana Pandian in the final by 3-1 to become World Open Under-16 champion. Federation of Billiards Sports of Russia hosted this first ever World Open championships for Under-16 boys and girls. Dylan Emery of Wales has claimed the title in the boy’s category. Total 73 cueists from across the world have participated in this championship.
Question 17
பல்கேரிய சர்வதேச வருங்கால தொடர் டென்னிஸ் போட்டியில், 2017 ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்? [Who has won the 2017 men singles title at the Bulgarian International Future Series Tennis tournament?]
A
RMV குருசைதத் [RMV Gurusaidutt]
B
முகமது அலி குர்த் [Muhammed Ali Kurt]
C
ராம்குமார் ராமநாதன் [Ramkumar Ramanathan]
D
சுமித் நாகல் [Sumit Nagal]
Question 17 Explanation: 
காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் வெண்கலம் வென்ற RMV குருசைதத், அக்.9 அன்று நடைபெற்ற பல்கேரிய சர்வதேச வருங்கால தொடர் டென்னிஸ் போட்டியில், 2017 ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். 2016 ஜூலையில் அமெரிக்க ஓபன் தொடரிலிருந்து காயம் காரணமாக விளையாடாமலிருந்த இவர், இறுதிப்போட்டியில் முகமது அலி குர்த்தை 21- 17, 21-16 என்ற கணக்கில் தோற்கடித்தார்.   Commonwealth Games bronze medalist RMV Gurusaidutt has clinched the men’s singles title at the Bulgarian International Future Series tournament on October 9, 2017. Gurusaidutt, who has been out of action since the US Open in July 2016 due to an injury, defeated Muhammed Ali Kurt in the final by 21- 17, 21-16.
Question 18
எந்த இந்தியருக்கு, ஜெர்மனியின் மிகவுயரிய Cross of the Order of Meritவிருது வழங்கப்பட்டுளளது? [Which Indian personality has been conferred the ‘Cross of the Order of Merit’, the highest civilian honor of Germany?]
A
ஆதித்யா மங்கள் [Aditya Mangal]
B
ராஜேஷ் நாத் [Rajesh Nath]
C
தீபக் செளகான் [Deepak Chauhan]
D
மிலிந்த் குப்தா [Milind Gupta]
Question 18 Explanation: 
ஜெர்மனிக்கு தங்கள் சேவைகளை வழங்கும் தனி நபருக்கு வழங்கப்படும் “Cross of the Order of Merit” விருது VMDA இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 1951–ல் நிர்மாணிக்கப்பட்ட இவ்விருது ‘Bundesverdienstkreuz’ அல்லது ஃபெடரல் கிராஸ் ஆஃப் மெரிட் எனவும் அழைக்கப்படுகிறது. இது பொருளாதாரம், சமூகம், அரசியலில் சாதனைபுரிந்த ஜெர்மனியர்கள் மற்றும் அயல்நாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஒரே ஜெர்மானிய கெளரவ விருதாகும். Rajesh Nath, the managing director of VDMA India, has been conferred the ‘Cross of the Order of Merit’, the highest civilian honor awarded to individuals for their services to Germany. The award, also known as Bundesverdienstkreuz or Federal Cross of Merit was instituted in 1951 and is Germany’s only honor that is awarded to both Germans and foreigners for achievements in the economic, social, political or intellectual realms.
Question 19
2017 சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்றவர் யார்? [Who has won the 2017 China Open Tennis tournament?]
A
ரோஜர் ஃபெடரர் [Roger Federer]
B
நிக் கைர்கியோஸ் [Nick Kyrgios]
C
ரஃபேல் நடால் [Rafael Nadal]
D
நோவக் ஜோகோவிச் [Novak Djokovic]
Question 19 Explanation: 
சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில், ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6–2, 6–1 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோசை தோற்கடித்து, சீன ஓபன் பட்டத்தை 2–வது முறையாக வென்றுள்ளார். இது இவ்வாண்டின் இவரது 6வது ATP பட்டமாகும். இந்த 6 கோப்பைகளில் பிரெஞ்சு ஒபனில் பெற்ற 10வது பட்டமும் அமெரிக்க ஒபனில் பெற்ற 3வது பட்டமும் அடங்கும்.   Rafael Nadal, a Spanish professional tennis player, has won the 2017 China Open Tennis tournament by defeating Nick Kyrgios in the final by 6-2, 6-1 in Beijing, China. It is his 6th ATP title of the year. Nadal’s six trophies this year include a record 10th title at the French Open and a third at the US Open.
Question 20
2017–ம் ஆண்டின் சர்வதேச யோகா மாநாட்டுக்கான மையக்கருத்து என்ன? [What is the theme of the 2017 International Conference on Yoga?]
A
Yoga for life
B
Yoga for holistic health
C
Yoga for wellness
D
Yoga for body and beyond
Question 20 Explanation: 
அக்.10 அன்று 3வது சர்வதேச யோகா மாநாட்டைக் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு புது தில்லியில் தொடங்கிவைத்தார். “உடன் நலனுக்காக யோகா” என்பது இந்த ஆண்டின் யோகா மாநாட்டிற்கான மையக்கருத்தாகும். 2 நாள் நடைபெறும் இம்மாநாட்டை, ஜூன் 21 அன்று கொண்டாடப்படும் சர்வதேச யோகா நாளின் ஆண்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது, மன அழுத்தத்தைக் குறைப்பது, மகளிர் சம்பந்தமான நோய்கள் மற்றும் வலி நிவாரணம், ஒருங்கிணைந்த யோகா மருத்துவம் ஆகிய துறைகளின் நிபுணர்கள் கலந்துகொண்டு உரிய ஆலோசனைகளை வழங்குகின்றனர். 44 நாடுகளிலிருந்து 500–க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு ஆயுஷ், ஆங்கில மருத்துவப்பயிற்சி பெறுபவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கவுள்ளனர்.   Venkaiah Naidu, the Vice President of India, has inaugurated the 3rd International Conference on Yoga in New Delhi with theme “Yoga for Wellness” on October 10, 2017. The 2-day conference is being organized by the Ministry of AYUSH as a part of yearlong events being organized to celebrate 21st June as International Day of Yoga.   The conference consists of seven technical sessions and a panel discussion on different aspects of Yoga and Wellness including recent research trends, Integrated medicine, non-communicable diseases, mental health, women health, cancer, pain management and policy making. Around 500 delegates, including those from 44 countries are attending the conference, which will provide a common platform for AYUSH and allopathy practitioners, researchers, academicians, and policy makers and students.
Question 21
அமெரிக்க–இந்திய வணிகசபையின் தலைவராக நியமிக்கப்படவுள்ளவர் யார்? [Who will head the US-India Business Council (USIBC)?]
