TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 21st November 2023

1. மனோகர் பாரிக்கர் யுவ அறிவியலாளர் விருதை முதன்முதலில் பெற்றவர் யார்?

அ. டாக்டர் மாதவராஜ் S 🗹

ஆ. P வீரமுத்து வேல்

இ. ரிது கரிதால்

ஈ. கல்பனா காளஹஸ்தி

 • இஸ்ரோவின் UR இராவ் செயற்கைக்கோள் மையத்தைச் சேர்ந்த டாக்டர் மாதவராஜ் S, ‘மனோகர் பாரிக்கர் யுவ அறிவியலாளர்’ விருதைப் பெற்ற முதல் நபர் ஆவார். இந்த விருது `5 இலட்சம் ரொக்கப்பரிசை உள்ளடக்கியதாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வழங்கப்படும் விருதுகளிலேயே அதிகபட்ச ரொக்கப்பரிசையும் சான்றிதழையும் கொண்ட விருது இதுவாகும். இவர் சந்திரயான்-3 திட்டத்தின் இறங்கு பாதையை வடிவமைத்தவராவார். இந்த விருது கோவா மாநில அரசால் நிறுவப்பட்டதாகும்.

2. அண்மையில், ‘வாய்ஸ் ஆஃப் தி குளோபல் சௌத்’ என்ற உச்சிமாநாட்டை நடத்திய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. இந்தியா 🗹

இ. சீனா

ஈ. ரஷ்யா

 • இந்தியா அண்மையில் இரண்டாவது, ‘உலகளாவிய தெற்கின் குரல்’ என்ற உச்சிமாநாட்டை மெய்நிகர் வடிவத்தில் நடத்தியது. இதன் முதல் உச்சிமாநாடு 2023 ஜனவரி 12-13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ‘உலகளாவிய தெற்கு’ என்ற பதம் முதன்முதலில் 1969ஆம் ஆண்டில் இடதுசாரி அமெரிக்க எழுத்தாளரும் அரசியல் ஆர்வலருமான கார்ல் ஓக்லெஸ்கியால் பயன்படுத்தப்பட்டது.

3. 2023ஆம் ஆண்டுக்கான கேம்பிரிட்ஜ் அகராதியின், ‘ஆண்டின் சிறந்த சொல்’ எது?

அ. Hallucinate 🗹

ஆ. Manipulate

இ. Backfire

ஈ. Depression

 • கேம்பிரிட்ஜ் அகராதி குழு, 2023ஆம் ஆண்டின் சிறந்த சொல்லாக, ‘Hallucinate–மாயத்தோற்றம்’ என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துள்ளது. மக்கள் செயற்கை நுண்ணறிவு குறித்து பேசும்போது இயற்கையாகவே அவர்களுக்கு இச் சொல் குறித்த சிந்தனை தோன்றுவதாக கேம்பிரிட்ஜ் அகராதி குழு தெரிவித்துள்ளது. கேம்பிரிட்ஜ் அகராதி, பெரு மொழிப் போன்மம் (அல்லது LLM), ஆக்கமுறைய செயற்கை நுண்ணறிவு (அல்லது GenAI) மற்றும் GPT உள்ளிட்ட புதிய AI தொடர்பான சொற்களையும் அக்குழு அகராதியில் சேர்த்துள்ளது.

4. CDC-WHOஇன் அறிக்கையின்படி, இந்தியாவில் வாழும் சுமார் 11 இலட்சம் குழந்தைகள், கீழ்காணும் எந்தத் தடுப்பூசியின் முதல் தவணையைத் தவறவிட்டுள்ளனர்?

அ. COVID-19

ஆ. தட்டம்மை 🗹

இ. நிமோனியா

ஈ. ரூபெல்லா

 • கடந்த 2022ஆம் ஆண்டில், CDC-WHO அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, இந்தியாவில் சுமார் 11 லட்சம் குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசியின் முதல் தவணையைத் தவறவிட்டுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டில் 40,967 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. இவ்வாறான பாதிப்புகள் பதிவான 37 நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாகும். இதன்மூலம் முதல் தவணை பெறாத அதிக குழந்தைகளைக் கொண்ட 10 நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.

5. எக்ஸோமார்ஸ் டிரேஸ் கேஸ் ஆர்பிட்டர் மிஷனுடன் தொடர்புடைய விண்வெளி முகமை எது?