A
S. ஜெய்சங்கர் [S. Jaishankar]
B
நிஷா பிஸ்வால் [Nisha Biswal]
C
ரிச்சர்ட் வெர்மா [Richard Verma]
D
நிகில் சோப்ரா [Nikhil Chopra]
Question 21 Explanation: 
இந்தியாவில் வணிகம் செய்ய ஆர்வங்கொண்ட அமெரிக்க நிறுவனங்களின் ஆற்றல் மிகுந்த ஆலோசனைக்குழுவான அமெரிக்க–இந்திய வணிகசபையின் தலைவராக நிஷா பிஸ்வால் நியமிக்கப்படவுள்ளார். நவ.1 அன்று அவர் பதவியேற்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க–இந்திய வணிகசபை என்பது வாஷிங்டனில் மெய்யான அரசியல் ஆற்றலைக் கையாளும் அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் ஒரு பகுதியாகும்.   Nisha Biswal, a former state department official, will head the US-India Business Council (USIBC), a powerful advocacy group of US companies with business interest in India. She is expected to join on November 1, 2017. The USIBC is a part of the US Chamber of Commerce, the largest lobbying organization in the country that wields real political power in Washington.
Question 22
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் புதிய தலைவர் யார்? [Who is the new chairman of the Film and Television Institute of India (FTII)?]  
A
அனுபம் கேர் [Anupam Kher]
B
ராகினி ஷர்மா [Ragini Sharma]
C
ஜக்திஷ் பக்வதி [Jagdish Bhagwati]
D
ரிஷி கபூர் [Rishi Kapoor]
Question 22 Explanation: 
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் கஜேந்திர சௌஹானின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைவதை முன்னிட்டு, இந்நிறுவனத்தின் புதிய தலைவராக திரைப்பட நடிகர் அனுபம் கேர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை சுமார் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இவரது நடிப்புத் திறமையைப் பாராட்டி, இவருக்கு பத்மஸ்ரீ (2004) , பத்மபூஷண் (2016) ஆகிய விருதுகளை வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது. இவர் பெண்ட் இட் லைக் பெக்காம், லஸ்ட், காஷன் மற்றும் 2013–ல் ஆஸ்கர் வென்ற டேவிட் ஓ ரஸ்ஸலின் சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்கிலும் நடித்துள்ளார்.   Film actor Anupam Kher has been appointed as the new chairman of the Film and Television Institute of India (FTII). He succeeded Gajendra Chauhan. Kher has worked in more than 500 films and over 100 plays in last three decades. He was conferred the Padma Shri in 2004 and the Padma Bhushan in 2016 by the Indian government.   He has also been a part of international projects such as Bend It Like Beckham, Lust, Caution, and David O Russell’s 2013 Oscar-winning Silver Linings Playbook
Question 23
எந்த நகரம், மாநில ஆளுநர்களின் 48வது மாநாட்டை நடத்துகிறது? [Which city is hosting the 48th Conference of Governors?]  
A
புது டெல்லி [New Delhi]
B
அகமதாபாத் [Ahmedabad]
C
கொச்சின் [Cochin]
D
கொல்கத்தா [Kolkata]
Question 23 Explanation: 
அக்.12 அன்று புது டெல்லியில், 48-வது ஆளுநர்கள் மாநாடு தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில், 27 மாநில ஆளுநர்களும் யூனியன் பிரதேசங்களின் 3 துணைநிலை ஆளுநர்களும் கலந்துகொள்கின்றனர். மேலும், பிரதமர் மோடி மற்றும் துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோரும் இதில் உரையாற்றுகின்றனர். மாநாட்டின் முதல் அமர்வில், ‘புதிய இந்தியா 2022’–க்கான சாத்தியக்கூறுகள் குறித்து ‘நிதி ஆயோக்’ வழங்கும் கருத்தாக்கம் இடம்பெறுகிறது. 2வது அமர்வில், ‘மாநிலங்களில் உயர்கல்வி’, ‘திறன் மேம்பாடு’ உள்ளிட்ட அம்சங்கள்குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அக்.13 அன்று நடைபெறவிருக்கும் 3வது அமர்வில், மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் தொடர்பான எந்தவொரு பிரச்சனையை பற்றியும் ஆளுநர்கள் சுருக்கமான கருத்துக்களை தெரிவிப்பார்கள். இறுதி அமர்வில் ஒரு சுருக்கமான அறிக்கையை அந்தந்த ஆளுநர்களால் சமர்ப்பிக்கப்படும்.   The 48th Conference of Governors has started at Rashtrapati Bhavan in New Delhi on October 12, 2017. The 2-day conference is being attended by 27 Governors and 3 Lt. Governors of States and Union Territories. The two-day Conference will deliberate on distinct agenda items in different sessions.   The theme of the opening session was ‘New India-2022’. The second session is on the subjects of ‘Higher Education in States’ and ‘Skill Development and Entrepreneurship to Make Youth Employable’.   In the third session, to take place on October 13, 2017, Governors will make brief remarks on any special issues pertaining to their respective States/Union Territories. In the concluding session, a brief report on the deliberations will be presented by the respective conveners.
Question 24
கூட்டு இராணுவப்பயிற்சியான மித்ரா சக்தி 2017, இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே தொடங்கியுள்ளது? [The joint training exercise “Mitra Shakti 2017” has started between India and which country?
A
ஜப்பான் [Japan]
B
தென்கொரியா [South Korea]
C
இலங்கை [Sri Lanka]
D
மியான்மர் [Myanmar]
Question 24 Explanation: 
மகாராஷ்டிராவின் புனேவிலுள்ள ஹூந்த் இராணுவ நிலையத்தில், இந்திய மற்றும் இலங்கை படையினர் இணைந்து நடத்திவரும் 5வது கூட்டு இராணுவப்பயிற்சியான “மித்ரா சக்தி 2017” ஆரம்பாகியுள்ளது. இந்தப்பயிற்சிகளின் மூலம் இருநாட்டு படையினர் மத்தியிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ விதிமுறைகளை கட்டியெழுப்பவும், இரு நாடுகளுக்கிடையிலான இராணுவ அளவிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படும். அடுத்த 14 நாட்களுக்கு (அக்.26 வரை) இந்தப் பயிற்சி நடைபெறும்.   The 5th India-Sri Lanka joint training exercise “Mitra Shakti 2017” has started at Aundh Military Station in Pune, Maharashtra. The exercise is based on Counter Terrorist Operations (CTO) and an Infantry company from both the countries is participating in the same. It will be conducted for next 14 days up to 26 Oct 17.
Question 25
17வது AFC ஆசியன் கோப்பை–2019ஐ நடத்தவுள்ள நாடு எது? [Which country to host the 17th edition of the AFC Asian Cup – 2019?
A
ஐக்கிய அரபு அமீரகம் [UAE]
B
இந்தியா [India]
C
இஸ்ரேல் [Israel]
D
சீனா [China]
Question 25 Explanation: 
ஆசிய கோப்பை கால்பந்துதொடர் அடுத்தாண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இது ஆசிய கால்பந்து கூட்டமைப்பால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆசிய நாடுகளின் சர்வதேச கால்பந்து சாம்பியன்ஷிப்பாகும். அக்.11 அன்று ஸ்ரீ கந்தீரவா அரங்கத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் மக்காவ் அணியை வெற்றிகொண்டது. இந்திய அணி ஆசிய கால்பந்து போட்டிக்கு தகுதிபெறுவது இது 4வது முறையாகும். முன்னதாக கடந்த 1964, 1984 மற்றும் 2011-ல் நடைபெற்ற போட்டிகளுக்கு இந்திய அணி தகுதிபெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.   The 2019 AFC Asian Cup football tournament will be hosted by United Arab Emirates (UAE). It is the quadrennial international men’s football championship of Asia organized by the Asian Football Confederation (AFC). Recently, India thrashed Macau 4-1 to qualify for the 2019 football tournament at Sri Kantirava Stadium in Bangalore on Oct.11. This is the fourth time that India has qualified for the Asian Cup. The last time they qualified was six years ago when they won the AFC Challenge Cup to book their tickets to the 2011 AFC Asian Cup.
Question 26
MCC உலக கிரிக்கெட் குழுவில் இணையும் முதல் வங்கதேச கிரிக்கெட் வீரர் யார்? [Who has become the 1st cricketer from Bangladesh to be inducted in MCC World Cricket Committee?
A
மெஹெடி ஹசன் மிராஸ் [Mehedi Hasan Miraz]
B
செளமியா சர்க்கார் [Soumya Sarkar]
C
ஷாகிப் அல் ஹசன் [Shakib Al Hasan]
D
நசிர் ஹொசைன் [Nasir Hossain]
Question 26 Explanation: 
மைக் கேட்டிங் தலைமையிலான MCC உலக கிரிக்கெட் குழுவில் இணையும் முதல் வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் ஆவார். 51 டெஸ்ட் போட்டிகளிலும், 177 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடி, 2000–ம் ஆண்டில் அவர் டெஸ்ட் தகுதிபெற்றபிறகு வங்கதேசத்தின் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவரைத்தவிர, சுசீ பாட்ஸ், இயன் பிஷப் மற்றும் குமார் தர்மசேன ஆகியோரும் இக்குழுவில் இணைந்துள்ளனர்.   The standing committee has also decided to closely look at India’s “Relations with Myanmar and the Rohingya situation”, India’s “Act East Policy, including BIMSTEC”, the “Situation in the Far East: Japan and North Korea”, India’s engagement with SAARC countries, global terrorism and voting rights for NRIs.
Question 27
எந்த நகரத்தில், 3வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நடைபெறுகிறது? [Which city is hosting the 3rd India International Science Festival (IISF-2017)?]
A
லக்னோ [Lucknow]
B
புது டெல்லி [New Delhi]
C
கவுகாத்தி [Guwahati]
D
சென்னை [Chennai]
Question 27 Explanation: 
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை சார்பில் நடத்தப்படும் 4 நாள் இந்திய சர்வதேச அறிவியல் விழாவை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கிவைத்தார். இந்த 4 நாள் விழாவின் முக்கிய குறிக்கோள், மக்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதும், கடந்த ஆண்டுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் பங்களிப்பை காட்சிப்படுத்துவதுமாகும். இளம் விஞ்ஞானிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பன்னாட்டு பிரதிநிதிகள் உட்பட சுமார் 3000 பேர் இந்த விழாவில் பங்கேற்றனர்.   The 3rd edition of the India International Science Festival (IISF-2017) has inaugurated by Union Science & Technology and Earth Sciences Minister Dr. Harsh Vardhan in Chennai, Tamil Nadu on October 13, 2017. The fest is being jointly conducted by the Ministry of Science and Technology, Ministry of Earth Sciences. The prime objective of the 4-day festival is to instill scientific temper among the masses and showcasing India’s contribution in the field of S&T over the years. Approx. 3000 people including young scientists, students, teaching faculties and international delegates are participating in the fest.
Question 28
2017–ம் ஆண்டின் மாத்ருபூமி இலக்கிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்? [Who has been chosen for the 2017 Mathrubhumi Literary award (MLA)?]
A
M லீலாவதி [M Leelavathy]
B
M K சானு [M K Sanu]
C
விஷ்ணு நாராயணன் [Vishnu Narayanan]
D
C ராதாகிருஷ்ணன் [C Radhakrishnan]
Question 28 Explanation: 
புகழ்பெற்ற விமர்சகர், வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் மற்றும் பேச்சாளரான M K சானுவின் மலையாள இலக்கியப் பங்களிப்பை அங்கீகரிக்கும் பொருட்டு, 2017–ம் ஆண்டின் மாத்ருபூமி இலக்கிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்விருது 2 லட்சம் ரொக்கம், பாராட்டுச்சான்றிதழ் மற்றும் ஒரு நினைவுப்பரிசை உள்ளடக்கியது. இவர் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் நிரந்தர உறுப்பினராவார். இவர் எர்ணாகுளத்தில் உள்ள முலந்துருத்தி கிராமத்திலிருக்கும், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மித்ரம் பள்ளியின் நிறுவனர்களுள் ஒருராவார்.   M K Sanu, the well-known critic, biographer and orator, has been chosen for the Mathrubhumi Literary Award for 2017 in recognition of his rich contribution to the Malayalam literature. The award carries a cash prize of Rs. 2 lakh, a citation and a statuette. Sanu is a permanent member of International body for Human rights. He is also the founding member of Mithram, School for Mentally Handicapped, at Mulanthuruthy village in Ernakulam District, Kerala.
Question 29
யுனெஸ்கோவின் புதிய தலைமை இயக்குநர் யார்? [Who will be the new Director-General (DG) of UNESCO?]