அ. NASA

ஆ. ESA 🗹

இ. ISRO

ஈ. JAXA

 • செவ்வாய் கோளின் இரவு வானில் நமது வெறும் கண்களால் காணக்கூடிய மென்மையான பச்சை நிற ஒளியை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) ‘ExoMars Trace Gas Orbiter’ திட்டமானது செவ்வாய் கோளைச் சுற்றிக்கொண்டிருக்கும்போது, செவ்வாய் கோளின் இரவு வானத்தை ஒளியியல் நிறமாலை ஒளியால் நிரம்பியிருப்பதைக் கண்டது. அறிவியலாளர்களின் கூற்றுப்படி, துருவப் பகுதிகளில் ஒளி மிகவும் பிரகாசமாக இருந்தது. இரவு வானம் மேகங்கள் இல்லாமல் தெளிவாக இருந்தால் பூமியிலிருந்து அதனைக் காண்பது எளிதாகும்.

6. சிறப்புக் காப்புப்படையின் (SPG) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. அலோக் சர்மா 🗹

ஆ. பங்கஜ் சிங்

இ. R ஹரி குமார்

ஈ. மனோஜ் பாண்டே

 • மூத்த IPS அதிகாரி அலோக் சர்மா, பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பிற்கு பொறுப்பான உயரடுக்கு பாதுகாப்புப் பிரிவான சிறப்புக்காப்புப்படையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சிறப்புக்காப்புப்படையில் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றி வரும் உத்தரபிரதேசத்தின் 1991 தொகுதியின் இ கா ப அதிகாரியான அலோக் சர்மாவை நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

7. தகவல் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் வன்பொருள்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் 2.0 உடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. நிதி அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 🗹

 • பிரதம அமைச்சர் தலைமையிலான அமைச்சரவை, தகவல் தொழினுட்ப கணினிக் கருவிகளுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் – 2.0க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், அனைத்தும் அடங்கிய சுய கணினிகள் உள்ளிட்ட சாதனங்களை உள்ளடக்கியதாகும். இந்த இரண்டாம் கட்டத் திட்டத்தில் 27 கணினிக்கருவி உற்பத்தியாளர்களின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஏசர், ஆசஸ், டெல், ஹெச்பி, லெனோவா போன்ற பிரபலமான நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப கணினிக் கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்.

8. டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் பரிசோதனையுடன் தொடர்புடைய விண்வெளி முகமை எது?

அ. NASA 🗹

ஆ. ESA

இ. ISRO

ஈ. JAXA

 • NASAஇன் டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் பரிசோதனையானது, லேசர்மூலம் சந்திரனுக்கும் அதற்கு அப்பாலும் முதல் முறையாக தரவுகளை வெற்றிகரமாக அனுப்பி சாதனை படைத்துள்ளது. சைக் விண்கலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையானது, இதுவரை இல்லாத தொலைதூர ஆப்டிகல் தகவல்தொடர்புகளை நிரூபிக்கும் வகையில் புதிய சாதனையை படைத்தது. இச்சாதனை, செவ்வாய் கோளுக்கு மனிதர்களை அனுப்புவது உட்பட எதிர்கால திட்டங்களுக்கான உயர்-தரவு-விகித தகவல்தொடர்புகளுக்கு வழிகோலுகிறது.

9. ‘FOSCOS’ என்பது கீழ்காணும் எந்த நிறுவனத்தின் இணையதளமாகும்?

அ. FAO

ஆ. FSSAI 🗹

இ. FICCI

ஈ. FCI

 • உணவுப்பாதுகாப்பு ஒழுங்காற்றமைப்பான FSSAI, பயனர் அனுபவத்தையும் அணுகலையும் மேம்படுத்துவதற்காக, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தவிர, நான்கு பிராந்திய மொழிகளில் உணவுப்பாதுகாப்பு இணக்க அமைப்பு (FOSCOS) இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளம் இப்போது ஹிந்தி, ஆங்கிலம் தவிர குஜராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மராத்தி மொழிகளில் கிடைக்கின்றது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI) விரைவில் கன்னடம், பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, பெங்காலி மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் இந்த இணையதளத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

10. ‘Fire Bird’ என்ற புதினத்துக்காக இலக்கியத்திற்கான JCB பரிசை வென்ற எழுத்தாளர் யார்?

அ. அருந்ததி ராய்

ஆ. பெருமாள் முருகன் 🗹

இ. சல்மான் ருஷ்டி

ஈ. ஜெய மோகன்

 • தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது தமிழ்ப்புதினமான, ‘ஆளண்டாப்பட்சி’யின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Fire Bird’ என்ற புதினத்துக்காக இலக்கியத்திற்கான JCB பரிசை வென்றுள்ளார். JCB இலக்கியப்பரிசு மூலநூலின் நூலாசிரியருக்கு `25 இலட்சமும், மொழிபெயர்ப்பாளருக்கு கூடுதலாக `10 இலட்சமும் ரொக்கமாக வழங்குகிறது. இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜனனி கண்ணன் ஆவார்.