A
அட்ரே அசுலே [Audrey Azoulay]
B
ஹமாத் கவாரி [Hamad Kawari]
C
ஃபிளியூர் பெல்லரின் [Fleur Pellerin]
D
இரினா பொகொவா [Irina Bokova]
Question 29 Explanation: 
யுனெஸ்கோ அமைப்பின் புதிய தலைவராக பிரான்சின் முன்னாள் கலாச்சாரத் துறையமைச்சர் அட்ரே அசுலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்குமுன் பல்கேரியாவின் இரினா பொகொவா யுனெஸ்கோவின் தலைவராக இருந்தார். எசூரியாவைச் சேர்ந்த மொராக்கோ யூதக் குடும்பத்தினரான அசுலே, பாரிசில் பிறந்தார் மற்றும் மொராக்கோவின் ஆறாம் முகமது அரசரின் தற்போதைய ஆலோசகரான ஆன்ட்ரே அசுலேவின் மகளாவார்.   Audrey Azoulay, a French civil servant and politician, has been elected to become the new Director-General (DG) of United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO). She will succeed outgoing DG Irina Bokova of Bulgaria. Azoulay was born in Paris to a Moroccan Jewish family from Essaouira, and is the daughter of Andre Azoulay, who is current adviser to king Mohammed VI of Morocco.
Question 30
எந்த நகரம், 2017-க்கான சர்வதேச பொம்மலாட்ட விழாவை நடத்துகிறது? [Which city to host International Puppet Festival (IPF-2017)?]
A
கொல்கத்தா [Kolkata]
B
புது டெல்லி [New Delhi]
C
கொச்சி [Kochi]
D
லக்னோ [Lucknow]
Question 30 Explanation: 
2017-க்கான சர்வதேச பொம்மலாட்ட விழாவானது அக்.26-31 வரை மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிலுள்ள மொஹர்கஞ்சில் நடைபெறவுள்ளது. இவ்விழாவின் நோக்கம், பொம்மலாட்டத்துடனான உணர்வுகளை மீட்டுருவாக்கம் செய்வதாகும். இங்கிலாந்து, ஜெர்மனி, பெரு, போர்த்துகல், இத்தாலி, லித்துவேனியா, பிரேசில், சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச்சேர்ந்த கலைஞர்கள் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளனர். மேற்கு வங்க சுற்றுலா மற்றும் உள்துறையின் முதன்மை செயலரான அத்ரி பட்டாச்சார்யா இவ்விழாவினை தொடங்கிவைப்பார்.   The 2017 International Puppet Festival (IPF) will be held at Mohorkunj in Kolkata, West Bengal from October 26 to 31. The purpose of the fest is to regenerate the emotions attached to puppetry. Artists from the UK, Germany, Peru, Portugal, Italy, Lithuania, Brazil, Singapore and India would be participating in the festival. The fest will be inaugurated by the West Bengal principal secretary Tourism and Home Affairs Atri Bhattacharya.
Question 31
எந்த நாடு, 2017–க்கான 6வது வருடாந்திர LNG உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் மாநாட்டை நடத்துகிறது? [Which country is hosting the 6th annual LNG Producers Consumer Conference – 2017?]
A
ஜப்பான் [Japan]
B
இந்தியா [India]
C
தென்கொரியா [South Korea]
D
சீனா [China]
Question 31 Explanation: 
அக்.16-18 வரை ஜப்பானின் டோக்கியோவில், 2017–க்கான 6வது வருடாந்திர LNG உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் மாநாடு நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து மத்திய பெட்ரோலியம், இயற்கைஎரிவாயு, திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொள்கிறார். கத்தார், நைஜீரியா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன. இந்த மாநாட்டையொட்டி ஜப்பான் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹிரோஷிகே செகோவை தர்மேந்திர பிரதான் சந்தித்து பேசவுள்ளார். இரு நாடுகளுக்கிடையே பெட்ரோலியதுறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.   The 6th annual LNG Producers Consumer Conference will be held in Tokyo, Japan from Oct 16-18, 2017. From India, Minister of Petroleum & Natural Gas and Skill Development & Entrepreneurship Dharmendra Pradhan will participate in the conference to enhance the bilateral engagements in the Oil and Gas sectors within the overall framework of India-Japan Energy Dialogue.   The visit also aims to enhance cooperation in establishing a transparent, efficient, truly global and balanced Liquefied Natural Gas (LNG) market. The conference is a global annual dialogue to promote active dialogue among LNG producers, consumers and other stakeholders with a view to deepening shared understandings of market trends and to develop a global LNG market. Energy Ministers from Qatar, Nigeria, Bangladesh, Japan and other leading hydrocarbon experts will participate in the Conference.
Question 32
2017 ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் வென்றவர் யார்? [Who has won the 2017 Shanghai Masters tennis tournament?]
A
ஜூன் மார்டின் டெல் போட்ரோ [Juan Martin del Potro]
B
ரோஜர் ஃபெடரர் [Roger Federer]
C
டொமினிக் தியம் [Dominic Thiem]
D
ரஃபேல் நடால் [Rafael Nadal]
Question 32 Explanation: 
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 2017 ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிச்சுற்றில் உலகின் 2-ம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரர் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலை வீழ்த்தினார். இது இவரின் 94-வது பட்டமாகும். இதன்மூலம் தரவரிசையில் ரஃபேலுக்கு மிக அருகில் வந்துள்ளார் ஃபெடரர்.   Roger Federer, a Swiss professional tennis player, has won the 2017 Shanghai Rolex Masters tennis tournament by defeating his old rival Rafael Nadal in straight sets 6-4, 6-3 at Qizhong Forest Sports City Arena in Shanghai, China. It was a 94th title for the Swiss legend, drawing him level with the great Ivan Lendl. Federer is now close to world number one Nadal in terms of rankings points.
Question 33
சாகித் சந்ரசேகர் ஆசாத் பறவைகள் சரணாலயம், எம்மாநிலத்தில் அமைந்துள்ளது? [The Shahid Chandra Shekhar Azad Bird Sanctuary is located in which state?]
A
ஒடிசா [Odisha]
B
பஞ்சாப் [Punjab]
C
உத்தரப்பிரதேசம் [Uttar Pradesh]
D
மணிப்பூர் [Manipur]
Question 33 Explanation: 
சாகித் சந்ரசேகர் ஆசாத் பறவைகள் சரணாலயம் உத்தரப்பிரதேசத்தின் கான்பூர்-லக்னோ நெடுஞ்சாலையிலுள்ள உன்னோ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது நவாப்கஞ்ச் பறவைகள் சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. The Shahid Chandra Shekhar Azad Bird Sanctuary (SCSABS) is located in Unnao district on the Kanpur-Lucknow highway in Uttar Pradesh. It is also known as Nawabganj Bird Sanctuary.
Question 34
எந்த நகரத்தில், இந்தியாவின் முதல் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் அமைந்துள்ளது? [India’s first All India Institute of Ayurveda has come up in which city?]  
A
பாட்னா [Patna]
B
புது டெல்லி [New Delhi]
C
சூரத் [Surat]
D
ஜெய்ப்பூர் [Jaipur]
Question 34 Explanation: 
இந்தியாவின் முதல் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் பிரதமர் மோடியால் புது டெல்லியில் உள்ள சரிதா விகாரில், 2வது தேசிய ஆயுர்வேத நாளன்று (அக்.17) திறந்துவைக்கப்பட்டது. இங்கு ஆயுர்வேத மருத்துவமனையும் கல்விக்கூடங்களும் இருக்கும். எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தைப் போலவே, முதல்முறையாக இந்த அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனம் உருவாகியுள்ளது. இங்கு பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை முறையும், நவீன மருத்துவத் தொழில்நுட்பமும் ஒருங்கிணைக்கப்படும்.   India’s first-ever All India Institute of Ayurveda (AIIA) has been inaugurated by Prime Minister Narendra Modi at Sarita Vihar in New Delhi on the occasion of 2nd National Ayurveda Day i.e. on Oct.17.   It has been set up along the lines of All India Institute of Medical Sciences (AIIMS). The purpose of AIIA is to integrate traditional Ayurveda with new diagnostic tools and technology. It will offer postgraduate and doctoral courses in various disciplines of Ayurveda.
Question 35
  இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்குமிடையே முதல் சர்வதேச முப்படை சேவைகள் கூட்டுப்பயிற்சியான “INDRA-2017நடைபெறவுள்ளது? [The first-ever International tri services joint exercise “INDRA – 2017” will be conducted between India and which country?]  
A
ரஷ்யா [Russia]
B
ஜப்பான் [Japan]
C
அமெரிக்கா [United States]
D
தென்கொரியா [South Korea]
Question 35 Explanation: 
ரஷ்யாவின் கிழக்கு இராணுவ மாவட்டத்தில் இந்திய மற்றும் ரஷ்ய ஆயுதப் படைகளிடையே அக்.19-29 வரை முதல் சர்வதேச முப்படை சேவைகள் கூட்டுப்பயிற்சியான “INDRA-2017” நடைபெறவுள்ளது. இது பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துகிறது, உள்ளியக்கம் மற்றும் ஆயுதப்படைகளுக்கிடையே சிறந்த பழக்க முறைகளை பகிர்ந்துகொள்ள உதவுகிறது. இது இந்திய-ரஷ்ய பாதுகாப்பு ஒத்துழைப்பு வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். கடந்த 9 முறைகளிலும் இது ஒருதரப்பு பயிற்சியாகவே நடத்தப்பட்டது. தற்போது 2017-ல், ஆயுதப்படைகளான (இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை) ஆகிய 3 சேவைகளையும் உள்ளடக்கி இப்பயிற்சி மேம்பட்டுள்ளது. தற்போதுள்ள உலகச் சூழலில் கூட்டுச்சேவைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.   The first-ever International tri services joint exercise “INDRA – 2017” will be conducted between Indian and Russian Armed Forces in the Eastern Military District of Russia from 19 to 29 Oct 2017. the INDRA-2017 will strengthen mutual confidence, inter-operability and enable sharing of best practices between both the armed forces.   It’ll be a landmark event in the history of Indo-Russian defense cooperation. It must be noted that Exercise INDRA in its previous 9 avatars has been conducted as a single service exercise alternately between the two countries. The year 2017 marks a major milestone as this Exercise has been upgraded to involve all the 3 Services of the Armed Forces (Army, Navy & Air Force), which further accentuates the importance of Joint Services in the present world environment.
Question 36
“Beyond the Dream Girl” எனும் நூலின் ஆசிரியர் யார்? [Who is the author of the book “Beyond the Dream Girl”?]
A
பாவனா சோமையா [Bhavna Somaiya]
B
ராம் கமல் முகர்ஜி [Ram Kamal Mukherjee]
C
ரமேஷ் சிப்பி [Ramesh Sippy]
D
பால கிருஷ்ணா [Bala Krishna]
Question 36 Explanation: 
மூத்த பத்திரிக்கையாளரான ராம் கமல் முகர்ஜி எழுதிய நடிகை மற்றும் பாஜக MP-யான ஹேமா மாலினியின் சுயசரிதையான “Beyond the Dream Girl” எனும் நூல் அண்மையில் அக்.16 அன்று வெளியிடப்பட்டது. இந்த நூலானது ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்நூல் 23 பகுதிகளைக் கொண்டுள்ளது. முன்பு வெளியிடப்படாத ஹேமா மாலினியின் குடும்பப்பின்னணி மற்றும் அவரது காணக் கிடைக்காத பல அரிய புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.   The biography of actress and BJP MP Hema Malini “Beyond the Dream Girl” has been authored by veteran journalist Ram Kamal Mukherjee, which is recently launched on October 16, 2017. The book is published by HarperCollins India and will give readers an in-depth look into her life. It is divided into 23 chapters. This book will also have Hema’s family tree, which has not been published earlier, and there will be a lot of exclusive unseen photographs from her personal, professional and political spheres.
Question 37
2017–க்கான மேன் புக்கர் பரிசை வென்றவர் யார்? [Who has won the 2017 Man Booker Prize?]
A
ஜார்ஜ் சாண்டர்ஸ் [George Saunders]
B
சாடி ஸ்மித் [Zadie Smith]
C
செபஸ்டியன் பேரி [Sebastian Barry]
D
கோலின் துப்ரோன் [Colin Thubron]
Question 37 Explanation: 
அமெரிக்காவைச்சேர்ந்த ஜார்ஜ் சாண்டர்ஸ் என்பவரின் முதல் புதினமான ‘லிங்கன் இன் தி பார்டோ’ என்ற புதினத்துக்கு 2017-க்கான $66,000 டாலர் மதிப்புடைய மேன் புக்கர் பரிசு கிடைத்துள்ளது. இந்தப் புதினத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் மற்றும் அவரது 11 வயது மகன் இறப்பு பற்றியும், அமெரிக்காவின் போர்கள் பற்றியும் சாண்டர்ஸ் விரிவாக எழுதியுள்ளார். இந்த விருதை வென்றதன் மூலம் பால் பீட்டிக்குப்பிறகு புக்கர் பரிசு வென்ற 2வது அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்குக்கிடைத்துள்ளது.   US author George Saunders has won the 2017 Man Booker Prize for his first full-length novel “Lincoln in the Bardo” and became only the 2nd American writer to win £50,000 ($66,000) Britain’s prestigious English-language literary award. The book is a fictional account of US President Abraham Lincoln burying his 11-year-old son Willie at a Washington cemetery. In 2016, American author Paul Beatty became the first American to win the award for his novel ‘The Sellout’, a biting satire on race relations in the US.