11. 2023ஆம் ஆண்டிற்கான, ‘பிரபஞ்ச அழகி’ பட்டம் வென்ற ஷெய்னிஸ் பலாசியோஸ் சார்ந்த நாடு எது?

அ. மால்டா

ஆ. நிகரகுவா 🗹

இ. இத்தாலி

ஈ. ஸ்பெயின்

 • நிகரகுவாவைச் சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் 2023ஆம் ஆண்டிற்கான, ‘பிரபஞ்ச அழகி’ பட்டத்தை வென்றார். சர்வதேச அழகிப்போட்டியில் நிகரகுவா நாட்டைச் சேர்ந்த ஒருவர் வெல்வது இது முதன்முறையாகும். ‘பிரபஞ்ச அழகி’ போட்டியின் 72ஆவது பதிப்பு எல் சால்வடாரில் நடைபெற்றது. பலாசியோஸ், நிகரகுவாவின் மனகுவாவைச் சேர்ந்த 23 வயதான மனநல ஆர்வலர் ஆவார்.

12. 2023ஆம் ஆண்டிற்கான, ‘பிரபஞ்ச அழகி’ பட்டம் வென்ற ஷெய்னிஸ் பலாசியோஸ் சார்ந்த நாடு எது?

அ. மால்டா

ஆ. நிகரகுவா 🗹

இ. இத்தாலி

ஈ. ஸ்பெயின்

 • நிகரகுவாவைச் சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் 2023ஆம் ஆண்டிற்கான, ‘பிரபஞ்ச அழகி’ பட்டத்தை வென்றார். சர்வதேச அழகிப்போட்டியில் நிகரகுவா நாட்டைச் சேர்ந்த ஒருவர் வெல்வது இது முதன்முறையாகும். ‘பிரபஞ்ச அழகி’ போட்டியின் 72ஆவது பதிப்பு எல் சால்வடாரில் நடைபெற்றது. பலாசியோஸ், நிகரகுவாவின் மனகுவாவைச் சேர்ந்த 23 வயதான மனநல ஆர்வலர் ஆவார்.

13. ‘கடல் பக்தானு’க்கான புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. குஜராத்

ஆ. லடாக் 🗹

இ. மகாராஷ்டிரா

ஈ. கேரளா

 • வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் புவிசார் குறியீட்டுப் பதிவகம், லடாக்கின், ‘லடாக் கடல் பக்தான் – Sea Buckthorn’க்கான புவிசார் குறியீட்டை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது. லடாக் ஆனது இதற்கு முன்பு சர்க்கரை பாதாமி (Raktsey Karpo), பஷ்மினா மற்றும் லடாகிய மர வேலைப்பாடுகள் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவில் லடாக்கிலிருந்து 90% உற்பத்தியைக்கொண்டுள்ள கடல் பக்தார்ன் பழம் அதன் மிகவும் இலாபகரமான பயிர்களுள் ஒன்றாக உள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பாடகி பி. சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்.

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்துகொண்டு திரைப்படப்பாடகி பி. சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தார்.

2. ஊராட்சிகளில் விரைவில் அதிவேக இணைய வசதி.

அடுத்த ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் அதிவேக இணைய வசதி வழங்க தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தி பெயர்: நாடாளுமன்ற நிலைக் குழு ஒப்புதல்.

நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட 3 குற்றவியல் சட்டங்கள்மீது சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் முன்வைத்த விமர்சனங்களை நிராகரித்த நாடாளுமன்ற நிலைக்குழு, ‘இந்தச் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானதல்ல’ என்று குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சிக்கால குற்றவியல் சட்டங்களை மாற்ற வகை செய்யும் மூன்று மசோதாக்கள் மக்களவையில் கடந்த ஆகஸ்ட்.11ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன. இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 1860ஐ மாற்றம் செய்ய, ‘பாரதிய நியாய சம்ஹிதா மசோதா, 2023’ என்ற மசோதாவும், குற்றவியல் நடைமுறைச் சட்டம்-1898ஐ மாற்றம் செய்ய, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா, 2023’ என்ற மசோதாவும், இந்திய சாட்சிய சட்டம் 1872ஐ மாற்றம் செய்ய, ‘பாரதிய சாக்ஷிய மசோதா, 2023’ மசோதாவும் அறிமுகம் செய்யப்பட்டன.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!