Question 38
உலக மல்யுத்த பொழுதுபோக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை யார்? [Who has become the India’s first-ever woman wrestler to sign for World Wrestling Entertainment (WWE)?]
A
கீதா போகத் [Geeta Phogat]
B
பபிதா குமாரி [Babita Kumari]
C
சாக்ஷி மாலிக் [Sakshi Malik]
D
கவிதா தேவி [Kavita Devi]
Question 38 Explanation: 
அரியானாவைச் சேர்ந்த முன்னாள் பளுதூக்கும் வீராங்கனை கவிதா தேவி, இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனையாக உலக மல்யுத்த பொழுதுபோக்குக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் மே யங் மகளிர் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார். இதற்காக, வரும் ஜனவரி மாதம் ஃப்ளோரிடா மாகாணம் ஒர்லாண்டோவில் உள்ள மல்யுத்த பயிற்சி மையத்தில் தனது பயிற்சிகளை கவிதா தொடங்குவார்.   Kavita Devi from Haryana has become the first ever woman wrestler from India to sign up for the World Wrestling Entertainment (WWE). She also has the distinction of being the first Indian woman to compete in a WWE ring, as she was a featured participant in the Mae Young Classic women’s tournament. She is expected to begin training at the WWE Performance Center in Orlando, Florida from January 2018.
Question 39
நிலையான வளர்ச்சிக்கான உலக வர்த்தக சபையின் புதிய தலைவர் யார்? [Who is the new chairman of World Business Council for Sustainable Development?]  
A
மசாமி யமமோடோ [Masami Yamamoto]
B
சன்னி வெர்கீஸ் [Sunny Verghese]
C
சன்னி வெர்கீஸ் [Sunny Verghese]
D
புரோனோ லஃபான்ட் [Bruno Lafont]
Question 39 Explanation: 
சிங்கப்பூரை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் ஒலம் இன்டர்நேஷனல் குழுமத்தின் முதன்மை நிறைவேற்று அலுவலரும், இணை நிறுவனருமான சன்னி வெர்கீஸ், நிலையான வளர்ச்சிக்கான உலக வர்த்தக சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 25 ஆண்டுகால வரலாற்றில் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் ஆசிய முதன்மை நிறைவேற்று அலுவலர் இவராவார். ஏற்கனவே இதன் தலைவராக இருக்கும் பால் போல்மனின் பதவிக்காலம் 31 டிசம்பர் 2017-டன் முடிவடைவதைத் தொடர்ந்து சன்னி, 1 ஜனவரி 2018 முதல் புதிய தலைவராக 2 ஆண்டுகளுக்கு பதவிவகிப்பார். இந்த சபையானது 200-க்கும் மேற்பட்ட முதன்மை நிறைவேற்று அலுவலர்களின் ஓர் உலகளாவிய நெட்வொர்க்காகும்.   Sunny Verghese, co-founder and Group CEO of Singapore-based Olam International, has been appointed as the new chairman of World Business Council for Sustainable Development (WBCSD). Verghese is the first ever Asian CEO to be appointed as Chair in the organization’s 25 years of history.   His term will begin on January 1, 2018 for a duration of two years and will succeed Paul Polman, whose term ends on 31 December 2017. The WBCSD is a global network of more than 200 CEOs who are responsible for combined revenue of more than $8.5 trillion and 19 million employees.
Question 40
இந்தியாவில் எந்தத் தேதியில், தேசிய காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது? [The National Police Commemoration Day (NPCD) is observed on which date in India?]
A
அக்.21 [Oct 21]
B
அக்.22 [Oct 22]
C
அக்.20 [Oct 20]
D
அக்.23 [Oct 23]
Question 40 Explanation: 
நாடு முழுவதும் காவலர் நினைவு தினம் அக்.21 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு புது டெல்லியிலுள்ள காவலர் நினைவுச்சின்னத்திற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்துவார். இதே நாளில் 1959ஆம் ஆண்டு சீனாவுடனான எல்லையைப் பாதுகாக்க 10 காவலர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இதுதவிர, இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் அமைதியையும் பாதுகாக்கும் வகையில் சுதந்திரமடைந்த பிறகு 34 ஆயிரத்து 408 காவலர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். கடந்த 2016-17-ஆம் ஆண்டில் மட்டும் 383 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.   The National Police Commemoration Day (NPCD) is observed every year in India on October 21 to mark the memory of brave policemen who sacrificed their lives while discharging their duties. The day commemorates the sacrifices of ten policemen while defending our borders with China in 1959. Indian Police personnel were responsible for manning the 2,500-mile-long border of India with Tibet until the autumn of 1959.   So far since Independence, 34,418 Police personnel have sacrificed their lives for safeguarding the integrity of the nation and providing security to people of this country. During the last one year, from Sep 2016 to August 2017, 383 Police personnel have laid down their lives.
Question 41
2017–க்கான ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பையை வென்ற நாடு எது? [Which country’s team has won the 2017 Men’s Hockey Asia Cup tournament?]
A
வங்கதேசம் [Bangladesh]
B
தென்கொரியா [South Korea]
C
இந்தியா [India]
D
மலேசியா [Malaysia]
Question 41 Explanation: 
அக்.22 அன்று வங்கதேச தலைநகர் தாகாவில் நடைபெற்ற 10வது ஹாக்கி ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், உலகின் ‘நம்பர்–6’ இந்திய அணி, 12வது இடத்திலுள்ள மலேசியாவை சந்தித்தது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் ராமன்தீப் கொடுத்த பந்தை சுனில் கோலாக மாற்றினார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது காலிறுதி ஆட்டம் முடிவதற்கு சற்றுமுன் லலித் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 3வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான், தென்கொரியா அணிகள் மோதின. இதில் பாக். அணி 6–3 என்ற கணக்கில் வெற்றிபெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்தப்போட்டியில் வெற்றிபெற்ற அணி, 2018 ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைக்கு தகுதிபெறும். அது இந்தியாவில் நடைபெறவுள்ளது.   India’s National field hockey team has won the 10th edition of Men’s Hockey Asia Cup tournament – 2017 by defeating Malaysia in the final by 2-1 at Maulana Bhasani Hockey Stadium in Dhaka, Bangladesh on Oct.22. India started strongly and scored 1st goal through Ramandeep Singh in the 1st quarter and the 2nd goal was scored by Lalit in the 2nd quarter.   Pakistan won the bronze medal after edging out Korea 6-3 in the third-fourth place play-off match. The winner of this tournament qualified for the 2018 Men’s Hockey World Cup, which is scheduled to be held in India.
Question 42
2017–க்கான மகோ ஓப்பன் கோல்ஃப் போட்டியை வென்ற இந்திய வீரர் யார்? [Which Indian golfer has clinched the 2017 Macao Open golf tournament?]
A
அஜீதேஷ் சந்து [Ajeetesh Sandhu]
B
ஜோதி ரந்தவா [Jyoti Randhawa]
C
அர்ஜுன் அத்வால் [Arjun Atwal]
D
ககன்ஜீத் புல்லர் [Gaganjeet Bhullar]
Question 42 Explanation: 
இந்திய கோல்ஃப் வீரர் ககன்ஜீத் புல்லர், 2017–க்கான மகோ ஓப்பன் கோல்ஃப் போட்டியை வென்றதன் மூலம் தனது 8வது ஆசிய பட்டத்தை கைப்பற்றியுள்ளார். 2012 வெற்றிக்குப்பிறகு, மகோ ஓப்பன் போட்டியில் இது இவரின் 2வது வெற்றியாகும். மேலும், 2012 மாகோ ஓப்பன் போட்டி, 2013 இந்தோனேசிய ஓப்பன் போட்டிகளைத் தொடர்ந்து இது இவரின் 3வது தொடர் வெற்றியாகும். இதனால், ஆசிய போட்டிகளில் ஓர் இந்தியராக இவர் அர்ஜூன் அத்வால் மற்றும் ஜோதி ரந்தவா ஆகியோரின் அதிக வெற்றிக்கான (8) சாதனையை ஈடுசெய்துள்ளார்.   Indian golfer Gaganjeet Bhullar has clinched the 2017 Macao Open golf tournament title to bag his 8th Asian Tour title. As a result, Bhullar etched his name on the Macao Open trophy for the second time having previously won the event in 2012.   It was also Bhullar’s third wire-to-wire victory of his career following the Macao Open 2012 and the Indonesia Open 2013. With this, he equaled Arjun Atwal and Jyoti Randhawa’s record of most wins (8) by an Indian on the Asian Tour.
Question 43
எந்தத் தேதியில், உலக தகவல் வளர்ச்சி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது? [The World Development Information Day (WDID) is observed on which date?]
A
அக்.24 [Oct 24]
B
அக்.22 [Oct 22]
C
அக்.20 [Oct 20]
D
அக்.23 [Oct 23]
Question 43 Explanation: 
உலகளவில் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகளைக்கண்டறிந்து அதனை உலக தகவல் வளர்ச்சியில் தீர்க்கவேண்டுமென ஐ.நா. சபை முடிவுசெய்தது. 1972–ல், அக்.24 ஐ உலக தகவல் வளர்ச்சி நாளாக ஐ.நா. சபை அறிவித்தது.   The World Development Information Day (WDID) is observed every year on October 24 to draw the attention of the world to development problems and the necessity of strengthening international cooperation to solve them.
Question 44
CBI–ன் புதிய சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? [Who has been appointed as the new Special Director of Central Bureau of Investigation?]
A
தீபக் மிஸ்ரா [Deepak Mishra]
B
சுதீப் லக்தாகியா [Sudeep Lakhtakia]
C
ராகேஷ் அஸ்தானா [Rakesh Asthana]
D
ஜாவீத் அஹ்மத் [Javeed Ahmed]
Question 44 Explanation: 
CBI கூடுதல் இயக்குநராக பணியாற்றிவந்த ராகேஷ் அஸ்தானா, CBI–ன் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1984-ம் ஆண்டு குஜராத் பிரிவிலிருந்து IPS அதிகாரி ஆனவராவார். உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக குர்பாச்சன் சிங், CRPF சிறப்பு தலைமை இயக்குநராக சுதீப் லக்டாகியா நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேஷ்வரி எல்லை பாதுகாப்பு படை சிறப்பு தலைமை இயக்குநராக பதவியுயர்வு செய்யப்பட்டுள்ளனர்.   Rakesh Asthana, a 1984-batch IPS officer of Gujarat-cadre, has been appointed the special director of the Central Bureau of Investigation. (CBI). Currently, he is posted as additional director in CBI. Apart from him, Gurbachan Singh has been appointed as the special director in Intelligence Bureau (IB) and Sudeep Lakhtakia as Special DG in CRPF. Rajesh Ranjan and AP Maheshwari have been promoted as Special DG in the Border Security Force (BSF).
Question 45
2017–க்கான FIFA–வின் சிறந்த வீரருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?[Who has been named as the 2017 Best FIFA Men’s Player?
A
கியான்லூகி பஃபான் [Gianluigi Buffon]
B
கிறிஸ்டியானோ ரொனால்டோ [Cristiano Ronaldo]
C
நெய்மர் [Neymar]
D
லியோனல் மெஸ்சி [Lionel Messi]
Question 45 Explanation: 
2017–க்கான FIFA கால்பந்து விருதுகள் வழங்கும் விழா லண்டனிலுள்ள பிரபல பலாடியம் அரங்கில் அக்.23 அன்று நடைபெற்றது. 2017–க்கான FIFA–வின் சிறந்த வீரருக்கான விருதை தொடர்ச்சியாக 5வது முறையாக போர்த்துக்கல் அணியின் தலைவரும், ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுக்கொண்டார். கடந்த 4 வருடங்களில் இவர், ப்ளென் டி ஓர் விருதை 3 தடவைகள் தட்டிச்சென்றமை குறிப்பிடத்தக்கது. ரியல் மாட்ரிட் அணி இவ்வருடம் லா லிகா, ஸ்பெயின் சூப்பர் கோப்பை, ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியது. இதற்கு ரொனால்டோவின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. பிபாவின் சிறந்த பெண் கால்பந்து வீராங்கனையாக நெதர்லாந்தைச் சேர்ந்த வீராங்கனையான லைக்கே மார்டென்ஸ் தேர்வு செய்யப்பட்டார். ஆண்டின் சிறந்த பயிற்சியாளருக்கான விருதை ரியல் மாட்ரிட் கழகத்தின் பயிற்றுவிப்பாளரும், பிரான்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சினேடின் சிடேன் தட்டிச்சென்றார். சிறந்த பெண் கால்பந்து பயிற்சியாளராக நெதர்லாந்தின் சரினா வெய்ஜ்மேன் தேர்வு செய்யப்பட்டார். பிபாவின் சிறந்த கோல் கீப்பர் விருது இத்தாலி வீரரும், ஜூவென்டஸ் அணியின் கோல் கீப்பருமான பப்போனுக்கு கிடைத்தது.   Cristiano Ronaldo, Real Madrid’s Portugal striker, has been named the 2017 Best FIFA Men’s Player award for a second straight year at the 2017 award ceremony in London, England on October 23, 2017. He is four-time Ballon d’Or winner, who helped Real to a Champions League-La Liga double in 2016-17.   Lieke Martens of FC Barcelona and the Netherlands won the best FIFA Women’s Player award and Real Madrid’s Zinedine Zidane was named best men’s coach and Netherlands’ Sarina Wiegman the best female coach.   Arsenal forward Olivier Giroud received the Puskas award for the best goal of 2017 for his ‘scorpion kick’ against Crystal Palace in January 2017.
Question 46
எந்தத் தேதியில், உலக போலியோ நாள் அனுசரிக்கப்படுகிறது? [The 2017 World Polio Day (WPD) is observed on which date?]  
A
அக்.23 [Oct.23]
B
அக்.22 [Oct.22]
C
அக்.25 [Oct.25]
D
அக்.24 [Oct.24]
Question 46 Explanation: 
இளம்பிள்ளைவாதம் என்னும் போலியோ நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கின் நினைவைப் போற்றும் வண்ணம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரோட்டரி இண்டர்நேஷனல் உலக போலியோ தினத்தை தொடங்கிவைத்தது. செயலிழப்பு செய்யப்பட்ட போலியோவைரஸ் தடுப்பு மருந்து மற்றும் உயிருள்ள வாய்வழிப் போலியோவைரஸ் தடுப்பு மருந்து ஆகியவற்றின் பயன்பாட்டால் 1988-ல் உலகப் போலியோ ஒழிப்பு முன்முயற்சி உருவாகியது. The World Polio Day (WPD) is observed every year by the World Health Organization (WHO) on October 24 to raise awareness about the hazards of the crippling and potentially fatal infectious disease. The day was established by Rotary International over a decade ago to commemorate the birth of Jonas Salk, who led the first team to develop a vaccine against poliomyelitis. There is no cure for this disease, but there are safe and effective vaccines.
Question 47
எந்தத் தேதியில், உலக ஐ. நா நாள் அனுசரிக்கப்படுகிறது? [The 2017 United Nations Day (UND) is observed on which date?]  
A
அக்.23 [Oct.23]
B
அக்.22 [Oct.22]
C
அக்.25 [Oct.25]
D
அக்.24 [Oct.24]
Question 47 Explanation: 
1947-ல் ஐ. நா பொதுச்சபை ஐ. நா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்.24-ஐ ஐ. நா நாளாக “உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட” தீர்மானித்தது. The United Nations Day is observed every year on October 24 to make known to the people about the aims and achievements of the UN and to mark the 72nd anniversary of the UN Charter’s entry into force. With the ratification of this founding document in 1948 by the majority of its signatories, including the five permanent members of the Security Council, the United Nations officially came into being.
Question 48
“India 2017 Yearbook” எனும் மின்னூலை எழுதியவர் யார்? [Who is the author of the e-book “India 2017 Yearbook”?]  
A
ராஜிவ் மெஹ்ரிஷி [Rajiv Mehrishi]
B
R. K.வெர்மா [R. K. Verma]
C
அஷ்வனி லோஹனி [Ashwani Lohani]
D
ராஜிவ் கெளபா [Rajiv Gauba]
Question 48 Explanation: 
இந்தியாவின் நடப்பு நிகழ்வுகள்களை மையமாகக்கொண்டு, “India 2017 Yearbook” எனும் மின்னூலை இந்தியாவின் தற்போதைய தலைமை கணக்கு அலுவலரும், முன்னாள் உள்துறை செயலருமான ராஜிவ் மெஹ்ரிஷி எழுதியுள்ளார். அண்மையில் இதனை ஜெய்ப்பூரில், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே வெளியிட்டார். இந்த மின்னூலில், மாநிலக்கொள்கை, பொதுத்திட்டங்கள் மற்றும் மக்கள்தொகை, வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பல பிற தலைப்புகள் சம்பந்தமான முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.   Rajiv Mehrishi, the Comptroller and Auditor General of India(CAG) and former Union home secretary, has authored an e-book titled “India 2017 Yearbook” on current affairs in India.   It is recently launched by Rajasthan Chief Minister Vasundhara Raje in Jaipur. The e-book includes a plethora of information on important dignitaries, state policy, public schemes and important data about demographics, trade, economy and many other topics.
Question 49
2017–க்கான ஹிருதயநாத் மங்கேஷ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் யார்? [Who has been honored with the Hridaynath Mangeshkar Award 2017?]
A
விஷ்வநாதன் ஆனந்த் [Vishwanathan Anand]
B
AR ரஹ்மான் [AR Rahman]
C
ஜாவெத் அக்தர் [Javed Akhtar]
D
சுலோச்சனா தை [Sulochana Tai]
Question 49 Explanation: 
மூத்த இசையமைப்பாளர் ஹிருதயநாத் மங்கேஷ்கரின் 80வது பிறந்தநாள் மற்றும் ஹிருதயநாத் கலை நிறுவனத்தின் 28வது ஆண்டு நிறைவுவிழாவை குறிக்கும் வகையில் மும்பையில் நடைபெற்ற விழாவில், 2017–க்கான ஹிருதயநாத் மங்கேஷ்கர் விருதானது மூத்த எழுத்தாளர் மற்றும் பாடாலாசிரியாரான ஜாவெத் அக்தருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.   Veteran writer-lyricist Javed Akhtar has been honored with the 2017 Hridaynath Mangeshkar Award at an event in Mumbai which marked the 28th anniversary of Hridayesh Arts and the 80th birthday of veteran music composer Hridaynath Mangeshkar.
Question 50
நியூசிலாந்தின் புதிய பிரதமராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக்கொண்டவர் யார்? [Who has officially been sworn in as the new Prime minister of New Zealand?]  
A
பில் இங்லிஷ் [Bill English]
B
டேம் பாட்சி ரெட்டி [Dame Patsy Reddy]
C
வின்ஸ்டன் பீட்டர்ஸ் [Winston Peters]
D
ஜெசிந்தா அர்டென் [Jacinda Ardern]
Question 50 Explanation: 
அக்.26 அன்று நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியைச்சேர்ந்த ஜெசிந்தா அர்டென் பதவியேற்றுக்கொண்டார். காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கும், குழந்தை வறுமையை ஒழிப்பதற்கும், நாட்டில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குமான உறுதியை அவரளித்தார்.   Jacinda Ardern, the leader of the Labor Party, has officially been sworn in as the prime minister of New Zealand on Oct.26, 2017. She promised to tackle climate change, eradicate child poverty and improve the lives of the country’s most vulnerable people.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!